Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? - அலசல் தொடர் 2 20

அதிரைநிருபர் பதிப்பகம் | June 03, 2012 | , , ,

அலசல் தொடர் : இரண்டு.

திருவள்ளுவர் தொட்டு உலகப்புகழ்பெற்ற அறிஞர்களாக இருந்தாலும் சரி பிறப்பால் அவர்கள் பிராமணர்களாக இல்லாவிட்டால் அவர்கள் தொடக்கூடத்தகாதவர்கள் என்கிற கருத்தை பறைசாற்றும் மனுநீதியின் மண்ணாய்ப்போன நீதியை முன் அத்தியாயத்தில் கண்டோம்.

அறிஞர்கள் மட்டுமல்ல அரசர்களாக இருந்தாலும் கூட அவர்களும் தீண்டத்தகாதவர்களே. இததகைய அரசர்களுக்கு சூத்திர அரசர்கள் என்று பெயர் – அவர்கள் ஆண்ட நாடுகளுக்கு சூத்திர நாடுகள் என்று பெயர் சூட்டப்பட்டது . இவர்கள் சூத்திரர்கள் என்று அறியப்படவேண்டி இவர்கள் பூணூல் அணிவது தடுக்கப்பட்டது. நாலுவகை சாதியில் சூத்திரருக்கு மட்டும் பூணூல் அணிய உரிமை இல்லை.

மனு நூல் தர்மத்தின்படி மனிதர்கள் ஒரே பிறவியில் இரு பிறவி பிறந்தாக வேண்டும் . முதல் பிறவி தாய்வயிற்றில் இருந்து பிறக்கும்பொழுது ஆகும். இரண்டாம் பிறவி அறிவு நூல்களை ( அதாவது வேதப்பொய்களை) கற்று பூணூல் அணியும்போது ஆகும். அரசர்கள் சூத்திரர்கள். ஆகையால் அவர்கள் இரண்டாம் பிறப்புக்கு தகுதி படைத்தவர்கள் அல்ல. காரணம் அவர்கள் பூணூல் அணியக்கூடாது. அரசர்கள் வேதம் படித்து பூணூல் அணியத் தகுதி இல்லாததால் அவர்களுக்கு அரசியல் ஆலோசனை சொல்லி வழி நடத்த ( அதாவது வழிகெடுக்க)  ஒரு ராஜரிஷி – பிறப்பால் பிராமணர்- கூடவே இருப்பார். கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக்கட்டியதுபோல்தான் இதுவும்.

அத்துடன் இந்த வர்ணங்களுக்குள்ளேயே கோத்திரங்கள் உண்டு. அந்த கோத்திரங்களின் பெயர்கள் பெரும்பாலும் வட இந்திய ஆரிய முனிவர்களின் பெயர்களை ஒட்டியே இருக்கும். உதாரணமாக விஸ்வமித்திரர் கோத்திரம், கவுஷ்ய கோத்திரம், வசிஷ்ட கோத்திரம், காஸ்யப கோத்திரம் இப்படிப்பல. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் வடநாட்டில் கி. பி ஏழாம் நூற்றாண்டில் வந்து புகுந்த ஆரியக்கூட்டம் ( இது பற்றி விரிவான வரலாற்று சம்பவங்கள் பின்னர்) அங்கு ஆண்டாண்டுகளாக வாழ்ந்துவந்த மக்களை – ஆதி திராவிடர்களாக்கி  இடத்தை பிடுங்கிக்கொண்டு விரட்டிவிட்டு ஆரிய சிலந்திவலையை அகலமாகப்  பின்னிவிட்டது.

ஆதாரம்: It was in 7th c.A.D. after the demise of Harsha, the last great Dravidian Emperor, the invading groups joined together at Mount Abu in Rajasthan and formed a United Front against Indian Dravidians under the leadership of Persians, the fire worshippers, who later on claimed that they are the Brahmins. Because of their united efforts, they were able to capture political power from the Dravidians in North India and they formed 'Aryavardha', the Kingdom of the Aryans.(  HISTORY OF INDIA PROF. G. K. MISRA)

அதன்விளைவுதான் இப்படிப்பட்ட கோத்திரங்களின் பெயர்களில் வட இந்திய வாடை அடிக்கிறது. இந்த கோத்திரங்கள் ஒன்றில் கூட தமிழ் முனிவர்களின் பெயர்கள் காணப்படுவது இல்லை. ஏனென்றால் இவைகள் இறக்குமதி சரக்குகள். இந்த மண்ணில் மலர்ந்த தொல்காப்பியத்தில் இந்த கோத்திரங்கள் குறிப்பிடப்படவில்லை.

