கடன் வாங்கலாம் வாங்க - 11

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

மெகா தள்ளுபடி: இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசம். இரண்டு பேண்ட எடுத்தால் ஒரு பேண்ட இலவசம். தரமில்லாத சோப்புத்தூளாக இருந்தாலும் ஒரு வாளி இலவசம் என்றால் நம் மக்கள் வாங்க தயாரக இருக்கிறார்கள். இந்த வியாபார தந்திரம் பல வடிவங்களில் நம்மை சுற்றி சுற்றி வந்து வேடிக்கை காண்பித்துக்கொண்டு இருக்கிறது. 25%, 50%, 70% என்று தள்ளுபடிகளை நாம் பார்த்து வருகிறோம்.

மன்னிப்பு வேண்டுமா? கடனை தள்ளுபடி செய்யுங்கள்

நாம் இந்த உலகத்தில் வாங்கும் பொருட்களில் தள்ளுடி கிடைக்கிறது என்றால் சிரமம் எடுத்தாவது வாங்க முயற்சி செய்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா? இதோ நம் தலைவர் நபி(ஸல்) அவர்கள் கூறுவதை பாருங்கள்: ஒரு மனிதர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ''நீ உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்'' என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2391)

கடனைத் திருப்பி கேட்கும்போது நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ''உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி அவரிடம் ''நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா? ''எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது வேலையாட்களுக்கு கட்டளையிட்டிருந்தேன்! '' என்று கூறினார். உடனே, ''அவரது தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்! '' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்.'' (அறிவிப்பவர் : ஹூதைஃபா(ரலி) நூல்: புகாரி எண் : 2077).

நம்மிடம் கடன் வாங்கியவர் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் இப்பொழுது நாம் என்ன செய்வது.  அவர் மனம் வேதனைப்படும் அளவுக்கு தொல்லை கொடுக்காமல் அவருக்கு வசதி ஏற்படும்வரை அவகாசம் கொடுக்கலாம் அல்லது கடனை தள்ளுபடி செய்து விடலாம். இப்படி நாம் செய்தால் நம்முடைய பாவங்களையும், தவறுகளையும் வல்ல அல்லாஹ் தள்ளுபடி செய்வான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் மூலம் விளங்க முடிகிறது.

தர்மம் செய்த கூலி வேண்டுமா?

இந்த நபிமொழியை பாருங்கள்: அல்லாஹ்வின் தூதரே (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகிறார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் கேள்விப்பட்டேனே (அது சரிதானா) என புரைதா(ரலி) கேட்டபோது, கடனின் (தவணைக்)காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : புரைதா(ரலி) நூல்: அஹ்மத்).

இதுவரை அல்லாஹ்வுக்காக அழகிய கடன் நாம் எவ்வாறு கொடுக்க வேண்டும்  என்பதை பார்த்தோம். இனி இதற்கான தீர்வில் பிறரிடம் கடன் வாங்கும் சகோதர சகோதரிகளின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

கடன் வாங்குவோர் நிலை

நாம் எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம் என்பதை முன் தொடர்களில் விரிவாக பார்த்து விட்டோம். நாம் வாங்கும் கடன் முக்கிய மூன்று காரியங்களுக்காக இருந்தால் நலமாக இருக்கும். வயிற்றுபசி, மருத்துவம், இருக்கும் வீட்டிற்காக வெயில், மழை உள்ளே படாமல் இருக்க ஆடம்பரம் இல்லாமல்  சீர்படுத்திக்கொள்ளவும் இதை தவிர ஆடம்பரம் இல்லாமல் பலபேருக்கு சில அத்தியாவசிய காரியங்களுக்கும் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

