Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முற்போக்கு கூட்டணி ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | September 12, 2011 | , , , ,


காற்றுக்கேது வேலி !

கா.மூ.தொ. கூட்டணியினை அதாவது E.N.T - மருத்துவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நமக்கும் இது பரிச்சயமான வார்த்தைதான். காது (EAR), மூக்கு (NOSE). தொண்டை (THROAT) என்பதுதான், இதன் விரிவாக்கம்.

பொதுவாக, நம் உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனி மருத்துவப் பிரிவு இருக்கிறது. அந்த பிரிவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், குறிப்பிட்ட உறுப்புக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டு அறிந்து சரி செய்கிறார்கள். ஆனால், காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகளை மட்டும் ஒரே கூட்டணியாக்கி அதை ஈ.என்.டி (கா.மூ.தொ) என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்திவிட்டார்கள். இதற்கு என்ன காரணம்?

விசேஷமாக ஒன்றும் இல்லை. இந்த மூன்று உறுப்புகளுமே காற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன என்பது முதல் காரணம். செயல்படும் விதத்திலும் இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்பில் இருக்கின்றன என்பது இன்னொரு காரணம்.

உதாரணமாக, நமக்குக் காது நன்றாகக் கேட்க வேண்டும் என்றால், அதற்குத் தொண்டையின் பங்களிப்பும் அவசியம். மூக்கில் இருந்து ஆரம்பிக்கும் நமது சுவாசப் பாதை, தொண்டை வழியாகத்தான் பயணப்படுகிறது. ஆக, நமது சுவாசம் சரிவர நடைபெற, இந்த இரண்டு உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியிருக்கிறது. இப்படி, இந்த மூன்று உறுப்புகளுமே பல வகையில் கூட்டணியாகப் பணியாற்றுவதாலும் இவை ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

அமைப்பு ரீதியாகப் பார்த்தாலும், இவை அருகருகே, பக்கமாக, நெருக்கமாக அமைந்துள்ளன என்பது மூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம். மூன்று உறுப்புகளுக்கும் சேர்த்து மூன்று காரணங்களைச் சொல்லியாகிவிட்டது. இனி, ஒவ்வோர் உறுப்பு பற்றியும் தனித்தனியாகப் பேசலாம்.

காது: 

இந்த உலகத்தோடு நம்மைத் தொடர்புபடுத்தும் உறுப்புகளுள் காதுக்கு மிக முக்கியமான பொறுப்பு உண்டு. நாம் காது என்று பொதுவாக எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுமட்டும் காது அல்ல. அதாவது, வெளியில் நாம் பார்க்கிற காதுமடல் மட்டுமே காது அல்ல.

நமது காது, வெளிப்புறக் காது, நடுக் காது, உள் காது என மூன்று பகுதிகளைக் கொண்டது. ஓர் ஒலியை கேட்டு உணர்வதில் இந்த மூன்று பகுதிகளும் ஒவ்வொரு மீடியமாகச் செயல்படுகின்றன. வெளிப்புறக் காது, வாயு மீடியம்; நடுக் காது திட மீடியம்; உள் காது திரவ மீடியம். எப்படி என்று பார்க்கலாம்.

ஒலியை நாம் உணர்வது பல கட்டங்களாக நடைபெறுகிறது. கேட்கப்படும் ஒலியைக் காற்றின் மூலமாக உள்வாங்கி, அதை நடுக் காதின் பக்கம் அனுப்பிவைப்பதுதான் முதல் கட்டம். வெளிப்புறக் காதின் வசம்தான் இந்த முதல் கட்டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. காற்றுதான் இங்கே மீடியமாகச் செயல்பட்டு, ஒலியை வெளியிலிருந்து உள்ளே எடுத்துச் செல்கிறது. ஓர் ஒலியின் அளவு, திசை போன்றவற்றை உணர்ந்து கொள்ளும் முக்கியமான வேலையிலும் வெளிப் புறக் காது பங்கேற்கிறது.

