Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இனிக்கிறது இஸ்லாம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2011 | , , ,

தலைப்பே இனிக்கிறது
காரியம் ஆற்றும் செயல்பாட்டில்...
சிலர் நடத்தை கசக்கிறது
வெல்லம் இனிப்பு பொய்யாகாது
அதுபோலவே
இஸ்லாம் என்றும் இனிமைதான்.

நித்தம் நித்தம்
உலகம் மாறும்
மாறாத கொள்கை கோட்பாடு
அதுவே இஸ்லாம்!

இஸ்லாம் மார்க்கம்
இது
சுவர்க்கம் செல்ல வழி சொல்லும்.
நரகம் கொடுமை
அதை
நாடாதிருக்க வழி சொல்லும்..

மண்ணிற்கு ஏற்ற நல் மார்க்கம்
இஸ்லாம் என
மாற்றார் கூட ஏற்கின்றார்.
ஆனால்
சில கயவர்தாம் நம் கடமையதை
செய்ய விடாமல் தடுக்கின்றார்.

எதிரியையும் அன்பாய் பார்த்த நபியவர்கள்
அழகாய் போதித்தது நம் மார்க்கம்!
இதில் அடித்து கொள்வது
நம் சகோதர்தாம்
ஏன்தான் இந்த மூடத்தனம்?

ஒற்றுமை என்னும் கயிறு பிடிக்க
ஓங்கிச் சொன்னது நம் இஸ்லாம்
ஓர் இறைக் கொள்கை
இதுவே
இஸ்லாத்தின் இதயம், நம்பிக்கை.

ஒன்றே குலம் , ஒருவனே இறைவன்
இதுதான்
இனிய
இஸ்லாம்.

ஆண்டி ஆனாலும்
அரசன் ஆனாலும்
எல்லோரும் சகோதர்களே

உயர் குடி
தாழ் குடி இல்லாத
இனிய குடில் இஸ்லாமே!

இஸ்லாமியனாய் இருப்பது
நமக்கு கிடைத்த பொக்கிஷம்!
இதை உணராமல் வீனாய் போவது
நம் நேசம், பாசம் நிறைந்த சுற்றமே!

- CROWN

25 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலைப்பு கேட்டான் தம்பி (கிரவன்)...
இனிக்கிறது இஸ்லாம் என்றேன்...
தந்தியை முந்தியது இனிய வரிகள் !

தட தடவென கொட்டியது வார்த்தைகள்..
அவனிடமிருப்பது தமிழ் அருவி
அதனால்தான் அதிரைநிருபரின் எழிலாய், நிறை நிலவாய், இரவில் மட்டும் வந்து தமிழ் தேன் வடிக்கிறாய(டா)ப்பா !!

இனிக்கிறது வரிகள், நமக்கு மட்டுமல்ல பிற சமுதாயமும் நேசிக்கிறது நம் வரிகளை ஆதலால் வருடத்தான் வல்லவர்கள் நம்மிடையே இருக்கிறார்களே இனியும் வருவார்கள் அவர்களை அழைத்திட இன்ஷா அல்லாஹ் !

Yasir said...

இனியவரிடம் இருந்து இனிப்பான வார்த்தைகள்....இஸ்லாத்தின் பெருமையை இனிமையாக சொல்லி இருக்கிறீர்கள்....

sabeer.abushahruk said...

இஸ்லாம் இனிப்பதில் ஆச்சர்யம் இல்லை. இந்த கவிதையை கிரவுன் எழுத எடுத்துக்கொண்ட நேரம்தான் ஆச்சரியம்.

கேட்ட ஒரு சில நுமிடங்களில் கொட்டியவை இவை.

