Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கின்டர்கார்ட்டன் தளிரோடு கவியுரையாடல் ! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | January 19, 2012 | , , , , ,


(ஹூ ஈஸ் காட் !)

டாடி, வாட் ஈஸ் காட்?
காட் இஸ் நாட் ‘வாட்’. காட் இஸ் ‘ஹூ’
ஓகே ஓகே, ‘ஹூ’ இஸ் காட்?
காட் இஸ் அல்லாஹ், தி க்ரியேட்டர்!

யு மீன் ‘ஸீ ஆர் ஈ ஏ டி ஓ ஆர்’ ?
யெஸ் மை சன்
மீனிங் டாடி ?
அல்லாஹ் க்ரியேட்டட் ஆல், மை சன்.
ஹி மேட் ஆல்.
ஹி மேட் யு அன்ட் மி ஆல்சோ!

காட் இஸ் குட், நோ டாடி?
காட் இஸ் வெரி குட் சன்.
லைக் ட்டென் அவுட் ஆஃப் ட்டென் ?
யெஸ்.
அன்ட் ஷைத்தான் இஸ் வெரி பேட்!
ஜீரோ அவுட் ஆஃப் ட்டென் ?
யெஸ். யு ஆர் ரைட்!

ஷைத்தான் என்ன பண்ணும் டாடி?
ஷைத்தான் கெடுக்கும் சன்,
கெட்டதைக் கேட்கச் சொல்லும்,
கெட்டதைப் பார்க்கச் சொல்லும்,
கெட்டதைப் பேசச் சொல்லும்,
கெட்டவனாக வாழச் சொல்லும்.
லைக் எனிமி டாடி?
யெஸ் மை சன்!

அல்லாஹ்வைப் பார்க்க முடியாதா வாப்பா?
அன்பைப் பார்க்க முடியுமா?
அருளைக் காண இயலுமா?                                                                    
நோ டாடி!
பட் யு கேன் ஃபீல், நோ சன்?
யெஸ் டாடி, வென் யு ஹக் மி!
அல்லாஹ்... யு கேன் ஃபீல், சன்!

வாட் ஷுட் ஐ டு, டாடி?
யு ஷுட் மேக் யுவர்செல்ஃப் 'அல்லாஹ் லைக்ஸ் யு'!
எப்படி டாடி?
ஓதனும் படிக்கனும்
ஒழுக்கமா இருக்கனும்
உண்ணனும் திண்ணனும்
உண்மையாய் உழைக்கனும்

அல்லாஹ்வை அஞ்சனும்
அவனிடமே கெஞ்சனும்
அவனையேத் தொழனும்
அருளைக்கேட்டு அழனும்

ஓகே டாடி...
ஐ’ல் பி எ குட் பாய்...
சோ தட் அல்லாஹ் வில் லவ் மி!
தட்ஸ் மை பாய்!

லுக் அட் மை ட்ராயிங், டாட்!
இட்ஸ் வெரி வெரி நைஸ் சன்!
எக்ஸெல்லென்ட் டாடி?
யெஸ் அஃப்கோர்ஸ்!
தென், கிவ் மி ஸ்டார் டாட்!
ஹியர் யு கோ சன்!

அன்ட் யுவர் ட்ராயிங் இஸ் லைக்:
கொஞ்சும் உன்
நெஞ்சில் உதித்த வீட்டை
பிஞ்சு விரல்களால்
பிடித்திழுத்தக் கோட்டை
இழுத்து இழுத்து வரைந்த
இந்த
வீட்டைவிட பெரிதல்ல மகனே கோட்டை!

லவ் யு டாட்!
லவ் யு சன்!!!

- சபீர்
- sabeer.abushahruk

31 Responses So Far:

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தந்தையும், மகனும்

அழகிய கவியுரையாடல்!

Shameed said...

லைட் சூப்பரா எரிகின்றது

KALAM SHAICK ABDUL KADER said...

