Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

STUDENT ALUMNI நம்மூர் பள்ளிகளில் உள்ளதா? 37

தாஜுதீன் (THAJUDEEN ) | July 11, 2010 | , , ,

சென்ற மாதம் அதிரையில் சில பள்ளி ஆசிரியர்களிடம் நம்ம ஊர் பள்ளிகளின் கல்வித் தரம் எப்படி உள்ளது என்று உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.  
                                                                     

நம்முடைய இமாம் ஷாபி பள்ளியின் புதிய முதல்வராக பதவி ஏற்றுல்ல  பேராசிரியர் பரகத் அவர்களிடமும் சில நிமிடங்கள் மட்டும் உரையாட முடிந்தது. அவர்கள் பதவி ஏற்றவுடன் சில மாற்றங்கள் இமாம் ஷாபி ஆண்கள் பள்ளியில் ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய மாற்றங்களை நாம் எதிர்ப்பார்க்கலாம்.

பேராசிரியர் பரகத் அவர்கள் நிறைய சீனியர் மாணவர்களின் படிப்பு பற்றியும், ஒழுக்கங்கள் பற்றியும், அவர்களின் பேச்சுக்கள், நடவடிக்கைகள் பற்றியும் மிக கவலையாக சொன்னார்கள், மிக கவலைப்பட வேண்டிய விசையம். ஒருவன் நல்ல மனிதன் என்பதற்கு அவனின் கல்வித் திறமையும், நல்ல ஒழுக்கமும் தான் முன் நிற்கும் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன்.

பேராசிரியர் பரகத் அவர்களிடம் உரையாடிய பிறகு என் மனதில் கேள்விகள் பல வந்து சென்றது. “நம்மால் நம் வருங்கால சமுதாயத்தின் தூண்கலாக வரப் போகும் நம்மூர் மாணவர்களுக்காக ஏதாவது செய்ய முடியுமா?” நீண்ட யோசனைகளுக்கு பிறகு பதில் வந்தது.

நம்மூரின் எத்தனையோ நல்லா படித்த சகோதரர்கள் பொருளாதர தேடலினால் வெளிநாட்டுக்கு சம்பாத்தியாத்திற்கு தள்ளப்பட்டாலும், தற்போதைய காலகட்டத்தில் நம் இளைய தலைமுறையை பற்றிய கவலை நம் மனதில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இப்போது விசையத்துக்கு வருகிறேன். STUDENT ALUMNI அமைப்புகள் நம்மூர் பள்ளிகளில் உள்ளதா? யாருக்காவது தெரியுமா? வெளிநாடுகளிலாவது உள்ளதா? பதில் இருந்தால் தயவு செய்து விபரங்களுடன் தெரியப்படுத்துங்கள்.

நம்மூரின் 90% படித்த சகோதரர்கள் தங்களின் பள்ளி நாட்களை அதிரையில் தான் படித்திருப்பார்கள் என்று நம்புகிறேன், நம்முடைய அனுபவங்களை நம்மூர் பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள நாம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம், குறிப்பாக 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமாவது குறைந்த பட்சம் மாதத்தில் ஒரு நாளில் “GUEST LECTURE” க்காக ஒரு மணி நேரம் அனைத்து பள்ளிகளும் ஒதுக்க வேண்டும். எந்த பள்ளியில் படித்தோமோ அந்த பள்ளிகளுக்கு சென்று நாம் மாணவர்களை உற்சாகப்படுத்தி நம்முடைய நல்ல அனுபவங்களையும், நல்ல உதாரணங்களையும் எடுத்துக்காட்டி நல்ல ‘MOTIVATIONAL SPEECH’ கொடுக்கலாம்.

தினம் தினம் பார்த்து பழகிப்போன ஆசிரியர் கூறும் அறிவுரைகள் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால் புதிய முகங்கள், இளைய தலைமுறைகள், நல்ல படிப்பு படித்தவர்கள், நல்ல துறையில் பணியாற்றிவருபவர்கள், முக்கியமாக அதிரைக்காரர்கள் என்ற நல்ல PROFILE உள்ள நாம் நம்ம ஊர் மாணவர்களுக்கு ‘MOTIVATIONAL SPEECH’ உடன் சேர்ந்த அறிவுரைகள் செய்தால் நிச்சயம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது என்னுடைய POSITIVE நம்பிக்கை.