கட்டாய கடன்

நமக்கு சிரமம் ஏற்படும்பொழுது கடன் வாங்க முடிவு செய்தால் திருப்பி கொடுக்க முடியாத நிலை நமக்கு ஏற்படும் என்று கருதினால் கடன் வாங்குவதை விட நம்மிடம் உள்ள நகைகள்  (உடனே விற்று பணமாக்க கூடியது நகைகள்தான்)அல்லது சொத்துக்களை விற்று தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நகைகளும் இல்லை சொத்துக்களும் இல்லை என்ற நிலை வரும்பொழுது நாம் வாங்க போகும் கடன்  அவசியம்தானா? எப்படி இதை திரும்ப கொடுப்போம். நம்முடைய வருமானத்தில் மீதப்படுத்தி திருப்பி அடைத்து விட முடியுமா? என்றெல்லாம் நன்றாக யோசித்தபிறகுதான் கடன் வாங்க தயாராக வேண்டும்.

கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

தங்களின் அவசியத்திற்கு கடன் வாங்கி விட்டீர்கள். திருப்பி கொடுக்கும்பொழுது நமக்கு பெரிய பாரமாகவும், சிரமமாகவும் தோன்றும். இதில் சொன்ன நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாதவர்கள் கடன் தந்தவர்களிடம் நேராக சென்று தங்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி வருத்தத்தை தெரிவித்து விட்டு அவகாசம் கேட்கலாம்.

இதில் வசதியுள்ளவர்கள் எவ்வாறு நடக்க வேண்டும்: வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும். என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல் புகாரி, எண்:2400)

கடன் தொடர் ஆரம்பித்து 11வது தொடரில் இருக்கிறோம். இந்த தொடரை படித்த அத்தனை வாசக நெஞ்சங்களிடமும் சில கேள்விகளை வைக்கிறேன்.

1)         கடன் வாங்காமல் வாழ முடியுமா? முடியும் என்றால் அதன் விளக்கத்தை தரவும்!
2)         கடன் எதற்கெல்லாம் வாங்கலாம்?
3)         கடன் எதற்கெல்லாம் வாங்கக்கூடாது?

சிறந்த 3 பதிலுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் பரிசளிக்கப்படும். பதிலை இமெயில் alaudeen45@gmail.com  adirainirubar@gmail.com  மூலமாகவும் அனுப்பலாம். பதில் அனுப்ப கடைசி தேதி 31.12.2010.

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
-- அலாவுதீன்

கடன் வாங்கலாம் வாங்க-10                             கடன் வாங்கலாம் வாங்க-12

28 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு:

தொடரும் உங்களின் கடன் வாங்கலாம் தொடர் கடன் வாங்காமல் தேவையறிந்து கடன் கொடுக்கலாம் அதைவிட மன்னிப்புக்குரிய தள்ளுபடியையும் அழகுற சொல்லித் தருகிறீர்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அன்புள்ள சகோதரர் அலாவுதீன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடனை தள்ளுபடி செய்யுங்கள்,கடன் வாங்குவோர் நிலை, கட்டாய கடன், கடனை திரும்ப அடைப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தலைப்புகளில் நபிமொழியுடன் மிக சுருக்கமாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.

நீங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கான பதிலை விரைவில் உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறேன்.

நன்மையின் பக்கம் அனைவரையும் அழைத்து, தொடர்விழிப்புணர்வு கட்டுரை எழுதிவரும் உங்களுக்காக து ஆ செய்கிறேன்.

Meerashah Rafia சொன்னது…

கடனை பற்றிய பதிவுகளை சிறுக சிறுக எங்கள் செவிகளுக்கு அழகிய கடனாக வழங்கிய தங்களுக்கு நன்றி சொல்ல கடன்பட்டிரிகின்றோம்.

அதற்கு கை மாத்தாக உங்கள் கேள்விகளுக்கு பதிலை உங்கள் மின்னஞ்சலில் எதிர்பார்க்கலாம்.

sabeer.abushahruk சொன்னது…

//இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசம்.//

அதை ஏன் கேக்கிறே, இந்தமாதிரி கவர்சிகரமான விளம்பரங்கள் ரொம்ப கூடிப்போச்சு.

"இந்த அரிப்பு மருந்தை
வாங்கினா இலவசமா ஒரு அரை மணி நேரம் முதுகு சொரிஞ்சி விட்றோம்"

என்கிற ரேஞ்சுக்கு படுத்துறாங்க.

