Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யாருண்டு வந்து காட்டு கேக்கிறேன்... - அப்பா ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | March 13, 2012 | , , , , , , ,

அப்பா பேரனை இஷா தொழுகைக்கு அழைக்கிறார்கள்....

அப்பா: தம்பி இகாமத் சொல்லிடுவாக சீக்கிரமா வாங்கமா......

பேரன்: நா அந்தப் பள்ளியாசளுக்கு போறேன். நீங்க இங்கே போங்கப்பா..

அப்பா: யான் கிட்டன வுள்ளத வுட்டுட்டு அங்கே போறன்க்ரிய   

பேரன்: மக்ரிப் தொழுவ போம்போது ஒரு ஆம்புள வெரட்டி வுட்டுட்டாருப்பா

அப்பா: அப்புடியா யாருண்டு வந்து காட்டு கேக்கிறேன்..

[இருவரும் பள்ளியை வந்தடைகிறார்கள்]

பேரன்: அந்தோல ஒளு செஞ்சிட்டு தொடச்சிக்கிட்டு போறாஹளே அவ்வோதான்

அப்பா: அட நம்ம அன்சாரி தம்பில, நம்ம புள்ளையில யா வெரட்டுனச்சு.. சரி, தொழுவ முடிஞ்சு கேட்டுக்கலாம். நீ ஒளு செஞ்சிட்டு சுருக்கா வந்துடு...

[தொழுகை முடிந்து வெளியேறும்போது அப்பா அன்சாரியை பாத்துர்ராஹ]

அப்பா: என்ன தம்பி உங்களை பாக்கவே முடியலையே.. வேல ஜாஸ்தியோ.? சுஹமாயிருக்ரியலா, நானும் இந்த தடவை ஹஜ்ஜூக்கு போவலாம்னு இருக்கிறேன். துஆ செய்ங்க தம்பி.கொஞ்ச நேரம் உட்காந்து பேசலாமே...

அன்சாரி: அல்ஹம்துல்லில்லாஹ்! அல்லாஹ் ரஹ்மாத்தாக்கித் தருவான். சரி, உங்களோட பேசியும் ரொம்ப நாளாச்சு.

அப்பா: தம்பி எதுவும் நெனச்சிக்கிடாதிய புள்ளயளுவ்ள மக்ரிப்ள வெரட்டி வுட்டுடியலாம்ல.எம்பேரன் வந்து சொன்னானே..?

அன்சாரி: ஆமா எங்கயோ வெளையாண்டுட்டு 5, 6 புள்ளயளுவ பேசி சிரிச்சுக்கிட்டு, எதோ முடிவெட்டுற கடைக்கு வர்ர மாதிரி ஒரு அதபில்லாம தலைல ஒத்தரும் தொப்பியில்லாமே வந்துச்சுவோ அதான் வெரட்டிவுட்டேன்.. சரிதானே அதுவும் கம்ப்ளைண்டாச்சா..

அப்பா: நீங்க செஞ்சது சரிதான் இப்ப நெறைய புள்ளயளுவ தொப்பியில்லாமதா வருதுவோ. யா இப்புடி செய்துவோண்டு தெரியல. அன்னைக்கி கூட எம்பேரனோட வந்த பத்தரூட்டு புள்ளைய நம்ம ஆமாத்தும்மா மொவனாண்டு கேட்டுப்புட்டேன். நம்ம புள்ளயளுவ புத்திசாலி புள்ளயளுவதான் நீங்க கூப்புட்டு எடுத்து சொன்னா கேட்டுக்கிடும்தானே.

அன்சாரி: நீங்க ஒன்னு இப்புடி நாலஞ்சு புள்ளயளுவ்ள நாம சீரியஸா வச்சு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவனுவளுக்குள்ளேயே ஒத்தனுக்கு ஒருத்தே கிண்டிவுட்டுக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கடைசியிலே நமக்கு ஒரு  பட்டப்பேரு வச்சுட்டு போயிடுங்க. தனியா சொன்னா அது ஒரு கணக்கு.

அப்பா: நீங்க இந்த வயசு புள்ளயளுவ்ள வெரட்டுனதால இதோட முடிஞ்சிடுச்சு. கொஞ்சம் வளர்ந்த லேசா தாடி வந்த புள்ளைய சொன்னீய அப்புறம் உங்க பாடு அவ்வளவுதான்...