எனக்கென்னவோ கிரவுனுக்குள்ளே உள்ள ப்ரைனுக்குள் எல்லாம் தயாராக இருப்பதுபோலவும். கேட்பவர்கள் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்போலவும் தோன்றுகிறது. வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

இனி கவிதையைப் பற்றி;
கிரவுனின் எல்லா படைப்புகளிலுமே அநீதிக்கு எதிரான ஒரு கோபம் இழையோடும். அது இதிலும் உண்டு:

//இதில் அடித்து கொள்வது
நம் சகோதர்தாம்
ஏன்தான் இந்த மூடத்தனம்?//

தமிழ் கொஞ்சும்:
//உயர் குடி
தாழ் குடி இல்லாத
இனிய குடில் இஸ்லாமே!//

தீயதைச் சாடும்:

//இதை உணராமல் வீனாய் போவது
நம் நேசம், பாசம் நிறைந்த சுற்றமே!//

இப்படியாக சமூக அக்க்றை மிளிரும் ஆக்கம் தந்த சகோதரனுக்கு (இதான் சான்ஸ், ஒருமையில் அழைத்து அபு இபுராகீம் போல நெருக்கம் வளர்க்க) நன்றியும் துஆவும் (

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். ஒருமையில் அழைக்கும் உரிமை வேண்டும்யென நீங்கள் ஓர்மையுடன் கேட்பதை கூர்மையாய் கவனித்து சிலிர்த்துபோகிறேன்,காக்கா அந்த உரிமை என்றும் உங்களுக்கு உள்ளது . மேன்மையான குணம் படைத்த நீங்கள் ஒருமையில்,உரிமை கொண்டாடினால் சிறுமைஅல்ல, எனக்கு சந்தோசமே!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"இதனை இவன் (கிரவ்ன்) முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்"

என்று சிறுபிள்ளையில் படித்த வள்ளுவ வரிகள் இங்கு ஞாபகத்துக்கு வருகிறது....(என்னா தான் இவனுக்கு ஞாபகத்துக்கு வரலெ...என்று யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது)

அதாவது மேற்கண்ட வரிகளின் விளக்கமென்ன வெனில் "இந்த வேலையை இவனிடன் ஒப்படைத்தால் அதை அவன் செம்மையாக செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து அதை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த வேலையும், கொடுக்கப்பட்ட நோக்கமும் நிறைவேறாது. மக்கர் பண்ணி விடும்...

அது போல் இங்கு அ.நி. தலைப்பு என்னும் ஒரு குதிரையைக்கொடுத்து அதன் மேல் கவிக்ரவுனை அமர வைத்து சவாரி செய்ய வைத்துள்ளீர்கள் (உம் கைங்கரியம் காவியம் பல படைக்க தூண்டும்). உங்களின் முயற்சியும் வீண் போகவில்லை நம்ம தஸ்தகீரும் காற்றை கிழித்து காகிதமாக்கி அதில் நல்லதொரு கவி வரைந்து இங்கு நமக்கு விருந்தளித்துள்ளார்.

எ.டி.எம். கார்டை மட்டும் சொருகுவது (தலைப்பு கொடுப்பது) தான் நம் வேலை அப்புறம் என்ன‌ சடசட வென பணம் வெளியே வந்து விழுந்து விடும்...ஒரு போதும் இல்லை அல்லது பற்றாக்குறை என்று வராது....அதுதான் நம்ம கவிக்ரவுன்......மாஷா அல்லாஹ்...கீப் இட் அப்.....

மு.செ.மு.நெய்னா முஹம்மது.

crown said...

Naina Mohamed சொன்னது…

"இதனை இவன் (கிரவ்ன்) முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்"
..........................எ.டி.எம். கார்டை மட்டும் சொருகுவது (தலைப்பு கொடுப்பது) தான் நம் வேலை அப்புறம் என்ன‌ சடசட வென பணம் வெளியே வந்து விழுந்து விடும்...ஒரு போதும் இல்லை அல்லது பற்றாக்குறை என்று வராது....அதுதான் நம்ம கவிக்ரவுன்......மாஷா அல்லாஹ்...கீப் இட் அப்.....

மு.செ.மு.நெய்னா முஹம்மது.
-----------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்...... அல்லாஹ் மாகா பெரியவன். எல்லாரையும் அல்லாஹ் காப்பாத்தனும். எல்லாபுகழும் அவனுக்கே உரியது. அல்லாஹ் அக்பர். அன்பிற்கு அன்பான நன்றி>

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"இதனை இவன் (கிரவ்ன்) முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்" //

MSM(n)* கிரவ்னுக்கே கீரீடமல்லவா வைத்திருக்கிறீர் !

