Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இவர்களும் அதிரை நிருபர்களே 110

அதிரைநிருபர் | February 23, 2011 | , ,

அதிரை அஹ்மது காக்கா:
தமிழுக்கு தாதா...
இங்கிலீஸுக்கு துரை!
தமிழில்...
தன்னிகரற்ற
தனிக்காட்டு ராஜா!
இலக்கணம் உடுத்திய
இதயத்தில் இளைஞர்!
மரபுடைத்தோ
மரபை உடைத்தோ
இவர்கள்மேல் என்றும்
எமக்குப் பிரியம்!

ஆசான் ஜமீல் காக்கா:
புதையல் தேடி
ஜமீனைத் தோண்டு - அறிவு
பொக்கிஷம் வேண்டி
ஜமீல் காக்காவைத் தூண்டு!
கற்பித்தலும் கற்றலும்
காக்காவின் கண்கள்!
தமிழ்...
தன்னை
அலங்கரித்துக் கொள்கிறது-
அதி-அழகு ஆசானின்
ஆணைக்குட்படும்போதெல்லாம்!

சகோ. ஷாஃபி:
வலைப்பூவின்
தலைப்புக்கு
முழக்கம் தந்தவர்.
தர்க்கங்களின்போது
தகிக்கும் தமிழ்...
வாழ்வியல் வசனங்களில்
வருடும்...
இவர்கள்
வார்த்தெடுக்கும் மொழி!

என் ஜாகிர்:
இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்...
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!

சகோ. ஹாலித்:
பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!

அலாவுதீன்:
அல்லாஹ்வின் மார்க்கத்தை
அழகாய் எத்தி வைப்பான்,
கடனின்றி வாழ
கச்சித புத்தி சொல்வான்!
நல்லொழுக்க வாழ்க்கையை
தமக்குள் சாதித்து
தரனிக்கும் போதிப்பவன்!

ஹமீது!
வழக்கு மொழிமூலம் அதிக
வாக்குகள் பெற்றவர்,
விஞ்ஞான கட்டுரைகூட
விளையாட்டாய் விளக்குவார்!
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!

அபு இபுறாஹீம்:
கணினிக் காட்டுக்குள்
கம்பீர சிங்கம் நீர்...
கூட்டுக் குழுமத்தின்
கொத்தான ஆணி வேர்...
வலைப்பூ உலகத்தில்
வனப்பான பூங்கா நீர்!
சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி!

கிரவுன் தஸ்தகீர்:
தமிழொரு மொழியெனில்
தாமதில் எழில்!
சொல் விளையாட்டில்
சங்ககாலச் சித்தர்!
கவிதைப் பிரியர் - உமை
கவி யாரும் பிரியார்!
இவர்
அழைத்தால் மட்டும்
கைகட்டி வாய் பொத்தி
எப்படி...
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்?!

எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:
மழை பெய்தால்
மண்மணக்கும்...
இவர்
எழுத்திலெல்லாம்
மனம் மயங்கும்!
நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!

சகோதரி அன்புடன் மலிக்கா:
தமிழ் மொழி தறித்து
தமிழ்நாட்டில் போரிட்டு
யுனிகோட் வள்ளல்
உமர்தம்பி காக்காவுக்கு
அங்கீகாரம் வென்றெடுத்த
எங்கூரு வேங்கை!
கவிதையை சுவாசித்து
கவிதையை உண்டு
கவிதையாய் வாழ்பவர்!

யாசிர்:
யாசிரின் பின்னூட்டம்
யாசிக்கவும் தயார்!
ஆக்கத்தைக் குறைத்து
ஊக்கத்தை பதிபவர்!
இவரின்
பின்னூட்டங்கள் தொகு...
பி ஹெச் டி பெறு!

அப்துர்ரஹ்மான்
கற்பனை செய்வதில்
விற்பன்னர் இவர்!
பூவோ பொண்ணோ
நதியோ நாற்றோ
இவர் கவிதைக்கு
உட்பட்டால்...
காலமெல்லாம் செழிப்பே!

ஹிதாயத்துல்லாஹ்:
உயிரூட்டப்பெற்ற
அறிவுக்களஞ்சியம் - இவர்
உரமேற்றப்பெற்ற
குறிஞ்சி பூதம்!
இவருக்கு
சின்ன கிரீடம் ஒன்று
செய்தணிவித்து...
குட்டி கிரவுன்
என்றே
கூப்பிட ஆசை!

அதிரை முஜீப்:
இவர் ஒரு டாட் காம்
ஆனால் நாட் காம் (calm)
குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!
சமூக அக்கறையில்
சுயநலமற்ற சீமான்!

ஷரபுதீன் நூஹு:
படித்த சமுதாயம்
இவருக்குப்
பிடித்த கனவாகும்...
கல்வி விழிப்புணர்வு
இவர்
வகுத்த வழியாகும்!

அதிரை மீரா:
மீரா வுக்கொரு
தீராக் கனவு
யாரா வது ஒரு
பேரா வது
ஊரா ளும்படி பயிலவேண்டும் என!
படித்தது பொறியியல்
படிப்பு மட்டுமே தம் பொறியில்!

அப்துல் மாலிக்:
சமூக
அக்கறைத் தூரிகையால்
அழகு தமிழ் தொட்டு
இவர்
தீட்டியதெல்லாம்
சீர்திருத்த சிந்தனைகள்!

அபு ஆதில்:
இவர்
ஆக்கமெல்லாம் நல்
நோக்கம் நிரம்பிய நீர்
தேக்கம்போல!

சின்னக் காக்கா:
சின்னக் காக்கா
ஒரு
பெரிய தம்பி,
பருவத்தில் தம்பி...
சமூக
பார்வையில் காக்கா!

மீராஷாஹ் (எம் எஸ் எம்):
ஏறத்தாழ எமக்கு
செல்லப்பிள்ளை எனினும்
எடுத்துரைக்கும் திறமையிலே
யாருக்கும்
சலைக்காப் பிள்ளை!

அபு ஈஸா:
திட்டமிடும் நேர்த்தியை
இவரிடம்
பிச்சையாய்க் கேட்கலாம்!

அதிரை ஷஃபாத்:
செக்கடிக் குளமும்
செல்ல அலைகளும்
முக்குளித் தாராவும்
முல்லை மலரும்
என
மயக்கியவர்
தொடர
தற்போது தயக்கம் ஏனோ?

தாஜுதீன்:
யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!

அப்புறம்...நான்:
கனவை விதைத்தேன்
கவிதை என்றனர்...
புத்திமதி சொன்னேன்
கவிக்காக்கா என்றனர்...
ஊர் நினைவில் உழன்றேன்
அதிரைக் கவி என்றனர்...
தற்போது...
அஞ்சலில் சேர்க்க மறந்த
என்
அத்தனைக் கடிதங்களுக்கும்
முகவரி தந்து
முத்திரை யிட்டனர்...
அதிரை நிருபரின்
ஆஸ்தான கவி என்று!

ஊக்கத்தை
ஊட்டி வளர்ப்பதில்
போட்டியின்றி வென்ற
ராஃபியா காக்கா (எம் எஸ் எம்):
ஜஹபர் சாதிக்
அபு இஸ்மாயில்
அஹமது மன்சூர்
அப்துல் ரஷீத் ரஹ்மானி
அதிரை அபூ
சகோதரிகள்
ஃபாத்திமா ஜொஹரா
கதீஜா

இன்னும்...
இர்ஷாத் எனும்
இளங்காற்றும்...
கடைசியில் வந்தாலும்
கலக்கும் ரியாஸ்...
அதிரை ஆலிம் எனும்
அறுமைத் தோழர்...
தற்போது
ஜகா வாங்கி நிற்கும்
ஜலீல் மற்றும் ஜலால்

வலைப்பூ வந்து
வாசித்து
கருத்தைக் கருவேற்ற
வாசக வட்டமும்
அதை
பின்னூட்டமெனெ
பின்னியெடுத்த பங்களிப்பாளர்களும்
இழு என இழுத்த
இழுப்புக்கெல்லாம்
அழுதுவடியாமல்
எழுந்து நிற்கும்
அதிரை நிருபர் குழுவும்
என-
அத்தனை பேரும்
அதிரை நிருபரே!


-- சபீர்
Sabeer.abuShahruk

110 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்காவுடன் சேர்ந்து நானும் யோசித்தேன்... ஆனால் அவர்களோ மனம் வென்றவர்களை மன்றத்தில் கூட்டி மகுடம் சூட்டியிருக்கிறார்கள் !

கவிக்கு - காக்கா நீங்களேதான் ! என்றும் அதிரைநிருபரின் ஆஸ்தான கவியாகிய நீங்கள்தான் அமைதியின் ஆளுமைக் கவியே !

அதிரை முஜீப் said...

ஆஹா அற்புதம்! அதிரை நிருபரில் அத்துணை நிருபர்களா!!

அத்தனை அறிவாளிகளையும் அழகாய் வார்த்தெடுக்க,
அரசவைக்கவிக்கு எப்படி வந்தது(?)அப்படி ஓரு யோசனை!.

அரசவைக்கவி என்றால் அரண்மனையோடு மட்டும் இவர் இருந்திருப்பார்.
ஆஸ்தானக் கவியாதலால், அதிரை நிருபரில் அலப்பறை செய்கின்றார்!.

மனம் வேண்டுமையா, மற்றவரை பாராட்ட!
ஒருவரை பாராட்டவே உயர்ந்த மனம் வேண்டுமென்றால், இங்கே அத்துனை பேரையும் அழகாய் பாராட்ட இவர் மனதில்,
எத்துனை இடம் வேண்டும்!

ஆகட்டும்! ஆகட்டும்!

கடைசியில் கோபக்காரனாக்கி விட்டீர் கோமானே என்னை!.
கோவைப்பழம் சிவந்தால், அது கோவைப்பழத்தின் இயற்கை!
சீரழியும் சமுதாயத்தைகாண்டு சினம் கொள்ளாமல் இருக்க,
முடியாதையா! முடியாது. என்னால் ஒருக்காலும் முடியாது!.

