எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது.
பதிவுக்குள் செல்லும் முன் : இந்தப் பதிவுக்கு பதிலளிக்க / மறுத்துரைக்க விரும்பினால் கருத்துப் பகுதியில் கருத்துக்களை கண்ணியமாக பதியலாம், பதிவுக்கென்று மறுப்புரை அல்லது விளக்கமளிக்க விரும்பினால் editor@adirainirubar.in என்ற மின்னஞ்சலுக்கு நேரடியாக அனுப்பித் தரும் பட்சத்தில் நெறியாடலுக்கு பின்னர் பதிவாக வெளியிடப்படும். அனைத்தும் அதிரைநிருபர் வலைத்தளத்தின் விதிமுறைக்குட்பட்டே அனுமதிக்கப்படும்.
அதிரைநிருபர் பதிப்பகம்
முகக் குறிப்பு: இந்தப் பதிவின் நோக்கம் யாரையும் தாக்கி எழுத வேண்டும், புண்படுத்தபட வேண்டும் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லை. மாறாக இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இம்மை, மறுமையின் இழிவுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும், நல்லது எதை நமக்காக விரும்புகிறோமோ அதையே அவர்களும் அடைய வேண்டும் என்ற எண்ணமே. இல்லையெனில் அவர்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று மவுனமாக விட்டிருக்கலாம். தலைப்பை தேர்ந்தெடுக்கும் போது கூட நிரம்ப யோசிக்க வேண்டியிருந்தது..
அதிரைநிருபர் பதிப்பகம்
o0o0o0o0o0o
மேலும் தெரிந்து கொள்ள பொறுமையாக முழுவதும் படியுங்கள்.
அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா ஸுரா அல்பகராவில் மூன்று பிரிவினரைப் பற்றியும் அவர்களின் அடையாளங்கள், பண்புகள் பற்றியும் மிகத்தெளிவாக ஸூராவின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறான்.
1. முஃமீன்களைப் பற்றி மூன்று ஆயத்துகளிலும் (ஆயத் என் 3,4,5).
2. காஃபிர்களைப் பற்றி இரண்டு ஆயத்துகளிலும் (ஆயத் என்: 6,7)
3. முனாஃபிக்குகள் எனும் நயவஞ்சகர்கள் பற்றி 13 (பதிமூன்று) ஆயத்துகளிலும் (ஆயத் என் 8 லிருந்து 20 வரை) குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் தெறியுமா? இந்த நோய் அதிபயங்கரமானது. அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா இதைப்பற்றி குறிப்பிடும் போது சில சமயங்களில் "அவர்களின் இதயங்களில் நோய்" என்று குறிப்பிடுகிறான்.
இத்தகைய நோயாளிகளின் முதல் பண்பு பற்றி :-
அல்பகரா அத்தியாயம் (எண்: 2:8), இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
நாம் மிகவும் கவனமாக கவனிக்க வேண்டியது. “அவர்கள் ஈமான் கொள்கிறோம் (நாங்கள் முஸ்லிம்கள்)” என்று கூறுவதுதான் அவர்களின் உள்ள பண்புகளில் உள்ளது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இரண்டாவது பண்பு பற்றி :-
அல்பகரா அத்தியாயம் (எண் 2:9) . (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
மூன்றாவது பண்பு பற்றி :-
அல்பகரா அத்தியாயம் (எண் 2:10). அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய் சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
அல்பகரா அத்தியாயம் (எண் 2:11) . “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
அல்பகரா அத்தியாயம் (எண் 2:12). நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
இன்று நமது ஊரில் முக்கியமான ஒரு ஆலிமுக்கு எதிராக நடந்து வரும் அத்தனை விஷயங்களையும், சூழ்ச்சிகளையும் இந்த பதின்மூன்று ஆயத்துகளின் வெளிச்சத்தில் நாம் ஆராயக்கடமைப் பட்டிருக்கிறோம்.
கண்ணியமிக்க ஆலிம் அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தவர்கள் சொன்ன காரணம் "ஊரில் அமைதி மற்றும் சமாதானம் உண்டாக்க" மேலே குறிப்பிடப்பட்ட ஆயத் எண்கள் 11 மற்றும் 12ல் இவ்வாறுதான் மதீனத்து முனாஃபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை பின் அல்ஸலூல் கூறிக்கொண்டிருந்தான்.
இந்த ஆலிம் ஊரின் அமைதிக்கு எதிராக என்ன செய்தார்? அல்லாஹ்வின் மார்க்கத்தை உள்ளது உள்ளபடி மக்களுக்கு சொல்லி பலரும் திருந்துவதற்கு காரணமாக இருந்த சொற்பொழிவுகளை தடுத்து நிறுத்த துணிந்துவிட்ட இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிரான போர் பிரகடனம் செய்து இம்மை மறுமையின் அழிவுப்பாதையை நோக்கி தறிகெட்டு ஓடிக் கொண்டிருப்பதை இவர்கள் உணரவில்லையா?
திடீரென்று 10 நாட்கள் தக்வா பள்ளியின் பயான் நிறுத்தப்பட்ட விஷயம் அறிந்து அதன் காரணம் என்ன என்பதை அறிவதற்காக விசாரிக்கத் தொடங்கியது முதல் நாளிலிருந்து கடந்த சில தினங்கள் வரை எவ்விதமான தகவலையும் முறையாக சேகரிக்க முடியவில்லை. காரணம் இதில் சம்பத்தப்பட்டவர்கள் அவ்வளவு ரகசியமாக அல்லாஹ்வின் தீனுக்கு எதிரான சூழ்ச்சியை செய்து முடித்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் கண்ணியமிக்க ஆலிம் அவர்களை புதிதாக நியமிக்கப்பட்ட "தலைவரின்" வீட்டிற்கு அழைக்கப்பட்டதையும் அவர்கள் அங்கு சென்றதை பார்த்த சிலரின் மூலம் அறியப்பட்டதும், அங்கு சென்று வந்த ஆலிம் அவர்களிடம் இது பற்றி கேட்டதும். “மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்து வந்தேன்” என்று மட்டுமே பதில் வந்தது. அல்லாஹ்வுடைய உயர்ந்த வேலையை அல்லாஹ்வுக்காக செய்பவர்கள் தீனுக்கு பங்கம் வரும்போது அதன் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் அமைதி காப்பதும் நல்லதல்ல.
