Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

துபாய் - ஓர் மந்திரச் சொல் ! 36

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2012 | , , , , ,


துபாய் எனும் மந்திர வார்த்தையைக் கேட்டதும் சிறு வயதில் பலர் மத்தியில் மகிழ்ச்சி பொங்கும் . நான் படிக்கும் பருவத்தில் என்னுடைய தோழரும் மற்றுமொரு மாற்று மத தோழனும் வகுப்பைக் கட்டடிக்க முயற்சிக்கும் பொழுது வலுவாக மாட்டிக்கொண்டார்கள் அப்பொழுது அந்த ஆசிரியை அவர்களை கண்டிக்கும் பொழுது நம் சமுதாய தோழனைப் பார்த்து "நீயெல்லாம் உருப்படவே மாட்டே உனக்கு என்ன கவலை படிக்காமலே துபாய் பக்கம் போயிடுவே ஆனால் இவன் இங்கேயே நன்கு படித்து விட்டு பின்பு நல்லதொரு வேலையைத் தேட வேண்டும் என்றொரு கட்டாயத்தில் இருக்கிறான்" என்று ஆசிரியையே இப்படிச் சொல்லி பலரும் அதிர்ச்சியுற்றோம் (ஆசிரியரை மட்டும் நான் இங்கே தவறாகக் கூறவில்லை பெற்றோர்களுக்கும் பங்குண்டு)

ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரகக் கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம்தான் துபாய். கடலில் மணலைக் கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி ஆடம்பரக் குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலக மகா கோடீசுவரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர். ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “துபாய் வேர்ல்ட்” என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன. 

ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ராஸ் அல் கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் தொடங்கிவிட்டதால்.

புதிய சட்டம் தீட்டினார்கள் கைலி அணிந்து செல்வது குற்றம் மீறினால் அபராதம் வசூலிக்க படுமென்று. பாஜாரில் ஒரு பக்கம் கைலி அணிந்து மானத்தோடு போனால் மறு பக்கம் ஒரு சில பெண்கள் அரை ஆடையுடன் செல்கிறார்கள் எங்கே போய்விட்டது இஸ்லாமிய கலாச்சாரம் யாருக்கு விதிக்கப்படுகிறது அபராதம் பாவம் பிழைப்பிற்காக வந்தவர்களிடத்திலா? மிகவும் கண்டிக்கதக்கது 

புத்தாண்டு கொண்டாட்டங்களும் சீரழிவும் :

இசை,நடனம்,மது,உணவு,கேளிக்கைகளில் நடந்தேறும் அத்துமீறல்கள் என்று பண்பாட்டுக்கு ஒவ்வாத காரியங்கள் வருடந்தோறும் மிகை பட்டுக்கொண்டே இருகின்றது என்ற உண்மையை சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலையுடன் நோக்குகின்றனர்.

புத்தாண்டுகொண்டாட்டங்களை ஜரூராக ஏற்பாடு செய்து ஒரே இரவில் பணத்தை மூட்டை,மூட்டையாக அள்ளும் நிறுவனங்கள் தனியாக வருபவருக்கு ஒரு மாதிரிக்கட்டணம்,பெண்களுடன் வருபவருக்கு கட்டணசலுகை என்று ஆசை வலை விரித்து காலாச்சார பேரழிவுக்கு சிகப்புக்கம்பளம் விரிக்கின்றது என்பது அச்சபடவைக்கும் உண்மை.ஆண்களும்,பெண்களும் சேர்ந்து குடித்து ஆட்டம் போட்டு கேளிக்கை நடத்தி,இளையவர்களைக் கெடுக்கும் பாதைக்கு அழைத்து செல்லும் பாப் கலாச்சாரம் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தில் ஒன்று என்றால் மிகை ஆகாது.

இத்தகைய அந்நிய கலாச்சார சீரழிவு நம் நாட்டுக்கு வேண்டாம் .அது நாளைய மன்னர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்ல வழிகோலாகிவிடும் என்று கதறும் கதறலை இந்த அமீரக மற்றும் இதர அரேபிய நாட்டு அரசாங்கம் வேடிக்கைப்பார்த்துகொண்டு வெறுமனே இருக்கின்றது.