அன்சாரி: நீங்க கரெக்ட்டா சொன்னிய அன்னக்கி ஒரு லுஹருக்கு தொப்பியில்லாம வந்த பையனே பாத்து... ஏம்பா தொப்பியில்லாம வர்ரியேன்னு கேட்டுபுட்டேன். அவ்வளவுதான் அஸர்ல ரெண்டு பேரோடு வந்து என்னென்னமோ சொல்லிப்புட்டு போயிட்டானுவ. அப்புறம் மஃக்ரிப்ல சம்மந்தமே இல்லாத ஒரு பையன் வந்து என்னா அன்சாரியாக்கா அஷர்ல ஒரே சவுண்டாயிருந்துச்சே என்னாண்டுதான் கேட்டான், உடனே யாரு அஷர்ல என்னெட்ட சவுண்டு போட்டவன் என்னையும் சேத்துக்கிட்டு எங்களுக்குள்ளே உள்ளது நீ வேலையே பாத்துக்கிட்டு போன்னு அவன்ட்ட  சொன்னதும். உங்களுக்குள்ள எதுயிருந்தாலும் பள்ளிக்கு வெளியே வச்சுக்கிடுங்க என்னையும் சேத்து கத்திட்டுப் போயிட்டான். பிறகு,  இஷாவ்ல ஒரு ரெண்டு மூணு பேரு தொழுகை முடிஞ்சு என்ன அன்சாரியாக்க அவனுவளுக்கு சண்டை போட இதான் எடமாக்கும் சொல்லி வைங்க இல்லாட்டி அவனுவளோட உங்களையும் சேர்த்து சீடி. போட்டுவுற்றுவோம்னு சொல்லிப்ட்டணுவ பாருங்களேன். நம்ம புள்ளய்வோதான் எல்லாரும் நல்லாதொழுவத்தான் செய்துவோ இப்புடி பிரிஞ்சி நிக்கிதுவோல அல்லாஹ்தான் நல்ல புத்தியை கொடுக்கணும்.

அப்பா: இப்பவல்லாம் புள்ளைவோ ஒரு மாதிரியாத்தான் இரிக்கிதுவோ நீ மொதல்ல அல்லாஹ்க்கு சுக்கூர் செயிங்க. ஏண்டாக்கா அப்ப சீடி பார்ட்டியோட நின்ருடுச்சு இல்லன்டா மூஞ்சில துண்டு கட்டிக்கிட்டு வந்து அடியப்போடுற புள்ளையலும் வந்துடும். ஒரு மோட்டார் சைக்கிள்ளே மூணு நாலு பேரா வர்றது ரெண்டு ரெண்டு போனு வச்சுக்கிறது. ரசூலுல்லாஹ் என் உம்மத்துக்கள் 70 க்கு மேல் பல பிரிவுகளாய் இருப்பார்கள் என்று சொன்னதாக சொல்வதுண்டு நமூர்லையே 50 தேறிடும்போல தெரியுது. நல்லவேளை நானும் ஒரு தொப்பி போடாம  வந்த புள்ளயை கண்டிச்சேன்தான் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி. ஆனா இவ்ளவு உங்களுக்கு நடந்த மாதிரி நடக்கல. ஏன்டா அப்ப உவ்வல்லாம் ஒன்னாத்தான் இருந்தாக.. இப்பவ்ள பல தினுசா போய்டுச்சுவ.....

அன்சாரி: இன்ஷா அல்லாஹ்.நம்ம புள்ளைவ ஒரு நாளைக்கு ஒத்துமையாத்தான் இரிக்கப்போவுதுவ.  ஆஹா!!! கெரண்டு போயிடுச்சே. சரி,  இருட்டுல உங்களுக்கு செரமமாயிருக்கும் வூடு வரைக்கும் வந்து விடுறேன் 

அப்பா: இந்த கெரண்டுவேற குருவியில்ல போய் வரவனாட்டம் எப்ப போவுது எப்ப வருதுன்னு தெரியல.சரி வாங்க.

[அப்பாவை வீட்டில்விட அன்சாரி இருட்டில் போய்க்கொண்டிருக்குபோது எதிரில் வரும் நபர் யாரு அன்சாரியா என்கிறார்]

அன்சாரி: ஆமா என்ன நீயா இந்நேரத்தில போறே...

நபர்: தஞ்சாவூருக்கு போனேன் இப்பதா பஸ் வந்துச்சு. அதான்.

அன்சாரி: சரி உவ்வள வூட்டுல வுட்டுட்டு வந்துடறேன்... நீ போ ..

அப்பா: யாரு அது நல்லா செண்டு கமாளிக்குது... ஏது வெளிநாட்டுல இருந்தாவ்லா....

