Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தாய் நாடா தற்போதிருக்கும் நாடா? 31

அதிரைநிருபர் பதிப்பகம் | June 24, 2011 |

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இந்த கட்டுரையின் தலைப்பே தவறை உணரச்செய்யும் என்று எண்ணுகிறேன். குறிப்பாக இந்த தலைப்பு நமதூர் இளைய உள்ளங்களில் இன்ஷா அல்லாஹ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதோடு என்னுடைய வாழ்வில் முதலும் முழுமையுமாக நடைமுறையில் வரவேண்டும் என்று பேராதரவு பெற்றவனாக எழுதுகிறேன்.

இன்று குறிப்பாக நமதூர் மக்களிடம் தாய்நாடு கடந்து சென்று (பொருளீட்டுகிறானோ இல்லையோ) விட்டால் தனி பாசமும் நேசமும் பாரபட்சமின்றி அவனின் மீது படர தொடங்குகிறது. இது குடும்பமும் சுற்றியிருப்பவர்களும் தருவது. இன்னொரு பக்கம் பொருளீட்டு முறையில் சற்று முன்னேறிச் சென்றால் "அவனுக்குத் தெரியாதா, ஹராம் ஹலால் பாராது மது கடையிலும், வட்டிகடையிலும் நோன்பு தொழுகை இல்லாமல் சம்பாதிக்கிறான்" என்று இழிவும் பொய் பட்டமும் சூட்டப்படுகிறான்.

குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த பெயர் வருவதில்லை என்பது எதார்த்த உண்மை. ஆனால் இதை நான் முழுமையாக எனது அனுபவபூர்வமாக ஆட்சேபிப்பதோடு அனுபவத்தோடு ஆனித்தரமாக எழுதுகிறேன்.

எனது வெளிநாட்டு வாழ்வில் இஸ்லாத்திற்கு இடையூறாக இருந்த நாடுகளில் இஸ்லாமிய நாடே முதன்மை பெறுகிறது என்பது வருந்ததக்க விஷயம், ஏனெனில் முதன் முதலாக குவைத்திற்கு வற்புறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டேன், அங்கு சென்று ஷரீ-அத்திற்கு நூற்றுக்கு நூறு விழுக்காடு முழுக்கும் முற்றுப்புள்ளியே. ஒருமுறை ஜும்ஆ தொழுதுவிட்டு வெள்ளையில் கோடுபோட்ட (செக்டு) வேஷ்டியோடு ஊருக்கு தொலைபேசியில் மனைவி மக்களோடு பேசலாமென்று அருகிலிருந்த அஞ்சல் அலுவலகத்திற்க்குள் நுழைந்தேன் பரிசோதனையாளர் உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். காரணம் கேட்டேன் ஆடையை மாற்றிவர சொன்னார் நம் மன்னுக்கே சொந்தமான முறையில் இந்த நாட்டு ஆண்கள் பெண்களை போன்று காலாடை, அரையாடையோடு வரவில்லையே முழு ஆடையோடு முழுமையாக தானே வந்துள்ளேன் என்றேன் கோபமாக உனது ஐடியை கொடு என்றார், எடுத்தேன் ஓட்டம் திரும்பி பார்க்காது தங்குமிடம் சென்றேன். (இஸ்லாமிய பெண்கள்) தன் உடம்பை 25% மட்டுமே மறைத்திருப்பதையும் அந்நிய ஆண்களோடு பழகுவதையும் பார்த்து வெறுன்டோட பார்த்தேன், கடன் பட்டு வந்துல்லோமே என்ற இக்கட்டான நிலமை இருக்கச் செய்தது இருந்துவிட்டேன் 3, 1/2 ஆண்டுகள்.

பிறகு ஜப்பான் சென்றேன் அல்ஹம்துலில்லாஹ் இன்றும் பசுமை நினைவுகள் உள்ளம் குளிரச் செய்கிறது. மறுபடியும் அந்த அனுபவத்தை அடைய துடிக்கிறது இன்று சவூதி அரேபியாவில் குடும்பத்தோடு வாழும் நம் தமிழகத்து இஸ்லாமியர்களை வாழ்வாதாரங்களை பார்த்தபோது. அல்லாஹ் மன்னிக்க வேண்டும்!