பிஞ்சுக் கரத்தின் பிசகாத ஓவியம்
நெஞ்சில் பதிகின்ற நல்லுரை காவியம்
கெஞ்சினேன் வல்லோனை கூட்டிவை ஆயுளும்
பஞ்சமிலா பாசத்தைக் காண்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவிக்கதவை திறந்துவிட்டதும் எங்களை கைகட்டி நிற்க வைத்து கவிப்பாடம் நடத்துறீங்க! இங்லீஸு!

நீங்க சொல்லித் தர்ரது நல்லாத்தான் இருக்கு.

சொன்னாலும் சொல்லாட்டியும் கவியால் நீங்க dad நாங்க son.

இப்னு அப்துல் ரஜாக் said...

//அல்லாஹ்வை அஞ்சனும்
அவனிடமே கெஞ்சனும்
அவனையேத் தொழனும்
அருளைக்கேட்டு அழனும்//

சூப்பர்,அசத்தீட்டீங்கள் சபீர் காக்கா

//லவ் யு டாட்!
லவ் யு சன்!!!//

லவ் யு சபீர் காக்கா

ZAKIR HUSSAIN said...

ஆங்கிலம் கலந்துருச்சேனு யாரும் பொங்க கானோமே!!!

சேக்கனா M. நிஜாம் said...

சலாம் சபீர் காக்கா

இவ்வுரையாடலை இங்கிலீஷ் எழுத்துக்களிலும் பதியுங்கள்

Anonymous said...

// ஓதனும் படிக்கனும்
ஒழுக்கமா இருக்கனும்
உண்ணனும் திண்ணனும்
உண்மையாய் உழைக்கனும் //

மிக அருமையாக சொன்னீர்கள் சபீர் காக்கா நீங்கள் குறிப்பிட்டது போல் நம் ஊர் பிள்ளைகள் இப்பொழுது குர் ஆன் மதர்சாவிற்கு சென்று ஓதி அவர்களுடைய திறமைகளை வெளிபடுத்தி எண்ணற்ற பரிசுகள் வாங்குகிறார்கள். இப்போ உள்ள பிள்ளைகள் மிக அருமையாகவும், ஒழுக்கமாகவும் இருந்து வருகின்றன நம் ஊரில் மக்தப் மதர்சா வந்தவுடன் நம் பிள்ளைகள் சீராகவும், சிறப்பாகவும், ஒழுக்கமாகவும் இருந்து வருகின்றனர். எல்லாம் வல்ல இறைவன் இந்த பிள்ளைகளுக்கு நல்ல தீனுள்ள கல்வியையும் ஒழுக்கமுல்ல பண்பையும் கொடுப்பானாகவும்.

sabeer.abushahruk said...

ஒவ்வொரு தந்தைக்கும் குழந்தைகளோடு நேரம் செலவுசெய்வது வரவு மிக்கது; எழுதிச்சொல்லிவிடவியலாத சந்தோஷம் எனும் வரவு.

பிள்ளைகள் உலகம் தனித்துவமானது. அதை கவனிப்பதும் அதனுள் நுழைந்து அவர்களோடு களிப்பதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது தொடர்பான கீழே உள்ளவை சத்தியமார்கம் டாட் காம் மற்றும் திண்ணை டாட் காமில் நான் எழுட்கியவை நீங்கள் வாசிக்கவேண்டி:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிதைக்கு வேலி போடுங்கள் ஸாரி வெட்டிப் போடுங்கள் என்று வந்த தம்பி அப்துல் லத்தீஃபையே :)!

கவிதையெழுத வைத்த வரிகளுக்கு சொந்தக் காரருக்கு நன்றி (ஜஸாக்கல்லாஹ் ஹைர்...)

முதலில் ஒரு ஹைலைட் !

இதெப்படி உருவானது என்பதனை சுருக்கமாக மீதியை கவிக் காக்கா விளக்குவார்கள்...

மகனோடு உரையாடும்போது நாம் ஒன்று சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அடிப்பான் என்ற ஒரு வார்த்தையை எதேச்சையாக சொல்ல... அடுத்தது எழுந்ததுதான் இந்தக் கரு...

யார் அல்லாஹ் ! (கிண்டர் கார்ட்டன் மொழியில்) !

