Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மானுக்கு ஆபத்து... 38

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2012 | , , , ,

அது ஒரு ரம்மியமான சூழல்…
அடர்ந்த காடு
அங்கே விலங்குகளின்
வாழ்வுதனை
படம் பிடித்து காட்டும்
டிஸ்கவரி சேனலில் பார்த்தேன்…

அழகிய காட்டில்…
துள்ளித் திரியும்
மான்கள் கூட்டம்…
அதன் கண்களில்
என்றென்றும் மிரட்சி…

புல் மேய்ந்தது பாதி
மேயாமல் நின்றதி மீதி…
கொடிய விலங்குகள்
ஏதும் வந்து விடுமோ… 

புல் மேயவதற்குள்
நம்மை மேய்ந்து விடுமோ
என்ற பீதி….

பாவம்…
சிங்கமோ, சிறுத்தையோ
துரத்தி வேட்டையாடும்
சுற்றியிருக்கும் மான்கள்
செய்வது அறியாது நிற்கும்…

தாகம் மிகுதியால்
நீர் அருந்த
ஆற்றுக்கு செல்லும்
அங்கு
முதலையோ மானை
இழுத்து செல்லும்…

பார்க்க
பரிதாபமாக இருக்கும்…

சில சமயம்..
இரண்டு மூன்று வாரமே
வயதுடைய இளம் குட்டிகளை
ஓநாய்கள் குறிவைத்து
வேட்டையாடும்

தாய் மான்
காப்பாற்ற வக்கற்று
கண்ணீர் விட்டு நிற்கும்…

இது
காடுகளில் அன்றாடம்
நடக்கும் காட்சி...

மானுட இனத்தில் அதுவும் இஸ்லாமிய ஐக்கியத்தில் ஒவ்வொரு முஸ்லிம் இதயத்திற்குள் இருக்கும் ஈமானும் வேட்டையாட படுவதை கண்ணால் காண முடிகிறது.. பணத்தாசையால்... பணதேவையால்... வட்டி எனும் கொடூரமான மிருகம் .வேட்டையாடுகிறது. இன கவர்ச்சியால் பெண்ணினம் அந்நிய ஆணுக்கு இரையாகி, ஒட்டுமொத்த இனத்தின் மானத்தையே வேட்டையாடி ‘ஈமானை’ நிலை குலைய செய்கிறது.

காட்டில் எப்படியெல்லாம் இளம் மான் குட்டிகளை குள்ள நரிகளும், ஓநாய்களும் வேட்டையாடுமோ அது போன்று நம் இளம் சிறார்களின் 'ஈமானை', கல்வி என்ற பெயரால் கட்டாய கடமையான தொழுகை ஜும்ஆ நாளில் பள்ளிக் கூடங்களுக்கு செல்ல வைத்து .தொழுகையை மறக்கடித்து ஈமானை வேட்டையாடப்படுகிறது... 

ஏன் இப்படி என்று கேட்டால் “என்ன செய்வது மனதுக்கு சங்கடமாகத்தான் இருக்கிறது” அவர்களின் பதிலும் என்ன செய்வது தான் முடியலையே… !

நமதூரில் நம் சமூகத்திற்கென்றே அமையப்பெற்றிருக்கும் பள்ளிக்கூடங்களில் நல்ல படிப்பு மற்றும் தொழுகைக்கான வசதி(கள்)யாவும் உண்டு..

கல்வி மாயை சைத்தானோடு கைகோர்த்து அருகிலிருக்கும் ஊர்களுக்கும், பணம் அதிகமதிகம் பெற்றேனும் இன்ன பிற ஊர்களுக்கும் அனுப்பி இளம் “மாணவர்களின் 'ஈமானை' வேட்டையாடுகின்றனர்…."

காடுகளில் ‘மானு’க்குண்டான ஆபத்து இயற்கை, எனவேதான் அவைகள் அழியாமல் இனம் பெருகிய வண்ணம் உள்ளது. நாட்டில் வாழும் முஸ்லிம் இஸ்லாமிய வாழ்வியலுக்கும், அதன் இயற்கையான சூழலுக்கும் மாறாக சிந்தித்து தனது ஈமானை பறிகொடுக்கின்றானர்.

ஈமானின் அளவு குறைந்து கொண்டே போகிறது.. வீடும் நாடும்.. காடாகிறது.. கவனம் தேவை !

-அதிரை சித்தீக்

38 Responses So Far:

Shameed said...

