தேனீ எழுத்துரு தந்த அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் தமிழ் இணைய மாநாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்த செய்தி, அவ்வரங்கத்தின் புகைப்படங்களை பாருங்கள்.
தமிழ் நாட்டில் அதிரையில் பிறந்த உமர்தம்பியை 'துபாய் உமர்தம்பி' என்று பெயரிட்டிருப்பது முதலில் சிறிய வருத்தமாகத் தான் இருந்தது, துபாயில் இருக்கும் காலத்தில் தான் உமர்தம்பி தமிழ் இணைய மக்களிடம் பிரபல்யமானார், உமர்தம்பி மரணித்த போது அவர் துபாயில் இருப்பதாகத் தான் அனேக தமிழ் இணையவாசிகள் எண்ணியிருந்தார்கள், தமிழ் இணைய ஆர்வளர்களிடம் துபாய் உமர்தம்பி என்று அறியப்பட்டதால் 'துபாய் உமர்தம்பி அரங்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது. உமர்தம்பி என்ற பெயர் தமிழ் இணையம் ஒரே ஒரு நபரை மட்டும் தான் ஞாபப்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
1 Responses So Far:
துபாய் எப்போது தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை தருகிறார்கள். அதிரையில் பிறந்து வாழ்ந்து மறைந்தவரை துபாய் உமர்தம்பி என்று போட்டிருப்பது புரியாத புதிர், இதற்கு என்ன விளக்கம் தந்தாலும் ஏற்கும்படியாக இல்லை.
தேனீ உமர்தம்பி என்று போட்டிருந்தாலாவது சந்தோசப்படும்படி இருக்கும்.
துபாய் உமர்தம்பி என்பதற்கு அதிரை எக்ஸ்பிரஸ் அன்பர்கள் ஜமீல், மாஹிர் இருவரும் உத்தமம் உருப்பினர் என்பதால் இதற்கு விளக்கம் வேற எழுதுகிறார்கள்.
முகம்மது அதிரை
Post a Comment