Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மழை காலத்தில் நம்ம ஊர் (பாகம் - 2) 24

அதிரைநிருபர் | November 06, 2010 | , , ,


கடும் காற்றடிக்கும், புயல் வந்து கரையைக்கடக்கும்
வெள்ளமோ ஊரை நன்கு வெளுத்துக்க‌ட்டும்
ம‌ழை நீர் வ‌ந்து வீட்டிற்குள் குடிபுகும்
தெருக்க‌ளெல்லாம் சேர், ச‌க‌தியில் க‌ட்டிப்புர‌ளும்

க‌டும் காற்றில் ம‌ர‌ங்க‌ள் ஆங்காங்கே மாண்டு போகும்.
நொறுக்குத்தீணிக்கு நா அலைபாயும்.
மாட‌ மாளிகையில் வீற்றிக்கும் நினைப்பில்
அடைம‌ழை க‌ண்டு உள்ள‌ம் ஆன‌ந்த‌ம‌டையும்

குளிர் காற்று வ‌ந்து உள்ள‌த்தை மெல்ல‌ கொல்லும்
நீள‌ வானை மேக‌க்கூட்ட‌ம் மேய்ந்து செல்லும்
வெண் கொக்கு கூட்ட‌ம் வானில் ப‌ற‌ந்து
யாருக்கோ ஓட்டு கேட்டு செல்லும்

மின்ன‌ல் வ‌ந்து ஊருக்கே மாத்தாப்பு கொளுத்தும்
இடிச்ச‌த்த‌ம் இறைவ‌னின் ச‌க்தியை ப‌றைசாற்றும்
சிறுவ‌ர் உள்ளமோ காகித‌ ஓட‌மிட்டு இக்கான‌க‌த்தை சுற்றிவ‌ரும்
தும்பிகள் வானில் ப‌ற‌ந்து சிறு த‌ம்பிக‌ளை உற்சாக‌மூட்டும்.

காளான்க‌ள் ம‌ல‌ர்ந்து யாருக்கோ குடை பிடிக்கும்.
ப‌ச்சைபாசி ஆங்காங்கே தோன்றி ஊருக்கே போர்வை விரிக்கும்
அடுப்பெறிக்க உதவும் விற‌குக‌ள் அழும்பு ப‌ண்ணும்.
சோவென‌ பெய்யும் மழை சோம்ப‌லுக்கு பாய் விரிக்கும்.

சொட்டென‌ விழும் ம‌ழை நீர் ம‌ன‌திற்கு சொட்டு நீர்ப்பாய்ச்சும்
ம‌ழையில் ந‌னைந்த‌ காக‌ம் வெயிலுக்கு ஏங்கும்.
க‌ருமேக‌ம் கிழ‌க்கே தோன்றி வீடு க‌ட்டுவோரை ப‌ய‌முறுத்தும்
ப‌ழைய‌ சோற்றில் செய்த முறுக்கு வான‌ம் பார்க்க‌ அஞ்சும்

வெண்ப‌னி மூட்ட‌த்தில் வீட்டு ம‌ர‌ங்க‌ள் த‌லைதுவ‌ட்டிக்கொள்ளும்
ஊரோ இருளில் மூழ்கும் உள்ள‌மோ உற்சாக‌த்தில் மிளிரும்
ப‌ள்ளி விடுமுறையை எண்ணி எங்கோ ப‌ற‌ந்து செல்லும்
பண‌ங்காசுக‌ள் இல்லாம‌ல் இப்பாருல‌கை சுற்றித்திரியும்
முட‌ங்கிக்கிட‌க்கும் ந‌ம்மை ப‌ள்ளியின் பாங்கொலி த‌ட்டி எழுப்பும்.

இக்கால‌ங்க‌ள் க‌ச‌த்தாலும் அக்கால‌ங்க‌ளை எண்ணி இனிமை/இளமை கொள்வோம் என்றும் ம‌ற‌வோம்.