ஆகா அந்த மானும் இந்த ஈமானும் நல்ல ஒப்பீடு

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த அனுமானம் சாதாரண ஒப்பிடல் இல்லை. கூர்ந்து கவனித்தால் காட்டில் நடப்பதுபோல் நம் இனம் கூர்போடப்படுவதும். ஈமான் உறுதியாக இல்லாததால் வேரருக்கப்படுவதும் நடந்து வருவதை இயல்பாக மான் இனத்தோடு ஒப்பிட்டு நம் ஈமானை தட்டி எழுப்பும் இந்த ஆக்கம் காலத்தின் அவசியம்.ஈமான் கொண்டு நாம் நோன்பிருப்பதன் காரணமாய் வரும் வாய்வாடை கஸ்தூரிக்கு ஒப்பானதாக அந்த வல்ல ரஹ்மானே சொல்லியுள்ளதால் இந்த ஈமான் விளக்கம் இந்த மானுடன் முடிச்சி நம் மானுடம் தழைக்கவே என கொண்டால் எல்லாம் சுகமே!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மான் காட்சிகளை மனதில் படமெடுத்து அதை மார்க்கத்தோடு ஒப்பிட்டு நடைமுறையில் உலக கல்விக்காக வணக்கத்தின் சிலதை இழப்பதை தமிழ் ஊற்றாய் கவிதையாய் தந்தமை அருமை, சம்பந்தப்பட்டவர்கள் உணரட்டும்.

சேக்கனா M. நிஜாம் said...

பின்னூட்டங்களில் கண்ட தங்களின் திறமைகளை பதிவுகளிலும் காண்கின்றேன் !

நல்ல ஒப்பீடு !

தொடருங்கள்...............


// ஈமானின் அளவு குறைந்து கொண்டே போகிறது.. வீடும் நாடும்.. காடாகிறது.. கவனம் தேவை ! //

அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக !

Unknown said...

சமுதாய சிந்தனை கொண்ட இந்த ஒப்பீடு மிக அருமை !!

sabeer.abushahruk said...

என்ன ஓர் ஒப்பீடு!

கமான், நிறைய எழுதுங்கள் சகோ.

ஈமான் ஸ்திரமாக அமைய இவ்வாறான நினைவூட்டல்கள் மிக அவசியம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சொல்லவந்த விசயத்தை ஈமான், மானுடன் அழகுற ஒப்பிட்டு வடிவமைக்கப்பட்ட ஆக்கம் ஆசிரியரின் கைங்கரியம்.

கட்டுரையில் சொல்லப்பட்டது போல் காட்டில் நடக்கும் சில அசாதாரன நிகழ்வுகளை தொலைக்காட்சியில் காணும் நம்மை கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகிறது.

உலகில் பரிசுத்த ஈமான் பறிபோகும் சூழ்நிலைகள் நம் அக,புற கண்களையே தின்றுவிடுகிறது. அல்லாஹ் பாதுகாக்கனும்...

வீட்டில் பொருளாதார‌ நெருக்க‌டிக‌ள், ப‌ல‌ அசெள‌க‌ரிய‌ சூழ்நிலைக‌ள், ஏக்க‌ங்கள், உலக ஆசாபாசங்கள் என பல விசயங்கள் உள்ள‌த்தை துளையிட்டுக்கொண்டிருந்தாலும் ஐங்கால‌த்தொழுகையில் ப‌ள்ளியின் மிஹ்ராபில் இமாமாக‌ நின்று "அல்லாஹூ அக்ப‌ர்" என‌ த‌க்பீர் க‌ட்டும் ச‌ம‌ய‌ம் வ‌ரும் ச‌ந்தோச‌ம் மேற்க‌ண்ட‌ எல்லா ம‌ன‌ உளைச்ச‌ல்க‌ளையும் மாய்த்து விடுகிறது என்று ஒரு முறை என்னிட‌ம் சொன்ன‌து நமதூர் ம‌ரைக்காப்ப‌ள்ளி இமாம்..

இப்னு அப்துல் ரஜாக் said...

சித்திக் காக்காவின் மான் உவமை அருமை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'ஈ'மானை பாதுகாக்க போராட்டம் !

எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் !

புதிய சிந்தனை, சிறு வயதிலிருந்தே ஏராளமான பத்திரிகைகள் தொடர்புடைய சித்தீக் காக்கா அவர்களின் பதிவுகளும் சீரிய சிந்தனைகளும் தொடரனும்...

'க'மான் என்று(தான்) சொல்லத் தோனுது !

அதிரை சித்திக் said...

வித்தைகள்..பல தெரிந்தாலும் .

செய்து காட்ட ஒரு களம் வேண்டும் ..

என் படைப்புகளை அங்கீ கரித்து நல் வடிவம்

கொடுத்த *அதிரை நிருபர் வலைதளதிற்கு முதற்கண்

நன்றி ....!அதன் நெறியாளரை ..நன்றியுடன் பார்கிறேன் ..