அலாவுதீன், வழக்கம்போல் மிக அருமையான விளக்கங்கள்.

வழ்க! வாழ்க! வாழ்க!

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும். ஏங்க அந்த கடைல என்ன ஒரே ஜே,ஜேன்னு திருவிழாமாதிரி கூட்டம்? அதயேன் கேக்குரியோ முன்னூருவாக்கு மேல வாங்குறவங்களுக்கு டை அடிச்சிவிடுவாங்கலாம்,அது பிடிக்கலேன்னா,காதுல அழுக்கு எடுத்துவிடுவாங்க,அதுவும் பிடிக்கலேன்னா மொட்ட மாடில ஆயில் பாத் எடுக்க அனுமதியாம். பெண்களுக்கு இலவச மேக்கப்,அது இல்லேன்னா ,தலைய விரிச்சு போட்டுகிட்டு சன் பாத் எடுக்கலாம்,இன்னும் என்னனோ சொன்னாங்க மறந்துட்டேன்.ரொம்ப நன்றிங்க என் ஒய்புக்கு போன் போட்டு உடனே புறப்பட்டு பட்டுகோட்டை வர சொல்லப்போறேன்.( நன்றி:சபீர்காக்கா).சகோஅலாவுதீன் கலக்குறிங்க போங்க.

sabeer.abushahruk சொன்னது…

என் பதில்கள்: 

01) கடன் வாங்காமல் வாழ முடியாது, 

வாழ்க்கையில் பொருளாதார ஏற்றத்தாழ்வும், தத்தமது தகுதியறியாமல் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கூட்டிக்கொள்ளும் மனப்போக்கும் உள்ளவரை, கடன் வாங்காமல் வாழ முடியாது

02) நியாயப்படி நீ இத்தொடரில் சொல்லித்தந்த தேவைகளுக்கு மட்டும்தான் கடன் வாங்கனும், எனினும் அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையின் அடிப்படையில் அடுத்த வாரம் கிடைக்கப்போகும் என் பணத்தை எதிர்பார்த்து இன்றையத் தேவைக்கு நான் ஏன் கடன் வாங்கக்கூடாது?  நீ ஏற்கனவே சொன்னபடி எதிர்பார்த்த பணம் வராத பட்சத்தில் கடனாளியாவதை நான் எப்படி தவிர்த்துக்கொள்ளமுடியும்? (தேவைகளின் முக்கியத்துவம் அவரவருக்கு வேறுபடும். அனுமதிக்கப்பட்ட ஆசைகளை அடைய விரும்புவது முன்னேற்றம் நோக்கி நம்மை நகர்த்தும் என்பது என் அனுபவம். 

கஞ்சியோ கூழோ கதையெல்லாம் மனிதனை முடக்கும். அனுமதிக்கப்பட்ட அத்தனைக்கும் ஆசைப்படுவதே உயர்த்தும்.)

03) ஹராமான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள மட்டும் கடன் வாங்கவேக் கூடாது. மற்றபடி, ஆடம்பரத்தின் அளவுகோல் அவரவர் வாழ்க்கைமுறை, தொழில், தேவை சம்மந்தப்பட மாறும். (உ.: கார் ஏழைக்கு ஆடம்பரம்; பனக்காரனுக்கு? 100 சகன் சாப்பாடு தருவது (சுன்னத்தான சூழலில்) அன்றாடம் காய்ச்சிக்கு ஆடம்பரம்; ஆயிரக்கணக்கானவர்களின் தொழில் மற்றௌம் நட்புமுறை தொடர்பில் உள்ளவனுக்கு?)

(நம்மளவிட மேட்டர் விளங்கி பலர் உனக்கு நேரடி மெயில் தந்துருக்கலாம். அதை இங்கும் பகிரலாமே. (எனக்கு ஆறுதல் பரிசாவது கிடைக்குமா?)

sabeer.abushahruk சொன்னது…

//பெண்களுக்கு இலவச மேக்கப்,அது இல்லேன்னா ,தலைய விரிச்சு போட்டுகிட்டு...
க்ரவுன்,

ஷாம்ப்பூ வாங்கினா பெண்களுக்கு பேன் பார்த்து விட்றாங்களாம்.

