Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - புதிய தொடர்... முன்னுரை ! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | March 19, 2012 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
முன்னுரை..

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) -(இறைவனின் சாந்தியும்,சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!)

தாங்கள் அனைவரும் மிக ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு இருந்த இந்தத் தொடரை அனைவருக்கும் தெளிவாக புரியும்படி எழுத வேண்டும் என்பதாலும், மேலும் தொடருக்காக நிறைய விஷயங்கள் தேவைப்படுவதாலும் தாமதித்து வந்தேன். ஆனால் இந்த அவசர உலகத்தில் எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக் கொண்டு  எழுத வேண்டும்  என்றால் தொடரைத் தொடங்கவே முடியாது என்பது என் மனதிற்கு தோன்றியதால் வல்ல அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடரைத் தொடங்குகிறேன்.

தொடரைத்  தொடங்குவதற்கு முன் என் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் பற்றி சில வரிகள்: (சொல்வதற்கு காரணம் இருக்கிறது): எனக்கு தலை (முதல் குழந்தை) மகள் பிறந்த செய்தி கேட்டு நான், என் மனைவி, என் குடும்பத்தார்கள், மனைவியின் குடும்பத்தார்கள் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். அல்ஹம்துலில்லாஹ்!

என் மனைவியின் சகோதரிகளுக்கு ஆண் பிள்ளைகள் இருந்தும் மீண்டும் ஆண் பிள்ளைகளாகப் பிறந்ததால் ஒரு வித (ஆண் பிள்ளைகளின் மேல் எந்தக்காலத்திலும் தாய்மார்கள் வெறுப்பு அடைவதில்லை) சலிப்பு என் மனைவியின் மூத்த சகோதரிக்கு. இந்த நேரத்தில் என் மகள் வந்து பிறந்ததால் நர்ஸ்களுக்கு அன்பளிப்பாக பணம் கூட கொடுத்தார்களாம். (பெண் பிள்ளை பிறந்த செய்தி கேட்டு பணமும் கொடுப்பார்களா? என்ன? என்று கேட்கிறீர்களா?). 

இரண்டாவது குழந்தை, எல்லோருக்கும் ஆண் பிள்ளைதான் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அனைவரும் துஆச் செய்தார்கள். வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி பெண் குழந்தை பிறந்தது. எல்லோருக்கும் ஏமாற்றமே. தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும், என்பதே என்னுடைய பிரார்த்தனையாக இருந்ததால் எனக்கு எந்தவொரு ஏமாற்றமும் இல்லை. மகிழ்ச்சியே! அல்ஹம்துலில்லாஹ்!

மூன்றாவது குழந்தை உருவானது. மீண்டும் குடும்பத்தார் அனைவரின் துஆ, ஆண் குழந்தை பெற வேண்டும் என்ற ஆவல். என் துணைவியாருக்கும் ஆண் பிள்ளை வேண்டும் என்ற ஆசையும் துஆவும். ஆண் பிள்ளைதான் பெறுவாய் என்று பார்த்த அனைவரும் சொன்னார்களாம். இந்த மூன்றாவது குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது வல்ல அல்லாஹ்வின் அருளால் ரமலான் மாத நோன்பை முழுமையாக வைக்கும் பாக்கியம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி என் துணைவியாருக்கு. நிமிடங்கள் நாட்களாகவும், நாட்கள் மாதங்களாகவும் நகர்ந்தன.

9 மாதங்கள் முடிந்து 10வது மாதம் நெருங்கியது. . .

இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
-S.அலாவுதீன்

32 Responses So Far:

Shameed said...

சகோதரியோ தொடரை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்

sabeer.abushahruk said...

அல்ஹம்துலில்லாஹ்!

வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட "சகோதரியே" தொடர் தொடங்கப்பட்டது சந்தோஷமளிக்கிறது.

வாழ்த்துகள் அலாவுதீன்.

(முன்னுரையில் சொல்லியிருப்பது உன் கதையா என் கதையா?)

"கடன் வாங்கலாம் வாங்க" தொடரைப்போல இதுவும் முழுமையாக நிறைவுற என் து ஆ!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோதரியே வருக! வருக!