புது வருட வினாடியை கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் குடித்துவிட்டு கேவலமான செயல்களை செய்யும் போது எங்கே போகிறது இந்த சமூகம் என என்ன வைக்கிறது"

இஸ்லாம் எனும் வாழ்வியல் கலாச்சாரத்தை-வாழ்க்கை நெறியை மக்கள் மனதில் புணரமைக்கும் வேலையை அவ்வப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இறைத்தூதர்கள் தம் மக்களிடம் செய்து வந்தனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இறைத்தூதர் வந்தார். அப்படி வந்தோரில்... ஒரு 25 இறைத்தூதர்களைப்பற்றியும் அவர்களின் வரலாற்று சம்பவங்களையும் கற்பதன் வாயிலாக இக்கால மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக வேண்டி, திருக்குர்ஆன் மூலம் இறைவனால் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

திருக்குர்ஆன் குறிப்பிடும் அந்த 25 இறைத்தூதர்கள்... ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், துல்கிப்லு, அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் ஸலாம் உண்டாவதாக) ஆகியோர்..!

இவர்கள் அனைவருக்கும் இறைவனால் அருளப்பட்ட வாழ்வியல் நெறி ஒன்றுதான் -ஒரேகலாச்சாரம்தான்- அது இஸ்லாம்..! இதைத்தான், இவர்கள் தம் மக்களுக்கும் போதித்து... தாமும் அதன்படியே வாழ்ந்தும் காட்டும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டு கண்கானிக்கப்பட்டார்கள்.

உலகில் மனித குலத்துக்கு எதிராக நாம் உருவாக்கி வைத்துள்ள நமது பல தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து மக்களின் வாழ்வியல் நெறியை செம்மை படுத்திக் கொண்டிருக்கிறது இஸ்லாம். பிற மனிதற்கு நன்மை பயக்கும் நல்ல கலாச்சாரங்களை இஸ்லாம் என்றுமே எதிர்த்ததுமில்லை; அழித்ததுமில்லை. எனவே, நல்ல கலாச்சாரங்களை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்வோம். நம்மிடம் இருக்கும் தீய கலாச்சாரங்களை விட்டொழிப்போம்.

ஆதலால், தீய கலாச்சாரங்களை தூக்கி தூர வீசி எறிந்து விட்டு நல்ல கலாச்சாரத்தை மட்டுமே நம் வாழ்வினில் கைக்கொள்வோம் ....இன்ஷா அல்லாஹ்...

- அதிரை தென்றல் (Irfan CMP)

36 Responses So Far:

Abdul Razik said...

தகுந்த நேரத்தில் சரியான கட்டுறை வெளியுட்டிருக்கிறீர்கள். துபாயில் வசிப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டும். வல்ல அல்லாஹ் தீமையான செயல்களை விட்டும் நம் அனைவரையும் பாதுகாத்து ஹலாலான வருமானத்தை தருவானாக ஆமீன்.

Abdul Razik
Dubai

Noor Mohamed said...

//"நீயெல்லாம் உருப்படவே மாட்டே உனக்கு என்ன கவலை படிக்காமலே துபாய் பக்கம் போயிடுவே அனால் இவன் இங்கேயே நன்கு படித்து விட்டு பின்பு நல்லதொரு வேலையைத் தேட வேண்டும் என்றொரு கட்டாயத்தில் இருக்கிறான்"//

இதே போன்று நம் கல்லூரியிலும் சில பேராசிரியர்கள் கூறியுள்ளார்கள். இவன் அதிராம்பட்டினத்தை சார்ந்தவன் எப்படியும் பணம் சம்பாதித்து விடுவான். ஆனால், உனக்கு படிப்புதான் சோறுபோடும் என்று கூறியுள்ளார்கள்.

//அரேபிய நாடுகள் நாங்கள் இஸ்லாமிய நாடுகள் என்று மார் தட்டிக்கொள்ளும் இவை அப்பெயர்க்கு தகுதியற்றவை என்றே குறிப்பிட வேண்டும்//

ஆம்! பணம் என்ற செல்வத்தை கொடுத்து அல்லாஹ் சோதனை செய்கிறான். அதன் வேதனையிலிருந்து அவரவர்கள் காப்பாற்றி கொள்ள வேண்டும்.

Shameed said...