வெளிக் காதையும் நடுக் காதையும் பிரிக்கும் பகுதியை செவிப்பறை (EAR DRUM) எனப்படும். புனல் போன்று தோன்றும் காது மடல், ஒரு குறுகிய பாதையின் வழியே நீண்டு செவிப்பறையை அடைகிறது. இந்த செவிப்பறையின் பின்புறம் ஹாமர், அன்வில், ஸ்டிர்ரப் (HAMMER, ANVIL and STIRRUP) ஆகிய மூன்று எலும்புகள் உள்ளன. இந்த அமைப்புதான் நடுக் காது எனப்படுகிறது.

வெளிப்புறக் காதின் வழியாக உள்ளே வரும் ஒலியின் அலை வரிசைக்கு ஏற்ப, செவிப்பறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அந்த மூன்று எலும்புகள்தான் திட மீடியமாகச் செயல்பட்டு, செவிப்பறையில் ஏற்படும் அதிர்வுகளைக் கடத்துகின்றன. செவிப்பறை உண்டாக்கும் அதிர்வுகளைப் பொறுத்துதான் இது எந்த வகையான ஒலி என்பதை உணர்ந்து கொள்கிறோம்.

அடுத்து அமைந்துள்ளதுதான் உள் காது. உள்ளே துளை உடைய பகுதி இது. நம் உடலில் மிக அடர்த்தியான எலும்புக்குள் இது புதைந்திருக்கிறது. உள் காதில், பெரிலிம்ப், எண்டோலிம்ப் என்ற இரண்டு வகையான திரவங்கள், இரண்டு அடுக்குகளாகக் காணப்படுகின்றன. நடுக் காதில் உள்ள ஸ்டிர்ரப் எலும்புதான், மனித உடலில் உள்ள மிகமிகச் சிறிய எலும்பு. செவிப்பறையில் ஏற்படும் அதிர்வால் இந்த எலும்பு அசையும்போது உள் காதில் உள்ள எண்டோலிம்ப் திரவத்திலும் அதிர்வுகள் உண்டாகின்றன.

இந்தத் திரவத்தைச் சுற்றிலும் புரதத்தால் ஆன மிக மெல்லிய ரோம செல்கள் அமைந்திருக்கின்றன. திரவம் அதிரும்போது, இந்த செல்கள் தூண்டப்பட்டு ஒருவகையான ரசாயனத்தை வெளிப்படுத்துகின்றன.

எலும்புகளால் கடத்தப்படும் ஒலி அலைகள், ரசாயனத்தோடு சேர்ந்து மின் அலைகளாக மாற்றப்பட்டு, திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும் செவியுணர்வு நரம்புகள் மூலமாக, மூளைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த மின் அலைகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட ஒலியை காரின் ஹார்ன் சத்தமா, உம்மாவின் இனிய குரலா என்று மூளை அடையாளம் கண்டு கொள்கிறது.

காது என்பது கேட்பதற்கான முக்கியப் பகுதி மட்டுமல்ல, தள்ளாடாமல், தடுமாறாமல் நம்மை நிலைநிறுத்தச் செய்து கொண்டு நிலையாக நிற்கவும், நடக்கவும் உதவியாக இருக்கிறது. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதிலும், காதுக்குப் பங்கு இருக்கிறது. தள்ளாடாமல் நிலையாக நிற்கும் விஷயத்தில் கண்கள், மத்திய நரம்பு மண்டலம் ஆகியவற்றுக்கும் மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது.

சிறு வயதில் உங்களையே நீங்கள் சுற்றிக் கொண்டிருப்பீர்கள். அப்போது உங்களின் தலை கிர்ர் என்ற சத்தத்தோடு சுற்றுவது போல் ஓர் அனுபவம் உங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் சுற்றிவிட்டு நின்றபிறகும் காட்சிகளும் தடுமாறுவதுபோல் இருக்கும். இதற்குக் காரணம் நம் காதுதான்.

நாம் சுற்றும்போது காதுக்குள் உள்ள திரவமும் அசைகிறது. இந்த திரவம், காதுக்குள் உள்ள சிறு சிறு ரோமக் கால்கள் மூலம், இப்போது உடல், எந்தத் திசையில், எங்கே, எப்படி இருக்கிறது என்று மூளைக்குத் தகவல் அனுப்புகிறது. சுற்றி முடித்தவுடன் உடம்பு நின்றுவிடுகிறது. ஆனால், காதில் உள்ள திரவம் தொடர்ந்து சிறிது நேரம் அசைந்துவிட்டுத்தான் ஓய்வு நிலையை எட்டுகிறது. இதனால்தான், உடல் ஒரு நிலைக்கு வந்த பிறகும் நமக்குத் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன.