GUEST LECTURE MOVITIVATIONAL SPEECHக்கு பள்ளி நிர்வாகமும், முதல்வர்களும், ஆசிரியர்களும் ஒரு நல்ல திட்டத்தை ஏற்படுத்த வேண்டும், அதிரையில் படித்த சகோதரர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் தனித் தனியாகவோ அல்லது கூட்டு முயற்சியாக ஒரு குழுவை நியமித்து செயல்படலாம்.

ஒவ்வோரு பள்ளியும் பழைய மாணவர்கள் குழு (STUDENT ALUMNI) மீண்டும் சிறப்பாக ஏற்படுத்த வேண்டும், உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், நம்மூர் பள்ளிகளில் இது இருப்பதாக இதுவரை தெரியவில்லை, அப்படி இருந்தால் அவற்றை மிகச் சிறப்பாக செயல்பட வைக்க அப்பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் நம் எதிர்கால சந்ததியினரின் நலனை மட்டும் எண்ணத்தில் வைத்து முன்வர வேண்டும்.

வெளிநாடுகளில் இருக்கும் படித்த சகோதரர்களும், உள்ளூரில்  இருக்கும் சகோதரர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நல்ல ஒரு தொடர்பு (இயக்கங்கள் இல்லாத) ஏற்பட வேண்டும். இதற்கு STUDENT ALUMNI அமைப்புகளால் மட்டும் தான் முடியும்.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி இன்று தமிழகத்தில் ஒரு தலைசிறந்த கல்லூரியாக இருப்பதற்கும், மற்ற கல்வி நிறுவனங்கள் தலைசிறந்தவைகளாக திகழ்வதற்கு STUDENT ALUMNI ஒரு முக்கிய காரணமாக இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. உண்மை தானே?

குடும்பவாரியாகவும், தெருவாரியாகவும், இயக்கங்கள்வாரியாகவும், ஒற்றுமையற்று இருக்கும் நம்மூரில் இது சாத்தியப்படுமா? சாத்தியப்படவைக்க நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முடியும் என்பது நம்முடைய நம்பிக்கை. நம் வருங்கால சமுதாயத்துக்காக நாம் செய்யும் ஒரு சிறிய முயற்சி மட்டுமல்ல ஒரு சமூகப் புரட்சி.

இதைப் படிப்பவர்களுக்கு இதைவிட நல்ல யோசனைகள், ஆலோசனைகள் வந்தால் பின்னூட்டமிடலாம். நம்மூர் பள்ளி நிர்வாகங்கள் இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுமா? அல்லாஹ்வின் உதவியுடன் நம் சமுதாயத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்ற நம்பிக்கையுடன் விடைப்பெறுகிறேன்.

அன்புடன் தாஜுதீன்

11.07.2010

37 Responses So Far:

crown said...

நல்ல தொரு யோசனை முதலில் ஊரில் உள்ள முன்னால் மாணாக்கர்கள்முயற்சித்தால் இது தொடர வாய்புகள் உள்ளது.இதற்கு பள்ளி நிர்வாகமும் எந்த வித ஈகோ இல்லாமல் ஒத்துழைத்தால் இந்த யோசனை கை கூடும்.இன்ஷாஅல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சகோதரர் தஸ்தகீர்,
பள்ளிகள் இதில் அக்கறை எடுத்தால் முடியும். அனுபமவாய்ந்த நம் பேராசிரியர் பரகத் அவர்களைப் போன்றவர்கள் முன் வருவார்கள் என்று நம்பலாம்.

Abu Khadijah said...

அருமையான ஒரு ஆக்கம் சகோதரரே, நிச்சயம் நம்மால் செயல் படுத்த முடியும்.
குறிப்பாக “GUEST LECTURE”, ‘MOTIVATIONAL SPEECH’ இவையெல்லாம் நான் காரைக்கால் பள்ளியில் SPL(School People Leader)ஆக இருந்த போது மாதத்திற்கு இரண்டு முறை உயர் அதிகாரிகளை சந்தித்து அவர்களை மானவர்களுக்கு முன் ஒரு மனி நேரம் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்வோம். இதே முயற்சியே நாமும் செய்யலாம்,

Student Alumni யை வலுப்படுத்தியே ஆக வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

Abu Khadijah said...