மானுக்கு ஆபத்து ..என்றதும் பதறிய நம் உள்ளம் ஈ மானுக்கு

ஒப்பீடு செய்ததும் நல்லுள்ளங்கலின் ஈ மானின் வெளிச்சம்

நன்றாகவே தெரிந்தது

ஷாகுல் ஹமீது .ஒரு வரி விமர்சனம் நிறைவான துவக்கம் '

கிரௌன் ..தஸ்தகீர் .செவியால் கேட்பதை கவியாய் கூறுவார்

மார்க்கத்தின் முத்தான வாரத்தைகளை அள்ளி தந்தார் ..

அன்பு சொந்தம் ..ஜகபர் சாதிக் ..அழகுதமிழும் சமுதாய

ஆவலும் மின்னியது ...கவி யாளர் சபீர் அவர்கள் .தன்னுடன்

எழுத்து பயணத்தில் இணைத்து கொள்ளஅழைப்பு அளித்த விதம்

என் எழுதுணர்வில் ஒரு துள்ளலை தந்தது ..

என் எழுத்தை நன்கு கவனித்து வந்த சேகனா M நிஜாம்

அவர்களின் பார்வை நிஜம் ..என் அன்பு தம்பி நெய்னா

அன்பு கவி புகாரி சொன்னது போல நெய் ..நா ..பின்னூட்டத்திலும்

ஆழமான கருத்து..இல்லை ஒரு ஆக்கமே இருக்கும் ..

அர .அல.என்றுமே ..நிறை குறை ,நச்சென்று கூறும் நெறியாளர்

என் படைப்பிற்கு நிறை கூறி நெகிழ வைத்தார் ..என் அருமை

அப்துல் ரஹ்மானின் ஒப்பீடு ..ஒரு வரி கவிதை .

அபு இப்ராஹீம் முகட்டிலிருந்து மேலே வா இன்னும் மேலே என்று

முன்னேற்ற பாதைக்கு அழைத்து போல் இருந்தது .நன்றிகள் என்றும்

தொடரும் ....

Yasir said...

மாஷா அல்லாஹ் வியக்கவைக்கும் எழுத்து-கருத்து புலமை.. ...மானையும்,ஈமானையும் அருமையாக தொடர்புபடுத்தி...மிக நேர்த்தியாக, நச்சுண்டு இதயத்தில் தட்டுவதுபோல் சொல்லி இருக்கின்றீர்கள்...வாழ்த்துக்கள் சகோ.சித்தீக் அவர்களே.....தொடர்ந்து எழுதுங்கள்......அல்லாஹ் நம் அனைவரையும் உறுதியான ஈமானுடன் மரணிக்க செய்வானாக ஆமீன்

ZAKIR HUSSAIN said...

ஒரே பதிவில் கவிதையும் , கட்டுரையும் வரையும் திறமை உள்ள நீங்கள் ஏன் இவ்வளவு நாளாக எழுதவில்லை.

சரி இனிமேலாவது அடிக்கடி எழுதுங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எனதருமை சித்தீக் காக்கா....

மானுக்கு கவிதை... ஈமானுக்கு கட்டுரை.... ஒப்பீடு மிக அருமை....

///காடுகளில் ‘மானு’க்குண்டான ஆபத்து இயற்கை, எனவேதான் அவைகள் அழியாமல் இனம் பெருகிய வண்ணம் உள்ளது. நாட்டில் வாழும் முஸ்லிம் இஸ்லாமிய வாழ்வியலுக்கும், அதன் இயற்கையான சூழலுக்கும் மாறாக சிந்தித்து தனது ஈமானை பறிகொடுக்கின்றானர்.

ஈமானின் அளவு குறைந்து கொண்டே போகிறது.. வீடும் நாடும்.. காடாகிறது.. கவனம் தேவை///

சைத்தானின் செயற்கையான சூழ்ச்சிகளை வென்றடுப்பதின் மூலமே நம்முடை ஈமானை பாதுகாக்க முடியும் என்பதை சூசகமாக சொல்லியுள்ளீர்கள்,,, தொடர்ந்து எழுதுங்கள் காக்கா....

Ebrahim Ansari said...

அன்பின் சகோதரர் அதிரை சித்தீக் அவர்களுக்கு,

பின்னூட்டங்கள் என்கிற உங்களின் ஒரு சோற்றைப் பதம் பார்த்தபோதேல்லாம் தெரிந்தது உங்களுக்குப்பின் ஒரு பானை எழுத்தாள்மை ஏராளம் இருக்குமென்று. நினைவுகளும் எதிர்பார்ப்புகளும் பொய்யாகவில்லை. மாஷா அல்லாஹ்.

தங்களை இரு கரம நீட்டி வரவேற்கிறோம். அழகு தமிழ் கொஞ்சும் நடை அற்புதம்.

