Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மன ஊனமில்லா மணமகன் தேவை 35

அதிரைநிருபர் | October 11, 2010 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’ (அல்குர்ஆன் : 4:4)


வல்ல அல்லாஹ் மணமகளுக்கு
மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல
நீ கொடுக்க வேண்டிய மஹரை
பெண்ணான என்னிடம் கேட்க
நீ கேட்ட மஹரை கொடுக்க
என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்
தன் அனைத்து சுகங்களையும் இழந்து!

என்னைப் பார்க்க வந்த
உன் தாயும், உன் சகோதரியும்
பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்
என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்
வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து
எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்
நீங்கள் தெளிவாக சொன்னால்தான்
அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

உன்தாயின் பட்டியல் தொடங்கியது
லட்சத்துடன் - பால்குடம், தயிர்குடம்
பிறை அனைத்தையும் கணக்கு எடுத்து
ஒரு வருட விதவிதமான சீர், நகை பின்
எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய
எத்தனை பேருக்கு பசியாற தருவிய!
(சாப்பாட்டையே பார்க்காத மாதிரி)

மனை உள்ளது வீட்டை
கட்டி கொடுத்து விடுங்கள்!
(தற்பொழுது குடிசைதான் வீடாம்)
என் குடும்ப சூழ்நிலையில்
இந்த சம்பந்தம் அமையுமா
மணமேடையில் அமருவோமா
என்று மனதுக்குள் அழ!

என் தந்தையோ நோயின்
வாசல்படியை தட்ட
நானோ வீட்டின் நிலைப்படியில்!
எத்தனையோ பேர் என்னை
பெண் பார்த்து சென்ற பிறகும்
இன்னும் முதிர் கன்னியாக
உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!
ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்!

பெண் பார்க்க
வந்தவர்களில் சிலர்
என் பையன் சிகப்பு பெண்தான்
பார்க்க சொல்கிறான்
பெண் கருப்புதான்
இருந்தாலும் நாங்கள் கேட்பதை
(வரதட்சனையை) தந்து விட்டால்
என் பையனை
சம்மதிக்க வைத்து விடுகிறோம்!
பணம் படைத்தவர்களின்
கருப்பு நிற பெண் கரையேறி விடும்!
பணம் இல்லா குடும்பத்து
கருப்பு நிற பெண்களை
கடலில் தள்ளி விடலாமா?

பெண்ணை பெற்றவன்
ஜமாத்தில் லட்டர் வாங்கி
ஊரில் பிச்சை எடுத்தால் கேவலம்
என்று முகம் தெரியா ஊரில்
பள்ளியில் தொழுகை முடிந்தவுடன்
பாவா குமராளி வந்திருக்கிறேன்
திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது
உதவி செய்யுங்கள் என்று
துண்டை ஏந்தி நிற்பதை
பார்த்திருக்கிறாயா? பார்த்தவுடன்
கோபம் வரவில்லையா?
என்ன செய்தாய் நீ?
என் தாய் தந்தை மனம்
கோணாமல் நடப்பேன் என்றாய்!

இளைஞனே திருமணம் முடிக்கும்
நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்
மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்
இதுநாள்வரை தாய், தந்தை
பேச்சைகேட்காத நீ கூட திருமண
பேச்சு வார்த்தையில் மட்டும்
என் தாய் தந்தையின் மனம்
நோக நடக்கமாட்டேன் என்கிறாய்!

இளைஞனே உன் தெருவில்
திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க
நீயோ பணம் படைத்த வீட்டில்
பெண்ணை தேட!
அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு
வேற வழி இல்லை என்று
பிறமத பையனோடு ஓட!
இப்பொழு வருகிறது உனக்கு கோபம்
என் தெரு பெண்எப்படி ஓடலாம்!
அவளை கண்டால் வெட்டுவேன் என்று!
அவள் ஓடியதற்கு நீயும்
உன்னை போன்றவர்களும்
காரணம் இல்லையா?

முகமூடி திருடன் இரவில் திருடுகிறான்
நீயோ முகமூடி இல்லாமல் குடும்பத்தோடு
பகல் நேரத்தில் பலரின் அங்கீகாரத்தோடு
கொள்ளை அடிக்கிறாய் வரதட்சனை
என்ற பெயரில் மணமகள் வீட்டில்
மனசாட்சியும் இல்லை!
மறுமை பயமும் இல்லை உனக்கு! 

மணமகனே நான்
உன்னிடம் கேட்கிறேன்
நீ என்ன மஹர் தருவாய்
எனக்கு - எதற்காக என்கிறாயா?
உன் வீட்டில் வந்து
ஆயுள் முழுவதும் உனக்கும்
உன் குடும்பத்திற்கும்
சேவை செய்வதற்கும்!
குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!
உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்
நானும் தகப்பன் என்று
பெருமிதம் அடைவதற்காக!
என் தாய் தந்தையை
என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை
நான் வாழ்ந்த இடத்தையே
விட்டு விட்டு நீ  காட்டில் இருந்தாலும்
வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?

இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!
உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்
விழித்தெழுங்கள்!
இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்
நாளை மஹ்ஷர் பெருவெளியில்
இறுதி தீர்ப்பின் நாளின்
அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்
என்ன பதில் சொல்வாய்
தாய் தந்தையை கை காட்டுவாயா?
முடியாது இளைஞர்களே!

நீங்கள் மட்டும்தான் உங்களின்
காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்
வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து
நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்
இந்த வரதட்சனை என்னும் கொடுமையை
அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு
மஹர் கொடுத்து மணமுடியுங்கள்!
இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.

35 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நிதர்சன உண்மை...

///இளைஞனே திருமணம் முடிக்கும்
நாள்வரை வீரபேச்சுக்கள் உன்னிடத்தில்
மணப்பெண் பார்க்க ஆரம்பித்தால்
இதுநாள்வரை தாய், தந்தை
பேச்சைகேட்காத நீ கூட திருமண
பேச்சு வார்த்தையில் மட்டும்
என் தாய் தந்தையின் மனம்
நோக நடக்கமாட்டேன் என்கிறாய் !///

சுல்லென்ற சாட்டை அடி ! உறைக்குமா ?

அப்துல்மாலிக் said...

நல்ல ஆக்கம் மட்டும் இதைவிட தெளிவா செ அடிச்சாமாதிரி சொல்ல முடியாது, இதை படித்து ஒருத்தராவது திருந்தினால் முழு வெற்றிதான் சகோதரரே

இந்த விசயத்தில் மட்டும் பெற்றோர் பின் ஒளீந்துக்கொள்கிறோம் எதையும் எதிர்கொள்ள திரானியற்று.....

இந்த கொடுமையிலேர்ந்து யாவரையும் விடுதலை செய்வானாகவும் ஆமீன்

sabeer.abushahruk said...

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், இதேப்போல் சொல்லச்சொல்ல மாறும் நம் சமூகம். தட்டி எழுப்புது நீ சொல்லி இருக்கும் விதம் அலாவுதீன். வாழ்த்துக்கள்

Yasir said...

வாவ்...இங்கே தெளிக்கப்பட்டு இருப்பது வார்த்தைகளா அல்லது எரிமலை குழம்புகளா...வார்த்தைகளில் லாவா பீறிட்டு வரும்போது இருக்கும் வேகம் ...கடைசி பாராக்கள் அந்த லாவாவின் அனலைவிட அதிகம்...திருந்துவார்களா மானம் கெட்ட மணமகன்கள் பெற்றோர்களே உறுதி ஏற்ப்போம்..வரதட்சணை வாங்க கொடுக்க மாட்டோம் என்று.....விழிப்புணர்வை இந்த அளவிற்க்கு யாரும் எற்படுத்த முடியாது..அருமை காக்கா...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்ஹம்துலில்லாஹ், அருமையான ஆக்கம். வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் அலாவுதீன்.

//எத்தனை பேருக்கு சாப்பாடு தருவிய
எத்தனை பேருக்கு பசியாற தருவிய!//

இந்த கேடுகெட்ட பழைய சம்பிரதாயம் ஒழிய வேண்டும். இது இன்னும் வரதட்சனை வாங்காமல் நடக்கும் சில திருமணங்களில் இன்னும் ஒட்டிக்கொண்டுதான் உள்ளது.

இன்று இளையோரிடம் உள்ள மனப்பக்குவம், பெரியவர்களிடம் இருப்பது சற்று குறைவு என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இருப்பினும் தாய் தந்தையர்கள் தவறு செய்யும் போது பிள்ளைகள் எதிர்த்து நின்று போராடி "RECORD BREAKING" மஹர்கள் கொடுத்து நடைப்பெறும் திருமணங்கள் நம்மூர்கள் இன்றைய காலத்தில் சில நேரங்களில் காண முடிகிறது என்பது ஆறுதலான செய்தி.

இன்ஷா அல்லாஹ் விரைவில் இனியும் நல்ல முன்னேற்றம் வரும் என்று நம்புவோமாக.


இன்றைய இளைய பெண் சமூகத்திடன் விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்தவேண்டும்.

அல்லாஹ் போதுமானவன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இளைஞனே உன் தெருவில்
திருமண வயதில் ஏழை பெண்ணிருக்க
நீயோ பணம் படைத்த வீட்டில்
பெண்ணை தேட!
அவளும் திருமண வயதை தாண்டிய பிறகு
வேற வழி இல்லை என்று
பிறமத பையனோடு ஓட!
இப்பொழு வருகிறது உனக்கு கோபம்
என் தெரு பெண்எப்படி ஓடலாம்!
அவளை கண்டால் வெட்டுவேன் என்று!
அவள் ஓடியதற்கு நீயும்
உன்னை போன்றவர்களும்
காரணம் இல்லையா?//

மனதை உருக வைக்கும் கேள்வி மட்டுமல்ல, சரியான சூடு போட்டுகிறது இந்த கேள்வி

Yasir said...

//என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை
நான் வாழ்ந்த இடத்தையே
விட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்
வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு!/// இந்த ஒரு செயலுக்காக ...அவர்களுக்கு கோடி கொடுத்தாலும் தகும்

ZAKIR HUSSAIN said...

அலாவுதீனின் எழுத்தை நம் ஊரில் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் மைக் போட்டு படிக்கவேண்டிய விசயம்.

