Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை வரலாற்றில் - ஓர் ஏடு ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 03, 2011 | ,

அதிரை, கீழக்கரை குத்துபா பள்ளியும் கிழவன் சேதுபதி கோட்டையும்!

1674-ஆம் ஆண்டுமுதல் 1710-ஆம் ஆண்டுவரை இராமநாதபுரத்தை ஆண்ட “கிழவன் சேதுபதி” என்ற ரெகுநாத சேதுபதி கட்டிய “இராமலிங்க விளாஸ்”, இராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள “பள்ளியறை மண்டபம்”, வேதாளையில் வள்ளல் சீதக்காதி மரைக்காயரால் தம் சகோதரர் சேகு இபுராஹிமுக்கு கட்டிய “அடக்க ஸ்தலம்” ஆகிவற்றின் அமைப்புகள் ஒரே மாதிரியாகவும் ஒத்த காலத்தை சார்ந்ததாகவும் இருக்கின்றன. அதற்கு காரணம் அதிரைப்பட்டினத்தில் இருக்கும்; மக்தூம் சின்னநைனா ஆலிம் அவர்கள் கட்டிய கல் பள்ளிவாசல் என்ற குத்பா பள்ளியாகும்! அதனை முன்மாதிரியாக கொண்டு கட்டப்பட்டதே மேற்சொன்ன கட்டிடங்கள் !!! 

சீதக்காதி மரைக்காயருக்கும் சேதுபதிக்கும் இருந்த மிகுதியான நட்பின் அடிப்படையில் இராமலிங்க விலாஸ் கட்ட சீதக்காதி மரைக்காயர் பொருள் உதவி செய்துள்ளார். மேலும் இராமலிங்க விலாஸைக் கட்டுவதற்குத் தேவையான கற்களையும் சீதக்காதி மரைக்காயர் அவர்களே அனுப்பியதுடன் அவர்களின் மேற்பார்வையிலேயே கட்டி முடிக்கப்பட்டது.
இதே காலத்தில்தான் கீழக்கரையில் ஜும்மா பள்ளியும் சீதாக்காதி மரைக்காயர் அவர்களால் கட்டப்பட்டது. இந்த பள்ளி வாசலின் உட்பகுதியில் கலை வேலைப்பாடுகள் கொண்ட 36 தூண்களும், வெளிப் பகுதியில் 74 தூண்களுமாக ஆக மொத்தம் 110 தூண்கள் உள்ளன.

வெளிப்பகுதியில் உள்ள தூண்களில் கிழக்குப் பகுதியில் வரிசைக்கு 6 தூண்கள் வீதம் 6 வரிசைகளில் 36 தூண்கள் உள்ளன. வெளிப்பகுதியில் உள்ள தூண்களில் கிழக்குப் பகுதியில் வரிசைக்கு 6 தூண்கள் வீதம் மூன்று வரிசைகளில் 18 தூண்களும், மேற்கே ஒரே வரிசையில் 8 தூண்களும், தெற்கே வரிசைக்கு 12 வீதம் இரண்டு வரிசைகளில் 24 தூண்களும், வடக்கே வரிசைக்கு 11 தூண்கள் வீதம் 2 வரிசைகளில் 22 தூண்களுடன் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் அடக்கத்தள கட்டிடத்துடன் இணைந்து 2 தூண்களுமாக 24 தூண்கள் அமைந்துள்ளன.

இப் பள்ளிவாயிலின் வடபுறத்தில் விதானத்துடன் கூடிய பிரதான வாயிலும், அதோடு மேலும் இரு வாயில்களும் தெற்கு, கிழக்கு திசைகளில் தலா மூன்று வாயிலுமாக ஒன்பது வாயில்கள் உள்ளன. இப்பள்ளி வாயிலின் தெற்குப் பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் அடக்க ஸ்தலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜும்மா பள்ளியைக் கட்டுவதற்கும் சீதக்காதி அவர்கள் கட்டிய அரண்மனை, அடக்க ஸ்தலம் ஆகியவைகளைக் கட்டுவதற்கும் மக்தூம் சின்னநைனா ஆலிம் அவர்கள் அதிரைப்பட்டினத்தில் தனது சொந்த இடத்தில் கட்டிய கல் பள்ளிவாசல் என்ற ஜும்மா பள்ளியாகும்.