வரைகலையை வைகறைப் பொழுதில் கணினியுனூடே சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கும்போது... இங்கே மனை போடுவது பற்றியும் வீடு கட்டுவது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் தந்தைக்கு மகனுக்கும் உதித்த கருதான் "வரைபடம்"

sabeer.abushahruk said...

'மம்மி' தாலாட்டு!

நல்ல டைனோஸர்
மிளகாச் சட்னி கேட்காமல்
இட்லி உண்டது
படுக்கச்செல்லுமுன் 
பால் குடித்தது
'மூச்சா' வந்தால்
டாடி டைனோஸரை எழுப்பியது

தொப்பி யணிந்து
பள்ளி சென்றது
பள்ளிக்கூட 
உணவு இடைவேளையில்
அம்மா தந்துவிட்ட
சிற்றுண்டி உண்டது

கருப்புக் காரை
விரட்டியது
கணக்கு சாரை
மிரட்டியது

சுலைமானுடனும் ஷாருக்குடனும்
விளையாடியது
பலூன் பாலுவிடம்
'கட்டி' விட்டது
சுஷ்மிதா திருடிய
ஷார்ப்பெனெரை
பிடுங்கித் தந்தது

மம்ஸார் பார்க்கில்
கிரிக்கெட்டில்
ஷாருக்குக்கு நாட் அவுட் சொன்னது

மேலும்
நல்ல டைனோஸர்
எழுந்ததும் பல் துலக்கியது
சுவரில் கிறுக்காமல்
காகிதத்தில் எழுதியது
உடை ஈரமானால்
உடனே மாற்றியது

...மகன் உறங்கியதும்
மேலும்
கேவலப் படுவதிலிருந்தும்
தப்பியது டைனோஸர்!

sabeer.abushahruk said...

பிஞ்சுத் தூரிகை!
 
அடுத்த வாரமாவது
சுவருக்குச்
சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி.
 
வட்டங்களும் கோடுகளுமாய்
மனிதர்கள்
சதுரங்களும் செவ்வகங்களுமாய்
கொடிகள் 
ஏனல் கோணலாய் ஊர்வலம்

இரண்டு சக்கர
போலீஸ் காரும்
காரைவிட
பெருத்த விளக்குகளும்
 
விதவிதமான பந்துகளும்
விரட்டும் ஜந்துக்களும்
ஆங்கில எழுத்துகளும்
அதன் தலைகளில் கொடிகளும்
 
டி ஃபார் டாக்கும்
எஃப் ஃபார் ஃபிஷ்ஷும்
குச்சிக் குச்சி கைகளோடு
குத்தி நிற்கும் சடைகளோடு
வகுப்புத் தோழிகளும்
 
உடலைவிடப் பெருத்த
தும்பிக்கையோடு
கால்களைவிடப் பெரிய
வாலுடன்
யானையும்
 
மூவர்ண நிறத்தில்
முக்கோண வீடும்
வாசலைவிடப் பெரிய
சன்னலும்
பாதை யோரப் பூக்களும்
 
மேகப் பொதிகளுக்குள்
மஞ்சள் சூரியனும்
புகை கக்கும் விமானமும்
 
நதியும்
நான்கிதழ்ப் பூச்செடிகளும்
ரெட்டைத் தென்னையும்
கூட்டமான பறவைகளும்
ஆங்கிலத்தில் தன் பெயரு மென

அழகா யிருந்தது சுவர்!
 
கற்றுக்கொள்ள கிறுக்கியதைவிட
வெற்றுச் சுவர்
அழகல்ல
என உணர்ந்து
 
சுவருக்குச்
சாயம்ப் பூசச் சொன்ன
மனைவிக்குச்
சரி யெனப்
பொய் சொன்னேன்
... தடவையாக !
 

sabeer.abushahruk said...