நாட்டை ஆண்ட சமுதாயம், ஆண்டவனின் அருள்பெற்ற சமுதாயம்!!
அடகுக்கடையில் கிடக்குது!
வீழ்ந்து கிடக்குது! கோழையாய் வீழ்ந்தே கிடக்குது!!

ஆண்டிப் பண்டாரமெல்லாம், அடுத்தடுத்து ஆளுகின்றான்!.
நாளுக்கும் இரண்டுக்கும் நாக்கை தொங்கப்போட்டு அலைந்தால்,
இனி ஆவாது நம்மாலே ஆட்சிக்கட்டிலில் அமர!.

மீட்டெடுக்கும் நாள் தூரமில்லை! நாற்றமெடுத்த அரசியலில்!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

யானை வரும் என்று சொன்னீர்கள் ஆனால் வந்ததோ டைனசர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் அருமை சகோதரரே,

நிதானம், சமாதானம், ஒற்றுமை,அன்பு, பாசம், ஊக்கம், உற்சாகம், வீரம் எந்த கடையிலும் விற்கவில்லை, நம்மிடமே உள்ளது என்று வாழ்வில் நாம் கற்றதை உணரவைத்து சமூக நோக்கத்தை அடிக்கடி ஞாபகப்படுத்திவரும் அதிரை கவியே...

இது தான் மனதார பாராட்டுவது என்பதா...

பாராட்டுவதையும் தெளிவாக கற்றுத்தந்துவிட்டீர்கள்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!//

ஆஹா.. என்ன கற்பனை சபீர் காக்கா, எதிர்ப்பார்க்கவே இல்லை இப்படியெல்லாம் எழுதுவீர்கள் என்று.

ஹமீது காக்காவும் தன் முதல் பின்னூட்டத்தில் நிரூபித்துவிட்டார்கள் "சுட்டி வள்ளுவன்" என்று

:) :) :)

abufahadhnaan said...

இருங்க இருங்க . எங்க நைனா[ஹிதாயத்துல்லாஹ்:]
வந்திறட்டும். அப்புறம் பாரு எப்படி
கூடுதுன்னு கருத்துரை கூட்டம்!

Yasir said...

ஒவ்வொரு பழங்களையாக சுவைத்து கொண்டு இருந்த எங்களுக்கு ..இப்படி எல்லாகனிகளையும் ஒரே தட்டில் கொட்டி நல்லா சாப்பிடு என்றது போல் உள்ளது நீங்கள் எல்லாரையும் அப்படியே செதுக்கி தந்து இருக்கும்..இந்த ஃபுருட்ஸ் மிக்ஸர்...எப்படி இப்படியெல்லாம் காக்கா....அல்லாஹ் உங்களுக்கு ஆயுளை நீளமாக்கி தரணும்...எழுதுவதற்க்கு வார்த்தைகள் பற்றாக்குறை எல்லாத்தையும் நீங்கள் இங்கே உபோயிகித்து விட்டதால்

Yasir said...

//கனவை விதைத்தேன்
கவிதை என்றனர்.../// இவை எல்லாவற்றையும் விதைத்து எங்கள் உள்ளங்களையெல்லாம் அறுவடை செய்து விட்டீர்கள்...

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
அன்பு உறவுகளுக்கு

அப்துர் ரஹ்மான் என்னும் பெயரில் சில பின்னூட்டங்கள் வருகிறது. அதில் வரும் கருத்துக்கள் வெளிப்படையாக 'தீது' கருத்துக்கள் இல்லையென்ற போதும் அதில் அரசியல் கட்டமைப்பு வார்த்தைகள் உண்டு. எடுதுக்காட்டாக,
//abdurrahman சொன்னது…

இருங்க இருங்க . எங்க நைனா[ஹிதாயத்துல்லாஹ்:]
வந்திறட்டும். அப்புறம் பாரு எப்படி
கூடுதுன்னு கருத்துரை கூட்டம்!// இதனை சொல்ல முடியும்!

ஏனெனில், அந்த அப்துர் ரஹ்மானின் http://www.blogger.com/profile/08766387283982272510 என்னும் பிளாகர் ஐடியில் சென்று பார்த்தால், அதிரை போஸ்ட்டை சேர்த்திருக்கிறார். அப்படி அதிரை போஸ்ட்டை சேர்த்தபின் ஹிதயத்துல்லாஹ் என்று 'தனித்து'காட்டுவதன் மூலம் மூத்தோர் அவையில் 'கீறல்' போடலாம் என்ற நினைப்பு?

அதிரை போஸ்டின் பிளாகர் ஐடி இது மட்டுமே http://www.blogger.com/profile/09009169423779981934
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________________________

அப்துர் ரஹ்மானுக்கு,
உங்களையும் என்னை படைத்த அல்லாஹ் பல ஆற்றல்களை தந்திருக்கிறான். அந்த ஆற்றல்களை நல்வழியில் பயன்படுத்துங்கள்.

தீயை கொழுத்தி வெளிச்சம் ஏற்றுங்கள்;
உங்களை நீங்களே தீயிட்டு கொள்ளாதீர்கள்.! என்று மட்டும் சொல்லிவைக்கிறேன்.

அன்புடன்
ஹிதாயத்துல்லாஹ்.ஏ.ஆர்

Unknown said...

கவிக் காக்காவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு முத்து.
மொத்தமாக சொன்னால் அழகான முத்து மாலை.பானியும் அழகோ அழகு!
இன்ஷாஅல்லாஹ் மீண்டும் வருகிறேன்.

sabeer.abushahruk said...

அன்பு முஜீப்:

//கடைசியில் கோபக்காரனாக்கி விட்டீர்//
கோபக்காரன் என்று சொல்லவில்லை...

//குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!// குறை சொல்லமுடியாத கோபம் எனில் அந்த கோபத்தில் நானும் கூட்டு என்றல்லவா அர்த்தம்?

மேகமும் மேகமும் முட்டிக்கொள்ளும் கோபம்தானே மழை? மின்சாரத்தின் கோபம்தானே மின் விளக்கு? உங்கள் ஸ்டைலில் சொல்வதென்றால், மக்களின் கோபம்தானே புரட்சி? மதம் கோபம்கொண்டால் மறுமலர்ச்சி? எம் ஜி ஆரின் கோபம்தானே அ இ அ தி மு க?

எனவே நான் சொல்ல வந்தது:
முஜீபின் கோபத்தில் இணை
முறையாக முன்னேற முனை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : பாசக்காரங்களுக்கு பந்தி போட்டுட்டீங்க ! ஒவ்வொருத்தார அழைக்கனுமா என்னா !? பந்திக்கு வந்தே ஆகனும்னு அவர்களுக்கும் தெரியாதா என்ன !?

sabeer.abushahruk said...

தம்பி அதிரை போஸ்ட்:
...எனில், இந்த சகோ.அப்துர்ரஹ்மான் நம்ம அந்த கவி இளவல் அப்துர்ரஹ்மான் (Harmys) இல்லையா? (நா அப்பிடியே ஷாக்காயிட்டேன் அவ்வ்வ்வ்)

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தகவலுக்காக...

அன்பு சகோதரர் கிரவுன், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு கருத்திடம் முடியவில்லை என்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்கள்.

அவர்களின் உடல் நலம் தேறி மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் புத்துணர்வு பெற எல்லோரும் துஆ செய்வோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைநிருபரின் எழிலே (தம்பி கிரவ்ன்): நானும் கண்டேன் உன் மின்அஞ்சலை.. துஆச் செய்கிறோம் நலம் வெண்டியும் சீக்கிரம் இங்கே வர வேண்டியும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shameed சொன்னது…
யானை வரும் என்று சொன்னீர்கள் ஆனால் வந்ததோ டைனசர் ///

அது கதை சொல்ல... இவைகள் இங்கே எல்லாமே நிஜமென்பதால்.. டைனசரை தூங்கவைக்க மட்டும் அனுப்பிவைப்போம் !

அதிரை முஜீப் said...

அன்புச் சகோதரர் கிரவுன் அவர்கள் உடல் நலம் தேறி, நலமுடன் வாழ அல்லாஹ்விடம் துவா செய்கின்றேன்.

sabeer.abushahruk said...

அன்புச் சகோதரர் கிரவுன் அவர்கள் உடல் நலம் தேறி, நலமுடன் வாழ அல்லாஹ்விடம் துவா செய்கின்றேன்.
(and I wish nothing serious)

Unknown said...

சலாம் கவிகாக்கா ..........
அதிரை மணத்தில் அல்ல அதிரைவனத்தில்
பூச்சூடும் பொன்நேரம்............

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும்
ஊக்கத்தை ஊட்டி வளர்ப்பதில்
கவிக் காக்காவின் பாணியே தனிதான் போங்க.

நாம் வெளிப்படுத்தும் ஆற்றலும்
கையாளும் விதமும் ஆளுமையுமே
தீர்மானிக்கிறது உயிரின் சிறப்பை
அது போல் நம் கவிக்காகவும்
கவிதையின் சிறப்பை வகுப்பதற்கு.

கடலில் ஆயிரம்மயிரம் சிப்பிகள்
ஆனால்சிலவற்றில் மட்டுமே முத்துக்கள்
உதிக்கின்றன. சிப்பிக்கு முத்தாலே சிறப்பு
அதிரை நிருபருக்கு கவிக் காக்காவால் சிறப்பு.

அதுபோல் நம்முள் இருக்கும் ஆற்றலையும் வெளிக்கொணர்வோம்.
கவிக்காக்கவின் சிஷ்யர்கள் என்று சொல்ல.

Unknown said...

நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!
------------------------------------------
super kaaka

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஒருவரின் குணத்தை, நடவடிக்கையை கணிப்பது என்பது கடினமான காரியம்.

அதிரைநிருபரில் கைகோர்த்த அனைவரையும் நன்றாக கணித்து அவர்களின் குணநலண்களை வார்த்தை கவி என்ற முத்துக்களால் வாழ்த்துப்பா இயற்றுவது என்பது அதை விட கடினம்.

இவை அனைத்தையும் மிக இலகுவாக செய்திருக்கிறாய். ஆஹா! அருமை! வல்ல அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள கூர்மையான அறிவால் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டாய்.

