Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 14 29

ZAKIR HUSSAIN | June 04, 2012 | , , , , ,


முடிவு எடுக்கும் விசயம் என்பது நம் வாழ்க்கையின் இலக்கை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானது. சிலர் முடிவெடுப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து விட்டு பிறகு சில வருடம் ஆன பிறகு' அப்போதே செய்திருக்கனும்" என வருந்துபவர்களாத்தான் இருக்கிறார்கள்.


கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் முடிவெடுக்க சின்ன வயதிலிருந்து மனிதர்களை பழக்குவதில்லை.

சின்ன வயதை சார்ந்தவர்கள் தனியாக எதுவும் முடிவு எடுத்துவிட்டால் பெரியவர்களை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படலாம் என்று பயந்தே முடிவெடிடுப்பதில்லை. 
பிள்ளைகளை முடிவெடுக்க எப்படி பழக்க வேண்டும் என்று என் வாழ்க்கையில் நடந்த விசயம் ஒன்று உதாரணமாக சொல்லலாம். என் முதல்மகன் 11 வயதாக இருக்கும்போது பள்ளிக்கூடத்தில் டூர் போக இருப்பதாக சொல்லி அனுமதி கேட்டான். அது இங்கிருந்து ஏறக்குறைய 2000 கிலோ மீட்டர். விமானத்தில்தான் போக வேண்டும். நான் அவனிடம் சொன்னது " நீ ஏன் போக வேண்டும் என்று பாயின்ட், ஏன் போகக்கூடாது என்று 5 பாயின்ட் எழுதி வா" என்று சொன்னவுடன் போவதால் அதிகம் நன்மை இருப்பதாக எழுதிய அவன் , போகாமல் இருந்தால் ஏற்படும் நன்மையை அதிகம் எழுத வில்லை. கடைசியில் அவனிடமே முடிவெடுக்க சொல்லி போய் வந்தான்.  

பொதுவாக பசங்க ஊர் சுற்றத்தான் ஆசைப்படுவார்கள், எனவே உங்கள் மகனின் முடிவு ஒன்றும் அதிசயம் இல்லை என நினைக்கலாம். அதே மகன் தனது 12 வது வயதில் ஒரு அருவிக்கு பக்கத்தில் கேம்ப் போக ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யும்போது அதே மாதிரிதான் நான் சொன்னேன். பிறகு அவன் அந்த கேம்ப் போகவில்லை. இன்னும் இறுதி தேர்வுக்கு 2 மாதம் இருந்தும் அப்படி போகாததற்கு  அவன் சொன்ன காரணம் ' ரிவிசன் செய்ய நிறைய பாடம் இருக்கிறது"...ஆக முடிவெடுக்க நாம் பழக்குவதுடன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்களாகவே கற்றுக்கொள்ள நாம் வாய்ப்பு தருகிறோம்.

முடிவு எடுக்கப்படுவதற்க்கும் நேரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. சில சமயங்களில் எடுக்கப்படாத முடிவு நேரம் தாண்டி எடுத்தபிறகு எந்த பயனும் தராது. நான் சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன்..' முன்பு அங்கே மனை 25000 தான்...அப்பவே வாங்கிபோட்டிருக்கனும்- முன்பு எனக்கு நல்ல காலேஜில் சீட் கிடைத்தது, வீட்டில் உள்ள பெரியவங்கனாலே அங்கு போக முடியலெ- அந்த வியாபாரம் செய்ய நல்ல சான்ஸ் கிடைத்தது..இப்போ அவன் நல்லா செய்ரான்.. நான் வேடிக்கை பார்க்க வேண்டியாபோச்சு..இப்படி நிறைய பேர் புலம்ப காரணம் சரியான சமயத்தில் எடுக்காத முடிவுதான். சிலர் பெர்சனல் வாழ்க்கையில் சரியான முடிவெடுக்காமல் தொடர்ந்து "நொந்துபோன" வாழ்க்கை வாழ்வதும் பரிதாபத்துக்குறியது. நீங்கள் எந்த விதமான "மனச்சிறை"யில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாமல் இருந்தால் யாரும் உங்களுக்கு உதவி செய்து வெளிக் கொண்டுவர முடியாது. உங்களின் மனச்சிறை எது என்று நீங்கள்தான் அடையாளம் காட்ட வேண்டும்.

Time and Tide will not wait for anybody.

உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தூரம் உங்களுக்கு எது தெரியும் என்பதற்கும்- எதைசெய்கிறோம் என்பதற்கும் உள்ள தூரம்தான்.

உங்களின் பலம் எதிலும் இருக்கலாம் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை நிச்சயம் வசப்படும். எனக்கு அப்படி ஒன்றும் தெரியாதே என்று சொல்கிறீர்களா?... நான் உங்களை கேட்கிறேன்... நீங்கள் நல்லவர்தானே?--- அதை ஏன் உங்களின் பலமாக நினைக்க தோன்றவில்லை.  "அது சரி ...நல்லவன் எல்லாம் முன்னேரிட முடியுமா..அநியாயம் செய்கிறவன், கெட்டவன் கையிலதானே கோடிகள் புரள்கிறது'... எப்போது இப்படி நினைக்க ஆரம்பித்து விட்டீர்களோ.. உங்களுக்கு ஒரு "ஆன்டி-வைரஸ்-ஸ்கேன்: நிச்சயம் தேவை. நீங்கள் பார்த்த சின்ன வயது படங்களின் வில்லன் எல்லாம் செத்து மடிந்து விட்டாலும் உங்கள் மனதில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

முடிவெடுக்க பல பேர் தயங்க காரணம் நாம் எடுக்கும் முடிவு சரியாக இல்லாவிட்டால்?" என்ற எல்லாருக்கும் தோன்றும் கேள்விக்குறிதான். வாழ்க்கை என்பது கியாரன்டி கார்டுடன் இணைத்து வரும் எலக்டிரிக்கல்பொருள் அல்ல. ஒரு சமயம் கெட்டுப்போய்விட்டால் கடைக்காரரிடம் போய் நிற்க. வாழ்க்கை என்பது அடுத்த நிமிடத்தின் முடிச்சு எப்படி அகற்றப்படும் என்ற வித்தை இறைவன் ஒருவனிடம் மட்டும்தன்உள்ளது. தோல்வி என்பது கற்று வெற்றியடைய கட்டப்படும் உறுதியான படி.

சிலர் முடிவெடுத்ததுடன் தனது முடிவுக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்க்கொள்ளாமல் பழைய மாதிரியே இருந்து புதிய பயனை எதிர்பார்ப்பார்கள். இது இயற்கையின் விதிகளுக்கு முரண். ஊருக்கு வந்தபோது சில விசயம் கவனித்தேன். சிலர் கடை திறக்கும் நேரத்தை தனது இஷ்டத்துக்கு மாற்றிவைத்து கடை திறக்கிறார்கள். சில வெற்றியடைந்த நிறுவனங்களை பார்த்தால் சில விசயம் தெரியும். அவர்களின் கடை / பிஸ்னஸ் திறக்கும் நேரம் மிகவும் சார்ப் பன்ச்சுவாலிட்டி இருக்கும். தமிழ்நாட்டை பொருத்தவரை சரவணபவன் உணவகம் இதற்கு உதாரணம் சொல்லலாம். ஜப்பானில் டொயோட்டோ தொழிற்சாலையில் வேலையாட்கள் சரியான நேரத்துக்குள் வந்து லைட் எக்ஸர்சைசில் கலந்து கொண்டு வேலையை ஆரம்பிக்கிறார்கள். இவ்வளவு வெற்றியடைத்தும் ஏன் இவர்கள் இன்னும் இந்த விசயத்தை கடைபிடிக்க வேண்டும். அதுசரி நம்ம சின்ன ஊருக்கு எல்லாம் அது சரிப்படாது என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சின்ன முன்னேற்றம் வேண்டுமானால் கிடைக்கலாம். இந்த சின்ன விசயத்தில் ஒரு முடிவெடுத்து செயல் பட முடியாதவர்கள் . பெரிய முடிவுகள் என்று வரும்போது உடல்/மனம் இரண்டும் வளையாது.

நீங்கள் மட்டும்தான் உங்களுக்கு பிரச்சினை..அதன் தீர்வு உங்களுக்குள் தான் இருக்கிறது. மாற்றங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் ஒன்று மட்டும் மிக மிக நிதர்சனம். தனி மனித முன்னேற்றம் = தனி மனித முடிவு


எப்போது உங்களின் வாழ்க்கை / தொழில் சம்பந்தமான முடிவுகளில் "என்னை விட என் தகப்பன் / அண்ணன்/ மச்சான்/ மாமன் முடிவு எடுத்தால் சரி...எனக்கு ஒன்னும் தெரியாது" என்று சொல்கிறீர்களோ அப்போதே உங்களின் வாழ்க்கை உங்கள் கன்ட்ரோலை இழந்து விட்டது. மற்றும் உங்களைப்பற்றி இன்னும் சரியாக உங்களுக்கே மதிக்க தெரியவில்லை. இப்படி இருந்தால் உங்களை சுற்றி உள்ளவர்களும் உங்களை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.அப்படியே மதித்தாலும் அது போலியானது. 