அப்படி நாடும் வீடும் பறிகொடுத்து ஓடிவந்த இந்த மண்ணின் சொந்த மக்களே “தலித் என நாடு முழுதும் அழைக்கப்படுகின்றனர். தலித் என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு அடிமட்ட, ஒடுக்கப்பட்ட , நசுக்கப்பட்ட, துண்டுகளாக நொறுக்கப்பட்ட என்று பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் இவற்றை "ground", "suppressed", "crushed", or "broken to pieces" என்றும் கூறி விளக்கலாம். இப்படி மக்களை அடிமட்டமாக்கி, ஒடுக்கி, நசுக்கி, துண்டு துண்டுகளாக நொறுக்கிய பெருமை மனு நீதிக்கே சென்று சேரும். இதை தனது ஆராய்ச்சி  நூலில் குறிப்பிடும் அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார் “பொதுக் குள‌ங்களில் நாய், ஆடு மாடுகள் கூட தாகத்திற்காக தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்லும் இந்தப் பார்ப்பனர்கள் வாழும் நாட்டில் நான் ஒரு மிருகமாக பிறந்திருக்கக் கூடாதா? “ என புலம்பி அழுகிறார்.

இந்த தாழ்த்தப்பட்டோருக்கு – தலித்துகளுக்கு ஒரு சிறப்பு பெயர் கொடுக்க நினைத்த காந்தி அடிகள் அவர்களை ஹரிஜன் அதாவது கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கச் சொன்னார். அவர் கூற்றுப்படி ஏற்றுக்கொண்டாலும் ஹரி என்பவர் மட்டும் கடவுள் அல்லவே . இன்னும் பல பெயர் கொண்ட கடவுள்கள் இருக்கிறார்களே. அப்படியானால் இந்த தலித்துக்கள் எந்தக் கடவுளின் குழந்தைகள்? ஹரியின் குழந்தைகள் என்றால் சிவனின் குழந்தைகள் என்று இல்லாமல் ஆகிவிடுமா? அப்படியானால் கடவுளின் பெயர் என்ன ஹரியா? சிவனா? ஹரியும் சிவனும் ஒண்ணு  அதை அறியாதவன் வாயில் மண்ணு என்று புருடாவெல்லாம் விடக்கூடாது. இரண்டும் ஒன்றென்றால் ஏன் தனிப்பெயர்கள்? பெயர்கள் மட்டுமா தனி? ஸ்தல விருட்சங்கள் என்கிற மரங்களில் இருந்து- வழிபடும் முறைகளில் இருந்து – ஊற்றும் எண்ணெயில் இருந்து- நெற்றியில் போடும் நாமத்தில் இருந்து – படைக்கும் நைவேத்தியத்தில் இருந்து கடவுளின் முன் பாகுபாடுகள் ஏன்?

மனுதர்மத்தின் அத்தியாயம் ஒன்றில் வசனங்கள் ( CHAPTER: 1)

93. As the Brahmana sprang from (Brahman's) mouth, as he was the first-born, and as he possesses the Veda, he is by right the lord of this whole creation.

96. Of created beings the most excellent are said to be those which are animated; of the animated, those which subsist by intelligence; of the intelligent, mankind; and of men, the Brahmanas;

99. A Brahmana, coming into existence, is born as the highest on earth, the lord of all created beings, for the protection of the treasury of the law.
100. Whatever exists in the world is, the property of the Brahmana; on account of the excellence of his origin The Brahmana is, indeed, entitled to all.
ஆகியவைகள் வியப்பின், வினாக்களின், விந்தைகளின் உச்சகட்டமாகும்.

