Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவதூறு, பரப்பும் வலைதளத்திற்கு , ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம் ! 42

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2012 | , , , , ,


அஸ்ஸலாமு அழைக்கும்,

அதிரை நிருபர் வலைத்தளத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களை பற்றியும், ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பற்றி திரித்து கூறப்பட்ட செய்திகள், ஒருதலைபட்சமாக உள்ளது.  உங்கள் வலைத்தளத்தில் வந்துள்ள பலரது கருத்துகளும் முழுமையாக விளக்கங்கள்  தரப்படாத காரணத்தினால் வெளிநாடு வாழும்  சகோதர்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மீது வெறுப்பு ஏற்படுமளவுக்கு, தங்களது வலைதளத்தை வளர்த்து உள்ளீர்கள்.  

ஷம்சுல் சங்கத்தின் தன்னிலை விளக்கம் அனுப்பியுள்ளோம்.  எவ்வித திருத்தமும் இல்லாமல் தங்கள் வலைத்தளத்தில்  இன்றே பிரசூரிகிம்படி கேட்டுகொல்கொறோம்.

அவதூறு, பரப்பும் வலைதளத்திற்கு , ஷம்சுல் இஸ்லாம்  சங்கத்தின் விளக்கம்  ! 


அஸ்ஸலாமுஅலைக்கும்.

நமதூர் அதிராம்பட்டினம், மார்க்க ரீதியிலும் இந்தியச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டும் வாழும் மக்களைக் கொண்ட  ஊராக இருந்து வருகிறது. நமதூரில் நடக்கும் நிகழ்வுகளில் தேவையானபோது தலையிட்டு, மார்க்க ரீதியிலும்  நம் நாட்டுச் சட்ட ரீதியிலும் தீர்வுகளை வழங்க நமது முன்னோர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்சுல் இஸ்லாம்  சங்கம் கடந்த 92 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

உள்ளூர் முஸ்லிம் குடும்பங்களிடையே ஏற்படும்  சிவில் விவகாரங்களில், குறிப்பாக திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்றவற்றில் மார்க்க அறிஞர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்றுத் தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நமதூருக்கு மார்க்கச் சொற்பொழிவுக்காக சித்தார்கோட்டையிலிருந்து  அழைத்துவரப்பட்ட கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் நமது உள்ளூர் நடவடிக்கைகளுக்கு  ஊறு விளைக்கும்படியாக இயக்க சார்பு இளைஞர்களைத் தூண்டிவிட்டதால் எழுந்துள்ள அமைதியின்மைக்குத்  தீர்வு காண வேண்டியும், அவர் வசிக்கும் பகுதி சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவின் எல்லைக்குள் இருக்கும்  காரணத்தாலும், கடந்த தேதி: 28 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கதிற்கு நேரில் வந்து விளக்கம் தரும்படிக் கோரப்பட்டது.

ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் தக்வா பள்ளி செயலாளருக்கும் இடையே வழக்கு நடந்து வருவதாலும், பொதுவில் பேசுவது வழக்கைப் பாதிக்கும் என்பதாலும், தன்னால் கலந்து கொள்ள முடியாதென்றும்  தெரிவித்த நிலையில், 29அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு சம்சுல் இஸ்லாம் சங்க  நிர்வாகிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களது வீட்டிலேயே சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடு தேடி வந்தவர்களை முகமன்கூறிச் சந்திக்கும் இஸ்லாமியப் பண்பாடின்றி, சுமார் 10-20  நிமிடங்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்க வைத்துவிட்டு, "சித்தீக் பள்ளியில் போய் இருங்கள், பேசலாம்" என்று  தெரிவித்தார்.

அவ்வாறே, சங்க நிர்வாகிகளும் சித்தீக் பள்ளிக்குச் சென்றபோது, இயக்க சார்பு இளைஞர்களையும் உடன் வைத்துக்கொண்டு "இப்போது பேசலாம்" என்று சொன்னார். அதற்கு சங்க நிர்வாகிகள், “இயக்க சார்பு இளைஞர்களை வரவழைத்துக்கொண்டு  சங்க நிர்வாகிகளுடன் பேச விரும்புவது சரியல்ல. வெளியூரிலிருந்து எத்தனையோ ஆலிம்கள்  கற்கவும்,  கற்றுகொடுக்கவும் வந்துள்ளனர். ஆனால், உங்களைப் போன்று இயக்க சார்பு இளைஞர்களுடன் இணைந்து  முஹல்லா சங்கத்தையும் அதன் நிர்வாகிகளான உள்ளூர் பிரமுகர்களையும் அவமதித்ததில்லை” என்று  சொல்லி, அவருடன் பேசாமல் திரும்பி விட்டனர்.

அதிரையில் பல்வேறு அரசியல் கட்சி சார்பு இயக்கங்களும்,சமுதாய இயக்கங்களும் இயங்கி வந்தாலும், உள்ளூர்  அமைதிக்கு ஊறு விளைக்கும் அசாதாரண நடவடிக்கைகளின்போதும் சட்ட ரீதியான வழிமுறைகளில் தலையிட்டுத்  தீர்வு காணும் அதிரை முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற முஹல்லா சங்கங்களில் சம்சுல் இஸ்லாம்  சங்கமும் ஒன்று. அவ்வகையில், ஜனாப் ஹைதர் அலி ஆலிம் மற்றும் தக்வா பள்ளி கமிட்டியிடையே ஏற்பட்டுள்ள  வழக்கு காரணமாக சம்சுல் இஸ்லாம் முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைதியின்மை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில், இப்பகுதிக்குட்பட்ட ஆயிஷா மகளிர் மன்றத்தில் நடந்துவந்த  ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

உள்ளூர் நடவடிக்கைகளில் பொறுப்புள்ள முஹல்லா சங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட நடவடிக்கையே இது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் போன்ற தகுதியுடைய உள்ளூர் மார்க்க அறிஞர்களை ஆலோசகர்களாகக் கொண்டுள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி நபர்கள்  தலையிடுவது, முஹல்லாவாசிகளை அவமதிக்கும் செயலாகும். முஹல்லாவுடைய கட்டுப்பாடு மற்றும்  அமைதிக்கு ஊறு விளைக்கும் எத்தகைய நடவடிக்கையையும் சம்சுல் இஸ்லாம் சங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தேவையெனில், மார்க்கம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்  என்பதையும் முஹல்லாவாசிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

***********

கீழ்கண்ட விளக்கங்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களுக்கும், விளக்கம் வேண்டுபவர்களுக்கும் போதுமானதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்:

1) ஹைதர் அலி ஆலிம் சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில் தலையிட்டதற்காகவா அவர்மீது நடவடிக்கை?

இல்லை. மேலுள்ள விளக்கத்தில் 2,3 & 4 ஆம் பத்திகளில் சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும், முஹல்லா  சங்க நிர்வாகிகளை அவமதித்து, உள்ளூர் இளைஞர்களைத் தூண்டியதற்காகவுமே ஆயிஷா மகளிர் மன்றத்தில்  அவரது பயான் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்கொண்டு தவறான பிரச்சாரங்களைப் பரப்பாமலிருக்க பெரிய  ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

2) ஹைதர் அலி ஆலிம் அவர்களை ஊரைவிட்டு வெளியேறும்படி சங்கம் நிர்ப்பந்தித்ததா?

இல்லை. பிரச்சினை பெரிதாகாமலிருக்க பொதுவில்  பயான் செய்வதற்கு மட்டுமே தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இது பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும், பிரச்சினை  மேலும் வலுக்காமல் இருக்கவும் எடுக்கப்பட்ட சங்கத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட நடவடிக்கையே அன்றி, தனி நபர்  மீதான வெளியேற்றும் நடவடிக்கை அல்ல.

3) சம்சுல் இஸ்லாம் சங்கம் ஹைதர் அலி ஆலிமை அவமதித்ததா?

இல்லை. மேலே 2 & 3 ஆம் பத்திகளில் சொன்னபடி, அவரது விளக்கம் பெறும் நோக்கத்தில் கண்ணியமாக அழைக்கப்பட்டதை அவர்  ஒவ்வாத காரணங்களைச் சொல்லி மறுத்ததால், பொதுவில் அவருக்கு சங்கடம் ஏற்படாமலிருக்க, அவரது இல்லத்திற்குச்  சென்ற உள்ளூர் முக்கியஸ்தர்களான சங்க நிர்வாகிகளைச் சந்திக்காமல் அவர்தான் அவமதித்தார்.மேலும்,  ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களை அதிரைக்கு அழைத்து வந்து, அதன் முஹல்லாவுக்குட்பட்ட சித்தீக் பள்ளி, தக்வா பள்ளி  மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிகளில் பொறுப்பான பதவிகளைக் கொடுத்து கண்ணியப்படுத்தியதும் சம்சுல் இஸ்லாம்  சங்கத்திற்கு உட்பட்டவர்களே.

4) மார்க்க அறிஞரின் பயானைத் தடுப்பது சரியா?

சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மஷ்வரா அடிப்படையில் எடுக்கப்படும் அவசர நடவடிக்கையின்படி இது சரியே.

5) ஹைதர் அலி ஆலிமின் பயான்களால் நமதூர் மக்களிடம் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே?

ஓரளவு உண்மையே. எனினும், அல்லாஹ் - ரசூல் (ஸல்) அவர்களின் போதனைகளை எடுத்துச் சொல்லும் பல அறிஞர்களும் பேச்சாளர்களும் அதிரையில் உளர். அவர்களை முறையாகப் பயன்படுத்தி இருந்தாலும் அத்தகைய  விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்ஷா அல்லாஹ் சம்சுல் இஸ்லாம்  சங்கம் இவ்விசயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

6) சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்திற்காக ஹைதர் அலி ஆலிமை பலி கடாவாக்குவது நியாயமா?

ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் எத்தகைய விரோதமும் இல்லை. சித்திக் பள்ளி சொத்து விவகாரத்தை சம்சுல் இஸ்லாம் சங்கத்திடம் ஒப்படைத்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி, உலமாக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோம்.

7) ஹைதர் அலி ஆலிம் அவர்கள்மீது வழக்குத் தொடுத்தவர் மீது சங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இரு தரப்பிற்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையிலிருக்கும்போது முஹல்லா சங்கம் சமாதான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட முடியும். அவ்வகையில்தான் இரு தரப்பையும் சுமூகமாகப் பேச வைத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முதலில் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்டதும், வர மறுத்தபோது நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதும் நடந்தது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் நிர்வாகிகளை அவமதிக்காமல் ஒத்துழைத்திருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியபடி நியாயமான தீர்வு எடுக்கப்பட்டிருக்கும். 

மேலும், சம்பத்தப்பட்ட நபரிடமும் பேசியுள்ளோம், கேசைத் திரும்பப் பெறும்படி யும் கூறியுள்ளோம், ஆனால் இது இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கும் எவராக இருந்தாலும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

******************

அன்பிற்குரியவர்களே! நமதூர் அதிராம்பட்டினம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பிழைப்பு தேடிவந்த பலரை  ஆதரித்தும், கண்ணியப்படுத்தியுமே வந்துள்ளது. கண்ணியத்துக்குரிய ஆலிம்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும்  வணிகர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஆதரித்து வருகிறோம். எனினும், அவர்கள் எல்லோரும்  முஹல்லா ஜமாத்துகளுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சில வருடங்களாக நமதூர் உலமாக்களின் எத்தகைய ஆலோசனையையும்  ஏற்காமல், தன்னிச்சையாகச் செயல்படுவதோடு, சித்தீக் பள்ளியின் சொத்து விவகாரத்தில் இன்னொரு முஹல்லா  இளைஞர்களை அழைத்துவந்து அமைதியின்மையை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். அப்பகுதியில் சம்சுல்  இஸ்லாம் சங்கம் செயல்பட்டுவரும் நிலையில் உள்ளூர் நடவடிக்கையில் ஹைதர் அலி ஆலிம் செயல்பட்டது  வரம்புமீறிய நடவடிக்கை என்பதோடு முஹல்லாவாசிகளின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத தன்னிச்சையான  போக்கு என்பதையும் கவனத்தில் கொண்டு, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் நன்மை நாடிய நடவடிக்கைகளுக்கு  ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ வழங்குவதே நன்மை பயக்கும்.

அவ்வகையில், பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறோம் என்ற ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் இணையதளங்களில்  சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவுகளும் தனிநபர் தளங்களும்  சட்ட நடவடிக்கைக்குட்பட்டது என்பதை உணர்ந்து பொறுப்பாகச் செயல்படும்படி வேண்டுகிறோம். இவ்விசயம் தொடர்பாக மேலதிக விளக்கம் வேண்டுவோர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு,
சம்சுல் இஸ்லாம் சங்கம்
நிர்வாகம் – அதிரை

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம் இன்று மின்னஞ்சல் வழியாக எவ்வாறு கிடைக்கப்பெற்றதோ அவ்வாறே பதியப்பட்டுள்ளது எவ்வித மாற்றம் செய்யாமல்.


** உண்மை (ஹக்) எந்தப்பக்கம் நிலைத்திருக்கிறதோ அதனைச் சார்ந்து அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் திருப் பொருத்ததை நாடி அதன் வழியில் இருப்பதே தனித் தன்மையுடன் கூடிய உண்மைநிலை ! மாற்றுக் கருத்துடையவர்கள் நெறியாளரின் தனி மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரலாம்.

அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான்.

பின்னூட்டங்களில் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள், தனிமனித, அல்லது அமைப்பு  தாக்குதல் இல்லாமல் நியாய உணர்வுடன் கருத்துகளை பதியுங்கள், வரம்பு மீறல் இருக்குமாயின் உடணடியாக அவ்வகை கருத்துகள் நீக்கப்படும்.

நெறியாளர்
editor@adirainirubar.in

42 Responses So Far:

sabeer.abushahruk said...

//வெளிநாடு வாழும் சகோதர்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மீது வெறுப்பு ஏற்படுமளவுக்கு, தங்களது வலைதளத்தை வளர்த்து உள்ளீர்கள்.//

அத்தனை வலுமிக்கதாக அதிரை நிருபர் திகழ்வதைக் கேள்விப்படும்போது செவிகளில் தேன் வந்து பாய்கிறது. அதே சமயம், இந்த விளக்கத்தையும் பதிந்து விட்டதால் மேற்கண்ட வாக்கியத்தை இப்படி மாற்றி எழுதிக்கொள்ளலாமா?

//வெளிநாடு வாழும் சகோதர்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மீது உகப்பு ஏற்படுமளவுக்கு, தங்களது வலைதளத்தை வளர்த்து உள்ளீர்கள்.//

sabeer.abushahruk said...

//அவ்வகையில், பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறோம் என்ற ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் இணையதளங்களில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவுகளும் தனிநபர் தளங்களும் சட்ட நடவடிக்கைக்குட்பட்டது என்பதை உணர்ந்து பொறுப்பாகச் செயல்படும்படி வேண்டுகிறோம்.//

ஐயய்யோ பயமாயிருக்கு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்ஹம்துலில்லாஹ்!

பிரதான அனைத்து வளைதளங்களிலும் சங்க செய்தி வெளியானது திருப்தி அளிக்கக்கூடியது. இவ்வாறு தகவல் வெளிப்படுத்தி இருப்பது சங்கம் கிட்டத்தட்ட முறையாக செயல்பட துவங்கியதை காட்டுகிறது.

இந்த கட்டுரையில் கூட சில தவறு இருக்கலாம், அல்லது ஏற்கனவே சில தளங்களில் வெளியான கட்டுரையிலும் தவறு இருக்கலாம். இனியும் குற்றம் குறை எதன் மீதும் யார் மீதும் காணாமல் சங்கத்தின் அவசியத்தை உணர்ந்து எதிலும் விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையுடன் ஏகோபித்த முடிவாக செயல் படுவது இன்றைக்கும், எதிர் காலத்துக்கும் நல்லது.

எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூறும் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதில் கிட்டத்த எல்லாம் அறிந்த கண்ணியமிகு ஹைதர் அலி ஆலிம் அவர்களே, நடந்த உண்மையை பொதுவிலோ அல்லது சில பிரதிநிதிகளை வைத்தோ அறிவித்து, யார் தரப்பில் தவறு நடந்தாலும்,தவறு செய்தவர்கள் அதற்காக மன்னிப்பு கோருவதும் சகல பிரச்சனைக்கும் முற்றுப் புள்ளி வைக்கும். இன்சா அல்லாஹ்!

Yasir said...

//ஐயய்யோ பயமாயிருக்கு.// கை,கால் எல்லாம் நடுங்குது ....ரொம்ப்பப பயமாயிருக்கு

// மீது வெறுப்பு ஏற்படுமளவுக்கு, தங்களது வலைதளத்தை வளர்த்து உள்ளீர்கள்.// நாங்கள் புழங்கும் அதிரை நிருபரின் வளர்ப்பை பற்றி அவதூறாக பேச எவ(ரு)னுக்கும் உரிமையில்லை,சுய கட்டுபாடுடன் இத்தளம் இயங்கி வருகிறது

அபூ சுஹைமா said...

Yasir சொன்னது…

// மீது வெறுப்பு ஏற்படுமளவுக்கு, தங்களது வலைதளத்தை வளர்த்து உள்ளீர்கள்.// நாங்கள் புழங்கும் அதிரை நிருபரின் வளர்ப்பை பற்றி அவதூறாக பேச எவ(ரு)னுக்கும் உரிமையில்லை,சுய கட்டுபாடுடன் இத்தளம் இயங்கி வருகிறது

:-)

அதிரைக்காரன் said...

அன்புள்ள சகோதரர்களுக்கு .. பின்னூட்டங்களால் சகமுஸ்லிம்களில் எவரேனும் ஒருதரப்பினரோ அல்லது இருதரப்பினருமோ இழிபடப்போவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பொதுவெளியில் உரையாடும் குறைன்தபட்ச நாகரிகமின்றி மரியாதைக்குறைவான சொற்பிரயோகங்களால் பகைவளருமேயன்றி தீர்வு கிடைக்காது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அபூ...................... சலஃபி சொன்னதிலிருந்து..
சகோதரா.. சலாம்

திரும்ப திரும்ப ஒரு சார்பு குற்றச்சாட்டை சொல்வதால் பகை வலுக்குமேயன்றி தீர்வாகாது.

ஒற்றுமையாக்கி, ஏக மனதாக ஏற்பது பற்றி சொல்லுங்கள்.

எதிர்ப்புடன் செய்து காட்டலாம், ஆனால் அது நாகரீகமல்ல!

ஆலிம்சா வரும்போது வந்த குழுவினர் விபத்துபோல யதார்த்தமாக கூட சேர்ந்திருக்கலாம்.அதன் உண்மையும் ஆலிம்சா அவர்களின் உள்ளம் மட்டுமே அறியும்.சங்கத்தின் அங்கத்தினருக்கு இப்படியொரு யதார்த்த சூழ்நிலை இப்படியொரு முடிவை எடுத்திருக்க நேர்ந்திருக்கலாம். சங்கத்தின் செயலாளர் பொருளாளர் இவர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா அல்லது அவர்களாக நடுநிலையாக ஒதுங்கிக் கொண்டார்களா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.நாமாக சொல்லிக் கொள்வது நம்மையே நாம் உடைக்கும் முயற்சியே.