தீவிர முயற்சிகளுக்குப் பின்னர் சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புடையவர்கள் வாயிலாகவும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் நண்பர்கள் மூலமாக மேலும் தகவல்களை அறிய முடிந்தது.
"தீனின் நெருப்புப்பந்தம் " என்று பெயர் வைத்ததினாலோ, "இரண்டவது கலீபாவின்" பெயர் வைத்ததினாலோ, அல்லது "முற்றிலும் அடிபணிந்தவன்" என்று பெயர் வைத்ததிருப்பதனாலோ நாம் அல்லாஹ்விடம் வெற்றியடைந்து விடுவோம் என்று யாரும் நப்பாசை கொள்ளக் கூடாது.
அடியானின் உள்ளத்தில் மறைந்துள்ள விஷயங்களை அல்லாஹ் வெளிக்கொண்டு வருவான் என்பதை இவர்கள் அறியவில்லையா?
இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் மிகவும் அன்பாக சொல்லிக்கொள்வது என்னவென்றால், உங்களின் உள்ளத்தில் “நம்மை யாரும் மதிப்பதில்லையே” என்ற எண்ணம் இருந்தால் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்: மதீனத்து நயவஞ்சகத் தலைவன் அப்துல்லாஹ் பின் உபையும் இவ்வாறுதான் சிந்தித்தான். அதன் விளைவு என்ன?
சம்பந்தப்பட்டவர்கள் தங்களிடம், அல்லாஹ் நயவஞ்சகர்கள் பற்றி கூறும் எத்தனை பண்புகள் இருக்கிறது என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுடன் உரசிப் பார்க்கட்டும்.
அல்பகரா அத்தியாயம் (எண் 2:13) : (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ள வேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
அல்பகரா அத்தியாயம் (எண் 2:14). இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.
மேலே குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசன்ங்களை மிக கவனமாக சிந்தித்து பாருங்கள். இந்த முனாஃபிக்குகள் முஃமின்களுடன் இருக்கும்போது நாங்கள் ஈமான் கொண்டவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் மனித மற்றும் ஜின் ஷைத்தான்களுடன் இருக்கும்போது மேலே கூறியதற்கு நேர் மாறாக "நாங்கள் நிராகரிப்பாளர்கள்" என்றோ "நாங்கள் ஈமான் கொள்ளவில்லை" என்றோ சொல்ல மாட்டார்கள். மாறாக " நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று கூறுவார்கள்.
நமது ஊர் விஷயம் சம்பந்தப்பட்டவர்களின் கூற்றும் அல்லாஹ் நயவஞ்சகர்கள் பற்றி கூற்றும் கருத்தை ஒற்றியே உள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.
இவ்வாறு வெளிப்படையாக கூறுபவர்கள் திரைமறைவில் அல்லாஹ்வின் தீனுக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்வதை அல்லாஹ்வும் அவன் தூதர்(ஸல்) அவர்களும் தெளிவாக நமக்கு அறிவித்து தந்திருகிறார்கள்.
சமீபத்தில் உள்ளூர் விவகாரங்களில் நீதியின் பக்கமும் அநீதியின் பக்கமும் ஒத்துழைப்பையும் தாராளமாக வழங்கிவிட்டு, "என்ன செய்வது அவர்களும் நம்மவர்கள்தானே எனவே இதனை செய்துவிட்டேன், நீங்களும் உங்களின் செயல்களில் உறுதியாக இருங்கள் " என்று சொல்பவர்கள் அல்லாஹ் மேற்கூறும் ஆயத்தில் இவர்களைப் போன்று உள்ளவர்களின் நிலை பற்றி கூறுவதை சற்று கவனத்துடன் சிந்தித்து பார்த்து உடனடியாக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து கொள்வதே நன்மை பயக்கும். அல்லாஹ்வுக்கு எதிரான தரப்பாருக்கு வழங்கிய ஆதரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். உடனடியாக அந்த ஆவணங்களை செல்லாது என்று பொதுவில் அறிவிப்பதுடன் அதனை அரசு அலுவலகங்களிலும் முறைப்படி அறிவிக்க வேண்டும்.
58 வது (ஸூரத்துல் முஜாதலா )அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுகிறான்: -
58:22. (நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ (அவர்களை நேசிக்க மாட்டார்கள்.) அவர்கள், தங்களுடைய பெற்றோர்களாக இருந்த போதிலும், அல்லது தங்களுடைய சந்ததிகளாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய சகோதரர்களாக இருந்தபோதிலும், அல்லது தங்களுடைய நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும், அவர்களுடன் நேசம் கொண்டு உறவாடுவதை நீங்கள் காண மாட்டீர்கள். இவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையை பதிய வைத்துத் தன்னுடைய அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கின்றான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் எச்சரிக்கைகளை புறக்கனித்து நாங்கள் இந்த அற்ப உலகத்தின் அற்ப மரியாதைக்காகவும் எங்களின் பெருமையை நிலை நாட்ட நாங்கள் இப்படிதான் அல்லாஹ்வுக்கு எதிரான போரை செய்வோம் என்று சொல்வோரின், இவ்வாறான பண்புள்ளவர்களின் முடிவுதான் என்ன?
அல்லாஹ் கூறுகிறான்:-
அல் பகரா அத்தியாயம் (எண் 2 :16) . இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
வியாபாரம் மூன்று வகையானது.