அப்படி நாங்கள் அமைத்த GUEST LECTURE ரொம்ப பயனுள்ளதாக இருந்தது, உதாரனமாக : ஒரு போஸ்ட் ஆபிஸ் சென்று தபால் நிலையங்களில் உள்ள வசதிகளை பேச சொல்வோம், அடுத்த தடவை போலிஸ் அதிகாரிகளை அழைத்து ஒழுக்கங்களை பற்றி, டிராபிக் போலிஸை அழைத்து டிராபிக் பற்றி ஆக இது போன்ற விடயங்களெல்லாம் அங்கே செய்து விட்டு ஊரில் வந்து படிப்பை தொடர்ந்த போது இங்கு இது போன்ற விடயங்களை கவனம் செலுத்தவில்லை என்பதை பார்க்கும் போது சற்று கவலையாகத்தான் இருந்தது, இப்போதும் அந்த கவலை இருக்கிறது

Yasir said...

ஜமால் முகம்மது கல்லூரி அலுமினியின் உறுப்பினர் என்ற முறையில் சொல்கிறேன்....இந்த அலுமினி மூலமாக..அந்த கல்லூரி அடைந்த பயன்கள் எத்தகையது என்பது எனக்கு தெரியும்...நம்மை பக்குவபடுத்தி ஆளாக்கிய கல்வி நிறுவனத்திற்க்கு நாம் நல்ல நிலமையில் இருந்தால் அதற்க்கு எந்த வகையில் உதவ முடியுமோ கண்டிப்பாக உதவ வேண்டும்…ஜமால் முகம்மது கல்லூரியை 80% நடத்துவதே முன்னால் மாணவர்களின் அலுமினிதான்..சகோ.தாஜிதீன் ஒரு அருமையான யோசனையை இங்கு பகிர்ந்துள்ளார்…செயல்படுத்த முன் வருவார்களா ? முன்னால் மாணவர்களும் & இன்னாள் மாணவர்களும்

Yasir said...

*முன்னாள் என்று படிக்கவும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சகோதரர்கள், யாசிர் மற்றும் மன்சூர்(தம்பி), வருகைக்கு நன்றி.

//Adirai Express says...ஸ்டுடென்ட் ஆலும்னி யை வலுப்படுத்தியே ஆக வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்//

இது வருங்கால சந்ததியினருக்காக செய்தாக வேண்டும். நமதூர் பள்ளி, கல்லூரிகள் முன்வருவார்களா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நம்மை பக்குவபடுத்தி ஆளாக்கிய கல்வி நிறுவனத்திற்க்கு நாம் நல்ல நிலமையில் இருந்தால் அதற்க்கு எந்த வகையில் உதவ முடியுமோ கண்டிப்பாக உதவ வேண்டும்…//

சரியாக சொன்னீர்கள் சகோதரர் யாசிர்.

Unknown said...

இது ஒரு காலத்தில் கானல் நீராகிப் போன என் கனவு. எனினும், அண்மையில் காதர் முஹைதீன் உயர்நிலைப் பள்ளியில் இப்படி ஒரு முயற்சியைத் தொடங்கியதாக அதிரை எக்ஸ்பிரஸில் வாசித்த நினைவுண்டு. அது இப்போது எந்நிலையில் உள்ளது என்று அறிய முடியவில்லை. Alumni பற்றி, முதலில் பள்ளி நிர்வாகம் ஆர்வம் கொள்ள வேண்டும். நம்மூர் பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைப்புத் தருமா?

அப்துல்மாலிக் said...

நானும் இது சம்பந்தமாக முயற்சித்து வெளிநாடுகளில் படிப்பின்/எக்ஸ்பீரியசின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அதிரை பைத்துல்மாலில் வைத்து வெக்கேசன் சென்றபொழுது லெக்சரர் கொடுத்திருக்கிறோம், மற்றவர்களையும் இதை செய்யும்படி ஏவியிருக்கிறேன். இது நல்ல ஒரு யோசனை, உடனே இதை அமுல்படுத்தவேண்டும். என் பள்ளி நாளில் ஒரு நல்ல வழிகாட்டல்/அலுமினி இல்லாமல் நிறைய திறமையான மாணவர்கள் வழிதவறி வெவ்வேறு வேலையில் சேர்ந்து குடும்பசுமைக்காக மனது ஒவ்வாமல் உழைப்பவர்களை காணமுடிகிறது.