தம்பி ஜாகிர் கூறுவதுபோல் எல்லாத் திறமைகளும் கொட்டியும் குவிந்தும் கிடக்கின்றன. உங்களிடம். நானெல்லாம் கவிதை எழுத முயற்சித்துத் தோற்றவன்.

பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

உங்களின் ஆக்கம் படிக்கும்போது

“ஒரு புறம வேடன்
மறு புறம நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் “ – என்று எங்கோ , இளமைக்காலத்தில் கேட்டது நினைவுக்கு வந்தது.

இன்றைய தேவையை கலை மற்றும் கவி நயத்தோடு வடித்து இருக்கிறீர்கள்.

இதுபோல் இன்னும் ஆக்கங்கள் தரவேண்டும் என்கிற அன்பு வேண்டுகோளோடு.

Canada. Maan. A. Shaikh said...

காடுகளில் ‘மானு’க்குண்டான ஆபத்து இயற்கை,பரிசுத்தமான நம் ஈமான் கல்வி என்ற பெயரால் இலக்கவேன்டாம் அல்லாஹ் நமை பாதுகாபானாக ஆமின்

அதிரை சித்திக் said...

அதிரை நிருபர் ....

ஆசிரியர் நிறைந்த வகுப்பறை ..

ஆசான்கள் மத்தியில் சிறு வெள்ளோட்டம்

அவ்வளவுதான் ..தம்பி ,யாசிரின் வியப்பு

முல்லையின் சிரிப்பு.. மனம் மகிந்தேன்..

தம்பி தாஜிதீனின் அழைப்பு எனக்கு சிகப்பு கம்பளமாய்

தெரிந்தது ..வெற்றிக்கு வழிகாட்டும் தொடர் எழுதி

மெய் சிலிர்க்க வைக்கும் சகோ ஜாகிரின் அழைப்பு

எனது தகுதியை மீண்டும் சோதிக்க சொல்கிறது ..

இப்ராஹீம் அன்சாரி காக்காவின் பாராட்டு

எழுத்திற்கான நோபல் பரிசு கிடைத்த உணர்வு ..

மான்.A .ஷேக்(கனடா )தங்களின் வருகைக்கு நன்றி

முற்றிலும் ..வித்தியாசமான அனுபவம் ...

எல்லா புகழும் இறைவனுக்கே ..

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும் ‘தமிழூற்று” அதிரை சித்திக்,

அலைபேசியில் உங்கள் பேச்சுக்
கலைபேசியது
ஈண்டு
கவிதை பேசுகின்றது
முத்தான கவிதைக்கு
முன்னேற்பாடுதான் என்று
முதலில் யூகித்தேன்
அதுவும் ஈண்டு
‘ஈமானுடன் இம்மானுடன்
படும் சோதனைகள்
ஒரு மானுடன் ஒப்பீடு”
“தமிழூற்று’ ஊற்றல்ல;
தாமிரபரணி ஆற்றுநீர்
திருநெல்வேலி அல்வா
திருவாளர் சித்திக் சொல்வாக்கு
இனி, அதிரை சித்திக் என்பார்
அதிரை நிருபரின் செல்வாக்கு!

அதிரை சித்திக் said...

கவியன்பன் கலாம் காக்காவின்

சுப சோபனம் ..கவி பாடிய

கலாம் காக்காவிற்கு நன்றி

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை சித்திக் நல்ல கருத்தை இதன் மூலம் ஒப்பிட்டுள்ளார். வரவேற்க்க தக்கது.

///காடுகளில் ‘மானு’க்குண்டான ஆபத்து இயற்கை, எனவேதான் அவைகள் அழியாமல் இனம் பெருகிய வண்ணம் உள்ளது. நாட்டில் வாழும் முஸ்லிம் இஸ்லாமிய வாழ்வியலுக்கும், அதன் இயற்கையான சூழலுக்கும் மாறாக சிந்தித்து தனது ஈமானை பறிகொடுக்கின்றானர்.///

அல்லாஹ் நம் ஈமானை இறுதிவரை பாதுகாப்பானாக

அன்புடன் புகாரி said...

அன்பின் சகோ சித்திக்,

கவியும் கருத்துமா? அழகு!

உண்ணுங்கள் பருகுங்கள்
வரம்பு மீறுபவர்களை
இறைவன் மன்னிக்க மாட்டான் - நபிமொழி

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

அன்பு .சகோ தாஹா தங்களை வரவு நல்

வரவாகுக வாழ்த்துக்கு நன்றி

************************************************

அன்பு கவி புகாரி ...அவர்களுக்கு

வருகைக்கு நன்றி ,,வரம்பு பற்றிய ஹதீசுக்கு

நன்றி ,,கட்டுரையில் மார்க்க வரம்பு மீரபட்டுள்ளதா?