Adirai khalid said...

இன்ஷா அல்லாஹ் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பெண்கள் பயான் தொடர்ந்து நடக்க நடுத்தெருவில் மர்ஹூம் மு.இ.ஹசன் தாய் வீடு , அவர்களின் தம்பி மு.இ ஷாபி வீடு, மேலும் புது ஆலடி தெருவில் எனது வீடு, தசசத்தெருவில் முன்னால் த.மு மு.க சரபுதீன் அவர்களின் வீடு போன்ற எராளமான வீடுகள் தயாராக உள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்சியடைகின்றோம்

அல்லாவிற்கு மட்டுமே பயந்து வாழும் நாங்கள் எந்த சங்கத்திற்கோ அல்லது மனிதர்களின் மிரட்டலுக்கோ பயந்தவர்களிலை என்பதை இங்கு பகிரங்கமாக அறிவிக்கின்றோம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//சத்தியம் செய்ய தயாரா? சம்சுல் இஸ்லாம் சங்கத்தினருக்கு மௌலவி ஹைதர்அலி ஆலிம் அழைப்பு://

மரியாதைக்குரிய ஆலிம்சா:
அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ் அறிந்த உங்கள் உள்ளத்தை நீங்கள் சொல்ல நாங்களும் அறிய முடிகிறது. ஊர் பற்றிய உங்களின் நல்ல எண்ணத்திற்கு மகிழ்ச்சி.
ஒரு தரப்பு சத்தியம் செய்து மறு தரப்பு பாவியாகவோ அல்லது அதற்கு பயந்து ஒதுங்கவோ வேண்டாம்.
தேவை ஒற்றுமை, அது நிச்சயமாக உங்களாலும் ஆகட்டும். எனவே நேரில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தவறுகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் வருத்தம் தெரிவித்துக் கொண்டு ஒற்றுமைக்கடலில் இணைந்து அல்லாஹ்வின் பெரும்பொருத்தத்தை அடையலாமே! ஆமீன்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பானவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

இரண்டு மாதங்களாகக் கணினியின் முன் அமர வாய்க்கவில்லை; மன்னிக்கவும்.

//ஹைதர் அலி ஆலிம் அவர்களை அன்றைய தினம் (29-08-2012) காலை 10:30 மணியளவில் சங்க தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்களிடம் "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்த கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்கள், ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் மீண்டும், நீங்கள் வர இயலவில்லை என்றால் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள் "சங்க தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை, தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய 10 நிமிடத்திலேயே மீண்டும் சகோதரர்கள் சங்க தலைவர், பேரூராட்சி தலைவர், சங்க துனை தலைவர், துணை செயலாளர் மற்றும் இரண்டு பிரதிநிதிகள் சகிதமாக சென்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க முற்பட்டுள்ளார்கள்.//
http://adirainirubar.blogspot.in/2012/09/blog-post.html

மேற்காணும் தகவல் உண்மையானால், 29.08.2012 அன்றிலிருந்து தக்வாப் பள்ளியில் ஹைதர் அலீ ஆலிம் அவர்களின் பயான் நடைபெறுவது தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருந்திருப்பது யாருக்காவது புலப்படுகிறதா அல்லது எனக்கு மட்டும்தான் அவ்வாறு தோன்றுகிறதா என உறுதியாகத் தெரியவில்லை.

//வீடு தேடி வந்தவர்களை முகமன்கூறிச் சந்திக்கும் இஸ்லாமியப் பண்பாடின்றி,//

ஹைதர் அலீ ஆலிம் ஸலாம் சொல்லவில்லையா? ஸலாத்துக்கு பதில் சொல்லவில்லையா?

இரண்டு மாதிரியாக ஏன் கேட்கிறேனென்றால் நான் யாருடைய வீட்டுக்காவது போனால், நான்தான் ஸலாத்தைத் துவங்கி அனுமதி பெறுவேன். பலராகச் சென்றாலும் அவ்வாறே. நான் தலைகீழாகக் குறிப்பிடுவதாக தயவு செய்து யாரும் நினைக்க வேண்டாம். அல்லாஹ்வின் வேதம் (24:27) அப்படித்தான் சொல்கிறது. ஷம்ஸுல் இஸ்லாம் சங்கத்துச் செய்தி (வீடு தேடி வந்தவர்களுக்கு முகமன் கூறிச் சந்திப்பது இஸ்லாமியப் பண்பு என்று) வேறு மாதிரியாகச் சொல்கிறது.

//முஹல்லா சங்கம் சமாதான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட முடியும். அவ்வகையில்தான் இரு தரப்பையும் சுமூகமாகப் பேச வைத்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முதலில் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சங்கத்திற்கு அழைக்கப்பட்டதும், வர மறுத்தபோது நிர்வாகிகள் அவரது இல்லத்திற்குச் சென்றதும் நடந்தது//

92 ஆண்டுகள் அனுபமுள்ள ஷம்ஸுல் இஸ்லாம் சங்கம், சமாதானம் பேசுவதற்கு இன்னும் கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கலாம் என்பதும் சங்கத்தின் செயலாளரையும் பொருளாரையும் மறந்துவிட்டுப் போகுமளவுக்கு அவசரம் காட்டியிருக்கக் கூடாது என்பதும் எனது கருத்து.

அதிரை நிருபர் நிர்வாகிகளுக்கு,
"ஹைதர் அலீ ஆலிம்சாவைத் தூக்கு!" என்ற தலைப்பிட்டு மூன்று மாதங்களுக்கு முன்னரே ஓர் ஆக்கத்தை எழுதி உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அதை நீங்கள் இன்றுவரைக்கும் போடவில்லை; பரவாயில்லை. அதைப் படித்துப் பார்த்தீர்களா இல்லையா என்றுகூடத் தெரியவில்லை. இதுவரை படிக்காவிட்டால்
http://www.aimuaeadirai.blogspot.in/2012/06/blog-post_13.html
என்ற சுட்டியில் அது கிடைக்கும் - தகவலுக்காக.

கடந்த 2.9.2012 ஞாயிறன்று மக்ரிபுத் தொழுகைக்கு நான் தக்வாப் பள்ளிக்குப் போயிருந்தபோது தொழுகை முடிந்ததும், "சுன்னத் தொழுகைக்குப் பிறகு தீனுடைய பேச்சுப் பேசப்படும்" என்று தப்லீக் ஜமாத் சார்பில் இஃலான் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமைதானே கஷ்த் என்று எனக்குள் ஒரு குழப்பம். விசாரித்தபோது 'ஜோடு' என்று சொன்னார்கள். சுன்னத் தொழுகைக்குப் பிறகு தீனுடைய பேச்சு பேசப்பட்டது - ஹைதர் அலீ ஆலிம்சாவால்.

தற்போது நிலவும் கருத்து வேறுபாட்டில் சமாதானம் ஏற்படவேண்டும் என்று என்னைப் போலவே எல்லாரும் இங்குக் கருத்து எழுதியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி! ஆனால் அதற்கு அடிப்படையான 1 ஏக்கர் 59 செண்ட் (சர்வே 255-2) புகல் இனாம் (வக்ஃபு - TD731) பற்றி யாருமே பேசக் காணோமே? காரணம் என்னவாயிருக்கும்?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// நான் சொல்வதுபொய்யானால் எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை அழித்து விடுவானாக என்று சத்தியம் செய்யதயாராக இருக்கிறேன்.//

மௌவ்லனா மௌலவி ,எ.ஹைதர் அலி ஆலிம் .அவர்கள் சொன்னது தன்னை மட்டும் அல்லாஹ் அழித்து விடுவான் என்று சொல்ல வில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் அல்லாஹ் அழித்து விடுவானாக.என்று மூன்று முறை தழு தழுத்த குரலில்.கூறியது குறிப்பிட தக்கது.

அது போன்று சம்சுல் இஸ்லாம் சங்கம் சத்தியம் செய்ய தயாரா?

அன்போடும் அரவணைப்போடும் எதையும் சாதித்து விடலாமே தவிர, சர்வாதிகாரத்தைக் கொண்டு ஒன்றும் சாதிக்க முடியாது என்பதை தின்னமாக அறிந்துக் கொள்ளுங்கள்.

அந்த அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான்.

// //அவ்வகையில், பரபரப்பாகச் செய்தி வெளியிடுகிறோம் என்ற ஆர்வத்தில் வலைத்தளம் மற்றும் இணையதளங்களில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பதிவுகளும் தனிநபர் தளங்களும் சட்ட நடவடிக்கைக்குட்பட்டது என்பதை உணர்ந்து பொறுப்பாகச் செயல்படும்படி வேண்டுகிறோம்./

அமைதி ஆளுமையையை கலங்க படுத்தும் விதத்தில்.எச்சரிக்கை மணியா?

எதிர்த்து ஒலிப்பது வாசகரின் குரல் என்பதை தெரிவித்தக் கொள்கிறோம்.

Aboobakkar, Can. said...
This comment has been removed by the author.
Adirai pasanga😎 said...
This comment has been removed by the author.
Adirai pasanga😎 said...

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதும் பொய்? அல்லாஹ்வே அறிவான் எது மெய் என்று'''

Anonymous said...

அன்புத் தம்பி யாசிர்,

“அவதூறு பரப்புகிறீர்கள்” என்று அபாண்டமாக தளத்தையும், “சட்டம் பாயும்” என்று அதட்டலாக தளத்தினரையும் மிரட்டும் இந்தப் பதிவுக்கு “போலீஸு புடிச்சிக்கிட்டு போயிடுமோ” என்று பயந்துதான் “பயமாயிருக்கு” என்று கருத்திட்டேன்.