1. விற்பவருக்கு இலாபம் தருவது.
2. சில சமயங்களில் இலாபமும் இல்லை நஷ்டமும் இல்லை
3. நஷ்டமாகிப் போவதுடன் வியாபார முதலையும் இழப்பது.
இவர்களின் ஃபித்ராவில் (இயற்கையில்) இருந்த நேர்வழி எனும் முதலையும் சேர்த்து இழந்து விட்ட மாபெரும் நஷ்டவாளிகள் இவர்கள் என்பதை அல்லாஹ் பின்வரும் அதே தொடரில் உள்ள ஆயத்தில் விளக்குகிறான்.
அல்பகரா அத்தியாயம் (எண் :2:16). இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
மதீனாவில் முனாஃபிக்குகளின் தலைவன் அல்லாஹ்வின் தூதருக்கு(ஸல்) எதிராக மறைமுகமாக பனிப்போர் நடத்தியதற்கு காரணம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனா வரும்முன் அப்துல்லாஹ் பின் உபைக்கு மதீனத்து மக்கள் ராஜ கிரீடம் அணிவிப்பதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த வாய்ப்பு கை நழுவிப் போனதன் காரணமாகவே இந்த பனிப்போரை அவன் நடத்திக் கொண்டிருந்தான். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும்(ஸல்) அடிபணிந்து நடந்திருந்தால் இவ்வுலகில் வெறும் மதீனாவின் ஆட்சி கிடைக்காமல் போனாலும் மறு உலகில் இந்த முழு உலகத்தைக்காட்டிலும் உயர்ந்த ஆட்சியை அல்லாஹ் அவனுக்கு வழங்கி இருப்பான். ஆனால் அவனுடைய இதயத்தில் அல்லாஹ் மீதும் அவன் தூதர்(ஸல்) மீதும் இருந்த சந்தேகத்தின் காரணமாக, அந்த நோயின் காரணமாக அவன் ஈருலகிலும் நஷ்டமாகிப் போனான்.
சம்பந்தப்பட்டவர்கள் உடணடியாக சொந்த கவுரவம் எனப்படும் (ஈகோ) ஷைத்தானால் தோற்றுவிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து, பாவத்திற்கு பரிகாரம் தேடுங்கள்.
இவர்கள் செய்து கொண்டிருக்கும் அட்டூழியங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மேலும் பாதிப்பையே ஏற்படுத்துகிறதே என்ற மகிழ்ச்சியில் அல்லாஹ்வை மறந்து விடாதீர்கள். இவர்களை விடவும் மாபெரும் அட்டூழியக்காரர்களான ஃபிர்அவ்ன் போன்றவர்களின் நிலை என்ன ஆனது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
ஃபிர்அவ்ன் மேலும் மூசா (அலை) அவர்களின் கூட்டத்தினரின் குழந்தைகளை எல்லாம் கொலை செய்வோம் என்று கொக்கரித்து அதனை செய்து கொண்டிருக்கும்போது, மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தினர் பரிதாபமான முறையில் இவ்வாறாக முறையிட்டனர்.
ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயம் (எண் 7:129):. (அதற்கு மூஸாவுடைய மக்கள் அவரை நோக்கி) நீங்கள் நம்மிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; நீங்கள் வந்ததன் பின்னரும் (துன்புறுத்தப்பட்டே வருகின்றோம். நீங்கள் வந்ததால் எங்களுக்கு ஒன்றும் பயனேற்படவில்லை) என்று கூறினார்கள். (அதற்கு மூஸா) "உங்களுடைய இறைவன் உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்" என்று கூறினார்.
மூஸா (அலை) அவர்கள் பின்வருமாறு கூறியதையும், பலம்மிக்க ஃபிரவ்னின் கூட்டத்தார் எவ்வாறு அழித்து ஒழிக்கப் பட்டார்கள் என்பதையும் அல்லாஹ் கூறுகிறான்.
ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயம் எண் 7:128 . (அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி "நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதனை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்" என்று கூறினார்.
நாம் அதிபயங்கர நோய் என்று தலைப்பிட்டிருந்தோம். எல்லா நோய்களும் இவ்வுலகத்திலேயே முடிந்து விடும்.
ஆனால் நயவஞ்சகம் எனும் இந்த கொடிய நோய் மரணித்த பின்னரும் தொடரும்.
இத்தகையவர்கள் காஃபிர்களை விடவும் கீழ்த்தரமான மிகக் கெட்ட நரகத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஸூரத்து அன் நிஸா அத்தியாயம் எண் 4:145 . நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில் தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
ஏன் தெரியுமா? நயவஞ்சகத்தனம் நிராகரிப்பு எனும் குஃப்ரை விடவும் கொடியது.
அல்லாஹ்வின் உண்மை விசுவாசிகளே உங்களுக்கு வரும் சோதனைகளைக் கண்டு கலங்காதீர்கள். அல்லாஹ் கூறுகிறான்.
ஸூரத்துல் ஹதீத் அத்தியாயம் எண் 57:12 . (நபியே!) நம்பிக்கை கொண்ட இத்தகைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில், அவர்களுடைய ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும், வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, அவர்களை நோக்கி மலக்குகள்:) "இன்றைய தினம் உங்களுக்கு நற்செய்தி (என்றும்) தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியில் நுழைந்து விடுவீர்கள். என்றென்றும் அதில் தங்கியும் விடுவீர்கள்" என்றும் கூறுவார்கள். இதுதான் மகத்தான ஒரு வெற்றியாகும்.
அட்டூழியம் புரிபவர்கள் தவ்பாச் செய்து இப்பொழுதே மீண்டு விட்டால் அவர்களும் இதே பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.
