Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 9 23

ZAKIR HUSSAIN | March 08, 2012 | , ,

எந்த நம்பருக்கு போட்டீங்க?...

இது இப்போதைக்கு அடிக்கடி மொபைல் ஃபோன் நம்பர் மாற்றுபவர்களின் கேள்வி. இது ஏதொ சின்ன பசங்க கேட்டால் பெரிய விசயமில்லை. ஒரு தொழிலில் இருப்பவர்கள் அடிக்கடி நம்பர் மாற்றுவது ' என்னமோ கள்ள வேலை செய்றான்யா" என உங்களிடம் பேசிவிட்டு 'சிகப்புபொத்தானை" அழுத்துபவர்கள் சொல்வது சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கூட கேட்பது எப்படி உங்கள் காதில் விழாமல் போனது?.

ஏர்செல்லெ இவ்ளதான், ஏர்டெல்லெ 100 SMS  ஃப்ரீயாமே என மாதத்துக்கு ஒரு நம்பர் மாற்றும் யாரும் பணக்காரனாகிவிட்டார்கள் என்று நான் இதுவரை கேள்விப்படவில்லை.  முதலில் இது போன்ற பிஸ்னஸ் டெக்னிக்கில் விட்டில் பூச்சி மாதிரி விழுந்து விட்டுபங்குசந்தைக்கே அட்வைசர் மாதிரி பேசுபவர்களிடம் சொல்ல வேண்டிய வார்த்தை...ஸ்ஸப்பா....முடியலெ!!”.

அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.!!

கடன் வாங்கி ஆடம்பர செலவுகள் செய்ய காரணம் , இனிமேல் கிடைக்கபோகும் வருமானம் கைக்கு கிடைக்குமுன் செலவு எப்படி செய்வதென்று திட்டமிடும் முட்டாள்தனம்தான். " உங்க கிட்டதான் அந்த டீலிங்...மத்தவங்க சரியா வராது' என்று கற்பூரம்  அணைத்து சத்தியம் செய்யும் கஸ்டமர்கூட சமயத்தில் சில காரணங்களுக்காக மாறி விடக்கூடும். இதை நான் எழுதகாரணம் நம் ஊர் போன்ற இடங்களில் அதிக இளைஞர்கள் ரியல் எஸ்டேட் செய்வதாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் செய்வது சரியான முறையில் நெறியாக்கம் [Regulated] செய்யப்படவில்லை. அப்படியே செய்திருந்தாலும் அதன் சட்டங்கள் ஒவ்வொரு ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டுக்கும் தெரிய பல வருடங்கள் ஆகும்.நமக்கு நடப்பு சட்டங்கள் தெரிய குறைந்த பட்சம் நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும். நம் ஊர்களில்  பேப்பர் படிப்பதே முடி வெட்டிக்கொள்ளும்போது மட்டும்தான் எனும் சூழ்நிலையில் எப்படி சட்டமெல்லாம் தெரிந்து கொள்வது. நாம் முடி வெட்டிக்கொள்ளும் தேதி அரசாங்கத்துக்கு தெரியாது.

 ஆனால் இந்த தொழிலில் ட்ரான்சாக்சன் ஆகும் தொகை பெரிதாக இருப்பதால் இதில் கிடைக்கும் வருமானமும் பெரிதாக தெரிவதால் இளைஞர்கள்  [ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டுஅதிகமான மெட்டீரியல் ஆசைகளில் கவனம் சிதறி கைக்கு கிடைக்குமுன் வருமானத்தையே கடனாக செலவு செய்துவிட வாய்ப்பு அதிகம். எனவே வருமானம் வருமுன் மானம் காக்க!!