வாழ்க்கையின் வெற்றிக்கு Manhood என்ற ஒரு விசயம் இருக்கிறது. இதைத்தான் "சரியான ஆம்பளையா இருந்தா...என்று" நம் ஊர் பக்கத்தில் பேசப்படும் விசயம். இது மீசை/ வெள்ளைக்கைலி /பெண்களிடம் வெட்டி பந்தா செய்யும் திறமை போன்ற விசயங்களில் இல்லை. . கொடுத்த வாக்குக்கும் / எடுத்த முடிவுக்கும் சத்தியம் தவறாமல் கட்டுப்பட்டு சாதித்து காட்டுவதுதான் அது.

முடிவெடுக்க தெரிந்தவர்கள் மட்டும்தான் தலைவர்கள் ஆக முடியும். நான் சொல்வது அரசியல் தலைவர்கள் அல்ல. உங்கள் குடும்பத்தில் கூட நீங்கள் முடிவெடுக்க தள்ளி போடுபவராக தெரிந்தால் மரியாதையின் மீட்டர் முள் கீழே இறங்குவதை பார்க்கலாம். [சிலர் வெளிநாட்டில் இருந்து வந்தும் தர்ஹாவில், Railway stationல், படுத்துகிடந்து விட்டு "காத்துக்காக' படுத்து கிடக்கிறேன் என சொல்வதின் behind the scene மரியாதை மீட்டர்முள் தான் காரணம்.]

நீங்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இருக்கிறீர்கள் என்பதை உங்களின் புதிய செயல்பாடு உலகுக்கு உணர்த்த வேண்டும். முடிவு எடுத்து விட்டேன் என்பது மைன்ட் சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமல்ல.

இதில் படிக்கும் மாணவர்கள் முக்கியம் பார்க்க வேண்டியது "இந்த வருடம் முக்கியமான பரீட்சை இருக்கிறது- எப்போதும்ம் போல் இந்த வருடம் மெத்தனமாக இருக்க முடியாது எனவே நான் நன்றாக படிக்க போகிறேன் என்று முடிவு எடுத்து விட்டு அடுத்த நாளே வழக்கம்போல் நண்பர்களுடன் வெட்டிப்பேச்சு, பாடல் / திரைப்படம் டவுன்லோட் போன்ற காசுக்கும் நேரத்துக்கும் ஆப்பு வைக்கும் வெட்டி வேலைகளில் ஈடுபட்டால் நல்ல மார்க் எடுத்து வெற்றிபெற முடியுமா?. தொழில் முன்னேற்றத்தை பொருத்தவரை நீங்கள் எடுத்த நல்ல முடிவுக்காக உங்களை எந்த அளவு தயார்படுத்தி / ஈடுபடுத்தி வருகிறீர்கள்?. 

அல்லது சொந்தமாக தொழில் தொடங்க நினைத்திருக்கிறீர்களா? அதற்காக உங்களின் செயல்பாடு என்ன?. பக்கத்தில் இருக்கும் சென்னைக்கும், திருச்சிக்கும் போவதற்கே மற்றவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தால் எப்போது வெற்றியடைவது?. இது உங்கள் வாழ்க்கை நீங்கள் மட்டும்தான் கதாநாயகன். செகேன்ட் ஹீரோ இல்லாதது உங்கள் சரித்திரம்.

-ZAKIR HUSSAIN

29 Responses So Far:

Shameed said...

முடிவு எடுப்பது பற்றி அருமையான முடிவு எடுத்துள்ளீர்கள்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் .

ஜாஹிர் காக்கா நலமா இருக்கிறீர்களா? சொல்லாம பறந்து போய் 14 .வது படிக்கட்டு கட்டிருக்கிறீர்கள்.நான் அந்த படியில் ஏறி போய் என்னையே ஜூம் செய்து பார்க்கும் அளவுக்கு உயர்தரமான லென்ஸாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

ட்டானிக்....
செலவில்லாமல் தரும் நீ
ஒரு தர்மாஸ்பத்திரி!

