கல்வி விழிப்புணர்வும் முஸ்லிம்களும் கட்டுரைக்கு உண்மையில் நல்ல வரவேற்பும் ,அக்கறையுள்ள பின்னூட்டங்களும் என்னை மிகவும் சிந்திக்க வைத்ததின் விளைவே " வாருங்களேன் இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து நமது ஊர் இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது செய்வோம் ". என்று நம்மவர்களை அழைக்க தூண்டியது. அல்லாஹ்வின் அருளால் அதிரை நிருபரின் அனைத்து வாசகர்களும் இதற்கு துணை வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பிளஸ் டூ பாடத்திட்டம் அறிமுகம் ஆனபோதே நாம் கல்வியில் விழிப்புணர்வு பெற்று விட்டோம் , ஆனால் நாம் அதில் மேம்பாடு அடைந்தோமா என்றால் சட்டென்று ஆம் என பதிலுரைக்க யோசிக்கவே செய்வோம். அதற்கான முயற்சியை நமதூரில் இயங்கிவரும் பள்ளிகள் செய்கின்றனவா என்பது நான் அறிந்த வரையில் கேள்விக்குறியே.
(பள்ளிகளின் முயற்சி என நாம் குறிப்பிட விரும்புவது , வகுப்பில் முதல் ஐந்து ரேங்க் எடுக்கும் மாணவர்களை பள்ளியின் ஆசிரியர்கள் அதன் நிர்வாகிகளின் அதீத முயற்சியால் அவர்களை மேற்படிப்புக்கு அனுப்புவது.)
நம் சமுதாய வாழ்வுரிமைக்காக பல இயக்கங்கள் நடத்திய பதினைந்து ஆண்டுகால போராட்டங்களின் பயனை அடையும் ( இன்ஷா அல்லாஹ் ) காலம் வெகு தொலைவில் இல்லை என்றே நம் மனது சொல்கிறது. சமுதாயத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் சகோதரர்களுக்காக இத்தருணத்தில் துஆ செய்வது நம் கடமை.
இட ஒதுக்கீடு கிடைத்தது , அதற்கு நாம் லாயக்கு இல்லை அல்லது அதை நிரப்ப நமக்கு தகுதி இல்லை என்றாகிவிட்டால்...... நினைத்து பாருங்கள், இந்த நிலைமை அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் புரிந்துவிட்டால், காவிகளால் கட்டுண்டு இருக்கும் அரசு இயந்திரம் இன்னும் பலத்துடனும், முழுமூச்சுடன் நமக்கு எதிராக செயல்படும். அரசும் அதன் இயந்திரமும் கடந்த காலங்களிலும் தற்போதும் எப்படி எல்லாம் நமக்கு எதிராக செயல்பட்டன , செயல்படுகின்றன என விளக்க வேண்டியதில்லை.
நாம் எல்லோருமே பெரும்பாலும் அயல் நாட்டு சம்பாத்தியத்தை விரும்புகிறோம் அது தவறல்ல, ஆனால் இங்கே பெரும்பாலானோர் என்ன வேலை செய்கிறோம்? தகுந்த வழிகாட்டுதல் இல்லாமல் போனதால் பெரும்பாலான நம் படித்தவர்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத துறைகளுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது நாம் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை . அதே வேலையில் நம் சகோதர சமுதாய மக்களை பாருங்கள் மிக உயர்ந்த பதவிகளிலும் , அதிகமான பொருளாதார வசதியுடனும் இருக்கிறார்கள் . நம்மவர்கள் சாதாரண வேலை , சொற்ப வருமானத்திலும் இருக்கிறோம். அப்படி நாம் திரட்டும் செல்வம் எப்படி வீணாகிறது என்பதை சகோதரர்கள் ஜாஹிரும், மு.செ.மு.நெய்னாவும், நம் எல்லோர் சார்பாகவும் மிகத்தெளிவாக தங்களின் கட்டுரைகளில் பதிந்திருந்தார்கள்
எதிர்கால நம் சந்ததிகளுக்காக இப்போது நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்பது காலத்தின் கட்டாயம், நம் மாணவச் செல்வங்களில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த கல்வியாளர்களை கொண்டு முறையான பயிற்சி அளிக்க நாம் எல்லோரும் கைகோர்க்க வேண்டும்.
சில திட்டங்கள், அதிரை நிருபர், அதன் வாசகர்களின் ஆலோசனைகளை எதிர்பார்த்து வைக்கப்படுகிறது.