Unknown said...

அன்பின் சகோ சித்திக்,

அ3 = அஅஅ = அன்பும் அமைதியும் அருளப்படட்டும்
அ2 = அஅ = அஸ்ஸலாமு அலைக்கும்

என்று எழுதினால் என்ன என்று யோசிக்கிறேன். ஆங்கிலத்தில் சிலர் AOA என்று (அஸ்ஸலாம்-ஓ-அலைக்கும்) எழுதுவார்கள். தமிழிலும் நாம் கொஞ்சம் முயலாம் என்று நினைக்கிறேன்.

>>>>>பணத்தாசையால்... பணதேவையால்... வட்டி எனும் கொடூரமான மிருகம் .வேட்டையாடுகிறது. இன கவர்ச்சியால் பெண்ணினம் அந்நிய ஆணுக்கு இரையாகி, ஒட்டுமொத்த இனத்தின் மானத்தையே வேட்டையாடி ‘ஈமானை’ நிலை குலைய செய்கிறது.<<<<

மிக மிக சரி, அப்படியே உண்மை!

>>>>நம் இளம் சிறார்களின் 'ஈமானை', கல்வி என்ற பெயரால் கட்டாய கடமையான தொழுகை ஜும்ஆ நாளில் பள்ளிக் கூடங்களுக்கு செல்ல வைத்து .தொழுகையை மறக்கடித்து ஈமானை வேட்டையாடப்படுகிறது...<<<<

இதுவும் உண்மை. பள்ளிக்கூடங்களின் தவறு இது.

>>>>கல்வி மாயை சைத்தானோடு கைகோர்த்து அருகிலிருக்கும் ஊர்களுக்கும், பணம் அதிகமதிகம் பெற்றேனும் இன்ன பிற ஊர்களுக்கும் அனுப்பி இளம் “மாணவர்களின் 'ஈமானை' வேட்டையாடுகின்றனர்…."<<<<

கல்வியின் மீது குறைகூறுவதுபோல் இருக்கிறது. கல்வி தேவையில்லை என்று சொல்வதுபோல் இங்கே ஒரு மாயை இருக்கிறது. அதில் எனக்குச் சங்கடம் உண்டு.

உயர்கல்வி மிக மிக அவசியம் முஸ்லிமிற்கு. அது ஒன்றே அவனை உயர்த்தும். உலக அரங்கில் அவன் நிலை தாழ்ந்தே இருக்கிறது. அதை உயர்த்துவது கல்யாகத்தான் இருக்க முடியும்.

ஈமானாய் இருந்தாலும் அதிலும் வரம்பு வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதாகவே நான் காண்கிறேன்.

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

அன்பு கவி புகாரி அவர்களுக்கு

தங்களின் பதில் மிக சரியானதே ..ஆனால்

இந்த வலை தளங்களில் வந்து போவோர் அதிரையின்

உறவுகளே ..பள்ளி கூட படிப்பு சம்மந்தமான வரைவு அதிரைக்கு

மட்டுமே பொருந்தும் ..காரணம் இந்த வருட SSLC ,+2 தேர்வு முடிவுகள்

அதிராம் பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிகுலேசன் பள்ளி நல்ல விகிதத்தில்

தேர்வு முடிவுகள் வந்துள்ளது புதிதாக முளைத்துள்ள மற்ற சமூகத்தார்

நிர்வாக பள்ளி நல்ல படிப்பு என்ற மாயையில் சிக்கி மாணவர்கள் என்ன

செய்கிறார்கள் என்று கண்காணிக்க முடியாதது ஒரு புறம் ..மாணவர்களை

அப்பள்ளி ஆசிரியர்கள் கையாளும் முறை ,ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு

செல்வதில் உள்ள சிக்கல் என பல பிரச்சனையை உள்ளது ..படிக்கிற புள்ள

எங்கேயும் படிக்கும் ..நம்மவர் .இஸ்லாமிய சூழல் இல்லாத இடத்தில வாழும்

தருவாயில் அதிகமான கவனத்துடன் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகள்

அதிகமாக பெற்றோர்களால் ஊட்டப்படும் என்பது எனக்கு தெரியும் ..

தன்களின் மனதை எனது எழுத்து பாதித்து இருந்தால் அதற்காக மன்னிக்கவும் ..!

அதிரை சித்திக் said...

அன்பு கவி புகாரி ..

ஈமான் விசயத்தில் கூட ஒரு வரம்பு வேண்டும் >>>>.

