Showing posts with label நோன்பு பெருநாள். Show all posts
Showing posts with label நோன்பு பெருநாள். Show all posts

அதிரையில் பெருநாள் குதூகலமும் - 1977 பொற்காலமும்! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2016 | , , ,


நோம்பு  முடிந்து சங்கை மிகு ஈகைப் பெருநாள் துவங்கும் விளிம்பில் (அதிரையில்) இருக்கும் நாம், இந்த நோம்பு காலங்களில் இரவு தொழுகைகளிலும் பகல் நேரங்களில் குர்ஆன் ஓதியும் சிறப்புடன் கழித்த அத்தனை அனபர்களுக்கும் அல்லாஹ் வின் அருள் உண்டாவதாக!

இது ஒரு ஃப்ளாஸ்பேக்...: (இரண்டு கண்ணுக்கு நடுவில் வட்டம் வட்டமாக சுழல்வது போன்று கற்பனைகள் வந்தால் அது விளம்பரதாரர் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்)

35 வருடங்களுக்கு முன் பெருநாட்களில் ஒரு பெருநாளை சுற்றியே எமது நினைவலைகள் பின்னோக்கி செல்கிறது.... ! (ஈஸ்மண்ட் கலரில் தெரியவில்லை என்றால் கலர் பேப்பர் ஒட்டிய பிளாஸ்டிக் கண்ணாடி பெருநாள் அன்று மாலைக் கடைகளில் வாங்கி போட்டுக் கொண்டால் நல்லது).


பெரியவர்களெல்லாம் "பிறையை கண்டாச்சா இல்லையா, அது கண்ட இடம் எந்த இடம்" என்ற கேள்வியோடு மரைக்காப் பள்ளியில் ஒன்று கூடுவர். எங்களைப் போல் உள்ள சிறுவர்களுக்கு ஏக்கமெல்லாம் நாளை வைக்கப் போகும் பெருநாள் ஸ்டால் மற்றும் சர்பத் கடை பற்றிய சிந்தனையே!

வீடு வீடாய்ப்போய் சர்பத் பாட்டிலை கண்டெடுத்து செக்கடிக் குளத்திலே கழுவியெடுத்து நானும் சித்தீக்கும் ஆளுக்கு ஒன்றரை ரூபா முதலில் ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவோம். சீனியோடு வியாபார யுக்திக்காக சாக்ரீனும் ஜப்ஜா விதையும் பிசின் மற்றும் கலர் பவ்டர் இதுதான் கச்சாப் பொருளாகும். அடுத்து  அணிகுண்டு தயார் செய்ய சக்கரையும் பொட்டுக் கடலையும் வாங்கி சக்கரையை பாகாக்கி பொட்டுக் கடலையை அதனுள் இட்டு கிண்டினால் அணிகுண்டு தயார். தினத்தந்தி பேப்பரை சதுரமாய்க் கிழித்து அதை சிறு சிறு அணிகுண்டாக்கி உருட்டி விற்பனைக்கு தயார்படுத்திடுவோம்.

அடுத்து அரை லிட்டர் பால் வாங்கி காய்ச்சி 4- 5 வீடேறி ஒரமோரு வாங்கி வந்து அதை தயிராக்கி எங்க வீட்டு நீச்சோற்றை பிசைந்து வடிகட்டி அத்தோடு நீர் சேர்த்து விட்டால் எங்கள் ஐஸ் மோர் ரெடி. (மோர் தயாரித்த தந்திரத்தை வெளியில் சொல்லக் கூடாதுன்னு சொன்ன சித்தீக் இங்கே மன்னிக்கனும்) 

அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் 
அல்லாஹு அக்பர்....

தக்பீர் முழக்கம் ஒலிபெருக்கியில் தொடரும் அழகிய ஓசை….

