Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

40000 அடிகள் வாங்கிய அதிரைநிருபர்‏ 23

அதிரைநிருபர் | October 18, 2010 |


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அன்பிற்கினிய அதிரைநிருபர் வாசக நேசங்களே !

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியாலும் உங்கள் யாவரின் ஆரோக்கியமான ஆதரவோடும், தாங்கள் அனைவரது ஒத்துழைப்பு, அளப்பறிய பங்களிப்புடன் ஆலோசனைகளினாலும் நம் அதிரைநிருபர் வலைப்பூக்களின் தோட்டத்திலேயே மேலோங்கி மனம் வீசுவதற்கும் நம் அதிரைச் சமூக மக்களின் இதயத்தில் தடம் பதித்ததோடு மட்டுமல்லாது வயது பேதமில்லாமல் இருபாலரையும் வசீகரித்தும் வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் (அல்ஹம்துலில்லாஹ் !).

"மின் வலைப் பூக்களால் நறுமனம் தெளித்து நம் அதிரை மக்களிடம் ஒற்றுமை எனும் கயிற்றை கொடுத்து வெற்றி மாலையாக்க ஏன் நம்மால் முடியாதா?" என்ற கேள்வியுடன், பிரச்சினைகளுக்கு சுழிபோடாத, நற்செய்திகளை மட்டும் நம் மக்களிடம் பகிர்ந்துக் கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட நம் அதிரைநிருபர். நேற்றோடு அதிரைநிருபர் 40,000 செல்ல அடிகளுக்கு மேல் வாங்கி இன்று அதிரை மக்கள் பெரும்பாலோரின் இதயம் தொட்ட இனிய வலைப்பூவாய் இடம் பிடித்துள்ளதை எண்ணிப்பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ் !.

நம் அதிரைநிருபர் சர்ச்சைக்குள் வந்திடும் பாகுபாடு பதிவுகளை எந்தச் சூழலிலும் பதிவுக்குள் நுழைக்காது, அப்படி பதியும் தகவல்கள் சர்ச்சையானது அல்லது பிளவுக்கு வழிபோடுவதாக உணரப்பட்டாலோ அல்லது அன்பிற்கினிய வாசகர்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் எவ்வித பாராபட்சமில்லாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உங்கள் அனைவருக்கும் தெளிவு படுத்திக் கொள்கிறோம். அதிரைநிருபருக்குரிய தனிப்பட்ட மின் அஞ்சல் முகவ்ரில் adirainirubar@gmail.com நேசம் தேடும் வாசக சொந்தங்கள் அனைவரும் தொடர்பு கொள்ளலாம்.

அன்றும் இன்றும் என்றும் அதிரை நிருபரின் நினைவூட்டல் : அதிரைநிருபர் வலைப்பூ நம் அதிரைச் சார்பு வலைப்பூக்கள் எதனோடும் போட்டி போடுவதற்கல்ல அதற்கான அவசியமும் இல்லை. அதிரை நிருபர் குழுவின் மற்றொரு சாயலே சாட்சி சொல்லும் அதிரை சார்பு பெரும்பாலான வலைப்பூக்களை சங்கமிக்க வைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய அதிரைமணம்.

இன்ஷா அல்லாஹ், இனிவரும் நாட்களில் நல்ல பல்சுவைத் தகவல்கள் வெளிவர இருக்கிறது. ஹஜ்ஜுடைய மாதம் நெருங்கி வருகிறது வழக்கம் போல் தன் எழுத்துக்களால் நம் அனைவரையும் நல்ல சிந்தனையின் பக்கம் திரும்ப செய்யும் நம் சகோதரர்களின் நல்ல கட்டுரைகள் வெளிவரும் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.

ஊரிலும், வெளிநாடுகளிலும், குடும்பங்களையும், நண்பர்களையும் விட்டு விலகி திரவியம் தேடும் நம் அனைத்து அதிரை சகோதர, சகோதரிகளுக்கு நல்ல பயனுள்ள தகவல் பறிமாற்றம் செய்து ஒற்றுமையுடனும் நிறைவான மன அமைதி மேம்பட அதிரைநிருபர் வலைப்பூ முயற்சி செய்யும், இன்ஷா அல்லாஹ்.

