Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு உரையாடல்.. with வாவன்னா சார் 18

ZAKIR HUSSAIN | May 02, 2011 | ,


ஹாஜி A.M. அப்துல் காதிர் M.A.B.Ed

அடுத்த பேட்டிக்கான ஆயத்தத்தில் இருக்கும்போது எனக்கு கிடைத்த டெலிபோன் தொடர்பில் கிடைத்தவர்” வாவன்னாசார்” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ஹாஜி A.M. அப்துல் காதிர் M.A.B.Ed அவர்கள்

அவரிடம் நலம் விசாரிக்கும்போது " கொஞ்ச காலமா நடக்கமுடியாமெ , உடல் நலக்குறைவா இருந்தேன்...இப்போது பரவா இல்லை..அனேகமா உங்கள் பேட்டியெ பார்த்த பிறகு எங்களைப்பற்றி என் பழைய மாணவர்களுக்கு ஞாபகம் வரலாம்' என்று சொன்னவுடன் என் மனது கணத்தது. ஒரு ஆச்சர்யம் எங்களுக்கு படித்து கொடுக்கும்போது அவர் எப்போதும் நடைதான், அவர் சைக்கிளில் வந்ததை கூட நான் பார்த்ததில்லை. அதனால் அப்போது அவருக்கு சைக்கிள் ஒட்டத்தெரியுமா எனும் சந்தேகமே இருந்தது.

நீங்கள் படித்தது , பிறகு ஆசிரியர் ஆன காலம் பற்றி.... ?

படித்ததெல்லாம் Khadir Mohideen college [P.U.C] பிறகு ஹாஸ்டல் ஆபிசில் வேலை, பிறகு டிராயிங் மாஸ்டராக எக்ஸாம் எழுதி நமது Khadir Mohideen High School லில் டிராயிங் மாஸ்டராக வேலை பார்த்தது, பிறகு ஒரத்த நாட்டில் ஆசிரியர் பயிற்சிக்காக B.Ed …முடித்து அப்புறம் உங்களுக்கெல்லாம் சரித்திரம் பாடம் எடுத்தது...அப்போது நமது ஸ்கூல் ஹையர் செக்கன்டரி வந்து விட்டது, உங்களுக்கு பாடம் எடுக்கும் முன்னமே நான் தனியாகவே B.A. எக்ஸாம் எழுதி பாஸ் செய்து விட்டேன். அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைவு , எனவே நான் துபாய் போய் வேலைபார்த்தேன் ஒரு பிரின்டிங் கம்பெனியில், என்னுடன் வேலைக்கு வந்தவர்களில் தூர்தர்ஸனில் வேலை பார்த்த அப்துல் ரஜாக் இருந்தார். 1982 லிருந்து 19 வருடம் துபாயில் காலம் ஓடி விட்டது, 1983ல் வாலன்ட்ரி ரிட்டயர்மென்ட்டுக்கு அப்ளை செய்திருந்ததால் எனக்கு இப்போது பென்சன் இல்லாத ரிட்டயர்மென்ட்.

மறக்க முடியாத அனுபவங்கள் / மாணவர்கள் பற்றி... ?

'நீங்கள் எல்லாம் ஹையர் செக்கன்டரி முடிந்து போகும் போது நடத்திய சோசியல் ப்ரேக் அப் தான். அப்போது நான் என்ன பேசினேன் என்று கூட ஞாபகம் இருக்கிறது...'
சார் அது நடந்தது 1980- அல்லது 81 எனநினைக்கிறேன். 30 வருடம் ஓடி விட்டது.அந்த நிகழ்ச்சியின் மொத்தமும் நான் ஆடியோ கேசட்டில் எடுத்தேன் ...இன்னும் அது என் கிட்டே பத்திரமாக இருக்கிறது.- இது நான்

'அப்டியா இன்னும் பத்திரமா இருக்கா ?' மறக்க முடியா மாணவர்களில் மாஜிதா ஜுவல்லரி வைத்திருக்கும் என் மாணவன் சுபஹத்துல்லாஹ்...ஏதோ ஒரு முறை நான் செய்த அறிவுரையை இன்னும் கடைபிடிக்கிறேன் என சொன்னது...