தயவு செய்து அந்த கொள்கையை மாற்றிக் கொள்ளுங்கள்

சொற்ப வாழ்வு அற்ப உலகம் ..அறிவுசார் கொள்கை ,இலக்கிய வட்டம்

எல்லாம் மாயை ..நீங்கள் ஒருமாதம் வலைத்தளத்தில் எழுதாமல் இருந்தால்

அடுத்த தளத்திற்கு சென்று விடும் இலக்கிய (இளகிய) வட்டம் ..உங்கள் கவி எழுத்து

யாருக்கும் உயிர் மூச்சல்ல ..ஆனால் இஸ்லாமியனுக்கு ஈமான் என்பது

இறை நம்பிக்கை இறை மறை ,நபி மொழி .நபிவாழ்வு .இவை சுவாசமாக

எண்ண பழகி கொள்ளுங்கள் ..நல்ல அணுகு முறையுள்ள பண்பாளர் புகாரி

நீங்கள் சுவரகத்தில் பிரவேசிக்க எனது அவா ..தமிழ் இலக்கியத்துக்கு கொடுக்கும்

முக்கியத்துவத்தை விட ஹதிஸ் குர் ஆண் மொழி பெயர்ப்புகளுக்கு கொடுங்கள் ..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//ஈமானாய் இருந்தாலும் அதிலும் வரம்பு வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதாகவே நான் காண்கிறேன்.//

அஸ்தஃபிருல்லாஹ்.

நீங்கள் காணலாம், ஆனால் இஸ்லாம் கூறுவதாக சொல்வது மிகமிகத் தவறு.

அளவுக்கதிகமாக ஈமான் கொள்வதே நாளை சந்திக்கும் மரணம் சுபிட்சமாய் அமையும்.

Unknown said...

அன்பிற்கினிய சகோக்கள் சித்திக் & சாதிக்,

ஈமான் என்பது
நம்பிக்கையா மூடநம்பிக்கையா?

அதைப் புரிந்துகொண்டாலே போதும்.
யாவும் தெளிவுக்கு வந்துவிடும்.

நம்பிக்கையின் பின்னால்தான் நான் நிற்பேன்
மூட நம்பிக்கையின் பின்னால் என்னால் நிற்க இயலாது

ஒரு விசயம் எப்போது நம்பிக்கையிலிருந்து நழுவி
மூடநம்பிக்கையாகிறது?

மார்க்கக் கல்வியை அவசியம் கற்றறிதல் வேண்டும்
என்றுரைக்கும்போது நம்பிக்கை நிற்கிறது

மார்க்கக் கல்வி மட்டும்தான் வேண்டும்
பாடசாலைக் கல்வியைத் தூர எறி என்று கூறும்போது
மூடநம்பிக்கை எழுந்துகொள்கிறது.

இறைவனை அறிந்துகொள், உயர்வாய் என்றால் அது நம்பிக்கை
என்னையும் என் குடும்பத்தையும் இறைவன் காப்பான் என்று
உழைப்பதை நிறுத்தினால் அது மூட நம்பிக்கை

உண்ணுங்கள் பருகுங்கள்
வரம்பு மீறுபவர்களை இறைவன் மன்னிக்கமாட்டான்

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

என்னையும் என் குடும்பத்தையும் அல்லாஹ்

காப்பான் என நம்பி உழைப்பை கை விடுவது மூட நம்பிக்கை >>>>

உங்களின் சிந்தனை புதியதாக இருக்கிறது ..உங்களின் கவிதையை போல ..

ஒட்டகத்தை கட்டி விட்டு இறைவனிடமும் பாது காப்பு தேடு என முகமது நபி (ஸல் )

கூறியுள்ளார்கள் ..உழைப்பை ..கைவிட்டு விட்டு இறைவனிடம் கேட்பது மூட நம்பிக்கை

என்பதை கொஞ்சம் மாற்றி சிந்திக்கணும் ..இறைவா எனக்கு அற்புத மான தகுதிகளை தந்து

உயர்த்தி வாய்த்த உனக்கே புகழ் அனைத்தும் ..நமது ஆரோக்கியத்தை நினைத்து இறைக்கு

நன்றி கூறுங்கள் அது ஈமான் ..இரையை உயர்வாய் நினை போற்றுதல் ஈமான் ..அகிலத்தின்

அதிபதியால் எதுவும் முடியும் என நம்புவது ஈமான் ...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் கண்மூடித்தனமாய் அல்லாஹ்வை நம்புகிறேன் என்னை மூடன் என்றாலும் பரவாயில்லை. அதே வேளை கண்னை மூடிக்கொண்டு மூட நம்பிக்கை கொள்ளமாட்டேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

//இறைவனை அறிந்துகொள், உயர்வாய் என்றால் அது நம்பிக்கை
என்னையும் என் குடும்பத்தையும் இறைவன் காப்பான் என்று
உழைப்பதை நிறுத்தினால் அது மூட நம்பிக்கை//