னெயில் பாலிஷ் வாங்கினா நகம் வெட்டிவிட்டு அழுக்கெடுத்துவிட்டு கூடவே நகம் வெட்டும்போது ஜொகம்ம்மா தூங்காம இருக்க "ஆன்ட்ராஷிபட்ச்சி"கதையெல்லாம் சொல்றாங்களாம்.

சொம்பு வாங்கினா வேட்டுக்கே வந்து மாடு இல்லேன்னாகூட பால் பீச்சித்தர்ராங்களாம்.

ஜாகிரூ, ஷாகுல், யாசிரு: யெல்லாம் தனி மெயில்ல பரிசு வாங்க போயாச்சா?

crown சொன்னது…

sabeer சொன்னது…
ஷாம்ப்பூ வாங்கினா பெண்களுக்கு பேன் பார்த்து விட்றாங்களாம்.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .இந்தவரி நான் எதிர்பார்ததுதான்.பின்னதுகள் ரொம்ப சுவாரஸ்யம்.
---------------------------------------------------------------
ஜாகிரூ, ஷாகுல், யாசிரு: யெல்லாம் தனி மெயில்ல பரிசு வாங்க போயாச்சா
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் நம்மள தனிமையில் விட்டுவிட்டு தனிமெயிலில் பரிசு வாங்க சென்றூவிட்டார்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

// அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் நம்மள தனிமையில் விட்டுவிட்டு தனிமெயிலில் பரிசு வாங்க சென்றூவிட்டார்கள்//

கிரவ்ன்(னு): உன்னைய யாரு(டா)ப்ப தனிமையில விட்டது கூவி கூவித்தான் உன்னை கூப்பிடுகிறோமே ! டிசம்பர் வந்துச்சு பிஸியாயிட்டே... காத்திருப்போம் கல்லா கட்டிட்டு வா என்ன சரியா !? பரிசுதானே.. contact : கடனவாங்கலாம் தனி மின் அஞ்சல் வழி :))

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா, நீங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் சிறிய பதில் எழுதுவதாற்கு பதிலாக முன்று கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.

எங்களிடமிருந்து வரும் பதில்களும் பயனுல்லதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

அலாவுதீன்.S. சொன்னது…

சகோ.அபுஇபுறாஹிம், சகோ.தாஜுதீன் வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. சொன்னது…

சபீர், சகோ.தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இருவரும் நகைச்சுவையாக கருத்து பதிந்து கலக்கி இருக்கிறீர்கள். நன்றி!

சகோ. தஸ்தகீர் பரிசு எதுவும் வேண்டாமா?

அலாவுதீன்.S. சொன்னது…

சபீர் உன் பதிலையும், மெயிலில் வருகின்ற பதில்களையும் அடுத்த தொடரில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ்.
///நம்மளவிட மேட்டர் விளங்கி பலர் உனக்கு நேரடி மெயில் தந்துருக்கலாம். அதை இங்கும் பகிரலாமே. (எனக்கு ஆறுதல் பரிசாவது கிடைக்குமா?) ///
*******************************************************************************
ஒரு பதில் கூட வரவில்லை மெயிலில் இந்த நேரம் வரை.
சகோதரர்களிடம் இருந்து பதில்கள் வந்த பிறகு தேர்ந்தெடுத்த பதில்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படும். இன்ஷாஅல்லாஹ்.

அலாவுதீன்.S. சொன்னது…

meerashah சொன்னது… அதற்கு கை மாத்தாக உங்கள் கேள்விகளுக்கு பதிலை உங்கள் மின்னஞ்சலில் எதிர்பார்க்கலாம்.