பாராட்ட வேண்டும் என்று மனது சொன்னாலும், சிலபேர் கூச்சத்தால் மனதில் உள்ளதை வாயால் வெளிப்படுத்த தெரியாமல் தவிப்பார்கள். மற்றவர்களை பாராட்டவும் தாராள மனம் வேண்டும்.

கூர்மையான அறிவையும், பாராட்டும் தாராள மனப்பான்மையையும் உனக்கு வழங்கிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அல்ஹம்துலில்லாஹ்!

உனது அறிவு இந்த சமுதாயத்திற்கு பல வழிகளில் பயன்படட்டும். அதிரை கவி சபீர், அதிரை அறிவு கவி சபீர், அ.நி. ஆஸ்தான கவி சபீர் என்பது உனக்கு பொருத்தமான கிரீடமே. உன் அறிவுக்கு, நல்ல மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்!.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது, (முஹம்மதே) அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 110 : 1,2,3)

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்புச் சகோதரர் கிரவுன் அவர்கள் உடல் நலம் தேறி, நலமுடன் வாழ அல்லாஹ்விடம் துவா செய்கின்றேன்.

உடல் நலம் தேறி வந்து விட்டுப்போன பின்னுட்டங்களை ஆக்கங்களாய் தர வேண்டும்

Riyaz Ahamed said...

சலாம்
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!
வைட்டமின் அவசிய தேவைதான்.இலவசமா ஜாகிர் தர ரெடி, வாங்க நீங்க ரெடியா?
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!
குரோம சோமிலுள்ள முக்கிய கேரெக்டரை பிரித்தெடுத்த பெரியண்ணனுக்கு ரொம்ப பெரியமனது - பாராட்டுகள்.
வலை தளத்தின் அணைத்து நண்பர்களையும் அறிமுகம் செய்த பெரியண்ணனுக்கு ஒரு ...

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

படிபினில் மிக முக்கியமானது மனிதர்களை பற்றி அறிந்து கொள்வது

நீங்கள் அதிரை நிருபரில் வந்து செல்லும் அனைவரையும் இன்ச் by இன்ச்சாக அளந்து ஒவ்வொருவருக்கும் ஒரு கவிதை படைத்து திக்கு முக்காட வைத்து விட்டது கொஞ்சம் அவகாசம் தாருங்கள் பின்னுட்டம் இடுவதற்கு

அப்துல்மாலிக் said...

சூரியனுக்கே டார்ச் லைட்டு மாதிரி அவரவர்களின் தனித்திறமையை சிறு வரிக்கவிதையின் வாயிலாக அவர்களின் சிறப்புகளை எடுத்துக்காட்டிய விதம் அருமை. எப்படி சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் மற்றும் துஆ என்றும் உண்டு.

Yasir said...

அன்புச் சகோதரர் கிரவுன் அவர்கள் உடல் நலம் தேறி, நலமுடன் வாழ அல்லாஹ்விடம் துவா செய்கின்றேன்

Yasir said...

காக்கா மீரா வைப்பற்றி நீங்கள் எழுதி இருக்கும் பாரா ,
இருக்குது ஜோரா

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நாம் இங்கு முகவரி கொடுத்துவிட்டோம் ஆனால் இன்னும் முகம் காட்டவில்லை.

அவரவர்களுக்கு உரிய கவிதைக்கு
அருகில் அவரவர் போட்டோவை
பதிந்தால் முகம் கண்டபின்
பின்னுட்டம் இன்னும் தரம் கூடும்
என்பது என் எண்ணம்
மேலும் போலிகளின் சித்து
வேலைகளை களைந்து எறியலாம்

நிர்வாகிகள் ஆலோசிக்கவும்

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

எங்களுக்கு இன்னுமொரு கவிக்காகா அல்லது கவித்தம்பி வேண்டும்
அவர் உங்களைப்பற்றி
கவி பாடவேண்டும்

யாரவது கவிக்காகாவிற்க்கு ஒரு கவி போடுங்கப்பா

Meerashah Rafia said...

ஆஹா. காக்கா.. இது என்ன(!!), நேர்முகத்தேர்வுக்கான பயோடேட்டாவில் தனித்திறமை(EXTRA CURRICULAR ACTIVITIES) என்ற தலைப்பின்கீழ் பொதுவாக எழுதக்கூடியதை வெகுவாக கவரக்கூடிய வகையில் ஒவ்வொருவுவருக்கும் எழுதிக்கொடுத்தார்போல் இருக்கிறதே. பலருக்கு நம் திறமை நமக்கே தெரியாதபட்சத்தில், உங்கள் இந்த ஊக்கத்தின் தாக்கம் பல ஆக்கம் காண வழிவகுக்கும். இன்ஷா அல்லாஹ்.

MSM(MR)

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//தாஜுதீன்:
யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!//



அஸ்ஸலாமு அழைக்கும்

ஜப்பான் மீது வீசப்பட்டது
இரண்டு அணு குண்டு
தாஜுதீன் மீது
வீசப்பட்டது
பல குண்டு

இவர் குண்டுகளுக்கு
எல்லாம் குண்டு
வைத்து தகர்த்தவர்.

இவரின் முடிவுகள்
அனைத்தும் "மனம்"
திறந்துதான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shameed சொன்னது…
யாரவது கவிக்காகாவிற்க்கு ஒரு கவி போடுங்கப்பா ///

செய்திட்டா போச்சு இதே பின்னூட்டத்தில்... மீட்டெடுத்து வருகிறேனே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shameed சொன்னது…
நாம் இங்கு முகவரி கொடுத்துவிட்டோம் ஆனால் இன்னும் முகம் காட்டவில்லை.

அவரவர்களுக்கு உரிய கவிதைக்கு அருகில் அவரவர் போட்டோவை பதிந்தால் முகம் கண்டபின் பின்னுட்டம் இன்னும் தரம் கூடும் என்பது என் எண்ணம் மேலும் போலிகளின் சித்து வேலைகளை களைந்து எறியலாம்

நிர்வாகிகள் ஆலோசிக்கவும் ///

why not ! தனி மின்னாடலில் பேசிவிட்டு அவரவர் கருத்தை பெற்றதும் அகத்தின் அழகை முகங்களாக கண்டிட முயற்சிப்போமே இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

//வலை தளத்தின் அணைத்து நண்பர்களையும் அறிமுகம் செய்த பெரியண்ணனுக்கு ஒரு ...//

ஹமீது/ஜாகிர் கவனிக்க: இதைக்கூட என்னானு முழுசா சொல்லாம போய்ட்டான் பாத்தியலா. ஒருவேளை "கேட்டு" சொல்வானோ!!

அப்புறம் யாசிர்: "டண்டணக்கா ஆ டண்டணக்கா" போட மறந்திட்டியலோ???

Yasir said...

//அப்புறம் யாசிர்: "டண்டணக்கா ஆ டண்டணக்கா" போட மறந்திட்டியலோ???// சாவன்னா காக்கா போடுவாக-ண்டு இருந்துட்டேன்...

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//ஹமீது/ஜாகிர் கவனிக்க: இதைக்கூட என்னானு முழுசா சொல்லாம போய்ட்டான் பாத்தியலா. ஒருவேளை "கேட்டு" சொல்வானோ!!
//

அஸ்ஸலாமு அழைக்கும்

அங்கு கேள்வி கேட்க முடியாது.
ஒருவேளை அங்கு சொல்வதை கேட்டுவிட்டு
இங்கு சொல்வார்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

யாருப்பா அது
ரியாஸ் காகவைபதின்ன
உண்மையையெல்லாம்
என்பேரில் பின்னுட்டம்
போடுவது!!!!

Yasir said...

Shameed சொன்னது…
யாரவது கவிக்காகாவிற்க்கு ஒரு கவி போடுங்கப்பா /// நம்ம சகோ.கிரவுனு மட்டும் உடல் நலமுடன் இருந்து இருந்தா..இன்னேரம் கவிக்காக்காவிற்க்கு கீரிடம் சூட்டி மகிழ்ந்திருப்பார்....நானும் காலையில் இருந்து கவிக்காக்காவிற்கு ஒரு கவிதை எழ முயற்ச்சி செய்கிறேன்....உஹீம்ம்ம்ம்...வரமாட்டுகுதே...எனி ஹெல்ப் பிலிஸ்...

Shameed said...

Yasir சொன்னது…
//அப்புறம் யாசிர்: "டண்டணக்கா ஆ டண்டணக்கா" போட மறந்திட்டியலோ???// சாவன்னா காக்கா போடுவாக-ண்டு இருந்துட்டேன்...//




நான் குண்டு போடுவதில் கவனமா இருந்துட்டேன்.

மன்னிச்சு போடுங்கோ

ஆ"டண்டணக்கா ஆ டண்டணக்கா" "
ஆ டண்டணக்கா ஆ டண்டணக்கா"

"ணக்கா ணக்க"
"ணக்கா ணக்க"

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

//// அன்பு சகோதரர் கிரவுன், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு கருத்திடம் முடியவில்லை என்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் உடல் நலம் தேறி மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் புத்துணர்வு பெற எல்லோரும் துஆ செய்வோம். ///

இன்ஷாஅல்லாஹ்.

சகோ. தஸ்தகீர் நலம் பெற வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

அபு ஆதில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சிதறிய முத்துக்களையெல்லாம் மாலையாய் தொடுத்த அதிரை நிருபரின் ஆஸ்தான கவி(குயிலை)யை வாழ்த்தவும்,அழகு பார்க்கும் அதிரை நிருபரை பாராட்டவும் வார்த்தைகள் வசப்படவில்லை.


//அஞ்சலில் சேர்க்க மறந்த
என்
அத்தனைக் கடிதங்களுக்கும்
முகவரி தந்து
முத்திரை யிட்டனர்...
அதிரை நிருபரின்
ஆஸ்தான கவி என்று!//
எங்களுக்கும் முகவரி தந்து முத்திரையிட்டிருப்பது என்னவோ நீங்கள் தான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்காவுக்கு சில வரிகள் (to Sஹமீத் காக்கா for comments)
----------------------------------------------

இவ்..
வலைப்பூவை
வசந்த மாளிகை யாக்கினீங்க !