ம‌ழை கால‌த்தில் ந‌ம்ம‌ ஊர் ம‌ன‌திற்குள் ஓர் க‌ற்ப‌னை செய்து பார்(ப்போம்.)

--- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

24 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) : ஊரில் புயல் சின்னமென்று சொல்லி ஒரு பேரும் வைத்திருக்கும்போதே நினைத்தேன் MSM(n) எங்கே என்று... சரியான நேரத்தில் பெய்யென்று பெய்யும் மழையாகியது...

sabeer.abushahruk said...

சகோ MSM (N),
நெஞ்சை அள்ளும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாருங்கள் அன்பு சகோதரர் நெய்னா முகம்மது, தமிழ்நாட்டில் "ஜல்" புயல் பயம் காட்டினாலும், தங்களின் மழைக்கால நினைவுகளின் பதிவு அந்த பயத்தை தூக்கி வீசிவிட்டது.

//இடிச்ச‌த்த‌ம் இறைவ‌னின் ச‌க்தியை ப‌றைசாற்றும்//

சரியாக சொன்னீர்கள், இடிச்சத்தால் உள்ளத்தில் ஏற்படும் அச்சம், இறைவனின் சக்தியை என்றும் உணரமுடியும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அடை மழை (கவிதை) வெள்ளம்...(உ)பள்ளமெல்லாம் பரப்பி,மடைத்திறந்து வீதியெங்கும் நிறைவது போல் உற்சாகம் கரைபுரண்டு ஓட நைனாவின் பேனாமுனை கவிதை கர்பம் கொண்டு.(கார்மேகம் சூல் கொள்வதுப்போல்)பிரசவித்த கவிக்குழந்தைகள்(அப்பாடா எந்தனை குழந்தைகள்....!!!!)மனதோடும்,மண்னோடும் விளையாடும் ஆட்டம் அட்டகாசம்.!!!!!

crown said...

இடிச்ச‌த்த‌ம் இறைவ‌னின் ச‌க்தியை ப‌றைசாற்றும்
சிறுவ‌ர் உள்ளமோ காகித‌ ஓட‌மிட்டு இக்கான‌க‌த்தை சுற்றிவ‌ரும்.
------------------------------------------------------------
இந்த இடம் லேசா இடிப்பதுபோல் எனக்கு(என்சிற்றறிவிற்கு)த்தோன்றியது.
இடிச்ச‌த்த‌‌ம் இறை அச்சத்தை மேலாக்கும்(தூண்டும்).காரணம் அல்லாஹ்வின் சக்தி ஒரு இடியோசையுடன் அடங்கிப்போவதுஅல்ல.அது அலபறியது,வல்லியது,வார்தைக்குள் அடக்க முடியாதது.காரணம் பறை சாற்றும்(எடுத்துரைக்கும்) இந்த வார்தை முற்று(ம்)பெற்று விடும்.இது அல்லாவின் மிகச்சிரிய நடவடிக்கை என்று வேண்டுமானால் சிறுத்துளியின் ,சிறுத்துளி உதாரணமாய் சொல்லலாம் ஆனால் அவன் சக்தி...அப்பப்பா. .......(தவறாய் தோன்றி இருந்தால் மன்னிக்கவும்).கவிதை இயற்றும் போது அல்லாஹுவிற்கு ஏதும் இணையாகவோ.அல்லாஹ்வின் வல்லமையைவிட அதிகமாகவோ இல்லாமல் பார்த்து வார்த்தை புனைவது மிக,கிக அவசியம்.

crown said...

சிறுவ‌ர் உள்ளமோ காகித‌ ஓட‌மிட்டு இக்கான‌க‌த்தை சுற்றிவ‌ரும்.
------------------------------------------------------------
கானகம் -காடு என்பதாய் அறிகிறேன் .ஓசைக்காக சேர்தீர்களா? கவிப் பெரியவங்க கிட்ட கேட்டுப்பாருங்கள் இந்த இடத்தில் இது வரலாமன்னு?ஆனாலும் உங்க காட்ல மழைதான் போங்க.

crown said...