புள்ளிவிவரப்படி இஸ்லாம் வளர்கின்றது
புளகாங்கிதம் அடைவதில் மகிழ்ச்சி
சொல்லிக் கொள்ளும்படி ஈமான் வளரவில்லை
சொல்லொண்ணா வேதனையில் இதய நெகிழ்ச்சி
அன்றைய முஸ்லிம்கள் வென்றனர் அறிவியல்- கணிதம்
இன்றைய முஸ்லிம்கள் இதில் எத்தனை சதவிகிதம்?
மூளைச் சலவை செய்து இளைஞர்களை எல்லாம்
மூலையில் அமர வைத்தது முல்லாக்களின் வேலை!!
ஆங்கிலம் படித்தால் ஆகாதென்று “தீர்ப்பு” அன்று
தேங்கினோம் அரை நூற்றாண்டு கல்வியில் இன்று

“மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பாகுபடுத்துவதே தவறு; மற்ற கலாசாலைகளில் கற்பிக்கப்படும் விடயங்கள் மதரஸாக்களில் “அரபு மொழியில்” பயிற்றுவிக்கின்றோம்; ஆனால், ஒரே வேறுபாடு மதரஸா கல்வித் திட்டத்தில் “ஷரி அத்” பின்பற்றப்படுகின்றது” - இவ்வாறு நேற்று நடந்த அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அக்கல்லூரியின் முதல்வர் மேதகு முஹம்மத் குட்டி ஆலிம் அவர்களின் ரத்தினச் சுருக்கமானப் பேச்சில் அடியேன் கேட்டுத் “தெளிவு” பெற்றேன்!

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ அதிரை சித்திக் அவர்களின் ரமலான் பற்றிய கவிதை

http://penaamunai.blogspot.com/2012/06/blog-post_28.html

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஈமானாய் இருந்தாலும் அதிலும் வரம்பு வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதாகவே நான் காண்கிறேன்.//

அஸ்தஃபிருல்லாஹ்.

Unknown said...

அன்புச் சகோ சித்திக்,

>>>>என்னையும் என் குடும்பத்தையும் அல்லாஹ் காப்பான் என நம்பி உழைப்பை கை விடுவது மூட நம்பிக்கை <-------> உங்களின் சிந்தனை புதியதாக இருக்கிறது ..உங்களின் கவிதையை போல ..<<<<

உழையுங்கள்.
அதன் பலனை இறைவன் தருவான்.
காலமெல்லாம் உழைக்காமல்
நான் உண்ண வேண்டும்
என் குடும்பம் உண்ண வேண்டும்
இறைவா எனக்கு அருள்வாய்
என்று சொல்லாதீர்கள்
அது ஈமான் இல்லை
ஈமானைக் கொலைசெய்வது
இப்போது நான் சொல்ல வரும் செய்தி
தெளிவாகிறதா உங்களுக்கு?

>>>>ஒட்டகத்தை கட்டி விட்டு இறைவனிடமும் பாது காப்பு தேடு என முகமது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்<<<<<

அருமையாகத்தானே சொல்லி இருக்கிறார்கள். ஒட்டகத்தைக் கட்டாதே. இறைவனிடம் பாதுகாப்பு தேடு என்று கூறவில்லையே? இதைத்தான் நானும் சொல்கிறேன்?

>>>>உழைப்பை ..கைவிட்டு விட்டு இறைவனிடம் கேட்பது மூட நம்பிக்கை என்பதை கொஞ்சம் மாற்றி சிந்திக்கணும்..<<<<

எப்படி?
ஒருநாளும் ஒரு பொழுதும் நான் உழைக்கவே மாட்டேன்
இறைவா சோறுபோடு இறைவா சோறுபோடு
என்றுமட்டும் துவாச் செய்துகொண்டே இருப்பேன்
எனக்கு நீ சோறுபோடவேண்டும்
சோறுபோடுவாய் என்ற ஈமான் எனக்கு இருக்கிறது
என் மனைவி மக்களுக்கும் சோறுபோடவேண்டும்
அவர்களுக்கும் ஈமான் இருக்கிறது
இப்படியா?
இது இறைவனை அவமதிப்பதல்லவா?
அவன்மீது உள்ள ஈமானை
நாமே கேலி செய்வது அல்லவா?