சகோதரர் ஷரபுதீன் நூஹூ அவர்களின் ஆர்வமூட்டலால் கல்வி விழிப்புணர்வு, வழிகாட்டல் முகாம் நடத்துவது சம்பந்தமாக நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பரிமாற்றம் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. நம் சகோதரர்களிடமிருந்து நல்ல ஆக்கபூர்வமான வரவேற்பும் ஆதரவும் பெருகியது. சகோதரர் ஷர்புதீன் அவர்களின் ஆர்வம், ஊக்கம், முயற்சி இவைகளால் இன்று கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் இந்த வருடம் அரையாண்டு தேர்வு விடுமுறையில் நம் அதிரையில் நடந்தேற முயற்சிகளின் துவக்கம் ஆரம்பமாகிவிட்டது என்ற செய்தியை இங்கு உங்கள் அனைவரிடம் அதிரைநிருபர் மற்றும் அதன் பின்னாலிருக்கும் அன்புச் சகோதரர்கள் சார்பில் அறியத் தருவதில் பெருமையடைகிறது. இது தொடர்பாக விரிவான செய்தி வெகு விரைவில் வெளியிடப்படும்.

"அந்தப் பக்கம் / இந்தப் பக்கம் என்றில்லாமல் நம் அதிரையின் ஒற்றுமையை மட்டுமே முன்னிருத்தி செயல்பட வேண்டும்" என்ற நம் அதிரைநிருபர் நேசமிகு சகோதரர்களின் ஆதங்கம் விரைவில் அந்த ஏக்கமும் பூர்த்தி செய்யப்படும் என்பதை மீண்டும் பதிவு செய்கிறோம். நட்பு வட்டாரத்தின் உதவியுடன் அனைத்து முஹல்லக்களையும் உள்ளடக்கும் வகையில் விரைவில் அதிரைச் செய்தி ஊடகம் வெளிவர இருக்கிறது என்பதையும் இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிரைநிருபர் வலைப்பூ மற்ற பிற வலைப்பூக்களைப் போலல்லாமல், அமைதியின் ஆளுமை, அழகின் அசத்தல், அற்புதம் இவற்றினை உள்ளடக்கிய சாதாரண மின்வலைப்பூவே. இருப்பினும் ஒற்றுமைக்கு முன்மாதிரியாக இருப்பதில் முதன்மையாக இருக்கவே அதிரைநிருபர் என்றுமே வாதிடும், போராடும், ஒன்றினைக்கும், இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் வலைப்பூவுக்கு பங்களிப்பும், ஆதரவும், ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கிவரும் நம் அனைத்து அதிரை அன்பு சகோதரர்களுக்கும், மற்ற ஊர் சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல ஈமானையும் தந்தருவானாக - பிரார்த்திக்கிறோம் !

-- அதிரைநிருபர் குழு

23 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்....
இந்த அடியோ குட்டி பாய்ந்ததல்ல சுட்டி(கள்)பாய்ந்த அடி.
நான் நீளத்தில் சொன்னேன் நீண்டுவிட்ட வாசகர் உள்ளம்.
நீங்கள் சொல்வது தட்டச்சு தட்டலில்,தேடலில்,பாய்ந்து மேய்ந்து,படித்து,பிரித்து ஆய்தலின்.
இது வாசகருக்கு ஒரு படியாகவும்,படிக்க ஒரு நூலகமாகவும்.
சாதிக்க துடிப்பவருக்கு வடிகாலாகவும்,சாதித்தவர்களுக்கு அனுபவ பகிர்வு தளமாகவும் ,நலமாகவும் உள்ளன வாழ்த்துக்கள் பல...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//அதிரைநிருபர் வலைப்பூ நம் அதிரைச் சார்பு வலைப்பூக்கள் எதனோடும் போட்டி போடுவதற்கல்ல அதற்கான அவசியமும் இல்லை.// இது 100சதம் உண்மை என்பதை அதிரைபோஸ்ட் சார்பாக உணர்கிறேன்.

மென்மேலும் அதிரைநிருபர் வளரவேண்டும். 'கிரிட்டிஸைஸ்' ஆட்களுக்கும்(*****) அதிரைநிருபர் ஆப்பு வைத்துவிட்டதாமே?

நீங்க யாரையும் நினைக்க வேண்டாம்; மொட்டை பின்னூட்டகாரர்களைத்தான் சொல்கிறேன்!

