Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு ! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | January 18, 2012 | , ,


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதர சகோதரிகளே!

நாம் அனைவரும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவது என்பது நிதர்சனமான உண்மை. அதில் குறிப்பாக வீடு கட்டுதல் என்பது ஒரு கடமையாகவோ, கனவாகவோ நாம் அனைவருக்கும் இருக்கும்.

நமதூரில் சராசரியாக ஒரு நாளைக்கு 500 நபர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபடுகிறார்கள். வீடு கட்டும் பலரும் சந்திக்கிற நெருக்கடி என்னவென்றால் கட்டுமானப் பணியாளர்களின் ஊதியம். 

நமதூரில் கட்டுமான பணியாளர்கள் கீழ்கண்ட கூலிகளை ஊதியமாக பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்...

மேஸ்திரிக்கு…................ ரூ 600
கொத்தனாருக்கு.......... ....ரூ 550
மம்பட்டி – ஆள்..................ரூ 400
சித்தாள்.................................ரூ 200

இதனால் ஒரு வீடு உருவாவதில் கட்டுமானப் பொருட்களின் விலைக்கு நிகராக தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதன் மூலம் செலவாகிறது. 

இதைப்பற்றி நமதூரைச்சேர்ந்த சில பொதுமக்களிடம் விசாரித்த வகையில்... 

“முன்பெல்லாம் காலையில் 8 மணிக்கு பணி தொடங்கி மாலை 6 மணி வரையில் வேலை செய்வார்கள். மதியம் சாப்பாடு அவர்களே எடுத்து வருவார்கள். வீடு கட்டுபவர்கள் சார்பில் இரு வேலை தேனீர் (tea) மட்டும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் காலை 9 to 9.30 மணிக்கு மேல் வேலைக்கு வந்து மதியம் சிறிய தூக்கத்துடன் மாலை 4 to 4.30 மணிக்கெல்லாம் முடித்து விடுகின்றனர். மதியம் சாப்பாடு வாங்கி தரவேண்டும் என வேண்டுக்கோளும் விடுக்கின்றனர்.

இதற்கிடையில் அவர்கள் வேலை செய்யும் பொழுது பேசுகின்ற பேச்சு இருக்கிறதே.... அப்பப்பா !  நீங்கள் ப்ளாக்கில் எழுதுவதற்கு இடம் போதாது ! இதனால் வேலை செய்யக்கூடிய நேரங்கள் வீண் விரயமாகிறது. மேலும் செங்கல், ஜல்லி, மணல், டைல்ஸ்-மார்பில்ஸ், போன்றவைகளை வீடு கட்டுபவர்களுக்கு வாங்கி கொடுப்பதன் மூலம் “ ஊக்கத்தொகையும் “ விற்பனையாளர்களிடமிருந்து பெற்று விடுகிறார்கள். மேலும் கம்பி கட்டுபவர் மற்றும் செண்ட்ரிங் பலகை அடிப்பவர்களை ஏற்பாடு செய்வதன் மூலம், ஆசாரிகளை அறிமுகப்படுத்துதல், டைல்ஸ் ஓட்டும் நபர் என்று இவர்களால் அறிமுகப்படுத்தும் பல நபர்களிடம் இருந்தும் “ ஊக்கத்தொகையும் “ பெற்று விடுகிறார்கள். “   என்று பொதுமக்களின் கருத்துக்களாக உள்ளது.

இதில் நாமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறோம். கட்டுமான வேலைகள் குறிப்பிட்ட நாளில் முடிய வேண்டும் என்று அவர்களுக்கு நெருக்குதலைக் கொடுத்து கூடுதலாக பணத்தை கொடுத்து அவர்கள் சம்பளத்தை உயர்த்த ஒரு வழி வகுத்து கொடுக்கிறோம். குறிப்பாக அவர்களிடமிருந்து குறிப்பிட்ட சிறிய கட்டுமான வேலைகளைப் பெற இத்தவறுகள் அதிகமாக நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் : 

நமதூரில் வெள்ளிக்கிழமை என்பது ஒவ்வொரு சகோதரருக்கும் ஜும்மா பெருநாளாக இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தடுக்கும் விதத்தில் “வெள்ளிக்கிழமையை” விடுமுறை தினமாக அனைத்து சகோதரர்களும் பின்பற்றி அன்றைய தினத்தில் யாரும் பணியாட்களை நியமிக்க வேண்டாம் என்று முழுமையாக வலியுறுத்த வேண்டும்.

