Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முதல்வர்கள் - அன்று முதல் இன்று வரை... 28

அதிரைநிருபர் பதிப்பகம் | April 06, 2011 | ,

PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 


அன்றொரு நாள் நானும் முதல்வனாக(வே) இருந்தவன் தான் என்று சொன்னால் நம்பிடவா போறீங்க, மெய்யாலுமே நான் முதல்வனாக தேர்ந்தெடுக்கப் பட்டேன், பரிசு மேடையிலே நின்றேன் ஏழாம் வகுப்பில் வினாடிவினா போட்டியில் வெற்றி பெற்றதுனாலே ! ஆனால் அங்கே எனக்கென்று அரியனையில்லை அமர்வதற்கு ஆதலால் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து எழுந்தவர்களும் எழமால் இருப்பவர்களும் யாரென்று வாசிச்சுட்டு காத்திருங்கள்....

விரைவில் அதிரைநிருபரில் கேள்வி ஒன்றுதான் பதில்கள் இரண்டாக ஒரு சிறப்புப் பதிவு வரயிருக்கிறது !!!

1920-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடந்தது ! தமிழக முதலமைச்சர்களை 'Premier’ என்றும் 'பிரதம மந்திரிஎன்று அழைக்கப்பட்டனர் அன்று முதல் இன்று வரை தமிழக முதலமைச்சர்களாக இருந்தவர்களின் தொகுப்பு இங்கே:-

17.12.1920 முதல் ஆகஸ்ட் 1921 வரை - 'அகரம்சுப்பராயலு ரெட்டியார்

தமிழகத்தில் 'நீதிக் கட்சிஎன்ற 'ஜஸ்டிஸ் பார்ட்டியைச் சேர்ந்த கடலூரைச் சேர்ந்தவரும் பிரபல வழக்கறிஞருமான 'திவான் பகதூர்அகரம் சுப்பராயலு ரெட்டியார், 1920-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தமிழக சட்டசபைக்கு முதன்முதலாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

உடல்நிலை காரணமாக 1921-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் (இப்போதுமிருக்கிறாரே ஒருத்தர் ஆறாவதாக வந்திட !).

17.12.1921 முதல் 3.12.1926 வரை - பனகல் ராஜா

'பனகல் ராஜாவின் முழுப் பெயர் 'ராஜாராமராயநிங்கர்’, உடல்நிலை காரணமாகத் தமது பதவியை இடையிலேயே ராஜினாமா செய்துவிட்டுச் சென்றார்!

4.12.1926 முதல் 27.10.1930 வரை - டாக்டர் பி.சுப்பராயன்

1926-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 'சுயராஜ்யக் கட்சியினரால் (காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு) கவரப்பட்ட 'நீதிக் கட்சியின் ஆதரவில் இருந்த டாக்டர் பி.சுப்பராயன், 'Premier’ஆனார். 1930-ம் ஆண்டு அக்டோபர் 27-ல் பதவியில் இருந்து விலகினார்!

27.10.1930 முதல் 4.11.1932 வரை - 'பொலினிமுனுசாமி நாயுடு

'இவர் கொண்டுவந்த தீர்மானத்தினால், கட்சிக்குள் அபிப்ராய பேதங்கள் வலுத்தன. இதனால் 'பொலினிமுனுசாமி நாயுடு அதன் பிறகும் முதலமைச்சராகப் பதவி வகிப்பது இழுக்கு என்று கருதி ராஜினாமா செய்தார்!

5.11.1932 முதல் 4.4.1936 மற்றும் 25.8.1936 முதல் 31.3.1937 வரை - பொப்பிலி ராஜா.

நீதிக் கட்சியைச் சேர்ந்த இவர்,சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிறகு, திடீரென உடல்நலமின்றிப் போய்விட்டது. சிகிச்சைகள் முடிந்து 1936 ஆகஸ்ட் 25-ல் மீண்டும் பிரீமியராகப் பதவிக்கு வந்தவர், ஏழு மாதங்கள் கழித்து அவராகவே விலகிவிட்டார்!

4.4.1936 முதல் 24.8.1936 வரை - பி.டி. இராஜன்

'பொன்னம்பல தியாகராஜன்என்பது முழுப் பெயர். பொப்பிலி ராஜா விடுப்பில் சென்ற காலத்தில், இவர் பிரீமியராகப் பதவியில் இருந்தார்!