உற்சாகம்...
உருத்தாமல் ஏற்படுத்தும் நீ
ஒரு உத்தமராசா!

வழிகாட்டல்...
வருவோரை நேர்வழிப்படுத்தும் நீ
ஒரு கைகாட்டி!

ஏணி...
முன்னேற விரும்புபவருக்கு நீ
மேலும்மேலும் படிக்கட்டு!

Noor Mohamed said...

சோதனைகளையும் தாண்டி சாதனைகள் படைக்கும் சொல் சொல்லழகு பொருளழகு கொண்ட வழிக்காட்டலே சகோ. ஜாகிர் ஹுசைன் அவர்களின் படிக்கட்டுகள்.

தம்பி அவர்களே, தங்களின் ஏற்றங்களை தொடருங்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இலக்கை அடைய, முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை உயர்ந்த நல்லுதாரணங்களுடன் சொல்லப்பட்டதை பின்பற்றினால் ஏற்றம் பெறுவது நிச்சயம்.

அதிரை சித்திக் said...

சுவற்றில் மாட்டிவைத்த சில புகைப்படங்கள் ..

நம்மைப்பார்த்து சிரிப்பது போல் இருக்கும் ..

அதே போன்று ஜாகிரின் ..படிக்கட்டுக்கள் எனக்கென்று

பிரத்யோகமாக கடிதம் எழுதியது போன்று இருந்தது ..

இந்த தாக்கம் பெரும் அறிவு ஜீவிகளின் எழுத்தில் மட்டுமே காண முடியும்

வாழ்வின் அன்றாடம் பல தரப்பட்ட முடிவுகள் எடுப்போம் அதில் சில நம்

வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும் ..நாம் மட்டுமே ஹீரோ ..என்பது

நல்ல தன்னம்பிக்கையை ஊட்டும் விஷயம் ..இப்படி எத்தனை கூறிக்கொண்டே

போகலாம் ,,முத்தாய்ப்பாய் ஒரு விஷயம் கூறி முடிக்கிறேன் ..ஒரு டூர் விசயமாக

மகனிடம் 5 சாதகமான கருத்து 5 அதற்கு நேர் மாறான கருத்து கேட்ட விதம் அற்புதம்

மகனுக்கு நல்ல பயிற்சி ...12 வயது மகனுக்கு MBA வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டிர்கள்

சபாஸ் ..இன்னும் எவ்வளவோ எழுத ஆசை ..அதனை அசை போட்டுக்கொள்ள கலந்துரையாடல்

நம்மை பயக்கும் ..வாழ்வில் வாய்பிருந்தால் பாப்போம் ..,

ZAKIR HUSSAIN said...

To Bro LMS Abubakar,

//சொல்லாம பறந்து போய்//

சொன்னேன் என்று நினைக்கிறேன். வந்தது சில மணிக்கணக்குதான் என்பதால் "பயணம் சொல்லி" வரவில்லை. [ ஏன் மற்றவர்களுக்கு ரஸ்தாலி / பால் வாங்கும் இக்கட்டு? ]

Can you send me your email..i will send your photo

சேக்கனா M. நிஜாம் said...

// தனி மனித முன்னேற்றம் = தனி மனித முடிவு //

// தோல்வி என்பது கற்று வெற்றியடைய கட்டப்படும் உறுதியான படி.//

// இது உங்கள் வாழ்க்கை நீங்கள் மட்டும்தான் கதாநாயகன். செகேன்ட் ஹீரோ இல்லாதது உங்கள் சரித்திரம்.//

வாழ்த்துகள் சகோ. ஜாகிர்

இச்சொற்கள் கண்டிப்பாக சிந்தனையைத் தூண்டும்......

இப்னு அப்துல் ரஜாக் said...

வழக்கம் போல,ஊக்கம் தரும் எனர்ஜி ட்ரின்க்
படிக்க படிக்க உற்சாகம்,உந்து சக்தி
இன்ஷா அல்லாஹ்
படித்து செயல்படுத்தினால் வெற்றி !

ஜாகிர் காக்காவுக்கு ஒரு வேண்டுகோள்.
கேள்(ASK) இந்த தலைப்பை வைத்து ஒரு ஊக்கம் தரும் ஆக்கம் தர முடியுமா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல ஊட்டச்சத்து..