இவ்விடுமுறை தினம் கட்டுமான தொழிலில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களாகிய கொத்தன்னார்கள், கார்ப்பெண்டர்கள், பெயிண்டர்கள், ஏலெக்ட்ரிசியன்கள், ப்ளம்பர்கள், டைல்ஸ் ஓட்டுபவர் என வீட்டில் இருந்து பணிபுரியக்கூடிய அனைத்து தொழிலாளிகளும் கடை பிடிக்க வலியுறுத்த வேண்டும். 

மேலும் வெள்ளிக்கிழமைகளில் பழைய வீடுகளை இடிப்பது,அதைப் அப்புறப்படுத்துவது போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.

தீர்வுதான் என்ன ? 

1.கட்டுமான பணியாளர்களின் சம்பளம் நிர்ணயம் செய்தல் மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் போன்றவைகள் சம்பந்தமாக “கட்டுமான பணியாளர்கள் சங்கத்தை” தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து ஓர் இறுதி முடிவை எடுக்கலாம்.

2. நமதூரைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கட்டுமான பணியாளர்களுக்காக வழங்கி வருகிற கூலியை கேட்டறிந்து அதன் பிரகாரம் நிர்ணயம் செய்து அவர்களுக்கு வழங்கலாம்.

3.நமதூரில் கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அடைக்க கேட்டுக்கொள்ளலாம்.

4. இவ்விசயத்தில் நமதூரைச் சேர்ந்த அனைத்து முஹல்லாவில் உள்ள சகோதரர்களும் ஒன்றுனைந்து ஒரு கட்டுப்பாடு, ஒழுங்கு முறையை பின்பற்றலாம்.

5. மேலும் நமதூரைச்சேர்ந்த கட்டுமான ஒப்பந்த தொழிலில் ஈடுபடும் சகோதரர்களின் ஆலோசனைகளைப் பெற்று, ஒரு ஒழுங்கு முறையை பின்பற்ற வலியுறுத்தலாம்.

இதில் அனைத்து தரப்பினரிடம் இருந்து நல்ல ஒரு ஒத்துழைப்புடன் கூடிய கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றினால் நிச்சயம் ஓர் சிறிய மாற்றத்தை நமதூரில் கொண்டு வரலாம் ( இன்ஷா அல்லாஹ் !) 

இறைவன் நாடினால் ! தொடரும்...
-சேக்கனா M.நிஜாம்

31 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. சேக்கனா நிஜாம் அவர்கள் ஊரின் ஒவ்வொரு விசயத்திலும் தன் கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வு அன்றாடம் ஏற்படுத்திவருவது மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும் அவருக்கு உரித்தாகட்டும். தொடருங்கள் உங்களின் விழிப்புணர்வு புரட்ச்சியை.

தமிழ் ஆர்வலர்களின் கவனத்திற்கு, 'கவனத்தில்' இரண்டு சுழி 'ன' தான் வரும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அவசியத் தேவைக்காகாக வீடு கட்டும் சாமானியன் ஒருவரின் ஒரு நாள் சம்பளத்தை விட இவர்களின் சம்பளம் எகிறியிருக்கிறது !

திறந்த வெளி அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் !

சகோதரர் நிஜாம் நிஜங்களை இங்கே நெருட வைக்கிறார் !

விழிப்புணர்வாக்கம் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தமிழ் ஆர்வலர்களின் கவனத்திற்கு, 'கவனத்தில்' இரண்டு சுழி 'ன' தான் வரும்.//

தமிழார்வத்தில் கவனித்து விட்டீரோ !! :) MSM(n) !