//9 மாதங்கள் முடிந்து 10 வது மாதம் நெருங்கிய. . .// ரிசல்ட் அறிய தேட்டம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அருமையான தொடரை அழகாக துவக்கியுள்ள அலாவுதீன் காக்காவுக்கு வாழ்த்துக்களும், து'ஆவும்.

மார்க்கம் சொல்வது 'பெண் குழந்தை பிறந்தால் அல்லாஹ் பரக்கத் செய்வான்'

ஊரின் நிலை 'பெண் குழந்தை பிறந்தால் முகம் சுளித்து முக்காடு போட வைக்கிறது'

காரணம் பெண் பிள்ளைகளுக்கு நகை நட்டு, பணங்காசுகளுடன், வாழ்வின் பெரும் தொகையை (சம்பாதியத்தை) விழுங்கும் வீடும் கட்டிக்கொடுக்க வேண்டுமென்பதால் பெரும் செல்வந்தர்களைத்தவிர ஊரில் பெரும்பாண்மையான மக்கள் பெண் குழந்தை பிறந்து விட்டால் வாழ்வில் பெரும் தோல்வியையும், சோகத்தையும் ஒரு சேர அடைந்தது போல் ஆகிவிடுகின்ற‌ன‌ர். இந்த‌ நிலை எப்பொழுது மாறுமோ?

இத்த‌னை இட‌ர்க‌ளையும் தாண்டி திரும‌ண‌ம் முடித்துக்கொடுத்த‌ பின் நேற்று வ‌ந்த க‌ண‌வ‌ன் சொல் கேட்டு பெற்றோர்,உற்றாரை உத‌றித்த‌ள்ளும் பெண்க‌ளின் பொடுபோக்கு வேறு க‌தை.

இல‌குவான‌ வாழ்க்கையை க‌டின‌மாக்கி வைத்து விட்ட‌ன‌ர். என்ன‌த்தெ சொல்ல‌???

இப்னு அப்துல் ரஜாக் said...

ஆரம்பமே அசத்தல்.சகோதரி வளர்ந்து,நன்றாக வாழ வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வெகு நீண்ட நாடகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த "சகோதரியே" பலவேலைகளுக்கு நடுவே துவங்கிய S.அலாவுதீன் காக்கா அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

இன்ஷா அல்லாஹ் இனி வரும் நாட்களில் இந்த தொடர் நீளும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.

சைலன் ரீடர்ஸ் என்று நிறையபேர் எதிர்பார்த்ததும் பெண்களுக்கான தொடர் எப்போது வெளிவரும் என்பதும் தனி மின்னாடல் வழியாக ஏராளமான வேண்டுகோள்களும் தொடந்தற்கு பலன் பதிவில் - இன்ஷா அல்லாஹ் தொடரும் என்று எதிர்பார்ப்புடன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.THE QURAN 3:14.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரியே! சுபச்செய்தியோடு வருக! வருக! என.
வாழ்த்தி வரவேற்கின்றோம்.

ஆமா வீட்டுக்கு ஒரு பொம்புள பிள்ளையாவது வேணுமெண்டு எல்லாரும் கேட்கிறாங்களே அது யான்க?

ZAKIR HUSSAIN said...

நிறைய விசயங்களை "சகோதரியே" பதிவில் எதிர்பார்த்து இருப்பவர்களில் நானும் ஒருவன்.

//ஆமா வீட்டுக்கு ஒரு பொம்புள பிள்ளையாவது வேணுமெண்டு எல்லாரும் கேட்கிறாங்களே அது யான்க?//

வீட்டில் பெண்களை வீட்டு வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் நம் எழுதப்படாத சட்டங்கள். வீட்டில் வேலைக்கு ஆள் சேர்க்க முடியாமல் / வசதியில்லாமல் போகும் சூழ்நிலையில் 'பொம்பளைப்பிள்ளைனா அடக்க ஒடுக்கமா இருந்து வீட்டு வேலை பார்க்க மட்டும்தானே...என்று சொல்லும் ஆண்கள் வீட்டு தலைவர்களாக இருப்பதால்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.

சகோதரியே தொடர் தரும் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

தொடக்கம் அருமை. இனிதே தொடருங்கள்.