முணுமுணுத்தது நானாகத்தான் இருந்திருக்கனும்னு எப்படித்தான் MSM(n)மனசுல உதிக்குதோ !!?

மெய்யாலுமே, கரு(வுற்ற)பெற்ற 300 வினாடிகளில் பிறந்த கவிதை வரிகள் !

இது முகஸ்துதி அல்ல நிஜம் !

கிரவ்ன்(னு) திறமை எனக்கறியும் நன்றாக இருப்பினும் மீண்டும் கண்டு திக்காடினேன் "எனக்கு கிடைத்த பதிலில் - சுடச் சுட" என்றுதான் வந்தது ஆதலால் உடனே பதிவுக்குள் வந்திட பரிந்துரையும் செய்யப்பட்டது !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------

sabeer.abushahruk சொன்னது…

//இது முகஸ்துதி அல்ல நிஜம் !//

நீங்கள் சொல்லாவிட்டாலும் இது எப்படி முகஸ்துதியாகும்? முகஸ்துதியின் வரையறை என்ன என்று யாராவது தயை செய்து எனக்குச் சொல்லுங்களேன்.

எனக்குத் தெரிந்து முகஸ்துதி என்பது,

-மூடனை முதல்வன் என்பது
-குயவனை கோமான் என்பது
-கயவனை கலைஞன் என்பது
-கஞ்சனை நல் நெஞ்சன் என்பது
... போன்றவை

எனக்கு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பிடிக்கும், பாராட்டுவேன், அவர் எழுத்தைப் பிடிக்காதவருக்கு அது முகஸ்துதி.

தி மு க பிடிக்காதவனுக்கு கலைஞரின் எதைப்பாராட்டினாலும் முகஸ்துதி.

ஜெயலலிதாவைப் பிடிக்காதவனுக்கு அ.இ.அ.தி.மு.க.வின் எந்த திட்டத்தைப் பாராட்டினாலும் முகஸ்துதி.

நமக்கு விளங்காத அல்லது பிடிக்காத எதையும் வேறு யார் பாராட்டினாலும் முகஸ்துதி என்று அர்த்தம் கொள்வது அபத்தம்.

அலாவுதீன்.S. said...

/// இஸ்லாம் என்றும் இனிமைதான்.
மாறாத கொள்கை கோட்பாடு
அதுவே இஸ்லாம்!
நரகம் நாடாதிருக்க வழி சொல்லும்..
சுவர்க்கம் செல்ல வழி சொல்லும்.
மண்ணிற்கு ஏற்ற நல் மார்க்கம்
எதிரியையும் அன்பாய் பார்த்த நபியவர்கள்
இஸ்லாத்தின் இதயம், நம்பிக்கை
ஒன்றே குலம் , ஒருவனே இறைவன்
எல்லோரும் சகோதர்களே
இனிய குடில் இஸ்லாமே!
இஸ்லாமியனாய் இருப்பது
நமக்கு கிடைத்த பொக்கிஷம்! ///

******************************************************************
அன்பு சகோதரர் தஸ்தகீர்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சகோதரர்: அபு இபுறாஹிம் தலைப்பு கொடுத்தவுடன் அருவியாய்! கொட்டி விட்டீர்கள். அருமை! உண்மையில் இஸ்லாம் இனிக்கிறது! சகோதரரே! வாழ்த்துக்கள்!

அப்துல்மாலிக் said...

//ஆண்டி ஆனாலும்
அரசன் ஆனாலும்
எல்லோரும் சகோதர்களே//

அடுத்தடுத்து ஒன்றாக வரிசையில் நின்னு இறை தொழுகின்றோமே இதுலேர்ந்து தெரியவேண்டாமா இந்த இனிய இலகுவான மார்க்கத்தை...

வரிகள் அருமை க்ரவுன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் கிரவுன்

//எதிரியையும் அன்பாய் பார்த்த நபியவர்கள்
அழகாய் போதித்தது நம் மார்க்கம்!
இதில் அடித்து கொள்வது
நம் சகோதர்தாம்
ஏன்தான் இந்த மூடத்தனம்?//

சரியாக சொன்னீர்கள், ஏனோ தெரியவில்லை நம்மில் பெரும்பாலானோர் இதை உணர்வதில்லை. நல்ல நினைவூட்டல்.

