Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 3 31

ZAKIR HUSSAIN | January 23, 2012 | , ,



Time Management தெரியுமுன் Goal Setting தெரிதல் அவசியம். உங்களின் இலக்கு தெரியாமல் மட்டும் time management  புரிதல் அவசியம் இல்லை. இது பெரும்பாலும் சொந்த வியாபாரத்தில் இருப்பவர்கள், சேல்ஸ் லைனில் இருப்பவர்கள், மாணவர்கள் இவர்களுக்கே அதிகம் பொருந்தும். நீங்கள் என்ன வேலை செய்தாலும் சேல்ஸ் கமிசன் எல்லாம் கிடையாது சம்பளம் மட்டும்தான் என்றால் எதிர்காலத்தை உங்களுக்கு திட்ட மிட மட்டும் பயன்படும்.

இறைவன் எல்லோருக்கும் 24 மணிநேரம்தான் கொடுத்திருக்கிறான், ஆனால் சிலரால் மட்டும் எப்படி முன்னேற முடிகிறது. எப்படி முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் கொடுக்கப்பட்டிடுக்கும் நேரத்தை சரியாக நெறியாள்கிறார்கள் என்பது என் கருத்து. [அவனுக்கு மச்சம் இருக்கிறது, தழும்பு இருக்கிறது என்று ஐடென்டிஃபிகேசன் மார்க் எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.]

Time managementல் முக்கியமான விசயம் முதலில் உங்கள் முன்னேற்றத்துக்கு தடையான விசயங்களில் எப்படி நேரம் செலவாகிறது என்பதை பட்டியலிடுவது. எது உங்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறதோ அதை திரும்பவும் செய்யக்கூடாது. 1997ல் சாட்டிங் பைத்தியம் பிடித்து அலைந்தவர்களில் நானும் ஒருவன். எப்போது அது என் வேலைக்கு தடையோ அன்றைக்கே மெஸ்ஸஞ்சர், சாட்டிங் எல்லா ப்ரோக்ராமும் டெலிட் செய்து விட்டேன்..

வேலைக்கு தடையான விசயத்தை எப்போதும்  உடனே நிறுத்த தெரிய வேண்டும். இப்படி செய்யவில்லை என்றால் வைரஸ் தாக்கிய சிஸ்டத்தை அதை சுத்தப்படுத்தாமல் புதிதுபுதிதாக சாஃப்ட் வேர்களை நிறுவ நினைப்பது மாதிரி. அவர் முகத்துக்காக செய்கிறேன் , இவரின் நகத்துக்காக செய்கிறேன் கதையெல்லாம் உருப்பட மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களின் டயலாக். இவருக்காக செய்கிறேன் என்று உங்களால் எதுவும் தொடர்ந்து செய்ய முடியாது. அதே சமயம் உங்களின் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வந்து 'மாப்லெ ஊருக்கு போகலாம்னு இருக்கேன் வந்து கடையில் செலெக்ட் செய்து கொடேன்' என கேட்பவர்களுக்கு முழுக்க முழுக்க வேலையில்லாமல் இருந்தால் மட்டும் உதவி செய்யுங்கள்...இல்லாவிட்டால் pick up & drop சிறந்தது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ப்ரயோஜனமாக இருக்கவேண்டும் எனும் மனநிலை உள்ளவர்களால்தான் ஒரு சிறந்த மனிதர்களாக வளரமுடியும். இல்லாவிட்டால் எல்லோரின் கட்டளைகள சுமக்கும் பொதிகழுதையாக உங்கள் வாழ்க்கை மாறிப்போய்விடும்.

முதலில் இன்னும் 5 வருடத்தில் உங்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகள் எப்படி இருக்கவேண்டும். அது போல் 10 வருடத்தில்; , 15 வருடத்தில் , 20 வருடத்தில். இப்படி ஒரு ரோட் மேப் உங்கள் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். அதை அடைய சில விசயங்கள் தேவை. எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து எவ்வளவோ விசயம் நீங்கள் எழுதியிருப்பீர்கள். அதில் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு என எழுதப்பட்ட விசயங்கள் எத்தனை வரிகள்.?

உங்கள் கனவுகள் அனைத்தயும் எழுத்துக்களாகவும், படங்களாகவும் பதிந்தால் வாழ்க்கையை திருப்பி பார்க்கும்போது நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும். என் வாழ்க்கையில் நிறைய விசயங்களை இப்படி நான் சாதித்திருக்கிறேன். இதன் காரணம் 'உங்களின் ஞாயமான தேவைகளை நீங்கள் அடைய இறைவனின் உதவி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்" எனும் என் அசைக்க முடியாத நம்பிக்கைதான். உங்கள் கனவுகளை வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை உங்கள் கைப்பட எழுதுங்கள்.