அவசரப்படும் பேச்சு

நீங்கள் விற்பனை பிரிவில் இருக்கிறீர்களா?....'ஆலாய் பரப்பதை தவிர்த்து விடுங்கள்". உங்கள் கஸ்டமர்களுக்கு ஒரு திறமை உண்டு, நீங்கள் அவர்கள் தலையில் கட்ட நினைக்கிறீர்கள் என்பதை உங்களின் அவசரமான பேச்சில் எளிதாக உணரக்கூடிய சக்தி அவர்களிடம் உண்டு.  Desperateness Always Kill the sale.

நீங்கள் தரும் பொருளை வாங்கினால் என்ன நன்மை என்பதை நிதானமாக விளக்கினாலே போதும். உங்களுக்கு இது தெரியுமா என சவால் விட வேண்டாம், பிசினசில் சவால்கள் உறவை முறிக்கும். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் பொறுமையாக மற்றவர்களும் உங்களிடம் வாங்குகிறார்கள் என்பதை உணர்த்துங்கள். 'எங்கே பிசினஸ் அப்படி ஒன்னும் விசேசமா இல்லை...முன்னமாதிரி கூட்டம் இப்ப எங்கெ இருக்கு" எனும் நெகட்டிவ் ஆன வார்த்தைகள் கொசுமருந்து மாதிரி கஸ்டமர்களை விரட்டிவிடும்.

வாய்ப்புகள் மீது கவனம் தேவை:

நம் ஊர் போன்ற கீழ்தஞ்சை மாவட்ட பெண்களின் தொழில்திறன் & Human Capital  அனாவிசயமாக வீணாவதாக நான் நினைக்கிறேன். வருமானம் தேவைப்படும் பல பெண்கள் சரியான வாய்ப்புகள் இல்லாததால் அவர்களால் சம்பாதிக்க முடியாது என்றும் 'காசுக்கும், பணத்துக்கும் என் காலில்தானே கிடக்க வேண்டும்' என்ற எழுதாத ஆண் ஆதிக்க சட்டங்கள் பெண்களை தொடர்ந்து அடிமையாக்கி வைத்திருக்கிறது. நம் ஊர் போன்ற இடங்களில் எந்த தொழிலும் செய்ய முடியாது என்று நினைப்பதால் ஆண்களும் இருந்தால் சும்மா இருப்பேன், இல்லாவிட்டால் "விசா வருது" என சொல்லிக்கொண்டிருப்பேன் என்று எதையும் தொடங்காமல் 10 , 15 வருடத்தை ஒட்டிவிடுகின்றனர். பிள்ளைகளின் தேவைகள் அதிகரிக்கும்போது இதுவரை காப்பாற்றிய குடும்ப கெளரவம், தனிமனித மரியாதை எல்லாவற்றிற்கும் ஒரு "டாட்' வைக்க வேண்டியிருக்கிறது.


நம்மை போன்ற ஒரு மனிதர் பன்க்கர் ராய், ராஜஸ்தானில் எந்த வசதிகளும் அற்ற ஒரு ஊரை எப்படி உலகுக்கு எடுத்துச்சென்றிருக்கிறார் என பார்ப்போம். இப்போது இருக்கும் மின்சாரத்தட்டுப்பாட்டுக்கு எவ்வளவு அழகாக தீர்வு சொல்லியிருக்கிறார். நம் ஊரில் மட்டும் 25000 பெண்கள் இருக்கலாம் அதில் 2000 பேர் இந்த சோலார் பேனல்களை செய்ய ஆரம்பித்தால்.......நம் ஊரிலும் ஒரு பன்க்கர் ராய் உருவாகும் நேரம் வந்து விடாதா?

எதிர்ப்புகள் எல்லாம் நம்மை தாக்கும் அம்புகளல்ல

சிலர் தொழில் செய்யும்போது, அல்லது அவர்களது பொருள்களைக் குற்றம் சொல்லி விட்டால் தன்னை ஏதொ லைட்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மாதிரி ஃபீலிங்கில் இருப்பார்கள். இது சில அனுபவசாலிகளிடம் கூட இருக்கும் விசயம். முதலில் உங்கள் கஸ்டமர் சொல்லும் விசயத்தில் உண்மை இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதில் உண்மை இல்லாத போது ஏன் கவலைப்பட வேண்டும். அப்படியே உண்மை இருந்தாலும் திருத்தி கொள்வதுதான் நல்லது. அதை விட்டு ஒரே டென்சனாக கஸ்டமரிடமே கொட்டித்தீர்ப்பது "நாக்கில் சனி" என்ற பட்டம் வாங்க அடித்தளம்.