இந்த 93,96,99, 100  ஆகிய சுலோகங்களின்  கருத்துப்படி வேதங்களை உச்சரிக்க தகுதி படைத்தவனும், பdaiடைக்கப்பட்ட உயிர் இனங்களில் எல்லாம் மிக மிக  உயர்ந்தவனும், அறிவுச்செழுமை நிறையப்பெற்றவனும், ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்துவதற்கென்றே ஸ்பெஷலாக  ஆண்டவனால் படைக்கப்பட்டவனும், நாட்டின் சொத்து சுகங்களை பாதுகாக்கவும் ,பராமரிக்கவும், தகுதி படைத்தவனும் மொத்தமாக சொல்லப்போனால் படைப்பின் அர்த்தமும், படைக்கப்பட்ட அனைத்து சுகபோகங்களுக்கும் சொந்தக்காரனும் “அவாளைத் தவிர வேறு “எவாளும் இல்லை. “இவாளைத்தவிர மற்ற அனைவரும் உப்புக்கு சப்பாணிதான். ஆகவே இப்படி ஸ்பெஷல் சலுகைகளோடு படைக்கப்பட்ட பிராமணர்கள் அனைவரும் கை கோர்த்து “  ஆண்டவன் படைச்சான்- என்கிட்டே கொடுத்தான்- அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான் “ என்றும், “ உலகம் பிறந்தது எனக்காக- ஓடும நதிகளும் எனக்காக – மலர்கள் மலர்வது எனக்காக “ என்றும் கும்மாளமிட்டுப் பாடலாம்.  இப்படிப்பட்ட போதனைகளை நிலை பெறச்செய்து  ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டத்தின் சமூக அந்தஸ்தை இடுப்பொடித்துப்போடும் மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? கடவுளின் பெயர் சொல்லி இப்படி ஒரு கர்மாந்திரக் கருத்தைப் பரப்பி ஒரு சிறு கூட்டம் நாட்டை சுரண்டுவது முறையா? சிந்திக்கவேண்டியவர்கள் சிந்திக்கவேண்டியவை இவை. சிந்திக்க வைப்போம்.
இனியும் இருக்கின்றன ஏராளம்.

இன்னும் சுழலும் இந்த சாட்டை ...



-இபுராஹீம் அன்சாரி

20 Responses So Far:

sabeer.abushahruk said...

அட...அப்படியா...நிஜமாகவா?...அடப்பாவிகளா...அய்யே...அதுசரி...சர்தான்... வாசிக்க வாசிக்க வழிநெடுக வாய்பிளந்து வந்த வார்த்தைகள் இந்தக் கட்டுரை ஏற்படுத்தும் தாக்கத்தின் ஆதாரங்கள்.

தந்திருக்கும் குறிப்புகள் காக்காவின் உழைப்பின் ஆதாரங்கள்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா,கக்கா.

sabeer.abushahruk said...

//ஆண்டவன் படைச்சான்- என்கிட்டே கொடுத்தான்- அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான் “ என்றும், “ உலகம் பிறந்தது எனக்காக- ஓடும நதிகளும் எனக்காக – மலர்கள் மலர்வது எனக்காக//

"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா? வெள்ளிநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?" என்று இவிங்களுக்கு புரிந்தால் யாவரும் நலம்.

Noor Mohamed said...

காக்கா அவர்கள் ஆழமாகத் தோண்டி கொத்துக் கொத்தாய் கொட்டுகிறார்கள் இத்தொடரில்! படித்தால் பசி தீரவில்லை.

//அரசர்கள் வேதம் படித்து பூணூல் அணியத் தகுதி இல்லாததால் அவர்களுக்கு அரசியல் ஆலோசனை சொல்லி வழி நடத்த ( அதாவது வழிகெடுக்க) ஒரு ராஜரிஷி – பிறப்பால் பிராமணர்- கூடவே இருப்பார். கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக்கட்டியதுபோல்தான் இதுவும். //

இதுதான் இவர்களின் குலத் தொழில். இன்றும் பெரும் ஸ்தாபனங்களில் ஆலோசனை என்ற பதவியில் இருந்து கொண்டு அடிவருடிகளாக செயல்படுவதை காண்கின்றோம். யார் ஆட்சி செய்தாலும், அதிகாரிகளின் பதவிகளை பிடித்துக் கொண்டு, ஆட்சியாளர்களின் ஆணைக்கு மாறுபாடாக செயல்படுவதை இன்று கண்கூடாகக் காணமுடிகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறிய வேண்டிய மனித அநீதித் தகவல்கள்!

