அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
முந்திய பதிவில் குறிச்சொல்லுபவர்கள் பற்றியும், இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். குறி, ஜாதக (சுயதேவைத்) தொழில் செய்யும் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் பிடிபட்டவரைப் பற்றி சுவாரசியசமாக சொல்லப்போகிறேன். அது மட்டுமல்லாது சின்ன(த் திரையில்லாத) நாடக வடிவிலும் சில விசயங்களையும் நாம் பார்போம், இனி....
எங்க ஏரியாவில நொண்டி ஏகாம்பரம்னு ஒருத்தர்(கால் ஊனம்) ஜோசியம் சொல்லி வந்தார் அவரிடம் வெளியூர் மற்றும் நம்மூர் மாற்று மதத்தினரும் வந்து ஜோசியம் குறி கேட்டு வந்தனர். அதே வேளை நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வந்து அவரிடம் குறிகேட்டுப் பரிகாரம்(?) வாங்கிச் செல்வர். அவருடைய பையன்கள் எங்களுடன் படித்த தோடல்லாமல் , அவரின் மற்றுமொரு மகன் எனக்கு கணக்கு வாத்தியார் நான் அவருக்கு கவிதை வாத்தியார் ஆதலால் அந்த குடும்பம் எனக்கு நன்கு பரிச்சயம்.
ஒருநாள் அவர் வீட்டில் கணக்குப் பாடத்தின் டியூசன் நடந்து கொண்டிருந்தது. அந்த தெருவில் ஒரு முஸ்லிம் பெரியவர் இருந்தார்கள் நல்ல தைரியசாலி அவர் ஜோசியக்காரவீட்டுக்கு வந்தார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியம் ஏன் இவரு இங்கே வர்ராரு இவரும் ஜோசியம், குறிகேட்பாரோ? சந்தேகம் நாங்கள் அமைதியாக கவனித்து கொண்டிருந்தோம். வாத்தியாரும் குளித்துவிட்டு வருவதாய் சொல்லி சென்றிருந்தார். ஆகவே என்ன நடக்குதுன்னு பார்க்க ஆவலாக இருந்தோம். சிலர் வெளியூரிலிருந்து வந்திருந்திருந்தார்கள்.
அந்த பெரியவர் வந்ததும் ஜோசியருக்கு ஒரே பல்.
"என்ன .... இங்கே !?"
"எப்படி நீர் அக்கம் பக்கதிலேதான் இருக்கிறீர் இங்கே எல்லாம் எட்டி பார்க்க மாட்டீரே என்ன அத்திபூர்தார்போல????" (இருவரும் ஒரே வயதுடையவர்கள்)
"என்னப்பா பன்றது தேவை இருந்தாதான் வரமுடியும் நீயும் சும்மா வந்தா இப்படி வரவேற்பியா?"
"என்ன இப்படி சொல்லிட்டீர் ?"
"அது இல்லப்பா நீயும் எப்பவும் பிஸியா ஆட்களுடன் இருப்பே அதான், ஆனா இப்ப எனக்கு ஒரு காரியம் ஆகனும்!"
"சொல்லும் பேஸா செஞ்சிடலாம், யாருக்காவது முகமாத்து(????) பன்னனுமா? செய்வினை செய்யனுமா?"
"அப்படியெல்லாம் இல்லப்பா எங்கவீட்டு மாடு காணாப்போச்சு யாரவது திருடிக்கிட்டு போய்டாங்களா? இல்ல எந்த திசையிலாவது மேஞ்சுக்கிட்டு இருக்கான்னு பாத்து சொல்லனும்"
"சரி கொஞ்சம் பொறு வோய்..."
சொல்லிட்டு தன் மனைவியை கூப்பிட்டு குரல் கொடுத்தார் "போய் சாமிபடதுக்கு பக்கத்துல வெத்தல பாக்கு இருக்கு, அதோட மையும் இருக்கு எடுத்துகிட்டு வா !"
மனைவி இரண்டையும் எடுத்துகிட்டு வந்ததும், வந்திருந்த வெளியூர்காரங்க கிட்ட கொஞ்சம் காத்திருக்கும் படி சொல்ல அவர்களும் தலையாட்டி விட்டு இவர் மை போடுரத வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க.
வெத்திலையில் கருப்பா மைதடவிட்டு நம்ம பெரியவர் கையில் ஏதோ பொட்டலம் கொடுத்து இதை நான் சொல்றவர கெட்டியா பிடிச்சுக்குங்க என்றார். ஏகாம்பரம் ஏதோ கொஞ்ச நேரம் முனுமுனுத்தார் பிறகு மாடு எங்கே இருக்கு என்பதை விவரிக்க அரம்பித்தார்.
"மேக்காலா 60 கீ,மீ. தள்ளி ஒரு குளத்துல புல் மேஞ்ஜுகிட்டு இருக்கு யாரும் திருடிக்கிட்டுப்போகலா..."
"அப்படியா சந்தோசம் ஆனா உமக்கு ஒரு விசயம் சொல்லனும்னு" என்று பெரியவர் சொல்ல ...