கவனமாகவே இருக்கிறீர்கள் !

Noor Mohamed said...

சுருக்கமாக கூறினால், நமது ஊரிலும் பக்கத்திலுள்ள பட்டுக்கோட்டையிலும் manpower கணக்கீட்டை ஒப்பிட்டு பார்த்தால், ரூபாய் ஒரு லட்சம் செலவில் நமதூரில் எந்த அளவுக்கு கட்டுமான பணி முடிக்கப் படுகிறதோ அதே அளவான கட்டுமான பணி பக்கத்திலுள்ள பட்டுக்கோட்டையில் ரூபாய் 70 ஆயிரத்திற்குள் முடித்து விடலாம்.

சேக்கனா M. நிஜாம் said...

“ கொத்தனார் கூலியும், வெள்ளிக்கிழமையும் ! “ என்ற தலைப்பிட்ட கட்டுரைக்கு சுருக்கமாக, பொருத்தமாக, அனைவரும் கவரும் வகையில் “ வீடுகட்டுபவர்களின் கவனத்திற்கு “ என்ற தலைப்பிட்ட அதிரை நிருபர் – நெறியாளர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !

மேலும் இப்பிரச்சனை சம்பந்தமாக, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக, சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில், அதன் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் நல்ல பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு இறுதியாக ஒவ்வொரு முஹல்லா சார்பாக ஒரு நபர் வீதம் தேர்ந்தெடுத்து இவர்கள் மூலம் இப்பிரச்சனையை பொதுமக்களின் ஒத்துழைப்போடு முடிவுக்கு கொண்டுவருவது என்று முடிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

sabeer.abushahruk said...

நல்ல பதிவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
இவ்வளவு கூலி என்று தெரிந்தால் அண்டைய நாட்டிலிருந்தெல்லாம் தொழிலாள்ர்கள் வருவார்கள்.

இவ்வள்வு கொடுத்தும் வேலை வாங்குவதற்குள் தாவு தீர்ந்துடுதாம்ல?

ZAEISA said...

மேற்சொன்ன முறையில் முயற்ச்சி செய்யலாம்.இல்லையென்றால் அதே வேலைசெய்யும் நபர்களை பக்கத்து ஊரில் தெரிந்தவர்களை தொடர்புகொண்டு போக்குவரத்துக்கு ஏற்பாட்டுடன் வேலையை ஆரம்பித்தால் ஒரு ஒழுங்குக்கு வருவார்கள்.

Anonymous said...

// நமதூரில் கட்டுமான பணியாளர்கள் கீழ்கண்ட கூலிகளை ஊதியமாக பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். //

கட்டுமான பொருள் சாமான்களை விட பணியாளர்கள் கூலி தான் அதிகமாக நம் ஊரில் இருக்கிறது. மற்ற ஊருகளில் எல்லாம் மேஸ்த்திரி, கொத்தனார், மொம்மட்டி ஆள், சித்த ஆள் போன்ற கூலிகள் கம்மியாக உள்ளது. நம் ஊரில் போல வேறு எந்த ஊரிலும் கூலி அதிகம் கிடையாது.
வீடுகளை மட்டும் பெரிதாக கட்டி விடுகிறார்கள் ஆனால் வீட்டில் தங்குவதற்கு ஆள் இல்லை. வீட்டை கடன் வாங்கியாவது கட்டி விட்டு பெரிய பூட்டை போடுகிறார்கள் அந்த வீட்டை பராமரிக்கிரத்திற்கு வாட்ச்மேன் அல்லது குப்பையாகவும் போடுகிறார்கள். கட்டுமான பொருளின் விளை கம்மியாக உள்ளது அதை விட மேஸ்த்திரி,கொத்தனார்,போன்ற கூலிகள் மூன்று, நான்கு மடங்கு அதிகம். இதை யாரும் சிந்திப்பதில்லை அவர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதித்து வீடுகளை கட்டுகிறார்கள் ஆனால் பெண்கள் இதைப்பற்றி சிந்திப்பதில்லை. வீடு குடிபோறது, சாப்பாடு என்றல்லாம் ஆடம்பர செலவுகள் பண்ணுகிறார்கள். வீடு குடிபோனால் சாப்பாடு கண்டிப்பாக போடணும் என்றல்லாம் ஒரு வரைமுறை வைத்துயிருக்கிறார்கள் அப்படி சாப்பாடு போடாவிட்டால் ஈகோ, பால்ட்டிக்ஸ் அவர் என்னமோ நினைப்பாரோ, இவர் என்னமோ நினைப்பாரோ என்றல்லாம் பாகுபாடு பார்க்கிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு முடிவு கட்டனும் எல்லா சீர், சீரட்டுக்களை ஒழித்துக் கட்டனும் இதை ஒழித்துக் கட்டுவதற்கு ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண்கள் நல்ல ஸ்ட்ராங்காக இருந்தால் போதுமானது இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்.

