Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று இரு தகவல் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 10, 2012 | , , ,

நரகத்தின் கதவு (Door to Hell )

இரும்பு திரையிட்ட சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த பல நாடுகள் பெரும்பாலும் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டன. அந்நாடுகளில் ஒன்று துர்க்மெனிஸ்தான், அங்குள்ள ஒரு கிராமம் தாங்க தர்வேஜ் (கதவு என்று பொருள்) அங்கே கேஸ் (gas) நிறைய கிடைக்குதுங்க,முஸ்லிம்கள் வாழும் பகுதி பெரும்பாலும் இயற்கை வளத்தால் செழித்து விளங்குவது புதிதல்லவே, மேட்டருக்கு வருவோம். 

1971 ஆம் ஆண்டு சோவியத்காரங்க ஒரு கேஸ் உள்ள இடத்தக் கண்டுபிடித்து தோண்ட ஆரம்பிச்சாங்க,அப்ப அங்கேக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஒரு 70 மீட்டர் அகலத்திற்கு பள்ளம் விழுந்துவிட்டது,அதிலிருந்து கேஸ் பாய்ந்து வர ஆரம்பிச்சுடுச்சுங்க..என்ன செய்றதுண்டு தெரியல அந்த ஆள்களுக்கு ஒரு சமயம் நச்சு கேஸா இருந்து பரவ ஆரம்பிச்சா அங்கு வாழும் மக்களின் கதி அம்பேல்தான் என்று நினைத்தவர்கள் இத பத்தவச்சிட்டா எல்லா கேஸும் எரிந்து ஒரு நாளில் முடிந்துவிடும் என்று நினைத்தவர்களாக,பத்த வச்சாங்க பாருங்க இன்னையோடு கிட்டத்தட்ட 40 வருஷம் ஆச்சு எரிஞ்சிக்கிட்டேதாங்க இருக்கு..பத்த வச்சவனெல்லாம் மண்டைய போட்டுட்டாங்க ஆனா “இந்த நெருப்பு மட்டும் பளிச் சென்று எரிஞ்சிகிட்டே இருக்கு.

இப்படியே அனலை கக்கி எரிந்து கொண்டே இருக்கிற இந்த கிணத்தைp பார்த்து இக்கிராம மக்கள் இதனை அழைப்பது “ நரகத்தின் கதவு” என்று,கூகுள் மாமாட்ட இந்த விவரங்களை நீங்களே கேட்கலாம்





அறிவியல் இன்னொன்று உறுதிப்படுத்த முடியாத தகவல்  : கேஸ் தோண்டும்போது சில இடங்களில் திடீரென்று வெப்பநிலை பூமியில் அதிகரித்ததாகவும் அந்த இடங்களில் வேதனைப்படும் மனித அலறும் குரல்கள் கேட்டதாகவும் ஒரு ரஷ்ய விஞ்ஞானி சொன்னதாக கேள்வி.. அல்லாஹூ அக்பர் அதிகாரப்பூர்வ தகவல்களை திரட்டிக்கொண்டு விரைவில் வருகின்றேன்.

அரோரா (aurora )

என்ன இது? சீசன் கூட இல்லையே, யாசிர் இப்படிக்கிளம்பிட்டானே என்று தப்பா நினைத்தவங்களுக்கு…இது ஒரு பூமியின் துருவப்பகுதியில் வானில் ஏற்படும் இயற்கையின் ஒளி ஆட்டம்தாங்க, இது எப்படி உண்டாகுதுண்டு பார்த்தா, நமக்கு எதுக்குங்க அதெல்லாம் பிச்சுகிச்சு படித்த கவிக்காக்காவுக்கு புரியும் நம்மல போல பிஸ்கோத்துக்கெல்லாம் புரிய ஒரு சில மாமாங்கமாவது எடுக்கும் வேணா விட்டுறவோம். சூரியப்புயலால் செறிவூட்டப்பட்ட துகள்கள் பூமியின் காந்தபுலத்தில் உலவுவதால் இந்த விளைவும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்,பேய் உலவுவதையே பொய்யாக கண்டுபிடிக்கும் ஷிர்க் பிடித்த சில ஆள்களை அங்கே தனியா விட்டா ஆடிப்போய்டுவானுங்க.

இயற்கையின் அற்புதம் இந்த அரோரா,கனடாவில் இருக்கும் நம்மவர்கள் இதனை பார்த்திருக்கலாம்… ஆட்டோ பிடித்து ஆளைப் பார்த்து வருவது போன்ற மேட்டரல்ல இந்த அரோரா,,அரோராவைப்பார்கக சும்மா வெட்டியா ஒரே இடத்தில் குந்தவச்சு சில நாள்கள்/மாதங்கள் கூட உட்காந்து இருக்கணும்ங்க,உங்களுக்கு வேலை வெட்டி எதுவும் இல்லைண்டா இங்குள்ள லிங்கை கிளிக்பண்ணி காத்திருங்க..லைவ் அரோரா வரலாம்.





நல்லது மீண்டும் சந்திக்கலாம்.

முஹம்மது யாசிர்

11 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சுபுஹானல்லாஹ்!
தகவல் வித்தியாசமா, நல்லா இருக்கு சகோ.யாசிர்.
அந்த ரஷ்ய விஞ்ஞானியிடம் கேள்விப்பட்ட தகவல்களையும் நல்லா விசாரித்து சொல்லுங்களேன்!

Ebrahim Ansari said...

பார்க்கவும் பழகவும் வித்தியாசமான அருமை மருமகனார் யாசிர் அவர்கள் தந்துள்ள வித்தியாசமான தகவல்கள். இதுபோல் தொடருங்களேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

Aboobakkar, Can. said...