வரவேற்றிட
வாசலுக்கு வந்திடு வீங்க !

உங்களிடம்
கற்றதெல்லாம் கருத்தாய் இட்டோம் !

நீங்கள்தானே
அயர்ந்தவர்களை அசைத்து விட்டீங்க !

கல்விக்கு
விழிபுணர்வு மாநாடு கண்டோம் !

அங்கிருந்தோரின்
கனவு மெய்ப்பட கவி தந்தீர்கள் !

அன்றாட நிகழ்வுகளை
அப்படியே ரசித்திட வழிகாட்டினீங்க !

அடிக்கவரும் கையை
அனைத்திடும் அரிச்சுவடி காட்டினீங்க !

சுட்டிடும் வரிகளை
சூச்சுமமாக சுருட்டிட சொன்னீங்க !

ஆதலால்...
நீங்கள் தானே
என்றும் எங்களின்
கவிக் காக்கா !
ஆஸ்தான கவி !

இப்படிக்கு
அதிரைநிருபர் வாசகன்

Yasir said...

100 / 100 உண்மையை உரக்க சொல்லி இருக்கீறிர்கள் அபு இபுராஹிம் காக்கா....குறைந்த நேரத்தில் இவ்வளவு அழகாகவா...சூப்பர் காக்கா

Shameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கற்ற கல்வியை
பலரும் கற்றிட
பாடு பட்டீர்கள்


பற்பல விசயங்களிலும்
எம்மை பக்குவபடுத்தி
பதமாய் கவி தந்தீர்

எங்களை பற்றி
நாங்களே அறியாத
பல விசயங்களை
பக்குவமாய்
எடுத்துரைதீர்

எடுத்துரைத்த
விசயங்களை
பக்குவகாக
நாங்கள் எடுத்து
செல்ல ஏணியாய்
இருக்கின்றது
நம் அதிரை நிருபர்


இப்படிக்கு
அதிரைநிருபர் வாசகன்

sabeer.abushahruk said...

//யாருப்பா அது
ரியாஸ் காகவைபதின்ன
உண்மையையெல்லாம்
என்பேரில் பின்னுட்டம்
போடுவது!!!

...எஸ்கேப்பா?? இந்த ஆட்டத்துக்கு நான் வரல!!!

//கிரவுன் இருந்தா..இன்னேரம் கவிக்காக்காவிற்க்கு கீரிடம் சூட்டி மகிழ்ந்திருப்பார்.//

முன்பே தெரிந்திருந்தால் இந்த பதிவையே தாமதிக்கச் சொல்லி அ.நி.யைக் கேட்டிருப்பேன். தற்போது அவர் குணமானாலே போதும் என்பது மட்டுமே து ஆ.

அபு இபுறாஹீம்: கவிப்புனைவும் தந்திருக்கும் விதமும் அழகு! ஆயினும் இத்தனை அன்புக்கு நான் தகுதியானவன் தானா என்று தெரியவில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shameed சொன்னதில்.... ///

பெருமையே ! - உங்களையும் கவிதை எழுத வைத்தோமே !

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//பெருமையே ! - உங்களையும் கவிதை எழுத வைத்தோமே !//


அஸ்ஸலாமு அழைக்கும்


அது எப்படிங்கோ
உசுபேத்தி உசுபேத்தியோ
உள்ளே உள்ள
உள் விவகாரங்களை
வெளிக்கொண்டு வந்திர்ரீங்க !!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கவிப்புனைவும் தந்திருக்கும் விதமும் அழகு! ஆயினும் இத்தனை அன்புக்கு நான் தகுதியானவன் தானா என்று தெரியவில்லை. ///

தன்னடக்கமே உங்களுக்கு ! - நிற்க உண்மையச் சொல்வற்க்கு தொண்டைகுழி வரை வார்த்தையை வரவைத்துவிட்டு விழுங்குவதை விட போட்டுடைப்பதே மேல் - என்றும் முகஸ்துதிக்கு வேகத்தடை வைப்பதில் முன்னால் இருப்பவனும் நானே ஆதலால்.. நாங்கள் உள்ளத்தில் உள்ளதைச் சொன்னோம் காக்கா ஏற்றுக் கொள்ளுங்கள் !

//உள் விவகாரங்களை
வெளிக்கொண்டு வந்திர்ரீங்க !!!//

Sஹமீத் காக்கா: எல்லாமே உள் விவகாரமா ? மெய்யாலுமா ?!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

உசுபேத்தல் (நல்லவிசயங்களுக்கு)மன்னன் என்ற பட்டத்தை நம்ம அபு இப்ராஹிமுக்கு வழங்கி
50 வது அடியை நான் அடிக்கின்றேன்

abufahadhnaan said...

அதிரை போஸ்ட்டை சேர்த்தபின் ஹிதயத்துல்லாஹ் என்று 'தனித்து'காட்டுவதன் மூலம் மூத்தோர் அவையில் 'கீறல்' போடலாம் என்ற நினைப்பு?
இந்த நினைப்பு எல்லாம் எமக்கில்லை_abdurrahman

தீயை கொழுத்தி வெளிச்சம் ஏற்றுங்கள்;
உங்களை நீங்களே தீயிட்டு கொள்ளாதீர்கள்.! என்று மட்டும் சொல்லிவைக்கிறேன்.

இருங்க இருங்க . எங்க நைனா[ஹிதாயத்துல்லாஹ்:]
வந்திறட்டும். அப்புறம் பாரு எப்படி
கூடுதுன்னு கருத்துரை கூட்டம்!

அதிரை போஸ்ட் அவர்கள் என் கருத்துரையை தவறாக எண்ணிவிட்டார் நான் கூறியது கருத்துரை கூட்டம்.அரசியல் கூட்டம் அல்ல?என் வரியில் நீங்கள் கீறல் பட்டுஇருந்தால் மன்னிக்கவும்

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

எங்கே நம்ம சின்னக்காகா நலமா

பெரிய இடைவெளி விட்டதுபோல் உள்ளது

சீக்கிரம் வாங்க

Unknown said...

கவிக் காக்கா சொன்னார்கள்...

தம்பி அதிரை போஸ்ட்:
...எனில், இந்த சகோ.அப்துர்ரஹ்மான் நம்ம அந்த கவி இளவல் அப்துர்ரஹ்மான் (Harmys) இல்லையா?//

அன்புச் சகோதரர் (Harmyச்) அப்துர் ரஹ்மான் அவர்கள் இல்லை இது!

Unknown said...

தட்டிகொடுக்கவும்
தவறை சுட்டிக்காட்டவும்
வராவிட்டால் கானோமே என வினவவும்
நலம் பெற துஆவும் இங்குண்டு!

மூத்தோரையும் ஆசான்களை மதிக்கவும்
புதியவரை வரவேற்கவும்
வந்தவரை நேசிக்கவும்
இங்குண்டு நேசர்கள்

காக்கா,தம்பீ,மாமா,மச்சான்,சாச்சா என்று விளித்து
பாசமூட்டி
கருத்துரை தந்து
அறிவூட்டவும்

சுத்தமே சுகமென்று
நாளும் பொழுதும்
சுகாதாரம் பேன சொல்லும்
பட்டம் பெறா மருத்துவரும் உண்டு

கவியும் கலைஞரும் உண்டு
கல்வி கற்ற கோமானும்
அரசியல் சொல்லும் சீமானும் உண்டு
வரலாறை உடுத்தும் மானவனும் உண்டு

இங்கு யாரில்லை?
எல்லொரும் இருக்கிறார்கள்

அவரவ‌ர் கற்றதை
அமைதியின் ஆளுமையையாய் பதிகிறார்
அவர்களை நம் கவிக் காக்கா சொன்னார்கள்
'இவர்களும் அதிரை நிருபர்களே' என்று

Shameed said...

அதிரைpost சொன்னது…

//தட்டிகொடுக்கவும்
தவறை சுட்டிக்காட்டவும்
வராவிட்டால் கானோமே என வினவவும்
நலம் பெற துஆவும் இங்குண்டு!
//


அஸ்ஸலாமு அழைக்கும்

பின்னுட்டமா இது பின்னி எடுத்துடீங்க போங்க

Unknown said...

கலக்குங்கள் அதிரை நிருபர்களே.வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Sஹமீத் காக்கா : வரலாற்றில் ஓர் ஏடெடுத்து வரும் தம்பி சொன்னதும் பின்னூட்டக் கவி(யே) இவைகளுக்கு முன்னுட்டம் நீங்களும் கொடுத்தீர்கள் தானே...

அது சரி... அசத்தல் காக்கா எங்கே !

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//அது சரி... அசத்தல் காக்கா எங்கே ! //

அஸ்ஸலாமு அழைக்கும்
அசத்தல் காகா அசரும் ஆளல்ல
வேலை நிமித்தம்
வெளியோ சென்றிருப்பார்.

அது சரி எங்கே
தம்பி தாஜுதீன்

abufahadhnaan said...

sabeer.abushahruk சொன்னது…
தம்பி அதிரை போஸ்ட்:
...எனில், இந்த சகோ.அப்துர்ரஹ்மான் நம்ம அந்த கவி இளவல் அப்துர்ரஹ்மான் (Harmys) இல்லையா? (நா அப்பிடியே ஷாக்காயிட்டேன் அவ்வ்வ்வ்)

ஏன் நான் என்ன அதிக உயர் அழுத்தம் கொண்ட மின்சாரமா?

sabeer.abushahruk said...

சகோ. அப்துர்ரஹ்மான்:
ஷாக்காகிட்டேன் என்றுதானே சொன்னேன்; ஷாக்கடித்ததாக சொல்லவில்லையே தங்களை மின்சாரமோ என்று சந்தேகிக்க:-)

தன்னிலையில் சொன்னதை படர்க்கையாக அர்த்தம் கொள்வது தவரல்லவா?)