விடிந்தது பொழுது...
பெருநாள் வந்தது…

மரக்கட்டிலை துடைத்தெடுத்து கடை பரத்த தயாராவோம். பாட்டிலில் கலர் கலராய் தண்ணீர் ஊற்றி வரிசையாய் அடுக்கி வைத்து அனிகுண்டும் ஐஸ் மோரும் அத்தோடு கொத்து மாங்காய், கடலை மிட்டாய் வரிசையாய் அடுக்கி வைத்து வியாபாரத்தை ஆரம்பிப்போம் .

அப்போதெல்லாம் பணக்கார வீட்டுப் பையன் (!!?) வந்துதான் முதல் போணியை ஆரம்பிப்பான். 

“காக்கா ஒரு சர்பத் ரெண்டு கடலை மிட்டாய்.”

புத்தம் புது ரென்டு ரூபா நோட்டை நீட்ட “சில்லரை இல்லையடா!!” என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு.

“அப்புறம் வா” என்று அனுப்பி வைப்போம்.

அடுத்த கஸ்டமர் எல்லாமே சிறுசுங்க தானே வந்து நின்று அனிகுண்டு ரெண்டு பேட்பான். 3 பத்து பைசா என்று 3 கொடுத்திடவே !!! வியாராபரம் சூடு பிடிக்கும். வாங்கிய அனிகுண்டை பிரிப்பதற்குள் எங்க கஸ்டமருங்க படும் திண்டாட்டம் தான் (ஹைலெட்டே !). தினத்தந்தி பேப்பரோடு அனிக்குண்டும் ஐக்கியமாகிவிட பாதி பேப்பர் பிரித்தெடுக்க, மீதி அதோடு ஒட்டியிருக்க கொடுத்த காசு வீணாப் போகுதுன்னு அப்படியே சாப்பிடுவர் எங்கள் வாடிக்கையாளர்கள்.?!?! (அப்போவெல்லாம் கன்ஸூமர் கோர்ட் எல்லாம் இல்லேய்ய்ய்ங்கோ)

முதல் போனி கஸ்டமரான பனக்கார வீட்டுப் பையன் வந்துவிட...

“காக்கா மீதி காசு???” என்று கேட்டு நிப்பான். 

“தம்பி சில்லரை இன்னும் சேரவில்லை” என்று சொல்லி மீண்டும் ரெண்டு க்ளாஸ் சர்பத் கொடுக்கப்படும்!!!


மணி 10 வெயிலும் சூடு பிடிக்க ஐஸ் மோர் விற்பனையும் சூடு பிடிக்கும் 12 மணிக்கெல்லாம் விற்று தீரும். மறுபடியும் தயார் செய்ய  வீடு தேடி ஓடிடுவோம் நீச்சோரு பானையை நோக்கி!!! "இப்பத்தான் கொறத்தி வந்து வாங்கிப் போனாள்" என்று உம்மா சொல்ல உடனே உதயமாகும் அடுத்த யோசனை. நடுத்தெரு வெலக்காரியிடம் மோர் வாங்கி தண்ணீர் விட்டு இரட்டிப்பாய் மாற்றிவிட்டு விற்று பெருமிதம் கொள்வோம்.

அட ! வந்து விட்டான் நம்ம முதல் கஸ்டமர் பையன் மீதி காசு கேட்பதற்காகவே…

“நீ இன்னும் மோரே குடிக்கலையே இந்தா மோர்” என்று ரெண்டு க்ளாஸ் ஊற்றி அதீத சந்தோஷத்தோடு எங்களால் அவனுக்கு கொடுக்கப்பட முறைத்து விட்டு குடித்திடுவான். 

மறுபடியும் மீதி கேட்கையிலே...

"அப்புறம் வா"யென்று சொன்னால்..

"உம்மா திட்டுது" என்பான். 

"கவலைப்படாதே உம்மாவுக்கு ரெண்டு க்ளாஸ் சர்பத் பார்சல்" என்று (பார்சல்….) போடப்படும். 

“போங்கடா (….........)களா” என்று சொல்லி திட்டிவிட்டு ஓடியே போய் விடுவான்.

கம்பெனிக்கு(!!!) மிச்ச காசு உபரி(யாக) லாபம் !.