நல்ல ஒரு ஆக்கம்

இது பற்றி அதிரையில் உள்ள இர்பான்கள் சிந்திக்கும்போது அமீரக சேக்குகள் சிந்திக்க மறந்ததேன் சோக்குகள் சேக்குகளுக்கு கண்ணை மறைத்துவிட்டதா ?

ZAKIR HUSSAIN said...

ஒழுங்கீனங்கள் அதிகரிக்கும் காலங்களில் வறுமை & நோய் ..இரண்டையும் கொண்டு கட்டுப்படுத்தப்படும் என நினைக்கிறேன்.

முன்பு 1970 களின் தொடக்கத்தில் துபாய் நோக்கி படையெடுத்தவர்களில் என் குடும்பத்தை சார்ந்தவர்கள் குறைந்தது 25 பேர்கள் இருக்கும். அப்போதெல்லாம் இந்த அளவு விபச்சாரமும் , மதுவும் புழக்கத்தில் இல்லை. இப்போது உள்ள வசதிகள் வாழ்க்கையை செம்மை படுத்த பயன்படுத்தாமல் சீரழிய பயன்படுத்துவதும்...அதை ஏதோ பெருமையான விசயம் என நினைப்பதும் வேதனைக்குறியது.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோ. இர்ஃபான் நல்லதொரு ஆக்கம்! வாழ்த்துக்கள்!
அறிவிப்பு:
இன்றைய கல்ப் (24.3.12) நியூஸில் படித்தது:

சார்ஜா மன்னர் அறிவிப்பு:
யாராவது இந்த அமீரகத்தின் நிலைப் பற்றி
தாழ்வாக பேசினால்
நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

மண்ணின் மைந்தர்களுக்கு ஓர் அறிவுரை:
யராவது இங்கு நடப்பதை பற்றி
பேசினாலும், தாழ்வாக பேசினாலும்
அவர்களிடம் சொல்லுங்கள்:
உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு
போங்கள் என்று!?????????????

இந்த தலைப்பின் ஊர் மன்னரும்
ஒரு தடவை!!!?????
பள்ளிவாசல் இருக்கு தொழ போறவன் போ!
ஹோட்டல் இருக்கு போறவன் போ!
எந்த கருத்தையும் சொல்லாமல்
அவனவன் அவன் வேலைகளைப் பாருங்கள்!!!
என்று சில வருடங்களுக்கு முன்னதாக
சொன்னதாக கேள்வி?????????????

மார்க்கம் இப்படி சொல்லியிருக்கிறது
இங்குள்ள நிலை மாற்றமாக இருக்கிறதே!
என்று யாரவாது சொன்னால்
உடன் நாடு கடத்தப்படுவார்கள்
என்று நினைக்கிறேன்.

அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்
என்றால் எங்கள் நாட்டில் பிழைக்க வந்து விட்டு
எங்களைப் பற்றியே குறை சொல்வீர்களா????????????
என்ன துணிச்சல் உங்களுக்கு??????????????????
பிடிக்கவில்லை என்றால் போய்விடுங்கள்
இந்த நாட்டிலிருந்து என்று சொல்லாமல்
சொல்கிறார்கள்.


இஸ்லமிய பெயர் தாங்கிகளாக இருக்கும்
அனைவருக்கும்
வல்ல அல்லாஹ்! நேர்வழியில்
செல்ல நல்லருள் புரியட்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

துபாய் !
இது மந்திரச் சொல் மட்டுமல்ல !
தந்திரச் சொல்லும் கூட !

இவ்வளவு நாளா என்னோட பாஸ் சொல்வதெல்லாம்... "யு ஆர் லைக் மை சன்..." இதுவரைக்கு "ஐ'ம் பையிங் ஃபார் யூ சேம் லைக் மை சன்" என்று ஒரு பில்டிங்கையும் வாங்கி தரவே இல்லைங்க !

ஸ்டில் !

Ebrahim Ansari said...

தம்பி இர்பான் அவர்களுக்கு, பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

இதோ இதையும் படியுங்கள்.


திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...


இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

--யாரோ எழுதி- சாதிக் வெளியிட்டு எப்போதோ படித்தது.

Yasir said...

அதிரை தென்றலின் ஆதங்க அனல் தெரிக்கும் கட்டுரை....வாழ்த்துக்கள் சகோதரரே......