உதாரணம்: உங்கள் பிள்ளைகளை என்னவாக படிக்க வைக்க நினைக்கிறீர்கள்.

என்னவிதமான வீட்டில் நீங்கள் வாழ நினைக்கிறீர்கள். எவ்வளவு உங்கள் சேமிப்பில் இருக்க் வேண்டும் என நினைக்கிறீர்கள்.ஒன்று கவனித்தீர்களா. இது எல்லாம் பாசிட்டிவ் ஆன விசயம் உங்கள் வாழ்க்கையின் எதிர்மறையான சிந்தனைகள் குறைய இதுவும் ஒரு வழி..

Time management ல் முக்கிய பாடங்களில் ஒன்று Productive Time / Un Productive Time  எது என்பதின் மீது ஒரு awareness   இருக்க வேண்டும் என்பதுதான். இதை தெரிய ஒரு நாளில் நாம் செலவளிக்கும் நேரங்கள் எப்படி செலவாகிறது என தெரிந்திருக்க வேண்டும். நகரங்களில் வாழ்பவர்களின்  சூழ்நிலை 8 மணி நேரம் தூக்கம், 4 மணி நேரம் தயாராவது, பயணிப்பது என்றும், திரும்ப 3 மணி நேரம் வீடு திரும்புவது என்றும் , வெட்டிப்பேச்சு / என்டர்டைன்மென்ட் இவைகளுக்கு 1 மணித்தியாளம் என வைத்துக் கொண்டாலும் 8 மணி நேரம்தான் உருப்படியான நேரம். உங்கள் எதிர்கால கனவுகள் இதில்தான் இருக்கிறது. அதாவது  1/3 நாட்கள் ஒரு வருடத்தில் அதாவது 122 நாட்க்கள் எனவே ஒரு வருடத்தில் வீக்லி ஹாலிடே, காந்தி ஜெயந்தி, கிருஷ்ணர் ஜெயந்தி,  [ஜெயந்தி யாருப்பா?], புயல், மழை, அரசியல் தலைவர்கள் இறந்த தினம் , பிறந்த தினம் இவையெல்லாம் கழித்துப்பார்த்தால் , மிஞ்சுவது ஒரு 100 நாள் தான் தேறும். இந்தியாவில் வாழ்பவர்களுக்கு ஜாதி சண்டை, பிண ஊர்வளம், தோற்றுப்போன / ஜெயித்த அரசியல்வாதிகளுக்கு கடை அடைப்பு , உண்ணாவிரதம் [யாரும் இளைத்த மாதிரி தெரியவில்லை] இப்படி இன்னும் சில விசயங்கள் உங்கள் கனவுகளை திருடி விடும். இருப்பினும் மனம் தளரவேண்டாம். இந்தியா அதிகமான உலக பணக்காரர்களை தன் வசம் வைத்துள்ள நாடு என்பதை மறந்து விட வேண்டாம்.

……வேலைகளில் எது முதலிடம் கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் எழுத்தில் இருக்க வேண்டும். Priorities starting  from 1-5 or 1-10 இப்போது உள்ள மொபைல் போனில் நோட்ஸ்/ கூகுள், மைக்ரோ சாஃப்ட் அவுட் லுக் காலண்டர்கள் இதற்க்கு உதவியாக இருக்கும்.

உங்களின் கனவுகளை உங்களுக்குத்தெரியாமல் அபகரிக்கும்  Face Book, Twitter இவைகளின் மீது ஒரு சரியான முடிவுகள் நீங்கள் எடுத்தாக வேண்டும். பொழுதுபோக்கு அவசியம்தான் அதற்காக பொழுது உங்களை போக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

உங்களின் Time Killer எதுவென தெரிய சில Time killers...

#. கொஞ்ச நேரம் இந்த சீரியலைப்பார்த்தால் குடி மூழ்கிடாது. [பிறகு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்ததால் சீரியல் தயாரித்தவர்களின் குடி மூழ்கவில்லை என்பது உண்மையானது.... பார்த்தவர்களின் குடி....???]

#. மாப்லெ ..நீ தஞ்சாவூர் போகனும்னு சொன்னியே நான் போரன் நீ வர்ரியா? என உங்களை அழைத்துப்போய் அவன் ஆஸ்பத்திரி டோக்கன் எடுக்கவும், மெடிக்கல் சாப்பில் நிற்கவும் உங்களின் வெகேசன் "பல்பிஸ்' ஆனது தெரியாமல் வெட்டாட்டுக்கிடாய் மாதிரி ஊர் வந்து சேர... உங்களின் பிள்ளைகள் தூங்கிப்போயிருக்கும்.