எங்களுக்கு போட்டியாளர்களே டாட்டாவும் பிர்லாவும் தான். அம்பானியெல்லாம் அதற்கு அப்புறம் தான்.

மு.செ.மு. சபீர் அகமது (திருப்பூர்)

இன்று ஈகைத் திருநாள் திடல் தொழுகை நடந்தது... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | July 06, 2016 | , , , ,

பிறை பார்த்து நோன்பை துவங்குங்கள் பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்யுங்கள் ! - நபிமொழி


அல்ஹம்துலில்லாஹ்...!

பிறை கண்டதற்கான நம்பகமான சாட்சியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலிருந்து உறுதி செய்யப்பட்டதால்... அதிரை ஈத் கமிட்டியின் சார்பாக அதிரையில் மிகச் சிறப்பான முறையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது !

ஆண்களும் பெண்களும் வழமைபோல் திரளாக வந்து கலந்து கொண்டனர்...!




இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்துணர்வூட்டும் தலைப்பில் இன்றைய தவ்ஹீத் வாதிகளால் சிறுக சிறுக சுருக்கி கொள்ளப்பட்ட பிராத்தனையின் பலத்தையும் அதனை இறைவன் எவ்வாறு நம்ம்பிடமிருந்து எதிர் பார்க்கிறான். நாம் எவ்வாறு பிரார்த்தனைகளை அல்லாஹ்விடம் மட்டுமே வைக்க வேண்டும் என்று அருமையானதொரு பெருநாள் உரை அமைந்து இருந்தது.

இன்றைய பெருநாள் தொழுகையின் முத்தாய்ப்பாக தாருத் தவ்ஹீத் செயலாளரின் அறிவிப்பு கலந்து கொண்ட அனைவரையும் உவகை கொள்ளச் செய்தது அதுதான் ‘ஏழு சகோதரர்கள் புதிதாக இறைமார்க்கத்தை ஏற்க இருப்பதாக’ இருந்த அந்த அறிவிப்பு.


அல்ஹம்துலில்லாஹ்... அந்த எழுவருக்கும் ஏகத்துவ மார்க்கத்தை எடுத்துரைத்த சகோதரர் தவ்ஃபீக் வெண்கலக் குரலில் உரக்க உரைத்தார் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதரும் அல்லாஹ்வின் அடியாரும் ஆவார்கள்’ அதனை அந்த எழுவரும் ஏழு வானங்களைப் படைத்தவனின் மார்க்கத்தில் இனிதே இணைந்தனர்.

பெருநாள் திடல் தொழுகைக்குப் பின்னர் அனைவரும் தங்களுக்குள் அன்பை பரிமாரிக்கொண்டனர்.

அபூஇப்ராஹிம்

பெருநாள் சாப்பாடு எப்படி !? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2014 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குல்லுஆம் வஅன்த்தும் பின் கைர் !

அல்ஹம்துலில்லாஹ் ! இந்த வருடம் ஹிஜ்ரி 1435 ரமளான் மாதம் மிகச் சிறப்பாக நம்மிடையே ஒன்றி உலாவி நம் அமல்களை வலுப்படுத்தி உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தூய்மையை நம்மிடையே நிலைத்திருக்கச் செய்துவிட்டு நம்மை விட்டு விடைபெற்றுக் கொண்டது !

இன்று வளைகுடாவில் பெருநாள், ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னர் ஒருமணி நேரத்திற்கு முன்னர் எழுந்து தூய்மையான குளியல் பின்னர் தொழுகை, தொடர்ந்து நபிவழி பெருநாள் தினத் துவக்கம் அதிகாலைப் பொழுது புலரும் அற்புதமான தினம் துபாயில் விடிந்தது !

பெருநாள் தொழுகைக்கும் கூடினோம், தொழுதோம், இறைஞ்சினோம் வல்ல இறைவன் அல்லாஹ்விடமே !