என் வீட்டில் பிள்ளைகள் எல்லோரும் என்னை ஏதாவது இணையத்தில் எழுத சொல்கிறார்கள் ..இன்ஷா அல்லாஹ் உடம்பு ஒத்துழைத்தால் ஏதாவது எழுதத்தான் வேண்டும்.. இப்போது பேரப்பிள்ளைகளுக்கு படித்து கொடுத்து கொண்டிருக்கிறேன்.

….நீங்கள் எழுதனும் சார்...உங்கள் கூடப்பிறந்த தம்பி யூனிகோட் உமர்தம்பி அவர்கள் கம்ப்யூட்டர் உலகில் ஏற்படுத்திய பயன்பாடுகள் மிகவும் உயர்ந்தது.. அவரின் யூனிகோட்தான் நான் இன்னும் பயன்படுத்துகிறேன்.- இது நான்

அது சரி...நான் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னைப்பற்றி உன் கமென்ட்ஸ் என்ன?...

நான் படித்த காலத்தை வைத்தே சொல்கிறேன். ரொம்ப சிம்பிள் டைப் மனிதர். யாரையும் கடிந்து கொள்ளாத அமைதியான ஆசிரியர். இதை எல்லோரும் ஆமோதிப்பார்கள் என்பது அந்த எல்லோருக்கும் தெரியும்...

கொஞ்சம் சிரித்து விட்டு "ஊருக்கு வரும் போது வந்து என்னை பார்த்து விட்டுப்போ"....இந்த அன்பான , உரிமையான வார்த்தையில் டெலிபோனை வைக்க மனமில்லாமல்.."இன்ஷா அல்லாஹ்..வந்து பார்க்கிறேன் சார்' என்று சொன்னேன்.

ZAKIR HUSSAIN

நன்றி: சகோதரர்கள் மொய்னுத்தீன் உமர்தம்பி / அபு இபுறாஹிம்

18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அமைதியின் ஆளுமை !
உரையாடும்போதும் எழிலாடும் மெல்லிய நகைச்சுவை !
இளையவர்க்கும் மூத்தோர்க்கும் மரியாதை செய்வதை செயலில் காட்டி கற்றுத் தந்தது !
படிப்பின் அருமையை உணரவைத்தது !
படித்தவர்களின் பண்பு எப்படியிருக்க வேண்டும் என்று முன்னுதாரனமாக திகழ்வது !

இன்னும் ஏராளம்...

ஜாஹிர் காக்கா அவர்கள் பள்ளியில் நடந்த பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு நன்றாக பாடியிருந்ததால் முதல் பர்சி நிச்சயம் உங்களுக்குத் தான் என்று எல்லோரும் நினைத்திருந்த போது முடிவில் உங்களுக்கு பரிசு கொடுக்கவில்லை சொன்ன காரணம் "அது தெலுங்குப் பாட்டு என்று"

உடணடியாக அதற்கு ஆட்சேபனை தெரிவித்த வாவன்னா சார் அவர்கள் தெலுங்கு தெரிந்த டீச்சரின் முன்னாள் பாட வைத்து அந்தப் பாடல் சரிதான் என்று நிருபித்தது இல்லாமல் பரிசும் வழங்கப்பட்டது என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது !

Yasir said...

சார் அவர்களை பற்றி எனக்கு பரிச்சயம் இல்லாவிட்டாலும்..காக்காமார்கள் சொல்லி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன்...அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்,உடல் சுகத்தையும் தந்து உங்கள் எழுத்துக்கள் அறிவுரைகள் மூலம் நாங்கள் மேலும் பயன் பெற தவ்ஃபீக் செய்வானக ஆமீன்

அதிரைநிருபர் said...

இந்த‌ மாதிரி ப‌திவுக‌ள் எல்லாம் பாதுகாக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ பொக்கிஷ‌ங்க‌ள்..நீங்க‌ள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தொட‌ர்ந்து இணைந்திருப்போம் அதிரை நிருப‌ரோடு..ஜாஹிர் காக்காவுக்கும் வாழ்த்துக்க‌ள்..வாவ‌ன்னா சார் அவ‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி நேர‌த்தை ஒதுக்கி பேட்டி த‌ந்த‌மைக்கு..