தவிர தாங்கள் உயர் அழுத்த மின்சாரமேயானாலும் நான் ஒரு சிறந்த இன்சுலேட்டர் சகோ., கன்டக்டர் அல்ல. அப்படியே மின் தூண்டல் ஏற்பட்டாலும் கூலாக எர்த்துக்கு கொண்டு செல்ல அ.நி.யில் ஒரு ஜமாத்தே இருக்கு சகோ :-)

ஏற்கனவே பரிச்சயமான அப்துர்ரஹ்மானோவென நினைத்தது உண்மைதான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா மற்றும் சகோ அப்துர்ரஹ்மான் : மின்வெட்டால் வெட்டுண்டு பாடு பட்டுண்ட அதிரைக்கு இப்படியான உயரழுத்து மின்சாரம் தேவைதான்... ஒவ்வொரு வீட்டிலும் வெளிச்சம் கண்டிட அவைகள் ஊர்ந்திடும் நோக்கம் நல்நோக்கமாக இருந்திடும் பட்சத்தில் !

sabeer.abushahruk said...

ஏக்கம்:

என் 
முனுமுனுப்புகளையெல்லாம்
மினுமினுப்புகளாக்கி
முனகல்களையெல்லாம்
முழக்கங்களாக்கிய
கிரவுன்...
என் இந்த
சரிதையில்
ஜரிகை இழைக்காதது!

சகோ.அப்துர்ரஹ்மான்:

இணைப்புகளை
இறுக்கமாகவும்
ஆக்ஸடைஸ் 
ஆகாமலும்
வைத்திருக்கும்பட்சத்தில்
இந்த
அதிரை நிருபர்
ஒரு
பாதுகாப்பான சர்க்யூட்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அதிரை இணையதள வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்டுரைக்கு இதுவரை 62 கருத்துக்கள் எழுத வைத்து சாதனை படைத்த அதிரை நிருபருக்கும் அதற்கு உந்துகோலாக இருந்த கவிக்காக்காவிற்கும், தன் கருத்துக்களை கச்சிதமாக இங்கு வந்திறக்கிய அனைத்து சகோதர அன்பர்களுக்கும் வாழ்த்துக்களும், துஆவும். பணிப்பளு காரணமாக கருத்திடல் அண்மைக்காலமாக சற்று தடைப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் விரைவில் மீண்டு வந்து இங்கு ஒரு பிடி பிடிக்க ஆவல்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

... இப்படியான கவிக் காவியம் எழுத்துக்குள் வரும் முன்னர் நானும் நினைத்திருந்தேன் எங்கே எம்மவர்கள்ன்னு ஒரு தூண்டில் போட்டு வேலை நிமித்தமாகவும் நேரமின்மையாகவும் கருத்திட முடியாமலிருக்கும் அன்பு நேசங்களுக்கு அடங்களும் என்று பத்திரிக்கையில் பெயர் போட்டு எழுதத்தான்...

... இருப்பினும் அகர வரிசையில் ஆரம்பித்த கவிக் காவியம் முதல் நான்கு உறவுகளும் நேசங்களும்... மூன்று வேலை உணவுக்குப் பின் உண்ணுவதற்கு மாத்திரை தந்திட அசத்தல் காக்காவும், MSM(n),அபுல் ஹசன் (சி.க.), அபுஈசா மற்றும் பக்கத்து வீட்டிலிருந்தோர் இன்று நெடுதூரத்திலிருந்தாலும் கருத்திட வருவார்கள் என்ற நம்பிக்கை...

... ஏன் தெரியுமா ? இங்கே சொல்லியிருப்பது அவரவர்களின் அசலான சாயலே... வேறுயாரையும் அல்ல...

அதிரைநிருபரின் எழில் சீக்கிரம் நலமுடன் வருவான் அப்படியே ஒவ்வொரு கருத்தாய்வாளர்களுக்கும் பிரித்து பிரித்து விளக்கவுரை தருவான் இன்ஷா அல்லாஹ்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) உள்ளேன் ஐயா சொல்லிட்டார்(ப்பா) !

Unknown said...

கவிகாகாவின் இந்த ஆக்கம் அ.நிருபரின் ஆடோக்ராப் மாதிரி இருக்கு ..புதுமையாகவும் இருக்கு ...............
நண்பன் தஸ்தகீர் குணமடைந்து இதை மிகப்பெரிய ஹிட்டாக்கி வைப்பார்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம்மளெ சொல்லிப்புட்டு இந்த ஒரு கட்டுரை மூலமே கருத்து சென்சுரி அடிக்க வச்சிருவியெ போலெ ஈக்கிது சாஹூலாக்கா....

சமுதாய‌ பெய‌ர் தாங்கிய‌ க‌ட்சிக‌ள் தான் இன்று காக்கைக்கு பிச்சி, பிச்சி போட‌ப்ப‌ட்ட‌ ப‌ழைய‌ ரொட்டித்துண்டு போல் சிதறுண்டு கிடக்கும் இவ்வேளையில் ந‌ம்மூருக்காக‌ ஒரே ஒரு த‌ள‌மாக‌ அதிரை நிருப‌ர் ம‌ற்றும் அதிரை எக்ஸ்பிர‌ஸின் நிர்வாக‌ அன்ப‌ர்க‌ளும், ப‌ங்க‌ளிப்பாள‌ர்க‌ளும், வாச‌க‌ செல்வ‌ங்க‌ளும் பரஸ்பர ஒற்றுமை அடிப்படையில் ஒன்றிணைந்து ஓரே ஒரு த‌ள‌த்தில் அது அதிரை எக்ஸ்பிர‌ஸாக‌வோ அல்ல‌து அதிரை நிருப‌ராக‌வோ இருக்க‌ட்டும் வ‌ல‌ம் வ‌ந்தால் அனைத்து ச‌மைய‌ல் வித்துவான்க‌ளும் ஒன்றிணைந்து ஒரே ச‌ட்டியில் அவர்கள் கூட்டு கைத்திறமையில் ச‌மைக்க‌ப்ப‌ட்டு ப‌ரிமாற‌ப்ப‌ட்ட‌ ஒரு அறுசுவை பிரியாணி விருந்து போல் இருக்கும‌ல்லவா ந‌ம் அனைவ‌ருக்கும்? இது என்ன‌ சாத்திய‌ப்ப‌டாத‌ ஒன்றா? இல்லை சாத்திய‌ப்ப‌ட்டு ச‌ரிவ‌ராத‌ ஒன்றா? நீங்க‌ளே விள‌க்குங்க‌ளேன்.....

ம‌ன‌துக்குள் வ‌ந்த‌தை இங்கு இற‌க்கி வைத்தேன் ம‌த்த‌தை நீங்க‌ள் சொல்லுங்க‌ளேன்...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

ZAKIR HUSSAIN said...

சமீப காலமாக என் கம்ப்யூட்டர் ஒத்துழைப்பு தராமல் கடுப்பேத்துவதால் உடன் எழுத முடியவில்லை.

கம்ப்யூட்டர் முதலில் அம்மாபலகை [Mother Board] அம்பேல் ஆகியது..மாற்றியவுடன் ப்ரின்டர் பின்னியெடுத்தது, பிறகு மானிட்டர் மல்லாந்து படுத்துக்கொண்டது.சூனியம் வச்சிடாய்ங்கலோனு சந்தேகப்படுற அளவுக்கு ஒரே குஸ்டமப்பா..ச்செ கஷ்டமப்பா..

எனக்கும் இது அவ்வளவாக தெரியாததால்..இதுக்கெல்லாம் பால் கிதாப் எல்லாம் பார்க்கிற ஆள் நான் இல்லை என்பதாலும் எல்லாத்தையும் ஒரு சுற்று மாற்றிவிட்டேன்.

சபீருடைய கவிதைக்கு பதில் எழுதாமல் இருக்க காரணம் சின்ன வயதிலிருந்து எங்கள் நண்பர்களிடையே யாரும் அதிகம் பாராட்டிக்கொள்வதில்லை. செல்லமாக திட்டிக்கொள்வது அதிகம்.

மற்றபடி கவிதை வெளியாகும் முன் நான் எழுதிய கமென்ட்:

"கவிஞர் வாலி கவிதை வாசித்த மாதிரி இருந்தது"

sabeer.abushahruk said...

இதைச்சொல்ல இத்தர சமயம் ஏதுக்கொன்டா ஜாகிரு காரு! நீமரூ யாசிர் சொன்னதுபோல மாமாங்கத்து சாமானையெல்லாம் மாத்தியதற்கு ஒரு கழுப்பு கழிச்சிப் பார்த்திருக்கலாம்.

பால் கிதாபு பார்த்தல்பற்றி யோசிக்குமுன் மல்லாந்த மானிட்டர் மப்புல இருந்ததான்னும் பார்திருக்கலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மற்றபடி கவிதை வெளியாகும் முன் நான் எழுதிய கமென்ட்:

"கவிஞர் வாலி கவிதை வாசித்த மாதிரி இருந்தது"///

அசத்தல் காக்கா : அவ்வ்ளோ கிறக்கமா அதில் !?

sabeer.abushahruk said...

சகோதரர்களே:
மற்றுமொரு ஏற்புரையில் உங்கள் முன் நான். 

பார்வையற்றவர்கள் கண்ட யானைக் கதையொன்று நினைவுக்கு வருகிறது. அதுபோல், இந்த குருடனுக்கு தெரிந்து யானை எனக் காண்பது உங்களின் பங்களிப்புகள் கொண்டு கணித்தவையே! மற்றபடி உங்களில் பலரை நான் கண்டதுகூட இல்லை என்பதிலிருந்து முகஸ்துதி செய்ய முகாந்திரம் இல்லையென்று உணரவும்.

நான் பாராட்டிய சகோதரர்களே, எத்தனைச் சிறந்த பண்புகளின் உறைவிடம் நீங்கள். இதோ, அடையாளம் கண்டு உலகுக்கே அறிவித்துவிட்டேன். இனி, இந்த பண்புகளை மேலும் வளர்த்து உக்கிரமாய் உயர்ந்து சிறக்கும்போது இந்த என் சாஸனத்தை முத்திரைப் பேப்பரில் எழுதி கையொப்பமிட்டு பதிவு செய்து விடுகிறேன்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கண்டிப்பாக என் முதல் கருத்தில் சொல்லியது போல் "மனம் வெண்றவர்களை மன்றத்தில் கூட்டி மகுடம் சூட்டி" தாங்கள் எழுதிய இச் சாஸனம் பாதுகாக்கப்பட்டு ஓர் மலர் வெளிவரும் அதுவும் ஆண்டு மலராக அதற்கான ஆயத்தமும் உள்ளூரே எழுந்து உருவெடுத்துக் கொண்டிருக்கிறது ! - இன்ஷா அல்லாஹ் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சமீப காலமாக என் கம்ப்யூட்டர் ஒத்துழைப்பு தராமல் கடுப்பேத்துவதால் உடன் எழுத முடியவில்லை.//

அப்படியே ஒரு "உம்ம்"மா(பலகைக்கு) கொடுத்திடுங்கள் காக்கா தானாக வசப்பட்டுவிடும் :)

Shameed said...