அப்படியாவது இந்த "ஹராம்' நம் ஊரை விட்டு விலகும்

crown said...

என் தந்தையோ நோயின்
வாசல்படியை தட்ட
நானோ வீட்டின் நிலைப்படியில்!
எத்தனையோ பேர் என்னை
பெண் பார்த்து சென்ற பிறகும்
இன்னும் முதிர் கன்னியாக
உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!
ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இது கவிதை வரிகளல்ல முதிர் கன்னிகளின் குமுறல்,கண்ணீர் காவியம்..
------------------------------------------------
உனக்கு கொடுக்க என்னிடம் தங்கம் இல்லை!
ஆனால் என் தலையிலோ நிறைய வெள்ளிகள்.
-------------------------------------------
தங்கத்தை பறிப்பதை விட நீ அவர்கள் தலையில் உள்ள வெள்ளிகளை பிடுங்க முடியுமா???ஆம்மென்றால் நீயே சரியான ஆண்பிள்ளை.

crown said...

மணமகனே நான்
உன்னிடம் கேட்கிறேன்
நீ என்ன மஹர் தருவாய்
எனக்கு - எதற்காக என்கிறாயா?
உன் வீட்டில் வந்து
ஆயுள் முழுவதும் உனக்கும்
உன் குடும்பத்திற்கும்
சேவை செய்வதற்கும்!
குடும்பத்தலைவன் என்ற பட்டத்திற்காக!
உன் பிள்ளையை பெற்று தந்தவுடன்
நானும் தகப்பன் என்று
பெருமிதம் அடைவதற்காக!
என் தாய் தந்தையை
என் உடன்பிறந்தவர்களை, தோழிகளை
நான் வாழ்ந்த இடத்தையே
விட்டு விட்டு நீ காட்டில் இருந்தாலும்
வெளிநாட்டில் இருந்தாலும் உன்னோடு
வருவதற்கு! - எத்தனை லட்சம்? மஹர் தருவாய்?
------------------------------------------------
மணவாளனே! நான் உன்னிடம் மஹர் கேட்பது இலவசமாய் அல்ல நான் காலமெல்லாம் செய்யப்போகும் ஊழியதிற்கு.அப்படி நீ எனக்கு கூலிக்கு பகரமாய் மஹர் தந்தால் அல்லாஹ் உனக்கு நற்கூலிதருவான் அதுவும் என்னால் உனக்கு கிடைக்கக்கூடிய ஆதாயமே!

crown said...

பெண் பார்க்க
வந்தவர்களில் சிலர்
என் பையன் சிகப்பு பெண்தான்
பார்க்க சொல்கிறான்
பெண் கருப்புதான்
இருந்தாலும் நாங்கள் கேட்பதை
(வரதட்சனையை) தந்து விட்டால்
என் பையனை
சம்மதிக்க வைத்து விடுகிறோம்!
பணம் படைத்தவர்களின்
கருப்பு நிற பெண் கரையேறி விடும்!
பணம் இல்லா குடும்பத்து
கருப்பு நிற பெண்களை
கடலில் தள்ளி விடலாமா?
------------------------------------------------
இதுதான் கருப்புப்பணமா?கற்புக்கு பணம் பேசும் ஆண் விபச்சாரியே அந்த கற்புக்கு பணம்மூலம் ஒப்புதல் செய்தல்தான் உன் திருமண ஒப்பந்தந்தமா?இல்லை உன்னை நாளை எரிக்கப்போகும் தீப்பந்ததமா?

crown said...

இளைஞர்களே! இன்னுமா உறக்கம்!
உறக்கத்திலிருந்தும் மன ஊனத்திலிருந்தும்
விழித்தெழுங்கள்!
இந்த பூமி பந்தில் தப்பித்து விடலாம்
நாளை மஹ்ஷர் பெருவெளியில்
இறுதி தீர்ப்பின் நாளின்
அதிபதியாம் வல்ல அல்லாஹ்விடம்
என்ன பதில் சொல்வாய்
தாய் தந்தையை கை காட்டுவாயா?
முடியாது இளைஞர்களே!

நீங்கள் மட்டும்தான் உங்களின்
காரியத்திற்கு பதில் சொல்வீர்கள்
வல்ல அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
பிறமதக்கலாச்சாரத்தில் இருந்து
நம் சமுதாயத்தில் வேரோடி இருக்கும்
இந்த வரதட்சனை என்னும் கொடுமையை
அகற்றி முதிர் கன்னி இல்லா நிலைக்கு
மஹர் கொடுத்து மணமுடியுங்கள்!
இம்மை மறுமையில் வெற்றியடைங்கள்.
------------------------------------------------
வினை விதைத்தால் வினையறுப்பீர்கள்.தி(தீ)ணை விதைத்தால் தினை அறுப்பீர்கள் .
------------------------
சகோ.அலாவுதீன் அற்புத ஆக்கம்.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!

Shameed said...

சொல்லிய விதம் அருமை .

