Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மேகமே... மேகமே ...! ! ! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | July 18, 2011 | , ,

மேகமே மேகமே
அழகழகான ஓவியங்கள்

நீ காட்டும் போதே
எண்ணங்களின் பிரதிபலிப்போ
என எண்ணத்தோன்றும்....

சந்தோசமான மனநிலையில்
உன்
ஓவியங்கள் யாவும் கவிதையே....

சோர்வடைந்த நேரத்தில்
காற்றின் மேல் உன் படிமங்கள்
அசைவின்றி படுத்துறங்கும்....

அந்தி வேலையில்
மலையோடு
நீ
முட்டி மோதும் ஜல்லிக்கட்டு.
அதி காலையில்
வானில்
சிறிதாய் உதயகிரணம்
நீ
அயர்ந்து
மலையின் மடியில்
உறங்கும் அழகை
காணாத கண்ணும் கண்தானோ ?

எத்தனையோ இரவுகளில்
நீ
நிலவின் அருகில் வேகமாக ஓடி
நிலவு ஓடுவதாக
காட்சி மாற்றும் வித்தை...
சுகானுபவம்!

நீ
எங்களை
சூழாத தருணங்களில்
மரத்தோகைகளும் பூக்களும் செடியும்
தளர்ந்து விடும்...
அழகிய மயிலும் தன் வண்ணத்தோகைகளை
வருத்ததுடன் மறைத்து கொள்ளும்.....

நீ
எங்களை
சூழும் செய்தியை
மழைக்குமுன் வீசும் காற்று
உலகெங்கும் அறிவிக்கும்,
அப்பொழுது
மரத்தோகைகளும் பூக்களும் செடிகளும்
ஆனந்தக் கூத்தாடும்
மயிலும் தன்
தோகையை விரித்து
கும்மாளமிடும் அழகு ..நீ
எங்களுக்கு தந்த
ஆனந்தமன்றோ !



எங்கள் மனதில்
கோபம் போட்டி பொறாமை
கருணையின்மை இருக்கும்போதெல்லாம்
வானில் உன்னை நோக்கினால்
கண்களுக்கு புலப்படாத
தூரத்தில் மறைந்து கொள்கிறாய்!

எங்கள் மனதில்
கருணை எனும் பசுமை மரம்
ஆழ வேர்பிடித்து உயர்ந்தோங்கி
வளர்ந்தால்
நீயும் ஆவலாய்
எங்களை மொத்தமாக சூழ்ந்து அரவணைத்து
அன்பென்ற மழை பெய்கிறாய்!

நீ
எங்களுக்கு
எப்பொழுதும்
அருகில் இருக்கணும்
அதற்கு
கருணை மரம் தழைக்கனும்...
தழைக்கும் !


அப்துல் ரஹ்மான்
-----Harmys ----------

31 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அதுர்ரஹ்மன் : நீண்ட நாள் கழித்து பருவமழை பெய்திட மேகக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் !

மென்மையின் தன்மைதான் உங்கள் அனைத்து கவிதைகளின் வரிகள் !

இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது "என்னைச் சுற்றி கவிதைகளும் கட்டுரைகளும் அங்கே நான் மட்டும் நடுப் பக்கத்தில் வரைபடமாக இருந்திட்டால் எப்படியிருக்கும்" !?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மேகத்துக்கே வரவேற்புரை பிரமாதம்.

///நீ
எங்களுக்கு
எப்பொழுதும்
அருகில் இருக்கணும்
அதற்கு
கருணை மரம் தழைக்கனும்...
தழைக்கும்///
.ஆமாம் இருக்கிற நிலம் முழுதையும் ஆக்கிரமித்து மனிதனாகிய நாம் வாழ மட்டும் வீட்டை கட்டிவிடாமல் மரமாகிய பசுமைக்கும் இடஒதுக்கீடு கொடுத்தால் மேகமாகிய அது மழையை பெய்விக்கும்.ஒதுக்கீடு இல்லையேல் பொய்க்கத்தான் செய்யும்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------

முகில் மூலம் முயல் வரைந்து
வான்வெளியில் மேய விட்டு
தரை மயிலை ஆட விட்டு
மலை நுனியை முத்தமிட்டு

வண்ண வான வில்லை
வரவேற்பு வளைவாய் த‌ந்து
வேண்டியதை வரைபடமாய்
வரைந்து காட்டும் வான்மேகம்!

