Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனமே தொட்டாசினுங்கிதானே..... 30

ZAKIR HUSSAIN | April 01, 2011 |

ரு நினைவூட்டல்: இது லைட் ரீடிங் அல்ல

மனமே தொட்டாசினுங்கிதானே.....

'மனசு"ன்னு ஒன்னு இல்லாட்டா எப்படி இந்த உலகம் இருக்கும் நினைக்க ரொம்ப ரோபோட்டிக்கா போயிருக்கும்ல?.. ...

எந்த கண்டுபிடிப்பும் இருக்காது, குழந்தைகள் தொழிற்சாலையில் செய்யப்படும் பொருள் மாதிரி மதிக்கப்படும். பிச்சைக்காரர்கள் தட்டில் காசு இருக்காது. கவிஞர்கள், இலக்கியம் சிலாகிப்பவர்கள் வழக்கொழிந்து போவார்கள். நானும் இதை எழுத மாட்டேன்.. நீங்களும் படிக்க போவதில்லை.

எல்லா கண்டுபிடிப்பும், வாழ்வியல் ரசனையும், எதையும் அசைபோட்டுசந்தோசப்படும் மனசைத்தான் நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்பதின் மீள்பார்வை இந்த ஆர்டிக்கிள் எழுத ஏற்படுத்திய சின்ன வெளிச்சம்.

நாளைக்கு உள்ள பிரச்சினைகளை அல்லது வேலையை டென்சனோடு அணுகும் மனப்பான்மை உள்ளவரா நீங்கள்... கவனிக்க உங்கள் மனது மட்டுமல்ல உடம்பும் ஒரு கான்ஸ்டான்ட் டென்சனில் இருந்து சுரக்க வேண்டிய சில அமிலங்களை அளவுக்கு அதிகமாக சுரந்து உங்கள் பணத்தில் கணிசமான அளவு கரந்து டாக்டரிடம் கொடுத்துவிடும். [அமிலம்னா ஏதோ வெஸ்டர்ன் யூனியன் மாதிரி எழுதியிருக்கேனு நினைக்க தோன்றினால்.. பொறுமைகாக்க].

மனிதனின் மனசு எப்படி மாறுகிறது...ப்படி அது ஒருசின்ன மூட்” மாற்றம் ஏற்படுத்துகிறது அதனால ஏற்படும் கெமிக்கல் ரியாக்சன் என்ன உடம்பில் எழுத ஆரம்பித்தால் மக்கள் தொலைக் காட்சியின் மருத்துவ நேரம் மாதிரி ஆகிவிடும்.

மனதை சரியாக பயன்படுத்துவதில் தவறு ஏற்படும் தருணம்தான் உலகில் முதன் முதலில் துரோகம், பொய், ஏமாற்று வேலை எல்லாம் உருவானது. இதில் எல்லாமதமும் சொல்லும் விசயம் கர்மவிதி..நாம் செய்த நல்லவைகளுக்கும் கெட்டவைகளுக்கும் சரியான விதமாக தண்டனையோ அல்லது நன்மையோ கிடைக்கும்.. இது பொது விதி.

நான் சந்த்தித்த சிலரின் பிரச்சினைகள் வித்யாசமானவை, அதிலும் அவர்கள் அதை ஞாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் வித்யாசமானவை.

ஒருவர் தனது மனைவியுடன் சண்டை பல வருடம் பேசவில்லை, சொல்லும் காரணம் எல்லாம் " என்னை மதிக்கவில்லை... நான் டீ கேட்டபோது உடனே தரவில்லை, என் பெற்றோரிடம் சரியான உறவு இல்லை, டீசன்சி பத்தாது, எனது கஸ்டத்தில் அவளின் வீட்டிலிருந்து பண உதவி செய்யவில்ல.... இப்படி அடிக்கினார்.