துணை நின்றவை: கவிஞர் ச.சி.நெ.அப்துல் ஹக்கீம், ச.சி.நெ.அப்துல் றஸாக் ஆகியோர் எழுதிய “சேதுநாட்டு பெரியதம்பி வள்ளல் சீதக்காதி” கல் பள்ளி – குத்பாப் பள்ளி என்ற ஜும்மா பள்ளி, ஹிஜ்ரி 1058; கி.பி.1638 ஆம் ஆண்டு செய்யது அப்துல் காதர்(ரஹ்) என்ற மகதூம் சின்னைனா லெப்பை ஆலிம் அவர்களால் கட்டப்பட்டது. மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பின் புதுபிக்கப்பட்டு 25.06.2004 வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்பட்டது. பழைய பள்ளியின் ஆண்டுகாலம் 366 ஆண்டுகள்!

ஒரு வேண்டுகோள்!

அன்பு மிக்க அதிரைப்பட்டினத்து உறவுகளே! வரலாற்றைப் பதிவு செய்துக்கொள்ளும் பழக்கம் – ஆர்வம் முஸ்லிம்களுக்கு இல்லை. நமதூர் மக்களுக்கு அறவே இல்லை. கீழக்கரை ஜும்மா பள்ளியின் தூண்கள் வரை கணக்குண்டு. நமது பழைய ஜும்மா பள்ளியில் எத்தனை தூண்கள் அதன் அமைப்புகள் எப்படி இருந்தது. அதைப் பற்றிய சுவையான, வரலாற்று தகவல்கள் புகைப்படங்கள் இருந்தால் இங்கு பதிவு செய்யுங்கள், அனுப்பித்தாருங்கள் அதிரையில் வரலாற்றுக்கு வலு சேர்க்கும். 

இன்ஷாஅல்லாஹ்!

A.R. ஹிதாயத்துல்லாஹ்

13 Responses So Far:

sabeer.abushahruk said...

அருமை அருமை!
எங்கே தம்பியைக் காணோம் என்று தேடிக்கொண்டிருந்தேன். இப்படி வரலாற்றுக்
குறிப்புகள் தயார்செய்வதென்ன சாதாரண வேலையா!

தம் நலம் பேணிக்கொண்டு தொடர்பில் இருங்கள் தம்பி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி ARH நீண்ட நாட்களாகி விட்டது உங்களை இங்கே கண்டு !

வரலாற்றை தேடியெடுத்து தரும் வழமையான பாங்கே அருமை...

தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், தாம் குறிப்பிட்டிருந்தது போன்றே நாம் தாம் தவறி விட்டேல் ஏடுகளில் ஏற்றிடாமல், இனியும் அப்படியிராமல் கிடைததை, சிக்கியதை, பார்த்ததை, காதுகளுக்கு எட்டியதை இன்றை தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் ஆவணப் படுத்தியே ஆக வேண்டும் இன்ஷா அல்லாஹ் நம்மால் ஆனதையும் முயற்சிப்போம்.

ஊரிலிருப்பதால் வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதவும் இன்ஷா அல்லாஹ்...

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

மாஷா அல்லாஹ், வரலாற்று சான்றுகளுடன் அருமையான பதிவை தந்த சகோதரர் ஹிதாயத்துல்லாஹ்வுக்கு நன்றிகள்.

இதற்காக நிறைய புத்தங்களை நீங்கள் நிச்சயம் புரட்டியிருக்க வேண்டும், தாங்கள் வரலாற்று பாடத்தில் உங்ளைப் போன்ற இளைஞர்கள் இஸ்லாமிய இணைய பத்திரிக்கைத் துறையில் ஆழ்ந்து காலூன்ற வேண்டும்.

வாழ்த்துக்கள்.