வழியெங்கும் சவால் விடும் போஸ்டர்கள் இல்லை! எங்களோடு இணைந்து தொழும் தொழுகைக்கு சலுகைகள் என்ற தம்பட்டம் இல்லை ! மெளலவிகளைத் தேடும் தேடல் இல்லை!



அடுத்து என்ன !?

அதிரையின் வாசம் அமீரகத்தில் வீசாமல் ஒரு பெருநாளா ?

அதிரைப் பெருநாள் என்றாலே நம்மில் பெரும்பாலோர் மூக்கிலும் நாக்கிலும் வேர்க்கும் ! அதுதான் மண்வாசனை தூக்கலுடன் இருக்கும் காலை பசியாறவும் அதனைத் தொடரும் பகல் சாப்பாடும் கலைகட்டும் !

இடியப்பம் இல்லாத இல்லமா ? வீட்டில் செய்யா விடினும் (அன்னபூர்னாவுக்கு) தேடிச் சென்று எங்கே கிடைக்குமோ அங்கே காத்திருந்து விழித்திருந்து வாங்கி வந்து சாப்பிடும் வேகம் நம்மவர்களிடையே அதிகம்.

இன்று பெருநாள் (காலைச்) சாப்பாட்டில் கலந்து சிறப்பித்தவைகள் !

மலேசியா பரோட்டா
அண்ணபூர்னா இடியப்பம்
இந்தியா ஆட்டுக்கறி
ராஸல்கைமா பண்ணைக் கோழி
கேரளா சேமியா
சைனா கடப்பாசி
சவுதி வட்டிலப்பம்
பன்னாட்டு இனிப்பு புளிப்பு துணையுடன்...

அதிரையர்களாகிய எங்களை சுவைக்க வைத்தது இன்றைய சிறப்பம்சம். !

அடுத்தென்ன பகல் சாப்பாடு(தான்)...!

பின்னூட்டத்தில் பகல் சாப்பாட்டின் முன்னோட்டம் இன்ஷா அல்லாஹ் தொடரும்... !

அது சரி உங்கள் பெருநாள் எப்படி !? [அதிரையில் நாளைக்காமே !?]

அதிரைநிருபர் பதிப்பகம்

பெருநாள் சாப்பாடு எப்படி !? - கருத்துக்களம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குல்லுஆம் வஅன்த்தும் பின் கைர் !

அல்ஹம்துலில்லாஹ் ! இந்த வருடம் ஹிஜ்ரி 1434 ரமளான் மாதம் மிகச் சிறப்பாக நம்மிடையே ஒன்றி உலாவி நம் அமல்களை வலுப்படுத்தி உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தூய்மையை நம்மிடையே நிலைத்திருக்கச் செய்துவிட்டு நம்மை விட்டு விடைபெற்றுக் கொண்டது !

இன்று வளைகுடாவில் பெருநாள், ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னர் ஒருமணி நேரத்திற்கு முன்னர் எழுந்து தூய்மையான குளியல் பின்னர் தொழுகை, தொடர்ந்து நபிவழி பெருநாள் தினத் துவக்கம் அதிகாலைப் பொழுது புலரும் அற்புதமான தினம் அஜ்மானில் விடிந்தது !

பெருநாள் தொழுகைக்கும் கூடினோம், தொழுதோம், இறைஞ்சினோம் வல்ல இறைவன் அல்லாஹ்விடமே !

அடுத்து என்ன !?

அதிரையின் வாசம் அமீரகத்தில் வீசாமல் ஒரு பெருநாளா ?

அதிரைப் பெருநாள் என்றாலே நம்மில் பெரும்பாலோர் மூக்கிலும் நாக்கிலும் வேர்க்கும் ! அதுதான் மண்வாசனை தூக்கலுடன் இருக்கும் காலை பசியாறவும் அதனைத் தொடரும் பகல் சாப்பாடும் கலைகட்டும் !

இடியப்பம் இல்லாத இல்லமா ? வீட்டில் செய்யா விடினும் (அன்னபூர்னாவுக்கு) தேடிச் சென்று எங்கே கிடைக்குமோ அங்கே காத்திருந்து விழித்திருந்து வாங்கி வந்து சாப்பிடும் வேகம் நம்மவர்களிடையே அதிகம்.