// [ சிலர் வெளிநாட்டில் இருந்து வந்தும் தர்ஹாவில், Railway stationல், படுத்துகிடந்து விட்டு "காத்துக்காக' படுத்து கிடக்கிறேன் என சொல்வதின் behind the scene மரியாதை மீட்டர்முள் தான் காரணம்.].//

ஹஹ்ஹா... மரியாதை மீட்டர்முள் வார்த்தை சூப்பர் காக்கா... முள் குத்தப்படவேண்டியவர்களுக்கு குத்தினால் சரி...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தேவையற்ற பயம் தான் நம் வாழ்வில் பெரும்பகுதியை முன்னேற விடாமல் முடக்கிப்போட்டுவிடுகிறது.

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. நம் ஊரில் சொந்த கடை என்பதற்காக இஷ்ட்டத்திற்கு திறக்கிறார்கள். கலியாண கார வீட்டில் காலைப்பசியாற லேட்டானாலும் அது முடிந்து வந்து தான் திறக்கிறார்கள். அந்த காலைப்பசியாறவால் அவருக்கு ஒரு நூறு ரூபாய் மிச்சமாகி இருக்கலாம். ஆனால் கடையை காலம் தாழ்த்தி திறந்ததால் வாடிக்கையாளர்கள் மூலம் கிடைக்க இருந்த ஐநூறு ரூபாய் லாபம் கிடைக்காமல் போனது பற்றி கடைக்கார காக்காவுக்கு ஒன்றும் விளங்குவதில்லை.

கீழக்கரையைச்சார்ந்த ஒரு வசதிவாய்ப்புள்ள ஒரு பெரியவர் சென்னை மூர் தெருவில் ஒரு எஸ்.டி.டி. டெலிபோன் பூத் வைத்திருந்தார். அவர் ஞாயிற்றுக்கிழமை கூட திறந்து வைத்து உட்கார்ந்திருப்பார். ஒரு தடவை நான் அவரிடம் "என்னா பாய் லீவு நாளையிலெ கூட கடையை திறந்து வைத்திருக்கிறீர்களே?" என கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் "இந்த கடைக்கு எப்பொழுது சென்றாலும் அது திற‌ந்திருக்கும் என்ற‌ ம‌ன‌நிலையை வாடிக்கையாள‌ர்க‌ள்/பொதும‌க்க‌ளுக்கு முத‌லில் ஏற்ப‌டுத்த‌ வேண்டும்" என்ற‌ கார‌ணத்திற்காக‌வே லீவு நாட்க‌ளில் கூட‌ திற‌ந்து வைப்ப‌தாக‌ சொன்னார்.

ஒரு நேர‌த்துலெ காட்டுப்ப‌ள்ளி, க‌ட‌ற்க‌ரைத்தெரு ச‌ந்தனக்கூட்டை (கூட்ராவு) விடிய,விடிய பார்த்து விட்டு மாணவச்செல்வங்கள் காலையில் அசந்து தூங்குவார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ விலைம‌திப்ப‌ற்ற‌ க‌ல்விச்செல்வ‌த்தை த‌ரும் ந‌ம‌தூர் ப‌ள்ளிக‌ள் கூட விட்ட‌ உள்ளூர் (அர‌சு) விடுமுறைகளை இப்பொழுது எண்ணினாலும் சிரிப்புட‌ன் சிந்திக்க‌வும் வைக்கிற‌து.

என்னெத்தெ சொல்ற‌து காக்கா ஆரம்பத்லேர்ந்து ந‌ம்ம‌ ஊரு வ‌ளர்ப்பு ச‌ரியில்லே. அதனுடைய‌ தாக்க‌ம் இன்றும் சொந்த‌ க‌டையை வெள்ளனமே திற‌ப்ப‌தில் கூட‌ அச‌ட்டை செய்ய‌ வைத்து விடுகிற‌து. நாமெல்லாம் வெளிநாட்டில் இருந்து ச‌ம்பாதிப்ப‌தால் அவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது அல்ல‌து நினைக்கும் பொழுது ஏதோ க‌ற்கால‌த்திற்கே சென்று விட்ட‌து போல் ஒரே ப்பீலிங்கா இருப்பது என்னவோ நெச‌ம் தான் காக்கா........

காக்கா உங்க‌ள் ப‌டிக்க‌ட்டுக‌ள் பெட்ரோனாஸ் இர‌ட்டைக்கோபுர‌த்தையும் தாண்டி வ‌ர‌ வாழ்த்துக்க‌ள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஊரில் சொந்த கடையிலேயே தனி நபரின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் தறிகெட்டு ஓடும் பொழுது அரசுத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் அசட்டை, பொடுபோக்கு, அலட்சியம், அநியாய,அட்டூழியங்களை இங்கு பட்டியலிட்டு சொல்லிமாளாது.....எழுதி தீராது....