1.4.1937 முதல் 15.7.1937 வரை - கே.வி.ரெட்டி

1937-ம் ஆண்டு மார்ச்சில் நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சி அதிக இடங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.

15.7.1937 முதல் 29.10.1939 வரை - ராஜாஜி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி, சென்னை சட்டசபைக்கு பிரீமியராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்ற முழுப் பெயருடைய ராஜாஜி 1937-ம் ஆண்டு பதவி ஏற்றார். சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிரீமியராக இருந்தார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் காரணமாக, பிரிட்டிஷாருக்கும் மகாத்மா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு முற்றியது. காந்திஜி, 'எல்லா மாகாண சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருப்பவர்கள் மற்றும் டெல்லி சட்டசபையில் உள்ளவர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எதிராகத் தனி நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட வேண்டும்என அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, ராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார்!

இரண்டாவது உலக மகா யுத்தம்... பிரிட்டிஷார் நாடெங்கும் 'அவசர நிலைபிறப்பித்து இருந்தனர்.

1939 நவம்பர் முதல் 1946 ஏப்ரல் வரை நாடெங்கும் எந்தத் தேர்தல்களும் நடைபெறவில்லை. இந்தக் காலத்தில் தமிழகத்தில் பிரீமியர் யாரும் இல்லை!

30.4.1946 முதல் 23.3.1947 வரை - டி.பிரகாசம்

அடுத்து 1946-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் பிரபலமானவருமான டி.பிரகாசம் சட்டசபைக்கு பிரீமியராகப் பதவி ஏற்றார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே டி.பிரகாசம் மந்திரி சபை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்து (அப்பவே ஆரம்பிச்சுட்டாய்ங்க சித்து வேலையை), சட்டசபையில் வாக்கெடுப்பில் அது நிறைவேற்றப்பட்டது. டி.பிரகாசம் தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது!

23.3.1947 முதல் 6.4.1949 வரை - ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

டி.பிரகாசம் மந்திரிசபை கலைக்கப்பட்ட அதே தினம் பிற்பகல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் சட்டசபைக்குப் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் அடைந்த திருநாளை சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடியது.

7.4.1949 முதல் 7.4.1952 வரை - பி.எஸ்.குமாரசாமிராஜா

'இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்அமலுக்கு வந்தது. 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாகப் பொதுத் தேர்தல் நடக்க இருக்கவே, பி.எஸ்.குமாரசாமி ராஜா பதவியில் இருந்து விலகினார்!

12.4.1952 முதல் 13.4.1954 வரை - சி.ராஜகோபாலாச்சாரியார் (எ) ராஜாஜி இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

1953-ம் ஆண்டு இறுதியில் ராஜாஜி அவர்கள் கொண்டுவந்த 'புதிய கல்வித் திட்டத்தைச் சட்டசபையில் பலர் எதிர்த்தனர். ''இந்தத் திட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நான் இங்கு முதலமைச்சராகப் பதவியில் இருப்பதும் நியாயம் இல்லை!'' எனக் கூறி ராஜாஜி தம் பதவியை ராஜினாமா செய்தார்!

13.4.1954 முதல் 12.4.1957, 13.4.1957 முதல் 14.3.1962, 15.3.1962 முதல் 1.10.1963 வரை - கு.காமராஜர்

ராஜாஜி அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதுமே, காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்த, 'பெருந்தலைவர்என எல்லோராலும் அழைக்கப்பட்ட கு.காமராஜர், அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 9 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.

1962-ம் ஆண்டு மூன்றாம் முறையாகவும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும் வேலையில் இறங்குவதற்காகப் பாரதப் பிரதமரின் விருப்பப்படி 1963-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்!

2.10.1963 முதல் 5.3.1967 வரை - எம்.பக்தவத்சலம்

காமராஜர் விலகியதுமே, அதே அமைச்சரவையில் இருந்து எம்.பக்தவத்சலம் பதவியேற்றார். இவரது ஆட்சியில் அரசியல் இடைஞ்சல்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன.

1967-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாட்டில் சட்டசபைக்கான பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான - வலுவான கூட்டணி யும் ஏற்பட்டது.