அஹமது இர்ஷாத்

மின்னஞ்சல் பின்னூட்டம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாத்தியாராக இருக்கும் போது அறிந்திந்திருக்க வயது தடையாக இருந்தாலும் பழகுவதற்கு தன்மையான நல்ல வாஞ்சையான மாமனிதர் வாவன்னா சார் அவர்கள் வாழ்க பல்லாண்டு ஆரோக்கியத்துடனே!

அபு ஆதில் said...

அஸ்ஸலாமுஅலைக்கும்,
என் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய
வாவன்னாசார் அவர்கள், ஆசிரியர்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம்.
ஆரோக்கியமான நல் வாழ்விற்கு அல்லாஹ்விடம் துஃஆச் செய்கின்றேன். எங்களுக்காக எழுதுங்கள் சார்.

Anonymous said...

மின் அஞ்சல் வழி கருத்து
============================

மரியாதைக்குரிய வாவன்னா சார் அவர்களைப் பார்த்து தான் நான் எழுதும்போது தனித் தனி எழுத்துக்களாக எழுதுவதை பழக்கப்படுத்திக் கொண்டேன், அவர்க்ள் மிகச் சின்றந்த ஓவியர், காந்தியை பேனாவை எடுக்காமலே ஒரே கோட்டில் வரைந்து காட்டியவர்கள்.

ஒரு முறை சைக்கிளில் பள்ளிக் கூடம் சென்று கொண்டிருக்கும்போது அவர்களும் ரங்கராஜன் சார் அவர்களும் எதிரே வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரையும் கண்டதும் கீழிறங்க முயற்சித்து தோற்றேன் அப்படியே சைக்கிள் இடப்புறம் சறுக்கி முல்லில் விழுந்தேன் நல்ல வேலை காயங்கள் இல்லை உடனே ஓடி வந்து தூக்கி விட்டு சொன்னார்கள் மரியாதை மனதளவிலும் செயலிலும் இருந்தால் போதும் அதனை வலுக்கட்டாயமாக வரைவைத்தால் இதுதான் நிலை பெறுபவர்களுக்கும் / கொடுப்பவர்களுக்கும் என்று சொன்னது எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.

எளிமையானவர்கள், நிஜத்தினை அப்படியே பிரதிபலிப்பவர்கள்...

மைதீன்
மதுக்கூர்

sabeer.abushahruk said...

வாவண்ணா சாரிடம் நான் புத்தகங்கள் படித்ததில்லை, ஆனால் அவர்களின் புன்னகைகளை படித்திருக்கிறேன்.

ஒவியங்கள் வரைவதைக் கற்றிருக்கிறேன். கற்று பின்னர் உயிரியல் நோட்டுகளில் நான் வறைந்த அத்தனைப் பறவைகளின் அலகுகளும் அவர்களின் புன்னகைகளின் பாதிப்பாக சிரிப்பதைப்போலவே இருந்ததாக எல்லோரும் சொல்வர். அந்த அளவுக்கு நமக்குள் பாதிப்புகளை ஏற்படுத்தி நம் இதயங்களில் நீங்கா இடம் பெற்றவர்கள் வாவண்ணா சார்.

பள்ளிக்கூடத்தைவிட வெளியில் காணும்போதும் வாக்கிங் போகும்போதும் சாருக்கு சலாம் சொல்லிக் கடக்கையிலல் மனம் நெகிழும்.

வாழ்க சார்.

Shameed said...

ஹாஜி ஜனாப் வாவண்ணா சாரிடம் நான் படித்ததில்லை காரணம் நான் ஹை ஸ்கூல் போகும் முன் அவர்கள் துபாய் போய்விட்டார்கள் என நினைகின்றேன்.

இதுபோன்ற நல்லவர்கள் நமது சமுதாயத்தில் நிறைய வல்லவர்களையும் நல்லவர்களையும் உருவாக்கி உள்ளார்கள்,

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்,உடல் சுகத்தையும் தந்து நீடுழி வாழ துவா செய்கின்றோம்

Saleem said...