கெட்டவிஷயங்கள் உலகில் நடந்து கொண்டேதான் இருக்கின்றது..அது நின்றுவிட்டால் நரகில் கொழந்துவிட்டு எரிவதற்க்கு எரிபொருள் கிடைக்காது அல்லாஹ் நம்மை காப்பானாக ஆமீன்....கட்டுப்படான இஸ்லாமிய நாடான சவுதியில் கூட தவறுகள் நடக்கின்றன,அநாச்சாரங்களுடன்,மனிதனை மனிதன் இழிவுபடுத்தி வேதனைபடுத்தும் சம்வங்களும் நடக்கின்றன,துபாயில் அது மிக குறைவு ஏன் மக்காவில் தவாப் செய்யும் போது கூட பிப்பாக்கெட் அடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன...ஆட்சியாளர்கள் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் அநாச்சாரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன்..தனிநபர் ஒழுக்கமும்,மனக்கட்டுப்பாடும் வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டிய பயிற்ச்சியை நாம் எடுத்துக்கொண்டு நம் சந்ததினருக்கும் சொல்லிக்கொடுப்பதன் மூலம் இம்மாதிரியான தவறுகளில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்

sabeer.abushahruk said...

தம்பி, இர்ஃபான் சி எம் ப்பி,
 
துபாயில் கலாச்சாரச் சீரழிவு தலைவிரித்தாடுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.  இம்மையின் பொருளாதார பேம்பாடு மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அரசால் எத்தகைய வழிகேட்டுக்கும் சுலபமாக மக்களை இட்டுச் செல்ல முடியும் என்பதற்கும் துபை ஒரு வாழும் உதாரணம்.
 
நான் 20 வருடங்கள் சவுதியில் வாழ்ந்துவிட்டு துபாய் வந்த புதிதில் எனக்கும் துபாயில் 20 வருடங்கள் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு நண்பருக்கும் இடையேயான சம்பாஷணையை இங்கே பகிர்வது தகும் என நினைக்கிறேன்:
 
அவர்: (பேச்சில் எக்காளத்தோடு) நீங்கள் சவுதில 20 வருடங்கள் எப்படி இருந்தீய? அங்கு அடிமைமாதிரியல்ல நடத்துகிறார்களாம்?
 
நான்: என்னைப் பொருத்தவரை சவுதியில்தான்…சவுதியில் மட்டும்தான் ஒரு முஸ்லிம் தன் குடும்பத்தோடு பாதுகாப்பாகவும் இஸ்லாமிய கலாச்சாரம் சீர்கெடாமலும் வாழ முடியும். அப்படித்தான் நான் வாழ்ந்தேன்.  என் குழந்தைகள் அங்குதான் பிறந்தனர், படித்தனர், வளர்ந்தனர்.
 
அவர்: இங்கே மாதிரி அங்கே எதுவுமே ஃப்ரீ கிடையாதாமே? எங்கே போவதாக இருந்தாலும் போலிஸ் கெடுபிடி அதிகமாமே?
 
நான்: எல்லாம் என்று நீங்கள் சொல்வது நிச்சயமாக மது, மாது மற்றும் சூதுவாகத்தான் இருக்க முடியும். அவை அங்கு தடைதான். அவற்றை போலிஸ் கெடுபிடியாக அல்ல, போலிஸ் பாதுகாப்பாகத்தான் நான் பார்க்கிறேன்.
 
அவர்: இங்கே பாருங்க, இந்த ஷேக் சூப்பராச் சொல்லிட்டார், “இதோ பள்ளியும் இருக்கு, பாரும் இருக்கு. உனக்கு எது வேணுமோ அதைத் தெரிவு செய்துகொள்” என்று சுதந்திரமா விட்டுவிட்டர். நம்ம இஷ்ட்டம்தான்.
 
நான்: என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.  ஊரில், தொழுகை நேரம் ஒன்றில் பாங்கு சொல்கிறார்கள். அப்போது உங்க உம்மா உங்களை, “ பள்ளிக்குப் போ” என்பார்களா அல்லது, “மகனே, பள்ளியும் இருக்கிறது, பரத்தையரும் போதை தரும் பாரும் இருக்கிறது. உனக்கு எது இஷ்ட்டமோ அதற்குப் போ” என்பார்களா? என்று கேட்டேன்.
 