இதற்கும் மனசுதான் காரணம் நம் பெற்றோர்கள் நமக்கு நல்லவர்கள் தான் அதை அப்படியே மற்றவர்களும்உங்கள் மனைவியும் ]ஆமோதிக்க வேண்டும் என்பது ஒரு பிடிவாதம் தான். அப்படி என்றால் உலகில் எல்லோரும் நல்லவர்கள்தானே.. உலகம் நல்லவர்கள் மட்டும் வாழும் இடமா? அது முடியுமா? [

மனசுபிடிவாதம்” எனும் ஆயுதம் ஏந்தியதால் அவர் இழந்தது அவரது இளமைக் காலம் முழுவதையும்... இனிமேல் அந்த காலம் திரும்பிவரப் போவதில்லை,

உங்களின் ரிட்டயர்மென்ட் வாழ்க்கையில் உங்களோடு அதிகம் வாழ சாத்தியம் உள்ள உங்கள் மனைவியுடன் என்ன பேசப்போகிறீர்கள்?.. அமைதியாக உட்கார்ந்து பேச உங்கள் வாழ்க்கையில் சம்பவங்களே இல்லையே?? பிள்ளைங்க அவங்க வேலை, குடும்பம்னு ஆயிடும்ல.. ஏறக்குறைய உங்கள் வாழ்க்கை ஆடியோ சரியாக ரெக்கார்ட் ஆகாத , கீறல் விழுந்த பிளாக் & ஒயிட்படம் மாதிரிதான் இருக்கும்” என நான் சொன்னவுடன்... தப்பு செஞ்சுட்டேன்னு கண் கலங்கினார்

மனசு முழுக்க பிடிவாதமும், எனக்கு, நான் என்று ஆக வாழும் மனிதர்கள் தொடர்ந்து ஏழ்மையில் இருந்து கொண்டு பணக்காரன் ஆக ஆசைப்படுவது லைசன்ஸ் இல்லாத சாஃப்ட் வேர் வாங்கி அப்ட்டேட் செய்ய ஆசைப்படுவது மாதிரி.

சிலரின் மனதில் மதம் குடிகொண்டு மார்க்கம் வெகேட் செய்து போயிருக்கும். இவர்களிடம் என்ன நல்லது சொன்னாலும் கொரலிவித்தைக்காரன் திருப்பி திருப்பி ஒரே விசயத்தை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் எது சொன்னாலும் தனது விவாதத்தில் ஜெயிக்க பார்த்து , கல்யாணப் பத்திரிக்கையிலுள்ள "சுற்றமும் நட்பும்" எல்லோரிடமும் சண்டை போட்டிருப்பார்கள். இவர்களும் மற்றவன் என்ன சொல்கிறான் என்பதை பகுத்துஅறியும் மனது இருந்தால் பிரச்சினை இல்லை. இவர்களில் நாக்கில் 'அமெரிக்கன் கெட்டவன்' என்ற போர்டு நிறந்தரமாக தொங்கும்.

இதில் சில பெண்களும் விதி விலக்கல்ல சில சமயங்களில் பொறுமை காக்கதவறுவதும்.. மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஆன்டென்னா இவர்களுக்கு சரியாக சிக்னல் அனுப்பிக் கொண்டே இருப்பதால் வாழ்க்கை எனும் மெயின்பிக்சரை தவற விடுவதும் உண்டு. கணவனுக்கு பிடிக்காததை செய்வதன் மூலம் தனது சுதந்திரம் காக்கப்படுவதாக ஒருமனமுடக்க’த்தில் இருப்பவர்கள். அப்படியே இவர்களுக்குசிலபஸ்’ சரியாக விளங்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது டெலிவஷன் சீரியல் எனும் பயிற்சி பட்டறை.

ஜிம்னாசியம் போன்ற இடங்களில் உடற்பயிற்சி கொடுப்பது மாதிரி மனப்பயிற்சி ஏதும் மலிவாக கிடைப்பதில்லை. உடல் பயிற்சி செய்யவும் ஒரு ஸ்ட்ராங்கான மனப்பயிற்சி தேவை, அதனால் தான் த்ரெட் மில் வாங்கி சில வீடுகளில் அது பயன்படுத்தபடாமல் டவல், ஜட்டி எல்லாம் அதன் கைப்பிடியில் காயப்போட்டு வைத்திருப்பார்கள். அதில் ஒருவர் 'அதுலெ போட்டாத்தான் நல்லா காயுது' என்றார்.

மனப்பயிற்சியின் சில டெக்னிக்ஸ்:

மனம் அலைபாய்வதை அளக்கும் கருவியாக கண்ணை சொல்கிறார்கள். ஒரு நிலையில் இல்லாத மனம் உள்ளவன் கண் தொடர்ந்து உங்களைப் பார்த்து பேசாது. சுழலும்... அவனை ஒரு முகப்படுத்த ஒரு அரை மணி நேரம் சுவற்றுக்கு முன்னால் 1/2 மீட்டர் இடைவெளியில் உட்கார வைத்து மன ஓட்டத்தை கவனிக்க சொல்வார்கள். மொத்தத்தில் இது நம்மை நாம் கண்ணாடியில் பார்ப்பதற்கு சமம்.