எனக்கும் ஜமீல் காக்காவுக்குமான மின்னாடலில் நான் நானாகவும் காக்கா குழந்த்சியாகவும்:

நானும் சஃபிய்யாவும்

தெரிந்தெடுத்த பூக்கள் கொய்து
வரிந்து கட்டியச் செண்டாய்
என் -
வீட்டினர் மத்தியில்
கலி ஃபோர்னியக் கைக்குழந்தை ஸஃபிய்யா

அள்ளியணைக்க
கொள்ளையாசை!

அம்மாவின் கைகளினின்றும்
அட்சரம் விலகினாலும்
அழுதது ஸஃபிய்யா

அப்பனின் முகமும்
அலைபாயும் கண்களுமென…
எதையோ… யாரையோ…
தேடிய ஸஃபிய்யா

நிலா, பொம்மை,
பூக்கள், புத்தகம்,
பூனை, பல்லி
எல்லாம் புறக்கனித்து
எதையோ… யாரையோ…
தேடிய ஸஃபிய்யா

சட்டென உதித்தொரு யுக்தி.
கைகள் ஏந்தி…
கண்கள் பார்த்து…
சொன்னேன்…
மந்திர வாக்கியமொன்று-
தாவி வந்தது ஸஃபிய்யா

அள்ளியணைத்து
முத்த’மழை’த்து
வென்ற களிப்பில்
தோளில் சாய்த்து
‘உலா’த்தினேன்.

என் யுக்தி பிடித்து
யாவரும் ஏந்தினர்!

மந்திர வாக்கியம்
பொய்யென அறியா
ஸஃபிய்யா
பின்னர்-
என்
தோள் நக்கித்
தூங்கிப் போனாள்

ஒன்றும் அறியா பிஞ்சுக்கே
இத்தனை ஏக்கம் யாருக்காகவோ…
எனில்…
எல்லாம் அறிந்த ‘அந்த’ யாருக்கோ
எத்தனை ஏக்கமோ?!

ஸஃபிய்யா தூக்கனுமா..
ஒரே ஒரு மந்திர வார்த்தை…
பாய்ந்து வரும் பிள்ளை…
அது:
“வா டாடிட்ட போலாம்!”

ஒ.    ஒ.    ஒ.    ஒ.    ஒ

பேசப் படித்துவிட்ட
பெருங்குழந்தைகள்
வாய்திறந்து விடுகின்றீர்கள்,
எதிரே யாருமில்லாவிடினும்
காற்றிடமாவது தம் சோகத்தை.

புதிய வெயில்
புதிய காற்று
புதிய மண்
புதிய வீடு
புதிய ஆட்கள்
புதிய பூச்சி … ஆ
அதன் பெயர் கொசுவாம்.

ஒன்றும் புரியவில்லை
புரிந்ததைச்
சொல்ல முடியவில்லை

மாதியாக்கா – ஃபன்னி!
நாநா – பேட் கேர்ள்!

அட்ஜஸ்ட் செய்துக்கலாம்,
வேர் ஈஸ் மை டாடி?
– ஸஃபிய்யா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பிஞ்சுக் கரத்தின் பிசகாத ஓவியம்
நெஞ்சில் பதிகின்ற நல்லுரை காவியம்
கெஞ்சினேன் வல்லோனை கூட்டிவை ஆயுளும்
பஞ்சமிலா பாசத்தைக் காண்///

அபுல்கலாம் காக்கா:

தளிரோடு கொஞ்சும் மொழிக்கு - நீங்கள் வரைந்த எழுத்தோவியம் !

அருமை !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவித் தொகுப்பின் அடுத்த பாகமும் பக்கவாட்டில் தயாரவது தெள்ளத் தெளிவே... ஆக !

சீக்கிரமே ஆயத்தமாகனும், அனைவருக்கும் கொண்டு சேர்க்கனும் இதுதான் எங்களின் ஆசையும் !

காக்காஸ்(க்கு) புரிந்தால் நன்மையே !

Yasir said...

//கொஞ்சும் உன்
நெஞ்சில் உதித்த வீட்டை
பிஞ்சு விரல்களால்
பிடித்திழுத்தக் கோட்டை
இழுத்து இழுத்து வரைந்த
இந்த
வீட்டைவிட பெரிதல்ல மகனே கோட்டை!// முடிகளை எழுந்து நிற்க்க வைத்த வரிகள்....