-அப்துல் மாலிக்

Yasir said...

//Alumni பற்றி, முதலில் பள்ளி நிர்வாகம் ஆர்வம் கொள்ள வேண்டும். // சரியாக சொல்லி இருக்கீறீர்கள்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க அஹ்மது மாமா, சகோதரர் மாலிக். தங்கள் இருவரின் வருகைக்கு நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அபுஅஃப்ஸர் கூறியது... என் பள்ளி நாளில் ஒரு நல்ல வழிகாட்டல்/அலுமினி இல்லாமல் நிறைய திறமையான மாணவர்கள் வழிதவறி வெவ்வேறு வேலையில் சேர்ந்து குடும்பசுமைக்காக மனது ஒவ்வாமல் உழைப்பவர்களை காணமுடிகிறது//

இப்போது இருக்கும் நம்மூர் கல்வி நிறுவனங்களின் தரத்தால் அதே நிலை நம் மாணவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்ற அச்சம் நம்மிடம் உள்ளது. மிகவும் கவலைப்பட வேண்டிய விடையம்.

ஸ்டுடென்ட் ஆலும்னியை வலுப்படுத்த முன் வருவார்களா பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர்?

Shameed said...

STUDENT ALUMNI நம்மூர் பள்ளிகளில் உள்ளதா?

நல்ல சிந்தனை உள்ள ஆக்கம்

சில நேரங்களில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது (காரணம் இல்லாமல் )வெறுப்பாக இருக்கும் (நமக்கும்தான் முன்பு)இது போன்ற நேரத்தில் நன்கு படித்த அனுபவம் வாய்ந்தவர்கள் வந்து தங்களின் அனுபங்களை வெளி நடப்புகளையும் எடுத்து சொன்னால் மாணவர்களின் mind கொஞ்சம் restart செய்ததுபோல் இருக்கும்

Shameed said...

புதிய முதல்வராக பதிவி

என்பதை பதவி என திருத்தம் செய்யவும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எழுத்துப் பிழையை திருத்திவிட்டேன். நன்றி சகோதரர் சாஹுல்.

crown said...

mind கொஞ்சம் restart செய்ததுபோல் இருக்கும்.
------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும் குண்டக்க மண்டக்க கேக்குறேன்னு நினைக்காதியோ,
அப்படின்ன இப்ப அவங்க மன்டயில விசயம் நின்டுபோச்சுன்னு சொல்றீங்களா?(எப்படி சின்டு முடிச்சி விட்டுட்டேன்).(Refresh செய்ததுபோல் இருக்கும்? or mind கொஞ்சம் restart செய்ததுபோல் இருக்கும்.????
-------------------------

Shameed said...

வலைக்கும் முஸ்ஸலாம்



நிண்டு போச்சி என்பதற்காகதானே இந்த கட்டுரை மற்றும் கருத்துக்களும் ,
ஆமா உங்களுக்கு ஒன்றும் நின்னு போகலைலோ ??

தாஜுதீன் (THAJUDEEN ) said...

hangஆன mindயை restart செய்தாலும் refresh செய்தாலும் நல்லது தான். ஆங்கில இலக்கன அன்பர்கள் விளக்கினால் நல்லது. எப்படியாவது நம் வருங்கால சந்ததியினருக்காக நல்லது நடந்தால் சரி.

இந்த Motivation கட்டுரைக்கு இன்னும் நல்ல Motivation தேவை.

Shameed said...

நம்முடைய இமாம் ஷாபி பள்ளியின் புதிய முதல்வராக பதிவி

இதிலும் திறுத்தம் செய்யவும் அடிக்கடி குறை காண்பதற்கு மன்னிக்கவும்

ஆங்கில வழி கல்வி என்று முன்பு ஒரு முறை சொன்ன நினைப்பு உண்டு ,இது ஒரு பெரிய விஷயம் கிடையாது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நன்றி சகோதரர் சாஹுல்.