இவற்றை எல்லாம் மனதில் வைத்துத்தான் "என்னை நானே எங்கோ நாடு கடத்தி சொந்த செலவிலேயே அகதியாகிக்கொள்கிறேன்" என்ற நிலையை ஏற்படுத்தி விட்டனர்.

Yasir said...

மாஷா அல்லாஹ்......வார்த்தையில்லை உங்கள் எழுத்து,கருத்து திறமையை மெச்ச....கவிக்காக்கா சொன்னதுபோல்..இலவசமாக கிடைக்கும் மனதுக்கு சக்தி தரும் மாமருந்து உங்கள் ஆக்கம்....

//ஒரு சமயம் கெட்டுப்போய்விட்டால் கடைக்காரரிடம் போய் நிற்க. வாழ்க்கை என்பது அடுத்த நிமிடத்தின் முடிச்சு எப்படி அகற்றப்படும் என்ற வித்தை இறைவன் ஒருவனிடம் மட்டும்தன்உள்ளது. /// அதனை இழந்துவிடாமல் இறைவன் தரும் வாய்ப்புக்காளை பற்றி வாழ வேண்டியது நம் அனைவரின் கடமை

அப்துல்மாலிக் said...

வாழ்வின் எதிர்க்காலத்தையும் அவன் சரித்திரத்தை புரட்டிப்போடும் நிலமையையும் அவன் எடுக்கும் முடிவே மிக முக்கிய காரணம் (அதிஷ்டம் ஒரு தடவைதான் கதவை தட்டும் என்பார்கள்) அந்த அதிஷ்டம் தான் தான் எடுக்கும் முடிவு.. அருமையான விளக்கம் காக்கா, நிறைய தெளிவு கிடைத்த்து.. நன்றி பகிர்வுக்கு

ZAKIR HUSSAIN said...

To Bro Ara Ala..
//கேள்(ASK) இந்த தலைப்பை வைத்து ஒரு ஊக்கம் தரும் ஆக்கம் தர முடியுமா? //

I have already written on this [not as a episode of article, but a part of it] . i will insert / edit the related writing to an appropriate "படிக்கட்டுகள்".

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி ஜாகிர்,

எழுத்தாளர்கள் இருவகைப்படுவார்கள்.

வாழ்வில் தாங்கள் சுயமாக அனுபவித்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்பவர்கள்.

வாழ்வில் தாங்கள் காணும் காட்சிகளையும் கேட்டவைகளையும் வைத்து அவற்றை பகிர்பவர்கள்.

உங்கள் மகனின் அனுபவ சம்பவத்தை தவிர மற்றவை நீங்கள் உலகைப்பார்த்து உணர்ந்தவையே என்பது நான் நினைப்பது. இவற்றை சுவைபடவும், சுருக்கென்றும் கூறுவது உங்களின் கைகளுக்கே வந்த வழக்கமான கலை.

வாழ்வின் திருப்பங்களில் எடுக்கும் முடிவு ஒருவனது வாழ்வையே திருப்பிவிடும் என்பதை மிக நேர்த்தியாக – எச்சரிக்கை செய்யும் வண்ணம் உணர்த்தி இருப்பது செறிவாக இருக்கிறது.

நமது ஊரில் WORKING HOURS – WORKOUT ஆகவில்லை.

காரணம் மாப்பிள்ளை கூடப் பசியாற, நிச்சயம் செய்ய, மவுத்துக்கு போக, கலரியில் முன்னின்று சஹன் பறத்த, பஞ்சாயத்துப்பேச, இன்னும் அரசியல் , போலீஸ் ஸ்டேசனில் ஜாமீன் எடுக்க, “மனுஷ மக்க இல்லாத” ராத்தாவீட்டுத் தோப்பில் தேங்காய் வெட்ட, இப்படியெல்லாம் உள்ளூரில் தொழில்வைத்து இருப்பவர்கள் நேரம் ஒதுக்கவேண்டியது இருக்கிறது. இதுவும்போக தஞ்சாவூர் ஆஸ்பத்திரி, திங்கள் கிழமை சந்தை, வழிதெரியாத மச்சானை “இறக்கிக்கொண்டு”வர திருச்சி அல்லது சென்னை எல்லாமே இருக்கிறது. இப்படி எல்லாம் நேர விரயம் செய்துவிட்டு உள்ளூர் தொழில் சரியாகவரவில்லை என்று குறைபாடுவேறு.