இன்று பெருநாள் (காலைச்) சாப்பாட்டில் கலந்து சிறப்பித்தவைகள் !

மலேசியா பரோட்டா
சிங்கப்பூர் இடியப்பம்
இந்தியா ஆட்டுக்கறி
துபாய் ரவ்வா
சைனா கடப்பாசி
சவுதி வட்டிலப்பம்
பன்னாட்டு இனிப்பு புளிப்பு துணையுடன்...

அதிரையர்களாகிய எங்களை சுவைக்க வைத்தது இன்றைய சிறப்பம்சம். !

அடுத்தென்ன பகல் சாப்பாடு(தான்)...!

பின்னூட்டத்தில் பகல் சாப்பாட்டின் முன்னோட்டம் இன்ஷா அல்லாஹ் தொடரும்... !

அது சரி உங்கள் பெருநாள் எப்படி !? [அதிரையில் நாளைக்காமே !?]

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரையில் நோன்பு பெருநாள் தொழுகை ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | August 20, 2012 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இவ்வருடமும் அறிவித்தபடியே இன்று (20-08-2012) நோன்பு பெருநாள் தொழுகை மேலத்தெரு சானவயல் திறந்த வெளி திடலில் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதன் காணொளி மற்றும் புகைப்பட அணிவகுப்பு உங்கள் பார்வைக்காக... 


















அதிரைநிருபர் குழு

அதிரையில் கண்ட பெருநாள் பிறை அதிரைநிருபரில் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 20, 2012 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

அதிரை சகோதரர்கள் விரிந்த உலகின் ஸாரி உருண்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரின் ஏக்கமும் அதிரையில் அவர்களின் பால்ய கால இளமைக்கால பசுமையான நினைவுகளைச் சுற்றியே இருக்கும்.

உலகின் எங்கிருந்தாலும் பெருநாள் அல்லது ஏதாவது ஒரு விஷேசமான நாள் என்றால் அதிரை எப்படி இருக்கும் என்ற சிந்தனை ஓட்டங்களை ஓடவிடுவதில் நாம் சிகரத்தையே தொடுவோம்….

இதுநாள் வரை பிறை அங்கே கண்டோம் இங்கே கண்டோம் என்று கேள்வி பட்டதை அட ! அதிரையிலேயே கண்டோம்.. அதனை அதிரைநிருபரிலும் காண்கிறோம் ! 



வழக்கமான பெருநாள் இரவு வியாபாரம் தொய்வின்று தொடர்கிறது, அதிலும் கடந்த சில வருடங்களால அதிரையர்களின் தலைக்கு இணையாக வாகனங்கள் எண்ணிக்கையும் இருப்பது வியப்பளிக்க வில்லை… காரணம் கட்டு நடையை என்று போய், கூப்பிடு ஆட்டோவை என்று மருவி, அதன் பின்னர் எடு பைக்கை அல்லது காரை என்ற சூழலே இப்போது.


வாகனங்களின் இரைச்சலும் அதிரைப்பட்டினம் அதிரை-நகரமாக மாறியிருப்பதை மழுப்ப முடியவில்லை !

பால்யகால, இளமைக் கால அதிரை பெருநாள் இரவுகள் இன்றைய காலகட்டத்தில் எப்படி களை கட்டியிருக்கிறது என்ற காணொளிக் காட்சிகளும், புகைப்பட புத்துயிருட்டும் படங்களும் உங்கள் அனைவரின் ஊர் நினைவுகளை அசைபோட வைக்க இதோ !










அதிரைநிருபர் குழு

பெருநாளை எப்படி கொண்டாட வேண்டும்? - காணொளி 1

அதிரைநிருபர் | August 16, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அவசியம் காணவேண்டிய காணொளி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த வருட புனித ரமளான் மாதம் இன்றுடனோ அல்லது நாளையுடனோ  நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் சென்ற வருடம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர் சொற்பொழிவின் காணொளியினை உங்கள் பார்வைக்காக பதிகிறோம். இது ஒரு மிகவும் அவசியமான உரை என்பதால் சிறிதேனும் நேரம் ஒதுக்கி  பொறுமையுடன் இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.