சிலர் ஆபிசில் /கடையில் நுழையும்போதே மற்றவர்களுக்கு ஒரு அசெளகரியம் இருக்கும், நீங்கள் தீயணைக்கும் வண்டி மாதிரி வந்தால் அப்படித்தான்.... எல்லோரும் 'தெறிச்சி' ஒடுவதில் சாதனையில்லை. எவ்வளவு பேரை உங்களின் அருகாமையில் கொண்டுவர முடியும் என்பதே எப்போதும் நல்லது.

கொஞ்சம் லைட் ரீடிங் ஆக எழுதலாம் என்ற முயற்சியில் இந்த படிக்கட்டு..அடுத்த படிக்கட்டு எப்படி என்று எனக்கே தெரியாது.

See you next week
ஏற்றம் தொடரும்...
-ZAKIR HUSSAIN

23 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

படிக்கட்டு ஏற்றம் தேடுபவர்களுக்கு மட்டுமல்ல, எப்படி ஏறுவது என்று ஏங்குபவர்களுக்கும் வழியாக ஒரு கயிற்றையும் தொங்க விட்டு வைத்துவிட்டு போகிறீர்கள் அதனையாவது பிடித்துக் கொண்டு ஏறட்டும் என்று.

//சிலர் ஆபிசில் /கடையில் நுழையும்போதே மற்றவர்களுக்கு ஒரு அசெளகரியம் இருக்கும், நீங்கள் தீயணைக்கும் வண்டி மாதிரி வந்தால் அப்படித்தான்.... எல்லோரும் 'தெறிச்சி' ஒடுவதில் சாதனையில்லை. எவ்வளவு பேரை உங்களின் அருகாமையில் கொண்டுவர முடியும் என்பதே எப்போதும் நல்லது.//

ஆமா ! காக்கா.... அதுல பெருமை வேறு நான் இல்லைன்னா(ன்னு) !?

Yasir said...

படிக்ககட்டுகள் இளைப்பு தராத ஏற்றத்தை வாழ்க்கைக்கு எளிமையாக தந்து கொண்டு இருக்கின்றன....காத்திருப்போம் கீபோடு மீது கை வைத்து உங்கள் அடுத்த பதிவிற்க்காக

// நாம் முடி வெட்டிக்கொள்ளும் தேதி அரசாங்கத்துக்கு தெரியாது// மலேசியா டிராபிக்கில் மாட்டிக்கிட்டு இருக்கும் போது யோசிச்சீங்களா..சூப்பர் காக்கா

Shameed said...

//கடன் வாங்கி ஆடம்பர செலவுகள் செய்ய காரணம் , இனிமேல் கிடைக்கபோகும் வருமானம் கைக்கு கிடைக்குமுன் செலவு எப்படி செய்வதென்று திட்டமிடும் முட்டாள்தனம்தான்.//

இதுபோன்ற செயல் JCB வைத்து நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் குழி

Shameed said...

//கடையில் நுழையும்போதே மற்றவர்களுக்கு ஒரு அசெளகரியம் இருக்கும், நீங்கள் தீயணைக்கும் வண்டி மாதிரி வந்தால் அப்படித்தான்.... எல்லோரும் 'தெறிச்சி' ஒடுவதில் சாதனையில்லை.//

ஊரில் இதுபோன்ற ஆட்கள் அதிகம் இவர்களை காண்டாலே ஓடி ஒழிய வேண்டி இருக்கும் இவர்கள் போடும் ப்ளேடு எப்போதும் மழுங்காமல் கூறாகவே இருக்கும் இனி இவர்களுக்கு புதிய பெயர் "தீயணைப்பு வண்டி"

Anonymous said...