மேலே குறிப்பிட்ட மூன்று பாகங்களும் மூளைக்கு அனுப்பும் செய்தியில் வேறுபாடு ஏற்பட்டால் தலை சுற்றுவது போன்ற உணர்வு ஏற்படத்தான் செய்யும். நாம் நின்றுவிட்டோம் என்பதை கண்கள் உணர்த்துகின்றன. ஆனால், காதுகளோ (திரவத்தின் அசைவுகள் தொடர்வதால்) 'உடல் தொடர்ந்து சுற்றுகிறது' என்ற தவறான செய்தியை மூளைக்கு உணர்த்துகின்றன. இதனால்தான், மூளையும் குழம்பி தலை சுற்றுகிற உணர்வை ஏற்படுத்துகிறது.

சிறிது நேரம் கழித்து திரவத்தின் அசைவு நின்றுபோக, "உடல் இப்போது அசைவில்லாமல் இருக்கிறது" என்ற தகவலைக் காதும் உறுதி செய்ய, மூளையும் குழப்பம் விலகி உத்தரவுகளைப் பிறப்பிக்க, தலை சுற்றுவது நிற்கிறது.

ஏதோ ஓர் உடல் பிரச்சினையின் காரணமாக, காதுக்குள் உள்ள திரவத்தின் அசைவில்லாத் தன்மை பாதிக்கப்படும்போது, நம் உடலின் நடுநிலையும் பாதிக்கப்படுகிறது என்பதைத்தான் நீங்கள் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உடலின் சில குறிப்பிட்ட பாகங்கள் சரியாக வேலை செய்யாததாலும், பேலன்ஸ் தவறிப்போகலாம். பார்க்கின்ஸன்ஸ் நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் மூளையில் உள்ள சில நரம்புகள் சரிவர இயங்காததால் உண்டாகின்றன இவற்றால் பாதிக்கப்பட்டவர்களால் தங்கள் உடலை ஒழுங்காக நேர் நிலைச் செய்ய முடியாது, நீரிழி நோய், பாதங்களில் உள்ள நரம்புகள் பாதிக்க, அப்போதும் ஒழுங்காக நடக்கமுடியாமல் போகலாம்.

சிலர், 'வெர்டிகோ; (VERTIGO) என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உயரமான இடங்களுக்குச் சென்று கீழே பார்த்தால் இவர்களுக்குத்ட் தலை சுற்றும். காதுகளின் உள்புறத்தில் ஏற்படும் சிக்கல்களின் காரணமாகத்தான் இப்படி ஏற்படுகிறது.

நீர்ச்சத்து குறைதல் (DEHYDRATION), ரத்தச் சோகை, சில வகை மருந்துகள், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தானியங்கி நரம்பு மண்டலத்தில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றின் காரணமாகவும் இவை ஏற்படலாம். கேடராக்ட் க்ளுகோமோ போன்ற கண் பார்வைக் குறைபாடுகளாலும் உடலைச் சீராக நடக்கவைக்க முடியாமல் போகலாம்.

எல்லாவற்றுக்கும் மேல், உடலுக்குக் கொஞ்சம் சக்தியாவது வேண்டும். இடுப்பு, முழங்கால் போன்ற பாகங்களில் உள்ள தசைகள் நாம் நேராக நிற்பதற்கு முகவும் அவசியம். அவை பலவீனமாக இருந்தால் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையும் சாத்தியமில்லை.

இப்படிக்கு
கா.மு.தொ.முற்போக்கு கூட்டணி !

நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... (அபுஇபுறாஹிம்)

27 Responses So Far:

sabeer.abushahruk said...

மிகவும் அவசியமான பதிவு. தேவையான, தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்.

இந்த முற்போக்குக்கூட்டணியில் ஒர் அணி தகராறு செய்தாலும் மொத்தக் கூட்டணியும் ஆட்டம் கண்டுவிடும். எனவே, கவனம் ப்ளீஸ்.