எனக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை ஒரு பெரிய மனிதரிடம் கூறினேன்.

அவர் சொன்னார். நல்லதப்பா. பெண்குழந்தை பிறந்தால் நமக்கு சீக்கிரம் புரமோஷன் ஆகும் என்றார்.

எப்படி என்று கேட்டேன். ஆண்பிள்ளைகளுக்கு சற்று தாமதமாக திருமணம் முடிப்போம். மாமனார் பதவியும், அப்பா பதவியும் கிடைக்க தாமதமாகும்.

பெண்பிள்ளை பிறந்தால் விரைவில் திருமணம் முடித்து கொடுத்து விடுவோம். மாமனார் பதவியும் , அப்பா பதவியும் விரைவில் கிடைத்துவிடும் என்றார்.

அவ்வாறே ஆனது. அல்லாஹ் பெரியவன்.

இப்போது பேத்திக்கும் மணமாகி கொள்ளுத்தாத்தா, புரமோஷனை- இந்த (சிறு?)வயதிலேயே- எதிர்பார்த்து இருக்கிறேன்.

இபுராஹீம் அன்சாரி

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாஹிர் காக்கா சொன்னது.

// வீட்டில் பெண்களை வீட்டு வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் நம் எழுதப்படாத சட்டங்கள்.//

என் தம்பிக்கு இரண்டாம் குழந்தை பிறக்கும் தருணத்தில். தம்பிமகன் மூத்தவன் வயது 6 ,அவனிடம் தங்கச்சி வேண்டுமா,தம்பி வேண்டுமா? என்று வீட்டி கேட்டார்களாம்.அதற்க்கு அவன் தங்கச்சிதான் வேண்டுமென்று சொல்லி இருக்கிறார்.

பக்கத்தில் இருந்த என் இரண்டாவது மகன் வயது 3 . அவன் சொன்னானாம். டே தம்பிதாண்டா தேவல என்றானாம்.

திரும்ப என் தம்பி மகன்.டே பொம்புள பிள்ளைதாண்டா அடுப்படியிலே சோறு கறி ஆக்க தேவப்படும் என்றானாம்.

அதற்க்கு என் இரண்டாவது மகன். டே கலியாண காரவூட்டுலே எல்லாம் பொம்புளையா சோறு ஆக்குறாஹ ஆம்புலதானே என்றதும்.

சட்டியில் உலை கொதிப்பது போல் வீடெல்லாம் சிரிப்பு உலைதானாம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// கொள்ளுத்தாத்தா, புரமோஷனை- இந்த (சிறு?)வயதிலேயே- எதிர்பார்த்து//

அப்ப சிறு வயசு என்று எத்தனை வயசு வரை சொல்லலாம்?
---------------------------------------------------------

// கலியாண காரவூட்டுலே எல்லாம் பொம்புளையா சோறு ஆக்குறாஹ ஆம்புலதானே//

அப்ப வரிசையா தம்பியா இருந்தால் காலமெல்லாம் கலியாணமும் கலரியும்!

Yasir said...

அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் அலாவுதீன் காக்காவிடம் இருந்து நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “சகோதரியே” தொடர் ஆரம்பித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி........இதன் உண்மையான பயன் நம் சமுதாயத்தை சென்றடைய அல்லாஹ் துணை செய்ய வேண்டும்....அல்லாஹ் உங்களுக்கு சிறந்த ஞானத்தை கொடுத்து இத்தொடர் வெற்றியாக முடிய துவா செய்கிறோம்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மிக ஆர்வத்துடன் படிக்க நேர்ந்தது "சகோதரியே" தொடர் ஆரம்பமே அமர்க்களமாக இருந்திருக்கும் பல சகோதர / சகோதரிகளுக்கு...இத்தொடரை பார்(டி)க்க அர்வமுட்டுங்கள் தங்கள் விட்டிலிருக்கும் சகோதரிகளுக்கு.

நிறைய நீண்ட தொடர் என்று எண்ணி பணி பளுவை சில நொடிகள் ஒதுக்கி படித்தவுடன் இவ்வளவு சிக்கிரம் முடிந்ததை எண்ணி மனம் வேதனையுற்றது

இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் தங்களின் நீண்ண்ண்ண்ண்ண்ண்ட தொடராக அமைய பலர் சார்பாக என்னுடைய வேண்டுகோள்....வாழ்த்துகள் சகோ.அலாவுதீன்.