சகோ. மீராசா அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி! பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அலாவுதீன்.S. சொன்னது…

தாஜுதீன் சொன்னது… அலாவுதீன் காக்கா, நீங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் சிறிய பதில் எழுதுவதாற்கு பதிலாக முன்று கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். எங்களிடமிருந்து வரும் பதில்களும் பயனுல்லதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
************************************************************************************************
சகோ.தாஜுதீன் வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) பெரிய பதிலாக இருந்தாலும், 3 கட்டுரைகளாக இருந்தாலும், அடுத்த கடன் தொடரில் தங்களின் பதில் வெளியிடப்படும். இன்ஷாஅல்லாஹ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும். இன்ஷாஅல்லாஹ் பரிசுகளும் காத்திருக்கிறது.

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்
தங்களின் கடன் பற்றிய விவராமன் விளக்கம் அருமை
கடனில் இத்தனை விசயங்களா! என்று ஆச்சர்யமாக உள்ளது.

Shameed சொன்னது…

//கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : புரைதா(ரலி) நூல்: அஹ்மத்).//

அஸ்ஸலாமு அழைக்கும்
மேற்கண்ட விசயங்களை நாம் பின்பற்றின்னால் உலகில் பல பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்

Shameed சொன்னது…

sabeer சொன்னது… & crown சொன்னது…

//ஜாகிரூ, ஷாகுல், யாசிரு: யெல்லாம் தனி மெயில்ல பரிசு வாங்க போயாச்சா?//


அஸ்ஸலாமு அழைக்கும்

சகோ சபீர் நீங்க அந்த காலத்திலோ நோன்பில் குரான் ஓதும் போட்டியில் முதல் பரிசு வாங்கிய ஆள் நீங்கள் இருக்கும் போது நாங்கள் எங்கே தனி மடல் இடுவது.
உங்களுக்கு கிடைக்கும் பரிசை படித்து விட்டு எங்களுக்கும் புக் போஸ்ட் செயுங்கள்.

Yasir சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ.அலாவுதீன்...தள்ளுபடி என்ற வார்த்தைக்கு...உள்ள அர்த்தத்தை ஆழமாக புரிய வைத்து இருக்கிறீர்கள்..கடனை எப்படி/எதற்க்கு வாங்க கொடுக்க வேண்டும்...அழகான விளக்கங்கள்....உங்கள் கட்டுரைகள் நான் அடைந்த பயனை எப்படி அடைக்க போகிறோனோ.....எங்கள் துவாவில் நீங்கள் எப்போழுதும் உண்டு..தொடர்ந்து எழுதுங்கள் காக்கா...

Yasir சொன்னது…

sabeer சொன்னது
//ஜாகிரூ, ஷாகுல், யாசிரு: யெல்லாம் தனி மெயில்ல பரிசு வாங்க போயாச்சா?// ஜாம்வான்கள் நீங்கள் எல்லாம் இருக்கும் போது..நாங்க பரிசு வாங்குவதை பற்றி நினைக்கவே கூடாது...எப்ப பதில் எழதுவிங்க காக்கா..நான் பக்கத்திலே உட்காந்து காப்பி அடிக்க வர்றேன்

1)கடன் வாங்காமல் வாழ முடியுமா? முடியும் என்றால் அதன் விளக்கத்தை தரவும்!

கடன் வாங்காமல் இருக்க முடியும் காக்கா -அத்தியவாசிய தேவைகளை குறைத்து அவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து வாழ்ந்தால்,உடல் உழைப்பை எங்கும் எப்படியும் ஹாலான நேரானா வழியில் பயன்படுத்தினால்/பயன்படுத்த வேண்டும் என்ற உறுதி இருந்தால் நமக்கு தேவையானதை நாம் பெற்று இருப்பதை வைத்து சந்தோசமாக வாழலாம்