இந்த பயிற்சியில் "சும்மா' உட்கார்ந்திருந்தாலும் உடம்பு வலிக்கும்.

ஜிப்ரைஸ் டெக்னிக் என்று ஒரு ரஷ்யன் டெக்னிக் உண்டு ...ஒரு பெரிய ரூமில் உங்களை தனியாக விட்டு உங்களை மனம் போன போக்கில் கத்த / பேச சொல்வார்கள். ஒரு 15 நிமிடத்துக்கு பிறகு உங்கள் மனதில் மிகப் பெரிய வெற்றிடம் தோன்றுவதை உணரலாம்.

வாழ்க்கையில் அதிக ஒட்டுதல் [State Of Attachments] நிறைந்த மனம் தொடர்ந்து சோதனைகளை சந்திக்கும், பிரச்சினைகளை தன்னுடன் ஒட்டாமல் பார்க்கும் பக்குவம் [ State of Detachment] மனிதனை மகானாக வளர்ச்சி அடைய செய்கிறது, இதை புரிந்து கொள்ளும் சூழல் புத்தகத்திலிருந்தோ , அல்லது வலைப்பூவிலோ கிடைக்காது.

மனத்தின் மீதான விசயங்களில் கவனம் செலுத்தும்போது Metaphysics / Quantum physics போன்ற விசயங்களில் ஆர்வம் தோன்றும் இது அனைத்தும் முஸ்லீமாக இருப்பவர்களுக்கு மார்க்கத்தின் மீதான நெருக்கத்தையும் அதிகப்படுத்தும். இந்தசமாச்சாரங்கள் இன்னும் ஆழமாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கம்போல்இவன் எந்த குரூப் ஆலு” எனபார்ப்பதில் ஆர்வம் இருப்பதால் மெயின் சப்ஜெக்டை கோட்டைவிட்டு விடுபவர்கள் அதிகம்.

மற்றும்…

நீங்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை தவற விட்ட அத்தனை சம்பவங்களிலும் உங்கள் மனதின் வலிமை குறைந்த தருணம்தான்.

- ZAKIR HUSSAIN

30 Responses So Far:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

மன சம்பந்த்தமாக கட்டுரை இருப்பதால்
பின்னுட்டங்கள் மணக்க மணக்க வரும் என்பதில் சந்தேகம் இல்லை

sabeer.abushahruk said...

'இது ஒரு உண்மைச் சம்பவத்தின் தழுவல்' என்று டைட்டில் கார்ட் போடப்பட்ட விஷுவல் ஆக்கம்போல துவக்கத்திலேயே நம்மை தயார் செய்து விடுவது நல்ல யுக்தி.

இது ஒரு ஹெவி சப்ஜெக்ட். அதனால்தான் லைட் ரீடிங் வேண்டாம் என்கிற எச்சரிக்கை. மீறி மேலோட்டமாகப் படித்தால் சற்று தலை சுற்றும் என்பது சரிதான்.

இன்னொரு முறை வாசித்துவிட்டு வருகிறேனே!

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//இன்னொரு முறை வாசித்துவிட்டு வருகிறேனே! //



அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னொருமுறை வாசித்துவிட்டு வருகின்றேன் நானும்தான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒரு நினைவூட்டல்: இது லைட் ரீடிங் அல்ல //

இந்த நினைவூட்டல் எனக்காக எழுதியது என்று நானே நினைத்துக் கொண்டேன், பொறுமையாகவும் அமைதியானச் சூழலிலும் வாசித்தேன்.

அசத்தல் காக்காவின் மனசே மனசே எல்லாமே உன் வசம்தான் நிச்சயம் என் மனதில் மாற்றங்களை தந்திருக்கிறது ஆதலால் என்னுள்ளம் என் வசமேயிருப்பதால் தேர்தல் கமிஷனின் அதிரடிச் சோதனைகள் அங்கே அவசியமிருக்காது.

காக்கா மிக நாட்களுக்குப் பிறகு மிகவும் மன திருப்தியுடன் நான் வாசித்த பதிவு அதுவும் பொறுமையாக வாசித்த திருப்தியே. இந்தப் பதிவு நம்மள மனசு வச்சுகிட்டுதான் எழுதியிருப்பீங்களோன்னு எல்லோருக்குமே தோன்றும் நிச்சயம் ஏதோ ஓர் உணர்விலே.

sabeer.abushahruk said...