அருமையான அன்றாடம் எனக்கும் என் மகனுக்கு நடக்கும் உரையாடல்கள்

Yasir said...

//அள்ளியணைத்து
முத்த’மழை’த்து
வென்ற களிப்பில்
தோளில் சாய்த்து
‘உலா’த்தினேன்.// எப்படி இப்படியெல்லாம் காக்கா...அல்லாஹ் உங்களை மேலும் மெருகுபடுத்தட்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆங்கிலம் கலந்துருச்சேனு யாரும் பொங்க கானோமே!!!//

இப்போதான் பொங்கலே முடிந்ததாம்...

KALAM SHAICK ABDUL KADER said...

//பிள்ளைகள் உலகம் தனித்துவமானது. அதை கவனிப்பதும் அதனுள் நுழைந்து அவர்களோடு களிப்பதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.//

குழந்தை ஓர் அற்புதமானக் கவிதை!
அக்குழந்தை(கவிதையினுள்)உள்ளத்தினுள்
ஆழமாய்க் கொட்டிக் கிடப்பவைகள்
ஆழியிலே கண்டெடுக்கும் அற்புத முத்துக்கள்
“முத்துக் குளிப்பவரும்” முத்தாக (குழந்தையாகவே)
கொத்துக் கொத்துக்களாய் கவிதைக் குழந்தை முத்துக்களை
அள்ளி வருவதன் அபாரத் திறமைக்கும்
உள்ளிருக்கும் “கவியுள்ளம்” அஃதே “குழனதையுள்ளம்”

கவிவேந்தர் சபீர் அவர்களிடம் சங்கமாகியிருப்பவை எல்லாம் “குழந்தை மனோதத்துவம்” என்று முன்னரே யான் கணித்தும் பின்னூட்டத்தில் (எனது வலைப்பூவில் அவருக்கு) சொல்லி விட்டேன்; இன்று அவர்களின் வாக்கும் மெய்ப்படுத்தி விட்டது!

“அன்பு” என்ற தலைப்பில் யான் ஒரு கவிதைத் தீட்டி அதனை ஓர் இணையதள கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்; அதிலும் குழந்தைகளின் ஓவியத்தைத் தட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளேன்.(அப்போட்டி முடிவு வரும் வரை எதிலும் பதியக்கூடாது என்ற நிபந்தனைக்குட்பட்டு எனது வலைப்பூவிலும் கூட பதியாமல் காத்திருக்கின்றேன்). அதுவரை யான் இதுவரை வார இதழ்களில் இரசித்தக் குழந்தைக் காவியம்; நெஞ்சில் பதிந்த ஓவியம் ; வாசித்தவைகளில் நேசித்தவைகளாக

தன் மரணத்திற்குப் பிறகு
குழந்தைகளுக்கு
நடைவண்டிகளாய் ஆகிட
வரம் கேட்டது
மரம்

தான் மட்டும் வளரும் போது
தன்னுடன் சேர்ந்து வளராத
பொம்மையை பார்த்து
பரிதாபப்படுகிறது குழந்தை

கடற்கரையில் குழந்தைகளின்
பாதச் சுவடுகளை
எட்டிப் பிடிக்க ஓடோடி
வந்தன
அலைகள்!

மழையில்
தான் நனைந்தைப்
பற்றிக்
கவலைப்படாமல்
பொம்மைக்கு
ஊசி போட்டது
டாக்டர் குழந்தை

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்காவின் கவி விளையாட்டில் இங்கலிஸும் களத்தில் குதித்துள்ளதால்
அ.நி தளம் கலை கட்டுகிறது .

வீட்டிருக்கு வெளியே இருக்கும் இற்காலி சூப்பர்.

sabeer.abushahruk said...

 அபு இபுறாகீம்/ தாஜுதீன்/யாசிர்/ரஃபீக்,

நேற்று யாசிர் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வரும்போது காரில் 

நான்: கொட்டிக்கிட்டது போதாதுன்னு கைலே வேற வட்லப்பம் கடப்பாசில்லாம் கட்டிக்கிட்டும் வந்துட்டே? 