இந்த காணொளி உரையின் சாரம் கேட்ட பிறகாவது நம்முடைய பெருநாள் கொண்டாட்டங்களை நபிவழியில் அமைத்து அனைவரோடும் அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிகளெடுப்போம், இன்ஷா அல்லாஹ் !.

அதிரைநிருபர் குழு

பெருநாள் கொண்டாடுவது எப்படி? 4

அதிரைநிருபர் | August 29, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த வருட புனித ரமழான் மாதம் இன்றுடனோ அல்லது நாளைய தினத்திலோ  நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் நேற்றைய முன்தினம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர் சொற்பொழிவின் காணொளியினை உங்கள் பார்வைக்காக பதிகிறோம். இது ஒரு அவசியமான உரை என்பதால் சிறிது அவகாசம் எடுத்து பொருமையுடன் இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.


இந்த காணொளி உரையின் சாரம் கேட்ட பின்னராவது நம்முடைய பெருநாள் கொண்டாட்டத்தை நபிவழியில் அமைத்து அனைவரோடும் அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிகளெடுப்போம், இன்ஷா அல்லாஹ் !.

- அதிரைநிருபர் குழு

அதிரை சகோதரர்களின் சங்கமம் ! - நோன்புப் பெருநாள் அன்று... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2011 | , , ,


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் ! எதிர்வரும் நோன்புப் பெருநாள் அன்று துபை தேரா ஈத் முஸல்லாஹ் மைதானத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலிருக்கும் அதிரை சகோதரகள் சங்கமிக்கும் ஒர் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரை சகோதரர்கள் மட்டுமே ஏரத்தாழ 3000 பேருக்கும் அதிகமானோர் இருக்கக்கூடும். நமதூரைவிட சிறிய சிறிய ஊர்களின் மக்களெல்லாம் ஸஹர் /இஃப்தார் நிகழ்சிகள் மூலம் ஒன்று கூடுகின்றனர். இதுவரைக்கும் அதிரை சகோதரகளுக்குள் இத்தகைய ஒருமித்த முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு (2011) முதல் இதற்கான முயற்சியை நமதூர் தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர். ஊர்மக்களை ஒன்றிணைக்கும் இந்த உன்னத முயற்சி வெற்றிபெற உங்கள் வருகையையும் உறுதி செய்வதோடு அதிரை நண்பர்களையும் அழைத்து வரவும்.

பிற அமீரகங்களிலிருந்து பெருநாளன்று துபைக்கு தொழுவதற்கு வரும் அதிரை சகோதரர்கள் தவறாமல் இந்த அரிய சந்திப்பில் கலந்து கொண்டு தமது உறவுகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டு பரஸ்பரம் முஸாபஹா செய்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

துபாய்-டேரா பகுதியில் பெருநாள் தொழுகை நடைபெறும் ஈத் முஸல்லா மைதானத்திற்கு வருவதற்கான வரைபடமும், மைதானத்தின் வலதுபுறம் பரஹாரோட்டில் சகோதரர்கள் கூடுமிடமும் இணைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகை முடிந்து அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் இந்த நல்ல சந்திப்பு நிகழ்வு நிறைவுறும் என்பதால் வேறு பள்ளிகளில் பெருநாள் தொழுதவர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.


குறுகியகால அவகாசம் மட்டுமே இருப்பதால் இந்ததகவலை அனைத்து BLOG, FACEBOOK மற்றும் மின்னாடல்கள் தொடர்புகளுக்கும் அனுப்பி வைக்கவும் வேண்டப்படுகிறார்கள். இன்ஷா அல்லாஹ் இந்த சந்திப்பை காணொளி மற்றும் (வாய்ப்பிருந்தால்) நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் : Farook Ibrahim