aa said...

சம்பள விவரத்தை பார்த்தவுடன் பிரமிப்பாக இருந்தது. வெளிமாநிலங்களில் இருந்து (பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து) நல்ல முஸ்லிம் ஆட்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து ஏன் யோசிக்கக்கூடாது? சமீபத்தில் நமுதூர் மைய்யாவடிகளில் குழி வெட்டும் வேலைக்கு நெளிமாநில முஸ்லிம் சகோதரர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுருப்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

இதன் மூலம் நமக்கும் மனநிறைவு, ஆட்களுக்கு குறைந்த சம்பளம், இன்னொரு முஸ்லிமுக்கும வேலைவாய்ப்பு கொடுத்த திருப்தி கிட்டும்.

Unknown said...

யாரும் சிந்திப்பதில்லை அவர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதித்து வீடுகளை கட்டுகிறார்கள் ஆனால் பெண்கள் இதைப்பற்றி சிந்திப்பதில்லை. வீடு குடிபோறது, சாப்பாடு என்றல்லாம் ஆடம்பர செலவுகள் பண்ணுகிறார்கள். வீடு குடிபோனால் சாப்பாடு கண்டிப்பாக போடணும் என்றல்லாம் ஒரு வரைமுறை வைத்துயிருக்கிறார்கள் அப்படி சாப்பாடு போடாவிட்டால் ஈகோ, பால்ட்டிக்ஸ் அவர் என்னமோ நினைப்பாரோ, இவர் என்னமோ நினைப்பாரோ என்றல்லாம் பாகுபாடு பார்க்கிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு முடிவு கட்டனும் எல்லா சீர், சீரட்டுக்களை ஒழித்துக் கட்டனும் இதை ஒழித்துக் கட்டுவதற்கு ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண்கள் நல்ல ஸ்ட்ராங்காக இருந்தால் போதுமானது இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அபூபக்கர் ......
நீ சொன்ன சீர் ,சீராட்டுகளால் அவதி படும் குடும்பங்கள் ஏராளம் ...
இவைகளை prestige ஆக எடுத்து கொள்வது மூடத்தனம்

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ நிஜாம் ,
உங்களின் ஒவ்வரு பதிவும் பயனுள்ளவையாக உள்ளது .வாழ்த்துக்கள் .

Anonymous said...

பதிவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
//மேஸ்திரிக்கு…................ ரூ 600
கொத்தனாருக்கு.......... ....ரூ 550
மம்பட்டி – ஆள்..................ரூ 400
சித்தாள்.................................ரூ 200//
பலருக்கு வீடு கட்டுவது கனவா அப்போ? (1 செங்கல் 5.0ரூபா?)

KALAM SHAICK ABDUL KADER said...

