Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி: ALUMNI YEARLY MEETING 7

அதிரைநிருபர் | August 06, 2010 | , , ,

திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி, முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின் வ‌ருடாந்திர ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி                                         ஒவ்வொரு ஆண்டும் ஆக‌ஸ்ட் மாதம் 15-ம் தேதி க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெறுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

2010-11 ஆம் க‌ல்வி ஆண்டிற்கான க‌ல்லூரியின் அறுப‌தாம் ஆண்டு விழா - "வைர‌ விழா" வாக‌ கொண்டாட‌ப்ப‌ட உள்ளது. இதையொட்டி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 26. 01. 2011-ல் ந‌ட‌த்த‌ப்ப‌டும் என‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முனைவ‌ர் ஷேக் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் தெரிவித்துள்ளார்.

நடக்கவுள்ள வைர விழாவில் 1951-ம் ஆண்டு முத‌ல் ப‌யின்ற‌ முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் கலந்து கொண்டு விழாவினை சிற‌ப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், வெளிநாடுக‌ளில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் இந்த நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொள்ளும்படி கல்லூரி நிர்வாகம் அன்போடு அழைப்பதோடு- இதன் பொருட்டு, ‌ த‌ங்க‌ள‌து விடுமுறையினையும் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

விழா மற்றும் வ‌ருடாந்திர‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி குறித்த தகவல்கள் அறிய கீழ் கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சலும் அனுப்பலாம்.

ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி
7 ரேஸ் கோர்ஸ் சாலை
காஜா ந‌க‌ர்
திருச்சி 620 020

மின்ன‌ஞ்ச‌ல் : princi@jmc.edu
இணைய‌த்த‌ள‌ம் : http://www.jmc.edu/


7 Responses So Far:

அதிரைநிருபர் said...

இந்த செய்தி பதியப்பட்டதின் நோக்கம், ஜமால் முகம்மது கல்லுரியின் வளர்ச்சிக்கு அக்கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள் கூட்டமைப்பின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமாக இருந்து வருகிறது என்பதை நம்மூர் மக்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் மீண்டும் ஞாபகப்படுத்துவதற்காகவும் நம்மூர் கல்வி நிறுவனங்களும் இது போல் பழைய மாணவர்கள் கூட்டமைப்பை சிறப்பாக அமைத்து செயல்பட வைக்க வேண்டும் என்பதற்காகவும்தான்.

கல்லூரி முதல்வர் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் தங்களின் வருட விடுமுறையை இதற்காக அமைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதிலிருந்து தெரிகிறது ஜமால் முகம்மது கல்லூரி தங்களின் கல்லூரி கல்வி வளர்ச்சியில் எவ்வளவு அக்கற்றையாக உள்ளார்கள் என்று.

கல்விப் பணியில் 60 ஆண்டுகள் கடக்க இருக்கும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரிக்கு நம்முடைய வாழ்த்துக்களும் துஆக்களும்.

சில நாட்களுக்கு முன்பு நம் அதிரை நிருபரில் பழைய மாணவர்கள் கூட்டமைப்பின் அவசியம் பற்றி ஒரு கட்டுரை வெளியானது அனைவருக்கு நினைவுப்படுத்தவிரும்புகிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜமால் முஹம்மத் கல்லூரியில் படித்த எனது நண்பர்கள் மூன்று பேர் ஒவ்வொரு முறையும் விடுமுறை அல்லது எமர்ஜென்ஸி லீவிலாவது சென்று கலந்து கொள்கிறார்கள்.

Ashraf said...

ஜமால் முஹம்மது கல்லுரி செய்தீகள் அதீரை JMC மானவர்கலுக்கு பயனுல்லதாக இருக்கும்.

அஷ்ரப்

Unknown said...

வருமானத்தையே குறிக்கோலாகக் கொண்டு இயங்கும் கல்லூரிகளுக்கு, ALUMNIக்கெல்லாம் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்ய விருப்பமிருக்காது தம்பீ!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//வருமானத்தையே குறிக்கோலாகக் கொண்டு இயங்கும் கல்லூரிகளுக்கு, ALUMNIக்கெல்லாம் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்ய விருப்பமிருக்காது தம்பீ!//

உண்மை தான். இந்த போக்கை நம்முர் பள்ளி கல்லூரிகள் மற்றவேண்டும். ஒரு காலத்தில் சமூக நோக்கத்தில் கல்விக்காக சேவை செய்த பெரியவர்கள் என்று இல்லையே... அதற்காக இப்போது கல்வி சேவை செய்பவர்கள் அனைவரும் சரியல்ல என்று அர்த்தமில்லை.

Azeez said...

ஓவ்வொரு ரமலானிலும் ஒரு தேதியில் ஜமால் முஹம்மது கல்லூரியின் பழைய மாணவர் கூட்டமைப்பு இப்தார் நிஹழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது , அதில் கலந்து கொள்ளும் பழைய மாணவர்கள் தங்களால் இயன்ற அளவு நிதிஉதவிகளை செய்கிறார்கள். இதற்காக கல்லூரியின் சில பொறுப்புதாரிகள் தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக அழைக்கபடுகிரர்கள் எனபது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம் ஆகும்

Azeez said...

இப்தார் நிகச்சியில் சேகரிக்கப்படும் நிதியானது ஏழை மாணவர்களின் படிப்பு வளர்ச்சி நிதியாக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பழைய மாணவர்களும் ஓவ்வொரு மாணவரின் படிப்புககாக ஒரு வருட படிப்பு செலவுகளுக்கோ ஆறு மாத படிப்பு செலவுகளுக்கோ தங்களால் இயன்ற அளவு பொறுப்பேற்று கொள்கிறார்கள். மாஷா அல்லாஹ் எவ்வளவு பயனுள்ள நிகழ்ச்சி இது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.