Ayub Khan
குளச்சல்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரைச் சரித்திரங்களை சான்றோடு விளக்கியது அருமை.மேலும் பல வழங்கிட வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் said...

அப்பவே கீழக்கரைக்கும் அதிரைக்கும் தொடர்பு இருந்திருக்கு.. வரலாறு முக்கியம் அமைச்சரே, நன்றி பகிர்வுக்கு

Yasir said...

வரலாற்று செய்திகளை தொகுத்து தருவது என்பது அவ்வளவு எளிது கிடையாது ...அதற்க்கு ஆர்வமும்,சுறுசுறுப்பும்,கடின உழைப்பும் ஒன்று கூடி இருக்க வேண்டும்.....அதனை சிறப்பாக செய்யும் சகோ.ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

//வரலாறு முக்கியம் அமைச்சரே//

எல்லாம் உங்களிடம் குடித்த 'யானை'ப்பால்தான் காரணம் மன்னா!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

தம்பி ஹிதாயத்துல்லாஹ்,

வரலாற்றுத் தகவல் சேகரிப்பதை மீண்டும் ஆரம்பித்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

நம் வரலாற்றை நாம் எழுவதில் ஆர்வம் செலுத்தாததே, மற்றவர் தானக்கு கிடத்த சொற்ப செய்திகளை வைத்தே நம் முன்னோர்களை பற்றி திரித்து எழுதியதே வரலாறாக இன்று உள்ளது.

தேடுங்கள் தம்பி ஹிதாயத்துல்லாஹ், உங்கள் பணி வெற்றியடைய துஆ செய்கிறோம்.

Shameed said...

வரலாற்றை சொல்வதில் எப்போதும் வரலாறு படைப்பவர் நம் ஹிதாயத்துல்லா

{நீண்ட நாட்களுக்குப்பின் அதிரை பட்டினத்தில் இருந்து shameed}

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்ல தகவல்.தொடருங்கள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தூசி படிந்த உண்மை வரலாறுகள் வெளிக்கொண்டு வரப்பட்டு, திரித்துக்கூறப்பட்ட தில்லாலங்கடி வரலாறுகள் சமூகத்திலிருந்து அடித்து விரட்டப்பட வேண்டும். அதற்கு பல நூல்களை படித்து நீண்ட ஆராய்ச்சியும், அர்ப்பணிப்பும் இருந்தாலொழிய இது போன்று சகோ. ஹிதாயத்துல்லாஹ் போல் எளிதில் எவரும் வெளிக்கொண்டு வந்துவிட முடியாது.

ஆட்சி அதிகார வர்க்கங்களால் அழித்தொழிக்கப்பட்ட அத்திப்பட்டி வரலாறு போல் அப்பாவி இஸ்லாமியர்களின் உள்ளத்தை உருக்கும் உண்மை வரலாறுகள் எத்தனையோ?

இன்று புண்பட்டு கிடக்கும் நம் பண்பாடுகள் உங்களின் ஆய்வுக்கட்டுரை மூலம் நல்லதொரு சிகிச்சை பெரும்....

வாழ்த்துக்கள் தம்பி....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சமூகத்தின் வரலாற்று முகம் காணவும், வரலாறு காணவும் வாழ்த்துக்கள்.

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் நன்றி!
உங்களின் கருத்துகள் உண்மையிலேயே உற்சாகத்தை தரவல்லது. அநி-வில் அது எப்போதும் கிடைக்கும். அல்ஹம்துலில்லாஹ்.
கவிக் காக்கா // எங்கே தம்பியைக் காணோம் என்று தேடிக்கொண்டிருந்தேன்.//, அபுஇபுறாஹீம் // தம்பி ARH நீண்ட நாட்களாகி விட்டது உங்களை இங்கே கண்டு !// இன்ஷாஅல்லாஹ் இனி தொடர்ந்து இருப்பேன். பயணமும் தநி http://www.tamilnirubar.org வேலையும் சற்றே இருத்தி வைத்துவிட்டது.
இப்போது அதிரைப்பட்டினத்தில்தான். அலைபேசி 8148480807
அன்புடன் ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.