ஹாஜி வாவன்னா சார் அவர்களை தினமும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் சாதாரனமாக இருப்பர்கள் யாரிடமும் வீன் பேச்சு பேசியதை நான் பார்ததில்லை சில நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்கள் அவர்கள் நீன்ட அயுள் பெற்று நற் சுகத்துடன் வாள எல்லாம் வல்ல இறைவனிடம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

ZAKIR HUSSAIN said...

ஹாஜி முஹம்மது அலியார் சார் அவர்கள் தற்போது 'ஜமாத்' தில் வெளியூர் சென்றிருப்பதாக சொன்னார்கள். வந்த உடன் அவரது பேட்டி வெளியிடலாம்.

சீனிவாசன் சார் பேட்டியும் சீக்கிரம் வெளியிட முயற்சிப்போம்.

To Brother N.A.S, please ready my email to you...i do requested an interview with you...or else email me your hand phone number.. i can call you & interview you.


ZAKIR HUSSAIN

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா, தங்களின் முயற்சி நிச்சயம் பலமுறை பாராட்ட வேண்டும். மிக்க நன்றி காக்கா..

எங்கள் பெரியமாமா உங்களுக்கு பள்ளியில் ஆசிரியர், எங்களுக்கோ வீட்டில் ஆசிரியர். அவர்கள் தான் எனக்கு ரோல்மாடல் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். பொருமையும் அமைதியான குணமும் அவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன். தான் வெளிநாட்டில் இருக்கும் போது பள்ளியில் படிக்கும் மாணவ சொந்தங்களை ஊக்கப்படுத்தும்விதமாக கடிதம் எழுதி அதிக மதிபெண்கள் எடுக்க தூண்டுகோளாக இருந்தவர்கள். தன்மையுடன் கூடிய அவர்களின் பேச்சில் நகைச்சுவையே அதிகம் இருக்கும். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

உங்களுடன் சேர்ந்து நானும் அவர்களுக்காக துஆ செய்கிறேன்.

ஜாஹிர் காக்கா உங்களின் இந்த சிறப்பான அலைப்பேசி பேட்டியை தொடருங்கள்..

HAJA ISMAIL said...

ஆஹா!

என்ன அற்ப்புதமான பேட்டி,' மாஷா அல்லாஹ்'

'வாவன்னா' சார்” அவர்களின் முதுமையான் புகைப்படத்தினை கண்டு மனம் கனத்தது! காரணம் எனது நினைவில் இருப்பதெல்லாம் அவர்களின் இளமையான உருவம்தான்

.நான் காதிர் மொஹைதீன் உயர் நிலைப்பள்ளியில் படித்த 6 - வகுப்பிலிருந்து 9 -ஆம் வகுப்புவரைய்லான காலகட்டத்தில் ,ஓவிய ஆசிரியராக இருந்தார்கள் . பின்னர் நன் 10௦-ஆம், வகுப்பு படிக்கும் போது சரித்திர பாட ஆசிரியராக வந்து முதன் முதலில் 'குவைத்தை; பாடமாக நடத்தியது இன்றும் எனது மனதில் உள்ளது

நான் 'நியூ இந்தியா' கையெழுத்து பத்த்ரிக்கையில் போட்ட படங்களை பள்ளி ஆண்டு விழாவில் பாராட்டி பேசியது இன்றும் என் மனதில் இனிக்கிறது!!

உடல் நலம் பெற்று நீண்டகாலங்கள் நலமாய் வாழ அல்லாஹ் விடம் துஆ செய்கிறேன்

அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில்.
அல். ஜுபைல் சிட்டி , சவுதி அரேபியா

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இவர்களிடம் படித்தது கிடையாது. இவர்களைப்பற்றி படித்தது சுகம்.இவர்களுக்கு வல்ல அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தை தந்து நீண்ட ஆயுளைதருவானாக.ஆமீன்.

N.A.Shahul Hameed said...