அதற்கு மாற்றமாக ஷைத்தானின் வழியையும், தங்களின் மனோ இச்சைகளையும் பின்பற்றி நயவஞ்சகத்தனத்தில் மரணம் அடைபவர்கள் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:-
ஸூரத்துல் ஹதீத் அத்தியாயம் (எண் 57:13). அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி "நீங்கள் (முன் செல்லாது) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்களுடைய பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்" என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி "எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டுவிடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கை யாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய) அவனுடைய வேதனையுமிருக்கும்.
இன்று மிக அதிகம் பொறுப்பு மிக்க, மறுமையின் அதிகமான கேள்விகளுக்கு உட்படுத்தக்கூடிய பதவிகளுக்கு, தகுதியற்ற அற்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருவதை நமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னேயே பல ஹதீஸ்களில் எச்சரிக்கை செய்திருப்பதை நினைவில் கொண்டு சம்பத்தப்பட்டவர்களும், ஊர்மக்களும் விவேகத்துடன் செயல் பட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீதில் கியாமத் நாளின் அடையாளம் பற்றி கூறும்போது, " அற்பரின் மகன், அற்பர்கள் சமுதாயத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் வருவார்கள்" என்று ஒரு ஹதீதிலும் மற்றொரு ஹதீதில் "தகுதியற்றவர்கள் சமுதாயப் பொறுப்புகளில் வந்தால்..." என்னும் தொடரில் முன்னறிவிப்பு செய்துள்ளதையும் நாம் நன்கு சிந்திக்க கடமைப் பற்றிருக்கிறோம்.
மீண்டும் ஒரு முறை இங்கே நினைவு படுத்துகிறோம் இந்த பதிவில் யாரையும் ஏளனம் செய்ய வேண்டும் என்ற துளிகூட எண்ணமில்லை. சம்பத்தப்பட்டவர்கள் தாங்கள் இப்பொறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள் என்பதையும், இந்த பொறுப்பில் தொடர்வது இம்மை மறுமையின் இழிவையும், இழிவு தரும் வேதனையையும் தரும் என்பதை அஞ்சி அதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லென்னத்தினாலுமே இதனை இங்கே குறிப்பிடுகிறோம்.
தப்லீக் சகோதரர்களும், சம்பந்தப்பட்ட கண்ணியமிக்க ஆலிம் அவர்களும் தீனுக்கு வரும் ஆபத்துகளை மக்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை செய்யாமல் அமைதி காத்து வருவது பெரும் ஆபத்தை கொண்டு வரும் என்பதை நினைவூட்டுகிறோம்.
கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சம்பந்தப்பட்டவர்கள் கண்ணியம்மிக்க ஆலிம் அவர்களிடம் "நீங்களாகவே கண்ணியமாக விலகிக் கொள்ளுங்கள், இல்லையேல் நாங்கள் விளக்க நேரிட்டு அதன் காரணமாக உங்கள் கண்ணியம் கெடும்" என்று கூரியிருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:-
ஸூரத்துல் முனாஃபிஃகூன் அத்தியாயம் (எண் 63:8). அன்றி, "நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கைக் கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்" என்றும் கூறுகின்றனர். (நபியே! நீங்கள் கூறுங்கள்:) கண்ணிய மெல்லாம், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் சொந்தமானது. எனினும், இந்த நயவஞ்சகர்கள் (அதனை) அறிந்து கொள்ளவில்லை.
இங்கே இதனை எழுதுவதற்கு முக்கிய காரணம் இதில் சம்பத்தப்பட்ட பலரும் நம் உறவினர்கள் என்பதும் அநியாயக்கார முனாஃபிக்குகளுக்கு நேர்ந்த இழிவான முடிவை அவர்கள் அடையக்கூடாது எனும் உயர்ந்த எண்ணம்தான்.
யா அல்லாஹ் எங்கள் சமுதாயத்தினருக்கு நேர்வழியையும், மார்க்கத்தின் தெளிவான விளக்கத்தையும் கொடுப்பாயாக. எங்களின் அறியாமையின் காரணமாக வழிகெட்டவர்கள் அடைந்த கேட்டில் எங்களையும் ஆக்கிவிடாதே.
அபூ முஸ்அப்
16 Responses So Far:
அதிரையில் சத்திய பிரச்சாரம் செய்யும் கண்ணியமிக்க ஆலிமுக்கு எதிராகவும், பள்ளி சொத்தை அபரிக்க முயல்பவர்களுக்கு ஆதரவாகவும் சதி செய்யும் ஆதிக்கவர்க்கத்தினர் இம்மை, மறுமையின் இழிவுகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நன்னோக்கம் கொண்ட முகக் குறிப்புடன் குர் ஆன், ஹதீஸ்கள் விளக்கத்துடன் அச்சமூட்டி எச்சரிக்கும் கட்டுரையை பதிந்துள்ளார் சகோதரர் அபூ முஸ்அப்.
சம்பந்தப்பட்டவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி, தவறிலிருந்து திருந்திக் கொள்ள வேண்டும். தன் காலம் முழுவதும் தீனுக்காக உழைப்பதாக சொல்லப்படும் ஆலிம் அவர்கள் அல்லாஹ்வின் பள்ளிக்கு சொந்தமான இடத்தை விட்டுக்கொடுக்காமல் இரட்டை வேடம் போடுவது வேதனைக்குரியது.
அல்லாஹ்வுக்காக தன் சொத்துக்களையும் உயிரையும் தியாகம் செய்த முஜாஹ்தீன்,அன்சாரி தோழர்களின் வரலாற்றை தஃலீம் கிதாபில் படித்து என்ன பயன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழியை கொடுக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் நம் ஊர்க்காரரின் ஞாயமான ஆதங்கம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதோடல்லாமல், சொல்ல வந்ததை குர் ஆன் ஹதீஸ் குறிப்புகளோடு சொல்லியிருப்பதும் சம்பந்தவட்டர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்களின் கண்ணியம் காக்க முனைவதும் பாராட்டத்தக்கது.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பிரச்னையை வெளிப்படுத்தி, "என் சொந்தஙகளே நேர்வழி பெறுங்கள்" என்று ஏக்கத்தோடு சொல்வதும் இக் கட்டுரையாசிரியரின் மன முதிர்ச்சியையும் சமூகப் பொருப்பையும் காட்டுகிறது.