நல்ல சமுதாய சிந்தனை கருத்துக்கள் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown on Tuesday, October 12, 2010 12:23:00 AM said..
//இதுதான் கருப்புப்பணமா? //
//உன் திருமண ஒப்பந்தந்தமா?
//இல்லை உன்னை நாளை எரிக்கப்போகும் தீப்பந்தமா? //

இன்றளவு வரனுக்கு தட்சனை வதைத்து பெறும் வழக்கம் எகோபித்து இல்லாவிடினும் ஆங்காங்கே மன அழுத்தம் கொடுத்து அதாவது சுற்றத்தாரை சுழலவிட்டு அவர்கள் பங்கிற்கு ஏற்றி விட்டு பறிக்கும் நேர்த்தி இன்னும் இருக்கத்தான் செய்கிறது, என்ன கொடுமைன்னா காசு உள்ளவர்களுக்குத்தான் எத்தனை உவகை, புலகாங்கிதம் தட்சனைக் கொடுத்து கல்யாணம் முடிப்பதில் !!! (தங்கள் பெண் பிள்ளைக்கு செய்யக் கூடியது தனிப்பட்டதாக இருந்தாலும் மாப்பிள்ளையை மையப் படுத்தி செய்வதில் எவ்வளவு பெருமிதமடைகிறார்கள்)

ஒவ்வொரு முஸ்லீமுக்கும் நன்றாக அறியும் இது மாற்றன் தோட்டத்து செடி என்று அதனை நம் வீட்டிலும் படர விட்டு குளிர்காய்வதில்தான் வேதனை வெம்புகிறது.

நம்மூரில் மஹர் கொடுத்துதான் திருமணங்கள் நடக்கிறது, மஹருக்கு நிகராக பெருந்தொகைகள் இடம் மாறிப் போவதுதான் கேளிக் கூத்தாகி விமர்சனத்திற்குள்ளாகிறது.

Anonymous said...

தம்பி அலாவுதீன் பாராட்டுகள் , என் கருத்து நமது ஊரில் பெரும்பாலும் பெண் வீட்டார்தனே மணமகனுக்கு விலை வைக்கிறார்கள். கடந்த காலம் எப்படியோ, இப்போது நாம் பெற்றோர்தனே நம் மக்களுக்கு வாங்குவதும் இல்லை கொடுப்பதும் இல்லை என்று உறுதி எடுப்போமாக .
எனக்கு இரு மகள்கள் ஒரு மகன் எதுவும் வாங்கவும் மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் இது உறுதி .


ஷரஃபுத்தீன் நூஹு
1 925 548 3696 begin_of_the_skype_highlighting              1 925 548 3696      end_of_the_skype_highlighting

Anonymous said...

தாய் தந்தை மனம் நோக நடக்க மாட்டேன் என்பது இந்த விஷயத்தில் மட்டும் தானே. வரதட்சணை என்றால் பணத்தை மட்டுமே வைத்து பேசப்படுகிறது ஆனால் அதற்கு மேலாக பாதி வீடு என்றும் எங்களுக்கு பணம் எல்லாம் வேண்டாம் வீட்டை முழுசா தந்துவிடுங்கள் என்று பேசப்படுகிறதே. அதைப் பற்றி எப்போது பேசப் போகிறோம்.

அன்புடன் மலிக்கா said...

உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?

மனமிழந்த மனிதனுக்கு
மணகன் ஊர்கோலமா?

எத்தனை சொன்னாலும் முன்புறம் வேண்டாமென்று பின்புறம் கைநீட்டும் மனிதர்கள் இருக்கும்வரை கொடுமைக்கு முடிவு இறைவன் கையில்..

”மனதார மனம்கொடு” இந்த லிங்கில் நான் எழுதியவைகள்
http://niroodai.blogspot.com/2010/02/blog-post_25.html

Haja Mohideen said...

மணமகன் மட்டும் காரணம் இல்லை! பெண்ணின் பெற்றோரும் தான்.
பெருமைக்காக நான் இம்பூட்டு செய்வேன். என் மகள் வெறுங்கை வீசி வரமாட்டாள். என பீற்றுகிறார்கள்

Haja Mohideen said...

ஊர் வழக்கத்தைமீறி
உற்றாரின் வார்த்தைகளைமீறி
அவள் கைப்பிடித்த எனை
என் வீட்டோடு வா
இதான் ஊர் சட்டம் என்பவளுக்கு?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பெண் வீட்டாரிடம் முழு வீட்டையும் கருணையின்றி திருமணத்திற்கு முன் எழுதி வாங்கி விட்டு பிறகு காலப்போக்கில் பெண் வீட்டாரிடம் இரக்கமின்றி வாங்கப்பட்ட அவ்வீட்டின் பழுதடைந்த கதவுக்கு 'கொலிக்கி' வாங்கி மாட்ட கூட முடியாமல் (வக்கில்லாமல்) தவிக்கும் எத்தனையோ ஆண்மகன்களை (மாக்கான்களை) நாம் நம் அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம். எதைக்கண்டு தான் திருந்தப்போகிறதோ இந்த ஆண் மகன்களைப்பெற்ற சமூகம்? வாழ்வில் பல அடிமேல், அடி விழுந்தாலும் அந்த வரட்டுப்பிடிவாதத்தில் சிறிதும் தொய்வில்லாத எத்தனை பேமானி குடும்பங்களை நாம் நம் ஊரிலேயே காண முடியும்...