உம்முஷாஹ்ருக்: வேணாம் வேணாம்னு எவ்வளவு சொல்லியும் அது கேட்கல நான் என்ன பண்றது?

ஊரில் இருக்கும்போது லயன்ஸ் கிளப் மீட்டிங்குன்னு போய் என்ன செய்தீங்கன்றது இப்பதான் புரியுது. அதிரைநிருபர் மீட்டிங்கில் ஆட்டுக்கால் பாயாவும் அறுத்துவைத்தக் காடையும்ல மேஞ்சிட்டு வர்ரிய?

நான்: ஏன் நீங்க சாப்டலயா?

பின் சீட்டிலிருந்து பிள்ளைகள்: மம்மியும் உட்டடிச்சாங்க டாடி

பல விருந்துகளில் வயிறு மட்டும்தான் நிறையும். யாசிருடனான விருந்தில் வயிற்றோடு மனமும் நிறைவாயிருந்தது.

சொந்த வீட்டைப்போல் சங்கோஜமே ஏற்படாத ஒரு சூழலை எப்படித்தான் யாசிரால் ஏற்படுத்த முடிந்ததோ!

اَطْعَمَنَا وَاسْقِ مَنْ سَقَنَا
யா அல்லாஹ் யார் எங்களுக்கு உணவு கொடுத்தார்களோ அவர்களுக்கு நீ உணவு கொடுப்பாயாக இன்னும் எங்களுக்கு யார் பானம் புகட்டினார்களோ அவர்களுக்கு நீ பானம் புகட்டுவாயாக.
 
اللهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ  
யா அல்லாஹ் நீ அவர்களுக்கு வாழ்க்கையின் தேவையாக எதை கொடுத்து இருகின்றாயோ அதில் பரகத் செய்வாயாக, இன்னும் அவர்களை நீ மன்னிப்பாயாக மேலும் அவர்கள் மீது நீ கருணை காட்டுவாயாக.
 
اَفْطَر عِنْدَكُمُ الصَّائِمُوْنَ وَاَكَلَ طَعَامَكُمُ الْاَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلائِكَةُ
உங்களிடத்தில்  நோன்பாளிகளை அல்லாஹ்  நோன்பு திறக்க செய்வானாக மேலும் உங்களது உணவை நல்லவர்கள் சாப்பிடட்டுமாக, மேலும் உங்கள் மீது மலக்குகள் ரஹ்மத்தை பொழியும் படி அல்லாஹ்விடம் துஆ செய்யட்டுமாக 

அப்புறம் ரஃபீக்கின்/யாசிரின் வாப்பா ரஃபீக்கிடம் புதிதாய் வாங்கிவந்த டேப் ரெகார்டரில் ரஃபீக்கைப் பேசச்சொல்ல, ரஃபீக் சப்தமாகப் பேச, ""ஏன் கத்துற? டேப் டெகார்டர் என்ன செவிடா?" என்ற ரஃபீக் மற்றும் யாசிரின் வாப்பாவின் ஜோக் இந்த வார ஸ்பெஷல்.
 

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அப்புறம் ரஃபீக்கின்/யாசிரின் வாப்பா ரஃபீக்கிடம் புதிதாய் வாங்கிவந்த டேப் ரெகார்டரில் ரஃபீக்கைப் பேசச்சொல்ல, ரஃபீக் சப்தமாகப் பேச, ""ஏன் கத்துற? டேப் டெகார்டர் என்ன செவிடா?" என்ற ரஃபீக் மற்றும் யாசிரின் வாப்பாவின் ஜோக் இந்த வார ஸ்பெஷல்.///

அது மட்டுமா ! இதுவரை எழுத்து வடிவிலான எழுத்துக்களைத்தான் கருத்தாக கண்டு வந்தோம் ஆனால் நேற்றுதான் விமர்சனங்களும் கருத்துக்களையும் வாய்மொழியாக கேட்டதும் அசந்துட்டேன்...