சரி செய்துவிட்டேன். உஙகளைப் போன்றவர்களின் தமிழ் உதவி நிச்சயம் எனக்கு தேவை என்பதை நான் நன்கு அறிவேன். முடிந்தவரை பிழையில்லாமல் எழுத முயற்சி செய்கிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட கிரவுன்(னு): இப்படி உம்மையும் பேச வைத்திருக்கிறதே இத இதத்தான் restartன்னு சொல்லப் பட்டது கட்டுரையில், அதுசரி முழுசா படித்து முடித்தவர்களும் பாதியிலே ஓடிப் போனவங்களும் இந்த அலும்னி பற்றி யோசிக்கலாமப்பா ! மாத்தி யோசிச்சு பாரும்.

Shameed said...

தாஜுதீன்
உங்களை போன்றவர்களின் தமிழ் உதவி நிச்சயம் எனக்கு தேவை

எனக்கும் தமிள் தகராறுதான் (இங்கிலீஷ் மட்டும் என்ன வாழுதம் என்று எட்டுகட்டையில் யாசர் பாடுவது காதில் விழுகின்றது ) நானும் டப்பு டப்பா தான் தமிள் எழுதுவேன்

crown said...

அட கிரவுன்(னு): இப்படி உம்மையும் பேச வைத்திருக்கிறதே இத இதத்தான் restartன்னு சொல்லப் பட்டது கட்டுரையில், அதுசரி முழுசா படித்து முடித்தவர்களும் பாதியிலே ஓடிப் போனவங்களும் இந்த அலும்னி பற்றி யோசிக்கலாமப்பா ! மாத்தி யோசிச்சு பாரும்.
____________-----------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா நலம் விழைய விரும்புகிறேன்.இப்படி எப்பவாவது பேசுர உங்கள என் கேள்வி பேச வச்சுடுச்சு பாத்தியலா? அது தான் என் வெற்றி ஹஹ்ஹஹஹ்ஹஹஹ்.

crown said...

நிண்டு போச்சி என்பதற்காகதானே இந்த கட்டுரை மற்றும் கருத்துக்களும் ,
ஆமா உங்களுக்கு ஒன்றும் நின்னு போகலைலோ ??
_------------------------------- mind நின்னு போச்சுன்னு சொன்னதால் தான் என் சந்தேகம்???(த்தூ... இதெல்லாம ஒரு சந்தேகன்னு சந்தேகம பாக்காதியோ) நம் மூரில் திட்டமேஆரம்பிக்காத போது எப்படி திட்டம் நின்னுடுச்சின்னு எடுத்துக்க முடியும்?(ரொம்ப உஷ்னப்பட்டிடியலோ???தமாம் போய் நொங்கு குடிங்க!) எனக்கு நின்னு விட வில்லையென்று காட்டத்தான் உங்களைப்போல் அறிவாளிகளிடம் கொஞ்சமாவது கேள்வி கேட்க முடியுது.(அப்பவாவது விஷயம் தெரிஞ்சவன் போல் காட்டிகலாமுல)!

Unknown said...

best article....real vision for future generations of adirai...

Adirai khalid said...

தொலைநோக்கு பார்வையோடு எழுதப் பட்ட கட்டுரை

இனி தெருப் பிர‌ச்சினை குறையும் சாத்தியக் கூருகள் உண்டு

ஆனால், பல்வேறுதரப்ப்பட்ட க‌ல்வி நிலைய‌ங்க‌ளின் போட்டிகளினால் மாணவ சமுதாயத்திடனும் ஏற்றத்தாழ்வுகள் சற்று கூடுதலாக இருக்கும்

ஆனால் இதை ச‌மூக‌ அக்கறை என்ற தெளிவான க‌ண்ணாடிக் கொண்டு பார்க்க வேண்டும் அப்படிச் செய்தால் மட்டுமே பழைய மாணவ ஒருங்கிணைப்பு அல்லது கூட்டமைப்பு சாத்தியப் படுத்தப்படும்.