அதிரை போஸ்ட்ல 'சேட்டர் பாக்ஸ் போடுங்க,அதிக‌ ஹிட்ஸ் கிடைக்கும்' என்று ஒருவர் மெயில் போட்டார்.'ஹிட்ஸ்காக அவங்கவேனுன்னா போடுவாங்க நாங்கபோடமாட்டோம்டு' பதில் அனுப்பிட்டேன்.
யாருங்க அவங்க...? எத்தனை பெரிய மனிதர்கள் அழைத்து ஆலோசினை சொன்னாலும் (அவதூறுபரப்ப) சேட்டர் பாக்ஸ் வேனும்டு நிக்கிறவங்கள சொன்னேன்.'விரை'வா புரிஞ்சிக்கனும்.

நல்ல நிர்வாக தலைமையின்கீழ் அமைதியின் ஆளுமையாய் அதிரை செய்திகளை ஆட்சி செய்யும் அதிரைநிருபர் மேலும் மேலும் வளர் நாமும் துஆச் செய்வோமாக; அல்லாஹ் உயர்த்திக்காட்டுவான்.

sabeer.abushahruk said...

எத்தனை அடிகள்
அத்தனையும் படிகள்

பின்னூட்டங்களில் தெரிந்தன
உங்கள்
முன்னேற்றத்தின் சுவடுகள்

தொடர்ந்து செல்லுங்கள்
இளைப்பார நேர்ந்தால்
காத்திருக்கின்றன
ஆயிரம் மடிகள்

அதிரைநிருபர் said...

//நல்ல நிர்வாக தலைமையின் கீழ் அமைதியின் ஆளுமையாய் அதிரை செய்திகளை ஆட்சி செய்யும் அதிரைநிருபர் மேலும் மேலும் வளர் நாமும் துஆச் செய்வோமாக; அல்லாஹ் உயர்த்திக்காட்டுவான்.//

அதிரை நிருபர் யாருடன் போட்டியில்லை என்று அதிரைபோஸ்டின் பின்னூட்டம் ஒரு சாட்சி. பாராட்டுக்கும், துஆவுக்கும் மிக்க நன்றி அதிரை போஸ்ட் சகோதரரே.

அமைதியின் ஆளுமையில் அதிரைநிருபர் அதிக கவணம் தொடர்ந்து செலுத்தும் என்பது நம்முடைய நம்பிக்கை.

வாழ்த்திய சகோதரர் தஸ்தகிர், சகோதரர் சபீர், மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

அதிரைநிருபர் said...

google, msn, yahoo மற்றும் பல search engine தளங்களில் தமிழில் "அதிரை செய்தி", "அதிரை செய்திகள்" "அதிரை அழகு" "அதிரை கல்வி" என்று அதிரையுடன் சேர்த்து பல சொற்கள் தேடினால் நம் அதிரைநிருபர் வலைப்பூ தான் முதல் இடத்தில் வருகிறது என்ற நல்ல செய்தியை இங்கு அனைவருக்கும் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

அதிரைநிருபர் said...

அதிரை கவி சபீர், அதிரை நெய்னா முகம்மது, அதிரை சின்னகாக்கா, சாஹுல் காக்கா, அதிரை harmys, அதிரை இர்ஷாத், அதிரை காக்கா, அதிரை அபுஇபுறாஹிம், அதிரை ஹாலித், அதிரை மாலிக் போன்ற பெயர்கள் தேடல்களில் நம் அதிரைநிருபர் முன்னனியில் வருகிறது.

"அதிரை கவி" என்று தேடினால், அன்பு சகோதரர் சபீர் அவர்களுக்கு கவி பட்டமும், வாழ்த்து செய்திகளும் முதலில் வருகிறது.

"சாஹுல் காக்கா" என்று தேடினால், அன்பு சகோதரர் சாஹுல் ஹமீது அவர்கள் நம் அதிரைநிருபரில் அடித்த 14000 அடி முதலில் வருகிறது.

நீங்களும் தேடிப்பாருங்கள்.

அதிரைநிருபர் said...

சிறு பொறி "அன்பு அழகு அற்புதம்" தட்டிக் கொடுத்த எங்கள் நேசம் (அதிரை)ஷாஃபி(யின்) அற்புதமான யோசனையின் பிரதிபலனை எல்லாம் வல்ல அல்லாஹ் இங்கே வெளிச்சமிட்டு காட்டிக் கொண்டிருக்கிறான், அதிரைநிருபர் வாசக நேசங்களின் பேராதவுடன் நன்மையை நாடியே அதிரை நலனை முன்னிருத்தி ஒற்றுமை எனும் கயிற்றை ஊரெங்கும் எடுத்துச் செல்லும் பனியை தொடருவோம் இன்ஷா அல்லாஹ்..