எழுத துடிக்குக்கும்... ரஃபீக் அவர்களுக்கு தட்டி தட்டிக் கொடுக்க நான் ரெடி ! :)

அது சரி, மையத் புரண்டு படுக்கவா போகுது, இரவில் சென்னை நோக்கி செல்லும் இரயிலில் பயணம் செல்பவர்களை ஏற்றி விட்டுவிட்டு திரும்பி வருபர்களை இரயிலி செல்பவர் திரும்பிப் பார்க்கும்போது மையத்தை அடக்கிட்டு போகிற கூட்டமாகத் தெரிவது,

சாபிட்டுமுடித்த இடத்தைப் பார்த்தவர் என்ன பழைய வீட்டை பிரிச்சு இடிச்சுப் போட்ட மாதிரி இருக்கே என்று அங்கே கடந்தை எலும்புகளைக் கண்டு கேட்டதாகட்டும்..

இப்படியாக தொடர்ந்தது (நகை)சுவையான விருந்துன்னு சொல்லுவீங்கன்னு பார்த்தேன்... :)

Shameed said...

sabeer.abushahruk சொன்னது

//அப்புறம் ரஃபீக்கின்/யாசிரின் வாப்பா ரஃபீக்கிடம் புதிதாய் வாங்கிவந்த டேப் ரெகார்டரில் ரஃபீக்கைப் பேசச்சொல்ல, ரஃபீக் சப்தமாகப் பேச, ""ஏன் கத்துற? டேப் டெகார்டர் என்ன செவிடா?" என்ற ரஃபீக் மற்றும் யாசிரின் வாப்பாவின் ஜோக் இந்த வார ஸ்பெஷல்.//

ரஃபீக்கின்/யாசிரின் வாப்பா ஜோக் பற்றி ஒரு ஆர்டிகல் எழுதலாம் உதாரணத்திற்கு

துபாயில் ஒருவர் ரஃபீக் வாப்பவிடம் வந்து நானா (எல்லோரும் அப்படித்தான் அழைப்பார்கள் ) நம்ம ஊரிலே இல்லாத மாதிரி ஊடு கட்டணம் எப்படிகட்டலாம் என்று கேட்டுள்ளார் அதற்க்கு அவர்கள் நம்ம ஊரில் எல்லா மாடலிலும் வீடு உள்ளது ஒன்று செய் நீ புதிதாக தகரத்தில் ஊடு கட்டு என்று சொன்னதும் வீடு கட்டும் யோசனை கேட்டவர் ஓடி போய் விட்டார்

Shameed said...

ஒருமுறை துபாயில் நானா கூட சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது நான் மெதுவாக சாப்பிடுவதை பார்த்த ஒருவர் என்னப்பா சின்னப்புள்ளை மாதிரி மெதுவா சாப்புடுறே உண்ணாட்டம் வயசில் நான் எப்படி சாப்பிடுவேன் தெரியுமா சொல்லி வாய் மூடுவதற்குள் பக்கத்தில் இருந்த நானா ஆமா இவரு அப்போ இரண்டுகைகளிலும் அள்ளி சாப்பிடுவார் என்று சொன்னதும் ஒரே சிரிப்புதான் அங்கு

sabeer.abushahruk said...

மகனோடான உரையாடல்களை அடைகாத்து வரும் சூழலில் அபு இபுறாகீமின் மகன் இபுறாகிம் வரைந்த படம் ஒன்று காணக்கிடைக்க சட்டென எழுதி முடித்தது இது.

ஒவ்வொரு தந்தையும் மகனுக்கு இறைக்கொள்கையைச் சொல்லித்தரவேண்டிய தருணங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதை நினைவூட்டவே இப்பதிவு.