ஊருக்குப்போர்வை விரித்து
உள்ளத்தை குளிர வைத்து
மழைத்துளியாய் கரைந்து வந்து
மண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மேகமே!

அன்பின் தாய்,தந்தையரையும்
ஆசை மனைவி மக்களையும்
பிரிந்து அயல்நாடு செல்வோரை
ஆகாய விமானத்தில் முத்தமிட்டு
எம்மை வழியனுப்பும் வான்மேகம்

வெண் கொக்கை மிதக்க விட்டு
குளிர் காற்றில் விசிறி செய்து
குதுகலமாய் வீசிச்செல்லும் மேகம்
ஊருக்குள் பெய்திடும் வான்மழை

ஆளில்லா வானில் தார்ரோடு போட்டு
சூரிய‌னையும் சாலை ஓர‌மாய் இற‌க்கி
வெட்கப்படும் வெண்நிலவுக்கு
முந்தானையிடும் வான்மேகம்

புல்பூண்டும் போற்றிப்புக‌ழும்
அந்த‌ வ‌ல்லோனின் கிருபைத‌னை
வ‌ண‌ங்கினாலும் வணங்கமறந்தாலும்
வ‌ழ‌ங்கி நிற்கும் அந்த வ‌ல்லோனே!

காற்ற‌டித்து திசைதிரும்பும் க‌ருமேக‌ம்
சாட்டைத‌னை த‌ன்கையில் கொண்ட‌வனே
க‌ருணையுள்ள‌ ர‌ஹ்மானே! காப்ப‌வனே!
இயற்கையை ஆட்சி செய்யும் ஏகனே!

மு.செ.மு. நெய்னா முஹம்மது

sabeer.abushahruk said...

வழக்கம்போலவே இயற்கையோடு ஒன்றும் இக்கவிதை, எழுதியவரின் ரசனைக்கேற்ப தூறலாய்ப் பொழிகிறது. மேகமூட்டத்தையும் மப்பும் மந்தாரமுமாய் இருப்பதையும் உணர வைக்கிறது.

மேகங்கள் உண்டாக்கும் தற்காலிக வடிவங்களில் கற்பனை கோலோச்சுகிறது!

நல்லாருக்கு அப்துர்ரஹ்மான். படங்களும் குளிர்ச்சி!

கிரவுனைத்தான் காணோம் :-(

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

// எங்கள் மனதில்
கோபம் போட்டி பொறாமை
கருணையின்மை இருக்கும்போதெல்லாம்
வானில் உன்னை நோக்கினால்
கண்களுக்கு புலப்படாத
தூரத்தில் மறைந்து கொள்கிறாய்!//

பாவம் மனிதன் பெரும் பாவியாக இருக்கிறான் என்பதை மேகத்துக்கு கூட தெரியும் போல் இருக்கு அதனால்தான் மறைந்துக் கொள்கிறதா?

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு என்பார்கள்.

ஆனால் சகோ அப்துல் ரஹ்மான் மனிதனின் இயல்பு நிலையை சொல்லிய வரிக்கு மெய்யழகு

எனது வாழ்த்துக்கள்.

லெ.மு.செ.அபுபக்கர்

Yasir said...

இயற்க்கையே அழகுதான்..அதனை சகோ.அப்துல் ரஹ்மான் வர்ணித்து தந்தால் அதன் அழகோ தனிதான்...நல்ல கற்பனை

ZAKIR HUSSAIN said...

To Bro HARMY...

//நீ
அயர்ந்து
மலையின் மடியில்
உறங்கும் அழகை
காணாத கண்ணும் கண்தானோ ?//

என்ன வரி இது.....சூப்பர் இயற்கை ரசிப்புத்தன்மை. இதுமாதிரி சமாச்சாரங்களை நான் நிறைய படம் எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் கமென்ட் எழுதும் பகுதியில் போட முடியாதாமே...