அவர்: இதென்ன கேள்வி எந்த உம்மாவும் பள்ளிக்குத்தான் போகச்சொல்லும்
 
நான்: அரசனும் தன் நாட்டு மக்களுக்கு ஓர் அன்னையைப் போல்தான் இருக்க வேண்டும். தடுப்பதைத் தடுக்க வேண்டும். கொடுப்பதைக் கொடுக்க வேண்டும். சௌதி மன்னர் அன்னையைப் போல; உங்கள் ஷேக்ஹ்?
 
அவர்: (முகத்தில் ஈயாடவில்லை)

sabeer.abushahruk said...

தம்பி யாசிர்,

பகிரங்கமாக அநாச்சாரங்கள் செய்வதற்கும் ஒளிவுமறைவாகச் செய்வதற்கும் வித்தியாசம் இல்லையா?

இங்கு எல்லாம் அல்லோவ்ட். அங்கு, பிடிபட்டால் ஷரியத் சட்டங்கள் பாய்வதை யாராலும் தடுக்க முடியாது.

துபை வீதிகளில் நான் நடக்கும்போது எதிரே வரும் பெண்களைப் பார்த்து எத்தனை முறைதான் "அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தான் சொல்வது??

சவுதியில் நிமிர்ந்து நடக்கலாம் யாசிர். எல்லாம் முறைப்படி மூடப்பட்டு இருக்கும். அது புனித பூமி. இது?

sabeer.abushahruk said...

//அநாச்சாரங்களுடன்,மனிதனை மனிதன் இழிவுபடுத்தி வேதனைபடுத்தும் சம்வங்களும் நடக்கின்றன,துபாயில் அது மிக குறைவு+//

அது அந்தக் காலம் யாசிர். துபை மாறிப்போய் நாட்களாகின்றன. சோனாப்பூருக்கு கடைசியாக எப்போ போனீங்க? இதைபோல ஒரு லேபர் பட்டரையை சவுதியில் எங்குமே காண முடியாது.

தனிமனித குணங்களில் வேண்டுமானால் சவுதிகளின் திமிரைக் குறை சொல்லலாம். சட்ட திட்டங்களில் அல்ல.

Noor Mohamed said...

தம்பி யாசிர் அவர்களுக்கு சவூதி அனுபவம் கிடையாது. எனக்கோ துபை அனுவம் இல்லை.

சவுதியில் பாங்கு சொல்லப்பட்டு தொழுகை முடியும் வரை கடைகள் மூடப் படுகின்றன. வியாபாரங்கள் நிறுத்தப் படுகின்றன. மேலும் பாங்கும் இகாமத்தும் வெளியிலுள்ள ஒலிபெருக்கியில் சவுதியில் ஒலிக்கும். ஆனால் மற்ற அரபு நாடுகளில் பாங்கு மட்டுமே வெளி ஒலிபெருக்கியில் ஒலிக்கும்

Yasir said...

//தனிமனித குணங்களில் வேண்டுமானால் சவுதிகளின் திமிரைக் குறை சொல்லலாம்.//இதைத்தான் முக்கியமாக சொல்லவந்தேன்...தங்களின் மற்றும் நூர் முகமது காக்கா கருத்தை படித்தபிறகு என்னால் சில விசயங்களை அறிந்து கொள்ளமுடிந்தது...தாங்ஸ் காக்கா

sabeer.abushahruk said...

ஆமாம் யாசிர், தனி மனித குணங்களில் நான் பார்த்த வகையில் துபாய்க்கார ஷேக்குகள் உண்மையிலேயே மற்ற அரபிகளைவிட பழக இலகுவானவர்கள் என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மார்க்கத்தை மறந்து நாட்டின் வளர்ச்சிக்கு எதையும் அனுமதிக்கும் சேக்குகளின் மனம் மாற அதிரைத் தென்றல்களின் துஆ கபூலாகட்டும்.

ZAKIR HUSSAIN said...

நான் உம்ரா வந்த போது சவூதியில் 10 நாட்கள் தங்கியிருக்க முடிந்தது. அப்போது சபீரும், மச்சான் ஜலாலும் என்னை தமாம்/ராஸ்தனூரா/ரியாத் எல்லா ஊர்களுக்கும் அழைத்து சென்றனர்.ஒன்று அங்கு தெளிவானது தொழுகையை விடாமல் தொழுவதற்கு அங்குள்ள சூழ்நிலை சரியாக இருக்கிறது. பொதுவாக தொழுகை சரியான முறையில் அதன் எளிமையிலிருந்து வேறுபடாமால் தொழுவதற்கு உதவும் சூழ்நிலையை எந்த நாடு / அரசாங்கம் இந்த பூமியில் ஏற்படுத்துகிறதோ அதுவே பெரிய அமல்களுக்கு வேர்.