காளான்க‌ள் ம‌ல‌ர்ந்து யாருக்கோ குடை பிடிக்கும்.
ப‌ச்சைபாசி ஆங்காங்கே தோன்றி ஊருக்கே போர்வை விரிக்கும்
அடுப்பெறிக்க உதவும் விற‌குக‌ள் அழும்பு ப‌ண்ணும்.
சோவென‌ பெய்யும் மழை சோம்ப‌லுக்கு பாய் விரிக்கும்.
-------------------------------------------------------------------
அடடா! எதார்த்த வரிகள்....
காளான்க‌ள் ம‌ல‌ர்ந்து நத்தைக்கு குடை பிடிக்கும்?????

crown said...

ப‌ழைய‌ சோற்றில் செய்த முறுக்கு வான‌ம் பார்க்க‌ அஞ்சும்.
---------------------------------------------------------
வல்லூறூக்கு அஞ்சும் குருவின் குஞ்சுகள் போல?????

crown said...

ஒரு கடி ஜோக்: காயப்போடும் வத்தலில் மழைக்கு அஞ்சி காயப்போடாமல் இருக்க வேண்டிய தில்லை எந்த வத்தல் அது?
குடைமிளகாய் வத்தல்.
சகோ.சாகுல்:எல்லா வத்தலும் காயப்போடலாம் மழை வந்தா அது நமக்கு பயன் படும்.
எப்படிங்க?
அதுதான் வத்தலாச்சே(ஓடம்)மழைல சவாரி செய்ய பயன்படுத்தலாமே??
அப்படியா சரி!

Adirai khalid said...

அரேபிய தீபகர்ப்பத்தில் நிலைகொண்டிருக்கும் MSM புயல் அதிரை நிருபரில் சூல்கொண்டு பழைய நினைவுகளை சூரையாடி தட்டிச் சென்றுள்ளது.

ZAKIR HUSSAIN said...

அநியாயத்துக்கு இப்படி 'ஊர்ஞாபகம்' ஏற்படுத்துபவ்ர்களின் லிஸ்ட்டில் இப்படி சகோதரர் MSM நெய்னாவும் சேர்ந்து விட்டார். [ இந்த MSM நகருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?]\

ZAKIR HUSSAIN

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

[ இந்த MSM நகருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?]\///

இருக்கிறதே ! அதனை MSM(n) சொல்லட்டுமென்றே விட்டு விட்டேன் !

Unknown said...

//குளிர் காற்று வ‌ந்து உள்ள‌த்தை மெல்ல‌ கொல்லும்/

//வெண்ப‌னி மூட்ட‌த்தில் வீட்டு ம‌ர‌ங்க‌ள் த‌லைதுவ‌ட்டிக்கொள்ளும்//

நான் மிகவும் ரசித்த வரிகள் ........

அதை உணர்ந்த ,பார்த்த அனுபவம் ...........

கலக்கு நெய்னா.......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

harmys சொன்னது…
//குளிர் காற்று வ‌ந்து உள்ள‌த்தை மெல்ல‌ கொல்லும்///

தம்பி அப்துர் ரஹ்மான் : எங்கே உங்களுடையதை இன்னும் கியூவில் காணவில்லையே ! எப்போதுதான் ஜனிக்கும் !

Unknown said...

சபீர் காக்கா,நெய்னாதம்பி காக்கா உங்கள் இருவருடைய ஆவலுக்கும் நன்றி ....
நீங்கள் இருவரும் கேட்பதால் சொல்கிறேன் ...
நான் நான்கு நாட்களக்கு முன்பு அனுப்பிவிட்டேன்..வரிசையில் நிற்கலாம்

அன்புடன் மலிக்கா said...

மழைகாலத்து நினைவுகள் அருமையாக இருக்கு..