// நம் ஊர்களில் பேப்பர் படிப்பதே முடி வெட்டிக்கொள்ளும்போது மட்டும்தான் எனும் சூழ்நிலையில்//.

விழுந்து விழுந்து சிரித்தேன். அப்பட்டமான உண்மை.

இபுராஹீம் அன்சாரி

Yasir said...

// இனி இவர்களுக்கு புதிய பெயர் "தீயணைப்பு வண்டி"// வழிமொழிகிறேன்....கிடாய் எப்ப வெட்டுறது

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள கோபுரத்தில் ஏறி தஞ்சையை சுற்றி பார்ப்பது உணர்வு.

ஒன்பதாவது படியில் ஏறியதும் .ஜாகிர் காக்கா சொன்ன நபர்களெல்லாம். தெளிவா தெரிறாங்க. அப்ப படி ஏற ஏற இன்னு தெரிஞ்சிகிடலாம்.

Muhammad abubacker ( LMS ) said...

// நம் ஊர்களில் பேப்பர் படிப்பதே முடி வெட்டிக்கொள்ளும்போது மட்டும்தான் எனும் சூழ்நிலையில்//.

எப்படி காக்கா அதகூட அரை மணி நேரத்தில்.எல்லாப் பக்கத்தையும் படித்து முடித்து விடுகிறார்களே?

sabeer.abushahruk said...

"எந்த நம்பருக்குப் போட்டிய" பாடாய்ப் படுத்துவது உண்மைதான். இவர் எப்ப நம்பர் மாத்தறார்னே தெரியமாட்டேங்கிறது.

வழக்கம்போலவே உற்சாக ட்டானிக்.!

Shameed said...

Yasir சொன்னது…
//வழிமொழிகிறேன்....கிடாய் எப்ப வெட்டுறது //

கிடாய் வெட்டுவது சாத்தியபடாது (கிலோ 400) சிம்ப்பிளா கோழி அருத்துருவோம் (கிலோ 100 )

sabeer.abushahruk said...

ஜாகிரு,

இங்கே போன வருஷம் ஒரு ஸ்க்கீம்ல ஐ ஃபோன் வாங்கினேன். ஒரு வருஷத்திலே காசு கொடுத்து முடித்ததும் எல்லா தொடர்புகளையும் துண்டிச்சிட்டாங்க, ஃபோன் நம்பர் உட்பட.

ஏற்கனவே அந்த நம்பர் தெரிந்த நண்பர்கள் கால் பண்ணி பார்த்துட்டு " நம்பர் மாத்திட்டியா"ன்னாங்க.

அப்ப்டீன்னா நானும் அந்த லிஸ்ட்லயா வரேன்?

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

//ஏற்கனவே அந்த நம்பர் தெரிந்த நண்பர்கள் கால் பண்ணி பார்த்துட்டு " நம்பர் மாத்திட்டியா"ன்னாங்க.

அப்ப்டீன்னா நானும் அந்த லிஸ்ட்லயா வரேன்? //

இப்போதெல்லாம் அதே நம்பரை இப்போதுள்ள மொபைல் கம்பெனி 'தத்து" எடுத்துக்கொள்வதுபோல் மலேசியாவில் வைத்திருக்கிறார்களே!!....அரபிகள் இன்னும் முன்னேரவில்லையா?

Atleast you can sms this details to all your contacts, rather than they ask you.

KALAM SHAICK ABDUL KADER said...