தனக்கு பொருளீட்டுவதே குறிக்கோள் என்பதால் ஷரீ-அத் பிரகாரம் வாழ எவ்வித முயற்சியும் எடுக்காமல் இஸ்லாத்தை குறை கூறுவது பெருங்குற்றமாகும். ஏனெனில் இது எனது அனுபவம் சந்தேகமிருந்தால் என்னோடு ஜப்பானில் இருந்த நமதூர் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள் உண்மை விளங்கும். ஜப்பானில் தொழ முடியாது தொழ சென்றால் வேலை பரிபோகும், கடனை அடைக்க முடியாது என்பதெல்லாம் 100க்கு 100 பொய். அல்ஹம்து லில்லாஹ் 1.5 ஆண்டுகள் ஜப்பானில் இருந்தேன் 1ஆண்டு வேலை செய்தேன் இரண்டு ஜும்ஆ தொழுகைகள் தொழமுடியாமல் விடுபட்டது / கிடைக்கவில்லை. ஒன்று குன்மாக்கனில் இருந்து டோகியோ பிரயானம் செய்தபோது. மற்றொன்று இமிகிரேசனில் பிடிபட்டு உள்ளிருந்தபோது, மற்ற தொழுகைகள் தொழ முடிந்தது ஷரீஅத்தின் சலுகையை பயன்படுத்தி லுஹர் தொழுதேன். இன்னும் பெருமையோடு சொல்லப்போனால் வாரந்தோறும் குத்பாபேருரை ஆற்றும் வாய்ப்பும் கிடைத்தது அல்ஹம்து லில்லாஹ்.

இந்த 1.5 ஆண்டில் 4 தொழிற்ச்சாலைகளில் வேலை பார்த்தேன் எங்கேயும் எனக்கும் என்னோடு வேலை பார்த்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேச இஸ்லாமிய சகோதரர்களுக்கு அலட்சியமும் இடையூறும் இல்லை.

இந்த நேரத்தில் உடம்பை சிலிர்க்க வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை எண்ணும்போது மீண்டும் நான் அங்கு செல்வதே சிறந்ததாக தெரிகிறது. நோன்பு காலங்களில் எனது (சச்சோ) முதலாளி எனக்கு நோன்பு திறக்க எனக்கு பிடித்தமான உணவையே இஸ்லாத்தில் கூடும் என்று அனுமதி பெற்றே வாங்கி தருவார். இன்று ஈரானிய முதலாளியிடம் மாட்டிக்கொண்டு நோன்பு தொழுகை என்று பாராமல் வேலை வாங்குவதோடு முஸ்லிம் என்று இடையிடையே சொல்லி கேவலப்படுதிறார்.

இன்னொரு முறை புதன்கிழமை அன்று புதிதாக வேலைக்கு சேர்ந்தேன் வியாழன் அன்று ஜும்ஆ தொழுகைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக அனுமதி கேட்க போறேன் என்றதும் சுற்றி இருந்தவர்கள் சொன்னார்கள் நேற்று வேலையில் சேர்ந்து விட்டு இன்று அனுமதி கேட்டால் வேலை போய்விடும் என்றார்கள் என்மீது பொருளாதார அக்கறை கொண்டவர்கள் நான் பனிவோடு சொன்னேன் முறையிடுகிறேன் ஏனெனில் அல்லாஹ் என் உள்ளத்தை பார்க்கிறான் கொடுப்பதும் பறிப்பதும் அவனிடமே இருக்கிறது என்றேன்.

நான் இப்படி என் சச்சோவிடம் நாளை பகல் உணவு நேரத்தை 30 நிமிடங்கள் கூட்டித்தருமாறு ஜப்பானியர்களின் பானியிலே கேட்டேன் அப்போது அவர் எனக்கு அனுமதி தட்டும் தரவில்லை ருகூஉ, சுஜூது இரண்டையும் முறையே செய்து காட்டி இதற்காகவா செல்கிறாய் என்றார் நானும் பயந்து கொண்டே ஆம் என்றேன் பிறகு சந்தோஷமாக அந்நாட்டு முறைப்படி குனிந்து ஒரு மணிநேரம் முழுமையாக தந்து அனுப்பிவைத்தார். இதற்கு முன்பு நமதூரை சேர்ந்த அமீன் என்பவர் அங்கு வேலை செய்ததாகவும் பகல் நேரத்தில் இருமுறை அவர் இப்படி தொழுவார் என்றும் பெருமையோடு சுட்டிக்காட்டினார். வரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் இதற்கு? அதே முதலாளி ஹஜ்ஜூப் பெருநாள் அன்று நான் இரவு வேளையில் இருந்தேன் இரவு 8 முதல் அதிகாலை 8 வரை எனது வேலை பெருநாள் தொழுகைக்காக ஸுபுஹுக்கு எல்லாம் பள்ளியில் இருக்கவேண்டும் என்றவுடன் அனுமதி தந்து அந்நேரத்தில் எப்படி அங்கு செல்வாய் என்று கேட்டதோடு என்றில்லாமல் அவரே முன்வந்து நானே அந்த நேரத்தில் உன்னை அழைத்து செல்கிறேன் என்று செய்தும் காட்டினார் என்ன அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் கொடுக்கவில்லை. இஸ்லாம் லேசானது என்று கூறி நாம் தான் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்- அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.