ஆனால், நீங்களோ “அவதூறு பரப்புபவர்கள்” என்ற பண்புமிக்க கண்ணியமான புண்ணியவான்களின் குற்றச் சாட்டுக்கு ‘மறு கன்னத்தைக்’ காட்டாமல், ‘கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல்’ என்கிறீர்கள்.

இந்தப் பதிவீன் பொருளடக்கத்தைப் பற்றிய பத்தி பத்தியான அறிவு எனக்கு இல்லாததால், தளத்தைப் பற்றிய அபாண்டத்திற்கு மட்டுமே நான் கருத்திட்டதை உணர்க.

தவிர, 92 வருட கால சேவை என்ற குறிப்பு வாசித்ததும் எனக்கு ஏனோ, “சொல்ல்ல்லவே இல்ல்ல்லே” என்கிற கருத்தும் “இத்தனை காலமா வட போச்சே” என்கிற கருத்தும்தான் தோன்றியது.

(ஜாகிர்: “டே வாயை வச்சிக்கிட்டு சும்மா இரு”)

Sabeer Ahmed

Yasir said...

அபூ சுஹைமா சொன்னது…

//:-) //

:-) :---)

அன்பின் அ.நி நெறியாருக்கு

இந்த ஆலிமைப்பற்றியோ, அந்த சங்கத்தைப்பற்றியோ நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை. எனக்கு எல்லாம் புதுசாத்தான் இருக்கு
ஆனால் நான் அறிந்த பங்களிப்பாளானாக உள்ள இத்தளம் “ அவதூறு” பரப்புதளம் என்று சொல்வதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை

அவர்கள் இதைச்சொல்லி நீங்கள் அப்படியே பதிந்திருப்பது,யாரோ நம்மை கூப்பிட்டு “அண்ணே உங்க பேருக்கு முன்னாடி ஒரு கே.ப அல்லது ஒரு உ.ம சேர்த்து எழுதுங்கண்ணே அழகாயிருக்கும் “ என்று சொல்லி அதை நம் செய்ததுபோல் உள்ளது...மடியிலயே கை வைத்தால் எப்படி சும்மா இருக்கமுடியும்...அச்சுறுத்தல்களுக்கு பயந்து நம் இமெஜ்ஜை பாதிக்கும் மட்டுறுத்தலை நிறுத்த வேண்டாம்

நான் முன்னர் குறிப்பிட்டதுபோல் இது நமக்கு தேவையில்லாத சர்ச்சை , அ.நி உருவான நோக்கமும் இதுவன்று

வஸ்ஸலாம்

Noor Mohamed said...

அன்பின் ஜமீல் காக்கா
அஸ்ஸலாமு அலைக்கும்

//ஆனால் அதற்கு அடிப்படையான 1 ஏக்கர் 59 செண்ட் (சர்வே 255-2) புகல் இனாம் (வக்ஃபு - TD731) பற்றி யாருமே பேசக் காணோமே? காரணம் என்னவாயிருக்கும்?//

இங்கே விவாதிக்கும் கருவின் பொருள் இதுவே. இதற்கு நான் முழுமையாக தங்களோடு உடன்படுகிறேன்.

பொதுவாக Dispute Land cases களை எடுத்துக்கொண்டால், கோர்டில் பல முறை பல பக்கங்களில் பல ஆண்டுகள் counter petitions சமர்ப்பித்துக் கொண்டே இருந்தாலும், நீண்ட காலத்திற்குப் பின் தீர்ப்பு என்பது ஓர் எட்டா கனியாகி, இறுதியில் compromise க்கு கொண்டு வர கோர்டே முயற்சி செய்யும்.

அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய ஒன்றை இங்கே இணையத்தில் நாம் பேசுவதால் எவ்வித பயனுமில்லை. அதனால் எவ்வித தீர்வும் காணமுடியாது என்பதே என் கருத்து.


Adirai khalid said...

அல்லாஹ்வின் தன்டணைகளையும் அவன் மீது செய்யப்படும் சத்தியத்திற்க்கும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் நம் போன்றவர்களை விட மிகவும் அறிந்த மௌலவி அவர்கள் மக்கள் மத்தியில் தன் வலியையும், நிலையையும் நிரூபிக்க "பொதுவில் சத்தியம்" என்ற நிலைக்கு அவர் தல்லப்பட காரணம்

அநியாயமாக புனையப்பட்ட தேசதூரோக வழக்கை துரசிஷ்டவசமாக ஹைதர் அலி மௌலான எதிர்கொள்ளும் நேரத்தில் சமுதாயம் ஆதரவு கரம் நீட்டுவதற்கு பதிலாக, அவருக்கெதிரான அவதுறுகளும், தடைகளும் திட்டமிட்டு பரப்பும் பொழுது சாதாரண எந்த மனிதருக்கும் வலித்திருக்கும், சிந்தியுங்கள் அவரின் மன நிலையும் உடல் தளர்வும் எந்த நிலைக்கு தள்ளப் பட்டிருக்கும் என்பதை

சங்கத்தின் ஒருசில நிர்வாகிகள் செய்யும் தவரான செயல்பாடுகளுக்கு திரும்ப திரும்ப தவறிழைக்க வண்ணமாகத்தான் மேலே குறிப்பிடும் சங்கத்தின் விளக்கம் சித்தரிக்கப் பட்டுள்ளது

அதிகார துஸ்பிரயோகம் செய்யதீர்கள் அல்லாஹ் விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள், தவருக்காக அல்லாஹ்விடமும் பாதிக்கப் பட்டவர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள் . அல்லாஹ் கருனையாளன், யாவற்றையும் அறிபவன் மன்னிக்கக் கூடியவன்

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பானவர்களே! அதிரை நிருபர் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்களில் ஒருவன் என்ற முறையில் அதிரை நிருபரின் மேல் வீசப்பட்டுள்ள " அவதூறு பரப்பும் வலைத்தளம் " என்கிற வார்த்தை எங்களைப் போன்றோரை புண்படுத்தியுள்ளதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் அறிந்தவரை நடு நிலையோடு நடப்புகளை வெளியிட்டு வருகிறது இந்த வலைத்தளம்.

மேலும் நான் அறிந்தவரை கடந்த செப். முதல் நாள் ஜனாப். எல். எம். எஸ். முகமது யூசுப் அவர்களால் பதியப்பட்ட " மார்க்க பிரச்சாரகாரருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்?" என்கிற தலைப்பில் ஆக்கம் வெளியானது. அதைத்தொடர்ந்து பலரின் கருத்துக்கள் பின்னூட்டமாக வெளியிடப்பட்டன. இந்த பின்னூட்டங்களில் முதலில் வந்த பல சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்தன.

இதைப் பார்த்த நான் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் எவ்வித கருத்தும் வரவில்லையே- வந்தாலே உண்மை தெரியும் என்ற தனிப்பட்ட ஆர்வத்தில் அதன் முக்கிய நண்பர் ஒருவரை அழைத்து இப்படி ஒரு அறிக்கை வந்துள்ளது. சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பான கருத்துக்களும் வந்தால்தான் விபரங்கள் விளங்கும் அதற்கு ஆவன செய்யுங்கள் என்று கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் மூன்று நாட்களாக அப்படி எதுவும் வரவில்லை. பின்னர் அதிரை போஸ்டில் முதலில் மறுப்பு வந்தது.


நான் கூற விரும்புவது என்னவென்றால் முகமது யூசுப் அவர்களின் குற்றச்சாட்டுகளை அவை வெளியிடப்பட்ட அதிரை நிருபர் தளத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பிலும் மறுத்து கருத்து தெரிவிக்கப்பட்டால் அவையும் உடனே அதிரை நிருபரால் வெளியிடப்பட்டே இருக்கும்.தங்களின் மறுப்பை வெளியிடாமல் அதிரை நிருபர் தளத்தை குறை சொல்வது சரியல்ல என்றே எனக்குப்படுகிறது. தவறானால் நான் திருத்திக்கொள்வதில் தயங்கமாட்டேன்.


எனக்குத்தெரிந்து உண்மைகளை வெளிக்கொணர இருதரப்புக் கருத்துக்களையும் வெளியிடும் தளம்தான் அதிரை நிருபர் தவிர ஒரு பக்க கருத்தை இருட்டடிப்பு செய்து அவதூறு மட்டும் பரப்புவதல்ல. மாற்றுக் கருத்தை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடும்படி தராதபோது அல்லது தாமதித்தபோது அதிரை நிருபரை குறை சொல்லி பழி தூற்றுவது சரி என்று படவில்லை.

இதோ இப்போது அனுப்பி வெளியிடச்சொன்னபடி வரி பிசகாமல் - எடிட் கூட செய்யாமல்- எழுத்துப் பிழை கூட திருத்தாமல் -வெளியிட்டு தங்களின் நிலையை வெளிக்கொணர்ந்து இருககிறார்கள்.

ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். பல கவிகளும், கல்வியாளர்களும் ஆக்கங்களை பதிவு செய்யும் ஒரு வலைத் தளம் ஊரில் நடக்கும் ஒரு சென்சிடிவ் ஆன பிரச்னையில் ஒருதலைப்பட்ச்மாகவோ- அவதூறாகவோ நடந்துகொள்ள பொறுப்பு இல்லாமல் துணியாது என்பதை முதலில் அனைவரும் நம்ப வேண்டும். தனிப்பட்ட விரோதங்களை மனதில் வைத்து பொதுப் பிரச்னையில் நாம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி மேலும் பிரச்னைகளை வளர்ப்பதை விட இருக்கும் பிரச்னைகளை தீர்ப்பது எப்படி என்று அனைவரும் ஒன்று கூடி பேசி முடிவெடுத்தி அடுத்த ஆக்கப்பணிகளில் ஈடுபடுவதே அதிரைக்கும் நல்லது. அல்லாஹ்விடமும் பொருத்தத்தை பெறமுடியும் . எந்த தரப்பானாலும் நமது சொந்த ஈகோ என்பதைவிட ஊர் ஒற்றுமை முக்கியம் என்பதை உணரும் மனப்பாங்கை இறைவன் அனைவருக்கும் அருள்வானாக. ஆமீன்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அன்புச் சகோதரர்களுக்கு:

கண்ணியத்துக்குரிய, பாரம்பரியமிக்க எங்கள் மூதாதையர்களும் ஆளுமையில் இருந்த கனம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இந்த (மேற்கண்ட) விளக்கப் பதிவு அதிரைநிருபர் வலைத்தள நெரியாளரின் மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்ற (05-SEP-2012 இரவு 10 மணிக்கு மேல் இந்திய நேரம்) 17 நிமிடத்திற்குள் அவ்வாறே பதிவுக்குள் கொண்டு வந்தோம், அதுவும் அவர்களின் மேலான! வேண்டுகோளின்படியே, எவ்வித மட்டுறுத்தலும் இன்றி அதேநேரத்தில் நெறியாளரின் அடிக்குறிப்புச் செய்தியுடன் வெளியிட்டோம்.

நிற்க!

அவதூறு, பரபரப்பு ! என்று எந்த அடிப்படையில் சங்கம் முடிவுக்கு வந்தார்கள் !? ஊரில் ஒரு மார்க்க பிரச்சாரகர் பிரச்சாரம் செய்ய விதித்த தடையை சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கென்று இருக்கும் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிடாமல், அதிரை வலைத்தளம் ஒன்றில் மட்டும் வெளியிட அனுமதித்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயல் பரபரப்பா? அல்லது அதற்கான காரணங்கள் என்வென்று ஊரார் அறிந்த தகவல்களை சேகரித்து சகோதரர் LMS முஹம்மது யூசுஃப் தொகுத்தளித்தவைகள் பரரப்பா ? எது மூலகாரணம் !?

பாரம்பரியமிக்க சங்கம் முடிவெடுத்தது சரி, அதன் பின்விளைவுகளை உணர்ந்திராமலா இவ்வளவு அவசரமாக முடிவெடுத்து அறிவிப்பும் செய்திருப்பார்கள் !? நன்மைய நாடியே சங்கத்தின் முடிவு இருக்குமானால் அதனை ஊருக்குள்ளேயே அமைதியாக பேசி சகோதரர் ஹைதர் அலி ஆலிமை விளகியிருக்கச் செய்திருக்காலாமே ஒரு குறிப்பிட்ட வடத்திற்குள் இருக்கும் முஹல்லாவின் நிகழ்வை ஏன் பொதுவில் அந்த தகவலை பதியவேண்டும் !?

அதெல்லாம் இருக்கட்டும், சகோதரர் LMS முஹம்மது யூசுஃப் அனுப்பிய தகவல்கள் அதிரை வலைத்தளங்கள் பெரும்பாலாவைகளுக்கு அனுப்பி வைக்கப்படிருந்ததை நாங்களும் அறிவோம். அதனை அதிரை வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றில் முழுமையாக வெளிவந்தால் பதிவை பதியாமல் நிறுத்திக் கொள்வது என்றும் முடிவும் எடுத்திருந்தோம், ஆனால் எந்த வலைத்தளமும் முழுமையாக பதியவில்லை. அதன் பின்னரே உண்மைகள் எதுவாக இருந்தாலும் மறைப்படக் கூடாது என்ற நன்னோக்கில் அதிரைநிருபர் தளம், மார்க்க பிரச்சாகரருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன் என்ற பதிவை பல்வேறு மட்டுறுத்தலுக்கு ஆட்படுத்தி வெளியிட்டோம். அதிலும் நெறியாளரின் அடிக்குறிப்பும் தெளிவாக வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்த பின்னூட்டங்களையும் கண்கானித்து வந்தோம் அவசிய மேற்பட்டதை மட்டுறுத்தலும் செய்து வெளியிட்டோம்.

அவ்வாறு வெளியான பதிவிற்கு மறுப்பென்று சம்சுல் இஸ்லாம் சங்கத்திடமிருந்தோ, அல்லது அதில் குறிப்பிடப்பட்டிருந்த தனிநர்களிடமிருந்தோ தகவலாகவோ, மின்னஞ்சலாகவோ வரவில்லை. அவ்வாறு அனுப்பித் தந்து அதனை வெளியிடாமல் இருந்திருந்தால் சங்கம் சுட்டியிருக்கும் “அவதூறு, பரபரப்பு” என்ற வார்த்தை பிரயோகத்தை அதனை வாசிக்கும் வாசகர்கள் நியாயப்படுத்தியிருப்பார்கள்.

நேற்று மாலை அதிரையில் நன்கு அறியப்பட்ட மூத்த சகோதரர் ஒருவரிடமிருந்து நெறியாளரின் தனி மின்னஞ்சலுக்கு விளக்கம் கேட்டு மின்னஞ்சல் பெறப்பட்டது அதற்கு விளக்கமான பதிலுரையும் உடணடியாக கொடுக்கப்பட்டது அவர்களுக்கு. அதன் பின்னர் சில மணிநேரங்கள் கழித்து சம்சுல் இஸ்லாம் சங்கத்திடமிருந்து நெறியாளர் மின்னஞ்சலுக்கு மேற்கண்ட பதிவு அனுப்பித் தரப்பட்டது. சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க அந்த பதிவை எவ்வித மட்டுறுத்தல் இன்றி அவ்வாறே பதியப்பட்டது.

சம்சுல் இஸ்லாம் சங்கம் பதிவுக்கும் அதனைத் தொடர்ந்த வாசகர்களின் கருத்தாடல்களுக்கு பதிலுரை அளித்தீர்கள் சரி, ! ஏன் அவதூறு, பரப்பும் வலைத்தளம் என்ற சொற்றொடர் வரவேண்டும் அங்கே!? சங்கத்தின் பரபரப்பு உணர்வு எவ்வகையென்று தெளிவாகியிருக்கிறது, இந்த சொற்றொடர் வேதனையளிக்கிறது.

கவனிக்க!

சங்க நடவடிக்கைகள், அதன் பொறுப்பாளர்களின் முரண்பாடான உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பேழைகளும் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது அதனை கண்ணியமிக்க, பாரம்பரியமிக்க சங்கத்தின் நலனும் மேன்மையும் கருதி மட்டுறுத்தி வெளியிடாமல் தவிர்த்து விட்டோம்.

அதிரை மண்ணின் மைந்தர்கள் யாரும், ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுவதை எவ்வகையிலும் விரும்ப மாட்டார்கள், ஊரில் எல்லோரும் நம்மோடு நல்ல முறையாக பழகவேண்டும் நல்ல பெயர் எடுக்க வேண்டும், என்ற எண்ணெத்தில் எழும் ஏற்றத் தாழ்வுகளே இவ்வாறான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

பாரம்பரியமிக்க, கண்ணியத்துக்குரிய சம்சுல் இஸ்லாம் சங்கம், பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் நல்ல முடிவை எடுத்திருக்கிறது அதில் நிலைத்தும் இருந்திருக்கிறது மறுப்பதற்கில்லை. சில முடிவுகள் எடுக்கும்போது அதில் இடர்களும் கண்டிருக்கலாம், அவற்றையெல்லாம் வென்று அல்லாஹ்வுக்கு அஞ்சிய நன்மக்களையும் நிர்வாகிகளாக பெற்றிருக்கும் சங்கம் எந்தச் சூழலிலும் நீதியுடனும், நேர்மையுடனும் தொடரவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம் அதுவே எங்களின் துஆவும்.

வஸ்ஸலாம்

நெறியாளார்

Shameed said...

அநியாயமாக ஹைதர் அலி ஆலிம் மீது சங்க எல்லைக்கு(அது என்ன எல்லை என்று விளங்கவில்லை ) உட்பட்டவர் தேசதூரோக வழக்கு போட்டுள்ளார் அவர்மீது சங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது ? சங் பரிவாரின் வேலையை செய்தவருக்கு சங்கம் சப்போர்ட் செய்கின்றது இப்படியோ போனால் சம்சுல் இஸ்லாம் சங்கமா அல்லது சங் பரிவார் சங்கமா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துவிடும் !!

சங்கம் எல்லை எல்லை என்று குறிப்பிடுகின்றதே அது என்ன எல்லை தனி நாடா இந்த சங்கத்திற்கு உள்ளது இவர்களிடம் BSF அதவாது பார்டர் செக்குரிட்டி போர்ஸ் மற்றும் ராணுவம் விமானப்படை எல்லாம் சங்கத்துக்கு உள்ளதா?

பள்ளிவாசல் இடத்தை வாங்கியவர்களிடம் அந்த இடம் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று சங்கம் இதுவரை யாரிடமாவது பேசி உள்ளதா ?

92 வருட பாரம்பரியம் என்று சங்கம் சொல்லுகின்றதே இதன் அர்த்தம் என்ன சங்கம் அகல உளுதுகொண்டுள்ளது இதுவரை ஆழ உழவில்லை என்பது சங்க நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு தெரியும்

அவதுறு பரப்பும் வலைத்தளம் என்று சொன்னதற்கும் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் மீது அவதுரான மற்றும் அநியாயமாக தீர்ப்பு சொன்னதற்கும் சங்கம் உடனடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

Meerashah Rafia said...