மேகத்தை ரசிப்பவர்களுக்கு ' ஆன்டெனா" சரியாக இருப்பதாக சொல்கிரார்கள். அது என்ன மனிதனுக்கு ஆன்டெனா? என வினவுபவர்கள் . N.A.S சாரிடம், அல்லது சபீரிடம் கேளுங்கள்...இது கொஞ்சம் Meta Physics சம்பந்தப்பட்டது.[ இந்த 2 ஆட்களும்தான் நான் சயின்ஸ் படிக்கவில்லை என்று இன்று வரை கொடுமைபடுத்துபவர்கள்.]

ஹார்மி.... ஒரு முறை நானும் தபாலில் எழுதினேன்



பூமியில் பிரச்சினைகளை தீர்ப்பதில்
எனக்கு வானத்தின் மேகம் மறந்தது...


[யாராவது ஜாகிர் உங்க கவிதை வரிகள் நல்லா இருக்குனு எழுதுங்க... இல்லாட்டி வார்த்தைக்கு கீழ் வார்த்தை போட்டு எழுதிய எனக்கு என்னதான் மதிப்பு???]

Yasir said...

//பூமியில் பிரச்சினைகளை தீர்ப்பதில்
எனக்கு வானத்தின் மேகம் மறந்தது../// சூப்பர் டூப்பர் கவிதை கலக்கீட்டீங்க......ஹாப்பி யா காக்கா :)

sabeer.abushahruk said...

//வானும் மறந்தது -வான்கொண்ட
முகிழும் மறந்தது
யாவும் மறந்தது
யான் கண்ட
பூமிப் பிரச்சினைகளை
புரிந்துத் தீர்ப்பதற்கே//

இப்ப நீயே சொல்லு ஆயிரம் பொற்காசுகள் யாருக்கென்று? (நான் தருமி போன்ற உன் மெலிந்த உடலைச் சுட்டவில்லை. உன் அற்புதமான எண்ணத்தை சொன்ன விதம் சுட்டுகிறேன்)

உன் எண்ணம் கவிதை! சொன்னவிதம்...'நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்' ரகம்)

எனிவே, முன் நவீனத்துவ கவித்சிகளில் உன் கவிதையை சேற்கலாம் ஆனாலும் இரண்டு வரி பத்தாதேடா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பூமியில் பிரச்சினைகளை தீர்ப்பதில்
எனக்கு வானத்தின் மேகம் மறந்தது... ///

இன்னுமா மு.க. மாதிரி நெனப்பு !

அசத்தல் காக்கா: எங்களுக்கு வைரமுத்துவை ஞாபகப்படுத்திவுட்டுட்டு இப்புடி மு.க. மாதிரி திடீர் திடீர் திஹார் நெனப்பு கவிதையெல்லாமா ?

இருந்தாலும் கவிதை சுப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர் காக்கா (நானும் தம்பி யாசிர் கட்சிதான்)

சரி காக்கா ஆயிரம் பொற்காசுகளை அறிவிச்சது யாருன்னு சொல்லவேயில்லையே !

காவிக் காக்கா : கவிக் காக்காவூட்டு காம்பவுண்டு கூட கவிதை வரிகளாகத்தான் தெரியும் போல ! :)

sabeer.abushahruk said...

//காவிக்காக்கா//

அபு இபுறாஹீம்,

கைக்கு வாகாக
வாய்த்ததெல்லாம்
எழுதுகிறேன்.
கவிக்காக்கா என்றீர்
நன்றி.

காவியமும் படைக்கவில்லை
காவியிலும் பிடிப்பு இல்லை
பின்னர் ஏன் தான்
என்னைக்
காவிக்காக்கா என்கிறீர்?

crown said...