வாசிச்சாசு. உளவியல் அலசல் நன்றாகவே எழுதியிருக்கிறாய், வாழ்த்துகள்! மொத்தத்தில்...

மனம் மலர்ந்தால் - நல்
மார்க்க முண்டு
மனம் தளர்ந்தால் -கீழ்
பாக்க முண்டு!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மருத்துவத்தில் கூட,மனம் பாதி மருந்து பாதி இருந்தால் தான் பூரண குணம் கிட்டும், நிய்யத் சரியாக இருந்தால் நினைத்த எதையும் நிரப்பமாக பெற முடியும், போதும் என்ற மனம் யாருக்கும் இருப்பதில்லை,
"மணம் அமைய மனமே அடிப்படை".

Yasir said...

மனத்தை பற்றி மனதார எழுதி இருக்கிறீர்கள்....இது ஒரு மன ஆராய்ச்சி கட்டுரை ....எல்லாவற்றுக்கும் “மனமே” காரணம் என்பதை அருமையான உதராணங்களுடன் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது...
அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்றார்களோ நம் முன்னோர்கள்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.நீங்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை தவற விட்ட அத்தனை சம்பவங்களும் உங்கள் மனதின் வலிமை குறைந்த தருணம்தான் காரணமாக இருந்திருக்கும்.எவ்வளவு எதார்த்தமான உண்மையான சொல். மனம் என்பது எண்ணக்கலவையா?எதிர்காலச்சிந்தனையா?கடந்தகால நினைவுகளா?வாழும் போதில் காணும் கணவா? என்ன? என்பதை இவ்வளவு அழகாக உலவியல் ரீதியாக விளக்கிய மனொதத்துவ மருத்துவர் சகோ.ஜாஹிரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் நம் சூழலுக்குத்தக்கவாறு நம் நாடிபிடித்து, நம் மதிப்பீடுகளின்,புரிதலின் அளவிற்கு(capacity)க்கு உட்பட்டு அதிகம் எழுதாமல் தேவையை மட்டுமே தருவது என்பது மிகவும் கடினம்.சிலர் சொல்லவேண்டியதை அதிகம் சொல்லுவதும்,அதிகம் சொல்லவேண்டிய இடத்தில் குறைத்து சொல்லுவதும் அவர்களின் நிர்வாக இயலின் கோளாறுதான் அது. ஆனால் சகோ.ஜாஹிர் நம் அதிரை மக்களின் மனம் படித்து(என்னைபோல் அதிகம் விபரம் தெரியாதவர்களும் இதை படிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு)தேவையான அளவில் தந்துள்ள டிப்ஸ் சூப்பர்.

Unknown said...

// நீங்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை தவற விட்ட அத்தனை சம்பவங்களிலும் உங்கள்மனதின் வலிமை குறைந்த தருணம்தான்.//
நிஜமாக நாம் இதுவரையில் யோசிக்காத angle ..........
மிக ஆழமான படைப்பு ....நானும் ரெண்டுதடவை படித்தேன் ...
இந்தமாத்ரியான உயர்ந்த ஆக்கங்களால் அதிரை நிருபரின் வாசகர்களின்
வாசிக்கும் திறன் மேலும் ஆழப்படும்...........
ஜாகிர் காக்கா......... முன்னணி பத்திரிக்கைகளில் வர வேண்டிய அருமையான ஆக்கம்...

Unknown said...

வாழ்க்கையில் அதிக ஒட்டுதல் [State Of Attachments] நிறைந்த மனம் தொடர்ந்து சோதனைகளை சந்திக்கும், பிரச்சினைகளை தன்னுடன் ஒட்டாமல் பார்க்கும் பக்குவம் [ State of Detachment] மனிதனை மகானாக வளர்ச்சி அடைய செய்கிறது, இதை புரிந்து கொள்ளும் சூழல் புத்தகத்திலிருந்தோ , அல்லது வலைப்பூவிலோ கிடைக்காது.
----------------------------------------------------------------------
நாம் நினைப்பது போலவே மற்றவர்களும் நினைப்பார்கள் என வெள்ளை மனதுடன்
நம்புவதும் பிரச்சனைகள் உருவாக வழி வகுக்கும் ...............

அப்துல்மாலிக் said...