அந்தச் சமயம், வலுவான அமைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் குதித்து, அதில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.

1967-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியோடு தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்!

6.3.1967 முதல் 3.2.1969 வரை - சி.என்.அண்ணாதுரை

அண்ணா என்று அழைக்கப்பட்ட அண்ணாதுரை இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே முதல்வராக இருந்தார். 1968-ல் அவரது உடல்நலன் பாதிப்படைந்தது. அமெரிக்க நாட்டில் சிகிச்சை பெற்று, சென்னை திரும்பிய அவர், 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ல் காலமானார்!

இவர்களைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்களை உங்களுக்கும் தெரியும்தானே !

மு. கருணாநிதி
10.2.1969 முதல் 5.1.1971 வரை
15.3.1971 முதல் 31.1.1976 வரை,
27.1.1989 முதல் 30.1.1991 வரை
13.5.1996 முதல் 14.5.2001 வரை
13.5.2006 முதல் இப்போது வரை

எம்.ஜி.ராமச்சந்திரன்
30.3.1977 முதல் 17.12.1980 வரை
9.6.1980 முதல் 15.11.1984 வரை,
10.2.1985 முதல் 24.12.1987 வரை.

ஜானகி ராமச்சந்திரன் - 7.1.1988 முதல் 30.1.1988 வரை

ஜெ.ஜெயலலிதா

24.6.1991 முதல் 13.5.1996 வரை
14.5.2001 முதல் 21.9.2001 வரை
2.3.2002 முதல் 13.5.2006 வரை

ஓ.பன்னீர்செல்வம் - 21.9.2001 முதல் 1.3.2002 வரை..

வாலைமேய்ச்சலும், வசப்பட்ட ஆவணக் கோப்புகளும், அன்றாடம் கண்ணில் படும் செய்திகளும் இப்படியும் தேடி வெட்டியெடுத்து ஒட்டிக் கோர்த்து இங்கே பதிந்திடக் காரணம் உங்களுக்குத் தெரியாமலா இருந்திடும்.

தொகுப்பு : அபுஇபுறாஹீம்


PLEASE VISIT OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 

28 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமை முதல்வரே! (ஏழாம் வகுப்பில்)
இந்த வரிசையில் எப்போது நம்மவர்கள் வருவார்கள்.
இஸ்லாமியர்களுக்கு எப்போது முதல்வர் பதவி கிடைக்கும்?
இன்றைக்கு தெரிந்து கொள்ளவேன்டிய பயனுள்ள தொகுப்பு வாழ்த்துக்கள்.வளருங்கள்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அதிரை நிருபர் நிர்வாகிகளுக்கு என் தனிப்பட்ட வேண்டுகோள்.அரசியல் செய்திகள்,தகவல்கள்,விவாதம்,கருத்து,குறிப்பு இப்படி எல்லாம் அலசி விட்டோம். உங்கள் நோக்கம் நம் சமுதாயம் அரசியல் விழிப்புணர்வு பெறவேண்டியே அவ்வாறு செய்தீர்கள். ஆனால் இனியும் அரசியல் சம்பந்தபட்ட விசயத்தை தவிர்த்து,வேறு வகையில் முன்னைப்போல் நம் மண்ணை பற்றி அலசக்கூடிய பதிவுகளை கூடிய விரைவில் பதிவீர்கள் என நினைக்கிறேன்.அளவிற்கு மிஞ்சினால்
அரசியலும் போரடிக்கும். நன்றி வஸ்ஸாம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்புள்ள கிரவ்ன்(னு முதல்வர்) அவர்களுக்கு,

பொருள் : கடிதம் எழுதியே காலம் தள்ளும் முதல்வரின் கடுதாசி

நலம் நலம் அறிய ஆவல் !

தாங்கள் வேண்டியிருக்கும் மண்வாசானைகள் நிறைந்த பதிவுகள் கைவசம் (கஜானா) இருப்பில் இருப்பதை தங்களின் கவனத்தில் கொண்டு வருகிறோம் அதோடு மட்டுமல்லாம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் முதல்வர்களை பற்றியும் அவர்களின் நிஜ மற்றும் நிழல்கள் பற்றி விமர்சனமோ / விவாதமோ வைக்கிறோம் அதலால் என் தம்பி (கிரவ்ன்) எதைச் சொன்னனலும் அதனில் நன்றாகவே சொல்லுவான் என்று இந்த (அண்ணாவுக்கு) அரசுக்கும் தெரியும் என்பதை சொல்லித் தெரிவதில்லை.