இந்த இடத்தில் உணவு விசயத்தில் சிரமும் குழப்பமும் இருந்தது ஆனால் நம் தாய் நட்டில் இந்த குழப்பமோ சிரமமோ இல்லை இவைகளுக்காகவும் தாய்நாடே சிறந்தது என்கிறேன்.

இன்று அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தின் முதன்மையிடமாக இருக்கும் சவூதியில் பொருளீட்ட வந்துள்ளேன். இங்கும் தவறுகளை தாமாகவே இழைத்து எமாற்றிக் கொள்கிறோம். என்னமோ குடும்பத்தோடு வெளிநாடு வந்துவிட்டால் சுதந்த்திரமாக சுற்றித்திரிய ஷரீ-அத்தையே சிலர் அறிந்தும் தாரை வார்கின்றனர். உலகில் சீர்கேட்டை உருவாக்குவதில் பெண்களே அதிக பங்கு பெறுகின்றனர். இங்கு ஒவ்வொரு இஸ்லாமியரும் அறிய வேண்டிய ஒன்றும் என்னவெனில் ஷரீ-அத்தில் பெண்கள் தனது உடலில் அன்னியரின் பார்வைக்கு திறந்துவைக்க அனுமதி கொடுக்கப்பட்ட இடங்கள் இரு கண் விழிகள் மட்டுமே. உம்ரா, ஹஜ் செய்தவர்களுக்கு தெரியும் தவாபு செய்துவிட்டு திரும்பும் ஆன்களின் இஹ்ராம் ஆடை தோல்புஜம் திரந்திருப்பதையும்,பென்களின் முகம் திறந்திருப்பதையும் அங்குள்ள உலமாக்கள் தடுப்பது. இதுதான் இஸ்லாத்தின் சட்டம். இப்படித்தான் நாம் இருக்கவேண்டும்.

ஒருமுறை நம் சமுதாய சகோதரரால் விருந்துன்ன நான் அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு மாற்று மத சகோதரரும் அவருடை சகாக்களோடு வந்திருந்தார் உணவு உண்டு விடை கொடுக்கும்போது மாற்றுமத சகோதரர் முதலில் அவர் போய்வருகிறேன் என்று புறப்பட (இதுவரை அந்த வீட்டில் எத்தனை பெண்கள் உள்ளனர் என்பதறியாது இருந்தேன்) விருந்துக்கு அழைத்த சகோதரர் தனது துனைவியாரை பெயர் சொல்லி அழைத்தார் அவரும் வந்து தான் உடுத்தி இருந்த ஆடைகளோடு சிரித்துக்கொன்டே போய் வாருங்கள் என்றார், எனக்கு வந்தது கோபம் மற்றுமத சகோதரர் இருப்பதால் பொருமையை கையான்டேன். ஒன்றும் பேச முடியாமல் நானும் வெளியேறிவிட்டேன். பிறகொரு முறை விருந்து கொடுத்தவரின் உறவினரிடம் இது பற்றி வருத்தத்தோடு எடுத்து சொன்னேன் அப்போது அவர் சொன்னார் இது அந்த பெண்ணின் தவறல்ல ஏனெனில் நமது சகோதரர்கள் தான் அவர்களை கட்டாயப்படுத்துகின்றனர் என்றார்.

தாய் நாட்டை விட்டு தவழ்ந்து விட்டால் தான் தோன்றி தனமாக நடக்கலாம் கேட்பாறில்லை என்ற எண்ணம் தானாகவே வந்து விடுகிறது, தாய் நாட்டிலிருந்தால் பெற்றோர் சொந்தம் பந்தமிருப்பதோடு கூடவே இறைவனும் இருக்கின்றான் என்று பயப்படுபவர்கள் எங்கு சென்றாலும் அல்லாஹ் கூடவே இருக்கின்றான் என்பதை மறக்கச் செய்வது ஏனோ? இப்படி செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினால் இதையெல்லாம் பார்த்தால் இங்கு குடும்பத்தோடு வாழ இயலாது, எனக்கு என் மனைவிமேல் பஹ்ட்தினி என்ற மேலெண்ணம் மிகைப்பாகவே இருக்கிறது என்று வாதத்தை தொடுத்து வாயடைக்கச் செய்கின்றனர். அல்லாஹ் விளங்க செய்ய வேண்டும்!