அனைத்துவரிகளுகே மிக அருமை.. நீங்கள் குறிப்பிட்ட இந்த வரிகளை நானும் மீள்பதிவு செய்கிறேன்.

நித்தம் நித்தம்
உலகம் மாறும்
மாறாத கொள்கை கோட்பாடு
அதுவே இஸ்லாம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு நண்பனே! உன் குரலை கேட்டு பலவருசம் ஆனாலும்.
உன் கவிதையை படித்ததும் என் காதில் நீ ரகசியம் பேசுவதுபோல் உணருகிறேன்.
இதுவும் மனசுக்குள் இனிக்கிறது.நீ இன்னும் எழுத வேண்டுமென்று ஆவலாய்.

உன் நண்பன் பக்கர்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கிரவ்ன் சொன்னதிலிருந்து,

//ஜகபர் சாதிக்கின் அனுமதியுடன் கீழ் வரும் வார்தை களை மட்டும் நீங்குங்களே!(இதுபோல் கவிதை
இயற்ற க்ரவ்னை தவிர
இணையில்லை
இக்கவியுலகில்)! எனக்கு பயமாக இருக்கிறது. //

>நான் அனுமதிக்கவில்லை!
>சபீர் காக்கா&நெ.த. காக்கா: இந்த மேட்டரை உங்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறேன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

கருத்தாளர்களின் வேண்டுகோளுக்கிங்னக அவரவர்களின் கருத்துக்களை மட்டுறுத்தலுக்கு பின்னர் இங்கே மீள் பதிவு செய்கிறோம்...

------------------------------------

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…

இனிமை இனிமை
இஸ்லாம் இனிக்கிறது!
இருபதே நிமிசத்தில்
இதுபோல் கவிதை
இயற்ற க்ரவ்னை தவிர
இதுவரை கண்டதில்லை
இக்கவியுலகில்!
இனிக்கட்டும்
இஸ்லாம்
இஸ்லாம் அல்லாதவருக்கும்!

--------------------------------------------------

Crown சொன்னது…

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…

இனிமை இனிமை
இஸ்லாம் இனிக்கிறது!
இருபதே நிமிசத்தில்
இதுபோல் கவிதை
இயற்ற க்ரவ்னை தவிர
இதுவரை கண்டதில்லை
இக்கவியுலகில்!
இனிக்கட்டும்
இஸ்லாம்
இஸ்லாம் அல்லாதவருக்கும்!
-------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் வெளிப்பாடு இந்த பாரட்டு. அல்லாஹ்வே பெரியவன் ,எல்லாவற்றிலும் மிகுத்தவன். எல்லா புகழும் அல்லாஹுக்கே. சிறு வேண்டுகோள் சகோதரர் ஜகபர் சாதிகின் அனுமதியுடன் கீழ் வரும் வார்தை களை மட்டும் நீங்குங்களே!

இதுபோல் கவிதை
இயற்ற க்ரவ்னை தவிர
...................
இக்கவியுலகில்)!

எனக்கு பயமாக இருக்கிறது.

மேலும் இதன் காரணமாய்தான் நான் பெரும் பாலும் கவிதை எழுதுவதை தவிர்கிறேன். என் மேல் கொண்ட அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் சகோதர்களே? அல்லாஹுவிற்கே எல்லாப்புகழும்.

--------------------------------------------------------

நல்ல புரிந்துணர்வும் பரிந்துரையும் - வாழ்த்துகள் சகோதரர்களே !