சமுதாயச் சேவகர் சேக்கனா நிஜாம் சொல்லுவதெல்லாம் நிஜம்.சகோதரர் அஹ்மத் ஃபிர்தௌஸ் அவர்கள் சொல்லும் ஆலோசனைகள் அவசரமாகவும் அவசியமாகவும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஆலோசனைகளும் திட்டங்களும் முன்பு அதிரை பைத்துல் மால் மூலம் செய்ய எத்தனித்தனர்; ஆனால், இடையில் கிடப்ப்பில் போடப்பட்டன. எனவே, மீண்டும் விழித்துக் கொண்டு இந்த ஆலோசனைகளை உடனே நடைமுறைப்படுத்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு செய்திட வேண்டும். கட்டுரையாளர் கூறும் அத்துணைத் தீர்வுகட்கும் சகோதரர் அஹ்மத் ஃபிர்தவ்ஸ் அவர்களின் ஆலோசனைகள் மூலம் வழிகள் உள.

1)முஸ்லிம்களின் வாழ்வாதாரம் பெருகிட முஸ்லிம்களின் செல்வம் உதவிடும்
2) கூலி வாங்கிக்கொண்டு கேலி பேசி கொண்டு காலம் கடத்தும் “அநியாயமான”ப் போக்கும் நிறுத்தப்படும்
3) குறிப்பாக வெள்ளிக்கிழமை “விடுமுறை” என்பது வேலை கொடுப்போரும்; வேலை செய்வோரும் முஸ்லிம் என்பதால் ப்ரச்னைகள் எழா.
4) கண்மணிகளான நம் வைரமணிகளாம் பெண்மணிகள் திருடப்படுவதற்கு வெள்ளிக் கிழமை அன்று ஆண்களான நாம் ஜும் ஆ போகும் இடைவேளை நேரத்தில் இல்லாத சமயம் “ஷைத்தான்” புகுந்திடும் வாய்ப்புகளின் வாசல் அடைக்கப்படும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல ஆக்கம். இதன் தாக்கம், உடன் ஏற்பட வேண்டும்.

ZAKIR HUSSAIN said...

To brother சேக்கனா M.நிஜாம்,


நீங்கள் சொன்ன கூலி விசயம் கொத்தனார்கள் ஓற்றுமையில் ஏற்படுத்தியது [ அவர்கள் பல ஊரிலிருந்து வந்து நம் ஊரில் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்] அவர்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது.

பேச்சு வார்த்தை நடத்தி கூலியை குறைக்க முடியும் என எனக்கு நம்பிக்கை இல்லை [ துளி அளவு கூட ]

அப்படி யாராவது சாதித்தால் அவரை முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினைக்கு தலைமை தாங்க அனுப்பி வைக்கலாம்.

சேக்கனா M. நிஜாம் said...

பெறுநர் : ஜாஹிர் காக்கா – மலேசியா

சலாம்

ஒற்றுமை !

ஒற்றுமை என்பது நம்மால் முடியும் ! ஒற்றுமை என்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கு “கடுகளவு” அதில் இருந்தால்

தன்னம்பிக்கையைப் பற்றி நல்ல பயன் தரும் வகையில் கட்டுரை எழுதும் ஜாஹிர் காக்காவுக்கு ஒற்றுமையில் நம்பிக்கை இல்லை என்பது பெரும் வியப்பாகவே உள்ளது.

சேக்கனா M. நிஜாம் said...

// 1)முஸ்லிம்களின் வாழ்வாதாரம் பெருகிட முஸ்லிம்களின் செல்வம் உதவிடும்
2) கூலி வாங்கிக்கொண்டு கேலி பேசி கொண்டு காலம் கடத்தும் “அநியாயமான”ப் போக்கும் நிறுத்தப்படும்
3) குறிப்பாக வெள்ளிக்கிழமை “விடுமுறை” என்பது வேலை கொடுப்போரும்; வேலை செய்வோரும் முஸ்லிம் என்பதால் ப்ரச்னைகள் எழா.
4) கண்மணிகளான நம் வைரமணிகளாம் பெண்மணிகள் திருடப்படுவதற்கு வெள்ளிக் கிழமை அன்று ஆண்களான நாம் ஜும் ஆ போகும் இடைவேளை நேரத்தில் இல்லாத சமயம் “ஷைத்தான்” புகுந்திடும் வாய்ப்புகளின் வாசல் அடைக்கப்படும் //

வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் என்று இக்கட்டுரையில் குறிபிட்டவைகளின் சிலவற்றை “கவிக்குறள்” சகோ. அபுல் கலாம் அவர்கள் கண்ணியமாக குறிப்பிட்டதும் இதில் அடங்கும்.