சபிர் காக்கா உள்பட சகலருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். நலம் நாடுவதும் அதுவே. சில காரணிகளால் முன்பே வர முடியவில்லை மருபடியும் இன்சாஅல்லாஹ் வருவேன். அதற்கு முன் நண்பர் அப்துற்றஹ்மானின் கவிதைக்கு கருத்தாக நண்பர் நைனா எழுதிய கவிதையை கருத்து பகுதியிலிருந்து நீக்கி தயவு செய்து ரஹ்மானின் மேகமே,மேகமே 1, நைனாவின் கவிதையை மேகமே, மேகமே 2 என தனி தலைப்பாகவே வெளியிடலாம். கருத்து என்பதால் அதிகம் கவனிக்கப்படாமல் உள்ளது அந்த நல்ல கவிதை. தனி ஆக்கமாக அதை பதிந்தால் நல்லா கவனிக்கப்படும் . இது என் வேண்டுகோள். இனி நிர்வாகத்தினரின் முடிவு. வஸ்ஸலாம். அன்பன் கிரவுன் தஸ்தகீர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//காவியமும் படைக்கவில்லை
காவியிலும் பிடிப்பு இல்லை
பின்னர் ஏன் தான்
என்னைக்
காவிக்காக்கா என்கிறீர்?///

கவிக் காக்கா ஸாரி காக்கா.... கார் ஓட்டி வந்துட்டு அப்படியே ஹாய கால நீட்டி உட்கார்ந்தேனே அது என்னடான்னா அந்தக் கால் 'க'வுக்கு பக்கதில் வந்திடுச்சு....

உடனே மடக்கிட்டேன் காக்கா ! இருந்தாலும் அந்தக் காவியங்களில் நாட்டமில்லை காவிகளை கோட்டுக்குள் வரவிடுவதுமில்லை !

அட மெய்யாலுமே ஒருக்கால் தப்புதான் காக்கா !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட வாங்க தம்பி கிரவ்ன்(னு): எங்கே ஆளையேக் காணோம் !?

//சபிர் காக்கா உள்பட சகலருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். நலம் நாடுவதும் அதுவே. சில காரணிகளால் முன்பே வர முடியவில்லை மருபடியும் இன்சாஅல்லாஹ் வருவேன். அதற்கு முன் நண்பர் அப்துற்றஹ்மானின் கவிதைக்கு கருத்தாக நண்பர் நைனா எழுதிய கவிதையை கருத்து பகுதியிலிருந்து நீக்கி தயவு செய்து ரஹ்மானின் மேகமே,மேகமே 1, நெய்னாவின் கவிதையை மேகமே, மேகமே 2 என தனி தலைப்பாகவே வெளியிடலாம்.//

கவிதைக்கே கவிதை மொழியின் எழிலாக்கம் செய்யும் உமது வருகை தாமதமேயானாலும்... MSM(n)கவிதையை கருத்தாகத்தான் பதியச் சொன்னார் மேகத்துக்குள் மேகம் முட்டினாலும் அங்கே பிறப்பது மின்னல் தானே அதன் பின்னர் மழையும் தானே !

குளிரூட்டத்தான் நீ இருக்கியே(டா)ப்பா !

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

அட வாங்க தம்பி கிரவ்ன்(னு): எங்கே ஆளையேக் காணோம் !?
அபுஇபுறாஹீம் சொன்னது…
நலம் காக்கா! நைனா சொல்வார் தயவு செய்து அதை தனி பதிவாக போடுங்கள் . நல்ல செய்தியும் நல்ல வரிகளும் தாங்கிய கவிதை இது.இல்லை ஓட்டுக்கு விடுங்கள் அதிக ஓட்டு விழுந்தால் அதை தனி பதிப்பாக பதியுங்கள் .( சபிர் காக்கா பிளீஸ் ஓட்டு போடுங்க) எல்லாரும் ஓட்டு போடுங்க .பிளீஸ்

sabeer.abushahruk said...

வாங்க கிரவுன்,

எத்தனை நாளாச்சு உங்களைப்பார்த்து எனும் பழக்கம் போய், எத்தனைப் பதிவாச்சு உங்களைக் கண்டு என்று பேச்சு வழக்கையும் மாற்றிப்போட்டுவிட்டதே இந்த வலைப்பதிவு!

மிஸ்ஸிங் யு கிரவுன்.

sabeer.abushahruk said...

கிரவுன் கோஷத்திற்கு என் முதல் ஓட்டு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சரி சரி.. மேகம் வந்து கிரவ்ன்(னு) கருத்தில் மழை இங்கே!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜெயித்தாலும் என் ஓட்டு உண்டு Mr.கிரவுன்

Unknown said...