சகோ.ஜாஹிர்,
அஸ்ஸலாமு அலைக்கும்

நிறைய படிக்கின்றீர்கள்;அதனால், நிறைய படிக்கட்டுகள் கட்டி வருகின்றீர்கள் என்று உணர்கின்றேன். படிப்பாளிதான் படைப்பாளி ஆக முடியும் எனபதற்கு நீங்கள் ஓர் உதாரணமாகி விட்ட அசாதாரண மனிதர். உங்கள் பக்கத்தில் இருந்தால் (நறுமண வணிகரின் அருகில் இருந்தால் நமக்கும் நறுமணம் ஒட்டிக் கொள்ளுவது போல்) உங்களின் படிக்கட்டும் திறமை படித்துக் கொள்ள வாய்ப்புண்டு. உங்களோடு பேசினால் கூட உளவியல் அதிர்வு கிட்டும் என்றும் நம்புகின்றேன்.

sabeer.abushahruk said...

// உங்களோடு பேசினால் கூட உளவியல் அதிர்வு கிட்டும் என்றும் நம்புகின்றேன்.//


//உளவியல் அதிர்வு//

ஆம்
உண்மைதான்.

அது
ரிக்ட்டர்களுக்குள் அடங்காதது.

நிலவிடல் அதிர்வு
அழிவைத் தரும்
இவந்தம்
உளவியல் அதிர்வு
உயர்வைத் தரும்!

இந்த
அதிர்வில்
உயிர்கள் உதிர்வதில்லை
உள்ளம் முதிர்வதுண்டு - மன
ஊனம் உதிர்வதுண்டு!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஏற்றம் தரும் வழியில்:

சிரிக்க சில
சிந்திக்க பல
சீர் திருந்திட நிறைய!

இப்னு அப்துல் ரஜாக் said...

இறைவன் நாடினால்,ஏற்றம் தரும் ஏணிப்படிகளாக உயர்ந்து வரும்,நம்பிக்கையூட்டும் உங்கள் கட்டுரைகளின் உப தலைப்புக்களும் கூட முயற்சி செய் என சொல்லாமல் சொல்கிறது.

எங்கள் வீட்டு வாசலில் சில நம்பிக்கையூட்டும் வாசங்களை என் தந்தை அவர்கள் போர்டில்(சுமார் நாற்பது வருடங்களாக) எழுதி வைத்துள்ளார்கள்.அது இறை நம்பிக்கையை வலியுறுத்தி,முயற்சி அடையவும் எங்களுக்கு,அல்லாஹ்வின் அருளால் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் மிகை அல்ல.அல்லாஹ் மிக அறிந்தவன்,உயர்ந்தவன்.

அந்த வாசகங்கள்........

தக்தீரை(விதியை)நம்பு,
அல்லாஹ்வை (திக்ரு)தியானம் செய்,
பொறுமையுடன் இரு,
கடுமையாக உழை,
முயற்சியை விடாதே,
காலத்தை எதிர் பார்.

http://peacetrain1.blogspot.com/2012/03/blog-post_08.html

Anonymous said...

//இந்த
அதிர்வில்
உயிர்கள் உதிர்வதில்லை
உள்ளம் முதிர்வதுண்டு - மன
ஊனம் உதிர்வதுண்டு!//

இந்த ஊற்றுக்கள் எங்கிருந்து பீரிடுகின்றன சட்டென்று. ? மாஷா அல்லாஹ்.

இப்ராஹீம் அன்சாரி.

ZAKIR HUSSAIN said...

//ஒன்பதாவது படியில் ஏறியதும் .ஜாகிர் காக்கா சொன்ன நபர்களெல்லாம். தெளிவா தெரிறாங்க. அப்ப படி ஏற ஏற இன்னு தெரிஞ்சிகிடலாம். //

To brother LMS,

நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்வதே என் முயற்சி இந்த படிக்கடுகள் வழியாக.

To bro Yasir,,

//மலேசியா டிராபிக்கில் மாட்டிக்கிட்டு இருக்கும் போது யோசிச்சீங்களா..சூப்பர் காக்கா//

உண்மைதான். ட்ராஃபிக் ஜேமில் யோசித்த விசயம் தான் அது. ஒருவர் ஐ பேடில் ஏதோ படித்து கொண்டிருந்தார். எனக்கு ஊரில் பேப்பர் படிக்கும் ஞாபகம் வந்தது.