Meerashah Rafia said...

தன்னை தானே கட்டுப்படுத்திக்கொல்வதில் தலைசிறந்தவர்கள் அமீரகம் செல்லலாம்..

தன்னை நேர்வழிப்படுத்துவதில் சுற்றுச்சூழளிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்பவர்கள் சவூதி வரலாம்...


இங்கு வீடுகளில் ஜெபக்கூட்டதிற்கும்(சட்டப்படி அனுமதி கிடையாது) சாதாரண மக்கள் கூட பெண் பாதிரியார் போல் பர்தா அணிந்துதான் செல்ல பார்த்திருக்கின்றேன்.

சவூதி-
'பதின் பருவ வயது மகனை/மகளை பாதுகாப்பாக வளர்பதுபோல் சட்டம்.'
அமீரகம்-
'வாலிப வயது மகன்/மகளுக்கு சுயமாக முடிவெடுக்கும் உரிமை சட்டம்'

(அதாவது 18 வயசாயிடுச்சுனா பெற்றோரானாலும் கள்ள கல்யாணத்துக்கு காவல்துறையும் துணை நிக்கும் என்பதுபோல்)

இப்னு அப்துல் ரஜாக் said...

துபாயை எண்ணும்போதெல்லாம் எனக்கு காரூனின் செல்வமும்,அதனால் அவன் அடைந்த செருக்கும்,பிறகு அவனை அல்லாஹ் பூமியில் புதையுண்டு போக செய்த தண்டனையும் தான் ஞாபகம் வருகிறது.அல்லாஹ் நல்ல மன மாற்றத்தை அந்த மக்களுக்கு தருவானாக

habeb hb said...

அருமையான கட்டுரை; துபாய் ஒரு முஸ்லிம் நாடு என்று சொல்லுவது உண்மையான விசயம்மில்ல ஏன் என்றல் இங்கு நடக்கும் கலாச்சாரம் மார்கத்துக்கு புறமானது நீங்கள் எழுதிய கட்டுரை நூற்றுக்கு நூற் உண்மையானவை

habeb hb said...

அருமையான கட்டுரை; துபாய் ஒரு முஸ்லிம் நாடு என்று சொல்லுவது உண்மையான விசயம்மில்ல ஏன் என்றல் இங்கு நடக்கும் கலாச்சாரம் மார்கத்துக்கு புறமானது நீங்கள் எழுதிய கட்டுரை நூற்றுக்கு நூற் உண்மையானவை

அப்துல்மாலிக் said...

உணமைய சொல்லனும்னா முஸ்லிம் நாடுகளில் பெட்ரோல் இல்லாத ஒரே மாநிலம் (அபுதாபி தவிர்த்து), (7 மாநிலம் யூனிட்டி என்ற பெயர் மட்டுமே ஆனால் கணக்குவழக்கு தனித்தனியே), எனவே டிரேடிங் பிஸினெஸை நம்பிதான் இந்த மாநிலம் இருக்கு, உலக நாடுகளின் டிரேடிங்க் லே கொடிகட்டி பறக்கனும்னா பிஸினெஸ் செய்யவரும்வெளீநாட்டு முதலாளிகளுக்கு “எல்லாமே” கிடைக்கனும், அப்போதான் அவங்களின் வருகையும், முதலீடும் அதிகமாகும், இந்த ஒரே காரணத்துக்காகதான் மேற்கத்திய கலாச்சாரம் தலைவிரித்த்டாடுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை, ஷேக்குமார்களுக்கு இது தெரிந்திருந்தும் தடுக்க முயற்சி எடுக்கவில்லை, அல்லாஹ்தான் நேர்வழி காமிக்கனும்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

பிற சமுதாயத்தை யார் பின் பற்றி நடக்கிறார்களோ அவர்கள் நம்மை சார்ந்தவர்கள் இல்லை என்று நபி (ஸல்) அவர்களின் பொன் மொழியே சான்று பகிரும் போது.இவங்களைஎல்லாம் என்ன சொல்வது ?