#. பரீட்சை சமயத்தில் கல்யாண சாப்பாட்டுக்கு பேயாக அலைவது.

நீங்கள் வெளிநாட்டில் போய் எவ்வளவோ விசயங்களை சாதித்திருந்தாலும் உள்ளூரில் சரியாக செருப்பு போடத்தெரியாதவன்  " தாசில்தாரை எனக்கு தெரியும், கலக்டர் எனக்கு க்ளாஸ் மேட்" ங்கற மாதிரி பேசும் அலப்பரைகளில் நம்பி காசை கொடுத்து விட்டு பிறகு அலைய ஆரம்பிப்பது. [நீங்களே எதிர்கொண்டால் / எடுத்து நடத்தினால் எவ்வளவோ விசயங்கள் முடிந்திருக்கும்]

ஒரு கால்பந்து விளையாட்டைப்பாருங்கள் , அதில் கோல் போஸ்ட் இல்லாமல் விளையாடினால் எப்படி இருக்கும், கோல்போஸ்ட் இருந்து நேர அளவு இல்லாமல் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்குமா?... வாழ்க்கையும் அப்படித்தான் நேர அளவு முக்கியம், இலக்கு மிக மிக முக்கியம்.

We will see how often we have to review our goal. How do we align with  the ‘Dharma” of work in next episode.
தொடரும்...
- Zakir Hussain

31 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உசுப்பிவுடுது படிக்கட்டுகள்....

ஏற்றி விடுவதில் நீங்கள் நீங்களே !.... (நிஜத்தை சொன்னேன்)

இலகுவாக, கட்டப்படும் படிக்கட்டுகள் இலக்கை நோக்கிச் செல்ல வழிகாட்டி !

//.இல்லாவிட்டால் pick up & drop சிறந்தது.//

இங்கேயும் ஒர்க் அவுட் ஆகுமா !?

sabeer.abushahruk said...

அட, ஆட்டம் சூடுபிடிக்குதாப்பா. யாத்கார் லஸ்ஸியில் பிரத்யேக சுவையுடனான தேநீர் அருந்திக்கொண்டு நீ பேசியதையெல்லாம் மேற்கொண்டு மெறுகேற்றி இங்கே தொடர்கிறாய்.

அசத்தல் காக்கா ரசிகர்களுக்கு: இப்படித்தான் ஒருமுறை நம்மூரு நியூசினிமாவிலே (டூரிங் டாக்கீஸுக்கு பேரைப் பார்த்தியலா)படம் பார்க்கப் போயிருந்தப்ப (சினிமா ஹராமுன்னு யாரும் கிளம்பிடாதீங்கப்பா. அறியாமை காலத்து நிகழ்வு அது) எங்ககூட சண்டைக்கு வந்த போதைப் பார்ட்டிகூட ஏதோ உரையாடிக்கொண்டிருந்தான் உங்கள் அசத்தல் காக்கா. நாந்தேன் சட்டுனு பூந்து அந்த அலம்பல் பார்ட்டி மூஞ்சில உட்டேன் ஒரு குத்து. பிரச்னை உடனே தீர்ந்தது.

இத இப்ப ஏன் சொல்றேன்னா உங்க அசத்தல் காக்கா பொடுசா இருக்கும்போதே இப்படி திட்டமிடல் சார்ந்துதான் பேசுவான்.

என்னா ஒன்னு, சொன்னானேத் தவிர அதை நான் பின்பற்றினேனா என்று கவனிக்கத் தவறி விட்டான்.

ஆனா ஒன்னுடாப்பா, உன் இந்த பாடத்தைமட்டும் இள்சுகள் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த பாடத்தைமட்டும் இள்சுகள் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.//

பழைய இளசுகளும் பின்பற்றலாம்... (no conditions apply !)

Noor Mohamed said...

இந்த பாடம் Management with Measuremet. இளைய தலைமுறையினர் படித்து படிக்கட்டுகள் ஏற வழிகாட்டும் அபூர்வமான கட்டுரை.

நன்றி சகோ ஜாகிர் ஹுசைன்

நூர் முஹம்மது

Shameed said...

கட்டுரயின் பெயர் படிக்கட்டுகள் என்று இருந்தாலும் கட்டுரயின் செய்திகள் உயரே பறக்க உதவும் ரன்வேயாக உள்ளது.

Shameed said...

//அவனுக்கு மச்சம் இருக்கிறது, தழும்பு இருக்கிறது//

//அவர் முகத்துக்காக செய்கிறேன் , இவரின் நகத்துக்காக செய்கிறேன் கதையெல்லாம் உருப்பட மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களின் டயலாக்//

//உள்ளூரில் சரியாக செருப்பு போடத்தெரியாதவன் " தாசில்தாரை எனக்கு தெரியும், கலக்டர் எனக்கு க்ளாஸ் மேட்" ங்கற மாதிரி பேசும் அலப்பரை//

ரசித்து சிரித்தவைகள்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மாஷா அல்லாஹ்!