1 . நம்முடைய முதல் சிறிய இலக்கு தற்போது பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களில் முதல் ஐந்து இடங்களை காலாண்டு அரையாண்டு தேர்வுகளில் எடுப்பவர்களை ( காதிர்முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, இமாம் ஷாபி மெட்ரிகுலேஷன், ALM மற்றும் லாரல் மேல்நிலை பள்ளிகளில் பயில்பவர்கள் - நம் சமுதாய மாணவர்கள் மட்டும் ) தேர்ந்த்தேடுப்பது.
2 . இவர்களுக்கான பயிற்சி முகாம்களை தொடர்ந்து வருடத்தில் இரண்டுமுறை ( அதாவது காலாண்டு , அரையாண்டு விடுமுறைகளில் ) நடத்த இதற்கு முழு ஒத்துழைப்பு தரும் ஒரு பள்ளியை தேர்ந்தெடுப்பது.
3 . இத்திட்டங்களை முன்னின்று நடத்திட சமுதாய அக்கறையுள்ள, தன்னலம் கருதாதவர்கள், நம் சமுதாய மக்கள் (அதிரை ) கல்வியில் மேம்பாடு பெறவில்லையே என்ற கவலையும் கொண்டவர்கள் மூன்று பேர் கொண்ட ஒரு குழு அமைப்பது.
4 . பயிற்சியளிக்க தேர்ந்த பயிற்சியாளர்கள் (சகோதரர்கள்) நீடூர் மன்சூர் அலி , காயல்பட்டினம் செய்யது முகம்மது புகாரி மற்றும் புதுக் கல்லூரியில் பணி புரிந்த பொருளியல் பேராசிரியர் அப்துல் ரஹ்மான், டி.ஐ.ஜி. முஹம்மது அலி போன்ற கல்வியாளர்களை நமது ஊருக்கு வரவழைத்து கல்வி வழிகாட்டி பயிற்சிகள் நடத்துவது.
5 . இவற்றுக்கான பொருளாதாரம் - (செலவுக்கு) அதிரை நிருபர் சார்பாக அதன் வாசகர்கள் மனமுவந்து வற்புறுத்தல் இல்லாமல் அளிக்கும் நன்கொடைகள்.
இது நம்முடைய யோசனையே , இதற்கு பகரமாக மற்ற நமது சகோதரர்களின் ஆலோசனைகளுக்கு தான் முன்னுரிமை.
இறைவன் நமக்கு தந்த இந்த கல்வி என்ற செல்வத்தை கொண்டு நம் வருங்கால சந்ததியினர் நம் நாட்டில் தலை நிமிர்ந்து வாழ்ந்திட மேற்ச் சொல்லப்பட்ட திட்டங்களோடு தொடர்ந்து எம்மோடு கைகோர்க்க தயார் என்றவர்களும், நம் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களும் தங்களுடைய எண்ணங்களையும் , வகுக்கப்படும் திட்டங்களை எவ்வகையில் செயல்படுத்தலாம் என்கிற பயனுள்ள யோசனைகளையும் உங்களின் ஆதரவையும் தெரிவிக்கவும்.
முக்கியமான விஷயம் நம் அதிரையில் நல்லென்ன நோக்கத்தோடு ஒரு காரியத்தை செய்ய யார் யாரெல்லாம் முன் வந்தாலும், முதலில் விமர்சனங்களும், குறை தேடிச் சொல்லும் போக்குகளும், அவர்களின் ஆக்கபூர்வமான செயலின் ஆர்வத்தை குறைக்கும் செயல்களும் வெகுண்டெழும் என்பது எமக்கு நன்றாக தெரிந்ததே இதனை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். இவைகள் அனைத்தையும் எதிர்கொண்டு நம்மால் முயன்ற எல்லா வகையான முயற்சிகளையும் நம் (அதிரைச்) சமுதாய மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அதிரை நிருபர் குழுவும் முன்னின்று செய்யும் என்ற உறுதியை இங்கு பதிகிறோம் இன்ஷா அல்லாஹ்.