இதை வைத்துப் பார்க்கும்போது தாரத்தோடு வாழ நினைப்பவர்களுக்கு தவழ்ந்த நாட்டை விட தாய் நாடே சிறந்தது என்பது என் கருத்து.

எங்கே வாசகர்களே உங்களின் மேலான சிந்தனையை சிற்பமிடுங்களேன்.
என்றும் அனைவரின் மேலான துஆவை ஆதரவு வைக்கும்,

அப்துர் ரஷீது ரஹ்மானி.
தமாம்.

31 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்லெண்ணமும், இறையச்சமும் ஒவ்வொருக்கும் இருக்கும் பட்சத்தில் எந்த நாடாக இருந்தாலும் வாழ்ந்துவிடலாம்.

இன்றைய சூழழில் குடும்பத்துடன் ஷரீயத் பிரகாரம் வாழ்வதற்கு தகுதியானது தாய்நாடு என்ற தங்கள் வாதம் சரியே என்றாலும், நான் அறிந்த வரை மார்க்க நெறிகளை பேணி தாய் நாட்டில் வாழ்துவருவதை விட தவழ்ந்த நாட்டில் பல வருடங்கள் வாழ்ந்து வருகிறது நிறைய குடும்பங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தாகத்தான் இருக்கும், இதேபோல் எல்லோருமல்ல என்பதையும் நாம் உணரவேண்டும்.

இறையச்சம் கொண்ட எவரும் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் பாதுகாவலும் அவனுடைய கண்கானிப்பு உடணிருப்பதை உணர்ந்தே வாழ்கின்றனர்.

வளைகுடாவில் எத்தனையோ சகோதரர்கள் மார்க்கத்திற்கு ஒவ்வாத உயர்பதவிகள் தேடி வரும்போது துச்சமாக உதறியவர்களை என் அனுபவத்திலும் கண்டு வருகிறேன், ஏன் மேலைநாடுகளிளும் நமது சகோதரர்கள் தனது ஈமானுக்கு பங்கமில்லா வேலை தேடுவதில் அவர்களின் தீவிரம் அதிலும் எத்தனையோ இலகுவாக கிடைக்கும் மார்க்கத்திற்கு புறன்பான வேலைகளை ஒதுக்கியிருக்கின்றனர் எனபதையும் அறிவோம் அல்லாஹ் அவர்களின் ஈமானையும் அவர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துவானாக.

கட்டுரையில் சுட்டிக் காட்டியவைகள் அங்கொன்றும் இங்கொன்றுமே அன்றி எல்லா வெளிநாடு வாழ் குடும்பங்களில் அப்படியல்ல.

எது எப்படியானாலும் ஊரோடு இருப்பது உவகையே, ஊர்விட்டு உலகத்தோடு வாழ்ந்திட வந்ததும் நம் யாவரின் தேவையறிந்தே வலுக்கட்டாயமாகவோ / சந்தர்ப்ப வசத்தாலோ.

sabeer.abushahruk said...

கட்டுரையாளரின் ஆதங்கம் நியாயமானது என்றாலும் இங்கு விதிவிலக்குகளே எடுத்துக்காட்டுகளாக காட்டப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

எதுகை மோனைக்காக தவழ்ந்த ( தலைப்பில் தவந்த)நாடு என்று சொல்லியிருப்பதில் எனக்கு அர்த்தம் பிடிபடவில்லை. தவழ்ந்த: சற்று விளக்கவும்.

பெண்கள் மணிக்கட்டிலிருந்து கைகளும் காதுகள் கூந்தல் மறைத்து முகமும் வெளித்தெறிய ஹிஜாபும் அணியலாம் என அனுமதியிருப்பதாக விளங்கி இருப்பது தவறா?

அலாவுதீன் எங்கே?