மனம் ஒன்ற நிறையதடவை வாசிக்கனும், ஒரு புது கலாச்சாரத்திற்குள் பயணித்த பரவசம். மனம் இருந்தால் மார்க்கமுண்டுனு சும்மாவ சொல்லிருக்காங்க. எதற்கும் ஒரு மனம் வேண்டும், அதை எப்படி கட்டிக்காப்பது என்பதை மனதோடு ஒரு மழைக்காலம் போல அழகா சொல்லிருக்கீங்க. மனக்கட்டுப்பாட்டின் அவசியத்தை வழியுறுத்திய விதம் அருமை , வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

நிம்மதியற்ற மனதை அமைதிபடுத்தும் ஆக்கம். இது போன்ற ஆக்கங்களை தேடிப்பிடித்து படிப்பது இல்லை. உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் மேலும் இது போன்ற ஆக்கங்களை தேடிப்பிடித்து படித்து மனம் அமைதிபெற விரும்புகிறது.

இந்த அற்புதமான ஆக்கத்தை எழுதி எல்லோரும் நீண்டகால பயனைதரும்படி செய்த உங்களுக்கு நன்றி சொல்லாமல் போனால் குற்றம்.

ரொம்ப தங்க்ஸ் காக்கா..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//மனசு முழுக்க பிடிவாதமும், எனக்கு, நான் என்று ஆக வாழும் மனிதர்கள் தொடர்ந்து ஏழ்மையில் இருந்து கொண்டு பணக்காரன் ஆக ஆசைப்படுவது லைசன்ஸ் இல்லாத சாஃப்ட் வேர் வாங்கி அப்ட்டேட் செய்ய ஆசைப்படுவது மாதிரி.//

இது போன்ற உதாரணங்கள் உங்களைப் போன்ற ஆட்களால் மட்டுமே சூவரஸ்யமாக சொல்ல முடியும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//மனத்தின் மீதான விசயங்களில் கவனம் செலுத்தும்போது Metaphysics / Quantum physics போன்ற விசயங்களில் ஆர்வம் தோன்றும் இது அனைத்தும் முஸ்லீமாக இருப்பவர்களுக்கு மார்க்கத்தின் மீதான நெருக்கத்தையும் அதிகப்படுத்தும். இந்தசமாச்சாரங்கள் இன்னும் ஆழமாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கம்போல் “இவன் எந்த குரூப் ஆலு” எனபார்ப்பதில் ஆர்வம் இருப்பதால் மெயின் சப்ஜெக்டை கோட்டைவிட்டு விடுபவர்கள் அதிகம். //

இறுதியாக சொல்லப்பட்ட இந்த வரிகளை ஒவ்வொரு தெருமுனைகளிலும் மிகப்பெரிய பேனரில் எல்லோர் பார்வைக்கும் வைத்து எல்லோருடையை மனதில் உணரவைக்க வேண்டும்.

ஜாஹிர் காக்கா மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி.

அலாவுதீன்.S. said...

சகோ.ஜாகிர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

''நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததே! ஓவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது உண்டு.'' (புகாரி, முஸ்லிம்)

''(நபியே) நீர் கூறுவீராக! உங்கள் உள்ளத்தில் உள்ளதை நீங்கள் மறைத்தாலும் அல்லது வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அறிவான்.'' (அல்குர்ஆன் : 3:29)

நல்லதொரு பதிவு, வாழ்த்துக்கள்!

ZAKIR HUSSAIN said...

இந்த் ஆர்டிக்கிள் எழுத நான் ரொம்ப யோசித்தது உண்மை. ஏனெனில் படிப்பவர்களுக்கு பிடிக்குமா, புரியுமா என்பதல்ல எல்லா விசயங்களையும் எழுதி விட முடியுமா எனும் சவால்தான்..ஏனெனில் இது ஒரு பெருங்கடல்.
//சகோ.ஜாஹிர் நம் அதிரை மக்களின் மனம் படித்து(என்னைபோல் அதிகம் விபரம் தெரியாதவர்களும் இதை படிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு)தேவையான அளவில் தந்துள்ள டிப்ஸ் சூப்பர்.// CROWN
சகோதரர் கிரவுனின் உற்சாக வார்த்தைகளை படித்தவுடன் ஓரளவு ரீச் ஆகியிருப்பதும் தெரிய வந்து தைரியமாக இதை எழுதலாம் எனும் எண்ணமும் வந்தது.அது சரி உங்களை ஒரு 'அதிகம் தெரியாதவர் என வர்ணித்து இருப்பது அவை அடக்கம் கருதியா?...இதை யாரும் நம்பப்போவது இல்லை..என்னையும் சேர்த்துதான். ஒவ்வொரு விசயத்தையும் பல ஆங்கிள் கண் கொண்டு பார்ப்பவர் நீங்கள் உங்களுக்கு ஒன்னும் தெரியாது என்பது தேர்தல் வாக்குறுதியை விட பொய்யானது.