முக்கியமான விஷயம் நம் அதிரையில் நல்லென்ன நோக்கத்தோடு ஒரு காரியத்தை செய்ய யார் யாரெல்லாம் முன் வந்தாலும், முதலில் விமர்சனங்களும், குறை தேடிச் சொல்லும் போக்குகளும், அவர்களின் ஆக்கபூர்வமான செயலின் ஆர்வத்தை குறைக்கும் செயல்களும் வெகுண்டெழும் என்பது எமக்கு நன்றாக தெரிந்ததே இதனை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். இவைகள் அனைத்தையும் எதிர்கொண்டு நம்மால் முயன்ற எல்லா வகையான முயற்சிகளையும் நம் (அதிரைச்) சமுதாய மாணவர்கள் முன்னேற்றத்திற்காக அதிரை நிருபர் குழுவும் முன்னின்று செய்யும் என்ற உறுதியை இங்கு பதிகிறோம் இன்ஷா அல்லாஹ்.
--சரபுதீன் நூஹூ மற்றும் அதிரைநிருபர் குழு
21 Responses So Far:
நானும் ஏற்கனவே கையைத் தூக்கியிருக்கேன் ! உங்கள் நல்ல நோக்கம் நம் மக்கள் அனைவரையும் சென்றடைந்து இந்தக் கன்னி முயற்சி வெற்றி நடைப் போட வாழ்த்துக்கள்.
தெளிவாக முன்னிருத்தியிருக்கும் இந்தத் திட்டங்களை நம்வூர் நலச் சேவைக் களங்களில் (ஊரில்) இருக்கும் நிறைய இளைஞர்களின் மனம் கவர்ந்த அன்புச் சகோதர்களின் கருத்தும் இங்கே பதிவது அவசியும்.
முடிந்தால் ஊரில் இருக்கும் ஹாஜி முஹம்மத் ஆசிரியரை (பழைய மாணவர்களின் இன்றும் நினைவில் இருக்கும்) தொடர்பு கொண்டு இந்தக் கட்டுரையின் சாரம் தெரியப்படுத்தி அவரது கருத்தை இங்கே பதியலாமே !
மாணவர்கள் மத்தியில் இங்கே விவாதிக்கும் அல்லது எடுத்து வைக்கும் ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை நமது ஊரில் இருக்கும் சகோதரர்கள் எடுத்துச் சொல்லலாமே அவர்களையும் இங்கே கருத்துச் சொல்ல அழைக்கலாமே.
வரவிருக்கும் பின்னூட்டங்களுக்கு சுழிதான் போட்டியிருக்கிறேன் ஒரு சுற்று சுற்றிவருமே...
ஹாஜி முஹம்மத் சார் இதற்கு பொருத்தமான ஆள்தான்
ஊமையும் ஊமையும் பேசிய பேச்சக போகாமல் முயற்சி எடுத்து முன்னெடுத்து செல்லவேண்டும்
shahulhameed says
Wednesday, August 18, 2010 7:47:00 PM
ஊமையும் ஊமையும் பேசிய பேச்சக போகாமல் //
அங்கேயாவது உணர்வுகளின் வெளிப்பாடு தெரிந்திடும், நம்மவர்களின் உள்ளங்களில் உள்ளாதை சொன்னால்தானே எடுத்துரைக்கப் பட்டிருக்கும் செயல் திட்டங்களை செயலாக்க மேல் எடுத்துச் செல்ல முடியும். கண்டிப்பாக களத்தில் குதிக்கலாம் வாங்க சாஹுல் இன்ஷா அல்லாஹ்.
ஒரு நல்ல முயற்ச்சி இது நடை முறை படுத்த அனைவரும் ஒத்துழக்க வேண்டும். அவதூறுகள் வரதான் செய்யும். இந்த சமுதாயத்தில் எதற்கு தான் அவதூறு இல்லை பொதுவாக ஒரு நல்ல முயற்ச்சியில் இறைங்கும் போது சிலர் தேவையற்ற கேள்விகலை கேட்கத்தான் செய்வாற்கள். எதையும் கவனத்தில் கொல்லாமள் வருங்கால இளைய சமுதாய நலன் கருதி இறைவனின் துனை கொண்டு நடைமுறை படுத்த வோண்டுகிறேன். இந்த முயற்ச்சியில் உங்கலோடு நானும்.
அதிரை அஷ்ரப்
அபுஇபுறாஹிம்
நானும் ஏற்கனவே கையைத் தூக்கியிருக்கேன் !
வாருங்கள் மற்றவர்களின் கை களையும் தூக்கி விடுவேம்
" ஊமையும் ஊமையும் பேசிய பேச்சாக " இது போன்ற வார்த்தை ஜாலங்கள் வேண்டாம் சகோதரர்களே , ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள், திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல சிறந்த ஆலோசனைகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம்.