நமதூருக்கு பல்வேறு நலத்திட்டங்களை கணவு கண்டிட இப்படியா ஆக்க்கங்களும் வேண்டுமென்றுதான் தம்பி(கிரவ்ன்) பதிந்து இருக்கிறேன், ஆகவே, அண்ணாவின் வழியில் தம்பியும் நடைபோட்டு வந்திடுவான் என்று கழகக் கண்மனிகள் அறிந்திடுவார்கள்.

பதிவுக்குள் வருகிறேன் தம்பி(கிரவ்ன்) உன் முன்னால் மண் வாசனன பேசிட முற்றத்தில் மன்றம் கூட்டி கவிபாடலாம், கருந்தரங்கம் நடத்திடலாம், போட்டிகள் வவத்திடலாம் இவைகள யாவௌம் கழக ஆட்சி அமைந்ததும் என்று தப்பிக்க மாட்டேன் இந்த அண்ணா என்றும் உனக்கு (லட்டு) கண்ணா !!

அன்புடன்
(கனவுலக முதல்வன்)

என்ன(டா)ப்பா கிரவ்ன்(னு) கடுதாசி வித்தியமா இருக்கேன்னு பார்க்கிறியா இப்போது இருக்கிற முதல்வரு கடுதாசி எழுதியே காலத்தை கடத்தியவரப்பா ! அதான் இப்படி ஒரு தாக்கம், கவலலயே வேண்டாம் உன் ஆவல்களும் பரிந்துரைகளுக்கும் என்றுமே காக்காவின் பக்கபலம் இருந்திடுமப்பா !

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் தஸ்தகிர்,

தங்களின் கருத்து நியாயமானதே, கவணத்தில் கொள்கிறோம்.

தொடர்ந்து இணைந்திருங்கள்....

ZAKIR HUSSAIN said...

கார சாரமா ஏதாவது / யாராவது எழுதுங்கப்பு...படிச்சி முடிச்ச உடனே 'சுளீர்"னு இருக்கிறமாதிரி...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்புடியா சங்கதி ! சரி சரி ரூட்டை மத்த வேண்டியதுதானுங்க !

தேர்தல் ஜுரமாக இருப்பதனால் - கருணாநிதி நேற்று சொன்னது மட்டும் பதிஞ்சுடுறேனே !

"பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட்டணியிலிருப்பவர்களின் மனங்களை ஒன்றினைத்து கூட்டாச்சி அமைப்போம்னு !? சொல்லியிருக்காருங்க !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரசியல் போரடிக்குமென்றாலும்,இன்றைக்கு காலத்தின் கட்டாயம்,எல்லாமே தேவைதானே!

நாளைய அதிகார வர்க்கத்துக்கு மண்டையிலெ மசாலா ஏத்தனுமே!
இப்போதைய விழிப்புணர்வின் தாக்கம் அவர்களின் பேட்டியிலிருந்தும்,நம்மவர்களின் பேட்டியிலிருந்தும் காணமுடிகிறதே!

இன்றைக்கு அல் அமீன் பள்ளி மற்றும் ரெயில்வே விசயத்தில் அனைவரின் கருத்தும் ஒருமனதாகியது விழிப்புணர்வின் தாக்கமே!

sabeer.abushahruk said...

அரிசியிலிருந்து அதிரை நிருபர்வரை அத்தனையிலும் அரசியியலாகிப்போனதால் ஓவர்டோஸ் உண்மைதான் ஆயினும் அவசியமுமாயிற்றே!

Yasir said...

நல்ல தொகுப்பு வரவேற்க்கதக்கது...சகோ.கிரவுனின் கோரிக்கை ஏற்று எப்ரல் 13 ந் தேதிக்கு பிறகு....கிரவுனுக்கு பிடித்தது போல ஏதாவது போடுங்க....கிரவுனின் விருப்பம் எங்கள் விருப்பம்

sabeer.abushahruk said...

அபு இபுறாஹீம்,

கடுதாசிக் காரருக்கே
கடுதாசியா?
கிரவுனுக்கே குல்லாவா?
தஸ்தகீருக்கே
பாதாம்கீரா?
பதில் கடுதாசி
பதிவுத் தபாலில் வரப்போகுது!