வேலியே பயிரை மேய்ந்தால்...
மார்க்கம் சொல்பவர்களே தவறிழைத்தால்
அறியாத மக்கள் எப்படி இருப்பார்கள்?
திருடியது என் மகள் பாத்திமாவாக இருந்தாலும் நான் அவர்களின் கையை வெட்டாமல் இருக்கமாட்டேன் என்று சொன்ன நம் உயிரினும் மேலான இறைத்தூதரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஒருகணம் அவர்கள் கூற்றை எண்ணிப்பார்த்து அல்லாஹ்விற்கு அஞ்சி செயல்பட வேண்டும்.
//யா அல்லாஹ் எங்கள் சமுதாயத்தினருக்கு நேர்வழியையும், மார்க்கத்தின் தெளிவான விளக்கத்தையும் கொடுப்பாயாக. எங்களின் அறியாமையின் காரணமாக வழிகெட்டவர்கள் அடைந்த கேட்டில் எங்களையும் ஆக்கிவிடாதே.//
அஸ்ஸலாமு அலைக்கும்,
முனாபிக்தனத்தில் குளிகாய நினைக்கும் பலரின் கண்ணத்தில் அரைந்தது போல் உள்ள பதியப்பட்டுள்ள திருக்குர்ஆன் வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் வாழ்நாட்களின் நடைபெற்ற நிகழ்வுகளின் சுட்டிக்காட்டால்களும்.
இங்கு குறிப்பிட்டுள்ள இறைவசனங்களை வாசித்த பிறகாவது, நாம் நம்மை சுயபரிசோதனை செய்வோண்டும். பின் வரும் ஹதீஸையும் வாசித்து நம்மிடம் முனாஃபிக்குகளின் பண்பு உள்ளதா என்பதையும் சிந்துத்துப் பார்க்க வேண்டும்.
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்;பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி,
இந்த ஆலிம் ஊரின் அமைதிக்கு எதிராக என்ன செய்தார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். அதை அவர்களிடமே விளக்கம் கேட்க வேண்டும்.
உண்மை என்றால் அது பற்றி உண்மையை உரக்கச் சொல்லும் மார்க்கம் முழுக்க அறிந்தவர்களால் மட்டும் (பொதுமக்களால் அல்ல) நடவடிக்கை எடுத்து, அது பற்றி அவர்களின் அனுதாபிகளுக்கு தெரிவித்து விட்டு அவர்களுக்கு நோட்டிஸு கொடுத்து முறைப்படி செய்ய வேண்டும்.
இவ்வாறில்லாமல் ஒரேடியாக தொடர்ந்து ஒரு ஆளை (அதுவும் மார்க்க அறிஞரை) பழி வாங்கும் எண்ணத்துடன் செயல்படுவது இருலோகத்துக்கும் நல்லதல்ல.
பல்லாண்டுகளாய் மார்க்க சொற்பொழிவாற்றியவரை காரணமில்லாமல் நீக்குவதற்கு பள்ளியில் நோட்டிசு போர்டு வைத்து பொது அறிவிப்பு வைத்திருப்பதும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறன.
"தவறான அர்த்தமுடையதென்று தெரிந்த மொவ்லிது போன்றவை வாசிக்க அனுமதியில்லை" என்றும் போர்டு வைக்கும் நாள் விரைவில் வரனும். அதுவும் இப்போதைய புது நிர்வாகிகளால் வரனும். இன்சா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நோயிலிருந்து தினமும் அல்லாஹ்விடம் பாது காப்பு பெறக் கூடிய நானம் அதுவும் பயங்கர நோயிலிருந்து எந்த அளவுக்கு பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவேண்டும்.என்று அச்சமூட்டி எச்சரிக்கையோடு.அறிவுறுத்தும் இவ் ஆக்கம்.நெஞ்சை உலுக்குகிறது. அல்லாஹ் நம் சமுதாய மக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக.
தன் சுய நலத்திற்க்காக சத்தியத்தையே அழிக்க நினைக்கும் சுய நல விரும்பிகள்.இவ் ஆக்கத்தை ஜெராக்ஸ் எடுத்து திரும்ப திரும்ப படித்து மனப்பாடம் செய்துக் கொண்டால் பயன் உள்ளதாக இருக்கும்
.
// பல்லாண்டுகளாய் மார்க்க சொற்பொழிவாற்றியவரை காரணமில்லாமல் நீக்குவதற்கு பள்ளியில் நோட்டிசு போர்டு வைத்து பொது அறிவிப்பு வைத்திருப்பதும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறன.//
நகைச் சுவையான அறிவிப்பாகத்தான் இருக்கிறது.பயான் செய்பவர்கள் உலமா சபையில் அனுமதிப் பெற்றுதான் பயான் செய்யவேண்டுமாம்.பித் அத்திற்கு கொடி பிடிப்பவர்கள் உலமா சபையில் ஊடுருவி இருக்கும் போது அனுமதி என்பது குதிரை கொம்பாகத்தான் இருக்கும்.
சத்தியப் பிரச்சாரத்தை தடுப்பவர்களே தாங்கள் இறைவனுடன் போர் செய்கிறோம் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
அசத்தியம் அழிந்தே தீரும்.சத்தியம் நிலைக்கும் என்ற இறைவனுடைய வாக்கையும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேஅர் வழிக்காட்டப் போதுமானவன்.