அலாவுதீன்.S. said...

அதிரை நிருபர் குழு சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்); ///அதிரைநிருபர் 40,000 செல்ல அடிகளுக்கு மேல் வாங்கி இன்று அதிரை மக்கள் பெரும்பாலோரின் இதயம் தொட்ட இனிய வலைப்பூவாய் இடம் பிடித்துள்ளது///

இடம் பிடிப்பதற்கு இதுநாள் வரை தாங்கள் மேற்கொண்ட சிரமங்களுக்கு கிடைத்த பலன். வாழ்த்துக்கள்! தங்களுக்கு வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை வழங்கட்டும்.

///"மின் வலைப் பூக்களால் நறுமனம் தெளித்து நம் அதிரை மக்களிடம் ஒற்றுமை எனும் கயிற்றை கொடுத்து வெற்றி மாலையாக்க ஏன் நம்மால் முடியாதா?"///

வெற்றி மாலையாக்க முடியும் எப்பொழுது நாமும் நம் சகோதரர்களும் நபிவழியையும், குர்ஆனையும் பற்றிபடித்து உறுதியான ஈமானோடு இருக்கும்பொழுதும். நாம் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் மறுமையில் நிச்சயம் கூலி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையும் இருந்தால்.

///இன்று அதிரை மக்கள் பெரும்பாலோரின் இதயம் தொட்ட இனிய வலைப்பூவாய் இடம் பிடித்துள்ளதை எண்ணிப்பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!. ///

***** மாஷாஅல்லாஹ்! *****

///நம் அதிரைநிருபர் சர்ச்சைக்குள் வந்திடும் பாகுபாடு பதிவுகளை எந்தச் சூழலிலும் பதிவுக்குள் நுழைக்காது.///

இம்மைக்கும் மறுமைக்கும் பலனளிக்கும் நல்ல ஆக்கங்களை மட்டுமே கவனத்தில் எடுத்து செயல்படுத்தினால் இதன் பலனுக்கான கூலியை மறுமையில் பெற்றுக்கொள்ளலாம்.

///இன்ஷா அல்லாஹ், இனிவரும் நாட்களில் நல்ல பல்சுவைத் தகவல்கள் வெளிவர இருக்கிறது.///

ஒரு ஆக்கம் வெளியிட்டு சிறிய இடைவெளிவிட்டு இதற்கு கருத்துக்கள் வந்து சேர்வதற்குள் வேறு ஆக்கத்தை வெளியிடும்பொழுது இரண்டுக்கும் கருத்துக்கள் வந்து சேர்வதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு ஆக்கங்களை வெளியிடுவதும் கவனச்சிதறல் ஏற்படுகிறது என்று உணர்கிறேன். கருத்துக்களும் குறைவாகவே வருவதாக உணர்கிறேன்.

///நம் அனைத்து அதிரை சகோதர, சகோதரிகளுக்கு நல்ல பயனுள்ள தகவல் பறிமாற்றம் செய்து ஒற்றுமையுடனும் நிறைவான மன அமைதி மேம்பட அதிரைநிருபர் வலைப்பூ முயற்சி செய்யும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் நல்ல எண்ணத்திற்கு வல்ல அல்லாஹ் உதவி புரியட்டும்.

///சகோதரர் ஷரபுதீன் நூஹூ அவர்களின் ஆர்வமூட்டலால் இன்று கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் இந்த வருடம் அரையாண்டு தேர்வு விடுமுறையில் நம் அதிரையில் நடந்தேற முயற்சிகளின் துவக்கம் ஆரம்பமாகிவிட்டது///

எல்லா சேவைகளை விட கல்விச் சேவைதான் சிறந்த சேவை. இந்த சேவைக்கு ஸதக்கத்துல் ஜாரியா நன்மை கிடைக்கும். தங்களின் முயற்சிக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

///"அந்தப் பக்கம் / இந்தப் பக்கம் என்றில்லாமல் நம் அதிரையின் ஒற்றுமையை மட்டுமே முன்னிருத்தி செயல்பட வேண்டும்"///

ஷைத்தான் ரத்தநாளங்களில் ஓடிக்கொண்டு இருக்கிறான். இவ்விஷயத்தில் ஷைத்தானின் சூழ்ச்சியை முறியடித்து அல்லாஹ்வின் உதவியுடன் வெற்றி அடைய வேண்டும்.