சகோ. ஜாகிர் ஹுசைன்:

நல்லதொரு நேர ஆளுமை வழிகாட்டி!

நேரங்களை வீண் விரயம் செய்பவர்களுக்கு ஒரு குட்டு!

தன் வேலையை முடித்து விட்டு நேரம் இருந்தால் பிறருக்கு உதவலாம் என்பது வரவேற்கக் கூடியதே!

முகதாட்சணை பார்த்தால் நம் வேலைகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் என்பதும் உண்மையே!

தாங்கள் சொல்வது போல் எக்ஸல் சார்ட் டைப் செய்து வைத்து பின்பற்றி வருகிறேன். (நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் என்னுடைய கனவு திட்டங்களை படித்தும் பார்த்துக் கொள்வேன்).

என்னால் முடியாது என்று நினைத்த நல்ல காரியங்களையும் முயற்சி செய்ய வேண்டும் என்று (1999ல்) எழுதி வைத்தேன்.

வல்ல அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்தேன். காரியங்கள் நடைபெற முயற்சிகளும் செய்தேன்.

அல்லாஹ்வின் அருளால் முடியாது என்று நினைத்த காரியங்களில் சில 2005ல் நிறைவேறியது.

அல்ஹம்துலில்லாஹ்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முன்னேற்றத்திற்கான முதன்மை வழிகாட்டுநெறிகள். இளசு பழசு என எல்லாருக்குமே!

// பொழுதுபோக்கு அவசியம்தான். அதற்காக பொழுது உங்களை போக்காமல் பார்த்துக்கொள்ளனும்.//

பொழுது பற்றிய பொருள் பொதிந்த புது இலக்கணம்.

சேக்கனா M. நிஜாம் said...

நான் ஷார்ஜாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் பொழுது நான் படித்து தெரிந்துகொள்வதற்காக “Management Skills” என்னும் நூலை அன்பளிப்பாக எனக்கு கொடுத்தார் எனது நிறுவனத்தின் நிர்வாகி.
கணினிப்பிரிவு தேர்ந்தெடுத்து கல்வி பயின்ற நான், நிறுவனத்தின் நிர்வாக திறமையை நன்கு வளர்த்துக்கொள்ள இந்நூலும் ஒரு முக்கிய பங்கு வகித்தது. மேலும் நாம் பணிபுரிகின்ற ஒவ்வொரு நிறுவனத்தின் அனுபவங்களும் முக்கியமானது என்பதும் குறிப்பிடதக்கது

சகோ. ஜாஹிர் அவர்களின் இக்கட்டுரை என்னைப்போன்றவர்கள் மற்றும் வர இருக்கிற இளைய தலைமுறையினர் என ஒவ்வொருவரும் படித்து தெரிந்துகொண்டு தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியதாகும்.

வாழ்த்துக்கள் ! சகோ. ஜாஹிர்,

நல்ல ஏற்றமுள்ள படிக் “கட்டுகள்”

Anonymous said...

// இறைவன் எல்லோருக்கும் 24 மணிநேரம்தான் கொடுத்திருக்கிறான், ஆனால் சிலரால் மட்டும் எப்படி முன்னேற முடிகிறது. எப்படி முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. //

ஒவ்வொருவரும் நேரத்தை சரியான முறையில் கழித்தால் நமக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். அதை முன்கூட்டியை நாம் ஒவ்வொருவரும் நேரத்தையும், நிமிடத்தையும் கணக்கு வைக்க வேண்டும். அப்படி சரியாக செய்தால் தான் நாம் முன்னேற்றத்தை அடைய முடியும்.
நேரத்தையும், காலத்தையும் தவறவிட்டால் திரும்ப கிடைப்பது கஸ்ட்டாம் போனது திரும்பிவருவதில்லை. முன்கூட்டியை (planning) பண்ணினால் மட்டும் முன்னேற்றத்தையும் மற்ற எந்த காரியமாக இருந்தாலும் அடைவதற்கு இலகுவாக இருக்கும். நேரங்களும், காலங்களும் வீணாவதில்லை. ஜாகிர் ஹுசைன் காக்கா அவர்களே படிக்கட்டுகள் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

முட்டுக்கால் பிடிக்காமல் ஜாஹிர் காக்காவின் மூன்றாவது படிக்கு வந்தாச்சு.அல்ஹம்துலில்லாஹ்.