இத்தகைய இழிநிலைப்பக்கம் சாராமல் நம்மையெல்லாம் உயர்ந்த மார்க்கத்தின் பக்கம் இருக்க வழிதந்த இறைவனுக்கும் அடுத்து நம் முன்னோர்களுக்கும் எல்லாப் புகழும்.

Noor Mohamed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//இத்தகைய இழிநிலைப்பக்கம் சாராமல் நம்மையெல்லாம் உயர்ந்த மார்க்கத்தின் பக்கம் இருக்க வழிதந்த இறைவனுக்கும் அடுத்து நம் முன்னோர்களுக்கும் எல்லாப் புகழும். //

சிந்திக்க வேண்டிய செய்தி. இந்த இழிவு நிலையிலிருந்து இஸ்லாம் நிலைக்கு மாற நம் முன்னோர்கள் செய்த தியாகங்களை நினைவு படுத்துவதற்கு ஏற்ற ஆக்கம். இதை படித்தாவது அந்த முன்னோர்களை தூற்றாமல் துஆ செய்வோமாக அவர்களுக்காக!

அதிரை சித்திக் said...

இந்த கட்டுரையின் தாக்கம் ..

படிக்க வேண்டியவர்கள் படித்தால்

சமத்துவம் பொருந்திய இஸ்லாத்திற்கு

வந்து விடுவார்கள் ..குளத்தில் மிருகம் தாகம் தீர

தண்ணீர் அருந்தலாம் தாழ்த்த பட்ட இனத்தவன் நீர் அருந்த

கூடாது என்று தடை விதித்தது கொடுமை ..தன்மானம் உள்ள ஹரிஜன்

ஒருத்தன் கூட ஹிந்து மதத்தில் இருக்க மாட்டான் ..ஆனால் ஏச்சும்

பேச்சும் வாங்கிகொண்டு பிணத்திற்கு மோளம் அடித்து கொண்டு இன்றும்

இருக்கத்தான் செய்கிறார்கள் ..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

///இந்த தாழ்த்தப்பட்டோருக்கு – தலித்துகளுக்கு ஒரு சிறப்பு பெயர் கொடுக்க நினைத்த காந்தி அடிகள் அவர்களை ஹரிஜன் அதாவது கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கச் சொன்னார். அவர் கூற்றுப்படி ஏற்றுக்கொண்டாலும் ஹரி என்பவர் மட்டும் கடவுள் அல்லவே . இன்னும் பல பெயர் கொண்ட கடவுள்கள் இருக்கிறார்களே. அப்படியானால் இந்த தலித்துக்கள் எந்தக் கடவுளின் குழந்தைகள்? ஹரியின் குழந்தைகள் என்றால் சிவனின் குழந்தைகள் என்று இல்லாமல் ஆகிவிடுமா? அப்படியானால் கடவுளின் பெயர் என்ன ஹரியா? சிவனா? ஹரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில் மண்ணு என்று புருடாவெல்லாம் விடக்கூடாது. இரண்டும் ஒன்றென்றால் ஏன் தனிப்பெயர்கள்? பெயர்கள் மட்டுமா தனி? ஸ்தல விருட்சங்கள் என்கிற மரங்களில் இருந்து- வழிபடும் முறைகளில் இருந்து – ஊற்றும் எண்ணெயில் இருந்து- நெற்றியில் போடும் நாமத்தில் இருந்து – படைக்கும் நைவேத்தியத்தில் இருந்து கடவுளின் முன் பாகுபாடுகள் ஏன்?///

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா....

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுபவர் இஸ்லாத்தை ஏற்றபின் தான் சொல்ல வேண்டும்.

தலித் சகோ. கட்சியும் சங்கமும் மட்டுமே கண்டார்களே தவிர வாழ்வின் சுவையை இன்னும் அனுபவிக்க தவிறிவிட்டார்கள். இஸ்லாத்தை எத்திவைத்து வாழ்வின் சுவையை சுவைக்க செய்வது நம்முடையை கடமை.. சுழட்டுங்கள் உங்கள் சாட்டையை...

பயனுல்ல தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

சேக்கனா M. நிஜாம் said...