அலாவுதீன்.S. said...

இந்த ஆக்கத்தை வெளியிட வைத்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! வெளியிட்ட அதிரை நிருபருக்கு என்னுடைய நன்றி!
**********************************
அபுஇபுறாஹிம் : நிதர்சன உண்மை... சுல்லென்ற சாட்டை அடி ! உறைக்குமா ?
அப்துல்மாலிக் : இதை படித்து ஒருத்தராவது திருந்தினால் முழு வெற்றிதான் சகோதரரே. இந்த விசயத்தில் மட்டும் பெற்றோர் பின் ஒளீந்துக்கொள்கிறோம் எதையும் எதிர்கொள்ள திரானியற்று.....

sabeer : அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், இதேப்போல் சொல்லச்சொல்ல மாறும் நம் சமூகம்.
Yasir : மானம் கெட்ட மணமகன்கள் பெற்றோர்களே உறுதி ஏற்ப்போம்..வரதட்சணை வாங்க கொடுக்க மாட்டோம் என்று.....
தாஜுதீன் : இன்ஷா அல்லாஹ் விரைவில் இனியும் நல்ல முன்னேற்றம் வரும் என்று நம்புவோமாக.இன்றைய இளைய பெண் சமூகத்திடன் விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்தவேண்டும்.
தாஜுதீன் : மனதை உருக வைக்கும் கேள்வி மட்டுமல்ல, சரியான சூடு போடுகிறது இந்த கேள்வி.
Yasir : இந்த ஒரு செயலுக்காக ...அவர்களுக்கு கோடி கொடுத்தாலும் தகும்.
ZAKIR HUSSAIN : நம் ஊரில் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் மைக் போட்டு படிக்கவேண்டிய விசயம்.
crown : தங்கத்தை பறிப்பதை விட நீ அவர்கள் தலையில் உள்ள வெள்ளிகளை பிடுங்க முடியுமா???ஆம்மென்றால் நீயே சரியான ஆண்பிள்ளை.
crown : மணவாளனே! நான் உன்னிடம் மஹர் கேட்பது இலவசமாய் அல்ல நான் காலமெல்லாம் செய்யப்போகும் ஊழியத்திற்கு.
crown: இதுதான் கருப்புப்பணமா?கற்புக்கு பணம் பேசும் ஆண் விபச்சாரியே உன் திருமண ஒப்பந்தந்தமா? இல்லை உன்னை நாளை எரிக்கப்போகும் தீப்பந்தமா?
Shahulhameed : நல்ல சமுதாய சிந்தனை கருத்துக்கள் .

அபுஇபுறாஹிம் : ஒவ்வொரு முஸ்லீமுக்கும் நன்றாக அறியும் இது மாற்றன் தோட்டத்து செடி என்று அதனை நம் வீட்டிலும் படர விட்டு குளிர்காய்வதில்தான் வேதனை வெம்புகிறது.
ஷரபுத்தீன் நூஹு : நம் மக்களுக்கு வாங்குவதும் இல்லை கொடுப்பதும் இல்லை என்று உறுதி எடுப்போமாக .
எனக்கு இரு மகள்கள் ஒரு மகன் எதுவும் வாங்கவும் மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் இது உறுதி .
ஷரபுத்தீன் நூஹு : ஆனால் அதற்கு மேலாக பாதி வீடு என்றும் எங்களுக்கு பணம் எல்லாம் வேண்டாம் வீட்டை முழுசா தந்துவிடுங்கள் என்று பேசப்படுகிறதே. அதைப் பற்றி எப்போது பேசப் போகிறோம்.
அன்புடன் மலிக்கா : உடல் உருப்படியாயிருக்கும் மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ? மனமிழந்த மனிதனுக்கு மணகன் ஊர்கோலமா?
**********************************
சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பலவிதமான கருத்துக்களை வெளியிட்ட தங்கள் அனைவருக்கும் நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

alavud38 on Wednesday, October 13, 2010 12:03:00 AM said...
இந்த ஆக்கத்தை வெளியிட வைத்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் !///

உங்களின் ஏற்புரையை கருத்துக்களின் குவியலாக்கி சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் !

அலாவுதீன்.S. said...

சகோதரர்கள் : ஹாஜா முகைதீன்,
நைனா முகம்மது, அபுஇபுறாஹிம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்! தங்களின் கருத்திற்கு நன்றி!
/// என் வீட்டோடு வா இதான் ஊர் சட்டம் என்பவளுக்கு? ///
குடும்பத்தலைவனான ஆண்மகன் கையில்தான் இருக்கிறது - சாதகம் பாதகங்கள் பற்றி யோசித்து நல்ல முடிவு எடுப்பது.

/// பெண் வீட்டாரிடம் முழு வீட்டையும் கருணையின்றி திருமணத்திற்கு முன் எழுதி வாங்கி விட்டு - எதைக்கண்டு தான் திருந்தப்போகிறதோ இந்த ஆண் மகன்களைப்பெற்ற சமூகம்? ///

பெண்ணுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் - பெண் வீட்டுக்கு ஒரு ரூபாய் கூட செலவை மார்க்கம் வைக்கவில்லை என்பதை நன்கு உணர்ந்தால் மேலும் மறுமை இருக்கிறது அதில் வல்ல அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்ற உண்மையான அச்சம் இருந்தால் இந்த கொடுமை ஒழியும்.