Dear Brother Zakhir,
I really appreciate your versatility. The interviews with the most respected teachers, who are indeed the architects of the School education in Adirai are simply superb. Haji SKMH, Haji Aliar Sir and Haji Wavanna Sir are the three personalities who strived hard for inculcating quality education and inspiring discipline among the student mass.
When I see his photo in your posting, I cannot stop thinking about my dear friend Umar Thambi. In the morning hours after Subuh Prayer they both used to go for a walk and at times I may cross them. When I see Umar Thambi and talk to him Haji Wavanna Sir will stand with us silently and pass a smile. He is always a gentle man with pleasing manners. His son Yousuf studied in our college without being known that he is the son of Wavanna Sir. Wavanna sir never demand for any previlleges in our college although he has every right to claim it.
I pray Allah to bless him with long, healthy and peaceful life.
We can meet soon in person Inshya Allah.
Wassalam
N.A.Shahul Hameed

Anonymous said...

வாவன்னா சார் தனது கைப்பட தட்டச்சு செய்து பதிலுரை தந்திருக்கிறார்கள்...

அன்புள்ள ஜாகிர் ஹுசைன்:

வா.. வரையும் மடலோவியம்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னைப்பற்றிய உங்களுடைய கட்டுரையைப்படித்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கட்டுரையைத் தொடர்ந்து என் பழைய மாணவர்கள் எழுதிய கடிதங்களைப் படித்து நெகிழ்ந்து போனேன். நினைவுக்காற்று பக்கங்களைப் புரட்டியது. வகுப்பறையும் அதில் அமர்ந்திருந்த கபடமற்ற முகங்களும்
நினைவில் நிழலாடின.

ஓவிய ஆசிரியர் என்றும், பட்டதாரி ஆசிரியர் என்றும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் என்றும் பரிமாணங்களை மாற்றிக்கொடிருந்த நான் எத்தனை வகையான முகங்களைப் பார்த்திருப்பேன்! இந்த அருமையான முகங்களைப் பார்க்க முடியாமல் பத்தொன்பது ஆண்டு கால அயல்நாட்டு வாழ்க்கை என்னும் கருந்திரை என் கண்களை மறைத்துவிட்டது!
இப்போது திரை மெல்ல விலகத் துவங்கி இருக்கிறது!

+2 வகுப்பு பிரிவு உபசார விழா நடந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்று எழுதி இருந்தீர்கள்!

இப்போது நினைத்துப்பர்க்கும்போது முப்பது நிமிடத்துக்கு முன்னால் நடந்தது போன்று உணர்கிறேன்.

விழாவில் பேசினேன்; "மாணவர்களே, நீங்கள் மாவீரன் நெப்போலியனுக்கு நிகரானவர்கள்! குதிரையில் போகும்போதே அவர் 5 நிமிடம் தூங்குகிர மாதிரி, பாடம் கேட்டுக்கொண்டே குட்டித் தூக்கம் போடுவதில் நெப்போலியனை வென்றவர்கள்!"

மேலும் பேசினேன்: "கணவனை அலுவலகத்துக்கு வழி அனுப்பி வைக்கும் சென்னை குடும்பத்தலைவி ‘பல்லவன் வருவான், பார்த்துப்போங்கள்' என்று சொல்வதைப்போல தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பிவைக்கும் அதிரை அம்மா 'பைக்கு'கள் வரும் பார்த்துப்போப்பா ' என்று சொல்வதைப்போல, மாணவர்களே! நானும் உங்களுக்கு சொல்லி வைக்கிறேன்: 'தேர்வு கடினமாக இருக்கும்; பார்த்து எழுதுங்கள்! "இப்படி இணைய தளத்தில் எழுதுவதற்கு என்னைத் தூண்டிவிட்டது எம் தம்பி எம்.பி . அஹமது ! அதில் தீப்பொறியைத் தூக்கிப் போட்டவர் ஜாகிர் ஹுசைன்!

என் ஒன்று விட்ட சகோதரர் ஹாஜா முஹைதீன்தீன் சார் போல மாணவர்கள் உள்ளத்தை கொள்ளையடிக்க முடியவில்லை! காரணம் நாங்கள் தேர்ந்தெடுத்த பாடங்கள் அப்படி! சித்திரமும் சரித்திரமும் மாணவர்களைக்கவர முடியுமா? விசித்திரம்தான்!

