அரசிடம் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு இன்னும் கண்டுக்கொள்ளப்படாத நம் பகுதி அகல இரயில் பாதை போக்குவரத்தை மீண்டும் எற்படுத்துவதற்காக இந்த இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் 250 பேர் கூடிய கூட்டத்தில் 20 பேர் மட்டுமே கைதானார்கள், மற்றவர்கள் தாங்கள் கைது செய்யப்படுவதை விரும்பவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அன்று இரவு 9.00 மணியளவில் தான் விடுதலை செய்யப்பட்டார்கள். இது அதிரை பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போரட்டம், எந்த தனிப்பட்ட இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டம் அல்ல என்பது அதிரை மக்களுக்கும். காவல்துறைக்கும் நன்றாக தெரியும்.
ஊருக்கு நல்லது நடப்பதற்கு ஒரு போராட்டம் நடைப்பெறுவதற்கு எவ்வளவு எதிர்ப்புகள் அதிரை அரசியல் வட்டாரத்தில் காட்டப்பட்டுள்ளதை நேற்றய இரயில் போராட்டத்தை முறியடிப்பதற்காக காவல்துறையினரின் கடைசி நேர கொடுபிடிகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக கைதான அன்பு சகோதரர்கள் வேதனையுடன் தெரிவித்தார்கள்..
ஆட்சி அதிரகாரத்தில் இருப்பதால் நிறுத்தப்பட்ட இரயில் போக்குவரத்தை மீண்டும் எற்படுத்துவதற்காக வீதீயில் வந்து போராடக்கூடாது என்று வேடிக்கை காட்டிவரும் இந்த ஆளும் மற்றும் ஆளாத அரசியல்வாதிகள் எப்போது திருந்தப் போகிறார்களோ, தெரியவில்லை.
பொது நலனுக்காக மக்களை ஒன்று சேர விடாத அரசியல்வாதிகளை இன்னுமா நாம் நம்பிக்கொண்டிக்க வேண்டும்?
எப்போது நம்மூர் இரயிலடி அதிரைவாசிகளை வழியனுப்பி, வரவேற்கப் போகிறது?
எங்கே செல்கிறது நம் பாதை????????????????????????
தகவல்: தாஜுதீன்
ஜூன் 30, 2010
ஜூன் 30, 2010
14 Responses So Far:
இந்த அரசியல் வியாதிகளின் வண்டவாளம் இந்த தண்டவாளவிசயத்தில் தெரிந்துவிட்டதால் இனியும் இவர்களை நம்பி ஏமாறாமல் இருந்தா சரிதான்.இது ஆரம்பம் போகப்போக பூகம்பம்????வாழ்த்துக்கள் போராளிகளே!ஒற்றுமை ஓங்குக!
சகோதரர் தஸ்தகீர், தங்களின் வருகைக்கு நன்றி.
வண்டவாளம் தண்டவாளம் அருமை.
அடிகடி வந்துட்டு அதிரை நிருபரை ஒரு தட்டு தட்டிவிட்டு போங்க.
எந்த நல்ல விஷயத்துக்கு வந்தார்கள் அரசியல்வாதிகள்... ஏதாவது தேவையோ,அல்லது பிரச்சினையோ வந்தால் அது எதனால் வேண்டும்,எதனால் அப்பிரச்சினை வந்தது,அதை எப்படி தீர்ப்பது என்று ஆராயமாட்டார்கள்..மாறாக அப்பிரச்சினையை வைத்து அரசியல் பண்ண ஆரம்பிப்பார்கள்.. இதுதான் ஆண்டாண்டுகாலமாக நடந்துவருகிறது. நாமளும் திட்றது,அப்புறம் அவர்களுக்கே ஓட்டுப் போடுறது. Useless.
எழுத்துப் பிழைகள் இருக்கிறது..பார்த்துக்கொள்ளுங்கள்.
//போராட்டம் நடைப்பெறுவதுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் அதிரை அரசியல் வட்டாரத்தில் காட்டப்பட்டுள்ளதை//
தாஜுதீன் இதுவும் நம் மக்களிடமிருந்து மறந்தும் மறைக்கவும்படும் ஓட்டுப்பதிவின் போது, நாம பாட்டுக்கும் கத்திக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்..
250 பேர் கலந்து கொண்டார்கள்...20 பேர் மட்டும் கைதானர்கள்...வேடிக்கையாக இருக்கிறது....இந்த விசயத்திற்க்காக..சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்க வேண்டும்..அப்போழுதுதான்..மத்திய ,மாநில அரசுகளுக்கு செய்தி போகும்..அது சரி...சென்னைக்கு ரயில் அதிரை வாசிகளுக்கு மட்டும் தான் தேவையா ? சுற்றி உள்ள ஊர்காரர்களிடமும் பேசி..போராட்டத்தை பலபடுத்த வேண்டும்..தட்டினால் திறக்கபடும்
வாங்கள் தம்பி இர்சாத், சகோதரர்கள் அபூஅப்ஸர், யாசிர்.
தம்பி இர்சாத், சரியாக சொன்னீர்கள், மக்களுக்கு நல்லது செய்றதுல எதிர்க்கட்சியாக இருக்கும்போது உள்ள அக்கறை ஆளும் கட்சியாக வரும்போது இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அரசியல் பண்ணுகிறார்கள், என்னத்த சொல்றது...
//இதுவும் நம் மக்களிடமிருந்து மறந்தும் மறைக்கவும்படும் ஓட்டுப்பதிவின் போது, நாம பாட்டுக்கும் கத்திக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்//
உண்மைதான், அதிரை மக்களிடம் உள்ள ஒற்றுமையின்மையே நம்மூர் முன்னேற்றத்திற்கு தடை.
கடற்கரை உப்புக்காற்றில் தூங்குகிறது நம்மூர் ரயிலடி ;(
சகோதரர் யாசிர், அதிரையில் நடைப்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து மற்ற ஊர்களிலும் போராட்டம் நடைப்பெறப் போவதாக தகவல், இனிவரும் காலங்களில் இதற்காக தீவிர போராட்டங்கள் நடைப்பெறும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.
எப்படியோ அதிரையிலிருந்து சென்னைக்கு செல்ல அதிவிரைவு ரயில் சீக்கிரம் வந்தால் சரி...
தங்களின் செய்தி நல்ல விபரமாக உள்ளது .மற்ற வலைதளங்களில் இத்தனை விபரம் இல்லை
நன்றி சகோதரர் சாஹூல்
இரண்டு இரண்டு தண்டவாளங்களாக அகலப் பாதை நன்றாகத் தெரிகிறது, ஆனால் எங்குதான் செல்கிறதுனு தெரியலை.
நல்ல விவரமா பதிஞ்சு இருக்கீங்க தாஜுதீன்.அருமை
வாங்க சகோ. ஒருவனின் அடிமை, முதல் வருகைக்கு நன்றி, அடிக்கடி வாங்க நம்ம அதிரை நிருபர் வலைப்பூவுக்கு.
போராட்டம் நடந்த பின்னும்,தீராத போராட்டம் இன்னும் வராத வண்டிக்கு அள்ளாடும் போராட்டம்.என்று தீரும் இந்தப்பொல்லாத போராட்டம் அதுவரை நமக்கு நித்தம் சிரமங்களின் போராட்டம்.
Post a Comment