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சபீர் : ஹிஜாபை பற்றி விளக்கமாக எழுத வேண்டி இருப்பதால் இங்கு சுருக்கமாக கருத்து பதிந்தால் மனதில் பதியாது. கண்கள் மட்டும்தான் தெரிய வேண்டுமா? முகம் கை தெரிய வேண்டுமா? ஹிஜாப் என்பது என்ன? என்பதை இன்ஷாஅல்லாஹ் விரைவில் கட்டுரையாக பதிகிறேன்.

மார்க்கம் அறியா சிலர் செய்யும் தவறுகளுக்காக எல்லோரையும் குறை சொல்ல முடியாது.
மார்க்கத்தை மறந்து சுதந்திரமாக இருப்பதற்கு வெளிநாடு , உள்நாடு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. உண்மையான மார்க்கம் சிறு வயது முதல் போதிக்கப்பட்டிருந்தால் மார்க்கம் மறக்கப்பட்டிருக்காது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

>கட்டுரையாளரின் ஆக்கம் நல்ல அனுபவ அலசல்,(அரிGகாத்தோ உதைமாசு)

>இதில் எல்லாருமல்ல,மன உறுதியும் இறைபயமும் இருந்தால் எந்த நாட்டிலும்[நீங்கள் சொல்வது போல்(புத்தம் என்று சொன்னாலும்) மதமே இல்லாத நாட்டில் கூட]தவழ முடியும்.

>என் 'சச்சோ'(ஓனர்) தாய்நாடாகிய இந்தியாவை விட அவர் தவழ்ந்த நாடாகிய இங்லாந்தே இஸ்லாமிய பேணுதலுக்கு ஏற்ற நாடு என்கிறார்.இது உண்மைதான்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நண்பன் அப்துறஷீத் தான் பார்த்த அனுபவித்ததை இங்கு பகிர்ந்து கொண்டது சிறப்பாய் இருந்தது. அதே வேளை அதிராம் பட்டினத்திற்கு ஒரு அல்லாஹ்,அரேபியாவிற்கு ஒரு அல்லாஹ்,அமெரிக்காவிற்கு ஒரு அல்லாஹ் என இல்லை.அல்லாஹ் ஒருவனே அவனே நம் ரப்பு இறைவன்.ஆகவே நாடு விட்டு நாடு வந்ததும் மாறிவிடும் சகோதரர்கள் நிச்சயம் தம்மை அல்லாஹ் பார்க்கிறான் என அஞ்சி திருத்தி கொள்ளட்டும். மேலும் எனக்குத்தெரிந்த வகையில் தலைப்பு இலக்கணபிழையுடன் எந்த ஒரு அர்தத்தையும் கொடுக்க வில்லை.(எனக்குத்தெரிந்த சிற்றரிவு படி பார்த்தாலும் இது இலக்கணபிழைதான்) நண்பனே தலைப்பை மாற்ற சொல்லி நிர்வாகத்தினர் கவனத்திற்கு கொண்டு வரவும். ஒரு தரமான இனைய தளத்தில் இது போல் தலைப்பு தவிர்க்கவும். நண்பனே என்னை புரிந்து கொண்டவன் என்பதால் தவறாக நினைக்க மாட்டாய் என நம்புகிறேன்.

crown said...

தவந்த-வெந்த என்று அர்தம் தரும். சிவந்த என்றும் பொருள்படுவதால் மேற்கண்ட கட்டுரையுடன் பொருந்தாத தலைப்பு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன் வந்தால் தலை(ப்பில்)இருக்க வேண்டியதை கிரவ்ன் சொல்வது(ம்)தானே சரிதானே !!

sabeer.abushahruk said...

//மார்க்கத்தை மறந்து சுதந்திரமாக இருப்பதற்கு வெளிநாடு , உள்நாடு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.//

//அதிராம் பட்டினத்திற்கு ஒரு அல்லாஹ்,அரேபியாவிற்கு ஒரு அல்லாஹ்,அமெரிக்காவிற்கு ஒரு அல்லாஹ் என இல்லை.//

மேற்சொல்லப்பட்டிருக்கும் வாதங்களுடன் நானும் உடன் படுகிறேன்.

கிரவுன் போன்ற 'தம்பி'கள் நிறைந்த சபையில் எதுகை மோனைக்கா பஞ்சம்???

"தாய் நாடா தஞ்சம் தந்த நாடா?"
"பிறந்த நாடா பிழைக்கும் நாடா?"
"தாய் நாடா தரங்கெட்ட நாடா?"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அடுத்த வீட்டு காம்பவுண்டில் பிடித்ததையோ அல்லது பிடிக்காததையோ போட்டு விட்டு முகத்தை மூடிக் கொண்டு இருப்பவர்களை என்ன வென்று சொல்வது ?