அலாவுதீன்.S. said...

///நட்பு வட்டாரத்தின் உதவியுடன் அனைத்து முஹல்லக்களையும் உள்ளடக்கும் வகையில் விரைவில் அதிரைச் செய்தி ஊடகம் வெளிவர இருக்கிறது.///

ஊடகம் வருவது மகிழ்ச்சியான செய்தியே. ஆனால் என் கருத்து இந்த காரியம் மிக மிக நிதானமாக நன்கு திட்டமிட்டு நல்லமுறையில் ஆரம்பித்து மிக நேர்த்தியாக மிக மிக கவனமாக செய்ய வேண்டிய காரியம். வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

///அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல ஈமானையும் தந்தருவானாக - பிரார்த்திக்கிறோம் !///
வல்ல அல்லாஹ் தங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தந்து தங்களின் அனைத்துக்காரியங்களுக்கும் உதவி புரிந்து. மேலும் தங்களுக்கு மார்க்கத்திலும்,குடும்பத்திலும், நேரத்திலும் பரக்கத் செய்து அருள் புரியட்டும் - நாங்களும் துஆச்;செய்கிறோம். எங்களுக்காக தாங்களும் துஆச் செய்யுங்கள்.

மேலும் சில குர்ஆன் வசனங்களை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்வது நன்மை பயக்கும்:

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
எவ்வித சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும் போது எவ்வாறு இருக்கும்? ஓவ்வொருவருக்கும் அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.( அல்குர்ஆன்:3:25)

வானங்களிலும், பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அல்குர்ஆன் :45:37)

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும். (அல்குர்ஆன்:17:19)

நம்பிக்கை கொண்டு நல்லறங்களைச் செய்வோரின் உழைப்புக்கு எந்த மறுப்பும் இல்லை. அதை நாம் பதிவு செய்கிறோம்.(அல்குர்ஆன்: 21:94)

அவனது உழைப்பு (மறுமையில்) காட்டப்படும். (அல்குர்ஆன்: 53:40)

அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும். தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும். (அல்குர்ஆன்: 88:8,9)

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக!; அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன்:அந்நஸ்ர்-110:1,2,3)

crown said...

ஒரு ஆக்கம் வெளியிட்டு சிறிய இடைவெளிவிட்டு இதற்கு கருத்துக்கள் வந்து சேர்வதற்குள் வேறு ஆக்கத்தை வெளியிடும்பொழுது இரண்டுக்கும் கருத்துக்கள் வந்து சேர்வதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு ஆக்கங்களை வெளியிடுவதும் கவனச்சிதறல் ஏற்படுகிறது என்று உணர்கிறேன். கருத்துக்களும் குறைவாகவே வருவதாக உணர்கிறேன்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் இதை ஆமோதிக்கிறேன் .ஒரு கருத்து ஊன்றி சில நாள்கள் பரவலாக கவனிக்கப்பட்டபின் மறு ஆக்கம் வெளியிடவும் அதுவே அந்த ஆக்கத்தின் தாக்கம் படிப்பவர்களுக்கு போய்ச் சேரும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் சகோதரர் அலாவுதீன் மற்றும் (தம்பி)கிரவ்ன்: தாங்களிருவரின் ஆலோசனைகளை நிச்சயம் அதிரைநிருபர் கவனத்தில் வைத்துக் கொள்ளும் என்ற்ம் நம்புவோம் இன்ஷா அல்லாஹ் !

சகோதர் அலாவுதீன் அவர்களுக்கு, அதிரை நிருபரின் வாசகர் வட்டம் அல்லாஹ்வின் உதவியால் பரந்து விரிந்து நேசம் பராட்டுகிறது என்பதை என்னால் தனிப்பட்ட முறையில் உணரமுடிகிறது ஏனென்றால் வலைக்குள் வரும் நேசங்களின் தடம் மற்றும் தளம் வரை அல்லாஹ் அறியத் தந்திருக்கிறான்.