இந்த திட்டத்தை செயல் படுத்த அந்தந்த ஊரில்தான் இருப்பது என்பது அவசிய மில்லை எங்கு வேண்டுமானலும் இருந்துக் கொண்டு செயல் படுத்தலாம். நாடு கடந்து இருப்பவர்கள் கூட தக்க சமயத்தில் ஒன்று கூடி பல சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது ஒருங்கினைக்கலாம்

sorry more later

Shameed said...

ஓ அந்த நின்னதை சொல்றியல (திட்டம்) ந சொன்னது பசங்களுக்கு mind நின்னதை ,இங்கு பயங்கர சூடு அதான்ப கொஞ்சம் தடு மாற்றம். ஆமா நீங்க குளிரில் உள்ள ஆளாவது கொஞ்சம் நின்னது எதுன்னு கூல யோசித்து இருக்கலாமுல்ல , ஆமா எப்போ உங்க crown கழட்டி நீங்க யாருன்னு எனக்கு சொல்லிவியோ ,( பாம்பு அஸ்லாம் எபோவும் buys தான் )

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// ஆமா எப்போ உங்க crown கழட்டி நீங்க யாருன்னு எனக்கு சொல்லிவியோ ///
அவ்வளவு சீக்கிரம் அத கழட்ட முடியாது, கிரவ்ன்(னும்) அவரது சகோதரகளும் ரொம்பவே உழைத்திருக்கிறார்கள் அதனை வைத்துக் கொள்ள (என்ன தஸ்த(புஸ்னு)கீரலைல ! :) )

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சகோதரர்கள் அப்துல் ரஹ்மான், ஹாலித், வருகைக்கு நன்றி.

// ஹாலித் கூறியது.... ஆனால் இதை ச‌மூக‌ அக்கறை என்ற தெளிவான க‌ண்ணாடிக் கொண்டு பார்க்க வேண்டும் அப்படிச் செய்தால் மட்டுமே பழைய மாணவ ஒருங்கிணைப்பு அல்லது கூட்டமைப்பு சாத்தியப் படுத்தப்படும்//

சரியாக சொன்னீர்கள், பள்ளி நிர்வாகங்கள் முன் வர வேண்டும். வருவார்கள் என்று நம்புவோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

refresh, restart, mind, crown இந்த அரட்டைக்கு நான் வரலை :)

காக்காமார்களே நம்மல விட்டுங்க...

Shameed said...

மு.அ. ஹாலித் கூறியது

இதை ச‌மூக‌ அக்கறை என்ற தெளிவான க‌ண்ணாடிக் கொண்டு பார்க்க வேண்டும் அப்படிச் செய்தால் மட்டுமே பழைய மாணவ ஒருங்கிணைப்பு அல்லது கூட்டமைப்பு சாத்தியப் படுத்தப்படும்.

இந்த திட்டத்தை செயல் படுத்த அந்தந்த ஊரில்தான் இருப்பது என்பது அவசிய மில்லை எங்கு வேண்டுமானலும் இருந்துக் கொண்டு செயல் படுத்தலாம். நாடு கடந்து இருப்பவர்கள் கூட தக்க சமயத்தில் ஒன்று கூடி பல சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது ஒருங்கினைக்கலாம்

நல்ல கருத்து

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


சகோ. தாஜூத்தீன் உங்களின் இக்கட்டுரை மிகவும் அருமை. இங்கு என் வேலைப்பளு காரணமாக உடனே அது பற்றி பின்னூட்டம் இட முடியவில்லை. உங்களின் இம்முயற்சி பற்றிய ஆலோசனை நம் வருங்கால தூண்களான இக்கால மாணவ, மாணவியருக்கு பெரிதும் உதவியாகவும் அவர்கள் எதிர்காலத்தில் உலக சந்தையில் அதிக வரவேற்பும் அதே சமயம் வருமான வழிகளைப்பெருக்கிக்கொள்ள ஒரு சரியான முடிவை இப்பொழுதே எடுக்க ஏதுவாக இருக்கும்.