To Tuan Haji Shahul,

//கிடாய் வெட்டுவது சாத்தியபடாது (கிலோ 400) சிம்ப்பிளா கோழி அருத்துருவோம் (கிலோ 100 ) //

ஊருக்கு போகும்போது கரன்சியை மூட்டையில் கட்டி கொண்டு போகும் வசதி உள்ளவர்கள் மட்டும் சாத்தியம் மாதிரி தெரிகிறது.

To Bro Abulkalam,

//நிறைய படிக்கின்றீர்கள்;அதனால், நிறைய படிக்கட்டுகள் கட்டி வருகின்றீர்கள் என்று உணர்கின்றேன்.//

இதுவரை எந்த புத்தகத்தையும் refer செய்யாமல் எழுதியது இந்த 9 படிக்கட்டுகளும். எதிர்காலத்தில் புத்தகத்தை refer செய்யலாம்.

Thanks to MHJ...

To Bro அர அல....வாழ்க்கையின் முன்னேற்றத்தில் இறை நம்பிக்கையும், வழிபாடுகளும் , அதன் அவசியத்தைப்பற்றி நான் இதுவரை அறிந்து கொண்ட விசயங்களை ஒரு எபிசோடில் எழுத நினைத்திருக்கிறேன். we will see insha Allah.

அப்துல்மாலிக் said...

இந்த எபிசோட்லே ரியல் எஸ்டேட் பத்தி சொன்ன விதம் அருமை, கைக்காச அவங்க போட்டுவிட்டு, இங்கே ஈச்சமரத்துலே பேரீட்சைக்கு பதிலா காசு காய்க்கு பறித்து அனுப்பு என்பது மாதிரி 1000 க்கே சிங்கி அடிக்கும் நமக்கிட்டே சர்வ சாதாரணமா 8 லட்சம், 15 லட்சம் தான் ஒரு மனை வாங்குனு ஃபோன் தொந்தரவு கிரடிட் கார்ட் தாரேனு வரும் ஃபோனைவிட அதிகமாயிட்டது,

ஒரு வேள இதுக்காக ஃபோன் நம்பரை மாத்தினா நாமும் “அந்த” லிஸ்ட்லே சேந்திடுவோமோ?

வாழ்த்துக்கள் ஜாஹிராக்கா..

KALAM SHAICK ABDUL KADER said...

//இதுவரை எந்த புத்தகத்தையும் refer செய்யாமல் எழுதியது//

Hang on to that wonderful confidence and you will go far!

You are a weirdo!

ZAKIR HUSSAIN said...

"1000 க்கே சிங்கி அடிக்கும் நமக்கிட்டே"

To Bro Abdul Malik,

உங்கள் வாழ்க்கை இப்படியே இருந்துவிடாது. இறைவன் உங்களின் வாழ்க்கையில் தொடர்ந்து சுபிட்சங்களைத்தருவான். உங்களுக்கு சாதிக்கும் வயது இன்னும் இருக்கிறது. வாய்ப்புகள் மீது கவனமாக இருங்கள்.


To Bro Abulkalam.... i have already installed dictionary in my PC to check your vocabulary...[ "weirdo" ..i learned from you!!]

KALAM SHAICK ABDUL KADER said...

I can't thank you enough.

I will take a leaf out of your book and improve.

Your articles are being published in many sites. This will help you extend your reach immensely.

This study is meaningful as it helps people.

Hang in there and you will get your dues in Hereafter.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
படிக்கட்டுகள் :9

/// எந்த நம்பருக்கு போட்டீங்க?...
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.!!
அவசரப்படும் பேச்சு
வாய்ப்புகள் மீது கவனம் தேவை:
எதிர்ப்புகள் எல்லாம் நம்மை தாக்கும் அம்புகளல்ல ///

தெளிவான விளக்கங்கள்!

சகோ. ஜாகிர்! வாழ்த்துக்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.