Naina Mohamed சொன்னது…
//நம்மளெ சொல்லிப்புட்டு இந்த ஒரு கட்டுரை மூலமே கருத்து சென்சுரி அடிக்க வச்சிருவியெ போலெ ஈக்கிது சாஹூலாக்கா....//


அஸ்ஸலாமு அழைக்கும்

நல்ல விசயங்களுக்கு சென்சுரி
என்ன அதற்க்கு மேலும் உற்சாகம் ஊட்ட நம் நிருபர்கள் உள்ளார்கள்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அன்பின் Sஹமீத் காக்கா: உங்களின் ஒரு கருத்தை சுருட்டிவிட்டேன் - புரிந்திருப்பீர்கள்.

Shameed said...

அதிரை-நிருபர்-குழு சொன்னது

//அன்பின் Sஹமீத் காக்கா: உங்களின் ஒரு கருத்தை சுருட்டிவிட்டேன் - புரிந்திருப்பீர்கள்.//


அஸ்ஸலாமு அழைக்கும்

சுருக்கவோ நீட்டவோ முழு அதிகாரம் உண்டு

இதில் வருத்தமோ
ஆத்திரோமோ கிடையாது

அதுதான் அதிரை நிருபர் வாசகன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உலகளாவிய வலைத்தளங்களை - அலெக்சா என்றொரு தரவரிசைப் படுத்திச் சொல்லும் வலைத்தனத்தின் கணக்குப்படி இன்றோடு அதாவது 16:00 hrs இந்திய நேரப்படி அதிரைநிருபர் 261,001 என்ற வரிசையில் இருப்பதை இங்கே நேசத்துடன் பதிகிறேன்...

இச்சூழலுக்குள் உழலவிட்ட அதிரைநிருபர் மற்ற நேசங்களுக்கு என்றும் நன்றியை தெரிவிப்பதில் ஒரு வாசகனக மகிழ்ச்சியே !

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//நேரப்படி அதிரைநிருபர் 261,001 என்ற வரிசையில் இருப்பதை இங்கே நேசத்துடன் பதிகிறேன்...

இச்சூழலுக்குள் உழலவிட்ட அதிரைநிருபர் மற்ற நேசங்களுக்கு என்றும் நன்றியை தெரிவிப்பதில் ஒரு வாசகனக மகிழ்ச்சியே //


அஸ்ஸலாமு அழைக்கும்

மகிழ்ச்சியில் நாங்களும் பங்கீட்டு கொள்கின்றோம்

அதிரை ஆலிம் said...

அன்பு சபீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தாங்கள் எல்லோரையும் ஊக்கப்படுத்தியதுபோல என்னையும் //அதிரை ஆலிம் எனும் அறுமைத் தோழர்...//
தோழராக ஏற்று ஊக்கப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி, சில வேலைகளின் காரணத்தால் பதில் எழத முடியவில்லை வருந்துகிறேன்

அதிரைநிருபர் said...

//இழு என இழுத்த
இழுப்புக்கெல்லாம்
அழுதுவடியாமல்
எழுந்து நிற்கும்
அதிரை நிருபர் குழுவும்//

அதிரைநிருபரின் எல்லா பங்களிப்பாளர்களை ஊக்கப்படுத்தும்விதத்தில் கவிதையாக்கம் தந்த சகோதரர் சபீர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.

அபு ஆதில் said...

" வாலி கவிதை வாசித்த மாதிரி இருந்தது"
சகோ, ஜாஹிர்
அஸ்ஸலாமு அலைக்கும்,
வாலி கவிதையை வாசிக்கும் போது அதிரை கவியின் கவிதையை வாசித்தது போல் இருந்தது என்று இனி சொல்லலாம்."நீங்கள் நியூ "இந்தியா வுக்காக எழுதி த்ந்த போதெல்லாம் சுஜதா மாதிரி எழுதுதுவதாக நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.(சுஜாதா தான் உங்களை மாதிரி எழுதினார்)
உங்ளைப் பற்றிய என் எண்ணத்தையே அ.நி.ஆஸ்த்தான கவியும் அழகாக சொல்லியிருக்கிறார்



இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்...
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்

சகோதரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா சொல்லியது போல்
ஒரு சமூகப்புரட்சியை உண்டு பண்ணுவதற்கு
நீங்கள் எழுதனும்,பேசணும்,சிந்திக்கணும்
சேரியில் போய் வேலை செய்யணும்.
அநத வேலையை அ.நி அழகாக செய்ய தொடங்கி இருக்கிறது.அது தொட துடிக்கும் சிகரத்தை அடைய முயற்ச்சிக்கும் அத்துனை சகோதரர்களுக்காகவும் துஃஆ செய்கின்றேன்.

sabeer.abushahruk said...

நியூ இந்தியா எங்களின் தேன் துளியை தொடர்ந்த கையேடாயிற்றே அப்படியெனில் அபு ஆதில் நீங்கல் நசிர் ஹுஸ்ஸேனா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நியூ இந்தியா எங்களின் தேன் துளியை தொடர்ந்த கையேடாயிற்றே அப்படியெனில் அபு ஆதில் நீங்கல் நசிர் ஹுஸ்ஸேனா?///

இல்லை.. அபு-ஆதில் என்ற அஸ்ரஃப் (காக்கா) AEM அமைப்புச் சகோதரரும் கூட பார்த்திருக்கிறீர்கள்.

sabeer.abushahruk said...

ஹமீது, கொஞ்சம் வல்லாரை கிடைக்குமா ஞாபக மறதி கடுமையாக இருக்கு! அபு ஆதில் மன்னிக்கவும். ஆபு இபுறாஹிம், நினைவூட்டியமைக்கு நன்றி!

(இங்கே இன்னும் சுபம் போடலயா?)

அபு ஆதில் said...

சகோ சபீர்
அஸ்ஸலாமு அலைக்கும்
தொடர்ந்து நாங்கள் சுவைப்பதும் நீங்கள் கொடுத்து வரும் தேன் துளி தான் என்பதில் மகிழ்ச்சியே.'நியூஇந்தியா'அருமை நண்பர் நஸிர் ஹுசைனின் அறிய முயற்ச்சி,ஜாஹிர் நிறைய எழுதி தருவார்,ஒவியம் அஸ்லம்,கிறுக்கலான எழுத்து என்னுடையது.

ZAKIR HUSSAIN said...

என்னைப்பற்றிய பாராட்டுக்கு நன்றி. சுஜாதாவின் எழுத்து எல்லோரையும் பாதித்த ஒன்று என்னைப்பாதித்ததில் ஆச்சர்யமில்லை. தி.ஜானகிராமன்,
கிரேஸி மோகன், பாலகுமாரன், கி.ராஜநாராயணன். வைரமுத்து, லா.ச.ரா
மெளனி. ஞானி எல்லோரும் எனக்கு பிடித்த எழுத்தாளர்கள்.

மத்தபடி விளங்காமல் எழுதி அது அறிவு ஜீவிகளுக்குத்தான் விளங்கும்..உனக்கு விளங்காது என பம்மாத்து செய்யும் எழுத்தாளர்களை
துப்பரவாக பிடிக்காது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இவங்களெல்லாம் யாருன்னு கேட்ட அடிக்க வருவீங்க தானே ?

//தி.ஜானகிராமன்,
கிரேஸி மோகன், பாலகுமாரன், கி.ராஜநாராயணன். வைரமுத்து, லா.ச.ரா
மெளனி. ஞானி//

chinnakaka said...

மூத்தோர் இளையோர் என்ற பாகுபாடி அன்றி
தமிழுக்கு தாதா...வாகிய எங்கள் தாத்தாவை முன் நிறுத்தி
இளங்காற்றுடன் புதியவர்களை வரவேற்று
மறந்து சென்றவர்களை என்றும் அன்புடன் மறவாதீர் எங்களை
என்றழைத்து
குறையேதுமில்லாது முழு நிறையுடன் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி
சமபந்தியில் நானும் இருக்கின்றேன் என்னும் போது மிகவும் மகிழ்ச்சியே
வேலை நிமித்தமாகவும், சுய தேவைக்காவும் வெளியே நின்ற என்னை மீண்டும் உள்ளே வாரும் என்றழைத்தமைக்கு நன்றி
எல்லா புகழும் அல்லாவுக்கே அல்ஹம்து லில்லாஹ்

புதுக் கவிதையில் மகுடம் (கிரவுன்) சூடிய நண்பர் தஸ்தகீர் நலம்பெற அல்லாஹ் அருள் புரிவானக

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரு நப்பாசையில் ஒரே ஒரு இணைய‌தளம் நம்மூருக்காக இருந்தால் எவ்வளவு நலமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் தான் என் கருத்தை இங்கும் (அதிரை நிருபர்), அங்கும் (அதிரை எக்ஸ்பிரஸ்) பதிந்தேன். அதற்கு எவரும் பதிலளிக்கவில்லை ஒருவரைத்தவிர அதுவும் ஏதோ பொடுபோக்காக எழுதப்பட்டதாகவே (வரவேற்பதற்கு பதிலாக விரட்டியடிக்கப்பட்டது போல்)கருதுகிறேன்.

இல்லை நம்மூர், சுற்றுவட்டார‌ செய்திகள், கவிதைகள், கட்டுரைகள் எப்படி ரயில் தண்டவாளத்தின் இரு நேர்கோடுகளில் சீராக பயணிக்கிறதோ அப்படியே இரு தளங்கள் மூலம் நம்மூர் செய்திகள் பயணித்து போகட்டும் என்று சொல்லவருகிறார்களோ? என்னவோ?