Of course Mr .Crown.Voted:)
I will come back

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நண்பர் அப்துல் ரஹ்மான்,

கடும் வெயிலில் வளைகுடாவில் இருக்கும் எங்களைப் போன்றோருக்கு, மேகக் கவிதையை தந்து இலவசமா எங்கள் மனங்களை குளிருட்டி விட்டீர்கள். ரொம்ப தங்க்ஸ்

//எங்கள் மனதில் கோபம் போட்டி பொறாமை கருணையின்மை இருக்கும்போதெல்லாம் வானில் உன்னை நோக்கினால் கண்களுக்கு புலப்படாத தூரத்தில் மறைந்து கொள்கிறாய்!

எங்கள் மனதில் கருணை எனும் பசுமை மரம் ஆழ வேர்பிடித்து உயர்ந்தோங்கி வளர்ந்தால் நீயும் ஆவலாய் எங்களை மொத்தமாக சூழ்ந்து அரவணைத்து அன்பென்ற மழை பெய்கிறாய்!//

குளிரூட்டும் மேகம் இருந்தாலே மனதில் கருணை ஏற்படும்... ஆகா மிக அருமை...

நீண்டா நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவு வந்தாலும், குளுகுளு வரிகள்.. வாழ்த்துக்கள்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
ஜெயித்தாலும் என் ஓட்டு உண்டு Mr.கிரவுன் //

ஹ்ஹ்ஹாஹா இதை ரசித்தேன்...

நான் எப்பவே ஓட்டுப்போட்டுட்டேன்.. தபால் ஓட்டு Mr. கிரவுன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா: கூகிலானந்தாவிடம் மலேய மொழியில் மாத்திக் கேட்டேன் அவர்தான் இப்புடி மாத்திட்டார்... சரியான்னு கொஞ்சம் பார்த்து சொல்லிடுங்களேன்
---------------------

/ / Penyelesaian masalah di Bumi
Saya terlupa awan ... / / /

MK masih Contoh nenappu!

Menakjubkan Kaká: bagaimana kita ipputi ஞாபகப்படுத்திவுட்டுட்டு vairamuttuvai A tiba-tiba mendadak nenappu kavitaiyellama Tihar?

Kaká சுப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர் itu puisi (walaupun parti muda yacir)

Ya Kaká yang ariviccatu porkacukalai collaveyillaiye ribu!

Kawi Kaká: Puisi Penyair kakkavuttu Kompaun varikalakattan juga ingin tahu! :)
--------------------------

Unknown said...

கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள் ..........
ரசித்த அனைவருக்கும் என் நன்றிகள் .........
நன்றாக படம் இட்ட குழுவிற்கும் நன்றிகள் .............

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மேகத்திற்கு ஓட்டு கேட்டு
கொக்குகள் பேரணி வந்து
வாணவில்லை பேனராக்கி
மின்னலில் மின்சாரம் தந்து

கருமேகத்தை பந்தலாக்கி
மயில்களை ஆட விட்டு
இடி முழக்கம் முரசுகொட்டி
ம‌லையான் வ‌ந்து பூ போட்டு

ம‌ண்வாச‌னை ந‌றும‌ண‌ம் த‌ந்து
தூர‌ல் வ‌ந்து தூவிச்செல்ல
சார‌ல் வ‌ந்து சாம‌ர‌ம் வீச‌
க‌லைக்க‌ட்டும் அதிரை நிருப‌ரே

விருந்து ப‌டைக்க‌ கிர‌வுன் வ‌ந்து
க‌விக்காக்காவின் கூப்பாட்டில்
ந‌ண்ப‌ன் அப்துர்ர‌ஹ்மானின் அழைப்பில்
ச‌கோத‌ர‌ர் ப‌ல‌ர் வாழ்த்த‌

ந‌ல்லாத்தான் இருக்குது உங்க‌ள் கொண்டாட்டாம்
இறைவ‌ன் அருளால் நாமெல்லாம் ந‌ல்லா இருப்போம்...

சும்மா.....லைட்டா.......