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாஷா அல்லாஹ்! 10 நிமிடத்தில் ஒரு அழகான கவி வடித்திருக்கிறீர். சகோதரரே மேலும் மேலும் மாசு மருவற்ற கவி வடிக்க அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
**********************************************************************

சகோதரர்களே! இறை மார்க்கமான இஸ்லாம் நமக்கு அனைத்துக் காரியங்களிலும் அழகிய முன்மாதிரியை, வழிகாட்டுதல்களை கற்றுத்தந்திருக்கிறது. அந்த அடிப்படையில் வியக்கத்தக்க ஆற்றலையோ, அழகையோ ஒருவரிடத்திலே நாம் கானும்போது அல்லாஹ்வே புகழப்பட வேண்டும். அதற்காக "மாஷா அல்லாஹ் (அல்லாஹ் கொடுத்தது)" என்ற சொல்லை நாம் பயன்படுத்த வேண்டும்.

மேலும், "இணை இல்லை" என்ற வார்த்தையை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. ஏனென்றால் அல்லாஹ்வுக்கே யாதொரு இணையுமில்லை.

இது நாம் அனைவரும் அறிந்ததே. அதனாலேயே நாம் முஸ்லிம்கள். இருப்பினும் சகோதரர் சொன்னது போல் அன்பின் மிகுதியால் உணர்ச்சிவசப்பட்டவர்களாக நாம் இது போன்ற சொல்லை பயன்படுத்திவிடுகிறோம்.

மேலும் கவிதை, கட்டுரை, சிந்தனை, அறிவியல், ஆராய்ச்சி, என்று எந்தக் அடிப்படையில் நோக்கினாலும் நம்மை விட அப்பன், பாட்டன், முப்பாட்டனெல்லாம் இருக்கிறார்கள் இவ்வுலகில் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க இது போன்ற வார்த்தைப் பயன்பாடு பொய்யாகவும், முகஸ்துதியாகவும் ஆகிவிடும் என்பது தின்னம்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகம் பல முறை இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதனாலேயே இதை எங்கே சுட்டிக்காட்டினேன்.

இது யாரையும் குறை கூறுவதற்காக அல்ல. தவறிருப்பின் பொறுத்தருள வேண்டும்! மேலும் சுட்டிக்காட்ட திருத்திக் கொள்கிறேன்.
**********************************************************************

வியக்கத்தக்க விடசங்களைக் காணும் போது அதை அல்லாஹ்வுக்கு உரித்தாக்குவோம்! உரியவருக்காக அல்லாஹ்விடத்திலே பிரார்த்திப்போம்! அனைத்துக் காரியங்களிலும் இறை மார்க்கமான இஸ்லாத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வோம்!

யா அல்லாஹ்! எங்களை நேர் வழியில் நிலைத்திருக்கச் செய்வாயாக!

நிச்சமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்!

மஅஸ்ஸலாம்

அபு ஈசா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வியக்கத்தக்க விடசங்களைக் காணும் போது அதை அல்லாஹ்வுக்கு உரித்தாக்குவோம்! உரியவருக்காக அல்லாஹ்விடத்திலே பிரார்த்திப்போம்! அனைத்துக் காரியங்களிலும் இறை மார்க்கமான இஸ்லாத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வோம்!//

அல்ஹம்துலில்லாஹ் !

அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிவான்...

முதலில் சுட்டலும், அதைத் தொடர்ந்து வெட்டலும், அதன் பின்னர் (பின்னூடத்தில் கருத்துரை) இட்டலும் நிகழ்ந்து விட்டது யாவரும் புரிந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அல்ஹம்துலில்லாஹ். நாம் அறிய பட்ட சமூககமாக அல்லாஹ் நம்மை வழி நடத்துவானாக ஆமீன். அன்பின் காரணத்தால் சிலர் அதிக உற்சாகத்துடன் வெளிபடுத்தும் விதம் அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதால் எல்லாரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.கருத்திட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. கருத்திட நேரம் இல்லாமல் போன சகோதர ,சகோதரிகளின் தூஆக்களையும் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ் அக்பர். சபிர் காக்காவின் கருத்தையும், சகோ அபு ஈசாவின் கருத்தையும் நான் வழி மொழிகிறேன்.
குறிப்பு: இப்பாவாவது சபிர் காக்கா புதிய கவிதை தாருங்களேன். அன்பு காக்கா அபு இபுறாகிமின் தலைப்பில் அது அமைந்தால் மேலும் சிறப்பாய் போகும். ரெடி...ஸ்டார்ட்....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//குறிப்பு: இப்பாவாவது சபிர் காக்கா புதிய கவிதை தாருங்களேன். அன்பு காக்கா அபு இபுறாகிமின் தலைப்பில் அது அமைந்தால் மேலும் சிறப்பாய் போகும். ரெடி...ஸ்டார்ட்....//