மூலைக்கு வேலை வைக்கும் பதிவு ! வாழ்த்துகள் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களுக்கு,

தொடருங்கள்..............................இது ஒரு நெடுந்தொடராக......................

"தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்" என்றெல்லாம் நம்மூரு தொடக்கப்பள்ளி பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்.............
இப்படி அனைவரும் படித்தும் ஏன் சாதிப்பிடியிலிருந்து அவர்களால் விட்டுவிட முடியவில்லை என்பது புரியாத புதிரே !?


இஸ்லாம் தன் இறைமறையில் என்ன சொல்கிறது ?


"மனிதர்களே ! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" (குர்ஆன் 49:13)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெரு சென்றாலோ அல்லது ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊர் சென்றாலோ மனிதர்கள் வழிபடும் தெய்வங்களும், வழிபடும் முறைகளும் முற்றிலும் மாறி இருக்கும் பொழுது ஒட்டு மொத்த பரந்த இப்பூமியில் மக்கள் வழிபடும் கணக்கிலடங்கா தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை இவை எல்லாவற்றையும் தெளிவாகப்பார்த்துக்கொண்டு இருந்தும் அவர்களுக்கும் தேவையான வாழ்வாதார ஜீவனாம்சத்தை எவ்வித தடையுமின்றி, பாரபட்சமின்றி வழங்கி வரும் அந்த ஓரிறை அல்லாஹ்வே ஆச்சர்யமே அசந்து போகும் ஆச்சர்யத்திற்குமப்பாற்பட்டவன்........சுபஹானல்லாஹ்.....

காக்கா, தலித்/ஹரிஜன பெரும்பான்மை பொது ஜனங்களுக்காக‌ நாம் எவ்வளவோ விழிப்புணர்வு கட்டுரைகளை அவர்கள் விழிபிதுங்கும் அளவுக்கு இங்கு அலசி ஆராந்து ஆதாரத்துடன் அழகுற எடுத்து வைத்தாலும் அவர்களை ஆட்டுவிக்கும் அந்த ஆரிய மாயைகளுடன், பாவப்பட்ட தலித்/ஹரிஜன பொதுமக்கள் ஒன்றிணைந்து தேவையற்ற மதக்கலவரங்களை நாட்டில் ஆங்காங்கே தூண்டி விட்டு நடத்தி அப்பாவி சிறுபான்மை இன பொதுமக்களையும், பெரியவர் முதல் சிறியவர் வரை, கர்ப்பிணிப்பெண்களை கூட கதறகதற‌ வேட்டையாடி வேரறுத்துவிடுவது வேதனையின் உச்சக்கட்டமேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

காக்கா, நாம் சொல்லிக்கொண்டே இருப்போம். செய்தி செல்ல வேண்டிய இடத்திற்கு என்றைக்காவது ஒரு நாள் இறைவன் கொண்டு போய் சேர்த்து விட மாட்டானா?

உங்கள் சிரத்தை ஒரு நாள் அவர்கள் கரத்தைப்பற்றும் இன்ஷா அல்லாஹ்.

Shameed said...

//“பொதுக் குள‌ங்களில் நாய், ஆடு மாடுகள் கூட தாகத்திற்காக தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்லும் இந்தப் பார்ப்பனர்கள் வாழும் நாட்டில் நான் ஒரு மிருகமாக பிறந்திருக்கக் கூடாதா//

ஒருநாய் இன்னொரு நாய் தண்ணீர் குடிப்பதை தடுக்காது ஒரு மாடு இன்னொரு மாடு தண்ணீர் குடிப்பதை தடுக்காது ஆனால் இந்த பார்பனர்கள் இன்னொரு மனிதன் தண்ணீர் குடிப்பதை தடுக்கின்றனர் இவர்களை என்ன சொல்வது அண்ணன் N.A.S.பாணியில் சொல்வதென்றால் "கேவலப்பயல்கள்"

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி ஷேக்கனா நிஜாம்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த தொடரின் முடிவில் குறிப்பிட இருக்கும் திரு குர்-ஆனின் வசனங்களை எடுத்துத்தந்து இருக்கிறீர்கள். ஜசக்கல்லாஹ்.

தம்பி தாஜுதீன், வ அலைக்குமுஸ்ஸலாம். ஏற்புரையில் சந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ்.