"என்னாவோய்..."
"உனக்கு ஏன் இந்த ஏமாத்து பொலப்பு, என் மாடு எங்கேயும் கானாப்போகலா உன் வீட்டுக்கு எதுத்தாப்ல உள்ள போன் போஸ்ட்லதான் கட்டி வச்சிருக்கேன் நீ எல்லார்டையும் காசு புடிங்குறத பாக்காலாம்னுதான் வந்தேன் அப்புறம் நீ யாருக்கு வேனா ஜோசியம் பாரு ஆனா முஸ்லிம் யாருக்காவது பாத்தா உன் மறுகாலும் ஒடச்சுடுவேன்னு" சொல்லிட்டு வேகமா அசிஙமாதிடிட்டு போனார்.
ஏகாம்பரத்துக்கு திருடனுக்கு தேள் கொத்துனாமாறி ஆச்சு.அவர மூஞ்சிய அப்ப பார்கனுமே?? ஹஹ ஹஹ் ஹஹ்
....பசங்கலேல்லாம் இதைப்பார்த்ததும் நம்ம வாத்தியார் அவசர அவசரமா அன்று டியுசனை கேன்சல் செஞ்ஜுட்டார். பாவம் அந்த வெளியூர் காரங்களும், அப்பாவி மக்களும்.
குறி சொல்லும் பெண்னை பற்றி எழுதிய பின் நான் விசாரித்தேன் அவர் இன்னும் அந்த வேலையைதான் செய்கிறார் என்றும் ஆரம்பத்தில் காசுவாங்காமல் செய்தவர் இப்ப காசு வாங்குவதாகவும் அவரின் வீட்டின் முன் மாலை 6 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை உள்ளூர் வெளியூர் காரர்கள் டோக்கன் வாங்கி காத்திருக்கவும்ன்னும் கேள்விப்பட்டேன்.இவர் இரவில் தான் பெரும்பாலும் குறி சொல்வாராம். அதுவும் வெள்ளி இரவு, புதன் இரவுன்னு கணக்கு உண்டாம் (ஏ.ஆர்.ரஹ்மான்னு நினைப்பு இரவுலதான் குறி சொல்வாராம்) அந்த பெண்ணின் பெயர் மந்திர அம்மான்னு சொன்னங்க (இத சேவைன்னு நினைத்து செய்ராங்களோ என்னவோ).
ரொம்ப நாளைக்கு முன்னே நான் கேள்விப்பட்டது. ஒரு நாள் (அவுலியாவின் ஆவி மந்திர அம்மா) பச்சதலப்பா கட்டுன ஒரு ஆளை கணவுல பாத்தாங்களாம் அந்த ஆளுக்கு 400வயசு அதாவது ஒரு குறிப்பிட்ட வீட்டை பத்தி சொல்லி அந்த வீட்ல யாரோ செய்வினை செஞ்சிருக்காங்க அத எடுக்கனும் அப்படி எடுக்கலன்னா அந்த வீட்ல எட்டு நாள்ல ஒருதர் மொவுதா போயிடுவாங்களாம் எனவே என்னை அங்கே கூட்டிகிட்டுப்போங்கன்னு சொல்ல அந்த பெண்ணோட கணவன் (அப்படிண்டு ஒரு கையாள்) மறுபேச்சு பேசாம உடனே ஆட்டோவில மந்திர அம்மாளை அழைத்துகொண்டு அந்த வீட்டுக்கு போனார்.
அந்த வீட்டு வாசப்படிய அடஞ்சதும்..
"யாரு வீட்ல நான் மந்திர அம்மா வந்திருக்கேன் உங்க வீட்ல கிணறுக்குப் பக்கத்தில யாரோ செய்வினை செஞ்சி பொதச்சிருக்காங்க அப்படி அந்த செய்வினைய எடுக்கலான்னா, எட்டு நாள்ல உங்க வீட்ல யாராவது மவுத்தாயிடுவாங்க" என்று சொல்ல..
அந்த வீட்டு அம்மாவுக்கு கையும் ஓடல காலும் ஓடல. "என்னம்மா சொல்றே, உனக்கு யாரு சொன்னா என் பிள்ளை வந்தா சத்தம் போடுவான் இதல்லாம் அவனுக்குப்பிடிக்காது".
"ஏன் ராத்தா பயப்படுறியோ, எஜமான் தான் கணவுல வந்து சொன்னங்க உங்க வீட்ல செய்வினை செஞ்சிருக்குன்னு அதனாலதான் நான் ஓடிவந்தேன்."
"சரிவுல என்னவோ சொல்றே, புள்ள வந்தான்னா சத்தம் போடுவான் உடனே ஆகவேண்டியதை பாரு".
"சரி ராத்தா எலுமிச்சம் பழம் இருந்தா குடுங்க கொஞ்சம் உப்பும், டீஸ்பூனும் குடுங்க, (சர்பத் போடவானு சகோ.ஷஹுல் கேட்பது விளங்குகிறது) ராத்தா மம்முட்டி கொடுங்க, இந்தாங்க மசமசன்னு நிக்காம மம்முட்டி வாங்கிட்டு வாங்க நான் சொல்ற இடத்துல பள்ளம் வெட்டனும்".