மொத்தத்தில் இதுவரை யார் பக்கம் நியாயம் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.. இது பழைய மாட்டுக்கறி பிரச்சினைப்போல் ஓயாது உருவெடுத்துள்ளது..

என் வேண்டுகோள் :
அனைத்து தள நெறியாளர்களும் இந்தமாதிரியான உணர்ச்சிகரமான பதிவுகளுக்கு முழுமையாக பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்படவேண்டும்.. பின்னூட்டத்தில் பகைதான் வளருமே தவிர தீர்வு கண்டதாக தெரியவில்லை, இதுவரை காணவும்மில்லை.. சங்கம்&ஆலிம் சம்மந்தப்பட்ட கடந்த இரு பதிவிலும் இதே நிலைதான் நீடிக்கின்றது.. பின்னூட்டமிடும்போது "அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று என்னத்தான் எடுத்துரைத்தாலும் எல்லோரும் அவரவர் மனதில் உள்ளதைத்தான் எழுதிகிறார்கள்.. மக்களுக்கு தகவலை தருவதில் தவறில்லை.. பதியப்பட்ட செய்தி எந்த நிலையில் இருக்கின்றது, மக்கள் மனநிலை அதனை எந்தநிலையில் எடுத்துக்கொள்வார்கள் என்பதையும் சிலநேரம் நாம் பார்கவேண்டிருக்கின்றது..

Unknown said...

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக....

நேசம் நிறைந்த அதிரைவாசிகளே (அதிரையில் வசிப்பவர்கள் அனைவரும் அதிரைவாசிகள்),

அதிரையில் அநியாகமாக நடந்து வரும் அன்மை சம்வங்கள், ஒவ்வொரு அதிரைவாசிக்கும் மிகவும் வேதனை தருகிறது.

முதலில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம் என்ற இந்த பதிவு சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வலைத்தளத்திலும் மற்றும் இன்னும் பிற தளங்களில் வெளியாகி மக்களை குழப்பத்தில் உள்ளாக்கி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

முன்னுக்கு பின் முரணாகவே உள்ளது சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம்.. இதனால் பல கேள்விகள் எழுகிறது.

****** நமதூருக்கு மார்க்கச் சொற்பொழிவுக்காக சித்தார்கோட்டையிலிருந்து அழைத்துவரப்பட்ட கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் நமது உள்ளூர் நடவடிக்கைகளுக்கு ஊறு விளைக்கும்படியாக இயக்க சார்பு இளைஞர்களைத் தூண்டிவிட்டதால் எழுந்துள்ள அமைதியின்மைக்குத் தீர்வு காண வேண்டியும், அவர் வசிக்கும் பகுதி சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவின் எல்லைக்குள் இருக்கும் காரணத்தாலும், கடந்த தேதி: 28 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கதிற்கு நேரில் வந்து விளக்கம் தரும்படிக் கோரப்பட்டது.******

அமைதிக்கு ஊரு விளைவிக்கும் வகையில் இயக்க இளைஞர்களை தூண்டிவிட்டு எழுந்துள்ள அமைதியின்மை என்பதற்கான தெளிவான விளக்கம் இங்கு தரவில்லை. அப்படி என்ன அமைதியின்னை எழுந்துள்ளது? ஆதாரத்துடன் மக்களுக்கு சொல்லும் பொறுப்பு சங்கத்துக்கு உள்ளதா இல்லையா? அமைதியின்மை எப்போது எங்கு ஏற்பட்டது? அமைதியாக இருக்கு அதிரையில் ஏன் இந்த பச்சை பொய்?

இதற்கு சங்கம் விளக்கம் தருமா?

Unknown said...

********ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் தக்வா பள்ளி செயலாளருக்கும் இடையே வழக்கு நடந்து வருவதாலும், பொதுவில் பேசுவது வழக்கைப் பாதிக்கும் என்பதாலும், தன்னால் கலந்து கொள்ள முடியாதென்றும் தெரிவித்த நிலையில், 29அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஹைதர் அலி ஆலிம் அவர்களது வீட்டிலேயே சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடு தேடி வந்தவர்களை முகமன்கூறிச் சந்திக்கும் இஸ்லாமியப் பண்பாடின்றி, சுமார் 10-20 நிமிடங்கள் வீட்டுக்கு வெளியே காத்திருக்க வைத்துவிட்டு, "சித்தீக் பள்ளியில் போய் இருங்கள், பேசலாம்" என்று தெரிவித்தார்.**********

ஹைதர் அலி ஆலிம் அவர்களை அசருக்கு பிறகு சந்திக்க வர வேண்டும் என்று சொன்ன சங்கத்தின் ஊழியர் முஹம்மது சாலிஹ் அவர்களிடம் இரவு பயான் முடிந்து போன் செய்து வருகிறேன் என்று ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சொல்லியும் அவரின் அனுமதியின்றி அவர் விட்டிற்கு அவ்வளவு அவசரமாக சங்கத்தை சேர்ந்தவர்களும் மற்றவர்களும் சென்றதன் நோக்கம் என்ன?

சரி சென்றீர்கள்.. சங்கள் நிர்வாகிகள் என்று சொல்லி உள்ளீர்கள் தலைவர், துணை தலைவர் சங்க நிர்வாகிகள் சரி தான். ஆனால் பேரூராட்சி தலைவர், பேராசிரியர், திருப்பூர் தொழில் செய்யும் அதிரை நபர் இவர்கள் சங்கத்தின் நிர்வாகிகளா? இவர்களை அழைத்து செல்ல ஏதாவது சங்க கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டதா?

ஹைதர் அலி ஆலிம் அழைத்தும் வரவில்லை என்றால், குறைந்த பட்சம் சித்தீக் பள்ளி முஹல்லா நிர்வாகத்தில் உள்ள மற்ற நிர்வாகிகளை அழைத்து, இது தொடர்பாக சங்கத்தின் ஆட்சேபனையை தெரிவித்துவிட்டு கருத்து கேட்காமல் ஒரு தலைபட்சமாக சர்வாதிகார நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?

******அவ்வாறே, சங்க நிர்வாகிகளும் சித்தீக் பள்ளிக்குச் சென்றபோது, இயக்க சார்பு இளைஞர்களையும் உடன் வைத்துக்கொண்டு "இப்போது பேசலாம்" என்று சொன்னார். அதற்கு சங்க நிர்வாகிகள், “இயக்க சார்பு இளைஞர்களை வரவழைத்துக்கொண்டு சங்க நிர்வாகிகளுடன் பேச விரும்புவது சரியல்ல. வெளியூரிலிருந்து எத்தனையோ ஆலிம்கள் கற்கவும், கற்றுகொடுக்கவும் வந்துள்ளனர். ஆனால், உங்களைப் போன்று இயக்க சார்பு இளைஞர்களுடன் இணைந்து முஹல்லா சங்கத்தையும் அதன் நிர்வாகிகளான உள்ளூர் பிரமுகர்களையும் அவமதித்ததில்லை” என்று சொல்லி, அவருடன் பேசாமல் திரும்பி விட்டனர்.******

பள்ளிக்கு வந்த சகோதரர்கள் அனைவரும் சித்தீக் பள்ளி முஹல்லாவாசிகள். ஏதோ சித்தார்கோட்டையிலிருந்து இயக்க இளைஞர்களை அழைத்து உடன் வைத்தது போல் சங்கத்தின் விளக்கம் தரப்பட்டுள்ளது. அப்படி இவர்களை (முஹல்லா சகோதரர்களை) இயக்க இளைஞர்கள் என்று சொன்னால், சங்க உடன் அழைத்து வந்த பேரூராட்சி தலைவரை கட்சிக்காரர் இயக்ககாரர் என்று தானே சொல்ல முடியும். அப்போ நீங்கள் அழைத்து வந்ததும் இயக்க இளைஞரை தானே?

இயக்க சார்ப்புடைய இளைஞர்கள் என்று சொல்லுவது அப்பட்டமான பொய்.


சங்க தலைவர் ஹைதர் அலி ஆலிம் அவர்களை வெளியூர் காரர் என்று சொன்ன பிரச்சினைக்குறை வார்த்தையை இங்கு முழுமையாக இருட்டடிப்பு செய்து விளக்கம் தந்துள்ளது சரியா? அப்படி இல்லை என்பதை சம்சுல் இஸ்லாம் சங்கம் மறுக்குமா?

Unknown said...

****இப்பகுதிக்குட்பட்ட ஆயிஷா மகளிர் மன்றத்தில் நடந்துவந்த ஜனாப். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.****

தற்காலிக தடை என்கிறீர்கள், நிங்கள் ஆயிசா அரங்க நிர்வாகிக்கும், மற்ற முஹல்லாகளுக்கு அனுப்பிய கடிதத்தில் எங்காவது தற்காலிக என்ற வார்த்தை உள்ளதா?

சரி அப்படி தற்காலிக முடிவு என்றால், நீங்கள் அழைத்த சித்தீக் பள்ளி முஹல்லா சகோதரர்கள் தாழ்மையுடன் மீண்டும் மீண்டும் மன்னிப்பு அளிக்க கூடாதா என்று கேட்டும் மறுபரிசிலனை செய்ய மறுத்துள்ளீர்களே இதை மறுக்க முடியுமா?

அதிரைக்காரன் said...

Wa alaikkum salaam Br. Adirai Jafar. Regarding your questions and comments, would like to talk to you rather reply in comments. Can you please mail or SMS your contact number. N. Jamaludeen DUBAI - 504737200 {adiraiwala@gmail.com

Yasir said...