பெரும்பாலான வாசக நேசங்கள் தங்களின் வேலைப் பளு மற்றும் கனினி அமைவதின் சூழல் இவைகளால் கருத்துக்களை அவர்களால் உடனடியாக பதிய முடிவதில்லை இதனை தனி மின் அஞ்சல் மூலமாகவும் தனிப்பட்ட தகவல் தொடர்பு மூலமாகவும் தெரியப் படுத்திக் கொண்டும் தங்களின் கருத்துக்களை சொல்லியும் வருகிறார்கள் அதன் பிரைதிபலிப்புதான் மேலே பதியப்பட்ட 40000 அடிக்குமேல் பதிவும், தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் அரவனைப்பை என்றும் நிலையாக்கி ஒற்றுமையே ஒரே தீர்வு என்று எம்மக்களும் உணர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

sabeer.abushahruk said...

அலாவுதீன் சொன்னதிலும் தம்பி க்ரவுன் ஆமோதித்ததிலும் அர்த்தமுள்ளது. 

அதை அபு இபுறாஹீம் வழிமொழிந்ததும் ஆரோக்யமானதே. 

எனினும், நான் கவனித்த வகையில் எந்த ஒரு பதிவும் முன்பு 10 நாட்களும் தற்போது 6 நாட்களும் முகப்பிலேயே இருக்கின்றன. பதியப் பட்ட தேதியைக்கொண்டு 1வதாகவோ 6வதாகவோ இருக்கிறது. எனவே, ஒரு பதிவு 6 நாட்களுக்கு மேல் முகப்பில் இருக்க வேண்டுமெனில் ஒரு மாதத்த்ற்கு மொத்தமே சில பதிவுகள் மட்டுமே இடமுடியும். 

கூட்டிக் கழித்துப் பர்த்தால் கணக்குச் சரியாக இருப்பதாகவே எனக்குப் படுகிறது. பல நாட்கள் ஒரே பதிவை விட்டு வைத்தால் மந்தநிலை எற்பட வாய்ப்புன்டு

//மேலும் ஒரே நேரத்தில் இரண்டு ஆக்கங்களை வெளியிடுவதும் கவனச்சிதறல் ஏற்படுகிறது என்று உணர்கிறேன்//

பலதரப்பட்ட ரசனையுள்ளவர்களுக்கு கவன ஈர்ப்பாகவே எனக்குப் படுகிறது. அ.நி.தான் விடை காணனும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மேலும் ஒரே நேரத்தில் இரண்டு ஆக்கங்களை வெளியிடுவதும் கவனச்சிதறல் ஏற்படுகிறது என்று உணர்கிறேன்//

பலதரப்பட்ட ரசனையுள்ளவர்களுக்கு கவன ஈர்ப்பாகவே எனக்குப் படுகிறது. அ.நி.தான் விடை காணனும். ///

கவிக் காக்கா உங்களின் கருத்தில் நான் முழுவதுமாக உடண்படுகிறேன் இதனைச் சொல்ல தாங்கள் வருவீர்கள் என்றும் என் மனதில் பட்டது அதனயே இங்கே பிரதிபலித்தும் இருக்கிறீர்கள்.

அதிரைநிருபரின் எவ்வகையான செயலும் அதிரை நலன் கருதியே இருக்கும் என்றும் நாம் யாவரும் ந்ம்பிக்கை வைப்போமாக இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் said...

அதிரைநிருபரின் பதிவுகளின் கால அளவு தொடர்பாக கருத்திட்ட அன்பு சகோதரர்கள் அனைவரின் கருத்துக்கள் நிச்சயம் பரிசிலிக்கப்படும்.

நம் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் பொருத்தை நாடியே இருக்கும்.

இன்ஷா அல்லாஹ்.

Shameed said...

பல நாட்கள் ஒரே பதிவை விட்டு வைத்தால் மந்தநிலை எற்பட வாய்ப்புன்டு

//மேலும் ஒரே நேரத்தில் இரண்டு ஆக்கங்களை வெளியிடுவதும் கவனச்சிதறல் ஏற்படுகிறது என்று உணர்கிறேன்//

மிக சரியாக சொன்னீர்கள்

Shameed said...

அதிரை நிருபர் படிக்க ஆரம்பித்ததில் இருந்து என் இபாதத் கூடி உள்ளதை நான் உணர்கிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed சொன்னது…
அதிரை நிருபர் படிக்க ஆரம்பித்ததில் இருந்து என் இபாதத் கூடி உள்ளதை நான் உணர்கிறேன்
Wednesday, October 20, 2010 12:57:00 AM //

அல்ஹம்துலில்லாஹ் !