Shameed said...

நல்ல தொகுப்பு வரவேற்க்கதக்கது அதே வேலை MGR போட்டோ போடாதது கண்டிக்கத்தக்கது!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//MGR போட்டோ போடாதது கண்டிக்கத்தக்கது!! // இது மாதிரி கண்டிக்கிறவங்க இதயத்தில் குடியிருக்கிறாறே வெளியில் தலை காட்டினால்தானே தொப்பி போட்ட படம் கிடைக்கும் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நல்ல தொகுப்பு வரவேற்க்கதக்கது அதே வேலை MGR போட்டோ போடாதது கண்டிக்கத்தக்கது!! //

அஸ்ஸலாமு அலைக்கும்,ஹமீத் காக்கா,

இந்த கோபமும் நல்லாதான் இருக்கு (நண்பர் யாசிர் கொஞ்சம் கவனிங்க இந்த கோபத்தை).

கருணாநிதி போட்டோ போடவில்லை என்ற கேள்வி வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால் எம் ஜி ஆருக்கு இன்னும் மவுசு இருக்கு என்பதை மேல் சொன்ன கருத்து வலு சேர்க்கிறது.

ஹமீத் காக்கா, வீடியோ காண்ப்ரஸின் மூலம் செயற்குழு கூட்டி கண்டன தீர்மானம் போட்டுடலாம்.

:)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்புத் தம்பி ச.ஹமீத் இன்னும் மீளவில்லை அவரின் நினைப்பிலிருந்து,

அவரின் இழப்பு
எங்களுக்கு களிப்பு
இன்னுமா அதே நினைப்பு (அன்று தி.மு.க. தலை சொல்லியது)

அவர் ஏழைகளுக்குத்தான் உதவினார் பனக்காரர்களை பணக்காரர்களாகவே பார்த்தார் ஆனால் நாங்களோ எல்லோரயைம் ஏழைகளாகவே பார்க்கிறோம் அதனால்தான் இலவசம் மின்சாரதை தவிர.

கழகத்தில் கரைந்திடு தம்பி
கறந்ததில் பங்கிட்டுக் கொள்ள
கைநீட்டும் இவர்கள் கையை விரித்திடுவர்

எம் ஜி ஆரின் தொண்டர்களுக்கு இன்னாள் முதல்வரின் அழைப்புதானுங்க (அவர் பணியில் வார்த்தை வந்துடுச்சுங்கோ)

Yasir said...

// MGR போட்டோ போடாதது கண்டிக்கத்தக்கது!!// கண்டிக்கிறோம் !!! கண்டிக்கிறோம் !!! சாகுல் காக்காவிற்க்கு எங்கள் ஆதரவை நீட்டிகிறோம்....

எந்த போட்டாவே போடலாம் காக்கா...சுண்டு விரலே கடிச்சுகிட்டு வெட்கப்பட்டு சிரித்தவாறு இருப்பாரே அந்த போட்டாவா ( அவனா இவன் )--அந்த போட்டா கொடைநாடு அம்மா அவருக்கு காதலை முதன் முதலாக தெரிவிக்கும் போது எடுத்ததாம் அவ்வளவு வெட்கம்..ரொம்ப நல்லவரு

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்


MGR போட்டோ போடும் வரை நம் உண்ணும் விரதம் தொடரும் என்பதை நம் கழக கண்மணிகளுக்கு அறிவித்துகொள்கின்றேன்

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
//கருணாநிதி போட்டோ போடவில்லை என்ற கேள்வி வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது//


அஸ்ஸலாமு அழைக்கும்
இரண்டு T.V.லும் அந்த மஞ்சள் துண்டுடன் கருணாநிதியை பார்த்து பார்த்து வெறுத்துப்போய் தானே MRG போட்டோ கேட்டோம் அதை இதுவரை போடவில்லையோ ஒரு ஆறுதலுக்காக அந்த கருப்பு MGR போட்டோவையாவது போட்டால்தான் என்னவாம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்று தமிழினத் தலை சொன்னது மத்தியிலே கூட்டாச்சி மாநிலத்திலே சுய ஆட்சி...