//இந்தமாத்ரியான உயர்ந்த ஆக்கங்களால் அதிரை நிருபரின் வாசகர்களின் வாசிக்கும் திறன் மேலும் ஆழப்படும்....// HARMY
என் எண்ணமே அதுதான் ஹார்மி...நமது வாசிப்புகள் கூட உயர்ந்த ரசனைகளை கொண்டுஇருக்க வேண்டும்.
//எதற்கும் ஒரு மனம் வேண்டும், அதை எப்படி கட்டிக்காப்பது என்பதை மனதோடு ஒரு மழைக்காலம் போல அழகா சொல்லிருக்கீங்க. மனக்கட்டுப்பாட்டின் அவசியத்தை வழியுறுத்திய விதம் அருமை ,// ABDUL MALIK
சொல்லவந்த விசயத்தை அழகாக இயற்கையை கலந்து எழுதிஅசத்தியிருக்கிறீர்கள்.
நல்ல மனது உள்ளவர்களுக்குதான் இயற்கையை ரசிக்கமுடியும்.
சகோதரர் தாஜுதீன் & அபு இப்ராஹிம் இருவரும் படிக்கும் தாகத்திலும் ஒற்றுமை தெரிகிறது. இருவரின் உற்சாக வார்த்தைகளையும் எனது BENQ 18.5' L E D SCREEN ல் பார்த்தாலும் நேரில் கேட்டதைப்போல் உணர்ந்தேன். [ அப்பாடா..இனிமேல் சபீர் நான் பழைய மானிட்ட்ர் வைத்திருக்கிறேன் என திட்டமாட்டாப்லெ..]
//நிய்யத் சரியாக இருந்தால் நினைத்த எதையும் நிரப்பமாக பெற முடியும்// M.H. ஜஹபர் சாதிக்
நான் அடிக்கடி சொல்லும் வார்த்தை..." உங்களின் ஞாயமான தேவைகளை இறைவன் நிறைவேற்ற தவறுவதே இல்லை.'
சபீர், சாகுல் , அலாவுதீன்..உங்களின் கமென்ட்ஸ் கண்டு சந்தோசம்..கிரிக்கெட் நடப்பதால் பிசியாக இருப்பீர்கள்...கபில்தேவ், கவாஸ்கர் எல்லாம் எத்தனை ரன் எடுத்தார்கள்..[ ரொம்ப பலசாயிட்டோனோ???]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மனமே தொட்டா சிணுங்கி ! இங்கே யாருமே ஒரு முக்கியமான விஷயத்தை கவணிக்கவில்லை ! இப்பதிவிலே இடம் பெற்றிருக்கும் அழகான இரண்டு புகைப் பட்டங்கள் எங்கேயிருந்தோ எடுக்கப்பட்டதால்ல, புலிக்கு பிறந்தது பூணையாகுமா !? அதானே, அழகிய முதல் தலைப்புப் படத்தில் ஆட்டோகிராஃப் இருக்கே பார்த்தீங்களா ???

இந்த ஆக்கத்திற்கு எண்ணங்களின் வண்ணங்களை நிழல் படமாக்கியதும் அவர்தான் Digi tal Photography by "அஃப்சல் ஹுசைன் - Afzal Hussein" நம்ம அசத்தல் காக்காவின் மகனார்.

நன்றி (அசத்தல் காக்கா) அபுஅஃப்சல் ஹுசைன் காக்கா !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மனம் மலர்ந்தால் - நல்
மார்க்க முண்டு
மனம் தளர்ந்தால் -கீழ்
பாக்க முண்டு! ///

இதுக்குத்தான் திரும்ப திரும்ப படிக்கனும்னு சொன்னதுன்னு புரிந்தது ! கவிக் காக்கா மனசை வருடும் வரிகள் தாருங்கள் அஃப்சல் ஹுசைனிடம் புகைப்படம் வாங்கிக் கொள்கிறேன் அதற்காகாவே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// முன்னணி பத்திரிக்கைகளில் வர வேண்டிய அருமையான ஆக்கம்... //

தம்பி அப்துல்ரஹ்மான், அப்படின்னா அ.நி.யும் முதல்படிதானோ ? அல்லது முன்னணி வலைத்தளமென்றோ கொள்ளலாமா ?