// இறைவன் எல்லோருக்கும் 24 மணிநேரம்தான் கொடுத்திருக்கிறான், ஆனால் சிலரால் மட்டும் எப்படி முன்னேற முடிகிறது. எப்படி முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் கொடுக்கப்பட்டிடுக்கும் நேரத்தை சரியாக நெறியாள்கிறார்கள் என்பது என் கருத்து.//

முன்னேரக்கூடியவர்கள் பெரும்பாலும் வெளிநாடு அல்லது வெளியூர்களுக்கு சென்று கூட இருக்கலாம்.அதிரையில் இருப்பவர்கள் பெரும்பாலும் முன்னேறாமல் இருக்கிறார்கள் என்று சொன்னால்.மூன்று வேலையும் தேங்காவில் இருந்து பாலை பிழிந்து சமைத்து தருவதினால்தான். மஸ்த்திலேயே முன்னேறாமல் இருக்கலாம் என்பது என் கருத்து.

Anonymous said...

/பொழுதுபோக்கு அவசியம்தான் அதற்காக பொழுது உங்களை போக்காமல் பார்த்துக்கொள்ளவும்.//

//சீரியல் தயாரித்தவர்களின் குடி மூழ்கவில்லை என்பது உண்மையானது.... பார்த்தவர்களின் குடி....???]//

//[நீங்களே எதிர்கொண்டால் / எடுத்து நடத்தினால் எவ்வளவோ விசயங்கள் முடிந்திருக்கும்]//

//ஒரு கால்பந்து விளையாட்டைப்பாருங்கள் , அதில் கோல் போஸ்ட் இல்லாமல் விளையாடினால் எப்படி இருக்கும், கோல்போஸ்ட் இருந்து நேர அளவு இல்லாமல் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்குமா?... வாழ்க்கையும் அப்படித்தான் நேர அளவு முக்கியம், இலக்கு மிக மிக முக்கியம்.//

மாஷா அல்லாஹ்!

படித்துவிட்டு மூக்கின்மேல் விரல் வைத்துவிட்டேன். அறிவின் வளமும் அதில் மண்ணின் மனமும் கலக்கப்பட்டு ஒன்று சேர்ந்து பரிணமிக்கிறது.

மேலும் வளர்ந்து இன்னும் அருமையான கருத்துக்களை எல்லோருக்கும் எடுத்துச்சொல்லும் நலத்தையும், வளத்தையும், ( நேரத்தையும் கூட) தர வல்ல நாயனை வேண்டுகிறேன்.

Ebrahim Ansari

Yasir said...

மாஷா அல்லாஹ்...உங்கள் ஆக்களில் தலைசிறந்த ஆக்கம் இது.....”நேரம் திட்டமிடல்” என்ற தலைப்பையே நம்ம ஆள்களுக்கு புரிய வைப்பது கஷடம்...அதனை இவ்வளவு சிம்பிளாக எப்படி உங்களால் சொல்ல முடிந்தது....முன்னேற்றத்தின் ”படிகட்டுகள்” பளபளப்பகின்றன ஒவ்வொரு பதிவிலும்...படிக்கட்டுகளை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே செல்லுங்கள் காக்கா

ZAEISA said...

வையத்து வாழ்வுக்கு அருமருந்து யாதெனில்
மாந்தர்க்கு,சாகிர் வரைந்த(தை)ப்படி.

குறள்:614701

(ஜ வடமொழி எழுத்தென்று எங்கசாரு சொன்னாங்க)

ஜாகிர் ஹீசைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) படிக்கட்டுகள் நல்லதொரு வழிகாட்டி வாழ்த்துக்கள்
//உள்ளூரில் சரியாக செருப்பு போடத்தெரியாதவன்//
ஊரில் யாரும் செருப்புப் போடத்தெரியாதவர்களுமா இருக்கிறார்கள் இதற்கு என்ன அருத்தம்? Brother Zakir Hussain

ZAKIR HUSSAIN said...

To Bro Abu Ibrahim,

//பழைய இளசுகளும் பின்பற்றலாம்...//
"பழைய இளசுகளும்"...இதைத்தான் "தெளிவான உள்குத்து" என பேன் தலை சாத்தனார் தனது இலக்கியத்தில் இயம்பியிருக்கிறார்,

சபீர்....அயம் யுவர் பெஸ்ட் பிரண்ட்யா...பிலீஸ்..கெல்ப் மி

நூர் முஹம்மது எப்படியிருக்கிறீர்கள்...பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது உள்ள அதே ஒல்லியான தேகம்தானா...இல்லை அதெல்லாம் பழைய கதையாகிவிட்டதா?