சகோ ஷரபுத்தீன் நூஹு அவர்களே ஒரு காரியத்தை செயல் படுத்தும்போது அதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கவேண்டும் அப்போதுதான் இது போன்ற பொது காரியங்களில் ஈடுபடும் அனைவர்க்கும் ஒரு ஆர்வம் உண்டாவும் அந்த ஆர்வத்தை தூண்டும் விதமாகத்தான் நான் கருத்து சொல்லிருந்தேன் அது உங்களுக்கு தவறாகப்ட்டுள்ளது
நீங்கள் சொன்னது (முக்கியமான விஷயம் நம் அதிரையில் நல்லென்ன நோக்கத்தோடு ஒரு காரியத்தை செய்ய யார் யாரெல்லாம் முன் வந்தாலும், முதலில் விமர்சனங்களும், குறை தேடிச் சொல்லும் போக்குகளும், அவர்களின் ஆக்கபூர்வமான செயலின் ஆர்வத்தை குறைக்கும் செயல்களும் வெகுண்டெழும் என்பது எமக்கு நன்றாக தெரிந்ததே) இப்போது எனக்கு புரிகிறது
எவ்வளவுதான் நலத்திட்டங்கள் நம் சமுதாயத்திற்கு செய்தாலும் அது தனிப்பட்ட நபரையோ அல்லது அவரது குடும்பத்தையோதான் உயர்த்தும் (அதுவும் அவருடைய சரியான செயலாக்கத்தால்). கல்வி என்பது அதையும் மீறி ஒரு சமுதாயத்தையே உயர்த்தும் உத்தி இதற்கு உண்டு. நல்ல ஆக்கத்தை கையிலெடுத்திருக்கும் நம் சகோதரர்களுக்கும்/ அதிரை நிருபருக்கும் என் வாழ்த்துக்கள். நானும் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளேன்
கல்வி என்ற சொத்து மற்றுமே யாராலும் அழிக்கமுடியாத சொத்து. இதற்காகதான் நம் வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை தன் குழந்தைகளின் மூலம் செயல்படுத்து முயற்சிக்கிறார்கள். பெரும்பாலான நம் சகோதரர்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லாமல் (நான் படிக்கும்போதுக்கூட இதுதான் தேவைப்பட்டது) திணறிக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் செய்ய இயலாதவர்கள் தக்க கல்வி சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை கொடுக்க முன் வரவேண்டும். இன்ஷா அல்லாஹ்
இந்த நேரத்தில் எழுதப் பட்ட பயனுள்ள கட்டுரை.,
சில நாட்களாய் கனிணி பக்கம் சென்று படிக்ககூட நேரம் இடம்தரவில்லை மன்னிக்கவும் பின்னூட்டம் இடாததற்க்கு. காரணம் தற்பொழுது அதிக வேலைபழு,நோன்பு மற்றும் மற்ற வணக்கங்களினால் ஓய்வற்ற நாட்கள்தான் அதிகம்.
என் நீண்ட கால எண்ணங்களின் ஊற்றின் சிலவற்றின் சாரம்சம்தான் சகோ. சரபுதீன் நூஹு எழுதியிருப்பது
அவர்கூறுவதுபோல் கூட்டாக எதிர்கால சந்ததியினர்களின் நல் வாழ்வு கருதி அந்த கருத்துக்களை செயல் படுத்தலாம்.
மேலும் நம் சமுதாயத்தில் அதிகம் இல்லாத அல்லது அறவே இல்லாத குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுத்து
உதாரணம் IAS.,
IPS.,
Lawyer.,
journalism
போன்ற துறைகளில் விறுப்பமுள்ள மாணவர்களுக்கு தேர்ந்தெடுத்து அவர்களின் வசதிக்குஏற்ப உதவிசெய்யவேண்டும் அல்லது அவரின் படிப்பு முடியும் வரை தத்துஎடுத்துக் கொள்ளவேண்டும்.
அதிரை எக்ஸ்பிரசில் நன்குபடிக்கும் தரகர்தெருவை சேர்ந்த மாணவரொருவர் +2 வில் அதிக மதிப்பெண் எடுத்து மேல் படிக்க வசதியில்லை என்று உதவி கோரியிருந்தார் அவர் மேல் குறிப்பிட்ட துறையை தேர்தெடுத்தால் இன்ஷா அல்லாஹ் அனைத்து செலவுகளும் எற்றுக் கொள்ளப்படும் என அறிவுருத்தப்பட்டது
ஆனால் அவர் முன்பே பொறியல்துறையை தன்விருப்பமாக தேர்தெடுத்து விட்டார் என்பதினால். இருந்தாலும் அவருக்கு உதவிசெய்யும் நோக்கோடு உடனடி உதவியாக அதிரை அஹமத் மாமா அவர்களின் மூலம் ரூ 5000/= மேலும் அவர் நான்கு வருட படிப்பு முடியும் வரை அவரின் மாத செலவிற்க்கு ரூ 1000/= என்றும் அடுத்த கல்வியாண்டில் அவர் அரியர்ஸ் வைத்தால் உதவித்தொகையை பாதியாக குறைக்கப் படும் என்ரும் கூறப் பட்டது செயல்படுத்தப் பட்டுவருகிண்றது.