இடுகைக்கு நன்றி மிஸ்டர் அபு இபுறாகீம். (சொறது காதில் விழுகிறதா? :))

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இடைத்தேர்தலுக்கு அவசர உதயம்.
தேர்தல் அறிக்கை(அறிந்து கொள்ளவேண்டிய இதுவரை அறியாத தகவல்கள்.)சூப்பர்.
ஏற்கனவே ஒரு தேர்தலில் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து வெல்லவும் செய்தார்கள்.
காசு கொடுத்து வாங்கி நேர்மையாக அறிவித்தால் வெல்ல முடியுமா! காலம் தான் பதில் சொல்லனும்.இருந்தலும் சுட்டதும் கொஞ்சம் இருப்பதால் நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு மிஸ்ஸிங்! கிட்ட நெருக்கமாக(இணக்கமாக)இருக்கிற கண்ணை கூட்டணியில் சேர்க்காமால் தவிர்த்தது தான் வருத்தம்.
மற்றபடி கூட்டணி ஒருங்கிணைந்து கடைசி வரை ஆரோக்கியமாக செயல்பட படைத்தவனை இறைஞ்சுவோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா: ஒரு டவுட்டு !!

கவிஞர்கள் ஏன் கா.மூ.தொ.விலிருந்து ஒன்றைக் கூட உவமைக்கு இழுப்பதில்லை !?

காதுக்கு !?

கிளிமூக்குன்னு சொன்னா அழகாவா இருக்கும் !?

கொக்கின் கழுத்துன்னு சொன்னா நல்லாவா இருக்கும் !?

ஒரு டவுட்டுன்னு 1 மார்க் கேள்வியா கேட்டுட்டேன்... கோவிச்சுடாதிய !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒரு மிஸ்ஸிங்! கிட்ட நெருக்கமாக(இணக்கமாக)இருக்கிற கண்ணை கூட்டணியில் சேர்க்காமால் தவிர்த்தது தான் வருத்தம்.//

தம்பி MHJ: கூட்டணியில் முதலில் கண்ணைத்தான் கட்டுவார்கள்... ! நடப்பதை பார்க்கக்கூடாதுன்னு ! (உள்ளாட்சித் தேர்தல் ஜுரமடிக்குதோ!?)

sabeer.abushahruk said...

என்ன இப்பிடிச் சொல்லிட்டிய? தொண்டையிலிருந்துதானே குயில்போன்ற குரல் ?

சங்குக் கழுத்து?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"குயில் குரல்" அப்படின்னா தொண்டை பெண்மைக்கு மட்டும்தானா ? அப்போ ஆண்மைக்கு ?

கழுத்து சங்காக இழுத்தது அனியும் அனிகலனுக்கு ஸ்டாண்டு தேவை என்பதாலே ! இதுவும் பெண்மைக்கு மட்டுமே ! அப்போ ஆண்மைக்கு !?

நிச்சயம் உங்களிடம் இதற்கு பதிலிருக்கும் ! அது கவிதையில் வரும் !

sabeer.abushahruk said...

குரல், குயில் குரல், ஆணுக்கு இல்லையான்னெல்லாம் பேச ஆரம்பிச்சா 'சலாமத் ஹரிராயா'க்காரன் ரப்பர் மரக் குச்சியைத் தூக்குவான் நம்மை அடிக்க. தேவையா?

ஏற்கனவே நம்ம குரலைக் கேட்டு மூனு நாள் பேதி புடுங்கிக்கிட்டுப் போனதா கேள்விப்பட்டேன். விட்டுருவோமே.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// கூட்டணியில் முதலில் கண்ணைத்தான் கட்டுவார்கள்... ! நடப்பதை பார்க்கக்கூடாதுன்னு //
சரியாச்சொன்னீங்க!
அதான் கண்ணை மூடிக் கொண்டு நின்று விட்டு சுயேட்சைகளும் நாளை கேவலப்பட்டு அசிங்கப்பட்டு பின் ஒளிந்துவிடுகிறார்களோ!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//விட்டுருவோமே.//

சரி காக்கா !