துவான் ஹாஜி சாகுல்; உங்களின் ரன்வே கமென்ட்டை வீட்டில் படித்துக்காண்பித்தேன். நீங்கள் பேசுவதுபோலவே'புத்தாக்கத்துடன்" [ அதுதான் 'கிரியேட்டிவிட்டி' நு டமில் லெ சொல்லுவாங்க] எழுதுவதாக என் மகன் சொன்னான்.

To Bro Alaudeen
//(நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் என்னுடைய கனவு திட்டங்களை படித்தும் பார்த்துக் கொள்வேன்).//

இந்த செயல் உங்கள் இலக்கை சீக்கிரம் அடைய மிக உதவியாக இருக்கும்.

To Bro MHJ... இன்னும் எழுதலாம் [ இன்ஷா அல்லாஹ்]

ZAKIR HUSSAIN said...

To Brother சேக்கனா M. நிஜாம்

நீங்கள் சொன்ன அந்த புத்தகம் நானும் படித்ததாக ஞாபகம். முடிந்தால் STEPS TO THE TOP- ZIGZIGLAR படியுங்கள் . நல்ல புத்தகம்.

to brother Ebrahim Ansari,

என் எழுத்தை ரசித்தது கண்டு சந்தோசம். எனக்கு வாழ்க்கையின் சில நெளிவு சுழிவுகளை உங்கள் தகப்பனாரும் கற்றுத்தந்திருக்கிறார்கள்.

To bro ZAEISA

குறள்:614701..நன்று ...[ இருந்தாலும் இந்த ஆக்கத்துக்கு இது அதிகமான புகழ்ச்சி ]
To bro Yasir
”படிகட்டுகள்” பளபளப்பகின்றன ...credit goes to Abu Ibrahim & Thajudeen also.

to bro ஜாகிர் ஹுசைன்...

செருப்பு போடத்தெரியாதவர்கள்...இருக்கிறார்கள் நம் ஊரில் [ செருப்பே போடாமல் இருக்கும்போது ..போடத்தெரியாதவர்கள் இருக்க மாட்டார்களா என்ன]

Noor Mohamed said...

சகோ ஜாகிர் ஹுசைன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

//நூர் முஹம்மது எப்படியிருக்கிறீர்கள்...பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது உள்ள அதே ஒல்லியான தேகம்தானா...இல்லை அதெல்லாம் பழைய கதையாகிவிட்டதா?//

இல்லை அதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. உடம்பை குறைக்க வழி தேடிக் கொண்டிருக்கின்றேன். வாக்கிங் தவிர்த்து வேறு வழி அறிந்தால் கூறுங்களேன். காரணம் கதீப்-சவுதியில் வாக்கிங் போனால் பசங்க அடிக்கின்றார்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னா ஜாஹிர் காக்கா, அடுத்த ஹாஜி முஹம்மது சாரே இங்கு ரெடியா ஆயிட்டமாதிரி தெரியுதே...நல்லா பாடம் நடத்துரிய ஹாக்கா....அடிக்க,ஹிடிக்க மாட்டியளெ? காரணம் அன்னக்கி ஹாஜி முஹம்மது சாரிடம் கன்னத்தில் வாங்கிய அரையில் காதுக்குள் கூச்சலிட்டு ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ் கூட இன்று அகல ரயில் பாதை இல்லாததால் காதில்ஓட மறுத்து விடும்(என்னா அடிங்கிரிய?).

நூர் முஹம்மது காக்கா, ச‌வுதி க‌த்தீஃப் ஏரியாவில் போகிங் அதாவ‌து ம‌ன்ன‌ராட்சி தேவையில்லை என்ப‌வ‌ர்க‌ள் அதிக‌ம் வ‌சிக்கும் ஏரியா என்பதால் அது வாக்கிங் போவ‌த‌ற்கு உக‌ந்த‌ இட‌ம‌ல்ல. க‌த்திய‌ காமிச்சி ஊர்லெ உள்ள‌ ஊட்டு ப‌த்திர‌த்தைக்கூட‌ எழுதி வாங்கிடுவானுவொ போல இருக்கிற‌து அன்றாட‌ க‌ளவானிக‌ளின் அட்டூழிய‌ங்க‌ள் இன்றைய‌ ச‌வுதியில்.

ZAKIR HUSSAIN said...

To Bro Noormohamed

For reducing weight some of the tips which i felt/ learned GOOD.

1. Reduce Rice in take...balance with Vegetables..first 2 weeks you feel hungry...it will be alright after 2 weeks

2. Dinner before 8.00- 8.30 PM

3. Sit-up exercises can help to reduce belly. [ if you have belly]

அப்துல்மாலிக் said...