இல்லை என் விருப்பம் கற்பனைக்கு அப்பாற்பட்டதோ? என்னவோ விளங்கவில்லை.

எனவே என் விருப்பத்தை ராஜினமா கடிதமேதும் கொடுக்காமல் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Yasir said...

சாவன்னா காக்கா....நமது கவிக்காக்கா,ஆஸ்தான கவிஞர்க்காக “ கருத்து செஞ்சுரி “ அடிக்காம விடக்ககூடாது....

அபூ சுஹைமா said...

அன்புச் சகோ. நெய்னா,

வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

(பார்த்து / பேசி எவ்ளோ நாளாச்சு? நல்லா இருக்கியா?)

நான் பொடுபோக்காக எழுதவில்லை. மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஆனால் யதார்த்தத்தில் இருவேறு தளங்களாக வளர்ந்துவிட்ட நிலையில், இரண்டில் ஒன்றை மூட வேண்டும் என்றால் இருவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால்தான் அவ்வாறு கூறினேன்.

இருவரில் ஒருவர் முன்வந்தால் வேண்டாம் என்றா கூறப்போகிறேன்?

----

முந்தைய கமெண்ட் (எக்ஸ்பிரஸில்)


அன்புச் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். அதிரை வலைப்பூ அரசியல் குறித்த ஞானம் எனக்கில்லை. தற்போதைய எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரை நிருபர் ஆக்கங்களில் இரு தளங்களுக்கும் இடையே பிரச்சனை நிலவுவதாக நான் கருதவில்லை. ஆனால் சிலர் பின்னூட்டங்கள் வழியாக விளையாடுகின்றனர் என்பதை மட்டும் அறிந்து கொண்டேன். அந்த சிலரே ஒற்றுமையை விரும்பாதவர்கள். சிறு பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்கி பகை மூட்ட நினைப்பவர்கள். இதனை இரு தளத்தின் நிர்வாகிகளும் கண்டு கொள்ளக் கூடாது என்பதே என் வேண்டுகோள்.

அதிரை நிருபரில் கவிதை, கதை, மார்கக் கட்டுரை என களை கட்டுகிறது. கூடவே பின்னூட்டங்களும். அதிரை எக்ஸ்பிரஸில் அதிரைச் செய்திகள் பிரதான இடம் பெறுகின்றன. எனவே, ஏதேனும் ஒன்றை நிறுத்த வேண்டும் என்று கூறாமல் தற்போது இருப்பது போன்றே இரு தளங்களும் செயல்பட வேண்டும்.

தவிர, அதிரையில் இருக்கும் அன்பர்கள் ஊர் நடப்புகளை தவறாமல் தந்து கொண்டிருக்க வேண்டும்.

அப்துல் கரீம் (S/o. முஹம்மது அலிய் ஆலிம்)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


அன்பு சகோதரர் அப்துல் கரீமுக்கு,

அல்ஹம்துலில்லாஹ் நான் நலமுடன் இருக்கிறேன். தாங்கள் நலம் காண ஆவல். தாம் கூறியபடி தம்மை பார்த்து, பேசி காலச்சக்கர சுழலில் பல வருடங்கள் உருண்டோடி விட்டது. எங்கோ இருக்கும் நம்மிருவரை இப்படி பரஸ்பர கருத்து பரிமாற்றத்தில் இவ்விணையதளம் மூலம் எப்படி எல்லாம் வல்ல அல்லாஹ் ஒன்றிணைத்து வைக்கிறான்!!! பாத்தியளா??? மாஷா அல்லாஹ்...

வேலைப்பளுவுக்கிடையே இப்படி உள்ளக்கருத்துக்களை கொஞ்சம் இங்கு இறக்கி வைப்பதால் மனம் எப்படி எல்லாம் ரிலாக்ஸ் ஆகிறது? மாஷா அல்லாஹ்....

தம்முடைய கருத்தை மனமுவந்து வரவேற்கிறேன் குறையேதுமின்றி....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கள் சொந்தங்கள் அபு-சுமைஹா மற்றும் MSM(n) உறவுகளின் உரையாடலுடனூடே நலமுடன் சூழலைப் புரிந்து கொள்ள வைத்த அல்லாஹ்வுக்கு எல்லாப் புகழும் !

Yasir said...

புரியவைத்தலும்,அதை விதாண்டாவாதம் செய்யாமல் புரிந்து ஏற்று கொள்ளலும்..மாஷா அல்லாஹ்...மகிழ்ச்சியாக இருக்கிறது..இதை போன்ற வர்களுடன் நானும் வாசகனாக உள்ளேன் என்று..அதிரை நிருபரே உன் நீண்ட ஆயுளுக்காக துவா செய்கிறேன்...கவிக்காக்கவின் கவி வைர வரிகளை இங்கு நினைவு கூர்கிறேன்...”உன்னைச்சுற்றி ஒரு உணர்வலைகளை பரப்பிவிடு,,........... (ஞாபகம் வர மாட்டுங்குது ) உயரிய எண்ணத்தால் (? சரியா ?))அதை நிரப்பிவிடு “

தாஜுதீன் (THAJUDEEN ) said...

\\ Shameed சொன்னது…

அது சரி எங்கே
தம்பி தாஜுதீன்\\

அஸ்ஸலாமு அலைக்கும், ஹமீது காக்கா மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும்.

இரண்டு நாட்களாக வேலை அதிகம், அதான் கருத்திட முடியவில்லை. ஆனால் எல்லா பின்னூட்டங்களை படித்துக்கொண்டிருந்தேன். என்னை இங்கு ஞாபகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சுகமுடன்மீண்டு(ம்)வர துஆ செய்யவும்.செய்தவர்களுக்கு அல்லாஹ்விடம் பிரத்திக்கிறேன்.

அதிரைநிருபர் said...

// Naina Mohamed சொன்னது… அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரு நப்பாசையில் ஒரே ஒரு இணைய‌தளம் நம்மூருக்காக இருந்தால் எவ்வளவு நலமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் தான் என் கருத்தை இங்கும் (அதிரை நிருபர்), அங்கும் (அதிரை எக்ஸ்பிரஸ்) பதிந்தேன். அதற்கு எவரும் பதிலளிக்கவில்லை ஒருவரைத்தவிர அதுவும் ஏதோ பொடுபோக்காக எழுதப்பட்டதாகவே (வரவேற்பதற்கு பதிலாக விரட்டியடிக்கப்பட்டது போல்)கருதுகிறேன்.//

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் நெய்னா முகம்மது, உங்களுடைய ஆசையும் தான் எங்களுடையா ஆசையும். உங்கள் கருத்துக்கு பின்னூட்டமிடும் சகோதரர்களிடமிருந்து பதில் வரும் என்று எதிர்ப்பார்த்தோம், பிறகு எங்கள் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்கலாம் என்றிருந்தோம். யாரும் இதற்கு பதில் தரவில்லை என்பதற்காக வருத்தம் வேண்டாம்.

உங்கள் வேண்டுகோள் நியாயமானதது தான். இங்கு ஒரு சிம்பிளான விசயத்தை எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டும். அதிரைவாசிகளால் நடத்தப்பட்டுவரும் வலைப்பூக்கள் அனைத்தும் பார்ட்டைம் (part time) செய்தி வலைப்பூக்களே. பார்ட்டைம் (part time) செய்தி ஊடகமாக இருந்தாலும் அது ஒரு குழுவாக இருந்து, திட்டமிட்டு, நல்லது மற்றும் தீயது பற்றி ஆலோசனைகள் செய்து பின் விளைவுகளை ஆராய்ந்து செய்திகள் வெளியிடுவது, அதை நீக்குவது, பின்னூட்டங்களை வெளியிடுவது, நீக்குவது போன்றவைகளுடன் போராடி நிர்வகிக்க வேண்டும். இவைகளில் சிறப்பாக நிர்வாக செய்வதில் தான் ஒரு நிறுவனத்தின் மற்றும் செய்தி ஊடகத்தின் வளர்ச்சியும், வெற்றியும் உள்ளது என்பது எல்லோரும் ஒப்புகொள்ளும் உண்மை.

அதிரைநிருபர் குழு எந்த வலைப்பூக்களுடன் போட்டி போடவில்லை, போட்டிப் போடவேண்டிய அவசியமும் இல்லை என்பதை மிகத்தெளிவாக பல முறை நாம் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தெரிவித்துவிட்டோம். அதிரைநிருபர் குழுவின் முதல் நோக்கம் சர்ச்சையற்ற செய்திகளை வெளியிட்டு இணைத்தின் மூலம் பல நல்ல இதயங்களை இணைப்பதே. இதில் கடந்த 9 மாத காலமாக வெற்றியும் கண்டு வந்துள்ளோம்.

அதிரைநிருபருடைய நோக்கத்தில் முன்னின்று இருப்பது விழிப்புணர்வு செய்திகள். முக்கியமாக கல்வி, சுகாதாரம், இஸ்லாம். நம் சகோதரர்களின் சண்டை சச்சரவு செய்திகளை பெரிதுபடுத்தியோ விமர்சனம் செய்தோ ஒரு பதிவுகூட அதிரைநிருபரில் இதுவரை பதியவில்லை,பதியப்போவதுமில்லை.

அதிரைநிருபர் பல இதயங்களை கவர்ந்ததுக்கு முக்கிய காரணம் குறிக்கோளுடன் மேல் சொன்ன கல்வி, சுகாதாரம், இஸ்லாம் போன்றவைகளின் விழிப்புணர்வு செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து, கட்டுப்பாடுடன் நல்ல நிர்வாகத்திரனுடம் குழுவாக இருந்து ஒத்தகருத்துடன் வீண்விவாதம் செய்யாமல் செயல்படுவதே.

செய்தி ஊடகத்தை நிர்வகிப்பவர்கள், நடத்துனர்கள் யார் என்ற விபரத்தை தெரிப்பதும், தெரிவிக்காமல் இருப்பது அவரவர் விருப்பம். அதிரைநிருபர் வலைப்பூவின் நிலைப்பாடு நிர்வகிப்பவர்கள் யார் என்பதை தெரிவித்தால் தான் நாம் வெளியிடும் செய்திகளின் நண்பகத்தன்மை இருக்கும் என்பதே. இதில் உறுதியாக உள்ளோம்.