அஸ்ஸலாமு அழைக்கும் அதிரையர்களே நல்ல தெளிவான ஹாதிஸ்கள் இவைகள் அனைத்தும் பிறருக்கெண்று நினைக்காமல் நமக்கென்று படித்து மனதில் பதிய பயன்தரும்
யாரையும் நேரடியாக தாக்கி புண்படுத்த வேண்டாம் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
தக்வா பள்ளியில் மவுளுது ஓதியதை எதித்ததைப்போல் பயான் செய்வதை நிறுத்தினால் ஏன் நிறுத்தப்பட்டது என்று விளக்கம் கேட்போம்? நிறுத்தப்பட்டது பயானா? பயான் செய்பவரா? என்று ஆராய வேண்டும் இஸ்லாமியராகிய நமக்கு பயான் கேட்பது அதன்படி நடப்பதுதான் கடமையே தவிர தனி மனிதருக்கு ஆதரவு செலுத்தினால் அந்த ஆலிமின் பேச்சுக்கு அடிமையாகிவிட்டதுபோல் அல்லது அவரின் பேச்சு திறமைக்கு ஆதரவளிப்பதுபோல் ஆகிவிடும்.
ஒரு நிருவாகத்தில் வேலை செய்யும் நபர் அதன் தலைவருக்கு[அமீர்]கட்டுப்படவேண்டும் அமீருக்கு கட்டுப்படுவது சம்மந்தமாக கொஞ்சமேனும் ஹாதிஸ்களை இங்கே இணைக்கவும்.
ஆலிமை விலக்க அவர்கள் சொலும் காரணம் அல்லாஹ்விற்கு பொருத்தமாக இருக்கவேனும் தவறான காரணத்திற்கு தண்டனை அல்லாஹ்விடம் நிச்சயம் உண்டு.
அதைவிடுத்து ஆலிமிர்க்கு அதரவாக நிர்வாகத்தை மீறினால் அமீரை எதிர்த்த குற்றத்திற்கு நாமும் அந்த ஆலிமும் ஆளாகிட நீறிடும் தனிநபர் தாக்குதலும் தனி நபர் ஆதரவும் ஆபத்து.
பள்ளிக்குள் காவல் துறையை நுழைய விட்டு விடாதீர்கள் அன்பர்களே உங்களிடம் கெஞ்சி கேட்கின்றேன்.
நமக்கு பயனுள்ள, அல்லாவிற்கு மட்டும் அஞ்சுகின்ற மார்க்க அறிங்கர் யாராக இருந்தாலும் பயான் செய்யட்டும் நமக்கு தேவை உண்மை பயான் பாயனுக்கு ஆதரவு அளிப்போம் பயான் செய்பவருக்கு தனிநபர் ஆதரவு வேண்டாம்.
ஊரில் முஸ்லிம் என்ற போர்வைக்குள் ஆர்.எஸ்.எஸ். தாண்டிய அட்டூழியங்களையும், அக்கிரமங்களையும் சில/பல நம்மவர்கள் இன்றும் பகிரங்கமாகவோ அல்லது திரைமறைவிலோ அரங்கேற்றிக்கொண்டு இருப்பது என்னவ்வோ மறுக்க முடியாத உண்மையே......முஸ்லிமாக பிறந்து விட்டதால் நாளை மஹ்ஷரில் அல்லாஹ் ஏதோ கொஞ்சம் பாத்து போடுவான் (இரக்கம் காட்டுவான்) என்ற நப்பாசையில் காலம் கடத்தி வருகின்றனர்.
நீ முஸ்லிமாக பிறந்து/வாழ்ந்து விட்டதால் தன் வாழ்நாளில் பிறருக்கு (அது மாற்று மதத்தினராக இருந்த போதிலும்) அநீதி, அக்கிரமங்கள் இழைத்து விட்டாலும் எவ்வித கவலையுமின்றி அமைதியுடன் இறுதியில் வந்து சேர் என்னுடன். மற்றவைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், எதற்கும் அஞ்சாதே என்று அல்லாஹ் எங்கேனும், எவருக்கேனும், எப்பொழுதேனும் வாக்குறுதியை/சத்திய பிரமாணத்தை செய்து தந்துள்ளானா???? பிறகெதற்கு போலி வேஷங்களும், கோஷங்களும்????
இன்றைய காலஙகளில் உலகில் முஸ்லிம்களை பார்த்து யாரும் இஸ்லாத்தில் வந்து இணைந்து விடவில்லை. சில இறைவசனங்கள் அவர்களின் இதயத்தை துளையிட்டு அதற்குள் நுழைந்த காரணத்தாலேயே பெரும்பாலும் இருக்கும்......
எகிப்தின் பிரபல ஷைய்க் முஹம்மத் முதவல்லி ஷஃராவி சொன்னார்கள்:-
لاتقلق من تـدابيـر البشـرفاقصى مايستطعون فعله معكـ ..هـو تنفيذ ارادة الله
மனிதர்களின் சூழ்ச்சிகளைப் பற்றி அஞ்சி கலக்கம் அடைய வேண்டாம், மிகக்குறைந்த பட்சம் அவர்கள் உங்களுக்கு செய்ய முடிந்தது என்னவென்றால் அல்லாஹ்வுடைய திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றி வைப்பதுதான்.
பிரான்சு நாட்டில் பள்ளிகளில் பர்தாவை தடை செய்தார்கள். சமீபத்தில் முஸ்லிம்களால் பென்களின் ஹிஜாபை பேணுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி பிரான்சு நாட்டிலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளதைப் பார்த்து முஸ்லிமல்லாதவர்களும் அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆரம்பித்து அதனால் விளையும் நன்மைகள்?
மேலும் மேலும் புதிதாக இஸ்லாத்தில் மக்கள் இணைவதும் அதனால் காபிர்களும், .நயவஞ்சகர்களும் ஆத்திரம் அதிகரித்து என்ன செய்வதென்று அறியாமல் நிற்பதும் தான்.