குளிர் காற்றின் ரிங்காரம்
குயில் கூட்டத்தில் கேட்டு
குளிரில் நனைந்தாடும்
குஞ்சுகளின் குதுகலம் பார்த்து

கூப்பாடுபோடும் தவளையின் சத்தம்
கூச்சமில்லாமல் நனையும் கொத்தான பூவும்
மனதினில் ஆடும் மயில்தோகை விறித்து
மனம் சஞ்சாரமிடுமே மத்தாப்ப பூ பூத்து..

Yasir said...

”காத்தடிக்குது பெசலடிக்குது
கன்னிமரம் (?) வந்து கண்ணுல குத்துது
தொறங்கமா தோழி”
என்று எங்கள் உம்மா எங்களை மழைகாலத்தில் பயமுறுத்தி தூங்க வைக்க பாடும் பாடல் நினைவுக்கு வந்து போகிறது சகோ.நெய்னாவின் ஆக்கத்தை படித்தபிறகு…அவ்வப்போது இப்படிபட்ட கட்டுரைகளை
எழுதி எங்கள் மனங்களில் உள்ள ஒட்டடைகளை அடித்து குஷிப்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

Yasir said...

இந்த பாட்டை பேய்கள் மழைகாலத்தில் பாடிக்கொண்டு வந்து கதவை தட்டுமாம்

Shameed said...

மழை நேரத்தில் மழையாய் கொட்டுகின்றது MSM ன் அருவி.

எந்த பேனாவில் மன்னிக்கவும் எந்த கி போர்ட்டில் இது போன்ற வார்த்தைகளை வடிக்கின்றீர்கள்

எங்களுக்கும் கொஞ்சம் கட்ருக்கொடுங்கள்

Meerashah Rafia said...

எனக்கு நினைவு தெரிஞ்சு, என் வாழ்நாளில் மழையில் நினையா வருடம் இந்த வருடமாகத்தான் இருக்கும் என்று நினைகின்றேன்.. காரணம் இங்கு ஜித்தா காக்கி பில்டிங்கில் மழை வராது மாறாக தரையில் மாதம் இரு முறை சரியான வடிகால் இல்லாமல் தண்ணீரும், கழிவு நீரும்தான் வழிந்தோடும்.

வாட்டத்துடன்
MSM/மூ.சா.மூ. மீரஷாஹ் ரபி அஹ்மத்

Unknown said...

அபுல் ஹஸன் காக்கா,தமிழகம்,புதுவை நோக்கி “ஜல்”* புயல் நகர்ந்து வரும் இந்த நேரத்தில் அதிரைப்பட்டினம் மழைக்காலம் பற்றி மிகத்துல்லியமாக கவிதைப் பதிவு!

இந்த மழை,புயல் காலத்தில் வானிலை ஆராய்ச்சி துறை திரு.ரமணன் அவர்கள் தொலைக்காட்சியில் தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்து பேட்டியளிப்பதும் அழகு!

மழைக்காலம் காலம்/கவிதை பதிவில் இந்த நகைச்சுவை நல்லாயிருக்குமென்று நினைக்கிறேன்.

ஒன்பது அல்லது பத்து வருடம் இன்னும் கூடுதல் வருடங்களாகக்கூட இருக்கலாம்.
அதிரைப்பட்டினதில் மழை இல்லை; தண்ணீர் தட்டுப்பாடு. எல்லா குளங்களும் வரண்டு போய் இருந்தது.
எனவே அதிரைபைத்துல்மால் செக்கடிக்குளத்தில் 'மழைத்தொழுகை'யை ஏற்பாடு செய்திருந்தது.
கடும் கூட்டம். ஒரு பக்கம் பாவமன்னிப்பு துஆக்கள்,திக்ர் மஜ்லிஸ்,இரண்டு ரக்அத்கள் தொழுகை மறுப்பக்கம் மூன்று பெரிய சட்டியில் செக்கடிக்குளத்தில் முஹைதீன் பள்ளிப்பக்கமாக பிரியானி நார்ஸா தயாரிக்கொண்டிருந்தது.