அப்படியும் இருப்பவர்களுக்கு ஒரு நட்பான வேண்டுகோள் நல்லதையும் ஆக்கபூர்மான விமர்சனங்கள் என்றுமே வரவேற்போம் அதே நேரத்தில் அவர்களும் தங்களையுன் அடையாளப்படுத்திக் கொண்டால் அவர்களின் வாதங்களிலோ அல்லது மறுப்பிலோ நம்பகத்தன்மை ஏற்படும்.

காரணப் பெயரும் சரி / காரியப் பெயரும் சரி இன்றைய இணைய உலகில் கருத்துப் பரிமாற்றமிடுவதும் எதார்த்தமே... இருப்பினும் தனி மின் அஞ்ச்சல் வழியாக தங்களை அறிமுகம் செய்து கொண்டால் நட்பை போற்றிக் கொள்வோமே !

sabeer.abushahruk said...

என்னடா இது மெயின் பிக்ஸரா போயிட்டிருக்கே காமெடியனைக் காணோமே என்று தேட்டமாக இருந்தது.

வந்த வேகத்திலே தூக்கி விட்டுட்டீங்களேப்பா.

சரியாகச் சொன்னால் விமரிசிப்பவருக்கு அல்லது விமரிசிப்பவளுக்கு ( அல்லது எதுக்கோ) முதலில் தன்னை வெளிப்படுத்தும் நேர்மை வேண்டும். பிறகு, மேற்கொண்டு பேசுவோம். குறைந்தபட்சம் தான் ஒரு ஆனா பெண்ணா என்றாவது.

Meerashah Rafia said...

நான் நான்கு வருடம் இந்தியாவில் வேலை செய்துவிட்டு, கடந்த ஒரு வருடமாக சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் என் தனிப்பட்ட அனுபவத்தை பொறுத்தவரையில் தற்போதிருக்கும் நாட்டையே நான் அதிகம் நேசிக்கின்றேன்..காரணம்..


"தாய் நாட்டில், இசுலாத்திலும் சரி(உதாரணம் -குறைந்தது சிறிய சுன்னத்துகள் விடுபடுவது,ஈமானில் பலகீனம் இருந்தால் ஃபர்லே விடுபடுவது), சமூகத்திலும் சரி(உதாரணம் - லஞ்சம், ஆன்-பெண் கலப்படம்) நன்மையின் பக்கம் செல்ல தினம் தினம் சவால்களை தாண்டி வரவேண்டி இருந்தது..

தற்போதைய நாட்டில் தவறு செய்ய நினைப்பவன் தவறின் பக்கம் செல்லலாம், நன்மையின் பக்கம் செல்ல நினைப்பவன் நன்மையை செல்லலாம்..

இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு..



Note:
நன்மையின் பக்கம் அழைப்பதற்கு சிறந்த ஊர் என்னவோ தாய் நாடுதான்..

கற்க தாய் நாடு,
கடைபிடிக்க தற்போதைய நாடு..



MSM(MR)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு..

Note:
நன்மையின் பக்கம் அழைப்பதற்கு சிறந்த ஊர் என்னவோ தாய் நாடுதான்..

கற்க தாய் நாடு,
கடைபிடிக்க தற்போதைய நாடு..//

MSM(mr) : தம்பி, உங்கள் கமெண்டும் cool ! I like it ! :)

இருப்பினும் ரமளானில் எங்கேயிருக்க விருப்பம்(மப்பா) ????

அப்துல்மாலிக் said...

சிந்திக்க வேண்டிய விடயம்...

Shameed said...

அலாவுதீன்.S. சொன்னது…
//மார்க்கத்தை மறந்து சுதந்திரமாக இருப்பதற்கு வெளிநாடு , உள்நாடு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. உண்மையான மார்க்கம் சிறு வயது முதல் போதிக்கப்பட்டிருந்தால் மார்க்கம் மறக்கப்பட்டிருக்காது//

சரியான செய்தி

Shameed said...

crown சொன்னது…
//அதிராம் பட்டினத்திற்கு ஒரு அல்லாஹ்,அரேபியாவிற்கு ஒரு அல்லாஹ்,அமெரிக்காவிற்கு ஒரு அல்லாஹ் என இல்லை.அல்லாஹ் ஒருவனே அவனே நம் ரப்பு இறைவன்//