குர்ஆனை ஆயிரம் தடவை ஓதினாலும். திருக்குர்ஆனை பொருளுணர்ந்து படித்து வல்ல அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று புரிந்து விளங்கி அதன்படி நடக்க ஆரம்பித்தால் சமுதாயத்தில் இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் அனைத்து ஹராமான(விலக்கப்பட்ட) காரியங்களும் நம்மை விட்டு அகன்றுவிடும் இன்ஷாஅல்லாஹ்.

/// உங்களின் ஏற்புரையை கருத்துக்களின் குவியலாக்கி சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் ! ///

மாஷாஅல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்!

Haja Mohideen said...

சகோ. அலாவுதீன் அவர்களே...
ஆண்கள் கையில் என்று சொல்வது எளிது. அந்த பவ்ரை உபயோகித்தால்.. விளைவுகள்......? திரும்ணத்துக்கு முன்/பின் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் கூற மறுக்கிறார்கள்.காரணம் திருமணத்திற்கு பின் கணவன் / மருமகன் வீட்டோடு வரவேண்டும் என்ற ஆதங்கத்தில் அல்லாஹ்வை மறந்து..
இதன் விளைவுகள் வரதட்சனையை வரவேற்கிறது.சைதானுக்கு வ்ழிவகுக்கிறது.
ஆண் என்ற வெளிபடுத்தினால் கிடைப்பது சைதானுக்க்தான் வெற்றி? நேர் வ்ழியில் திருமணமுடித்து அல்லாஹ்வுக்கு பயந்து வாழும் ஆண்மகனுக்கும் இந்த நிலைப்படுகள் அதிகம் என்பதை கூரி பெற்றோர்கள் திருமணத்திற்கு தன் மகள் கண்வனோடு வாழக்கூடிய இஸ்லாத்தின் நல்வழியை கூற்ட்டும்.

Haja Mohideen said...

நபிவ்ழியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது உண்மை. ஆனால் அதற்காக மணமகனை மட்டும் குறைகள் கூறுவது தகுமானதல்ல. நிச்சயமாக பெற்ரோர்கள் நமது சுற்று சூழலில் பெரிதும் காரணம்.

அலாவுதீன்.S. said...

சகோதரர் Haja Mohideen அவர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// நபிவழியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது உண்மை. ஆனால் அதற்காக மணமகனை மட்டும் குறைகள் கூறுவது தகுமானதல்ல. நிச்சயமாக பெற்ரோர்கள் நமது சுற்று சூழலில் பெரிதும் காரணம்.///
‘’சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.‘’ (அல்குர்ஆன்: 4: 34)

வல்ல அல்லாஹ் மார்க்கத்திற்கு முரணான காரியங்களுக்கு பெற்றோரின் பேச்சு கேட்கும்படி சொல்லவில்லை. பெற்றோர்கள் வரதட்சணை விஷயத்தில் மட்டும் என் பேச்சை கேட்டு நடக்கவில்லை என்றால் என்னை உயிரோடு பார்க்க முடியாது என்று சில இடங்களில் மிரட்டி மணமகனை பணிய வைத்து விடுகிறார்கள். இந்த உலகில் ஆயிரம் காரணம் கூறினாலும் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டும்தான் நாம் பதில் கூற வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தால் போதும். மஹ்ஷரில் நாம் செய்த காரியத்திற்கு பெற்றோர்களும், அவர்கள் செய்த காரியத்திற்கு நாமும் பதில் சொல்ல வேண்டி இருக்காது.
வல்ல அல்லாஹ் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரிப்பான். அவரவர் காரியத்திற்கு அவரவரே பொறுப்பாளி.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

நம் சமுதாயப் பெண்களின் - குறிப்பாக - ஏழைப்பெண்களின் உள்ளக் குமுறலைச் சகோதரர் அலாவுத்தீன் எழுத்தில் வடித்திருக்கிறார்.

அவருக்குப் பாராட்டுகள்!

இதுபோன்ற கருத்துகளைப் படிக்கப் படிக்க, படித்ததைச் சிந்திக்க, சிந்தித்து முடிவுக்குவர ஒவ்வொருவரும் உறுதி கொண்டால் அல்லாஹ் நம் உறுதியை நிறைவேற்றித் தருவான்.

இதுபோன்ற ஓர் ஆக்கம் - நமது ஊரில் பல்லாண்டுகளுக்கு முன்னர் நடந்த வரதட்சணை ஒழிப்பு மாநாட்டிலும் அதன் பின்னர் என் மகளின் திருமணத்தின்போதும் வெளியிடப்பட்டது. இங்கு அதன் பொருத்தம் கருதி சுட்டி : http://www.satyamargam.com/810

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் (ஜமீல்)காக்கா, நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் வருகை கருத்தாக பதிந்திருக்கிறதுக்கும் தாங்கள் சுட்டிக் காடிய சுட்டிக்கும் நன்றி! தங்களின் பங்களிப்பையும் எங்களோடு பகிர்ந்துடுங்கள் இன்ஷா அல்லாஹ்.

