Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"மை" ப்ராப்ளம் is "OUR" ப்ராப்ளம் !? 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 11, 2012 | , , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஒத்து'மைங்'கிறாங்க, ஒற்று'மைங்'கிறாங்க !இரண்டிலுமே 'மை' இருக்கத்தான் செய்கிறது,  ஏன் இந்த வேற்று'மை'ன்னு கேட்கவும் செய்கிறார்கள். ஆனால், அதிரை மண்ணின் 'மை'ந்தர்களிடையே செயல்படுத்துபவர்களிடமும் அதனைப் பற்றி எழுதுபவர்களிடமும், பேசுபவர்களிடமும் வாய்'மை' ஏறக்குறைய "மை"னஸ் தான் !

ஒரு சாரார் பள்ளம் தோண்டினால் மற்றொரு சாராரின் உள்ளம் அங்கே அலைபாய்கிறது எப்படி அதன் உள்ளே தள்ளலாம் என்றும், மற்றவர்கள் வழிவிட்டால் அங்கே எப்படியெல்லாம் வழி மறிக்கலாம் என்று இவர்கள் சுழி போடுகிறார்கள்.

எதுக்கு இந்த 'வசர'தூ(ற்)று'ம் வேலைன்னு கேட்கத் தோனுமே... ! ஏன் இந்த பரபரப்பு என்று ஃபீலிங்க்ஸ் பீரிடுமே !?, வரனுமே. அப்படி வந்தால்தானே அதிரையில் அனைத்தையும் கவனிக்கிறோம்னு தெரிய வரும் !

என்னமோ தெரியலைங்க ஊருக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி விட என்னமா கஷ்டப்பட்டாங்க ஒரு சாரார்! சரி, வாங்கியாச்சு, முறையாக பொதுமக்களுக்கும் பயனளித்தும் வருகிறது(!!).

ஆம்புலன்ஸ் அமைதியாக ஒரு இடத்தில் ஒதுங்கி இருக்க நிழலோடு இருக்கும் கூரை போட ஒரு சாரார், ஆனால் மற்றொரு சாரார் ஆம்புலன்ஸ் ஒதுங்கி நிற்க கூடாது அதுவும் ஓரிடத்தில் நிற்கவே கூடாது மற்றொரு சாரார்....

ஏனுங்க இப்புடி !?

இருந்தாலும், அதிரையில் நாமெல்லாம் யோசனை சொல்லி அதைக் கேட்கும் இயக்கமும் இல்லை, கட்சியும் இல்லை ஏன் எந்த அமைப்பும் தயாராக இல்லை! அவைகள் அனைத்தும் தலை'மை'க்கு கட்டு பட்டவர்கள். அதற்காக சும்மாவா இருந்துடுவோம்...!!?

இங்கே பதியப்பட்டிருக்கும் காட்சியின் இடது மேல் விளையாடு (ஸாரிங்க) PLAY என்ற பொத்தனை அழுத்தி அங்கே விரியும் காட்சியினையும் பார்த்து விட்டாவது மல்லாக்க படுத்து யோசிச்சு பாருங்க மக்களே !


அதிரைநிருபர் குழு

8 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனித நேயம் இல்லை! மனிதரிடம்

படம் பிரமாதம்.

கட்சி அதிரையில் நுழைவதை பார்த்து மற்ற கட்சிகள் என்னப்பா இது நேத்து வந்த கட்சி இவ்வளவு சேவை செய்கிறதே என்ற பொறாமையா?

இல்லெ

மற்ற கட்சிகளை நேசிக்காமல் நானே என்ற குணத்தில் மற்ற கட்சிகளுடன் சகோதரத்துவம் காட்டவில்லையா?

Abdul Razik said...

NNever Never Never!!!!!!!! Until unite - Please don’t dream name as Adirai Pattinam - it is better we can call Adirampattinam. I really hat all local parties even they serve to people. What is the use of TMMK.TNTJ,SAMSUL ISLAM SANGAM,SDP,????What are they? Is these disqualified guys running those organization in Adirai???? . Please cry and pray to Allah to congregate all people of AMM in solitary.

Abdul Razik
Dubai

அதிரை சித்திக் said...

யாராவது .ஒதிங்கி போனால் ..
ஆம்புலன்ஸ் இடிக்காம போகுமுல ...!
நம்ம ஊர் நடப்புகளை பார்க்கும் போது
ஆப்பசைத்த குரங்கு ஞாபகத்திற்கு வருகிறது

Shameed said...

ஆளுக்கு ஒரு கொடி கம்பு கொடுத்து, உதவினா நல்ல கூரை கிடைக்கும் ! அவரவர் உள்ளங்களில் இடம் கொடுத்தால் ஆம்புலன்ஸ் நிறுத்த எங்குவேனும்னாலும் இடம் கிடைக்கும் ! - நடக்குமா ? ஏன் இந்த முரண்டு !?

குதிரை வாங்குவதுதான் கடினம் ஆனால் அதிரையில் குதிரைக்கு லாடம் வாங்குவது அல்லவா கடினமா இருக்கு

sabeer.abushahruk said...

ஆம்புலன்ஸில் போகுமுன் திருந்துவது நலம்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஆம்புலன்ஸில் போகுமுன் திருந்துவது நலம்.//

supper



Yasir said...

ஆம்புலன்ஸிற்க்கே ஆப்பா ..ஐயா இதெல்லாம் உயிர் மேட்டரு விளையாடப்பிடாது

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நாம் வசிப்பிடத்துக்கருகில் பள்ளிக்கூடம் ரேசன்கடை இருத்தல் அவசியம் அதுபோல் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கப்பெற்றவர்கள் பயனடைவர் எந்த தெருவாசிகளுக்கு கொடுப்பினையோ

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.