திருந்தவேண்டியது நிறைய. திருத்துவதில் உங்களின் தொடர் ஆக்கங்கள் பெரும் பணியாற்றி துணை நிற்கும்.

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

//காரணம் மாப்பிள்ளை கூடப் பசியாற, நிச்சயம் செய்ய, .........//

இந்த எழுத்து நடைதான் நமக்குள் "ஸ்டேஸன் சரியாக எடுக்க" காரணம் என நினைக்கிறேன்."முடிவு எடுக்கும் விசயம் யாதெனில்.....' என்று நான் ஆரம்பித்தால் " இவனும் பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டான்யா...என்ர்று வாசகர்கள் தெறித்து ஒடி விடலாம்.

நீங்கள் சொன்ன காரணம் ஊரைப்பொருத்தவரை உண்மைதான் என்றாலும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை ஊரில் உழைப்பவர்கள் சரியாக தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்பது என் ஆசை. பெரும்பாலும் உணர்ச்சி பூர்வமாக முடிவெடுத்து பிறகு கஷ்டப்படுபவர்களேயே நான் அதிகம் காண்கிறேன்.

To Brother MSM Naina Mohamed,

//"என்னா பாய் லீவு நாளையிலெ கூட கடையை திறந்து வைத்திருக்கிறீர்களே?" என கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் "இந்த கடைக்கு எப்பொழுது சென்றாலும் அது திற‌ந்திருக்கும் என்ற‌ ம‌ன‌நிலையை வாடிக்கையாள‌ர்க‌ள்/பொதும‌க்க‌ளுக்கு முத‌லில் ஏற்ப‌டுத்த‌ வேண்டும்" என்ற‌ கார‌ணத்திற்காக‌வே லீவு நாட்க‌ளில் கூட‌ திற‌ந்து வைப்ப‌தாக‌ சொன்னார்//

நான் சொல்ல வந்த விசயத்தை நீங்கள் அழகாக எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொன்ன மாதிரி நாம் வெளிநாடுகளில் கற்ற இந்த நல்ல விசயத்தை சொன்னால் " இதெல்லாம் இங்கு முடியாது" என்ற மனப்பக்குவத்தில் நம்மை பார்க்கிறார்கள். அந்த டெலிபோன் பூத் வைத்திருக்கும் பெரியவர் , வைரமுத்து கவிதை தொகுப்பான ' இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்" இல் வரும் " பாய் ..படித்தவர்" என்ற கவிதையை ஞாபகப்படுத்தினார். நேரம் கிடைத்தால் / இதுவரை படிக்காமல் இருந்தால் தேடிப்பிடித்து படிக்க உகந்தது ' இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்"

To Brother Tuan Haji Shahul,

சுருக்கமாக கமென்ட் எழுத சமீபத்தில் எதுவும் கோர்ஸ் போயிருந்தீங்களா?

To Brother Adirai Siddik,

//எனக்கென்று பிரத்யோகமாக கடிதம் எழுதியது போன்று இருந்தது ..//

எனக்கு கிடைத்த வாழ்த்துக்களில் டாப் 10 களில் சேர வேன்டியது..என்றாலும் எனக்கு தடையற்ற சிந்தனைகளை தந்து என்னை இயக்கும் எஜமான் இறைவனே. நான் / நாம் அவனிடம் நிதம் பிச்சை கேட்கும் அடிமை. எல்லாப்புகழும் அவன் ஒருவனுக்கே.

நன்றி...நான் எழுதும் விசயங்களை படித்து வரும் சகோதர்கள் லெ.மு.செ அபூபக்கர். சேக்கனா நிஜாம் [ உங்கள் புத்தகம் ரெடியா?] அர அல / தாஜுதீன் , யாசிர் [ உங்கள் தகப்பனாரை ஊரில் பார்த்தேன்] அப்துல் மாலிக். தொலை பேசியில் அழைத்து பேசிய தமிழ் வித்தகர் கிரவுன்.

அதிரை என்.ஷஃபாத் said...

மிகவும் பயனுள்ள கட்டுரை. முடிவு எடுக்கும் திறனும், எடுத்த முடிவில் தளர்ந்துவிடாது நிலைத்திருக்கும் ஆற்றலும் வாய்க்கப்பெற்றால் வெற்றி என்பது, இன்ஷா அல்லாஹ், கைக்கு எட்டும் கனியே!!