'ச' 'ரி' நடுவில் வேறு யாராவது துணைக் காலைப் போட்டுவிட்டு தொடர்ந்தால் நான் காதைப் பொத்திக் கொள்கிறேன் :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//"குயில் குரல்" அப்படின்னா தொண்டை பெண்மைக்கு மட்டும்தானா ? அப்போ ஆண்மைக்கு ?//
சிங்கம் மாதிரி ஆம்புலெ குரல் இருக்கனும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சிங்கம் மாதிரி ஆம்புலெ குரல் இருக்கனும்//

அப்படியே எல்லோரும் கர்ஜித்தால் ! யார் பேரூராட்சிக்கு தலைவராக போட்டி போடுவது !?

crown said...

நமது காது, வெளிப்புறக் காது, நடுக் காது, உள் காது என மூன்று பகுதிகளைக் கொண்டது.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அடுக்கடுக்காய் இருக்கும் காதின் பகுதிகள் இவை யாவும் இல்லையெனில் அடுக்காது. இருக்காதாபின்னே காதின் அமைப்பை நோக்காது சொன்னால்.மூக்கும், தொண்டையும் இதன் வரிசையில் அமைவதை மூக்கில் விரல் வைத்து அதிசயமாய் பார்பதும் கூடாதே, இந்த உறுப்புகளேல்லாம் செய்யும் தொன்டை மறக்காது இருக்கனும். கண்ட படி மூக்கை நுழைகாது இருந்தால் தொண்டை செய்யும் தொன்டையும் கேட்குமே நம் காதும், மூக்கும் கண்னருகில் இருந்தாலும் கண்டு கானாது இருப்பதுபோல்
கண் என்பது இந்த வரிசையில் அமையாது காண். எல்லா உறுப்பும் உருபடியாய் வேலை செய்தாலே உருப்படும் நம் உடல் . உயிர் தங்கும்.ஒற்றுமைக்கு நம் உறுப்புகளே சாட்சியாக காண்பதனால் படிப்பினை கொள்வோம் . நல்ல கட்டுரை.

ZAKIR HUSSAIN said...

அதிரை நிருபர் சமூகத்திற்கு....

Fire Fox ல் தோன்றும் install missing plug in என்ற விசயத்தை எப்போது முடிவுக்கு கொண்டு வருவீர்கள். ஒவ்வொரு முறையும் அதை Off செய்வதற்க்கு ஊரிலிருந்து work permit ல் ஆள் எடுக்களாம் என்றிருக்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Fire Fox ல் தோன்றும் install missing plug in என்ற விசயத்தை எப்போது முடிவுக்கு கொண்டு வருவீர்கள். //

அசத்தல் காக்கா: அதொன்றும் பெரிய விஷயமேயில்லை, இன்ஸ்டால்ன்னு கிளிக் செய்திட்டு ஒரு காஃபி குடிச்சுட்டு வந்து பாருங்க சரியாயிருக்கும், அப்படியில்லைன்னா அப்டேட் 6.0.2 புதிய பதிப்பு நிறுவிக் கொண்டால் அ.நி.சமூகம் சந்தோஷப்படும்... :)

ஒவ்வொரு முறையும் Off(செய்ய)iceல்(இருந்தால்) சிரமம்தான்...

முயற்சிக்கிறோம் பிளக்இன்னை பிளக்அவுட்டாக்க

அப்துல்மாலிக் said...

காக்கா அருமையான தொகுப்பு, என் நண்பருக்கு அடிக்கடி மயக்கம் வரும், தலை செக்கப், நரம்பு செக்கப் எல்லாம் பார்த்தார், கடைசியில் டாக்டர் அட்வைஸ்படி காதில் நீரின் அளவில் சற்று மாற்றமிருப்பதால் மயக்கநிலை வருகிறது என்று சொன்னாராம், அது உண்மைதான் என்பதை இந்த பதிவின் மூலம் தெளிவுபடுத்திக்கொண்டேன், பகிர்வுக்கு நன்றி

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கா.மூ.தொ கூட்டணி கட்ச்சிக்காரர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு;
உங்களுடைய கூட்டணியை வலுப்படுத்த காது , மூக்கு ,தொண்டை .புதிய நிபுணர் அபூ இபுறாஹிம் அவர்கள் இலவசமாக ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.அனைவரும் தவறாமல் வந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடம்: அதிரை நிருபர்

நேரம்: 24 .மணி நேரமும்

டோக்கன் பெரும் இடம் : அதிரை நிருபர்.காம்
இப்படிக்கு.
அதிரை நிருபர் வாசகர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///அடுக்கடுக்காய் இருக்கும் காதின் பகுதிகள் இவை யாவும் இல்லையெனில் அடுக்காது. //

இருக்காதா பின்னே காதின் அமைப்பை நோக்காது சொன்னால்.