Yasir said...

அல்ஹம்துல்லில்லாஹ்...நானும் இரண்டு பெண் குழந்தைகளுடனும் ஒரு ஆண் குழ்ந்தையுடனும் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டுள்ளேன்

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

சகோதரர் S.அலாவுதீன் அவர்களுக்கு, ஜசாக்கல்லாஹ் ஹைர.

அல்ஹம்துலில்லாஹ், எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு நல்ல தொடர் தருவதற்கு உங்களுக்கு, வல்லமை பொருந்திய அல்லாஹ் அருள்புரிவானாக.

பெண்களும் பயனடையும் வலைச் சோலையாக இந்த இடம் இருப்பதனால், பெண்களின் குற்றம் குறைகளில் மட்டும் நுணுக்கமாக கவனம் செல்லுத்தாமல், அவர்களின் நற்குணங்களையும், அறிவுரைகளையும் கலந்தே தொடர் இருக்கும் என்று நம்புகிறோம்.

பெண்களின் அழகான மனநிலைகளை சிதைப்பது செல்ஃபோன், இண்டெர்நெட் சைத்தானோடு தனிமை, சினிமா அப்புறம் குடும்பத்தையே சீரழிப்பது சீரியல்கள்.

இதையே எப்போதும் சொல்லிகிட்டு இருக்கிறார்கள் என்று வெறுத்தாலும் பரவாயில்லை, கரிங்கல்லை அடித்து அடித்துதான் நொறுக்க வேண்டும் என்ற நியதி இங்கேயும் பொருத்தமாக இருக்கும் ஆனால் கண்ணாடி போன்ற பெண்களின் மீது எறியாமல் இருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தவிதமான அவசியமற்ற விமர்சனங்கள் இல்லாமல் இனிதே தொடர வாழ்த்துகள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பினிய அலாவுதீன் காக்கா,

நீண்ட இடைவேலைக்கு பிறகு தொடர் பதிவு எழுதுவதற்கு ஜஸகல்லாஹ் ஹைரன்...

மார்க்க சிந்தனையுடன் இந்த பதிவு நிச்சயம் எல்லோரும் நல்ல பலன் தரும் என்று நம்பலாம். இன்ஷா அல்லாஹ்..

இத்தொடர் எழுத அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நற்சிந்தனையையும் தந்தருள்வானாக.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஏற்புரை : சகோதரர்கள் : ஹமீது, அர அல, சபீர், ஜஹபர் சாதிக், அபுஇபுறாஹிம், இபுறாஹீம் அன்சாரி
////Shameed சொன்னது…
சகோதரியே தொடரை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம் ///

///அர அல சொன்னது…
ஆரம்பமே அசத்தல்.சகோதரி வளர்ந்து,நன்றாக வாழ வாழ்த்துக்கள். ////
தங்களின் கருத்திற்கு நன்றி!

*****************************************
//// sabeer.abushahruk சொன்னது…
(முன்னுரையில் சொல்லியிருப்பது உன் கதையா என் கதையா?) ////

முன்னுரையில் உள்ளது நம்முடைய கதை!


*****************************************
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
சகோதரியே வருக! வருக!

//9 மாதங்கள் முடிந்து 10 வது மாதம் நெருங்கிய. . .// ரிசல்ட் அறிய தேட்டம்.

இன்ஷா அல்லாஹ் வரும் திங்களன்று ரிசல்ட் ...

*****************************************
///m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…
இன்ஷா அல்லாஹ் இனி வரும் நாட்களில் இந்த தொடர் நீளும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.////

முன்னுரை என்பதால் சுருக்கமாக உள்ளது. சகோதரியே! தொடரில் நிறைய விஷயங்கள் உள்ளதால்,இனி வரும் தொடர்கள் அனைத்தும் நீளும்... இன்ஷா அல்லாஹ்!