இப்னு அப்துல் ரஜாக் said...

//I have already written on this [not as a episode of article, but a part of it] . i will insert / edit the related writing to an appropriate "படிக்கட்டுகள்".//

கவனிக்கவில்லை,மன்னிக்கவும்.

நன்றி காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்போதுதான் மலைகள் (நேர்த்திக்கடன் அல்ல) நிறைய எறிவிட்டு வந்தோம் என்று இந்த படிக்கட்டில் லேட்டாக ஏறலாம் என்று என் முடிவை தள்ளிப் போடவில்லை... காரணம் கருவே அதுவாக இருப்பது மட்டுமல்ல, அசத்தல் காக்காவின் பதிவுகள் உடனடியாக 'படி'த்(தேன்)ததும் தான் மற்றப் பக்கம் பார்வை செல்லும்...

"தள்ளிப் போடுவதால்" சில இடங்களில் நம்மை "கிள்ளிப் போடுவதை" உணர்ந்திருக்கிறேன்... சித்தீக் காக்கா சொன்னது போன்றே நானும் சொல்ல நினைத்தேன்... (நான் மலைகளிலிருந்து இறங்கி வர நேரமாகிவிட்டது)..

---------

இதனை வாசித்ததும் என்னோட மகனிடம் அசத்தல் காக்கா கேட்டு வைத்ததுபோல் சென்று வந்த டூர் பற்றி பிடித்தது எது / பிடிக்காதது எது என்று இதே கேள்வியை கேட்டேன்...

அவனுடைய பதில்... (!!!) ஒரு பதிவாக போட்டுடலாமா ?!

Yasir said...

// [ உங்கள் தகப்பனாரை ஊரில் பார்த்தேன்]// சந்தோஷம் காக்கா..எப்படி இருக்கிறார்கள்

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
To Brother Tuan Haji Shahul,

//சுருக்கமாக கமென்ட் எழுத சமீபத்தில் எதுவும் கோர்ஸ் போயிருந்தீங்களா?//

தொலை பேசியில் வாயிலாக பல விசயங்களும் நீண்ட நேரம் பேசிக்கொள்வதால் பின்னுட்டங்கள் சுருங்கி விட்டன .இதற்காக கோர்ஸ் ஏதும் போகவில்லை என்பதனை கோரசாக தெரிவித்துக்கொள்கின்றேன்

ZAKIR HUSSAIN said...

// [ உங்கள் தகப்பனாரை ஊரில் பார்த்தேன்]// சந்தோஷம் காக்கா..எப்படி இருக்கிறார்கள் ] //

அதே ஜோவியல் டைப்... ... எங்கள் அண்ணனிடம் பேசினார்கள். அதே பாசிடிவ் அப்ரோச். எப்போதும் இளமையான , உற்சாகமான பேச்சுடன்.

sabeer.abushahruk said...

//அதே ஜோவியல் டைப்... ... எங்கள் அண்ணனிடம் பேசினார்கள். அதே பாசிடிவ் அப்ரோச். எப்போதும் இளமையான , உற்சாகமான பேச்சுடன்.//



யாசிரை விடவா?

Yasir said...

//யாசிரை விடவா?/// காக்கா..........

N.A.Shahul Hameed said...

Dear Zakhir,
Assalamu Alaikkum!
I have been reading all your contributions regularly on the very first day of its posting. Amazing. The lucid style, punch points, clear thought and uncompromising approach makes me feel extremely happy. If I congratulate you, that means I congratulate myself. Hahahahah. So I say with all humility "Jazakkallah Hairan".
I guess you have inherited the vast knowledge and wisdom from my respected uncle, your Dad.
Although the concept is not new to me when I go through them I have a fresh feeling of reading it for the first time.
My request is that you can refer to Robin Sharma's "Extraordinary Leadership" and his "Greatness Guide" for enlightening this article.
I believe you would have read these materials if so I expect more on "Pushing the safe zone".
Wassalam
N.A.Shahul Hameed

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

Terima Kasih Abang N.A.S,

I am writing based on my experiences, training i have gone through in my Career & Life. So far i never wrote matters from any books for this episodes, BUT in future i have plans to write.

I have never come a cross those books you have mentioned. But i have heared about Deepak Chopra. If you have any books of him, send to me please.

ca'm o'n ban

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.