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நாடி பிடித்து நோய் அறிவதுபோல்
மனதை (பிடித்து)தொட்டு சொன்ன விசயங்கள் அனைத்தும் அருமை

விசயங்களை உள்வாங்கிக்கொள்ள தாமதம் ஆகிவிட்டது காரணம் கிரிகெட்

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
இந்த் ஆர்டிக்கிள் எழுத நான் ரொம்ப யோசித்தது உண்மை. ஏனெனில் படிப்பவர்களுக்கு பிடிக்குமா, புரியுமா என்பதல்ல எல்லா விசயங்களையும் எழுதி விட முடியுமா எனும் சவால்தான்..ஏனெனில் இது ஒரு பெருங்கடல்.
//சகோ.ஜாஹிர் நம் அதிரை மக்களின் மனம் படித்து(என்னைபோல் அதிகம் விபரம் தெரியாதவர்களும் இதை படிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு)தேவையான அளவில் தந்துள்ள டிப்ஸ் சூப்பர்.// CROWN
சகோதரர் கிரவுனின் உற்சாக வார்த்தைகளை படித்தவுடன் ஓரளவு ரீச் ஆகியிருப்பதும் தெரிய வந்து தைரியமாக இதை எழுதலாம் எனும் எண்ணமும் வந்தது.அது சரி உங்களை ஒரு 'அதிகம் தெரியாதவர் என வர்ணித்து இருப்பது அவை அடக்கம் கருதியா?...இதை யாரும் நம்பப்போவது இல்லை..என்னையும் சேர்த்துதான். ஒவ்வொரு விசயத்தையும் பல ஆங்கிள் கண் கொண்டு பார்ப்பவர் நீங்கள் உங்களுக்கு ஒன்னும் தெரியாது என்பது தேர்தல் வாக்குறுதியை விட பொய்யானது.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்னை பற்றிய உயரிய மதிப்பீடுக்கு நன்றி சொல்வதுடன் அதற்கு தகுதியானவனாக என்னை ஆக்கிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.(எப்படி???(மூளை) சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வர??? என்ன சபிர் காக்கா,அபுஇபுறாகிம் காக்கா நான் சொல்வது சரிதானே???

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum Zakhir,
Once again you have proved that you are the master of all subjects. I was wondering how you are going to elucidate a complicated but delicate issue because if you slip in one step the orthodox and conservatives will come and fight with you. If you go deep into the the ideals of Islam which provides a lot of information about this concept, it may appear too vague to an ordinary reader. (Shabeer did you teach Zakhir about Meta Physics and Quantum Mechanics?)
To be more frank with you, I love the style of your writing. I do remember my good old days when I used to read the Titbits of Tamil Vaanan. Your approach really resembles him and you are so successful in reaching all kids of audience.
Actually I planned to contribute an article on the subject of character building and I was in a dilemma whether our AN brothers will appreciate it or not. Your endeavor encouraged me to send my article to AN soon. (What Thajudeen and others do you accept my article?).
Wassalam
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Your endeavor encouraged me to send my article to AN soon. (What Thajudeen and others do you accept my article?).//

NASஐயா : இதென்ன கேள்வி... உங்களின் ஆக்கத்தினை வழிமேல் விழிவைத்து வரவேற்க காத்திருக்கோம், இனிமேல் அப்படி ஒரு ஐயேமே வேண்டாம் இங்கிருப்பவர்கள் உள்ளதையும் வாசிப்போம் உள்ளத்தில் உள்ளதையும் வாசிப்போம் அது மட்டுமல்ல அவர்கள் யாவரையும் நேசிப்போம் அப்படியே !

sabeer.abushahruk said...

//all kids of audience//

I guess it supposed to be " all kinds of audience"? I am not picking on the Master but meant not any misunderstanding.

//(Shabeer did you teach Zakhir about Meta Physics and Quantum Mechanics?)//

you mean the way you taught 'liquid lense' to me? no sir, Zakir reads more than me these days. And I strongly believe he knows not much about those theories but only the concept of 'em. Let Zakir clarifies.

your article is anxiously awaited and please be prepared for interpretations as people will have different opinions in career building issues. ;-)

ZAKIR HUSSAIN said...