/// ஊமையும் ஊமையும் பேசிய பேச்சாக ///
இந்த சூழ்நிலையில் ஊமையும் ஊமையும் பேசிய பேச்சாகத்தான் இருக்கவேண்டும்., சில சமயம் அது சாத்தியப் படும் நிகழ்வாக அமையலாம் இன்ஷா அல்லாஹ்.,
சகோ.சாகுல்., சரபுதீன் நூஹு உங்களை சொல்லியுருக்க மாட்டார் (பின்னூட்டம் இடாத என்னைப்போன்றவர்களைத்தான்) பொதுவாக கூறியிறுப்பார்கள். அவர் அமூக அக்கறை கொண்டவர்
ஒவ்வொருவருடைய எண்ணங்களை அல்லாஹ் மட்டுமே நன்கு அறிந்தவன். இந்த புனித மாதத்தில் நன்மையையே நாடியிருப்போம்
சகோதரர் மாலிக் சொல்வது போல் என்னாதான் நல திட்டங்கள் கொண்டுவந்தாலும் ஒரு தனிமனிதன், குடும்பம், ஊர் மட்டுமே பயனடையும். கல்வி என்ற இந்த செல்வத்தால் மட்டுமே முழு சமுதாயத்தையும் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்ல முடியும்.
பள்ளிகள், கல்லூரிகளில் படித்துவிட்டு ஏதோ ஒரு பட்டப்படிப்பை வாங்கிவிடலாம் இது மிக சுலபம். இவை அனைத்தையும்விட அற்புதமான வாழ்கை நெறியுள்ள இஸ்லாமிய மார்கத்தில் உள்ள நாம் லட்சியம், குறிக்கோள்களுடன் நம்முடைய கல்வியை கற்றால் நிச்சயம் நாம் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றியாளர்கள்.
இவைகளுக்கு அவசியம் தேவை நல்ல கல்வி வழிகாட்டல்கள்.
நம்ம ஊரை பொறுத்தவரை வசதியுள்ளவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கல்வி விசயத்தில் எந்த லட்சியமும் குறிக்கோள்களும் பெரும்பாலானவர்களிடம் இல்லை என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.
நல்ல முறையான கல்வி வழிகாட்டுதலை நம் இழைய சமுதாயத்திற்கு தந்து நம் ஒட்டு மொத்த சமுதாயத்தை கல்வியால் இந்த நாட்டில் ஒரு கண்ணியமிக்க சமுதாயமாக உருவாக்க நாம் எல்லாம் ஒரு சபதம் எடுப்போம். இம்முயற்சி வெற்றியடைய நம்மை படைத்த ரப்புல் ஆலமீனிடம் தூஆ செய்வோமாக.
//உன்னைப்போல் ஒருவன் says
Thursday, August 19, 2010 11:18:00 AM
மேலும் நம் சமுதாயத்தில் அதிகம் இல்லாத அல்லது அறவே இல்லாத குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுத்து
உதாரணம் IAS.,
IPS.,
Lawyer.,
journalism//
நிச்சயம் இது கவனிக்கபடவேண்டிய ஒன்று, இது போன்ற துறைகளின் மூலமே நம் சமுதாயத்தை காப்பாற்ற முடியும். சிறந்த ஆலோசனையும் கல்வியும் வழங்குவதன் மூலம் உள்நாட்டில் மட்டும்தான் அதற்கான பயனை அடையமுடியும்
உன்னைப்போல் ஒருவன் says
Thursday, August 19, 2010 11:18:00 AM
இந்த நேரத்தில் எழுதப் பட்ட பயனுள்ள கட்டுரை.,///
பல்வேறு சந்தர்பத்திலும் பல்வேறு மடல்குழு, வலைபூக்களில் உ.ஒ. நீ அடிக்கடி ஞாபகப் படுத்திய விஷயம் தான் இன்று செயலாக்க திட்டமிடலாமேன்னு மேல்படி எடுத்து வைக்கிறோம். நம் அனைவருக்கும் உறுதியையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயலாற்றும் வலிமையையும் கொடுக்க அல்லாஹ்விடம் பிரார்திப்போம் இன்ஷா அல்லாஹ்..