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் ஜமீல் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// இதுபோன்ற கருத்துகளைப் படிக்கப் படிக்க, படித்ததைச் சிந்திக்க, சிந்தித்து முடிவுக்குவர ஒவ்வொருவரும் உறுதி கொண்டால் அல்லாஹ் நம் உறுதியை நிறைவேற்றித் தருவான். ///

வல்ல அல்லாஹ் எல்லோருக்கும் உறுதியை தந்து இந்த ஹராமிலிருந்து விலகட்டும்.தாங்கள் பதிந்த சுட்டியை பார்த்தேன் நன்றாக இருந்தது. தங்களின் கருத்தை பதிவிட்டதற்கு நன்றி.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புச் சகோதரர் அலாவுத்தீன்,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

நான் கொடுத்த சத்தியமார்க்கம்.காம் சுட்டியில் இருக்கும் கட்டுரை ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.

அதன் முதல் ட்ராஃப்டை நான் எழுதி முடித்த நாளை, சகோ. அபூஇபுறாஹீம் நினைவில் வைத்திருப்பார் (என்று நம்புகிறேன்).

சமூகப் பார்வை கொண்டவர்கள்தாம் சிறந்த படைப்பாளிகளாக உருவெடுக்க முடியும். நல்ல பயனுள்ள படைப்புகள் இணைய எல்லைக்குள் மட்டும் அடங்கிவிடாமல் நமது ஊரிலுள்ள எல்லா இல்லங்களுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு வரவேண்டும். எல்லா ஜும்ஆப் பள்ளிகளிலும் அச்சிட்டுப் பரப்பப்பட வேண்டும்.

அவ்வாறான சரியான இலக்கு நோக்கிய நமது பயணத்தின் தொடக்கக் காலடியாக நாம் இணையத்தைப் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாக அமையும், இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜமீல் on Friday, October 15, 2010 2:28:00 AM said...
அதன் முதல் ட்ராஃப்டை நான் எழுதி முடித்த நாளை, சகோ. அபூஇபுறாஹீம் நினைவில் வைத்திருப்பார் (என்று நம்புகிறேன்)///

அன்பின் (ஜமீல்) காக்கா இன்றும் பசுமையான நினைவுகள் அன்றைய எழுச்சியும் தங்களைப் போன்றவர்களின் நன்மைய ஏவி தீமையை தடுக்கும் எழுத்திலும் பேச்சிலும் வேக வீச்சும் இளையவர்களின் மனதில் அப்படியே பதியவைக்கும் திறமையும், அல்லாஹ் இறுதி நாள் வரை இதனை நிலைக்கச் செய்து நம் அனைவரின் அமல்களை அங்கீகரிப்பானாக.

அதிரைநிருபர் said...

//சமூகப் பார்வை கொண்டவர்கள்தாம் சிறந்த படைப்பாளிகளாக உருவெடுக்க முடியும். நல்ல பயனுள்ள படைப்புகள் இணைய எல்லைக்குள் மட்டும் அடங்கிவிடாமல் நமது ஊரிலுள்ள எல்லா இல்லங்களுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு வரவேண்டும். எல்லா ஜும்ஆப் பள்ளிகளிலும் அச்சிட்டுப் பரப்பப்பட வேண்டும்.//

நம் அன்பு சகோதரர் அதிரை ஜமீல் அவர்களின் இந்த நல்ல ஆலோசனைக்கு நிச்சயம் விரைவில் செயல் வடிவம் கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது போன்ற ஊக்கம், ஆலோசனைகள் நிச்சயம் நம்மை சரியான பாதையில் செல்ல வழி வகுக்கும் என்பது நம் நம்பிக்கை. அல்லாஹ் போதுமானவன்.

அதிரையில் நடைப்பெற்ற வரதட்சனை ஒழிப்பு மாநாடு நல்ல எழுச்சியை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இக்காலத்தில் நவீன வடிவில் வரதட்சனை இன்னும் பல வகையில் நம்மூரில் ஒட்டிக்கொண்டுதான் உள்ளது. வரதட்சனை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டயமாக உள்ளது.

அன்பு சகோதரர் அலாவுதீன், நம் அதிரைநிருபரில் நீங்கள் பதிந்து வரும் விழிப்புணர்வு கட்டுரைகள் நம் மக்களை சென்றடைகிறது என்பது ஒவ்வொரு நாளும் நாம் கண்டுவரும் உண்மை. தொடருங்கள் உங்கள் பணியை. இந்த விழிப்புணர்வு சேவைக்கு நம் அதிரைநிருபரின் ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு. எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

Shameed said...