*****************************************

//// இபுராஹீம் அன்சாரி சொன்னது…

பெண்பிள்ளை பிறந்தால் விரைவில் திருமணம் முடித்து கொடுத்து விடுவோம். மாமனார் பதவியும் , அப்பா பதவியும் விரைவில் கிடைத்துவிடும் என்றார்.

அவ்வாறே ஆனது. அல்லாஹ் பெரியவன்.

இப்போது பேத்திக்கும் மணமாகி கொள்ளுத்தாத்தா, புரமோஷனை- இந்த (சிறு?)வயதிலேயே- எதிர்பார்த்து இருக்கிறேன்.////


கொள்ளுத்தாத்தா பதவி கிடைக்க இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
சகோ. ஜஹபர் சாதிக் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டிருக்கிறார்: :: M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

// கொள்ளுத்தாத்தா, புரமோஷனை- இந்த (சிறு?)வயதிலேயே- எதிர்பார்த்து//

அப்ப சிறு வயசு என்று எத்தனை வயசு வரை சொல்லலாம்?

*****************************************

கருத்திட்ட அன்புச்சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Anonymous said...

தம்பி M H J ,

// கொள்ளுத்தாத்தா, புரமோஷனை- இந்த (சிறு?)வயதிலேயே- எதிர்பார்த்து//

அப்ப சிறு வயசு என்று எத்தனை வயசு வரை சொல்லலாம்?

என்னைப்பொறுத்தவரை பூட்டன் ஆகிய பின்பும் சொல்லலாம். வயது மனதில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தம்பி சபீர்! சரியாச்சொல்றேனா?

இபுராஹீம் அன்சாரி

அலாவுதீன்.S. said...

ஏற்புரை: சகோதரர்கள் மு.செ.மு. நெய்னா முஹம்மது, யாசிர், அதிரை தென்றல் - இர்ஃபான், ஜாகிர், தாஜுதீன்:

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
மார்க்கம் சொல்வது 'பெண் குழந்தை பிறந்தால் அல்லாஹ் பரக்கத் செய்வான்'

ஊரின் நிலை 'பெண் குழந்தை பிறந்தால் முகம் சுளித்து முக்காடு போட வைக்கிறது'
இல‌குவான‌ வாழ்க்கையை க‌டின‌மாக்கி வைத்து விட்ட‌ன‌ர். என்ன‌த்தெ சொல்ல‌??? ///
அன்புச் சகோதரர் நெய்னா முஹம்மது: வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) சமுதாயத்தின் அவலத்தை எண்ணி தாங்கள் வேதனையில் வெளிப்படுத்தும் தங்களின் கருத்துக்களிலும், கட்டுரைகளிலும் எனக்கு அதிக உடன்பாடு உண்டு.

தங்களின் ஆதங்கங்கள் அனைத்தும் (குடும்பம், பெண்களின் நிலைகள்) இந்த தொடரில் தொடர்ந்து அலசப்படும் இன்ஷா அல்லாஹ்!

****************************************
////Yasir சொன்னது…
இதன் உண்மையான பயன் நம் சமுதாயத்தை சென்றடைய அல்லாஹ் துணை செய்ய வேண்டும்....அல்லாஹ் உங்களுக்கு சிறந்த ஞானத்தை கொடுத்து இத்தொடர் வெற்றியாக முடிய துவா செய்கிறோம் ////

அன்புச்சகோதரர் யாசிர்: தொடர் தொடர்ந்து வெளி வந்து நம் சமுதாயம் பயன் அடைவதற்கு தங்களின் துஆ அவசியம் வேண்டும். (அனைத்து சகோதரர்களின் துஆவையும் நான் ஆதரவு வைக்கிறேன்). தங்களின் மூன்று பிள்ளைகளும் ஸாலிஹான பிள்ளைகளாக வளர்வதற்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

*****************************************
////அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

நிறைய நீண்ட தொடர் என்று எண்ணி பணி பளுவை சில நொடிகள் ஒதுக்கி படித்தவுடன் இவ்வளவு சிக்கிரம் முடிந்ததை எண்ணி மனம் வேதனையுற்றது

இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் தங்களின் நீண்ண்ண்ண்ண்ண்ண்ட தொடராக அமைய பலர் சார்பாக என்னுடைய வேண்டுகோள்.... ////