அன்சாரி: ஆமா! லண்டனோ, ஆஸ்திரேலியாவுலையோ பெரிய ஊர்லேந்துதான் வந்திக்கிறாப்ள.....

அப்பா: தொப்பி போட்டிக்கிரஹளா...

அன்சாரி: ம் நீங்க பாக்கலையா அழகான மலேஷியா தொப்பி போட்டிருந்தாப்ள...

அப்பா: இருட்டுல நா கவனிக்கல [மனதிற்குள் ஹூம். அப்றானி அன்சாரியா இரிக்கிதே நா கேட்ட தொப்பி எதுண்டு தெரியலையே]

அன்சாரி: வூடு வந்துடுச்சு போய்ர்ரியல வர்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்

அப்பா: அலைக்கும் வஸ்ஸலாம். ஃபிஅமானில்லாஹ்...

-ZAEISA


அப்பா பேரனுக்கு இடையே ஊடுருவும் தனிநபர்களின் பெயர்கள் ஊர் நடப்புகளை எடுத்துரைக்க கையாண்ட கற்பனைப் பெயரே அன்றி தனிநபர் யாரையும் குறிப்பதற்கு அல்ல. 


அதிரைநிருபர்-குழு

15 Responses So Far:

Shameed said...

நம்ம ஊர்லே பெரும்பாலான பள்ளிவாசல்களில் சிறு பையன்கள் ஆர்வமா தொழ வர்றாங்க ஆனா அவங்களை முதல் சப்பில் நின்று தொழ விடாமல் கடைசி சப்பிற்கு துரத்தி விடுறாங்க இது நியாயமா படவில்லை இதை எந்த அப்பா மாறும் கேட்பதில்லை

sabeer.abushahruk said...

அப்பா வன்ட்டாரு அப்பா வன்ட்டாரு!!!. என்னப்பா இவ்ளோவ் கேப் விட்டு வர்ரிய. வாப்புச்சாவ விட்டு நகர மனசு வர்லயா?

ஒன்னு மட்டும் நிச்சயம். அப்பா வயசுக்காரரால மட்டும்தான் இவ்ளோவ் தெளிவா சுவாரஸ்யப்படுத்த முடியும். ஜப்பார் பாய் "பெருசா?"

இல்லேனா டை அடிக்காம எடுத்த ஒரு ஃபோட்டோவை இங்கு பதிய தில் இருக்கா?

கேட்கிறது கம்பெனி காதில் வுழுவுதா?

sabeer.abushahruk said...

முக்கியமா சொல்ல நினைத்ததை மறந்துட்டேன்:

செமயா சிரிக்க வைக்கிறிய. ஆனா, இந்தப் பதிவில் கூடுதலா, தப்பி தவறி சிந்திக்கவும் வெச்சுட்டிய சார் (தம்பிங்கிறதா காக்காங்கிறதா டாங்கிறதா ங்கள் ங்கிறதா? ஒரு க்ளூ தாருமைய்யா)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அப்பா பேரான்டி உரையாடல் அசலாய் அழகாயிருக்கு!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்பாவின் கம்புக்கு பக்கத்தில்.அன்சாரியின் தொப்பியை போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அடுத்த வீட்டு பையன்களை விரட்டும் அப்பா தன் பேரன் என்றதும்.கேட்கிறாங்களா?நல்ல சமத்தான அப்பாதான்.

// இருட்டுல நா கவனிக்கல [மனதிற்குள் ஹூம். அப்றானி அன்சாரியா இரிக்கிதே நா கேட்ட தொப்பி எதுண்டு தெரியலையே] //

அன்சாரி அமெரிக்கா.ஆஸ்திரேலியா லண்டன் போன்ற நாடுகளுக்கு போய் இருக்க மாட்டாப்ளே என்று நினைக்கிறேன்.அதுனாலே அப்பா கேட்கிற தொப்பியை பற்றி தெரியவில்லை.

சூப்பர் zaeisa சுவாரசியமான உரையாடல்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அழஹாதிய கட்டுரை......இது மாரி யாரு எழுதுனாலும் நமக்கு படிக்க ரொம்ப ஒஹப்பு.....

அந்தக்காலமும், இந்தக்காலமும் களத்தில் போட்டியிட்டால் இறுதியில் வென்று வாகை சூடுவது அந்தக்காலமே. வெந்து புண்ணாகிப்போவது இந்தக்காலம் தான்.