அன்சாரி மாமாவின் கருத்தை வழிமொழிகின்றேன்

// ஒரு வலைத் தளம் ஊரில் நடக்கும் ஒரு சென்சிடிவ் ஆன பிரச்னையில் ஒருதலைப்பட்ச்மாகவோ- அவதூறாகவோ நடந்துகொள்ள பொறுப்பு இல்லாமல் துணியாது என்பதை முதலில் அனைவரும் நம்ப வேண்டும்.// இது இது

Unknown said...

*****உள்ளூர் நடவடிக்கைகளில் பொறுப்புள்ள முஹல்லா சங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட நடவடிக்கையே இது. ஜனாப் ஹைதர் அலி ஆலிம் அவர்களைப் போன்ற தகுதியுடைய உள்ளூர் மார்க்க அறிஞர்களை ஆலோசகர்களாகக் கொண்டுள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஊர் சார்ந்த நடவடிக்கைகளில் தனி நபர்கள் தலையிடுவது, முஹல்லாவாசிகளை அவமதிக்கும் செயலாகும். *******

ஹைதர் அலி ஆலிம் அவர்களை போன்ற தகுதியுடைய மார்க்க அறிஞர்களை கொண்டுள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம், ஒரு மார்க்க அறிஞரை (ஹைதர் அலி ஆலிமை) சந்திக்க செல்லும் போது ஏன் அந்த தகுதியுடைய மார்க்க அறிஞர்களில் ஒருவரை கூட அழைத்து செல்லவில்லை?

இப்படி இன்னும் கேள்வி தொடரும்... இறைவன் நாடினால்...

இதுவே போதும் என்று கருதுகிறேன்... நான் யார் என்பதைவிட, நான் எடுத்துவைத்துள்ள கேள்விகளை கொஞ்சம் மனசாட்சியுடன் சங்கத்துக்கு ஆதரவு குரல் கொடுத்துவரும் அன்பு அதிரைவாசிகள் சீர்தூக்கி பார்த்து கொள்ளுங்கள்.

இன்னொன்று ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு ஆதரவாக கருத்திடும் அனைவருக்கு ஒரு எச்சரிக்கை, ஹைதர் அலி ஆலிம் மட்டும் தான் ஆலிம் என்பது தவறு. இது ஒரு தனிமனித வழிபாட்டிற்கு இட்டுச்செல்லும். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பாவம் அந்த மனிதரை (நம்மூருக்கு வந்த விருந்தாளியை) உங்கள் சொந்த பகைக்காக பகடைகாயாக்கிவிட்டு எல்லோரும் பாவியாகிவிடாதீர்கள்.

இறுதியான நான் சொல்லுவது இது தான். பலர் தங்களுடைய சுய லாபத்திற்காக, எதிரியின் எதிரியை நண்பனாக்கிக்கு கொண்டு பழிவாங்கும் படலமே இங்கு ஹைதர் அலி ஆலிம் vs ஷம்சுல் இஸ்லாம் சங்க விவகாரத்தின் நடைபெறுகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இந்த விசயத்தில் எழுத்தாலும், நாவாலும், செயலாலும் தவறிழைத்து வரும் அதிரைவாசிகளே (சகோதர ) அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். தஃவ்பா செய்யுங்கள்.

அறிந்துக்கொண்டே நம் சகோதரர்கள் தவறிழைக்கிறார்கள். பாரம்பரியமிக்க ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு அவபெயர் உண்டுபண்ணும் நோக்கில் ஒரு சில நிர்வாகிகள் அவசரபட்டு செயல்பட்டதால் சங்கத்தின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி இடப்பட்டுள்ளது. அல்லாஹ் தான் சங்கத்தை பாதுகாக்க வேண்டும்.

இன்னும் ஒன்றும் குறைந்து போகவில்லை... ஹைதர் அலி ஆலிம் அவர்களை அழைத்து சமாதானம் பேச வாய்புகள் அதிகம் உள்ளது. சித்தீக் பள்ளி முஹல்லா சகோதரர்களை தொடர்பு கொண்டு இதற்கான வாய்பை ஏற்படுத்தலாம். சங்கத்தின் உலமாக்களின் உதவியுடன் ஹைதர் அலி ஆலிமுக்கு அழைப்பு விடுக்கலாம். மன்னிப்பு என்ற ஒன்றை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுதரவில்லையா? பெரும்பாவங்களையே மன்னிப்பவன் அல்லாஹ் என்று நம்புகிறோம். ஹைதர் அலி ஆலிம் விசயத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை எங்கே போனது? மன்னிப்பு என்ற வார்த்தையை எடுத்துச் சொல்ல மறந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க அதிகாரபூர்வ மார்க்க அறிஞர்கள் எங்கே சென்றார்கள்? இந்த கேள்விகளுக்காவது சங்கம் பதில் தருமா? மனம் உறுகி கண்ணீருடன் சங்கத்தின் வருங்கால கண்ணியம் கருதி பல அநீதிகளால் பாதிக்கப்பட்ட ஒரு தனி நபராக அல்ல அநீக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரின் சார்பாக கேட்கிறேன்.

என்னுடைய கருத்துக்கள் யாருடைய மனதையாவது துன்புறுத்தியிருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள்.

Naina said...

Why again adirai nirubar allowing commments? They should be same like adiraixpress (Non comment topic). Please dont allow to register reader's comment. This is very danger among our community..
Allah knows what is real..

அதிரைக்காரன் said...

Dear Br. Adirai jafar, you expecting reply but not interested to disclose you. As you too agreed that the matter is sensitive, you should identify you first. Appreciate your intention to compromise why not you try in person despite trying in comments? Do you have any difficulty to identify you?

Noor Mohamed said...

Dear brother adirai jafar
அஸ்ஸலாமு அலைக்கும்

வினாக்களும், விடைகளும், விளக்கங்களும் கூறும் தாங்கள் இதுவரை யார் என அறிமுகப் படுத்த தயங்குவது ஏன்?

தங்களின் விளக்கமெல்லாம் 'கானல்நீர்' போல் பயனற்று போய்விடும் சகோதரரே.

யார் என வெளியே வாருங்கள்! ஒன்று படுவோம்!! வெற்றி காண்போம்!!!

Abu fahim said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

இன்று ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னைக‌ள் அனைத்தும் ந‌ன்மைக்கும் தீமைக்கும் ந‌ட‌க்கும் போராட்ட‌மாகும். ஷைத்தானிய‌ கொடியை தூக்குவோருக்கும் அல்லாஹ்வின் கொடியைத் தூக்குவோருக்கும் ந‌ட‌க்கும் பிர‌ச்ச‌னையாகும். வ‌ண‌க்கம் அல்லாஹ்வுக்கு ம‌ட்டுமே சொந்த‌ம்,அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த‌ இடைத்த‌ர‌க‌ர்க‌ளும் இல்லை என்று கூருவோருக்கும் , இல்லை வ‌ண‌க்க‌ம் என்ப‌து அல்லாஹ்வுட‌ன் ம‌ற்ற‌வ‌ர்க‌ளையும் வ‌ணங்குவ‌து அட‌க்க‌ம் என்றும் அத‌ற்காக எங்க‌ளை இட‌த்த‌ரக‌ர்க‌ளாக‌ ஆக்கி எங்க‌ளுக்கு கூலி த‌ர‌வேண்டும் என்று கொடி தூக்கி இருக்கும் கோஷ்டிக்கும் ந‌ட‌க்கும் போராட்ட‌மாகும்.

சில‌ ந‌ல்ல‌ முஸ்லிம் ச‌கோத‌ர‌ர்க‌ள், ச‌ங்க பொருப்பாள‌ர்க‌ள், ஊர்ம‌க்க‌ள் நன்ன‌ம்பிக்கையுட‌ன் தேர்ந்தெடுத்த‌ ப‌த‌வியில் இருக்கும் பொருப்பாள‌ர்க‌ள் ஷைத்தானின் வ‌லையில் சிக்கி ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளின் பேச்சை ந‌ம்பி அவ‌ர்க‌ளுக்கு ஒத்தாசையாக‌ இருப்பது மிக‌வும் வ‌ருந்த‌த்த‌க்க‌து.

ந‌ன்கு சிந்தித்துப்பாருங்க‌ள்.நீங்க‌ள் எந்த‌ நிலையில் யாருட‌ன் இருக்கிரீர்க‌ள் என்ப‌தை உங்க‌ளுடைய‌ நெஞ்சில் கை வைத்து உங்க‌ளிட‌மே கேளுங்க‌ள்."

உங்க‌ளை அல்லாஹ் சோதிக்கிறான் என்ப‌தை நீங்க‌ள் அறிய‌வில்லையா? நீங்க‌ள் உண்மையாள‌ர்க‌ளுட‌ன் இருக்கிறீர்க‌ளா, அல்ல‌து அல்லாஹ்வுக்கு எதிரான‌ போர்செய்யத் துடிக்கும் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளுட‌ன் இருக்கிறீர்க‌ளா என்ப‌தை அல்லாஹ் இந்த‌ சோத‌னையின் மூல‌ம் வெளிப்ப‌டுத்த‌ப் போகிறான் என்ப‌தை நீங்க‌ள் என்னிப்பார்க்க‌வில்லையா?