மடல் கடுமையாக இருந்தால் சகோ சித்திக் என்னை மன்னிக்கவேண்டும். கோபப்படுத்துவதல்ல என் நோக்கம். புரிதலை வளர்ப்பது. அதை மட்டும்தான் நான் அதிரை நிருபரில் செய்துவருகிறேன். என் எண்ணம் இஸ்லாமுக்கு மிகுந்த ஆதரவானது. அதில் எனக்கு ஐயம் இல்லை. இதை அனைவரும் உணரவேண்டும் என்று விழைகிறேன்.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச்சகோ கிரவுன்,

>>>>நான் கண்மூடித்தனமாய் அல்லாஹ்வை நம்புகிறேன் என்னை மூடன் என்றாலும் பரவாயில்லை. அதே வேளை கண்னை மூடிக்கொண்டு மூட நம்பிக்கை கொள்ளமாட்டேன்.<<<<

நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் எண்ணம் தெளிவாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு சொல்லை மட்டும் மாற்றிவிட்டால் நீங்கள் நினைப்பது சரியாகப் போய்ச்சேரும்.

>>>கண்ணை மூடிக்கொண்டு மூட நம்பிக்கை கொள்ளமாட்டேன்<<<

அமர்க்களம். இதைத்தான் நான் இந்த இழையில் சொல்ல விழைகிறேன். நீங்கள் ஆமோதித்திருக்கிறீர்கள்.

>>>கண்மூடித்தனமாய் அல்லாஹ்வை நம்புகிறேன்<<<<

பரிசுத்தமான ஈமான் கொண்டுள்ளதாகச் சொல்ல விரும்புகிறீர்கள். இது மிகவும் சரி. அப்படித்தான் ஒவ்வொரு இஸ்லாமியனும் இருக்க வேண்டும். இதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

ஆனால்....

கண்மூடித்தனம் என்ற சொல்லை மட்டும் மாற்றவேண்டும். இஸ்லாம் கண்மூடித்தனத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.

அளவில்லாமல் நான் அல்லாஹ்வை நம்புகின்றேன்.
வேறு எதனையும்விட அதிகமாக அல்லாஹ்வை நம்புகின்றேன்.
எல்லையற்று நான் இறைவனை நம்புகின்றேன்.
அப்பழுக்கற்று நான் அவனை நம்புகின்றேன்
துளியும் சிதைவின்றி நான் அவனை நம்புகின்றேன்
குறையின்றி முற்று முழுதாக இறைவனை நம்புகின்றேன்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், மூடத்தனம், கண்மூடித்தனம், மூடநம்பிக்கை என்பதையெல்லாம் இஸ்லாம் விரும்பவில்லை. அப்படியானவர்களின் அறியாமையைப் போக்க நிறைய இஸ்லாம் சொன்ன செய்திகளை என்றோ வாசித்த நியாபகம். எவரேனும் அப்படியான குர்-ஆன் வரிகளையோ ஹதீசுகளையோ இட்டால் மகிழ்வேன்.

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பு நண்ப கலாம்,

>>>மூளைச் சலவை செய்து இளைஞர்களை எல்லாம்
மூலையில் அமர வைத்தது முல்லாக்களின் வேலை!!<<<<

சூப்பர்...... நாம் மீட்டெடுப்போம் நம் இனத்தை, கைகொடுங்கள்!

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

//சூப்பர்...... நாம் மீட்டெடுப்போம் நம் இனத்தை, கைகொடுங்கள்!//
ஜஸாக்கல்லாஹ் கைரன். மிக்க நன்றி

இவ்வரிகட்கு உங்கட்கு முன்பாக கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்களிடம் நேரில் வாழ்த்துப் பெற்றேன். அவர்கள் அபுதபி அய்மான் சங்கத்தில் “இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு” விழாவில் உரைநிகழ்த்தி விட்டு அமர்ந்ததும் எனது இக்கவிதையினை அவர்களின் மேலான பார்வைக்கு வைத்தேன்;வியந்து சொன்னார்கள்.”நான் இங்கு பேசிய பேச்சின் சாரம் யாவும் உங்கள் கவிதைக்குள் கொண்டு வந்து விட்டீர்கள்” என்றார்கள்; நான் சொன்னேன், “இக்கவிதையை அடியேன் எழுதியது இரண்டாண்டுகட்கு முன்பு; அதிலும் இந்த “மூளைச் சலவைக்குள்” அகப்பட்டவன் நானும் ஒருவன்; யான் பட்ட நட்டங்கள் என் சமுதாய இளைஞன் இனிமேல் படக்கூடாது என்ற விரக்தியில் எழுந்த வலிகள் இவ்வலிகள்” என்று.
அன்று முதல் என் கவிதைகளின் இரசிகனாக ‘கவிக்கோ” ஆனார்கள்; இன்று நீங்கள் (கனடா கவிஞர் அன்புடன் புகாரி) என் கவிதைகளை இரசிக்கின்றீர்கள். இரசிப்பதற்கு என்ற நோக்கமன்று என் கவிதைகள்;இனத்தை கவ்விக்கொண்டிருக்கும் இப்படிப்பட்ட விடயங்களைச் சுட்டிக் காட்டவே என்பதை இம் மாமன்றத்தில் பதிவு செய்கின்றேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.