விட்டது, தொட முயலுவது, முன்னேற துடிப்பது இவையெல்லாவற்றிற்கும் தூண்டுகோலாக இருந்து இந்த ”படிகள்”, Time Management என்பது இலக்கை நிர்ணயித்து அதன்படி முன்னேறுவது, அருமை சகோ.

//கோல்போஸ்ட் இருந்து நேர அளவு இல்லாமல் இருந்தால் சுவாரஸ்யமாக இருக்குமா?... வாழ்க்கையும் அப்படித்தான் நேர அளவு முக்கியம், இலக்கு மிக மிக முக்கியம்.//

சரியா சொன்னீர்கள்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான ஜாஹிர் காக்கா,

TIME MANAGEMENTன் தோல்வி குறிக்கோளற்ற அணுகுமுறை என்பதை மிக தெளிவாக உதாரணங்களுடன் விளக்கி எங்கள் எல்லோருக்கும் புரியவைத்தமைக்கு மிக்க நன்றி... ஜஸக்கால்லாஹ்.

time killerல் இணையத்திற்கு ஒரு பங்கு உள்ளது இன்றைய காலகட்டத்தில் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Anonymous said...

யான் வாப்பாமாரா, ஆம்புளையொவங்களுக்கு மாடுந்தான் சொல்லுவியலா ?

இந்த பொண்டுவோ புள்ளைவோ க்கெல்லாம் டைம் கிடைக்க மாட்டாங்குதுவொல அத எப்புடி கெடக்கிறமாதிரி செய்றது...

அதையும் சொல்லுங்கம்மா,

பெரியம்மா கேடகச் சொன்னதை எழுதிட்டேன்,

-UmmHasim

ZAKIR HUSSAIN said...

சகோ.லெ.மு.செ அபு பக்கர்....எனக்கு தெரிந்து தேங்காப்பால் சமையலுக்குத்தான் பயன்படும். நீங்கள் தான் புதிய பயன்பாட்டை கண்டு பிடித்த மாதிரி தெரிகிறது.


சகோ; அபுபக்கர் அமேஜான்.உங்கள் கருத்துக்கும் நன்றி. டைம் மேனஜ்மன்ட் உண்மையிலேயே கொஞ்சம் சவால்லான விசயம்தான்.


To UMMHASHIM,

House wife ஆக இருப்பவர்கள்...டெலிபோனில் அளவுக்கு அதிகம் பேசுவது. எல்லா சீரியலும் பார்த்து முடிப்பதை ஒரு யாகம் மாதிரி செய்வது. இதை இரண்டையும் மட்டுப்படுத்தினால்..நேரம் தானாக கிடைக்கும்.

Bro Thajudeen & Malik..thanx for your comments. will meet in next episode

sabeer.abushahruk said...

1. Reduce Rice in take...balance with Vegetables..first 2 weeks you feel hungry...it will be alright after 2 weeks

2. Dinner before 8.00- 8.30 PM

3. Sit-up exercises can help to reduce belly. [ if you have belly]

இதெல்லாம் சம்பளத்துக்கு ஆள் வச்சு செஞ்சா நமக்கு பலன் கிடைக்கிறமாதிரி மார்க்கம் உண்டா?

sabeer.abushahruk said...

ஜாயிரு, அதுக்குள்ள மேடை ஏறிட்டியா? (தம்பி அர.அல.கொந்தளிச்சிட வேண்டாம். நான் சொல்றது குத்பா மேடையல்ல :))

உன் பதிவைப்பற்றி நிறைய எழுதத் தோனுது. நெட் வசதி வீட்டில் மட்டும் இருப்பதால் ஈவினிங்தான் நேரம் வாய்க்கிறது.

டைம் மேனேஜ்மென்ட்டில் நிச்சயமாக pancualityக்கு தனி இடம் இருக்கும் இல்லையா? முன்பெல்லாம் பன்க்ச்சுவாலிட்டி என்பது பஞ்சுப்பொட்டின்னு காதில விழுமா, அந்தப் பக்கம் (weaving class)போறதே இல்லை.

ஜஸ்ட் செருப்புப் போடத்தெரியாதவர்களைப் பற்றி நீ சொல்லவில்லைத்தானே. சரியாக அதாவது. 'சரியாக' செருப்புபோடத் தெரியாதவர்களை நானும் பார்த்திருக்கிறேன்.

-சிலர் செருப்புக்குப்பதில் குண்டும் குழியுமா ரப்பரைப் போட்டிருப்பர்.
-சிலர் காலைவிட நீள அளவுகூடிய செருப்பில் நீச்சலுடை மாதிரி அணிந்திருப்பர்.
-சிலர் செருப்பணிந்து நடக்கையில் ச்சடக் ச்சடக்கென்று ஏதோ லாடம் அடித்தமாதிரி சப்தம் எழுப்புவர்
-இன்னும் சிலரோ, ஜும் ஆவுக்குப்பிறகு தம் செருப்பைப் போடத்தெரியாமல் நம் புது செருப்பைப் போட்டுக்கிட்டு போய்விடுவர்.