நண்பர் அதிரை சித்தீக் அவர்களின் ஊக்கம் பெரும் ஆக்கம்- எல்லோருக்கும்.

crown said...

இப்படிப்பட்ட கோத்திரங்களின் பெயர்களில் வட இந்திய வாடை அடிக்கிறது. இந்த கோத்திரங்கள் ஒன்றில் கூட தமிழ் முனிவர்களின் பெயர்கள் காணப்படுவது இல்லை. ஏனென்றால் இவைகள் இறக்குமதி சரக்குகள். இந்த மண்ணில் மலர்ந்த தொல்காப்பியத்தில் இந்த கோத்திரங்கள் குறிப்பிடப்படவில்லை.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலமுஅலைக்கும்.இந்த மூத்திர வாடை எங்கும் அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அரசு இயந்திரத்தில் இன்னும் அடித்துக்கொண்டுதான் இருக்கிறது இது இறக்குமதியானதும் கூட!(பாரினிலிருந்து வந்த யூரின்னெட் இது)இதை சுத்தம் செய்வது அனைவரின் கடமை. இனியும் இந்த ஏமாற்றுபவர்களிடம் யாவரும் ஏமாறாமல் இருக்க ஒரே வழி கல்வி,கல்வி,கல்வி, அதுவும் இஸ்லாம் சொன்ன கல்வி, இதை நாமும் பின் பற்றி நம் வருங்கால சமுதாயத்துக்கும் பறை சாற்றும் இந்த அதிரை அறிஞரின் ஆக்கத்தை நூலாக வெளிக்கொணர்ந்து அனைவரையும் அடையச்செய்யனும். குறிப்பாக ஆதி திராவிட சமூக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தனும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

இத்தகைய இழிநிலைப்பக்கம் சாராமல் நம்மையும்,நம் முன்னோர்களையும் உயர்ந்த மார்க்கத்தின் பக்கம் இருக்க வழிதந்த இறைவனுக்கு மட்டுமே அனைத்துப் புகழும்,கருத்துள்ள ஆக்கம் தரும் காக்காவுக்கு நன்றி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோ. அர அல சொன்ன கருத்து மாற்றத்திலிருந்து...

//இத்தகைய இழிநிலைப்பக்கம் சாராமல் நம்மையும்,நம் முன்னோர்களையும் உயர்ந்த மார்க்கத்தின் பக்கம் இருக்க வழிதந்த இறைவனுக்கு மட்டுமே அனைத்துப் புகழும்//

மேற்கண்ட வார்த்தை மாற்றத்திற்கும் எனது வார்த்தையிலும் உள்ள தவறை அறிய நாடுகிறேன்.

Yasir said...

வெளிச்சத்திற்க்கு வரும் கருப்பு உண்மைகள்.....நீங்கள் பிடித்திருப்பது சாட்டையல்ல........பொக்லைன்...உண்மையை தோண்டி கொட்டுங்கள்.......மாற்றம் வரும்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உண்மையச் சொல்லனும்னா பொறுமையாக படித்து விட்டுத்தான் என் கருத்தை பதியனும்...

இருந்தாலும் இந்தப் பக்கம் தலைகாட்டினேன் என்று அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு மீண்டும் வரலாமேன்னு !

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம்!

எதிர்கட்சித் தலைவர்கள் சட்டமன்றத்தின் தாழ்வாரத்தில் வருகைப்பதிவேட்டில் கைஎழுத்துப்போடுவதுபோல் போட்டுப் போய்விட்டீர்கள்.

விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லையா. ? போகட்டும் மூனாரிலிருந்து களைத்துப்போய் வந்திருப்பீர்கள்.

இன்னும்தான் நிறைய இருக்கிறதே அப்போது எழுதுங்கள்.

வஸ்ஸலாம்.

Unknown said...

நுனிப்புல் மேயாத ஆழமான தொடர் .நன்றி காக்கா.
அப்படியே இப்ப நிலவுகிற பொருளாதார மந்த நிலையை நீங்கள் அலசி ஆராயிந்தால் எங்களுக்கு மேலும் விளக்கம் கிடைக்கும் .

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி ஹர்மிஸ் அப்துல் ரகுமான் அவர்களுக்கு,

ஜசக்கல்லாஹ்.

இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.