இன்றும் அதே தமிழினத் தலை சொல்வது மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி மாநிலத்திலே கூட்டாச்சி...

இந்த நேரத்துல எம்.ஜி.ஆரை எழுப்பி பிரச்சாரத்திற்கு கூப்பிட்டா தமினத் தலைக்கு வலிக்குமே ! கொஞ்சம் யோசிங்க கழகக் கண்மணியே !

அதிரைநிருபர் said...

சகோதரர் ஹமீத்,

நீங்கள் கேட்ட முன்னால் முதல்வர் புகைப்படம் பதியப்பட்டுள்ளது.

நீங்கள் கேட்ட புகைப்படம் பதியப்பட்டுள்ளது, நீங்கள் கேட்காத புகைப்படம் சேர்க்கப்பாடுள்ளது.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

கேட்டதையும் போட்டு கேட்காததையும் போட்ட அதிரை நிருபருக்கு தான் எங்கள் ஓட்டு

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அன்னாவுக்கு(அபுஇபுறாகிம்)எழுதிய மடல்,சில கனினியில் ஏற்பட்ட கோளாரினால் தடைப்பட்டுவிட்டது .சில கெட்டதிலும் நல்லது நடக்கலாம் ஆகவே அன்னாவுக்கு ஒரு கடிதம் என்று ஒரு ஆக்கம் எழுதி அதிரை நிருபருக்கு அனுப்ப எண்ணம் எழுந்துள்ளது உங்கள் ஆலோசனையை வரவேற்கிறேன்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…
அபு இபுறாஹீம்,

கடுதாசிக் காரருக்கே
கடுதாசியா?
கிரவுனுக்கே குல்லாவா?
தஸ்தகீருக்கே
பாதாம்கீரா?
பதில் கடுதாசி
பதிவுத் தபாலில் வரப்போகுது!

-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கா நன்றி. பதிவுத்தபாலில் என்பதில்('பதிவு'தபால்)என்று பிரித்து எழுதியிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாய் இருந்திருக்கும் என்பது என் சிற்றறிவிற்கு தோன்றியது. சரியா ,தவறா ? நான் சொன்னது?விபரம் தரவும்(ஏதாவது கேட்டு உங்கள் கவித்துவமான பதில் பெறத்தான் இப்படியெல்லாம்)...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஹமீத் காக்கா,

காலையில் கண்டிக்கதக்கது,

மாலையில் வரவேற்றது.

ஓட்டுப்போடும் நம் மக்களின் மனநிலை இப்படித்தான் உள்ளது என்பதை சூப்பர உணர்த்தியிருக்கீங்க.

:)

sabeer.abushahruk said...

பதிவுத் தபாலில்
பதிவு வந்ததா?
புதிது புதிதாய்
பதியம் போட்டதா?

மதியின் பிம்பம்
நதியில் மிதக்க
மதியிற் சிறந்தவரின்
பதிவு வந்ததா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சில கனினியில் ஏற்பட்ட கோளாரினால் தடைப்பட்டுவிட்டது .சில கெட்டதிலும் நல்லது நடக்கலாம் ஆகவே அன்னாவுக்கு ஒரு கடிதம் என்று ஒரு ஆக்கம் எழுதி அதிரை நிருபருக்கு அனுப்ப எண்ணம் எழுந்துள்ளது உங்கள் ஆலோசனையை வரவேற்கிறேன்.//

அதான் தெரியுமே முண்டாசு கட்டினாலும் முன்னுக்கு நிற்பவனப்பா நீ ! காத்திருக்கோம்

இவைகளை தவிர்க்க்கவே இலவச மடிக் கணினியை கழக ஆட்சி அமைந்ததும் கொடுப்போம்னு சொல்லிட்டய்ங்களே காத்திரு(டா)ப்பா !

அப்துல்மாலிக் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி

அப்துல்மாலிக் said...

1920 லேயே அகரம்’ சுப்பராயலு ரெட்டியார் ஆரம்பித்தாலும் இப்போது முதல் முதல்வர் ராஜாஜியைதான் எல்லோரும் சொல்லுகிறார்கள். நுணுக்கமான தேதியும், மாதமும் சேகரித்தமைக்கு ஒரு சபாஷ். வரலாறு முக்கியமில்லையா

abs said...

jayalalitha two times only cheif minister but you type three time why?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.