ஆணித்தரமான செய்தி

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//இருப்பினும் ரமளானில் எங்கேயிருக்க விருப்பம்(மப்பா) ???? //


எங்கே இருந்தாலும் நோன்பு காஞ்சி ரொம்ப முக்கியமுங்கோ

Meerashah Rafia said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
//இருப்பினும் ரமளானில் எங்கேயிருக்க விருப்பம்(மப்பா) ????//

முதல் பத்தில்- தற்போதைய நாட்டில் இருந்து 'ரமழானில் ஹஜ்ஜிற்கு நிஹரான நன்மை கிடைக்கும் மக்காவிலும்,
இரண்டாம் பத்தில்- மண்ணடி மைந்தைனாக,
கடைசி பத்தில்- நார்சக்களும், நகராக்களும்,நன்மைகளும் தொட்டில் காலந்தொட்டு தவழ்ந்து வரும் நம்ம ஊரில் இருக்க விருப்பம்..


இப்போதிற்கு இன்ஷா அல்லாஹ் கடைசி பத்து ஆசையில் பாதி கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//முதல் பத்தில்- தற்போதைய நாட்டில் இருந்து 'ரமழானில் ஹஜ்ஜிற்கு நிஹரான நன்மை கிடைக்கும் மக்காவிலும்,
இரண்டாம் பத்தில்- மண்ணடி மைந்தைனாக,
கடைசி பத்தில்- நார்சக்களும், நகராக்களும்,நன்மைகளும் தொட்டில் காலந்தொட்டு தவழ்ந்து வரும் நம்ம ஊரில் இருக்க விருப்பம்.. //

இளமை துள்ளும் ஆசைகள் !

அப்படின்னா ! கடைசிப் பத்தில் MSM(mr)பார்க்கலாம் அதிரையில் !

Meerashah Rafia said...

//அபுஇபுறாஹீம் சொன்னது…
அப்படின்னா ! கடைசிப் பத்தில் MSM(mr)பார்க்கலாம் அதிரையில் ! //

அதிரை நிரூபர் குழு அனைவரையும் சந்திக்க ஆசைதான்...
பெருநாள் அன்றோ/மறுநாளோ அப்படி ஏதும் ஏற்பாடு செய்தால் சந்தோசம்தான்..ஒரு மினி தூரே போட்டிடலாமே..

இன்ஷா அல்லாஹ் பார்போம்..

rasheed3m said...

புது பொலிவுடன் தம்மை சந்திப்பது இன்ஷா அல்லாஹ் பெருநாள் தினமாக இருந்தால் எல்லோருக்கும் கூடுதலாக நமக்கு சுலபமே, வாய்ப்பு கொடுக்க முயற்ச்சி செய்வீரா மருமகனே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அன்றோ/மறுநாளோ அப்படி ஏதும் ஏற்பாடு செய்தால் சந்தோசம்தான்//

ஓ பேஷா ! செய்திடலாமே இன்ஷா அல்லாஹ் !

rasheed3m said...

பெருநாளன்றே நடந்தால் எல்லோருக்கும் சிரமம் குறைவதோடு குறிப்பாக (MSM)மருமகனுக்கு ஒரு கல்லில் இருமாங்கா தான் போங்க! என்ன (அபு இபுறாஹீம்)மச்சான் புறிந்திருக்குமே.

Meerashah Rafia said...

பெருநாள் அன்று முகம் தெரிந்து பெயர் தெரியா, பெயர் தெரிந்து முகம் தெரியா எண்ணற்ற நிருபர்கள் இங்கு இருப்பதால் சம்சுல் இசுலாம் சங்கத்தை ஒட்டி இருக்கும் நம்ம ஜிம்கான கிளப்'ல் சந்திப்பதா? அல்லது வேறெங்குமா?, யார் யார் வெளிநாட்டிலிருந்து எப்போதும் போல ஓர் இரு மாத கெஸ்ட்'ஆக ஊரு பக்கம் வரபோகிரார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து முடிவெடுத்தால் ஜமாய்ச்சிடலாம் போலிருக்கே..
இன்னும் நேரம் இருக்கின்றது..யோசியுங்கள்..

rasheed3m said...

மருமகனே யோசிச்சு யோசிச்சு ஏற்கனவே எல்லாம் கொட்டிப்போச்சு இன்னமும் அதேமாதிரி யோசிச்சிகிட்டே இருக்காமே சட்டு புட்டுன்னு சாதிக்க பாருங்கமா! யோசிக்க யோசிக்க குழப்பம்தான் ஆதிக்கம் செய்யும்.