\\தினம் தினம் பார்த்து பழகிப்போன ஆசிரியர் கூறும் அறிவுரைகள் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால் புதிய முகங்கள், இளைய தலைமுறைகள், நல்ல படிப்பு படித்தவர்கள், நல்ல துறையில் பணியாற்றிவருபவர்கள், முக்கியமாக அதிரைக்காரர்கள் என்ற நல்ல PROFILE உள்ள நாம் நம்ம ஊர் மாணவர்களுக்கு ‘MOTIVATIONAL SPEECH’ உடன் சேர்ந்த அறிவுரைகள் செய்தால் நிச்சயம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது என்னுடைய POSITIVE நம்பிக்கை.

GUEST LECTURE MOVITIVATIONAL SPEECHக்கு பள்ளி நிர்வாகமும், முதல்வர்களும், ஆசிரியர்களும் ஒரு நல்ல திட்டத்தை ஏற்படுத்த வேண்டும், அதிரையில் படித்த சகோதரர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் தனித் தனியாகவோ அல்லது கூட்டு முயற்சியாக ஒரு குழுவை நியமித்து செயல்படலாம்.

ஒவ்வோரு பள்ளியும் பழைய மாணவர்கள் குழு (STUDENT ALUMNI) மீண்டும் சிறப்பாக ஏற்படுத்த வேண்டும், உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், நம்மூர் பள்ளிகளில் இது இருப்பதாக இதுவரை தெரியவில்லை, அப்படி இருந்தால் அவற்றை மிகச் சிறப்பாக செயல்பட வைக்க அப்பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் நம் எதிர்கால சந்ததியினரின் நலனை மட்டும் எண்ணத்தில் வைத்து முன்வர வேண்டும்\\


நானும் இது போல் பல முறை யோசித்துள்ளேன். நம் யாவரின் உள் உணர்வுகளின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக இக்கட்டுரை இருக்கின்றது.


ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பள்ளி அறிவு கிடைக்கின்றது. நம்மைப்போன்ற பழைய மாணவர்கள் மூலம் நாம் பள்ளி, கல்லூரிகளுக்கு அப்பால் கிடைத்த எண்ணற்ற அனுபவங்களையும், எதைச்செய்தால் நாம் முன்னுக்கு வரலாம் என்ற ஆலோசனைகளையும் இன்று படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நமக்கும் அவர்களுக்கு வகுப்பறையில் ஒரு சிறிய பாடம் நடத்த வாய்ப்பு கொடுக்கப்படுமேயானால் அது ஒரு புதிய அனுபவமாகவும், தன் எதிர்காலத்தை ஒரு சரியான பாதையில் கொண்டு செல்ல மாணாக்கர்களுக்கு பேருதவியாகவும் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இன்ஷா அல்லாஹ் இது போன்ற பயனுள்ள ஏற்பாட்டிற்கு நாமெல்லாம் முயற்சி செய்வோம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

crown said...

இங்கு பயங்கர சூடு அதான்ப கொஞ்சம் தடு மாற்றம். ஆமா நீங்க குளிரில் உள்ள ஆளாவது கொஞ்சம் நின்னது எதுன்னு கூல யோசித்து இருக்கலாமுல்ல , ஆமா எப்போ உங்க crown கழட்டி நீங்க யாருன்னு எனக்கு சொல்லிவியோ ,( பாம்பு அஸ்லாம் எபோவும் buys தான் )
_-----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே!யார் கண்பட்டுச்சோ இப்ப கோடையின் கோபம் தாங்காமல் தகிக்கிறது.ப்ரெஸ்சான நொங்கு இங்கு கிடைப்பதில்லை ப்ரஸ்சுக்கு தொங்கனுமா இருக்கு எல்லாம் டின்ல அடச்சு வற்றதுனால (கெமிக்கல்)சாப்பிடமுடியல முடிஞ்சா பார்சல் அனுப்புங்க.

Adirai khalid said...

தஜுதீன் said....