அரபுகளின் அட்டூழியங்களை இறுக்கி க (கா) ட்டிய சகோ.இர்ஃபானுக்கு.அவிழ்த்து விட்ட வாழ்த்துக்கள்/

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி .... இது என்னுடைய முதல் பதிவென்பதால் ஒரு சில இடங்களில் பிழை இருக்கக்கூடும் அது பின்னுட்டங்களில் காண முடியும் என்று எண்ணினேன் அப்படி ஒன்றுமில்லை (அப்படியே இருந்தாலும் நெரியாளர்களால் சரி செய்து பின்பு பதிந்து இருப்பார்கள்) நன்றி கலந்த சந்தோஷம்

Ebrahim Ansari said...

தம்பி இர்பான் அவர்களுக்கு,

மீண்டும் பாராட்டுக்கள். நீங்கள் பின்னூட்டங்கள் எழுதும்போதே உங்களுக்குள் ஒரு எழுத்து ஆளுமை இருந்ததை பலர் கவனித்தார்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த கருப்பொருள் காலத்தின் தேவை. சிறப்புக்கும் சிந்தனைக்கும் உரிய இதுபோன்றவற்றை தருக!வஸ்ஸலாம்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இப்ராஹிம் காக்கா அவர்களுக்கு

மேலும் இங்கே பதிவு வ(வெ)ல்லுனர்கள் நிறைந்து இருக்க என்னையும் (ஒரு பதிவாலனாக கருதி) எழுத ஊக்கமளித்தமைக்கு நன்றி

என்னால் முடிந்தளவு பயன்/நற் பதிவுகளை தருகிறேன்.....இன்ஷா அல்லாஹ்

அப்துல்மாலிக் said...

எடிட்டராக்காவுக்கு குசும்புதான், வரலாறு காணாத வளர்ச்சி கண்ட துபாயை இப்படி 1960 லே எடுத்த படத்தை போட்டிருக்கீங்க, இதுலேயும் இதாண்டா துபாய் என்று பார்க்கும் மக்களையும் வந்து கஷ்டப்படாமல் உள்நாட்டுலே பொழைப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் உங்க உள்குத்து திறமையை கண்டு வியக்கிறேன்....

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தாமதமான கருத்திடலுக்கு மன்னிக்கவும். சகோ. இர்பான் தன் எழுத்தில் எம்மை யெல்லாம் இப்படி ஈர்பார்(ன்)(எனக்குதம்பியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையின் வழிவந்த உரிமையில் அழைக்கிறேன்)என்று அவர் பலமுறை கருத்திடும்போதே அது தெரிந்து ஆவலைதூண்டியது நிசம். அதுபோலவே தேர்ந்த எழுத்தாளர்ரைப்போல் மிகத்தெளிவாக எடுத்துக் கொண்ட கரு சிதையாமல் எழுதி யுள்ளார்! அதுவும் நம் சமுதாயதின் ஒரு கோடியில் உள்ள பிணியை அதனை போக்கவேண்டும் என்னும் கவலையை அக்கறையை பதிந்துள்ளார். அல்லாஹ் நம் சமுதாயத்தை நேர்வழிப்படுத்துவானாக. மேலும் இது போல் பல ஆக்கம் அவர் இயற்றவேண்டும் என்பது என்னை போல சாமானியனின் வேண்டுகோள்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

கருத்திட்டு ஊக்கப்படுத்திய சகோ.கிரௌன் காக்கா (எனக்கு இத்தளத்தில் அனைத்து சகோதரர்களுமே காக்காமார்கள் தான் எப்பொழுதுமே...) அவர்களுக்கு நன்றி...

இன்ஷா அல்லாஹ் நல்லதொரு ஆக்கமாக அமை(யும்)ய முயற்ச்சிக்கிறேன்

Yasir said...

//அனைத்து சகோதரர்களுமே காக்காமார்கள் தான் எப்பொழுதுமே// இப்பிடி சொல்லி உங்க வயசை குறைச்சிக்கலாம் என்று பார்கிறீங்களா :) நல்ல ஐடியாதான் : )

Meerashah Rafia said...

இர்பான் காக்கா...
நான் இங்கு இருக்கையில் நீங்களெல்லாம் அப்புடிச்சொல்லாப்புடாது.
இல்லாட்டி உங்களை ஆட்டத்துக்கு சேர்துக்கமாட்டோம் (கருசமணி திடல் கிரிக்கட்டுலதான்)..