To Bro N.A.S

Wa Alaikkum Salam Brother,
It is extra booster for me that i have your comments. The way you have explained & understood shows that how deeply you might have involved in readings..[ Over all... all kind of subjects]

Today i had surprise call from Bro.CROWN..[ first time talking to him through telephone...such a wonderful person to get to know]

He too told me that this article resembles Lena Tamilvanan writings..to be frank with you I did not read much of his. But a lot of Sujatha's as you know me from my boy hood. [ or child hood in boy hood]

What sabeer wrote is true...i read a lot. I cannot sleep without reading...may be addicted? [ i have to change...this is not good..it will stop me to go to other stages in my life]

We are eagerly waiting for your article to be published.

Zakir Hussain

Ahamed irshad said...

அருமையான‌ ஆர்ட்டிக்கிள்..சில‌ விஷ‌ய‌ங்க‌ளை நீங்க‌ள் தொட்ட‌து..ப்ச் அருமை!!

Riyaz Ahamed said...

சலாம்,
மனதை சரியாக பயன்படுத்துவதில் தவறு ஏற்படும் தருணம்தான் உலகில் முதன் முதலில் துரோகம், பொய், ஏமாற்று வேலை எல்லாம் உருவானது- உண்மையானது மனசை சரியா பயன் படுதாததின் விளைவு தான் - ஒருவர் தனது மனைவியுடன் சண்டை பல வருடம் பேசவில்லை, சொல்லும் காரணம் எல்லாம் " என்னை மதிக்கவில்லை... நான் டீ கேட்டபோது உடனே தரவில்லை, என் பெற்றோரிடம் சரியான உறவு இல்லை, டீசன்சி பத்தாது,- வாழையடி வாழைய இன்னும் சிலர் இதை தான் கெளரவம் என தப்பா நினைக்கிறாங்க, ரொம்ப ஹைடெக்கான கட்டுரை சூப்பர் கண்ணா ....
















சூப்பர் கண்ணா ....

cheena (சீனா) said...

அன்பின் ஜாகீர் ஹூசேன்

அஸ்ஸலாமுலைக்கும்

இவ்வலைப்பூ இஸ்லாமியர்களுக்கு மட்டுமான வலைப்பூவா ? மறுமொழிகள் இஸ்லாமியர்கள் மட்டுமே இட்டிருக்கிறார்களே ! மற்றவர்கள் படிப்பதில்லையா ?

நல்வாழ்த்துகள் ஜாகீர் ஹூசேன்

நட்புடன் சீனா

ZAKIR HUSSAIN said...

சகோதரர் சீனா எனும் மரியாதைக்குறிய மூத்த பதிவர் அவர்களுக்கு....

"தமிழ்" வாசககர்களுக்கு மட்டும் உள்ள வலைப்பூதான் இது. ஆனால் பதிவு இட்டவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வுதான். நான் எப்பொதும் எல்லா மதத்தினர்களும் படிக்கவேண்டியே எழுதுகிறேன். என் ஆர்டிக்கிள் [ முன்பு வந்தவைகளை] படித்து பாருங்கள் ...நிச்சயம் அது தெரிய வரும்.

உங்கள் வருகைக்கு நன்றி சொல்லி மீண்டும் வாருங்கள் என கோரிக்கையுடன்

ZAKIR HUSSAIN

crown said...

சகோதரர் சீனா அவர்களே! நாம் இந்தியர்தான், தமிழர்தாம், சோதரர்கள் தாம்
இது ஊரின் பேரில் வலைத்தளம் நடத்துவதால் இந்த தளத்திற்கு வருகை
தரும் பெரும்பாலோனோர் முஸ்லிம் மதத்தினராக இருப்பது ஒரு தற்செயலே!
ஊரின் பிரதான வளர்சிக்கு ஆரம்பிக்கப்பட்ட தளம் என்பதால் இப்படி தோன்ற
லாம்.ஆனால் ஊரில் உள்ள மற்ற மத சகோதரகள் வரக்கூடாது என்கிற
ஊர் கட்டுபாடெல்லாம் இல்லை. மேலும் உக்களை போல் உள்ள பதிவர்களும்
இதில் பங்கெடுப்பதை மனதார வரவேற்கிறேன். நீங்களும் பிறருக்கு அறிமுகப்
படுத்துங்களேன். நீங்கள் நன்கு அறிந்த மலிக்கா எங்கள் ஊரைச்சேர்ந்தவர்தான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.