அன்புச் சகோதரர் : இர்ஃபான் - அதிரை தென்றல் அவர்களுக்கு தங்களின் ஆதங்கம் புரிகிறது. அறிமுக உரையாக இருப்பதால் 3 பாராவோடு முடிந்து விட்டது. இனி வரும் காலங்களில் நீண்ட தொடராக அமையும் படிக்க நேரத்தை தாங்கள் ஒதுக்கும்படி இருக்கும். காரணம் நம் சமுதாயத்தின் ஆணிவேரே குடும்பம்தான் அந்தக் குடும்பத்தின் நிகழ்வுகள் அதிகமாகவே இருக்கிறது. தொடரும் பெரிதாகவே இருக்கும்.
*****************************************

/// ZAKIR HUSSAIN சொன்னது…
நிறைய விசயங்களை "சகோதரியே" பதிவில் எதிர்பார்த்து இருப்பவர்களில் நானும் ஒருவன். ///
அன்புச்சகோதரர் ஜாகிர்: நாம் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காக தொடரில் நிறைய விஷயங்களை இன்ஷா அல்லாஹ் தெளிவு படுத்த இருக்கிறேன்.

*****************************************
///தாஜுதீன் சொன்னது…

மார்க்க சிந்தனையுடன் இந்த பதிவு நிச்சயம் எல்லோரும் நல்ல பலன் தரும் என்று நம்பலாம். இன்ஷா அல்லாஹ்..

இத்தொடர் எழுத அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நற்சிந்தனையையும் தந்தருள்வானாக. ////

அன்புச் சகோதரர் தாஜுதீன் : வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) வல்ல அல்லாஹ்வின் அருளால் மார்க்க வரம்பிற்குள் நின்று பதிவு வெளிவரும். கருத்திற்கு நன்றி!

*****************************************

கருத்திட்டவர்களுக்கும் கருத்திட வாய்ப்பு இல்லாத சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

/////லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…

சகோதரியே! சுபச்செய்தியோடு வருக! வருக! என.
வாழ்த்தி வரவேற்கின்றோம்.

பக்கத்தில் இருந்த என் இரண்டாவது மகன் வயது 3 . அவன் சொன்னானாம். டே தம்பிதாண்டா தேவல என்றானாம்.

திரும்ப என் தம்பி மகன்.டே பொம்புள பிள்ளைதாண்டா அடுப்படியிலே சோறு கறி ஆக்க தேவப்படும் என்றானாம்.

அதற்க்கு என் இரண்டாவது மகன். டே கலியாண காரவூட்டுலே எல்லாம் பொம்புளையா சோறு ஆக்குறாஹ ஆம்புலதானே என்றதும்./////

அன்புச்சகேகாதரர் லெ.மு.செ.அபுபக்கர் அவர்களுக்கு வஅலைக்கும் ஸலாம்(வரஹ்) பிள்ளைகள் அவர்கள் பார்வையில் தெளிவாக இருக்கிறார்கள்.

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

////Ameena A. சொன்னது… அல்ஹம்துலில்லாஹ், எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு நல்ல தொடர் தருவதற்கு உங்களுக்கு, வல்லமை பொருந்திய அல்லாஹ் அருள்புரிவானாக.////

வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)
சகோதரி ஆமினா A. அவர்களுக்கு: தங்களின் துஆவுக்கு நன்றி!


//// பெண்களும் பயனடையும் வலைச் சோலையாக இந்த இடம் இருப்பதனால், பெண்களின் குற்றம் குறைகளில் மட்டும் நுணுக்கமாக கவனம் செல்லுத்தாமல், அவர்களின் நற்குணங்களையும், அறிவுரைகளையும் கலந்தே தொடர் இருக்கும் என்று நம்புகிறோம். ////

இந்தத் தொடர் சகோதரியின் பிரச்சனைகளை மட்டும் அலசப்போவது இல்லை. தலைப்பாக சகோதரி இருந்தாலும், சகோதரர்களின் குணநலன்கள் பற்றியும்; அலசும். சகோதார , சகோதரிகளின் அறியாமயைப் பற்றி விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.