ஏழு வானங்களும் ஏழு பூமியும் இருக்கும் போது அதையும் தாண்டி அல்லாஹ்வின் 'அர்ஸ்' இருக்கும் போது பூமியில் நரஹம் ஏற்பட வாய்ப்பேயில்லை.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அசலான படங்களை அலசி தந்த சகோ யாசிருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

படிப்பினைகள் பல இருந்தும்.பாவிகளாக இருக்கின்றோம்.

அதிரையில் நடக்கும் அட்டூழியத்தின் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!

மீண்டும் சொர்க்கத்தோடு வாங்க யாசிர்.

லெ.மு.செ. அபுபக்கர்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆச்சர்யம் தரும் சகோ. யாசிரின் கட்டுரையும், அருமையாக வர்ணிக்கும் எழுத்து நடையும். இது போல் எண்ணற்ற இறைவனின் ஆச்சர்யங்கள் உலகில் புதைந்து கிடக்காமல் இல்லை. அதை அவன் கொடுத்த பகுத்தறிவைக்கொண்டு அலசி, ஆராய மனித இனம் கடமைப்பட்டுள்ளது. பாக்யா வார இதழ் படித்த ஒரு உணர்வு உங்களின் எழுத்து நடையில் கிடைக்கிறது. இது போல் அண்டார்ட்டிக்கா கண்டம், கடலில் உலகின் ஆழமான பகுதி "மாரியானா ட்ரன்ச்", பெர்முடாஸ் ட்ரை ஆங்கிள் போன்ற ஆச்சர்யம் தரும் விசயங்களையும் ஆதாரத்துடன் அவ்வப்பொழுது கட்டுரையாக தந்தால் படிக்கும் நமக்கு ரொம்ப பிடிக்கும் யாசிர்.

அப்துல்மாலிக் said...

நரகத்தின் வாசல் பற்றி கேள்விப்பட்டிருக்கேன், அது உருவான தகவல் புதுசு நன்றி பகிர்வுக்கு, எழுத்து நடையும் படிக்க சுவராஸ்யமா இருந்துச்சுங்க...

Shameed said...

சொல்லிய தகவல் எல்லாம் புதுனமா இருக்கு ,இதுபோல் புதுனம்புதுனமா செய்திகளை எதிர்பார்க்கின்றோம்

அதிரை சித்திக் said...

அன்பு தம்பி யாசிர் அற்புதமான
தகவல் தந்துள்ளீர்கள் ..
பூமியில் நரகத்தின் சாம்பிள் ...
மனதுக்குள் பயம் வந்து செல்கிறது ...
அற்புதமான தகவல்களுடன்
மீண்டும் எதிர் பார்க்கிறோம்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// அறிவியல் இன்னொன்று உறுதிப்படுத்த முடியாத தகவல் : கேஸ் தோண்டும்போது சில இடங்களில் திடீரென்று வெப்பநிலை பூமியில் அதிகரித்ததாகவும் அந்த இடங்களில் வேதனைப்படும் மனித அலறும் குரல்கள் கேட்டதாகவும் ஒரு ரஷ்ய விஞ்ஞானி சொன்னதாக கேள்வி.. அல்லாஹூ அக்பர் ///

**************************************************
பயத்தை ஏற்படுத்த கூட, இப்படி சொல்ல முடியாது. மார்க்கம் சொன்னதற்கு: மாற்றமாக எவ்வளவு ''பெரிய விஞ்ஞானி சொன்னாலும்'' ஏற்றுக் கொள்ள முடியாது.

''மண்ணறை வேதனையைப் பற்றி நீங்கள் அறிந்தால் குறைவாக சிரிப்பீர்கள் நிறைய அழுவீர்கள்'' என்பது நபிமொழி.

''மண்ணறை வேதனையில் மனிதன் அலறும் சத்தத்தையே நாம் கேட்க முடியாது''.

தீர்ப்பு நாளுக்குப் பிறகுதான் அவரவர் செயல்களுக்குத் தக்கவாறு ''நரகத்திற்கும், சொர்க்கத்திற்கும் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்''. அதனால் ரஷ்ய விஞ்ஞானி சொன்னது அவரது ''மனப்பிரம்மையாகத்தான்'' இருக்க முடியும்.

''சொர்க்கம் நரகம் பற்றி வல்ல அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக சொல்லி இருக்கிறான்''. அதை படித்து மனதில் வைத்தால் நமக்கு குழப்பம் ஏற்படாது.

**********படிக்கத்தான் நேரமில்லை********

sabeer.abushahruk said...

அரிய தகவல்கள்: அற்புதமான புகைப்படஙக்ள்

வாழ்த்துகள் யாசிர்.

Yasir said...

கருத்துக்களும்,வாழ்த்துக்களும் சொன்ன
சகோ.M.H. ஜஹபர் சாதிக்
அன்சாரி மாமா
சகோ.Aboobakkar, Can
கண்ணியதிற்க்குரிய வாவன்னா சார்
சகோ.லெ.மு.செ. அபுபக்கர்
சகோ.மு.செ.மு. நெய்னா முஹம்மது
சகோ.அப்துல்மாலிக்
’சாவன்னா காக்கா
சகோ.அதிரை சித்திக்
குட்டு வைத்த அலாவுதீன் காக்கா
நேரமின்மையால் ஒரு வரிகளில் கருத்து சொல்லும் கவிக்காக்கா
மற்றும் படித்துவிட்டு கருத்திட "மாச்சப்"பட்ட அனைவருக்கும் நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.