ஜாக்கிரதை..
இங்க உள்ளவங்கலேல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தியே காலைலயும் மாலைளையும் தேத்தண்ணி குடிக்கிறமாதிரி வலைப்பூல வலை போட்டு இழுத்துவிற்றுவாங்க.. 2010 ஜூன்ல என்ன இப்படித்தான் இழுத்தாங்க.. அப்போ ஆரம்பிச்சதுதான், இன்றைவரைக்கும் பல வலைக்கடல் கடந்து பராக்கு பார்த்துக்கிட்டு வலைகடலில் உலகம் சுற்றும் வாலிபனா வளம் வரவச்சிட்டாங்க..

நீங்களும் வேட்டில முட்டைய கட்டிக்கிட்டு வற்றாத (நம்ம google மச்சினன் இருக்கின்றவரை) வலைக்கடளுக்குள்ள இறங்குங்க..

MSM Meerashah
(For you understanding-Harish/Noohu's Sachi Magan)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//MSM Meerashah//

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாங்க மருமகனே எங்கே ஆளே காணமுடியல..

எதுவும் பெருசா எழுதிகிட்டிருக்கியலா?

நலமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஜாக்கிரதை..
இங்க உள்ளவங்கலேல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தியே காலைலயும் மாலைளையும் தேத்தண்ணி குடிக்கிறமாதிரி வலைப்பூல வலை போட்டு இழுத்துவிற்றுவாங்க.. 2010 ஜூன்ல என்ன இப்படித்தான் இழுத்தாங்க.. //

என்ன மருமகனே !

தேங்காப் பாலில் தேத்தண்ணி போட்டு கொடுத்து இழுத்த மாதிரியில "ஜாக்கிரதை" போர்டு மாட்டிவிட்டுட்டியலே !!!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அஸ்ஸலாமு அழைக்கும்

\\இப்பிடி சொல்லி உங்க வயசை குறைச்சிக்கலாம் என்று பார்கிறீங்களா :) நல்ல ஐடியாதான் : ) //

நிஜமாகவே நான் அனைத்து காக்காமார்களை விட Young தான் அவர்கள் ஆக்கத்திலும் சரி அறிவுசார்ந்த சிந்தனையுலும் சரி

நான் சொல்லறது நூற்றுக்குநூறு சரி தானே சகோ யாசிர் "காக்கா"?

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

சகோ மீராஷா (காக்கா) அவர்களுக்கு நீ(ங்கள்) தானப்பா நான் யாரோ என்று நினைத்திருந்தேன்..அட அவனா நீ

வீட்டில் அனைவரும் நலமாப்பா ஸலாம் (அஸ்ஸலாமு அழைக்கும்) சொல்லவும்

இந்த வலைக்கடல் ஒன்னும் புதிதல்ல நான் ஏற்கனமே இறங்கி இப்பொழுது நடுக்கடலில் நீந்தி (நம்மூர் செக்கடி குளக்கரை போல) இக்கரையுலேர்ந்து அக்கரைக்கு போய்ட்டு தான் வருகிறேன் (பார்க்க adiraithenral.blogspot.com)

2010 ல் வந்த இரண்டாண்டு சீனியர் ஆகிற்றே ராகிங் ஒன்னும் செய்யாமலிருப்பதே நன்று சீனியார(கா)க்கா!

Meerashah Rafia said...

//அஸ்ஸலாமு அலைக்கும்,
வாங்க மருமகனே எங்கே ஆளே காணமுடியல..
எதுவும் பெருசா எழுதிகிட்டிருக்கியலா?//

வஅலைக்கும் முஸ்ஸலாம்..
பெருசா, பாகம், பாகமா எழுதுறதுக்கு நாம ஒன்னும் அலாவுதீன் காக்கா இல்ல..
இருந்தாலும் கால் கொட்டு போடுறேன்னு சொல்லிபுட்டு சொல்லாம கொள்ளாம கை கட்டு போட்டுபுட்டாங்க மாம்ஸ்.. அதனாலத்தான் ஒன்னும் புரியாம கண்ணு கட்டுது..யோசிச்சி கட்டுரைலாம் எழுதமுடியாம..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.