நமதூரில் இதனால் விளைந்த நன்மை? : ஒரு பெண்கள் பயானை நிறுத்தினார்கள். அது இரண்டாக மாறிவிட்டது.
நல்லோர்களை ஊரை விட்டு வெளியேற்ற முயற்சிப்பது ஊரின் ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும் என்பதை நாம் எச்சரிக்கிறோம்.
அல்லாஹ் கூருகிரான் :
يَا قَوْمِ لَكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظَاهِرِينَ فِي الْأَرْضِ فَمَن يَنصُرُنَا مِن بَأْسِ اللَّهِ إِن جَاءَنَا ۚ قَالَ فِرْعَوْنُ مَا أُرِيكُمْ إِلَّا مَا أَرَىٰ وَمَا أَهْدِيكُمْ إِلَّا سَبِيلَ الرَّشَادِ
40:29. (அன்றி) "என்னுடைய மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கின்றது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கின்றீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்துவிட்டால், (அதனைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?" (என்றும் கூறினார்.) அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "நான் (சரி என்று) கண்டவைகளை தவிர (வேறொன் றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை" என்றும் கூறினான்.
سَتَذْكُرُونَ مَا أَقُولُ لَكُمْ ۚ وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ
40:44. நான் உங்களுக்குக் கூறுவதன் உண்மையை நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நீங்கள் (அறிந்து) நினைத்துப் பார்ப்பீர்கள். என்னுடைய எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்).
فَوَقَاهُ اللَّهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا ۖ وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ
40:45. ஆகவே, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது.
நோய்க்கான மருந்தை கண்டுபிடித்து குணப்படுத்துவது ஊர் நலம்பெற உதவும்...அல்லாஹ் நம் எல்லாரும் அவனுக்கு எல்லா வகையிலும் அஞ்சக் கூடியவர்களாக ஆக்கி வைப்பானாக
shaik alawdeen சொன்னது…
//ஒரு நிருவாகத்தில் வேலை செய்யும் நபர் அதன் தலைவருக்கு[அமீர்]கட்டுப்படவேண்டும் அமீருக்கு கட்டுப்படுவது சம்மந்தமாக கொஞ்சமேனும் ஹாதிஸ்களை இங்கே இணைக்கவு//
لاطاعة لمخلوق بمعصية خالق
படைத்தவனுக்கு மாறுசெய்து படைப்புகளுக்கு வழிபடக்கூடாது.
இப்படி நிர்வாகத்தில் உள்ளவர்களிடம் பத்து ஆயத்துகளை தஜ்வீதுடன் ஓதக்கேட்டு பாருங்களேன், குறைந்த பட்சம் நான்கு ஹதீஸ்களை வார்த்தை பிறழாமல் அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே ஒப்பித்துக்காட்ட சொல்லுங்களேன் !!
எங்களின் உயிரினும் மேலான அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சத்தியத்தையே சொன்னார்கள்.
".......அற்பரின் மகன் அற்பர்கள் சமுதாயப் பொறுப்புகளில் வருவார்கள்...."
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணியத்திற்குரிய தலைவர் அவர்கள் சில மாதங்களுக்கு முன்னாக புதுப்பள்ளியில் ஜமாஅத் தொழுகை முடிந்ததும் "பள்ளியில் உள்ள கக்கூஸையெல்லாம் இடித்து இல்லாமல் ஆக்கிவிடவேண்டும். பள்ளியில் கக்கூஸெல்லாம் கூடாது, அது அந்தக்காலத்தில் வீடுகளில் கக்கூஸ் இல்லாத காலம், செட்டியாக்குலத்துக்கும் பள்ளிக்கும் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது எல்லா வீட்லேயும் கக்கூஸ் இருக்குது. எனவே கக்கூஸை இடிச்சு போட்றுங்க" என்று மீண்டும் மீண்டும் விவாதம் பண்ணிக்கொண்டிருந்தார். கண்ணியம்மிக்க அப்துல்லாஹ் ஆலிம் அவர்கள் " வெளிநாட்லிருந்தேல்லாம் ஜமாத்தெல்லாம் வருதே அவர்கள் எல்லாம் எங்கே கக்கூஸுக்கு போவாங்க?" என்று கேட்டதையும் அவர் திருப்தி அடையவில்லை.
இப்படிப்பட்டவர்களை தெரிந்தெடுப்பவர்கள் நாளை அல்லாஹ்வின் முன் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பதை சிந்தித்துப்பார்ப்பதில்லையா?
இன்றைய நிலவரப்படி அந்த குறிப்பிட்ட ஆலீம் அவர்களின் பயானால் பயனடைந்தவர்கள்தான் அதிகமதிகம்.
நாசூக்காகவும் அதே சமயம் அழுத்தமாகவும் குரானையும் ஹதீஸையும் நம்பும் எவராக இருந்தாலும் திருந்(த்)திக்கொள்ள ஒரு அருமையான படைப்பு...
இந்த கட்டுரை பொதுவாக நம் அனைவரும் அவசியமாக படித்து நயவஞ்சககர்களை அடையாலம் கண்டு நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள நல்ல கருத்து செறிந்த அறிவுரைகளை குர்ஆன் மற்றும் ஹதீதுகளின் ஒளியில் விளக்குகிறது. அல்லாஹ் இக்கட்டுரை எழுதியவருக்கு மேன்மேலும் நல்ல ஞானத்தை அருள்வானாக. தற்போது நம்மூரில் நடக்கும் அநியாய சம்பவங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு இறைவனின் இழிவு தரும் வேதனையை எச்சரிக்கும் விதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் இக்கட்டுரைஆசிரியரின் நல்ல நோக்கத்தை நிறைவேற்றி அருள்பாளிப்பனாக.