///// பெண்களின் அழகான மனநிலைகளை சிதைப்பது செல்ஃபோன், இண்டெர்நெட் சைத்தானோடு தனிமை, சினிமா அப்புறம் குடும்பத்தையே சீரழிப்பது சீரியல்கள்.

இதையே எப்போதும் சொல்லிகிட்டு இருக்கிறார்கள் என்று வெறுத்தாலும் பரவாயில்லை, கரிங்கல்லை அடித்து அடித்துதான் நொறுக்க வேண்டும் என்ற நியதி இங்கேயும் பொருத்தமாக இருக்கும் ஆனால் கண்ணாடி போன்ற பெண்களின் மீது எறியாமல் இருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். /////

தீமைகளைப் பற்றி நிறைய தடவை வெளி வந்து இருந்தாலும், என்னுடைய பார்வையில், கேட்டவை, படித்தவை, நான் செய்த ஆய்வில் தெரிந்தவைகளை பொய் கலக்காமல் தொடரில் தெரியப்படுத்த இருக்கிறேன். சில நேரங்களில் நெருப்பின் தீங்கை தொட்டால் சுடும் என்பதை தெளிவுபடுத்தி அறியாமையை விளக்க நேரிடும். முடிந்தவரை பெண்களின் மனதை நோகடிக்காமல் மார்க்க வரம்புக்குள் நின்று நல்லபடியாக தொடர் தொடரும் - இன்ஷாஅல்லாஹ்!

//// எந்தவிதமான அவசியமற்ற விமர்சனங்கள் இல்லாமல் இனிதே தொடர வாழ்த்துகள். ////

அவசியமற்ற விமர்சனங்களையும், கருத்துக்களையும் நாங்கள் முடிந்தவரை தவிர்த்துக் கொள்வோம்.

தங்களின் கருத்திற்கும், ஆலோசனைக்கும், துஆவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

sabeer.abushahruk said...

தம்பி சபீர்! சரியாச்சொல்றேனா?
 
காக்கா,
சரியாக மட்டுமல்ல
செறிவாகவும் சொல்லியுள்ளீர்கள்
 
நெஞ்சில் உறுதியின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சகம் செய்வாரடி
கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி
என்று பாரதி சொன்னதுபோல
 
புகைக்கோ போதைக்கோ
தத்தமது
பொழுதுகளைப் பலியிட்டு
 
இல்லாத சுகம் தேடி
இளமையைத் தாரைவார்த்து
 
தீய தம்
நடத்தையால் 
நலம்கேட்டு
நலிந்தும் மெலிந்தும்
 
உழைக்க மனமின்றி
உலகுக்கும் பயனின்றி
வீணான காலங்களைக்
விரல்விட்டுக் கணக்கிடும்
வருடங்களல்ல வயது...
 
வாழும் வாழ்க்கைதனை
வகைவகையாய் வாழ்ந்துகொண்டு
வயதின் கணக்குகளில்
வண்ணவண்ண பொழுதடங்க
 
யாவரும் நலம் வாழ
நாமதில் வளம் சேர்க்க
அன்பை விதைத்து
அதையே விளைத்தெடுத்து

வாழும் மனிதருக்கு
வருடங்கள் ஓடிவிடும்
வயதுமட்டும் கூடாது

புன்னகை பூப்பதை
உதடுகள் உதறும்வரை
மனத்தின் நிலைவைத்தே
வயதைக் கணக்கிடுவர்!


 
 

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// பூட்டன் ஆகிய பின்பும் சொல்லலாம். வயது மனதில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.//

நிச்சயமாக காக்கா!
மனமும் உடம்பும் என்றும் இளமையாய் இருக்க துஆ.
--------------------------------------------------

//................
வாழும் மனிதருக்கு
வருடங்கள் ஓடிவிடும்
வயதுமட்டும் கூடாது//

என்றும் இளமைக்கு நற்கவிதை கவிகாக்கா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

கவிக் காக்காவின்
கைவிரல்கள் கவிதை பாடுமே!

என்ன ஆச்சுன்னு நினைத்த்துக் கொண்டிருந்த சூழலில்...