இவர்களெல்லாம் சரியாகச் செருப்பு அணியத்தெரிந்தவரா என்று தெரியவில்லை.:)

(ஜாகிர் ஹுஸைன், சமாளிச்சிட்டேனா?)

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும் ஜாகிர் காக்கா
தங்களுடை ஆக்கங்கள் படித்து வருகிறேன் மிகவும் பயனுள்ளது. பின்னுட்டம் இட ஆசை தான் நான் கணினிகென்று ஒதுக்கிய நேரத்தில் பின்னுட்டம் இடமுடியவில்லை காரணம் புது வரவிடம் (மகன்) நேரம் செல்கிறது. துஆ செய்து வருகிறேன் அனைவருக்கும்.
நமது மார்க்கத்தை சரியாக பேணி ஐந்து வேலை ஜமாத்துடன் தொழுதால் பாதி நேரம் சரியாகிவிடும்.

மச்சான் லெ.மு.செ. அ தேங்காபால் மேல பழிய போட்டுடியலே பாவம் அது என்ன செஞ்சுச்சு உங்கள நீங்க தானே நாக்குக்கு ருசியா கேக்றிய. என்னா தேங்காப்பால் ஊத்துனாலும் இஸ்லாம் சொன்ன அரை வயிறு சாபிட்டால் சோம்பேறி தனம் தான போயிடும் வர்டா மச்சான்.

KALAM SHAICK ABDUL KADER said...

சோம்பலை விலக்கு; வெற்றியே இலக்கு

இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து
இடைவரும் சோம்பலை யொழித்து
கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக்
களத்தினு ளிறங்கினால் வெற்றி
விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து
விதைத்திடு மனத்தினுட் பதிந்து
துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால்
துவக்கிடுப் புள்ளியும் முன்னால்


நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும்
நோக்கமும் முடிவுறும் நாளை
ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும்
ஊசலும் விலகவும் வேண்டும்
ஆக்கமும் குறையக் காரணம் என்ன
ஆர்வமாய்த் துலக்கிட வேண்டும்
தாக்கிடும் விபத்தில் பரிவுடன் வந்து
தாங்கிடும் நண்பரும் வேண்டும்


திட்டமிட் டபடி யிலக்கினை நோக்கித்
திண்ணமா யுழைத்திட வேண்டும்
வட்டமாய்க் கவலை சுற்றியே மனத்தை
வதைத்திடா திருந்திட வேண்டும்
நட்டமே வந்து தடுத்திட முனைந்தால்
நம்பியே வென்றிட வேண்டும்
பட்டதும் தெளிவுக் கிட்டவும் வேண்டும்
படைத்தவ னருளவும் வேண்டும்

இப்னு அப்துல் ரஜாக் said...

ஜாகிர் காக்கா,ஒவ்வொரு உதாரணமும் வைட்டமின் வரிகள்.இன்னும் எதிர்பார்க்கிறோம்.கோல் போஸ்ட் உதாரணம் நல்லா இருக்கு

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஜாயிரு, அதுக்குள்ள மேடை ஏறிட்டியா? (தம்பி அர.அல.கொந்தளிச்சிட வேண்டாம். நான் சொல்றது குத்பா மேடையல்ல :))//
அன்பு சபீர் காக்காவ்,இத படிச்சி சிரிச்சிட்டேன்.டைமிங் ஜோக்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// மச்சான் லெ.மு.செ. அ தேங்காபால் மேல பழிய போட்டுடியலே பாவம் அது என்ன செஞ்சுச்சு உங்கள நீங்க தானே நாக்குக்கு ருசியா கேக்றிய. என்னா தேங்காப்பால் ஊத்துனாலும் இஸ்லாம் சொன்ன அரை வயிறு சாபிட்டால் சோம்பேறி தனம் தான போயிடும் வர்டா மச்சான்.//

அவசரப்படாமே செய்தியை கேட்டுட்டு போ மச்சான்.

மச்சான் தேங்காபால் மேல பழியை போடவில்லை.தேங்காபால் இல்லாமல் சமைக்கத் தெரியாதவர்கள் மேல தான் பழியை போடுகிறேன்.

என்ன பன்னுவது ருசித்து ருசித்து உள்ளே தள்ளுவதோ நாக்கு நிறைவதோ வயிறு.அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தானே!

அது போல் அளவோடு தேங்கா பாலை பயன் படுத்தினால் அர வயிறு உண்டு அவதி படாமல் இருக்காலாமே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.