சேக்கனா M. நிஜாம் said...

// சம்பள விவரத்தை பார்த்தவுடன் பிரமிப்பாக இருந்தது. வெளிமாநிலங்களில் இருந்து (பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து) நல்ல முஸ்லிம் ஆட்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து ஏன் யோசிக்கக்கூடாது? சமீபத்தில் நமுதூர் மைய்யாவடிகளில் குழி வெட்டும் வேலைக்கு நெளிமாநில முஸ்லிம் சகோதரர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுருப்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

இதன் மூலம் நமக்கும் மனநிறைவு, ஆட்களுக்கு குறைந்த சம்பளம், இன்னொரு முஸ்லிமுக்கும வேலைவாய்ப்பு கொடுத்த திருப்தி கிட்டும். //

இதுவும் நல்ல ஒரு தீர்வுக்கு நல்ல ஒரு வழிகள் ! வாழ்த்துக்கள் சகோ. அஹ்மத் ஃபிர்தௌஸ்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ .சிந்தனை துளி நிஜாம் உங்களுடைய ஆக்கம் நிச்சயமாக மனதில் பொறிக்க வேண்டிய செய்திகள். இருந்தாலும் ஜாகிர் காக்கா சொல்வது போல்.

// பேச்சு வார்த்தை நடத்தி கூலியை குறைக்க முடியும் என எனக்கு நம்பிக்கை இல்லை [ துளி அளவு கூட ] //

உண்மையான வார்த்தையே! காரணம்.வீடு கட்ட நினைக்கும் ஒவ்வொருவரும் விரைவாக நம் வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். வெளி ஊர்களிருந்து வேலைக்கு ஆட்கள் அதிகமா வந்தும் பற்றாக் குறையின் காரணமாக.வீடு காண்ட்ரக்ட் எடுத்திருப்பவர்கள் நான் சம்பளம் அதிகமாக தருகிறேன்.என்னிடம் வந்து வேலை பாரு என்று சொன்னதின் விளைவுதான் சம்பளம் உயர்வுக்கு காரணம்.தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் அது கத்தி விட்டால் பாம்பு சும்மா விடுமா ? முழுங்கிய தவளையை திரும்ப கக்கவா செய்யும்.

ZAKIR HUSSAIN said...

To brother சேக்கனா M.நிஜாம்,

எனக்கு ஒற்றுமையில் நம்பிக்கை இல்லை என நான் எழுதவில்லை.

கொத்தனார்களுடன் பேசி கூலியை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றுதான் எழுதியிருக்கிரேன்.

மற்றும் இதுவரை அவர்கள் கூலி வாங்குவதை நிர்ணயம் செய்தது சங்கம் எனும் கட்டமைப்புடன்.

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கவியன்பர் கலாம் காக்கா சொன்னது:

// 4) கண்மணிகளான நம் வைரமணிகளாம் பெண்மணிகள் திருடப்படுவதற்கு வெள்ளிக் கிழமை அன்று ஆண்களான நாம் ஜும் ஆ போகும் இடைவேளை நேரத்தில் இல்லாத சமயம் “ஷைத்தான்” புகுந்திடும் வாய்ப்புகளின் வாசல் அடைக்கப்படும் //

காக்கா உங்களுடைய கருத்திற்கு நான் குறுக்கிடுகிறேன் என தவறாக நினைத்து விடாதீர்கள். ஆண்கள் உள்ள வீட்டுக்கு வேண்டுமென்றால் வெள்ளிக் கிழமை சாத்தியப் படும் ஆண்கள் இல்லாத வீட்டில் எல்லா நாளும் நிறுத்தப் பட வேண்டும் .அப்போதுதான் முழுமையான திருட்டை அல்லாஹ்வின் உதவியால் தடுக்க முடியும்.