//யாவரும் நலம் வாழ
நாமதில் வளம் சேர்க்க
அன்பை விதைத்து
அதையே விளைத்தெடுத்து

வாழும் மனிதருக்கு
வருடங்கள் ஓடிவிடும்
வயதுமட்டும் கூடாது//

விரல் நுனி வரை கவிதை வீடு வரும் வரை காத்திருக்கிறதே !

Unknown said...

நன்மையான தொடர் இது பெண்மக்களை பற்றிய பார்வையை தெளிவாக்கும் என நம்புவோம்

அலாவுதீன்.S. said...

தம்பி சபீர்! சரியாச்சொல்றேனா?

சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய்!
***********
//// யாவரும் நலம் வாழ
நாமதில் வளம் சேர்க்க
அன்பை விதைத்து
அதையே விளைத்தெடுத்து ////

நிச்சயம் அன்பை
விதைத்தால்
அன்பையே
அறுவடை செய்யலாம்!

//// வாழும் மனிதருக்கு
வருடங்கள் ஓடிவிடும்
வயதுமட்டும் கூடாது ////

வாழும் மனிதர்களின்
நல்ல எண்ணங்களும்
மனதும்
இளமையானால்
வருடங்கள் ஓடினாலும்
வயது மட்டும் கூடாது!

அலாவுதீன்.S. said...

///harmys .abdul rahman சொன்னது…
நன்மையான தொடர் இது பெண்மக்களை பற்றிய பார்வையை தெளிவாக்கும் என நம்புவோம் ///

அன்புச்சகோதரர் அப்துல் ரஹ்மானுக்கு : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ; பெண் மக்களை மட்டுமல்லாமல் ஆண்மக்களைப் பற்றிய பார்வைகளும் தெளிவாகும் இன்ஷா அல்லாஹ்!

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

KALAM SHAICK ABDUL KADER said...

//கண்ணாடி போன்ற பெண்களின் மீது எறியாமல் இருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்//


மென்மையின் தன்மையினை
பெண்மையின் மையக்கருத்தாய்
பெண்மையே உண்மையாய்
நன்மையை நாடி வேண்டுவது
பெருமை! அருமை!!

//யாவரும் நலம் வாழ
நாமதில் வளம் சேர்க்க
அன்பை விதைத்து
அதையே விளைத்தெடுத்து//

உறவுகளெனும் மரத்தின் ஆணிவேர் அன்பு ஒன்றே என்பதே இக்கட்டுரை மற்றும் கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதையின் கருவாகும்.

அலாவுதீன்.S. said...

///அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…

// மென்மையின் தன்மையினை
பெண்மையின் மையக்கருத்தாய்
பெண்மையே உண்மையாய்
நன்மையை நாடி வேண்டுவது
பெருமை! அருமை!! //

// உறவுகளெனும் மரத்தின் ஆணிவேர் அன்பு ஒன்றே என்பதே இக்கட்டுரை மற்றும் கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதையின் கருவாகும்.// -///

சகோதரர் அபுல் கலாம் அவர்களுக்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

குடும்பம், உறவுகளின் ஆணிவேரே அன்புதான்.
குடும்ப நலனை முன்னிறுத்தியே இத்தொடர் வெளி வரும். இன்ஷா அல்லாஹ்!

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

//// Almasm சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் அலாவுதீன் காக்கா அவர்களே தாங்களின் துவக்கமே மிக நன்றாக உள்ளது 9 வது மாதம் முடிந்து 10வது மாதம் துவக்கத்தில் நிறுத்திவிட்டீர்கள் SSLC தேர்வு எழுதி விட்டு அதன் ரிசல்டுக்கு காத்திருப்பது போல் மணம் துடித்துக்கொண்டுள்ளது ஒரு நல்ல ரிசல்டை சொல்லுங்கள் நாங்கலெல்லாம் காத்திருகிறோம். இதன் உண்மையான பயன் நம் சமுதாயத்தை சென்றடைய அல்லாஹ் துணை செய்ய வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு சிறந்த ஞானத்தை கொடுத்து இத்தொடர் வெற்றியாக முடிய துவா செய்கிறோம்////
*****************************************************************

சகோ. Almasm : வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் வருகின்ற திங்களன்று ரிசல்ட் வரும்.

தங்களின் கருத்திற்கும்,
துஆவிற்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.