அதிரைநிருபர் அதிரைக்கான அதிகாரப்பூர்வமான வலைப்பூ என்று இதுவரை எந்த பதிவிலும் தன்னிச்சையாக நாங்கள் அறிவிக்கவில்லை, இன்னும் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு நிறைய முன்னேற்றம் அடையவேண்டியுள்ளது. சில காலம் சென்றபிறகு அதிரைநிருபரின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டால் அதிரைக்கான அதிகாரப்பூர்வமான தளமாக உருவாகலாம். இது எங்கள் நீண்டகால திட்டம். அது இறைவனின் நாட்டம். இன்ஷா அல்லாஹ்.

மேலே சொல்லபட்டவைகளில் நாங்கள் யாரையும் குறை சொல்லவில்லை, மற்ற வலைப்பூ நடத்துபவர்களும் நம் சகோதரர்கள் தான் என்ற உணர்வு எங்களுக்கு அதிகம் உள்ளது என்பதற்கு எங்கள் அதிரைமணம் வலைப்பூ திரட்டியே அத்தாட்சி.

அதிரைநிருபர் said...

சகோதரர் அப்துல் கரீம் அவர்களின் கருத்து ஒரு வகையில் ஏற்ற்க்கொள்ளக்கூடியதே. எல்லாவற்றிக்கும் மேல் சில விசயங்களை மனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

1. குறிக்கோள்.
2. திட்டமிடல்.
3. கட்டுப்பாடு.
4. பொழுதுபோக்கு என்று எண்ணாமல், இது சேவை என்ற முழு எண்ணத்தில் கடின உழைப்பு.
5. நல்ல திறன்படைத்த எல்லாவற்றையும் கட்டியாலும் நிர்வாகம் (குறைந்த எண்ணிக்கையில்).

இவைகளில் ஏதாவது ஒன்றில் குறையிருந்தால், எந்த செயலிலும் வெற்றியடைய முடியாது.

வர்த்தகரீதியானாலும் சரி, சேவைரீதியானாலும் சரி ஒரு நல்ல நோக்கத்திற்காக செய்தி ஊடகத்தையோ உருவாக்கும்போது அதை நிர்வகிப்பவர்கள் யார் என்ற விபரத்தை தெரிவித்தால் தான் அந்த செய்தியின் நம்பகத்தன்மையை பலப்படும். என்று அழுத்தமாக நம்புகிறது அதிரைநிருபர் குழு. இதில் வெற்றியும் கண்டு பல இதயங்களை இணைத்துள்ளது.

இன்று உலக இணையத்தளம் மற்றும் வலைப்பூ தரவரிசையில் (alexa ranking) 258141 , அமீரகத் தரவரிசையில் 621 இடத்திங்களில் உள்ளது. இப்போது சொல்லுங்கள் அதிரைநிருபரின் செயல்பாடுகள் சரியா? தவறா? மற்ற வலைப்பூக்களுக்கு முன்னுதரமாக உள்ளதா? இல்லையா?

அதிரைநிருபரில் நிர்வாக செயல்பாடுகளை முன்னிறுத்தி நடத்துபவர்கள் பற்றிய விபரங்களை தெரிவித்துவிட்டோ அல்லது தெரிவிக்காமலோ மற்ற வலைப்பூக்களும் செயல்படலாமே. நம்முடைய நோக்கம் நம் மக்களுக்கு நல்லவைகள் செய்யவேண்டும், மற்றவர்களை பழித்தீர்ப்பதற்காக இந்த இலவச ஊடத்தை பயன்படுத்தாமல் இருந்தாலே. இதற்கு யாரும் தடைப்போட மாட்டார்கள்.

ஒரு குழுவில் இருந்து, ஒரு சாரார் மட்டும் தங்களை தெரியப்படுத்திக்கொண்டு மற்றவர்கள் தங்களை தெரியப்படுத்திக்கொள்ளாமல் இருந்துக்கொண்டு செயல்பட்டு நிர்வகிப்பது என்பது என்பது முல்லின் மேல் நடப்பதற்கு சமம். ஒரே தளம் வேண்டும் என்றால் எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்த்கொண்டு செயல்படலாம். அதுதான் சரியான அனுகுமுறை.

இது சாத்தியமில்லை என்றால்....

சகோதரர் அப்துல் கரீம் கூறுவது போல் வலைப்பூக்கள் தாங்கள் தனித்து செயல்படுவது போல் அவர்களின் தனித்தன்மையுடன் செயல்பட்டுக்கொள்ளட்டும், அவர்களின் செய்திகள் மற்றும் அனுகுமுறையை பொறுத்து அதன் வளர்ச்சியில் வெற்றியும் தோல்வியும் நிர்னையிக்கப்படலாம். இதை எந்த ஒரு தனிநபராலோ அல்லது ஒரு பேர் இயக்கத்தலோ அதன் வளர்ச்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாது என்பது மட்டும் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

அதிரைநிருபர் said...

சகோதரர் நெய்னா முகம்மது அவர்களின் கேள்வியும், அதன் தொடர்ச்சியாக வந்த சகோதரர் அப்துல் கரீம் அவர்களின் பதிலும், சகோதரர் நெய்னா அவர்களின் பெருந்தன்மையும் எங்களை மெய் சிலிர்க்கவைக்கிறது.

அதிரைநிருபர் வரலாற்றில் முத்திரை பதித்துள்ள இந்த பதிவிற்கு மிக கண்ணியத்துடன் கலகலப்புடன் பின்னூட்டங்களிட்ட அனைத்து சகோதரர்களுக்கு மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி.

தொடர்ந்து இணைந்திருங்கள்... :)

Mohamed Rafeeq said...

100...செஞ்சுவரி அடித்த சந்தோஷத்தில் சொல்லுகிறேன் ....
அதிரை நிருபர் வாசகன் என்ற முறையில் இந்த கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்....
***அவர்களுக்கு பல முறை எச்சரிக்கை செய்யப்பட்டது ..
***பல முறை கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கப்பட்டது..
***ஒரு சாரரின் கருத்தை மட்டும் துதிக்கப்பட்டது.....
** விளைவு அதிரை நிருபர் தொடங்கப்பட்டது ....
***ஒடுக்கப்பட்டோரின் குரல்கள் உலகு எங்கும் வாழும் அதிரை மக்களின் மனதில் தெளிக்கப்பட்டது...
மனமார்ந்த நன்றிகள் அதிரை நிருபர் வலைப்பூவிற்கு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். சுகமுடன்மீண்டு(ம்)வர துஆ செய்யவும்.செய்தவர்களுக்கு அல்லாஹ்விடம் பிரத்திக்கிறேன்.///

நல்வரவு பூரண நலத்துடன் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் said...

// crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். சுகமுடன்மீண்டு(ம்)வர துஆ செய்யவும்.//

சகோதரர் தஸ்தகீர் நீங்கள் நல்ல சுகம் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் புத்துணர்வுபெற படைத்தவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

ZAKIR HUSSAIN said...

சகோதரர் தஸ்தகீர்...what happened are you alright now?

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

சகோதரர் தஸ்தகீர்...what happened are you alright now?
Reply Monday, February 28, 2011 9:51:00 AM .
---------------------------------------------------------------------
Assalamualikum. kaaka thanks for asking .Im getting better from bad flue and sinus. See you all soon inshallah. Ameen.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் தஸ்தகீர் விரைவில் குணமடைய எங்கள் துவா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட கிரவ்ன்(னு): கிரிக்கெட் உலகோப்பை நடைபெறும் நேரமிது, அங்கே இந்தியா வெற்றி பெற்றால் அதனை சின்னத் திரையில் கானும் கிரிக்கெட் பிரியர்ககள் அலாதி குஷியாவது நிஜமே...அதிலும் நம்ம "யூசுஃப்பத்தான்" அடிக்கும்போது ஏற்படும் குதூகலமும் அவர் அடித்து வெற்றி என்றால் எப்புடி இருக்கும் அதே குதுகலத்தைதான் இங்கே எதிர்பார்த்தோம் யூசுஃப்பத்தானி அடியாக உன் வரிகள் வருமென்று... என்னடாப்பா ஒண்டவுன் இறங்கிய யூசுஃப்பத்தான் மாதிரி இருந்திட்டே ! அடபோ(டா)ப்பா !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எத்தனை நாள் ஆகினும் இன்சா அல்லாஹ் இங்கு
ஒரு சிறப்பு கவிதையுடன் தலை காட்டுவோம். நம்புக ! பொருத்தருள்க.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆட்டோகிராஃப் போடாம இன்னும் சிலர் மவுனமாக இருக்கிறார்கள் ! அவங்களை சீக்கிரம் ஆட்டோகிராஃப் போடும்படி கேட்டுக்கிறோம் விரைவில் சர்ப்ரைஸ் காத்திருக்கு !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னுரை இங்கே : http://adirainirubar.blogspot.com/2011/03/blog-post_6134.html

அன்புடன் மலிக்கா said...

முதலில் மன்னிக்கவும் இவ்வுளவு லேட்டாக வந்தமைக்கு.

அதிரை நிரூபர் பட்டியலில் நானுமா! அதுவும் இத்தனை திறமைசாலிகளுடன் ரொம்ப சந்தோஷம் சபீர்காக்காவுக்கு என்னையும் திறமைசாலிகளுடன் இணைத்தமைக்கு.

ஒவ்வருவரையும் தாங்கள் வர்ணித்துள்ளவிதம் மிக அருமை மிக பொருத்தம்.
அதில் என்னைப்பற்றியதுதான் [தந்தை உமர்தம்பி அவர்களுக்காக செய்தது] அதுஒரு கூட்டு முயற்சிதான் சகோ.. எல்லாப்புகழும் இறைவனுக்கே அத்தனையும் அவனையே சாரும்..

அனைவருக்கும் வாழ்த்துக்கள். சபீர் காக்காவுக்கு என் மனமார்ந்த நன்றி..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.