மூக்கும், தொண்டையும் இதன் வரிசையில் அமைவதை மூக்கில் விரல் வைத்து அதிசயமாய் பார்ப்பதும் கூடாதே,

இந்த உறுப்புகளெல்லாம் செய்யும் தொன்டை மறக்காது இருக்கனும்.

கண்ட படி மூக்கை நுழைக்காது இருந்தால் தொண்டை செய்யும் தொண்டையும் கேட்குமே.

நம் காதும், மூக்கும் கண்னருகில் இருந்தாலும் கண்டு(க்) காணாது இருப்பதுபோல் கண் என்பது இந்த வரிசையில் அமையாது காண்.

எல்லா உறுப்பும் உருபடியாய் வேலை செய்தாலே உருப்படும் நம் உடல்.

உயிர் தங்கும். ஒற்றுமைக்கு நம் உறுப்புகளே சாட்சியாக காண்பதனால் படிப்பினை கொள்வோம் . ///

தம்பி கிரவ்ன்(னு)

அடுக்கு மொழியின் ஆதிக்கம் ! பிறர்க்கு தடுக்கும் மொழிகள் உனக்கு எல்லாமே மிடுக்கான வழிகள(ட)ப்பா !!!

ஊன்று ஒன்றி கவணித்தேன் ! "தொண்டைக்கு - தொண்டுக்கு" நீயிட்ட முடிச்சு யார் கழுத்திற்கு !?

அப்படின்னா கூட்டணி வேண்டும் அது ஐக்கியமான கூட்டணியாக இருந்திடம்னு சொல்லாமல் சொல்கிறாய் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அபுஇபுறாஹீம் காக்கா,

எடிட்டராக்காவாக இருந்த நீங்கள் இப்படி ஆல்ரவுண்டராக்காவாக ஆனது எப்பொழுது? செவி பற்றிய நல்ல செய்தி உங்களின் ஆக்கம்.

எப்படி பெரிய தகரக்குடையை (டிஷ்) வீட்டு மாடியில் பொருத்தி கண்ணுக்கு எட்டாத தூரத்தில் வானில் வட்டமிடும் செயற்கை கோள்களின் ஒளி/ஒலிபரப்பு கதிர்களை உள்வாங்கி வீட்டின் மூலையில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டிக்கு கொண்டு வந்து சேர்க்கிறதோ அது போல் தான் ஒவ்வொரு மனிதனின் காதுகளும் டிஷ் ஆண்டென்னா போல் வெளியுலகில் உலாவி வரும் ஒலிக்கதிர்களை காதுக்குள் உள்ளிழுத்து மூலைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன உன அறிந்து கொண்டேன். பாயிண்ட் டூ பாயிண்ட் என்றில்லாமல் வழியில் சில ஊர்களை கடந்து வருவதும் மேற்கண்ட கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன்.

மொபைல் போனுக்காகவோ அல்லது இசைக்கேட்பதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ காதுகளில் பெரும்பாண்மையான நேரம் ஹெட்போன் மாட்டிக்கொண்டு அழைபவர்களுக்கு அதன் மூலம் காதில் பேக்டீரியாக்கள் நுழைந்து விடுவதாக ஒரு ஆய்வுக்கட்டுரையில் படித்தேன். முன்பெல்லாம் காது கேளாத‌வர்களுக்கு மட்டும் தான் காதிலிருந்து கேபிள் தொங்கும். இன்று கண்டவர்கள் காதிலும் கேபிள் தொங்குகிறது. கேட்டால் நாங்கள் பிறருக்கு தொந்தரவு கொடுக்காத பேர்வழிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்னா ஹொதரத்தா ஈக்கிது பாத்தியளா?

வரும் காலங்களில் மனிதர்களின் மூக்கு, கண்களிலிருந்து ஏதாவது ஒரு காரணத்திற்காக கேபிள் தொங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படி கேபிள் உலகமாக ஆகிவிட்டதே?