//சரியாக சொன்னீர்கள், பள்ளி நிர்வாகங்கள் முன் வர வேண்டும். வருவார்கள் என்று நம்புவோம்./////


க‌ட்டுரையாள‌ர் க‌ருப்பொருள் தெறியாம‌ல் பின்னூட்டமிட்டுள்ளார் என்ப‌துபோல் தெறிகிற‌து

ஏனெனில் ப‌ழைய‌ மாண‌வ‌ர் கூட்ட‌மைப்பிற்க்கு பள்ளி நிர்வாகங்கள்தான் முன் வ‌ர‌வேண்டிய‌து என்பது அவ‌சிய‌மில்லை. ந‌ல்ல‌ நிலையிலுள்ள பழைய‌(வேலை வாய்ப்பில், பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள‌) மாண‌வ‌ ச‌மூதாய‌ம் தான் முன் வ‌ர‌வேண்டும். அதற்காக ஓர் அமைப்பை ஏற்ப‌டுத்தி ஆர்வமுள்ள ந‌ல் ஆசிரிய‌ர்க‌ள் மூல‌ம் நிர்வாக‌த்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும். பிற‌கு சேவைக‌ளை த‌ங்க‌ளின் வ‌ச‌திற்கு ஏற்ப‌ வ‌ருங்கால மாணவ சமுதாயத்திற்கும் அந்த‌ க‌ல்வி நிலைய‌ங்க‌ளுக்கும் தேவையானதை செய்ய‌ முய‌ற்சிக்க‌ வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//க‌ட்டுரையாள‌ர் க‌ருப்பொருள் தெறியாம‌ல் பின்னூட்டமிட்டுள்ளார் என்ப‌துபோல் தெறிகிற‌து//

அன்பு சகோதர ஹாலித் அவர்களுக்கு.

தங்களுடய கருத்தை மதிக்கிறேன்.

பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நாம் எந்த முயற்சி செய்தாலும் அது வெற்றியடைவது சந்தேகம் தான். இதன் அடிப்படையில் தான் " பள்ளி நிர்வாகங்கள் முன் வர வேண்டும். வருவார்கள் என்று நம்புவோம்" என்று கூறினேன்.

பழைய மாணவர்கள் கூட்டமைப்பு அந்தந்த பள்ளியுடன் ஒறுகினைந்து சமூக முன்னேற்ற நோக்கத்தில் செயல்பட்டால் தான் பல நன்மைகளை நாம் பார்க்க முடியும். இதற்கு பள்ளி நிர்வாகங்கள் முன்வரவேண்டும்.

நம்மூரில் எந்த ஒரு அமைப்பை ஏற்படுத்தினாலும் அதில் எப்படியாவது ஏதாவது ஒரு இயக்கத்தில் சாயம் பூசி 10தோடு 11ஆக ஆக்கப்பட்டு விடும். பள்ளியுடன் சேர்ந்த பழைய மாணவர்கள் அமைப்பு இருக்கும் போது இயக்க சாயங்கள் பூசப்படுவதை தவிர்கலாம். இது தங்களுக்கு தெரியும் தானே.

இதன் அடிப்படியில் தான் நான் பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என்று பின்னூட்டமிட்டேன்.

இருந்தாலும் தங்களுடய கருத்தை மதிக்கிறேன்.தொடர்ந்து இணைந்து இது போன்று நல்ல ஆலோசனைகளை வழங்குங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சில நாட்களுக்கு முன்பு தான் விடுமுறையை அதிரையில் கழித்துவிட்டு வந்துள்ளேன்.

முன்பு அதிரை தெருப் பிரிவினையால் பாதிக்கப்பட்டிருந்தது, இப்போது இயக்கங்களால் ஒவ்வொரு தெருவுக்குள்ளும் பிரிவினை உணர்வுகள் ஏற்பட்டுள்ளதை பார்த்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.

ஒற்றுமை என்னும் "ஒரு" கயிற்றை எட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டிய நம் சமுதாயம், கணக்கில்லாத இயக்கங்களால் தனித் தனியாக ஒற்றுமை கயிறுகளை(இயக்கக் கொடிக் கயிறு) உருவாக்கி நம் சமுதாயம் சிதறடிக்கப்பட்டுள்ளதால், நாம் ஆரம்பிக்கும் எந்த அமைப்பும் நிச்சயமாக் ஏதாவது ஒரு இயக்க சாயம் பூசப்படும் என்பது நாம் அனுபவரீதியாக கண்டுவரும் உண்மை.

இயக்கா பிரிவினைகள் உள்ள இன்றைய காலகட்டத்தில் பள்ளி நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆரம்பிக்கப்படும் பழைய மாணவர்கள் அமைப்புகளின் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுவது மிக சிரமம் என்பது என்னுடைய கருத்து.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.