அன்பான சகோதரர்களே: இந்தக் கட்டுரையின் சாரம் அதன் நோக்கம் இதுவரை பெரும்பாலானவர்கள் உணர்ந்திருக்கலாம், ஒவ்வொருவரின் சிரிய முயற்சியிக் கோர்வைதான் அல்லாஹ்வின் உதவியால் கண்டிப்பாக வெற்றியைக் கொடுக்கும். ஊரில் இருக்கும் எங்கள் நன் மதிப்பை பெற்ற சகோதரர்கள் தங்களின் கருத்துக்களையும் இங்கே பதியலாம், அதோடு நதூரைச் சார்ந்த ஆசிரியர்கள் (ஓய்வு பெற்றிருப்பவர்களும்) இவர்களின் கருத்தையும் அறிந்து இங்கே பதியலாமே.. முயற்சியுங்களேன்..Please...
Dear Brothers,
Assalamu Alaikkum
Please visit the following link, very useful and valuable.
comments to be followed
http://www.tamilvix.com/vijay-tv-vidhai-15-08-2010/
ஷரபுத்தீன் நூஹு says
Sunday, August 22, 2010 2:33:00 AM
http://www.tamilvix.com/vijay-tv-vidhai-15-08-2010/ ///
We all must to watch this very useful program to get benifit, how they professionally implementing and utilizing.
நினைத்துப் பார்க்க முடியாத தேர்வுகள் அதன் களப்பணியாளர்கள் யாவரும் ஒவ்வொரு வேலையிலிருப்பவர்கள். திட்டங்களை வகுத்து வடிவம் கொடுத்தவர்கள் முன்னால் அரசு கல்வி அதிகாரிகள்.
பங்கு பெற்ற மாணவர்கள் பெரும்பாலு ஆயிரத்துக்கு மேல்தான் மார்க் ஆச்சர்யப்படவைக்கும் நிகழ்ச்சி.
சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்...
To
Dear N.Sharfudeen.
இந்த சிந்தனையின் மூலம் ஒரு மிகப்பெரிய விதையை விதைத்திருக்கிறாய். அது இறைவனின் உதவியால் மிகப்பெரிய விருட்சமாகும்.
Zakir Hussain
உறங்கிடவில்லை, இளைப்பாறவுமில்லை - நிற்க ! அதற்காக இப்படியா மவுனமென்று யாரும் கேட்டுவிடாதீர்கள், அன்று (அப்)படி (இப்)படி என்று முதியவர்கள் சொன்னார்கள் அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர்களாக இருந்திட்டோமா அல்லது விழவேயில்லையான்னு வாதிட்டடோமா என்றும் இங்கே ஞாபகப் படுத்தவில்லை.
கால் ஆண்டு பரீட்சை முடிந்தும்/முடியாமலும் விடுமுறையும் தொடங்கும் நேரமாகிவிட்டது ! வளர்பிறையாகத் தெரியும் நம் மாணவச் செல்வங்களை கண்டறிய வேண்டிய தருனமிது, ஏற்கனவே சிறு சிறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாலும் அவைகளை வெள்ளப் பெருக்காக இன்றே ஓட்டமெடுக்க ஆசைப் படவில்லை, ஆனால் ஒர் களம் தேடி அங்கே அந்தத் துளிகளை சேர்த்தெடுக்க முயற்சிதான் இப்போதைக்கு தேவை.
அடுத்து நாம் என்னதான் செய்ய வேண்டும் ! கல்வி மேம்பாடுக்காக கரம் இணைவோம், ஏன் அந்தக் களம் கண்டெடுப்போமே !
அல்லாஹ்வின் உதவியால் தொடர் முயற்சிகளின் முத்தாய்ப்பான ஆலோசனைகளின் பறிமாற்றம் வலுப்பெற்று வருவதை நாம் அவதானித்து வருகிறோம் இதன் பின்னால் வலுவூட்டும் அன்புச் சகோதரர்களுக்கு மன உறுதியையும் ஆரோக்கியத்தையும் அல்லாஹ் தந்தருள்வானாக.
இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் கல்வி மேம்பாடு நற்செய்திகள் வெளிவரலாம் !
Post a Comment