அவதுறு பரப்பும் வலைத்தளம் என்று சொன்னதற்கும் ஜனாப் ஹைதர் அலி ஆலிம் மீது அவதுரான மற்றும் அநியாயமாக தீர்ப்பு சொன்னதற்கும் சங்கம் உடனடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

L.M.S MOHAMED YOUSUF

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//Abu fahim சொன்னது…
ஜனாப் ஹைதர் அலி ஆலிம் (அவர்கள்) மீது அவதூரான மற்றும் அநியாயமாக தீர்ப்பு சொன்னதற்கும் சங்கம் உடனடி மன்னிப்பு கேட்க வேண்டும்.//

100 % தவறுகள் ஒரு தரப்பால் மட்டும் தானா?
மறுதரப்பு 100 % அப்பாவிகளா யூசுப் மச்சான்?

mohamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரைநிருபருக்கு தாழ்மையான வேண்டுகோள் இதில் வரும் பின்னுட்டங்களை நிறுத்துங்கள்.

இதில் நிறையபெயர் குளிர்காய்கிறார்கள். நிறைய பெயர் உள்நோக்கத்துடன் கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.

வேறு எந்த சங்கத்தின் நிகழுவுகளையாவது நீங்கள் இதுபோல் தெரிந்துகொள்ள முடயுமா?. இதுபோல் விவாதிக்கத்தான் முடயுமா?.

ஊரிலுள்ளபெரியோர்களை கொண்டும் ஆலிம்உலமாக்களை கொண்டும் நல்லஒரு தீர்வு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

ஜெ. முகமது புகாரி தமாம்.

Unknown said...

அதிரைக்காரன் சொன்னது… ******Dear Br. Adirai jafar, you expecting reply but not interested to disclose you. As you too agreed that the matter is sensitive, you should identify you first. Appreciate your intention to compromise why not you try in person despite trying in comments? Do you have any difficulty to identify you?******

Brothers. அதிரைக்காரன் நூர் முஹம்மது,

எனக்கு ஆங்கிலத்தில் அவ்வளவாக இலக்கண அடிப்படையில் எழுத தெரியாது, இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் இதோ..

என்னை பற்றி அறிய விருப்பம் தெரிவித்துள்ளமைக்கு மிக்க நன்றி. ஹைதர் அலி ஆலிசா அவர்களை போல் பகிரங்கமாக தவறுகளை சுட்டிக்காட்டி, பின் அநியாயத்துக்கு போலீஸ் ஸ்டேசன், கோர்ட் என்று என்னை அழையவிட்டு நேரத்தை வீணடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அதனால் நான் என்னுடைய விபரம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை. மன்னிக்கவும்..

நான் சொன்ன கருத்துக்களில் தவறு ஏதும் உண்டா? தவறிருந்தால் சுட்டிக்காடுங்களேன். அப்படி தவறில்லை என்று நீங்கள் எண்ணினால் என்னுடைய நியாயமான கோரிக்கையை உங்களுக்கு நன்கு பரிச்சயமான சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளிடம் கேட்டு சொல்லுங்களேன். குறைந்த பட்சம் என்னுடைய இந்த கேள்வியை மட்டுமாவது.

மன்னிப்பு என்ற ஒன்றை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுதரவில்லையா? பெரும்பாவங்களையே மன்னிப்பவன் அல்லாஹ் என்று நம்புகிறோம். ஹைதர் அலி ஆலிம் விசயத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை எங்கே போனது? மன்னிப்பு என்ற வார்த்தையை எடுத்துச் சொல்ல மறந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க அதிகாரபூர்வ மார்க்க அறிஞர்கள் எங்கே சென்றார்கள்? இந்த கேள்விகளுக்காவது சங்கம் பதில் தருமா?

Anonymous said...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

நான் இத்துடன் இணைத்துள்ள இணைப்புகளை அனைத்தையும் பொருமையுடன் கேட்டு பயன் பெறுவதுடன். நம்மிடமிருந்து உள்ளும் புறமும் பிரிவினை பாராட்டுவது, பகைமையை உருவாக்குவது, அறியாமை கால பேச்சுகளை பேசுவது, எழுதுவது, உள்நோக்கம் கற்பிப்பது, அவதூறு பரப்புவது விடுபடுவோமாக. நமது சமூகம் ஒன்றுபடுவதற்கான காரண காரியங்களில் நமது கவனங்களை செலுத்துவோமாக!

http://www.youtube.com/watch?v=3K8yFZIj48A&feature=player_embedded
http://www.youtube.com/watch?list=PL02FCCF3748A43807&v=xQ2EcPdO_hs&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=MboPPg_K7Kk&feature=relmfu
http://www.youtube.com/watch?v=uWv0ltl7hZM&feature=relmfu
http://www.youtube.com/watch?v=wiWSc5ihBT8&feature=relmfu
http://www.youtube.com/watch?v=jYgVakkKkhY&feature=relmfu
http://www.youtube.com/watch?v=obhg7mUXHsQ&feature=relmfu

ஏற்கவே நான் சகோதரர் LMS முஹம்மது யூசுப் எழுதிய கட்டுரை படித்துவிட்டு நான் அறிந்த விஷயங்களையும் குறிப்பிட்டு இருந்தேன். அதில் குறிப்பு என்று கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்களுடைய சொற்பொழிவை நிறுத்த முடியாது என கடுமையான வாசகத்துடன் குறிப்பிட்டு இருந்தேன். அதனைகூட நெரியாளர் பின்பு திருத்தம் செய்து வெளியிட்டு இருந்கதார்கள். என்னுடைய திருத்தப்படாத அந்த வார்த்தையை படித்த சில சகோதரர்கள் நான் ஒரு தெரு வெறி பிடித்தவன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்பட்டு இருப்பது அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அப்படி நினைப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.

எல்லா சமூகத்தில் இப்படி உண்மை நிலைக்கு மாறாக திசை திருப்பக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். அவர்களுக்காக - நமதூரில் தூய இஸ்லாமிய பிரச்சாரங்கள் துவங்கிய காலந்தொட்டு அப்பிரச்சாரங்கள் செய்யக்கூடியவர்களை கொச்சைபடுத்துவது நெடுங்காலமாக தொடரக்கூடிய ஒன்று. ஆனால் கண்ணியத்திற்குரிய ஹைதர் அலி ஆலிம் அவர்கள் ஒரு முழுமையான தப்லீக் சார்புடையவர்கள். அவர்கள் மேன்மைமிகு குர்ஆனின் வழிகாட்டுதல் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சிறப்புமிகு வாழ்வியல் நெறிகளை தனது ஜும்ஆ சொற்பொழிவின்போது மேற்கோளிட்டு பேசுவதால் எங்கள் முஹல்லாவில் உள்ள மக்களிடத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறதை என் போன்றோர்கள் அறிவார்கள். இதுபோன்ற மாற்றங்கள் தொடந்து நிகழ வேண்டுமென நினைக்கும் என்போன்றோருக்கு, சகோதரர் LMS முஹம்மது யூசுப் எழுதிய கட்டுரையை படித்த போது மிகுந்த வேதனையை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல சத்திய இஸ்லாமிய செய்திகள் மக்களிடத்தில் சென்றடைய யாரெல்லாம் தடையாக இருப்பார்களோ அவர்கள் அனைவருக்கு எதிராகவும் நான் கடுமையாகத்தான் இருப்பேன். நமக்குலள் எழும் விவகாரங்களை முழுமையாக உணர்ந்து அனுகவேண்டிய முறைப்படி அனுகி முடிக்க வேண்டுமே தவிர, இல்லாத ஊருக்கு வழி கேட்கும்விதமாக தீர்வை தேடக்கூடாது.

continue... 1/2

Anonymous said...

Continue.. 2/2

சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் ஷிர்க் மற்றும் பித்அத்தை எச்சரித்து செய்கிற பிரச்சாரம் நமதூரில் உள்ள லப்பைமார்கள், குறிபிட்ட உலமாக்கள் ஆகிய இரு சாராருக்கு பிடிக்காமல் இருப்பது,
சித்தீக் பள்ளி அருகில் வசித்து வருகிறவர்களுக்கும் சித்தீக் பள்ளி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள விவகாரம் காரணமாக அப்பள்ளிக்கு நிர்வாகத் தலைவராக சகோதரர் ஹைதர் அலி ஆலிம் இருப்பது,

பொது மக்கள் பாதையாக பயன்படுத்தி வந்த சித்தீக் பள்ளி இடத்தில் தடுப்புச் சுவர் எடுக்க முற்பட்டபோது ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க அப்பகுதி முஹல்லா நிர்வாகத்தை அனுகி போதிய உதவி கிடைக்காத காரணத்தால், ஏற்கனவே AJ பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனையை சுமூகமாக முடித்த பிற முஹல்லா சகோதரர்களைக் கொண்டு தடுப்புச் சுவர் எடுத்தது,
இன்னும் சகேதாரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் எஜமானர்கள் போன்று நடக்க நினைப்பவர்களுக்கு உடன்படாமல் இருப்பது போன்ற காரணங்கள் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ள விஷயங்களுக்கு பின்னால் இருக்கிறது என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு, நடுநிலையான எண்ணம் கொண்ட நமதூர் மக்கள் இப்பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க முயற்சிகள் மேற்கொள்வதே சிறந்த வழிமுறையாக இருக்கும் இன்ஷாஅல்லாஹ்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அருள்மறையில் பின் வருமாறு வழிகாட்டுகிறான்.....

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.

பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.

உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய)
உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். (ஃபுஸ்ஸிலத் 41: 33-36)

எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக! வஸ்ஸலாம்.

அன்புடன்,
B ஜமாலுத்தீன்
050-2855125
055-2177618

Anonymous said...

அன்புச் சகோதரர்களுக்கு...

கருத்தாடல்களில் இதுவரை பங்கேற்ற சகோதரர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான்.

இத்துடன் இந்தப் பதிவுக்கான கருத்துப் பெட்டியை முடக்கம் செய்கிறோம்...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.