Shaik alawdeen சொன்னது…
// ஒரு நிருவாகத்தில் வேலை செய்யும் நபர் அதன் தலைவருக்கு[அமீர்]கட்டுப்படவேண்டும் அமீருக்கு கட்டுப்படுவது சம்மந்தமாக கொஞ்சமேனும் ஹாதிஸ்களை இங்கே இணைக்கவும்.//
நீங்கள் சொல்லும் அமீர் என்ற பதவியும் அமீருக்கு கட்டுபடுதல் என்ற செயலும், போட்டியிட்டு பதவியை தேடிபெற்றவருக்கு அல்ல, இஸ்லாமிய நிர்வாக அமைப்பில் பதவி என்பது தகுதியுடையோருக்கு தானாகவரும் என்பதை நினைவுகூர்கிறேன்.
அப்துல் கபூர்.
துபை
கடைசியாக நமக்கு கிடைத்த தகவல் மிக்க அதிர்ச்சியளிக்கிறது. தப்லீக் உட்பட அனைத்து தஃவா பணிகளையும் முடக்கும் முதல் முயற்சியாக நயவஞ்சகர்கள் புதிய நோட்டீஸ் போர்டை வைத்திருக்கிறார்கள்.
அதில் பயான் செய்பவர்கள் ஜமாஅதுல் உலமாவிடம் இருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
இது உண்மையாகும் பட்சத்தில் இந்த படுபாதகர்கள் அல்லாஹ்வுக்கு எதிரான போரில் சிகப்பு கோட்டை கடக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். இது செயல்படுத்தப்பட்டால் ஒவ்வொரு பள்ளியாக ஜமாஅத் வருவதும் பயான் செய்வதும் தடை செய்யப்படும். வெளிநாடுகள் ஜமாஅத் வருவதும் அவர்கள் பயான் செய்வதும் தடை செய்யப்படும்.
இதனை உடனடியாக முழு முயற்சியுடன் எர்திர்த்து தகர்த்தெறிவது ஊரின் ஒவ்வொரு முஸ்லிமின் பொறுப்பாகும்
اللهم ارنا فيهم بعجائب قدرتك آمين
அதிர்ச்சியான செய்தி:-
10 நாள் தற்காலிக தடை முடிந்த பிறகு நேற்று இரவு ஹைதர் அலீ ஆலிம் அவர்கள் தக்வா பள்ளிக்கு வழக்கமான முறையில் பயான் செய்வதற்காக சென்றார்கள். சிலர் மைக் உபயோகிப்பதை எதிர்த்த நிலையில் ஆலிம் அவர்கள் மைக் இல்லாமலேயே பயான் செய்ய தொடங்கினார்கள். மற்றும் சிலர் மைக் வைப்பதினால் பல தெருக்களில் பென்கள் வீட்டிலிருந்தபடியே கேட்க வசதியாக இருப்பதினால் மைக்கிலேயே பேசவேண்டும் என்று கூறி மைக்கை வைத்தார்கள்.
பயான் நல்ல படி முடிந்ததும் காவல் நிலையத்திலிருந்து ஹைதர் அலீ ஆலிம் அவர்கள் மீது புகார் வந்துள்ளதாகவும் அங்கு வரும்படியும் அழைப்பு வந்தது. அங்கு சென்று பார்த்த போது சம்சுல் "சங்" கத்தின் சில "தலை" களின் தூண்டுதலின் பேரில் ஜனாப் காசியார் வீட்டு சுக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக சொன்னார்கள். பெரும் திரளாக மக்கள் காவல் நிலையம் முன் கூடியிருந்தார்கள். பின்னர் நாளை பேசலாம் என்று காவல் அதிகாரிகள் வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
சுய கவுரவத்துக்காக சுய அறிவில்லாதவர்களை தூண்டிவிட்டு மாபாதக செயல்களை செய்து கொண்டிருப்பவர்களின் நாள் நெருங்கி வருகிறது, அல்லாஹ் அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இழிவு படுத்தும் வேதனையில் போடுவான் என்பதை அஞ்சவில்லையா?
அல்லாஹ் கூருகிரான்:
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
14:42. (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான்!
فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ
أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِ مِن مَّالٍ وَبَنِينَ
نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ ۚ بَل لَّا يَشْعُرُونَ
23:54. (நபியே!) நீங்கள் அவர்களை ஒரு காலம் வரையில் அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டுவிடுங்கள்.
23:55. நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்?
23:56. இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறன்று! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
கடைசியாக நமக்கு கிடைத்த உண்மை தகவல்:-
நாம் மேலே குறிப்பிட்டபடி தலைவர் மூலம் புகார் கொடுக்கப்படவில்லை. செயலாளர் மூலமாகத்தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக்கிய சுவாரசியமான தகவல் என்னெவென்றால், புகாருக்கான வாசகங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள நிறுவனத்தில் சட்ட விவகாரங்களை கவனிக்கும் ஹிந்து சகோதரரால் அவரின் முதலாளி தற்போது "சங்" கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவரால் கட்டளையிடப்பட்டு, சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
அநியாயம் செய்யப்பட்டவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்த வித திரையும் இல்லை என்பதை அறிந்து, இத்தகையவர்கள் உடனடியாக அல்லாஹ்விடம் தாங்கள் செய்த அநியாயங்களுக்காக பாவமன்னிப்பு தேடுவதுடன் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோருவது அவர்களின் ஈருலக வெற்றிக்கும் சிறந்தது.
இல்லையெனில், இவர்களின் இந்த ஈனச்செயல்களும் இவர்களுக்கும், இவர்களின் வியாபார நிறுவனங்களுக்கும் நேர இருக்கும் இழிவும், அழிவும் பிற்காலத்தில் வரும் சமுதாயத்தினருக்கும், பிற்காலத்தில் வர இருக்கும் அக்கிரமக்காரர்களுக்கும் மிகப் பெரும் பாடமாக அமையும் என்பதை நாம் எச்சரிக்கிறோம்.
Post a Comment