முன்பு தலை வாசல் வழியாக தைரியமாக வளம் வந்த வரதட்சணை
தற்போது கொ(ள்)ல்ளை வாசல் வழியாக பயந்து கொண்டு வருகின்றது

கூடிய விரைவில் இருவழிகளும் அடை பட்டு
நபி வழியில் திருமணங்கள் நடக்கும்.இன்ஷா அல்லாஹ்

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் ஜமீல் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

///// நல்ல பயனுள்ள படைப்புகள் இணைய எல்லைக்குள் மட்டும் அடங்கிவிடாமல் நமது ஊரிலுள்ள எல்லா இல்லங்களுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு வரவேண்டும். எல்லா ஜும்ஆப் பள்ளிகளிலும் அச்சிட்டுப் பரப்பப்பட வேண்டும். /////


நானும் இதை அச்சிட்டு வெளியிட்டால் என்ன என்று மனதிற்குள் எண்ணி இருந்தேன். சகோதரர் ஜாகிரும் இதே கருத்தை சொல்லி இருக்கிறார். அதிரை நிருபரின் கருத்தாகவும் உள்ளது. இன்ஷாஅல்லாஹ் இதற்கான முயற்சியில் இறங்குவோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

///// அவ்வாறான சரியான இலக்கு நோக்கிய நமது பயணத்தின் தொடக்கக் காலடியாக நாம் இணையத்தைப் பயன்படுத்திக் கொள்வது சிறப்பாக அமையும், இன்ஷா அல்லாஹ். /////
தங்களின் தொலை நோக்கு சிந்தனை கருத்திற்கு மிக்க நன்றி!

அலாவுதீன்.S. said...

அதிரைநிருபர் குழுவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///நம் அன்பு சகோதரர் அதிரை ஜமீல் அவர்களின் இந்த நல்ல ஆலோசனைக்கு நிச்சயம் விரைவில் செயல் வடிவம் கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.///
******************************
செயல் வடிவம் கொடுப்போம் என்றதற்கு : ‘’ஜஸாக்கல்லாஹ் ஹைர்’’


/// இது போன்ற ஊக்கம், ஆலோசனைகள் நிச்சயம் நம்மை சரியான பாதையில் செல்ல வழி வகுக்கும் என்பது நம் நம்பிக்கை. அல்லாஹ் போதுமானவன். ///
******************************
நாம் அனைவரும் நேர்வழியில் சென்று மற்றவர்களையும் நேர்வழிக்கு அழைக்கும் நன்மக்களாக உயிர் வாழும் காலம் வரை நிலைத்திருக்கவும் மேலும் இந்தப்பணியில் உறுதியுடன் (உறுதியான ஈமானுடன்) நாம் இருப்பதற்கும் நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் உதவியும், அருளும் புரிய துஆச் செய்வோம். நம்பிக்கையாளர்கள் அனைவரும் துஆச்செய்யுங்கள்.

///வரதட்சனை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டயமாக உள்ளது. ///
******************************
வல்ல அல்லாஹ்வின் அருளால் நம்மால் ஆன முயற்சிகளை செய்வோம். இன்ஷாஅல்லாஹ் மேலும் தெருக்குள்ளேயே மணமுடிப்பது ஒழிக்கப்பட வேண்டும். அதிரையில் அனைத்து தெருவாசிகளும் பெண் கொடுத்து பெண் எடுக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். (என் தெரு உயர்ந்த தெரு என்ற தற்பெருமை, நானே உயர்ந்தவன் என்ற குலப்பெருமை,ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு,
இவை அனைத்தும் மண்ணில் புதைக்கப்பட வேண்டும்.)

//////அன்பு சகோதரர் அலாவுதீன், நம் அதிரைநிருபரில் நீங்கள் பதிந்து வரும் விழிப்புணர்வு கட்டுரைகள் நம் மக்களை சென்றடைகிறது என்பது ஒவ்வொரு நாளும் நாம் கண்டுவரும் உண்மை. தொடருங்கள் உங்கள் பணியை. இந்த விழிப்புணர்வு சேவைக்கு நம் அதிரைநிருபரின் ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு. எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.//////
******************************
தங்களின் பணியும் மகத்தானதுதான். தங்களின் பணிக்கு வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை வாரி வழங்கட்டும்.

தங்களின் ஒத்துழைப்புக்கும் ஊக்கத்திற்கும் : ‘’ஜஸாக்கல்லாஹ் ஹைர்’’, மாஷாஅல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்!

என் பங்களிப்பு என்பது சிறு துளிதான் வல்ல அல்லாஹ் நம்மை கருவியாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறான். எந்த முயற்சிகளும் நம்முடையது இல்லை. எந்த அறிவும் நமக்கு சொந்தம் இல்லை. நாமோ வல்ல அல்லாஹ்வின் அடிமைகள். மார்க்கத்திற்கு சொந்தக்காரன், அதிபதி வல்ல அல்லாஹ். அடிமையாகிய நம்மை வைத்து வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறான். வல்ல அல்லாஹ் நாடியதை நம் மூலம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறான். நமக்கு என்றும் நினைவில் இருக்க வேண்டியது மார்க்கம் மார்க்கம் மார்க்கம்தான் மேலோங்க வேண்டும். நாமும், நம் குடும்பமும், நம்மை சுற்றியுள்ள சகோதரர்களும், நம் சமுதாயமும் நேர்வழி பெற வேண்டும். இதற்கான பங்களிப்பில் நம் சக்திக்கு உட்பட்டு பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் இறைவனிடம் பயனற்ற கல்வியை விட்டும், பயனற்ற காரியங்களை விட்டும் பாதுகாவல் கொடு என்ற துஆவும் செய்து வர வேண்டும். வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.