நீங்க, ஜாஹிர் காக்காவெல்லாம் மருத்துவர் பட்டத்தை யாருக்கும் தெரியாமல் தபால் மூலம் படித்து முடித்து வாங்கினீர்களோ? சொல்லவே இல்லெ........

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//டோக்கன் பெரும் இடம் : அதிரை நிருபர்.காம் //

LMS(அ): அதிரைநிருபர் calm(அமைதியின் ஆளுமை)தான் !

ZAKIR HUSSAIN said...

இன்ஸ்டால்ன்னு கிளிக் செய்திட்டு ஒரு காஃபி குடிச்சுட்டு வந்து பாருங்க சரியாயிருக்கும், அப்படியில்லைன்னா அப்டேட் 6.0.2 புதிய பதிப்பு நிறுவிக் கொண்டால் அ.நி.சமூகம் சந்தோஷப்படும்... :)

இதெல்லாம் செஞ்சிட்டேன்... [ முன்பே ] இருந்தாலும் அதே பிரச்சினைதான்... ஏதும் "உள்குத்து' இருக்குமோ

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஏதும் "உள்குத்து' இருக்குமோ //

காக்கா, ஒருவேளை இருக்கலாம், நேற்று தனி மின்னஞ்சலில் சொன்ன வேப்பிலை வைத்தியம் ஏதும் செய்து பார்த்தால் கைகூடலாமோ ?

கூகில் குரோம் பயன்படுத்திப் பாருங்களேன் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நீங்க, ஜாஹிர் காக்காவெல்லாம் மருத்துவர் பட்டத்தை யாருக்கும் தெரியாமல் தபால் மூலம் படித்து முடித்து வாங்கினீர்களோ? சொல்லவே இல்லெ........//

அவ்வ்ளோ ஈசியா முனைவர் பட்டம் வாங்குவது !? தெரியவே இல்லையே !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அது சரி ஒரு டவுட்....

கூவும்/பாடும் குயில் ஆண் குயிலா? இல்லை பெண் குயிலா என்று எப்படி கண்டுபிடிப்பது? (மணிமேகலை பிரசுரத்தில் இதற்கெல்லாம் புத்தகம் ஜென்மத்திற்கும் கிடைக்காது என்றெண்ணுகிறேன்)

கூவுவதற்கு முன் தன் குரலை கொஞ்சம் கனைத்துக்கொண்டால் அது ஆண் குயில் என்றும் கனைக்காமல் நேரடியாக கூவ ஆரம்பிக்கும் குயிலை பெண் குயில் என்றும் கருதலாமா? யாராச்சும் விளக்கம் சொல்லுங்களேன்...

குயிலின் நாடிப்பிடித்து பார்க்கும் அ.நி. வாசகர் வட்டத்தின் அழகான அட்டகாசம்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Yasir said...

சுப்ஹானல்லாஹ்...கா.மு.தொ கூட்டணியில் இவ்வளவு விசயங்களா இருக்கு ??? நல்ல பயனுள்ள தகவல்கள் காக்கா...

அது சரி...கூட்டணிக்கு தலைவர் யாரு ??

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கூவும்/பாடும் குயில் ஆண் குயிலா? இல்லை பெண் குயிலா என்று எப்படி கண்டுபிடிப்பது? (மணிமேகலை பிரசுரத்தில் இதற்கெல்லாம் புத்தகம் ஜென்மத்திற்கும் கிடைக்காது என்றெண்ணுகிறேன்)//

இதுக்கு அசத்தல் காக்காவிடமிருந்து விளக்கம் வருமென்றும் காத்திருப்போம் ஏன்னா சுருதி சுடச் சுட ஸாரி சொட்ட சொட்ட குயில் எப்புடி பாடுமென்றும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அது சரி...கூட்டணிக்கு தலைவர் யாரு ??//

தம்பி யாசிர் : கூடு அணிக்கு "தலை"வா(ருங்கள்) என்றுதான் சொல்ல முடியும் ! ஏன் அதுக்குரிய தகுதியை தலை(யில்)கனமில்லாமல் இருப்பின் நலமே !

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் அபுஇபுறாஹிம்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கா.மு.தொ.முற்போக்கு கூட்டணி !
உண்மையில் பிரிக்க முடியாத கூட்டணி!

நான் பெரிதா? நீ பெரிதா?
என்று சண்டை போடாத கூட்டணி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.