சாஹுல் காக்கா உங்களுக்கு வேலைப் பளுதான் முண்டாசு காட்டி விட்டிருக்கும் ஏன்னா உங்களிடமிருந்து வரும் மின்னல் வேகப் பின்னூட்டம் சுனங்கியதே அதனால்தான் இப்படி சொல்கிறேன்..

வழக்கமாக வாய்ய்க்கின்ற நேரத்தில் வாருங்கள் இன்ஷா அல்லாஹ்...

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் சகோ.தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// நானும் இதை ஆமோதிக்கிறேன் .ஒரு கருத்து ஊன்றி சில நாள்கள் பரவலாக கவனிக்கப்பட்டபின் மறு ஆக்கம் வெளியிடவும் அதுவே அந்த ஆக்கத்தின் தாக்கம் படிப்பவர்களுக்கு போய்ச் சேரும். ///
தங்களின் கருத்திற்கு நன்றி! அதிரை நிருபர் பரிசிலிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் அபுஇபுறாஹிம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///தாங்களிருவரின் ஆலோசனைகளை நிச்சயம் அதிரைநிருபர் கவனத்தில் வைத்துக் கொள்ளும்.///
*********************************************************************தங்களின் கருத்திற்கு நன்றி!
*********************************************************************

///சகோதர் அலாவுதீன் அவர்களுக்கு, அதிரை நிருபரின் வாசகர் வட்டம் அல்லாஹ்வின் உதவியால் பரந்து விரிந்து நேசம் பாராட்டுகிறது என்பதை என்னால் தனிப்பட்ட முறையில் உணரமுடிகிறது ஏனென்றால் வலைக்குள் வரும் நேசங்களின் தடம் மற்றும் தளம் வரை அல்லாஹ் அறியத் தந்திருக்கிறான்.///
*********************************************************************
‘’மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!’’ மேற்கண்ட தங்களின் அன்பான கருத்திற்கு நன்றி! வாசகர் வட்டம் பெருகி வரும் வேளையில் நான் மிக கவனமாக இருக்க (எழுத)வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ‘’ஜஸாக்கல்லாஹ் ஹைர்!’’.
*********************************************************************


///தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் அரவனைப்பை என்றும் நிலையாக்கி ஒற்றுமையே ஒரே தீர்வு என்று எம்மக்களும் உணர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ! ///
*********************************************************************
வல்ல அல்லாஹ் நம் அனைவரின் நல்ல எண்ணங்களையும் ஒன்றாக்கி மார்க்க நலன், நம் நலன், நம் சமுதாய நலன், மறுமை நலன் இவைகளில் கவனத்துடன் செயல்பட்டு நமக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றாமல், இம்மை மறுமையில் வெற்றியடைய நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்.
*********************************************************************

அலாவுதீன்.S. said...

சகோ. சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// அலாவுதீன் சொன்னதிலும் தம்பி க்ரவுன் ஆமோதித்ததிலும் அர்த்தமுள்ளது. அதை அபு இபுறாஹீம் வழிமொழிந்ததும் ஆரோக்யமானதே. /// கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// அலாவுதீன் சொன்னதிலும் தம்பி க்ரவுன் ஆமோதித்ததிலும் அர்த்தமுள்ளது. அதை அபு இபுறாஹீம் வழிமொழிந்ததும் ஆரோக்யமானதே. /// கருத்திற்கு நன்றி!

அதிரைநிருபர் said...

/// Shahulhameed சொன்னது…
அதிரை நிருபர் படிக்க ஆரம்பித்ததில் இருந்து என் இபாதத் கூடி உள்ளதை நான் உணர்கிறேன்
Wednesday, October 20, 2010 12:57:00 AM///

அல்ஹம்துலில்லாஹ்.அல்ஹம்துலில்லாஹ்.அல்ஹம்துலில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும், அன்பு சகோதரர் சாஹுல் ஹமீது. உண்மையில் அதிரைநிருபர் சரியான பாதையில் தன் பயணத்தை தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது. இன்ஷாஅல்லாஹ் நம் அதிரைநிருபர் இன்னும் நல்லவைகளை நாடி செல்ல ஆர்வமூட்டும், இது தொடரும்.

தங்களின் மனம்திறந்த வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி.

நாம் நன்றி சொல்லக்கூடிய தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.