மறக்க முடியாத நிகழ்ச்சிகள்! பல! அவற்றில் ஒன்று மாநில அளவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள 'ஆட்டை' கூட்டிக்கொண்டு மூன்று பேர்கள் (நான், ஹாஜா முஹைதீன் சார், உமர்தம்பி ) சென்னை சென்றோம். ஆடு நூறு மீட்டர் ஓடுவதற்கு நாங்கள் மூவரும் பல கிலோ மீட்டர் பயணித்து நேரு ஸ்டேடியம் அடைந்தோம், அங்கு ஆட்டைக் காணோம்! மண்ணடிக்குள் ஓடி ஒளிந்து கொண்டது! ஆடு கிடைக்காமல் போகவே, போட்டி நிகழும் இடத்திற்கு வந்தோம். போட்டி நடந்தபோதுதான் ஆட்டை நாங்கள் பார்க்க முடிந்தது! தேடு தேடு என்று தேடியும் கிடைத்தது என்னவோ 'தேர்டு' பிளேஸ்தான்! முதலாவதாக வந்து குதிரையாக வேண்டியது, ஆடாகவே இருந்துவிட்டது!

நான் ஆடு என்று குறிப்பிட்டது வேறு யாரையும் அல்ல! எங்கள் மனதை விட்டு ஓடிவிடாத, பள்ளிக்குப்பெரும் புகழைச்சேர்த்துத்தந்த பிரபல மாணவர் ஜனாப் ஜபருல்லாவைத்தான்!

இப்படி எவ்வளவோ சுவையான நிகழ்வுகள்! எல்லாம் வல்ல இறைவன் நல்ல சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தந்தால், கருத்துக்களைப்பரிமாரிக்கொண்டே இருக்கலாம். அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!

வஸ்ஸலாம்,

என் கம்ப்யூட்டர் இன்று போய் நாளை வா.. என்று சொல்லிவிட்டது!

- உமர்தம்பிஅண்ணன்

Yasir said...

மாஷா அல்லாஹ் உங்கள் ஏற்புரயை படிக்கும்போது “ உங்களிடம் படிக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டோமே” என்று ஏங்கத்தோன்றுகிறது....என்ன ஒரு நகைசுவை உங்கள் பேச்சில்...கம்யூட்டர் நாளை வா என்று சொன்னாலும் எங்களுக்கு நீங்கள் 24/7 வேண்டும்...உங்கள் மேலான அறிவுரைகளை தரவேண்டும் ..உங்களுக்கு எங்கள் துவா என்றும் உண்டு

ZAKIR HUSSAIN said...

To வாவன்னாசார்

அஸ்ஸலாமு அலைக்கும் சார்...உங்கள் பதிலை படித்து சந்தோசப்பட்டேன். என்னை சுட்டி எழுதும் எழுத்துக்களில் தவிர்க்க வேண்டிய வார்த்தை ' நீங்கள் / உங்கள் ' போன்ற மரியாதைக்குறிய [ முக்கியமாக பெரியவர்களுக்கு உரிய] வார்த்தைகள்.[இது என்ன இலங்கை வானொலி நிகழ்ச்சியா? என நினைக்க வேண்டாம்]

நான் எப்போதும் உங்கள் மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன். நீங்கள் என்னை மாணவனாக இருக்கும்போது அழைத்ததைப்போல் இப்போதும் அழைக்கவேண்டும் என்பது என் விருப்பம்,

Riyaz Ahamed said...

சலாம்
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் வருங்கலத்தில் இப்படி இப்படி சிறப்பாக இருக்கணும் என ஆசை படுவார்கள் ஆனால் ஆசிரியர் எல்லா பெற்றோரின் பிள்ளைகளும் சிறப்பாக இருக்க பாடுபடுபவர்கள் என்ற விதத்தில் தனி சிறப்பு பெற்றவர்கள் - இவர்களில் எனக்கு பிடித்தவர்களை பார்க்க வேண்டும் என என் மனதில் சின்ன ஜோதியாக எரிந்து கொண்டிருந்ததை தீபிலம்பாக்கிய ஜாகிரை என்னென்னு சொல்றது கிரேட்.5 தேதி வாவன்னசாரை பார்த்தேன், அவருடன் பேசி கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியலே, உபசரிப்பிலும் சார் நம்பர் ஒன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.