இந்த திருடர்கள் முக்கியமாக நாம் வங்கி கொடுக்கக் கூடிய பொருள்களை திருடிச்செல்கிறார்கள் இதை யாரும் கவனிப்பதில்லை.குறிப்பாக பெயிண்ட் திருட்டு போகிறது.நாம் உசாராக இருக்கா வேண்டும்.

அப்துல்மாலிக் said...

எல்லோத்துக்கும் நாம் தாங்க காரணம். நம்வீடு விரைவாக முடிக்கவேண்டும் என்று அதிகமதிகம் காச கொடுத்து தன் சுயநலத்தால் இப்போ பாதிக்கப்பட்டது ஒட்டுமொத்த ஊர், இதனால் குளிர்காய்பவன் கொத்தனார்கள், முதலில் நம் ஊரில் உள்ள அனைத்து கட்டுமான கான்ராக்டர்களிடம் ஒத்த கருத்து நிலவவேண்டும், அது இல்லை இப்போது. அப்படி இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகள் விதித்து இவையனைத்தையும் கட்டுக்கள் கொண்டுவரமுடியும்...., இது இல்லாமல் அனைத்து முகல்லா மூலம் சொல்லியும் எதுவும் எடுபட வாய்ப்பில்லை...

அப்துல்மாலிக் said...

நான் ஒரு ENGINEER கிட்டே கலந்துரையாடியபோது அவர் தெரிவித்த கருத்துதான் இது, முதலில் அதிரையில் வீடு கட்டும் காண்ட்ராக்டர்களிடையே (Engineers and Non Engineers) சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் ஒத்த கருத்துடைய தீர்மானங்கள் நிறைவேற்றி வேலைசெய்யும் நேரம், கூலி, மற்றும் இதர விடயங்கள் பரிசீலிக்கலாம்.

Yasir said...

நான் கட்டிக்கொண்டு இருக்கின்றேன். முடியும் தருவாயில் உள்ளது..அப்பப்பா இவனுக தொந்தரவு தாங்க முடியல......காசும் கூடுதலா கொடுக்கவேண்டி இருக்கு....வேலைக்கு வரச்சொல்லி நடையாய் வெத்திலைபாக்கு வச்சு வேண்டு அழைக்க வேண்டி இருக்கு...எதாவது செய்து இதனை மாற்ற வேண்டும்....வருங்கால தலைமுறையின் தலைவலியை சிறிது குறைக்கலாம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// அப்துல்மாலிக் சொன்னது…

நான் ஒரு ENGINEER கிட்டே கலந்துரையாடியபோது அவர் தெரிவித்த கருத்துதான் இது, முதலில் அதிரையில் வீடு கட்டும் காண்ட்ராக்டர்களிடையே (Engineers and Non Engineers) சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் ஒத்த கருத்துடைய தீர்மானங்கள் நிறைவேற்றி வேலைசெய்யும் நேரம், கூலி, மற்றும் இதர விடயங்கள் பரிசீலிக்கலாம். //

உண்மையில் இதுவே சரியான யோசனை...

இண்ஜினியர் என்று ஒரு கூட்டமைக்கு நிச்சயம் அவசியம், அதிரை அனைத்து முஹால்ல நிர்வாகிகளின் கவனத்திற்கு இதை எடுத்துச்செல்லுங்களேன் நண்பர் நிஜாம்.

சேக்கனா M. நிஜாம் said...

// இண்ஜினியர் என்று ஒரு கூட்டமைக்கு நிச்சயம் அவசியம், அதிரை அனைத்து முஹால்ல நிர்வாகிகளின் கவனத்திற்கு இதை எடுத்துச்செல்லுங்களேன் நண்பர் நிஜாம். //

இறைவன் ! நாடினால்............அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில், அதன் நிர்வாகிகளின் கவனத்திற்கு எடுத்து செல்வேன்.

Meerashah Rafia said...