2)கடன் எதற்கெல்லாம் வாங்கலாம்?
கடன் வாங்கலாம்….ஒரு சில அவசிய தேவைகளுக்கு…இஸ்லாம் அனுமதித்த வகை திருமணங்களுக்கு,பெண் மக்கள் இருந்து அதற்க்கு பாதுகாப்பான இருப்பிடம் ஏற்பாடு செய்வதற்க்கு.,தெரிந்த தொழில் தொடங்ககுவதற்க்கு அதன் மூலம் அல்லாஹ்வின் உதவியாலும் நம் உழைப்பாலும் லாபம் ஈட்டலாம் என்று தெரிந்தால் ..ஆனால் எல்லா கடன்களுக்கும் அதை திருப்பி கொடுக்கும் திட்டத்தை முன்பே தயாரித்து கொள்ள வேண்டும்

3)கடன் எதற்கெல்லாம் வாங்கக்கூடாது?
அவசிய மற்ற / அனாச்சார ( கந்தூரி வசூலுக்கு கடன் வாங்கி கொடுத்தவர்கள் நமதூரில் உண்டு ),இஸ்லாம் அனுமதிக்காத செயல்களுக்கு

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்
ஹலாலான காரியம் செய்வதற்கு பணம் போதவில்லை என்றால் நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட சக்தி இருந்தால் கடன் தரும் நபர் நேர்மையானவராக இருந்தால் கடன் வாங்கலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதில்தான் அபிவிருத்து (பரகத்) இருக்கிறது என்ற நபிமொழி நினைவுறுத்திக் கொண்டால் - கடன் அவசியமா !? என்னும் கேள்வி எழும்தானே !?

அலாவுதீன்.S. சொன்னது…

சகோ.சாகுல் ஹமீது: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 2 - வது கேள்விக்கு சுருக்கமான பதில் உள்ளது.

உங்களால் முடிந்த அளவு விரிவாக 3 கேள்விக்கும் பதில் தர முயற்சி செய்திருக்கலாம். தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. சொன்னது…

சகோ. யாசிர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தாங்களும் - சபீரும் 3 கேள்விக்கு பதில் பின்னூட்டத்தில் பதிந்து இருக்கிறீர்கள். பரிசுக்கு உங்கள் இருவரின் பதிலையும் பரிசீலிப்போம். தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. சொன்னது…

அபுஇபுறாஹிம் சொன்னது… இருப்பதைக் கொண்டு திருப்தியடைவதில்தான் அபிவிருத்து (பரகத்) இருக்கிறது என்ற நபிமொழி நினைவுறுத்திக் கொண்டால் - கடன் அவசியமா !? என்னும் கேள்வி எழும்தானே !? //// தங்களின் கருத்திற்கு நன்றி!

சகோ. அபுஇபுறாஹிம்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சகோதரரே! பரிசுக்கான பதிலை தேர்ந்தெடுக்க யாரை நீதிபதியாக போடலாம். ஆலோசனை தாருங்கள்.

Unknown சொன்னது…

அசலாம்மு அலைக்கும் அலாவுதீன் காக்கா உங்கள் தொகுப்புகளை புத்தகமாக வெளியிட வேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)..

சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு:

நீதிபதின்னா அந்த கட்ட பஞ்சயத்து செய்ஞ்சாங்களே அவய்ங்க மூனு பேருதான் ஞாபகத்திற்கு வர்ராய்ங்க !

அதனால இந்த மாதிரியான படிப்பினை போதிக்கும் நற்சிந்தனையூட்டும் படைப்பிற்கு பக்கபலமாக வரும் பதில்களுக்கு நீங்களே நடு நிலையாளராக இருங்கள் இது என்னோடு ஒத்துச் சுழலும் சிந்தனையுடையவர்களின் கருத்தாக இருக்கும் :)

அலாவுதீன்.S. சொன்னது…

harmys சொன்னது… அசலாம்மு அலைக்கும் அலாவுதீன் காக்கா உங்கள் தொகுப்புகளை புத்தகமாக வெளியிட வேண்டும்
சகோ.அப்துர்ரஹ்மான் வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி! தொடர் முடிந்த பிறகு புத்தகமாக வெளிவருவதற்கு இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்வோம். தாங்களும் துஆச் செய்யுங்கள்.