இதின் என்னோடு இணைந்த அலாவுதீன், யாசிர், ஹமீது, எல் எம் எஸ், அபுபக்கர் அமேஜான் ஆகியோருக்கு நன்றி.
எம் ஹெச் ஜ/,சேக்கனா நிஜாம்: கொலவெறியில் உலகமே தலைவிரித்தாடுவதால் ஏதோ நம்மாலும் முடிஞ்ச இங்லீசு.
ஜாகிர்/அபு இபுராகீம்: சில உணர்வுகள் கச்சாவாக வெளிப்படுத்தினாலே யதார்த்தமாக இருக்கும். எல் கே ஜி பசங்களிடம் இப்படித்தான் பேசவேண்டும். புரிந்த்தால்தான் பொங்கவில்லை.
அர அல:
//லவ் யு சபீர் காக்கா.//
லவ் யு ட்டூ தம்பி  நன்றி.
கவியன்பன்: //“அன்பு” என்ற தலைப்பில் யான் ஒரு கவிதைத் தீட்டி அதனை ஓர் இணையதள கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்//
அந்தப் போட்டி உங்கள் கவிதையைத் தேர்ந்தெடுத்து அவர்தம் ரசனையில் வெற்றிபெறட்டும். வாசிக்கும் ஆவலில் உள்ளோம். போட்டி முடிந்த்தும் உங்களின் “அன்பை” இங்கும் பதிந்து விடுங்கள். நன்றியும் வாழ்த்துகளும்.

அ.நி.: அடுத்த ஆட்டம் ரெடியா?

Yasir said...

//விருந்தில் வயிற்றோடு மனமும் நிறைவாயிருந்தது.// அல்ஹம்துலில்லாஹ்...காக்கா...என்னுடைய பாக்கியம் உங்களை போல் நல் உள்ளங்களை என் உள்ளத்தோடு இணைத்தது

Anonymous said...

அன்புள்ள தம்பி சபீர் அவர்களுக்கு,

குழந்தை இலக்கியத்தை தொடங்கி இருக்கிறீர்கள். வழக்கம்போல் மனம் மயக்கும் என்பதை விட மனம் லயிக்கும் கருத்துக்கள்.

வளரும் பயிர்களை வகைப்படுத்தும் வரிகள்.

(உங்கள் பள்ளிக்கு நான் கொஞ்சம் தாமதம். காரணம் ஊரில் இல்லை.- ஆப்சென்ட் போட்டு விடாதீர்கள் ).

வாழ்த்துக்கள் .

அன்புள்ள.
இபுராஹீம் அன்சாரி.

sabeer.abushahruk said...

//(உங்கள் பள்ளிக்கு நான் கொஞ்சம் தாமதம். காரணம் ஊரில் இல்லை.- ஆப்சென்ட் போட்டு விடாதீர்கள் ).//

உங்களை எதிர்பார்த்தது உண்மைதான்,காக்கா. பள்ளிக்கு பையனாகவல்ல, பேப்பர் திருத்த வாத்தியாராக.

அப்துல்மாலிக் said...

எக்ஸாட்லி ரைட், திஸ் ஈஸ் எ குட் வே டு டீச் இஸ்லாம் டு ஆல் கிட்ஸ்..... :)

Anonymous said...

அன்புள்ள தம்பி சபீர்,

ஜசக்கல்லாஹ்.

உங்கள் பேப்பரை திருத்தியாச்சு.
மதிப்பெண் போட்டாச்சு.
நீங்களும் உங்கள் மகனும் பாஸ் அதிலும்
பர்ஸ்ட்கிளாஸ்.

வஸ்ஸலாம்.
இபுராஹீம் அன்சாரி.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சபீர் காக்கா, உங்கள் தனயனுடனான இந்த இன்பமான உரையாடல் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியின் சிறார்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் நடாத்தப்பட வேண்டும்.

பரவாயில்லை, உங்கள் மகனாருக்கு இந்த சிறு வயதிலேயே தெரிந்திருக்கிறது நம்ம ஊரின் வீடு கட்டும் வண்டவாளமும், அதன் தண்டவாளமும். தன் மனக்கோட்டையில் எழும்பியுள்ளதை இங்கு வரை படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளது விளையும் பயிர் முளையிலேயே தெரிகிறதல்லவா?

நல்ல தந்தையும் சமத்தான தனயனும் என வாழ்த்துகிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.