செங்கல் விலை கூட தெரியாத இந்து பிஞ்சு மனசுல இவ்ளோ பெரிய பாராங்கல்ல போட்டுபுட்டீன்களே.. யோசிச்சா தலை சுத்திடும்னு யோசிக்காம 'நீ சிங்கமுடா'ன்னு எனக்குள்ளயே சொல்லிகிட்டே வருங்காலத்தைபற்றி பயந்தும் பயப்புடாமலும் ஓட்டிகிட்டிருக்கேன்..

உம்மாடி, இந்த மாதிரி கட்டுரையை பார்த்தல் சின்ன வயசுல 'பூச்சாண்டி'ன்னு காட்டி பயமுருத்துரமாதிரியே இருக்கு இந்த வாலிப பயலுக்கு..

KALAM SHAICK ABDUL KADER said...

//செங்கல் விலை கூட தெரியாத இந்து பிஞ்சு மனசுல இவ்ளோ பெரிய பாராங்கல்ல போட்டுபுட்டீன்களே.//

செங்கற்களால் வாசலைக் கட்ட முடியாமைப் பற்றிச் சொற்களால் கவிதைத் தோரணம் கட்ட முடியும் என்ற உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்!!
அதிரைப்பட்டினத்தார் அதிகம் பேர் அழகியப்பாட்டினத்தார்களாகவே இயல்பாகவேப் படைக்கப்பட்டிருப்பார்களோ?

திருச்சி சையத் இப்ராஹீம் Trichy Syed Ibrahim திருச்சிக்காரன் திருச்சி்காரன் said...

PLEASE KINDLY INTRODUCE THIS IN YOUR PLACE ATLEAST FIRST.
VERY VERY NICE IDEA.
WASSALAM, SYEDIBRAHIM.A DUBAI.

சேக்கனா M. நிஜாம் சொன்னது…
// சம்பள விவரத்தை பார்த்தவுடன் பிரமிப்பாக இருந்தது. வெளிமாநிலங்களில் இருந்து (பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து) நல்ல முஸ்லிம் ஆட்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து ஏன் யோசிக்கக்கூடாது? சமீபத்தில் நமுதூர் மைய்யாவடிகளில் குழி வெட்டும் வேலைக்கு நெளிமாநில முஸ்லிம் சகோதரர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுருப்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

இதன் மூலம் நமக்கும் மனநிறைவு, ஆட்களுக்கு குறைந்த சம்பளம், இன்னொரு முஸ்லிமுக்கும வேலைவாய்ப்பு கொடுத்த திருப்தி கிட்டும். //

இதுவும் நல்ல ஒரு தீர்வுக்கு நல்ல ஒரு வழிகள் ! வாழ்த்துக்கள் சகோ. அஹ்மத் ஃபிர்தௌஸ்

Reply Thursday, January 19, 2012 9:10:00 AM

திருச்சி சையத் இப்ராஹீம் Trichy Syed Ibrahim திருச்சிக்காரன் திருச்சி்காரன் said...

A.A.W.R.W.B
In trichy recently in our home for 300 sqft. 1st floor they took 1.5 years nearly to complete.What a sad. The problem is competition for building home at the early hence they induce the builder for quickness. This is shameful behaviour.

THE ONLY SOLUTION TO CONTAIN THIS IS TO GET MUSLIM BUILDERS,MASON ETCC FROM OTHER STATES. So that these people will come down automatically.
This should be done as a big team (not as a individual effort).

I would recommend and request your good self to arrange for workers from Bihar, Orissa, Jharkand, Assam.

I would personally can arrange for a meet/ interaction from Trichy Majlisul Ulama Arabic college where we can find Bihari, Orissa Hazraths from whom we can get the root help and it will go on unstoppingly.

further it will strenghten the Ummah between noth and south india for cultural understanding and other purposes etc..

If any idea about this I will give my helping hand. Let us start a new strategy to this atrocities by the contractors.

With expectation to reply from the bloggers & followers.

Wasssalam,
Syed Ibraim.A Dubai

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.