Meerashah Rafia said...

rasheed3m சாச்சாக்கு சகோ. அபுஇபுறாஹீம் தான் பதில் சொல்லணும்.. ..நம்மளால முடிஞ்சளவு யோசிச்சி முடிவும் சொல்லியாச்சு..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// (MSM)மருமகனுக்கு ஒரு கல்லில் இருமாங்கா தான் போங்க! என்ன (அபு இபுறாஹீம்)மச்சான் புறிந்திருக்குமே.//

// எப்போதும் போல ஓர் இரு மாத கெஸ்ட்'ஆக ஊரு பக்கம் வரபோகிரார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து முடிவெடுத்தால் ஜமாய்ச்சிடலாம் போலிருக்கே..
இன்னும் நேரம் இருக்கின்றது..யோசியுங்கள்..//


அதனாலென்ன மச்சான்ஸ் மருமக்கள் காக்காஸ் தம்பிஸ்ன்னு இன்ஷா அல்லாஹ் இன்னும் நாட்கலிருப்பதால் யோசிப்போம்!

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//அதனாலென்ன மச்சான்ஸ் மருமக்கள் காக்காஸ் தம்பிஸ்ன்னு இன்ஷா அல்லாஹ் இன்னும் நாட்கலிருப்பதால் யோசிப்போம்!//

நல்லா யோசித்து ஒரு முடிவை சொல்லுங்க பயணத்துக்கு நேரம் நெருங்கிக்கொண்டுள்ளது

crown said...

rasheed3m சொன்னது…
பெருநாளன்றே நடந்தால் எல்லோருக்கும் சிரமம் குறைவதோடு குறிப்பாக (MSM)மருமகனுக்கு ஒரு கல்லில் இருமாங்கா தான் போங்க! என்ன (அபு இபுறாஹீம்)மச்சான் புறிந்திருக்குமே.
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி மீராசாவின் வருங்கால இல்லாளை மாங்க கடிக்க வைக்க கூடிய சந்தர்பம் நடப்பதற்கான முன் நேற்பாட்டு திருமண வைபோகம் தானே? வாழ்துக்கள் தம்பி மீராசா. உம்முடைய திருமணம் சீரும், சிறப்புமாக வல்ல அல்லாஹ்வின் துணை கொண்டு நடந்தேற வாழ்துக்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அப்துல் ரஷீத் ஆலிம் அவர்களின் ஆக்கம் ஏதோ ஆதங்கத்தால் எழுதப்பட்டதல்ல. அயல்நாடுகளில் வாழும் நம் மக்கள் பலரின் வாழ்வில் மார்க்கம் எவ்வாறெல்லாம் பொடுபோக்காக பின்பற்றப்படுகிறது என்ற வேதனையின் வெளிப்பாடு தான் இந்த ஆக்கம். "நம் மக்கள் ஏதோ சூப்பர் மார்கெட் ஆஃபரில் வாங்கப்பட்ட பொருட்களுக்கு கொடுக்கப்படும் பரிசு கூப்பன் மூலம் எளிதில் (முஸ்லிம் பெயர் தாங்கி இருக்கும் காரணத்தால்) சுவர்க்கம் சென்று விடலாம் என்று நினைக்கிறார்களா?"

நாம் எங்கு அடைக்கலம் புகுகிறோமோ அத்துடன் நம் கல்புக்குள் இறையச்சத்திற்கு முழு அடைக்கலம் கொடுத்தாலே நாம் ஈருலக வாழ்வில் வெற்றி பெற முடியும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Yasir said...

சகோ.அப்துல் ரஷீத் ஆலிம் அவர்கள் போட்டிருப்பது ஒரு ஸ்ராங்கான பேஸ்மெண்ட்தான்...ஆனாலும் வெறும் exceptions கேஸ்களையா போட்டு இருப்பதால் அது வீக்காக இருப்பதாக தோன்றுகிறது...ஒரு சிலரின் பொடுபோக்குதன்மையை விவரித்து இருக்கிறார்கள்

சகோ.அலாவுதீன் காக்கா சொன்னதுபோல்

//மார்க்கத்தை மறந்து சுதந்திரமாக இருப்பதற்கு வெளிநாடு , உள்நாடு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. உண்மையான மார்க்கம் சிறு வயது முதல் போதிக்கப்பட்டிருந்தால் மார்க்கம் மறக்கப்பட்டிருக்காது//

இதுதான் உண்மை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.