பணங்காசுகள் பரவலாக வந்து நம் பாரம்பரிய,பண்பாடுகள் எங்கோ பறந்தோடி விட்டது.

நிம்மதியின் நெஞ்செழும்பு உடைக்கப்பட்டு நிரந்தர நித்திரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளது.

ஆடம்பர பகட்டு வாழ்க்கை அகிலமெங்கும் பரவி ஏகாதிபத்ய ஆட்சி செய்து வருகிறது.

அல்லாவின் கூட்டமும் (முஸ்லிம்கள்) அல்லோலப்பட்டு நிற்கிறது.

அப்பாக்கள் தந்த அறிவுரைகள் எல்லாம் இன்று தப்பானதாக‌ ஆக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

நிமிட‌மொரு முறை ம‌ர‌ண‌ங்க‌ள் நிக‌ழ்ந்தும் நீண்ட‌ ஆயுளுக்காக‌ உள்ள‌ம் அலைபாயுது.

க‌ஸ்ட‌ப்ப‌ட்டு சேர்த்த‌ செல்வங்கள் எல்லாம் இஸ்ட‌ப்ப‌ட்ட‌ எவ‌ருக்கோ போய்ச்சேருகிற‌து.

நோகாம‌ல் நொங்குறிக்க‌வே இம்மானிட‌ம் விரும்புகிற‌து.

அப்பாவிக‌ளின் உரிமைக‌ள் அள்ளி வ‌ச்சி குத்த‌ப்ப‌டுகிற‌து.

அதிகார‌ம் செலுத்தியே இதிகாச‌ம் ப‌டைக்க‌ நினைக்கிற‌து.

அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லியே இஸ்லாத்தில் இல்லாத‌தையும் செய்து முடிக்கிற‌து.

ம‌னிதாபிமான‌ங்க‌ள் தொலைந்து போய் வ‌ருச‌ங்க‌ள் ப‌ல‌ உருண்டோடி விட்ட‌து.

நியாய‌த்திற்கு போராடும் ம‌க்க‌ளுக்கு அநியாய‌மே அன்ப‌ளிப்பாய் கிடைக்கிற‌து.

கோடிக‌ள் ப‌ல‌ இருந்தும் தெருக்கோடியில் உள்ள‌வ‌ன் போல் உள்ள‌ம் மேலும் ப‌ரித‌வித்து மாபாத‌க‌ம் செய்து விடுகிற‌து.

சொந்த‌ ப‌ந்த‌ உற‌வுக‌ள் எல்லாம் சிறு சிறு பிர‌ச்சினையால் செத்தும‌டிகிற‌து.

இறுதியில் ம‌ர‌ண‌த்தின் ப‌டுகுழிக‌ள் எல்லாம் ந‌ம்மை வ‌ர‌வேற்க‌வே அங்கு பசியுடன் காத்துக்கிட‌க்கிற‌து.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லியே இஸ்லாத்தில் இல்லாத‌தையும் செய்து முடிக்கிற‌து.//

நெய்னா. இல்லாததை சொல்லி முடிச்சிட்டாதான் தேவலையே! முடிக்காமே செஞ்சிகிட்டேயிலோ இருக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்பா அவர்களின் வருகை லேட்டானாலும், ஹிட்டான விஷயம்தான் கைவசம் இருக்கும் !

"அப்பா என்னோட பொரடியிலா யாரோ தட்டிவுட்டுரானுவ தொழுதிட்டு பார்த்தா நல்லவனாட்டம் லேட்டா சலாம் கொடுக்குறாம்பா.... இப்போ அவன் எங்கேயிருக்கானு தெரியலை - அவ்வொல்ட சொல்லி கண்டிக்கச் சொல்லுங்க அப்பா" :)

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்...

சகோதரர் இங்கே தொப்பி அணியாமல் பள்ளிக்கு வருவதை அல்லது தொழுவதை குறைகண்டிருப்பதாக உணர்கிறேன். அதற்கான காரனத்தை தெறிவித்தால் அது சரியெனில் நானும் பேனிக்கொள்வேன். ஏனெனில் நான் எப்பொழுதும் தொப்பி அணியாமல் தொழுவதே வழக்கம்!

அன்புடன்
அபு ஈசா

Abu Easa said...