க‌ண்ணாமுண்ணாண்டு எழுதும் எம்மை ஒரு க‌விஞனாய் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அங்கீக‌ரிக்கும் அதிரை நிருப‌ருக்கும், அத‌ன் வைடூரிய‌க்க‌ற்க‌ள் போல் ஜொலிக்கும் எழுத்தாள‌ர்க‌ள், சகோதர ந‌ண்ப‌ர்க‌ள், பின்னூட்ட‌ம் மூல‌ம் பின்னி எடுக்கும் அனைத்து ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கும் என் அன்பு க‌ல‌ந்த க‌ல‌ப்ப‌ட‌ ந‌ன்றிக‌ளும், க‌ல‌ப்ப‌ட‌மில்லா ப‌ரிசுத்த‌ து'ஆவும் சென்ற‌டைய‌ட்டுமாக‌....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து...

அப்துல்மாலிக் said...

அருமை, நீங்க இவ்வளவு சொன்ன அந்த மேகம் கொஞ்சம் அமீரகப்பக்கம் தலைகாட்டப்படாதா, சூரியனின் தாக்கத்தால் வாடுகிறோமே இந்த மேகம் இல்லாமல்...

crown said...
This comment has been removed by the author.
crown said...

ஆங்காங்கே! அழகாய் நடை போடும் மேகம் வானில். அது போல மனவானில் அலையும் நினைவுகளாம்.. நல்ல கற்பனைதான்.
மனது சஞ்சலமில்லாத போதில் அமைதியாய் படுத்துறங்கும் குழந்தைபோல, நீயும் தூங்கிபோனாய் வான் மெத்தைமேலே! சரிதான் .... கவிஞரே, கற்பனை சிறகடிக்குது.கண் சொக்கி வார்தை மயக்கி வைக்குது.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அதானே! எப்படி இந்த மேப்படி வித்தை மேகம் கற்றது? தான் ஓடினாலும் ,ஓடாததுபோல் நடக்க , நடிக்க முடிகிறதே! அதிசயம்தான்.ஓடாத நிலாமானை ஓடுவதுபோல் காட்டும் வில்லங்க வேடம் எப்படி மேகம் போட்டது? வேட்டையாடும் வேடன் துரத்தமான் ஓடும் .இங்கே மேக வேடன் ஓடிவர வான் மானாகிய நிலவு நிற்கிறது. ஆனாலும் நிலா ஓடுவது போல் காட்சி பிழையா? கானும் நம் கண்ணில் பிழையா? இப்படித்தான் புவியிலும் சிலர் கண்முன்னே ஏய்து பிழைக்கின்றனர் நம்பவேண்டாம்.விழித்திருந்து வெற்றி அடைவோம்.

crown said...

எங்கள் மனதில்
கோபம் போட்டி பொறாமை
கருணையின்மை இருக்கும்போதெல்லாம்
வானில் உன்னை நோக்கினால்
கண்களுக்கு புலப்படாத
தூரத்தில் மறைந்து கொள்கிறாய்!

எங்கள் மனதில்
கருணை எனும் பசுமை மரம்
ஆழ வேர்பிடித்து உயர்ந்தோங்கி
வளர்ந்தால்
நீயும் ஆவலாய்
எங்களை மொத்தமாக சூழ்ந்து அரவணைத்து
அன்பென்ற மழை பெய்கிறாய்!

நீ
எங்களுக்கு
எப்பொழுதும்
அருகில் இருக்கணும்
அதற்கு
கருணை மரம் தழைக்கனும்...
தழைக்கும் !
----------------------------------------------------------
நற் செயல் செய்து. தீமையை தடுத்து. வாழ்வை செம்மையாக்கி வாழ்ந்தால் பெய்யன மழைபெய்யும் என்னும் நம்பிக்கை தழைக்க, மழையாய் அருளை அழைக்க இன்சா அல்லாஹ் மாதாம் ஒரு போதும் இல்லாத அளவு வான் மழையும், வையகத்தின் தலைவன் அல்லாவின் பரகத்,ரஹ்மத் மழையும் பொழியும் இன்சா அல்லாஹ் பொழியனும் , இன்பத்தில் வழியனும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.