Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பயணிகள் கவனத்திற்கு... ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2011 | , , ,


மண்ணறை விமானப் பயணத்திற்கு உங்களை வரவேற்கிறோம் !

நாம் இவ்வுலகை விட்டுச் செல்ல இருக்கும் அடுத்த இடம் மண்ணறை. அதற்கான பயண ஏற்பாடுகளையும் அங்கே செல்லும் வழிமுறைகளையும் வேறு எங்கும் உங்களால் கண்டிருக்க முடியாது. ஆனால்,  அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் காணலாம். நம் மண்ணறை விமானம், இதர விமானங்களான, இந்தியன் ஏர்லைன், கல்ஃப் ஏர், எமிரேட்ஸ் போல் இருக்காது.

இவைகளின் கட்டுப்பாடான 30 கிலோ அனுமதி என்ற வரையறைகள் இல்லை. மண்ணறை விமானம் எவ்வித கட்டுபாடுகளின்றி அதிக எடை, குறைந்த எடை என்ற பாகுபாடுகள் இன்றி அதற்கான கட்டணங்கள் ஏதும் செலுத்தாமல் செல்ல வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருட்கொடை.

இவ்விமானத்தில் செல்ல, விரும்பிய ஆடைகள் அணியவேண்டியதில்லை. வாழும்போது உடுத்திய ஆடைகளுக்கு அவசியமில்லை. உங்களுக்காக பிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் வெள்ளை நிறத்தினாலான ஆடை. அதையும் உடுத்தி விடப்படும்; அதற்கான சிரத்தை நீங்கள் எடுக்க வேண்டியதில்லை. விலையுயர்ந்த நறுமனங்களான சேனல், பெகொ, ரபானெ இருக்காது. ஆனால், அருமையான மனம் வீசும் சந்தனம் கரைத்துத் தெளிக்கப்படும்.

பயணிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இந்தியாவுக்கோ, பிரிட்டனுக்கோ, அமெரிக்காவுக்கோ, இலங்கைக்கோ உரியதாக இருக்காது. ஆனால், அது நிச்சயம் இஸ்லாம் என்பதாக இருக்கும். பயணிப்பவரின் விசாவுக்கு கால அவகாசமெல்லாம் கிடையாது, அவைகள் ஆறு மாதத்தில் முடிவடைவதுமில்லை. அங்கே "அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை". 

விமானத்தினுள் அழகிய பணிப்பெண்கள் இருப்பதில்லை. விமானத்தின் தலைமை இஸ்ராயில் (அலை) மட்டுமே இருப்பார். பயணிப்பவருக்கு முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் இருக்காது,

விமானம் தரையிறங்குமிடம் லண்டன் விமான நிலையமோ ஜித்தா விமான நிலையமோ அல்ல, நேராக மையவாடி என்று அழகுற பெயரிடப்பட்ட தனித்தளம். அங்கே குளிரூட்டப்பட்ட தனி தங்குமிடமோ அல்லது பஞ்சு பொருத்திய நடை மேடையோ இருக்காது. அனால் ஆறு அடி நீளம் கொண்ட புதைகுழி (கப்ருஸ்தான்) தான் உங்களின் இருப்பிடம்.

அங்கே குடியுரிமை அதிகாரிகள் இருக்கமாட்டாகள். ஆனால், முன்கர் நக்கீர் என்ற அல்லாஹ்வால் நியமிக்கப்பட மலக்கு இருப்பார்கள். அவர்களின் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலைக் கொண்டே எவ்விடம் உங்களுக்கு ஏற்றது என்பதை பரிந்துரை செய்வார்கள். அங்கே சுங்க இலாகா அதிகாரிகளோ, உளவு கண்டெடுப்பானோ (டிடெக்டர்) இருந்திடாது. மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து உங்களை இறுதியான இடத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கே தோட்டங்களின் கீழே ஆறுகள் ஓடும் அந்த சுவர்கத்தில் அல்லது கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பும் இருக்கும்.

இந்த பயனத்திற்காக செலவுகளிருக்காது, மொத்தமாக இலவசப் பயணம். உங்களுக்கு சேமிப்பு என்பது கையில் வருவதுமில்லை. இந்த விமானம் தீவிரவாத விஷமிகளால் கட்த்தப்படமாட்டாது, சாப்பாடுகள் என்று ஏதும் பரிமாறப் படமாட்டாது ஆதலால் ஹலாலா / ஹராமா, வேறு ஜீரனக் கோளாறு அல்லது அலர்ஜி என்ற பாதிப்புகள் பற்றிய கவலை வேண்டாம். காத்திருப்பு அறைகள் அங்கில்லை. ஆதலால் காலதாமதம் என்பது கடந்து விட்டதாகவே இருந்திடும். கவலை வேண்டாம்.

இந்த விமானம் குறித்த நேரத்தில் கிளம்பக் கூடியது; அதேபோல் சென்று சேரும் நேரம் குறித்தபடி இருக்கும். விமானத்தின் அகத்தினுள் பொழுதுபோக்குகள் பற்றி கவலை வேண்டாம். காரணம் அங்கே உங்களுடைய கேட்கும் மற்றும் உணரும் திறன் மறைக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பயணத்திற்கான முன்பதிவு பற்றியெல்லாம் கவலை வேண்டாம். அது ஏற்கனவே முன்பதிவு செய்திட்ட திரும்பிச் செல்லும் பயணம்தான். அதுவும் தாயின் கருவில் உருவாகும்போதே நிச்சயிக்கப்பட்ட பயணமே.