இங்கே சொல்லப்பட்டிருக்கிற அன்சாரி போன்றோர் தொப்பி அணியாமல் தொழுவதை கண்டிப்பதால் எத்தனையோ மானவர்கள் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும் வழியில் தொழுகைக்கு அழைக்கப்பட்டால் அல்லது தொழாத ஒருவனை தொழுகைக்கு அழைக்கும்போது தொப்பி இல்லை என்கிற காரனம் காட்டி தப்பிக்க ஏதுவாய் அமைந்துவிடுகிறது. அச்சமயத்தில் தொப்பி அவசியமில்லை தொழுகைக்கு என்று சொல்ல அழைப்பவர்களுக்கும் தெறிவதில்லை.

எனவே அன்சாரி போன்றவர்களுடைய செயல் சைத்தானுக்கு பக்க பலமாகவே அமைந்த்திருக்கிறது என்பதை தொப்பியை இன்னும் ஒரு பொருட்டாய் எண்ணிக்கொன்டிருப்போர் உணர வேண்டும்.

அன்புடன்
அபு ஈசா

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் ZAEISA:

//நம்ம புள்ளய்வோதான் எல்லாரும் நல்லாதொழுவத்தான் செய்துவோ இப்புடி பிரிஞ்சி நிக்கிதுவோல அல்லாஹ்தான் நல்ல புத்தியை கொடுக்கணும்.//

அதான் அதான் அதேதான்.

வஸ்ஸலாம்

இபுராஹீம் அன்சாரி

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்
பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி.
தொப்பியின் அவசியத்தை இன்ஷா அல்லாஹ் அப்பா அவர்கள் விரைவில்
சொல்ல இருக்கிறார்கள்.தம்பி ...சபீர் என்னைப் பற்றி அறிய ரொம்ப ஆவலாக
இருக்கிறீர்கள் சந்தோசம்......உங்க e mail id தந்தால் தேவலாம்.என்ன..உங்க
ஃபோட்டோ இல்லாம வர்ரியல யா இன்னும் உங்க கணினிக்கு அந்த 7 நாளு
இன்னும் முடியலையா..என்ன பண்றது உங்க கவி பாஷையில்..கணினிக்கும் வைரஸ் வந்தாலும் அதே அவஸ்தைதானே.

Abu Easa said...

இன்ஷா அல்லாஹ்!

எதிர்பார்த்தவனாக!

அன்புடன்
அபு ஈசா

Kavianban KALAM, Adirampattinam said...

முன்னோர்கள் கற்பித்த வொழுக்கம் தொப்பி
****முட்டாள்கள் அல்லரவர் களென்றுச் செப்பி
பின்னோர்கள் பெயரன்கள் வழியில் நோக்கும்
****பிளவுகளை யுண்டாக்கும் முறையைப் போக்கும்
நன்னோக்கில் கட்டுரையிற் கருத்துக் கோர்த்து
****நம்மூரின் பேச்சுமொழி நகைப்பைச் சேர்த்து
முன்னோட்டம் விட்டுள்ள இவரின் நல்ல
****முயற்சிக்கு நானும்தான் துணையாய் நின்றே

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

தலையை (தொப்பி) மறைப்பது தொடர்பான ஹதிஸ்கள்....

அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாவின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும் ? என்று கேட்டார், அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அளிஹி வசல்லம் அவைகள், (முழு நீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்குகீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும் "வர்ஸ்" எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள். (புஹாரி 5083)

இஸ்ஸத் பின்த் இயாத் கூறியதாவது

அபா கிர்ஸாபா கூற நான் கேட்டிருக்கிறேன்

நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் எனக்கு ஒரு தொப்பியை அளித்து "இதனை நீ அணிந்து கொள்" எனக் கூறினார்கள்.

(முக்ஜமுல் கபீர் அத்தபரானி 3/19 (2520))

சுலைமான் பின் தர்கான் அவர்கள் கூறியதாவது

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது தொப்பியொன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பலி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது. (புஹாரி 5082)


(கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும், தொப்பியின் மீதும் ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர் : ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி

“நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தனர்” அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லா ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்

(அதே மக்கா வெற்றியின் போது) “நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்” அறிவிப்பவர் : ஜஃபர் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு நூல் : முஸ்லிம்

“நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளூ செய்யும் போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள்” அறிவிப்பவர் : அனஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல் : அபூதாவூத், இப்னு மாஜா

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தலைப்பாகையை இரண்டு தோல்களுக்குமிடையில் தொங்க விடுபவர்களாக இருந்தார்கள். (திர்மிதி)

“இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப்பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் கட்டிக் கொள்வார்கள்”. அறிவிப்பவர் : இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல் : முஸ்லிம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.