மம்முட்டியும் வந்தது. மந்திர அம்மா தன் காலால் கோடு போட்டபடி ஒரு இடத்துக்கு வந்து, "ஏங்க இந்த இடத்தில் பள்ளம் தோண்டுங்க..."
"சரிவுல.."
"ஊட்டு காரவோல வர சொல்லுங்க அப்பவாச்சும் நாம சொன்னது சரியான்னு தெரியட்டும்"
மந்திர அம்மாவின் மாப்புள முதன் முறையா குரல் குடுத்தார்.
"அதெல்லா வேனா தம்பி நாம்ம புள்ளையல்வோ நாம நம்பவில்லைண்ட... யார நம்புறது" (காரணம் அதுவல்ல செய்வினை தாவிடும்னு பயம்... அபூஇப்றாகிம் கேட்பார் ..கிரவுன் நீளம் தாண்டுதலா?அகலம் தாண்டுதலா?)
செயல் வீரர் (காமராசர்) மந்திர அம்மாவின் கணவர் தோண்ட ஆரம்பிச்சார் ஒரு அடி தோண்டியிருப்பார் வெள்ள துணி சுத்தி ஏதோ தெரிந்தது.... உடனே மந்திர அம்மா "எஜமானே உங்க வார்த்தைய உண்மையாக்கி ராத்தாவூட்ட காப்பத்திடியல (நகூதுபில்லாஹ்) உங்களுக்கு நாகூருக்கு வந்து என்ன(எண்னெய்) விளக்கு ஏத்துரேன். ராத்தா இப்ப பாத்தியலா எந்த கெட்டு போவாரோ உங்க ஊட்ல எலவு விழனும்னு செய்வினை செஞ்சிருக்காங்க, யாரு செய்த புண்ணியமோ நல்லது நடந்துச்சு..."
"ஆமா மந்திர அம்மா, நீயும் திடுதிப்புன்னு வந்து சொன்னதும் எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல கொஞ்சம் நீயும் உன் மாப்புளையும் தேத்தனி குடியேன்."
"வேண்டா ராத்தா வூட்டுக்குப்போகனும் வெளியூர் காரவொ ரெண்டு பேருக்கு யாரொ மருந்து உட்டுருக்காகலாம் அதப்போய் எடுக்கனும்.."
"நல்ல இருபவுல மந்திர அம்மா, இங்க வா(ரூமிற்கு"
கூட்டிபோய் கையில ஏதோ தினிக்கிறாங்க... வந்த காரியம் நல்ல படியா முடிந்த சந்தோசம் மந்திரம்ம முகத்துல...
"ராத்தா கொஞ்சம் ஆட்டோவுக்கு போன் போட்டு சொல்ல முடியுமா?"
அந்த வீட்டுகாரம்மா போன் போட போறாங்க செயல் வீரர் மந்திரம்மாவைப் பார்த்து புன்சிரிப்பு சிரிக்கிறார்.
(அங்கு எப்படி அந்த செய்வினை வந்தது யோசிச்சி வைங்க அடுத்த பதிவில் சந்திக்கலாம் சந்திக்கலாம்)
இது நடந்து பல வருடங்கள் இருக்கலாம், ஆனால் பல மேடைகள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தும் இன்னும் வியாபார நோக்கில் தகடு, தாயத்து, செய்வினை, மந்திரம், குறி சொல்றது போன்றவைகள் நம் மக்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை. இவைகளை நம் மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்லி, மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் அறிந்தும் அறியாத நம் மக்களை நேர்வழி படுத்த நம்மால் முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் அனைவரும் முயற்சி செய்யலாமே. அல்லாஹ் போதுமானவன்.
(அங்கு எப்படி அந்த செய்வினை வந்தது யோசிச்சி வைங்க அடுத்த பதிவில் சந்திக்கலாம் சந்திக்கலாம்)
இன்ஷாஅல்லாஹ் தொடரும்...
-- CROWN
<-- மூடப்பழக்கம் மண்மூடிப்போகட்டும் 1
அன்பானவர்களே,
மேலே பதியப்பட்ட ஆக்கத்தில் சில பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூட நம்பிக்கைகளை அறவே அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கதில் எழுதப்பட்ட இந்த ஆக்கத்தில் செல்லப்பட்ட நபர்கள், அவர்கள் செய்துவரும் மந்திர தொழிலை இன்னும் செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி இன்னும் அவர்கள் அத்தொழிலை செய்து வந்தால் அவர்கள் நேர் வழி பெறவும், மந்திர தந்திரங்களுக்கு அடிமையாகி மூட நம்பிக்கையில் இன்னும் மூழ்கி இருக்கும் நம் மக்களும் நேர் வழி பெற நம்மை எல்லாம் படைத்த அல்லாஹ்விடம் இத்தருணத்தில் நாம் அனைவரும் து ஆ செய்வோமாக.
--- அதிரைநிருபர் குழு