அப்போது ஒரு குளிர்காற்று மழைக்கான அறிகுறி...அல்லாஹ் நமது பிரார்த்தனையை எல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்ற மகிழ்ச்சி....இந்நிலையில் ஒரு மூதாட்டி என்னிடம் வந்து "தம்பீ! எப்போ தொழுகை முடியும்...?
"இப்ப முடிஜ்ஜிடும் அர மணி நேரத்துல..."
"அல்லாதான் காப்பாத்தனும் பிரியானி அடுப்புல இருக்கு, மழ வந்தா அடுப்பு அமந்துடும்; மழ வரக்கூடாது" என்றார்.

எனக்கும் எனது நன்பர்களுக்கும் ஒரே சிரிப்பு!

*வங்ககடலில் உருவாகி உள்ள புயலுக்கு “ஜல்” என்று இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. “ஜல்” என்றால் இந்தியில் தண்ணீர் என்று பொருள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"ஜல்" என்ற புயல் காற்றே ஜில்லென்ற சாரலை தருவாயா?

சூடான பக்கோடாவை சுணங்காமல் சுட்டுத்தருவாயா?

க்ர‌வுனுக்கு (த‌ஸ்த‌கீர்) வ‌ந்து க்யூவில் நின்று ப‌கிர்வாயா?

நன்கு காரம் சேர்த்து எங்கள் மனதில் ஈரம் சேர்ப்பாயா?

தொலைந்து போன நினைவுகளை தேடித்தருவாயா?

முதிர்ந்து போன ஆசைகளை முளைக்கச்செய்வாயா?

கருகிப்போன மனித நேயத்தை மலரச்செய்வாயா?

காணாம‌ல்போன நற்பண்புகளை மீட்டுத்த‌ருவாயா?

சூடான கவிதைகள் சுணங்காமல் உனக்காக.

இங்கு வ‌ந்து ப‌ற்ப‌ல‌ க‌ருத்திட்டு ஊக்க‌ம‌ளித்த‌ அனைத்து அன்ப‌ர்க‌ளுக்கும், ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ளும், இறைப்பிரார்த்த‌னையும் சேர‌ட்டுமாக‌.

ச‌கோ. ஜாஹிர் மு.செ.மு வுக்கும் எம்.எஸ்.எம். ந‌க‌ருக்கும் தொட‌ர்பிருக்கிற‌தா? என்று வின‌வியிருந்தார். ஆம் ச‌கோத‌ர‌ரே தொட‌ர்பிருக்கிற‌து. என் தாய் வ‌ழி பாட்ட‌னார் மு.செ.மு. அபுல்ஹ‌ச‌ன் ஹாஜியார் அவ‌ர்க‌ள் தான் அத‌ன் உரிமையாள‌ராக‌ இருந்தார்க‌ள். கால‌ப்போக்கில் எம்.எஸ்.எம். ந‌க‌ரென்று பெய‌ரிட்டு அத‌னை ம‌னைக‌ளாக்கி சிறுக‌,சிறுக‌ விற்று குடும்ப‌த்தேவைக‌ள் நிறைவேறின‌. மு.செ.மு. அபுல்ஹ‌ச‌ன் (அப்பா) அவ‌ர்க‌ள் பெரிய‌ பாட்சா ம‌ரைக்காய‌ரின் மூத்த‌ ச‌கோத‌ர‌ர் ஆவார்க‌ள். அல்லாஹ் அவ‌ர்க‌ளின் ஆஹிர‌ ந‌ற்ப‌த‌விக்காக‌ நீங்க‌ள் எல்லோரும் து'ஆச்செய்யும் ப‌டி அன்புட‌ன் கேட்டுக்கொள்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் ம‌ற்றுமொரு ஆக்க‌த்துட‌ன் ந‌ம் ச‌ந்திப்பு தொட‌ர‌ட்டும்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

ச‌வுதியிலிருந்து.

அலாவுதீன்.S. said...

சகோ. மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.(அல்குர்ஆன்: 2:164)

நல்லதொரு மழை கவிதையில் அனைவரையும் நனைய வைத்ததற்கு வாழத்துக்கள் சகோதரரே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.