ஆஹா ! ஒரு நல்ல செய்தி ! உங்களின் அருகில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற கவலையே வேண்டாம். நீங்கள் மட்டும்தான் அதில் பயணம் செய்வீர்கள். அந்தப் பயணத்தின் சுகமான அனுபவத்தைப் பெறுவீர்கள். அதுவும் நீங்கள் மட்டுமே. அதில் ஒரு சின்ன தூக்கம் தான், பயணம் முழுவதும் உங்களை எழுப்பும் எவ்வித எச்சரிக்கையின்றி தூங்கலாம்.  

அப்படின்னா ! நீங்க தயாராக இருங்கள். தயவு செய்து உண்மையின்பால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருங்கள். முஸ்லீம் சகோதர சகோதரிகள் நிச்சயம் மார்க்க கடமைகளையும் அதன் வழிகாட்டல்களையும் உறுதியோடு கடைபிடியுங்கள்.

எனவே, அன்புச் சகோதர சகோதரிகளே, நல்லமல்கள் கொண்டு உங்களின் பயணப் பொதிகளின் (நன்மைகளின்) எடைகளை அதிகமாக்கி, ட்ரான்ஸிட்டில் சொர்க்கம் செல்ல தயாராகுங்கள். அவற்றை சலுகையாகவும் போனஸாகவும் பெற உகந்த புனித மிக்க மாதம் (ரமளான்) உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது... 

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் !!!

மூலாக்கம் : Tausif Rahmathullah (ஆங்கிலம்)
தகவல் : அப்துர்ரஹ்மான் - harmys

இந்த ஆக்கம் ஆங்கிலத்திலிருந்து தழுவி நமது வழக்குச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழில் மொழியாக்கம் செய்து இங்கே தந்திருக்கிறோம்...

7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆக அந்தப்பயண வெற்றிக்கு தயார்படுத்த வரும் ரமலானில் அதிக சலுகைகள் கிடைக்கும்.தவற விடாமல் பயன்படுத்துவோம்.அடையுமிடம் சுவர்க்கமாக அமையச்செய்வோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

விமானம் கிளம்பும் நேரம் நெருங்கும் முன்னரே... தயாராக வேண்டிய அவசியக் கட்டாயத்தில் இருக்கிறோம் !

மிகவும் அருமையாக மண்ணறை பயணத்திற்குரிய ஆயத்தங்களை இன்றைய காலாச் சூழலுக்கு ஏற்றவாறு எழுதிய சகோதரர்சவ்ஷீஃப் ரஹ்மதுல்லாஹ் மற்றும் பதிவுக்கு உதவிய தம்பி அப்துர்ரஹ்மான் (harmys) ஜஸாக்கல்லாஹ்...

sabeer.abushahruk said...

பயண லக்கேஜ்களில் அமல்களும் ஹேன்ட் பேக்கேஜாக தர்மமும் என தூக்கமுடியாத அளவுக்கு கொண்டுபோகத்தான் ஆசை.

டேக் ஆஃப் எப்போனு தெரியாவிட்டாலும் ஆன் போர்டும் லேன்டிங்கும் பற்றிய் அறிவிப்புகள் அச்சம் கொள்ளத் தக்கவை.

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

சகோதரர்களே,

நல்ல நினைவூட்டல், புனித மிக்க ரமளான் நெருங்கி விட்டது நேரங்களை தவற விட்டு விடாமல் ஒவ்வொரு மணித்துளியும் நம்முடைய இபாதத்துகளிலும் நற்செயல்களிலும் செலவழித்திட எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருளும் அதற்கான சக்தியையும் வழங்குவானாக.

இந்த கட்டுரை எழுதிய சகோதரருக்கும் இந்த பதிவை நல்ல சமயத்தில் பதிந்த அதிரைநிருபருக்கும் வழ்த்துக்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸாலாமு அலைக்கும்.

அன்பார்ந்த சகோதரர்களே.

நல்ல பயமுறுத்தலான பயணம்தான்.ஆம் நமக்கு தெரியாமலே திடீரெண்டு விசா வந்துவிடும்.நம்மளுடைய லக்கேஜ் என்னும் அமல்களை நிரப்புவதற்காக ரமழான் என்கிற விலை மதிக்க முடியா பெட்டிகளை அல்லாஹ் நமக்கு தரவிருக்கிறான்.அவற்றில் பயனுள்ள பொருள்களான நல்அமல்களை.நிரப்பி நாளை மறுமை நாளில் பெற்றுக்கொள்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

அலாவுதீன்.S. said...

///அன்புச் சகோதர சகோதரிகளே, நல்லமல்கள் கொண்டு உங்களின் பயணப் பொதிகளின் (நன்மைகளின்) எடைகளை அதிகமாக்கி, ட்ரான்ஸிட்டில் சொர்க்கம் செல்ல தயாராகுங்கள். அவற்றை சலுகையாகவும் போனஸாகவும் பெற உகந்த புனித மிக்க மாதம் (ரமளான்) உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது... ///


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) வருகின்ற புனிதமிக்க ரமளான் மாதத்தில் சொர்க்கத்தை கேட்டும், நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடியும் பிரார்த்தனை செய்வோம். அமல்களை அதிகம் செய்து நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!

அதிரை fact said...

அதிராம் பட்டினத்தில் மீண்டும் ஒரு புதிய இணையதளம் புத்தூனுர்ச்சியுடன் உதயமாகிவிட்டது அனைத்து இணைய தளங்களில் வெளிவரும் சிறந்த கட்டுரைகள் புதிய ஜொலிப்புடன் adiraifact.blogspot.com
adiraifactல் உடனுக்குடன் காணலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.