"கவிதை.." பிரசவிக்கும் தருவாயில் இருக்கிறது அதற்கு முன்னே வரிசையில் இருப்பவர்கள் யாரப்ப இடையில் நுழைவது என்றும் கேட்கும் கணீர் குரலும் காதில் விழாமல் இல்லைய(டா)ப்பா !! :)

ரமளானை கருத்தில் கொண்டு உனக்கு வேறொரு தலைப்போடு கூப்பாட்டுக்கு வருகிறேன்...

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அளவற்ற அருளாலன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...

பால் வெண்மையாய்
இருக்கிறது என்போரும்
கடல்நீர் உப்பாய்க்
கரிக்கிறது என்போரும்
தெறிக....
இனிப்பாய் இருப்பதே
இஸ்லாம்!

ம அஸ்ஸலாம்

அபு ஈசா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அபு ஈசா : ஹைக்கூ !!

காத்திருங்கள் கவி(தேடிடும்) நேசங்களே எது கவிதை என்று ஒரு கவிதை பிறக்கும் அங்கே தெரியும் தெளிவு ! :)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

முக்கிய அறிவிப்பு
========================

இனிக்கிறது இஸ்லாம் கவிதையை இன்று இரவு 11:30மணிக்கு இந்திய / இலங்கை நேரப்படி ஜாஜில் இணைய வானொளியில் வசிக்க இருக்கிறார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்....

நம் அதிரைநிருபரில் இணைத்திருக்கும் ஜாஜில் இணைய வானொளியின் அலை ஓசை பரப்பியூடே நீங்கள் கேட்டு மகிழலாம்.

Ameena A. said...

இஸ்லாமியனாய் இருப்பது
நமக்கு கிடைத்த பொக்கிஷம்!//
*******************

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மிகச் சரியே இளைய சகோதரா, வர்ணனைகள் அல்லாஹ்வின் படைப்பையும் அவனது அருளையும், அருட்கொடைகளையும் முன்னிருத்தி இருக்கும் எல்லா கவிதைகளும் முத்துக்களே.

மூஃமினாக இருப்பதே நாம் செய்த பாக்கியமே, இது அல்லாஹ்வின் அருட்கொடையே.

நல்ல கவிதை, வாழ்த்துக்கள்.

crown said...

Ameena A. சொன்னது…

இஸ்லாமியனாய் இருப்பது
நமக்கு கிடைத்த பொக்கிஷம்!//
*******************

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மிகச் சரியே இளைய சகோதரா, வர்ணனைகள் அல்லாஹ்வின் படைப்பையும் அவனது அருளையும், அருட்கொடைகளையும் முன்னிருத்தி இருக்கும் எல்லா கவிதைகளும் முத்துக்களே.

மூஃமினாக இருப்பதே நாம் செய்த பாக்கியமே, இது அல்லாஹ்வின் அருட்கொடையே.

நல்ல கவிதை, வாழ்த்துக்கள்.
----------------------------------------------------------
வலைக்கு முஸ்ஸலாம். சகோதரியே! தங்களுடைய மேலான வாழ்திற்கு நன்றிகள் பல. நீங்கள் எழுதும் ஆற்றல் பெற்றவர் என்றால் நீங்களும் படைப்புகளை அ/ நி-க்கு அனுப்பலாமே? உங்களுக்குத்தெரிந்த சகோதரிகள் எழுதும் ஆற்றல் பெற்றவராக இருப்பின் அவர்களையும் எழுதத்தூண்டலாம். இதை நிர்வாகத்தினரும் வழி மொழிவர். வஸ்ஸலாம்.
இளைய சகோதரன். முஹம்மது தஸ்தகீர்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//இதை நிர்வாகத்தினரும் வழி மொழிவர். //

அதிரைநிருபரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது !

விரைவில் பயனுள்ள பதிவினை தருவார்கள் என்றும் இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.