Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அது ஒரு பொற்காலம் 1977 - தொடர்கிறது.... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2012 | , , ,

பகுதி - 4
அன்பார்ந்த அதிரைநிருபர் வலைத்தள வாசக அன்பர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் 1977 மலரும் நினைவுகளோடு மறக்கவியலாத பவேறு விஷயங்களையும் சந்தோசமான கலகலப்பான விசயங்களையும் தங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். 

இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு இயக்கம் / கட்சி என்று தங்களை உட்படுத்தி பல பிரிவுகளாய் பிரிந்து கிடக்கிறார்கள் அண்ணன் ஒருபக்கம், தம்பி ஒருபக்கம், மச்சான் ஒரு இயக்கம், மச்சினன் ஓரு இயக்கம், இவ்வாறாக இயக்கங்களின் மயக்க கொள்கையால் ஊர் ஒற்றுமையை துறந்து சண்டை சச்சரவுகள் தொடர் கதையாகவே இருக்கிறது இதிலிருந்து அல்லஹ் பாதுகாப்பானாக.

என்னுடைய பால்ய நண்பர்களிடம் இப்பொழுது நடக்கும் விசயங்களை கவலைபட்டு பேசும் பொழுது சிறுவயதிலே (70 களில்) சமுதாயத்திற்காக நாம் செய்த நல்லவைகளுக்கு எந்த இயக்கங்களும் தேவைப்படவில்லை நற்சன்றிதழ் வாங்க மனமும் ஆசை கொள்ளவில்லை. ஊர் நல்லாயிருக்கனும் சமுதாயம் சீர்படனும் என்ற எண்ணம் மட்டும்தான் எங்களது மனதிலும் நிறைந்திருந்தது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நற்காரியங்கள் நிறைய செய்திருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.

அவ்வாறான சுவையான சம்பவங்கள் சிலதை பட்டியலிடுகிறேன் செய்த நல்ல செயல்களை சொல்லிக் காட்டுவதால் நன்மை குறைந்து விடுமோ என்ற கவலையோடு (இன்றய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் அமையட்டுமே என்ற நல்ல நோக்கோடு) சொல்கிறேன்.

ஆலடிக் குளமும் பெண்களும்
============================

அன்றய அதிரையில் வீட்டிற்கொரு குளியலரை கிடையாது ஏன் தண்ணீர் வசதியுள்ள வீடுகளும் சொற்பம்தான் குடி தண்ணீர் தேவைகளுக்கு சில பெண்கள் தினமும் ஒரு குடம் மண்பானையில் கொண்டுவந்து தருவார்கள். மாதம் 30 பைசாவிற்கு (மண்ணப்பங் குளம் தண்ணீர் கொண்டு வந்து என்று தருவார்கள் 5 பைசா அதற்கு விலை அதிகம்)

சொல்ல வந்த விசயம் வேறு பெண்கள் குளிப்பதற்காக சுபுஹு பாங்கு சொல்வதற்கு முன்பே எழுந்தால்தான் வெளிச்சம் வருவதற்கு முன்பே குளித்துவிட்டு வீடு திரும்ப முடியும் பெண்கள். எந்த நேரமும் குளிக்க வசதியான இடம் மரைக்கா குளம் (சித்தீக் பள்ளியின் மேற்புறமாய் அமைந்திருக்கிறாது !!). அடுத்து ஆலடிக் குளத்தில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கரையும் தான் (ஒரு கரையில் 'ப' வடிவில் சுவர் எழுப்பி மறைவு ஏற்படுத்தியிருப்பார்கள் இன்றும் அது கம்பீரமாக அத்தாட்சியாய் நிற்கிறது).

ஒரு சமயம் ஊரில் சலசலப்பு பள்ளி வாசல்களில் ஆண்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள் இன்றைய பெண்களுக்கு வெட்கம் கிடையாது சுபுஹு தொழுது முடிந்ததும் கூட இன்னும் செக்கடிக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள், ஊர் கெட்டுப் போச்சு, காலம் கெட்டுப் போச்சு, என்று ஆளாலுக்கு பேசுவதும் சில ஆண்கள் பெண்களிடமே வந்து சப்தம் போடுவதுமாக இருந்தார்கள்.

நாங்களும் எங்கள் சொந்த பந்தங்களான பெண்களிடமும் இதுபற்றி சண்டையிட்டு இருக்கிறோம் அதற்கு அவர்கள்  கூறும் காரனங்கள் எங்கள் மனதில் ஒரு தாக்கத்தை உண்டு பன்னியது. ஆலடிக் குளத்தில் பெண்கள் கரையில் கால் வைக்க முடியாத அளவுக்கு களிமண் சேறும் அல்லிச் செடிகளும் நிறைந்து இருந்ததால் தான் அங்கே குளிக்காமல் அனைவரும் செக்கடிக் குளத்தையே நாடுவதால் இங்கே கூட்டம் அதிகமாகி சுபுஹு தொழுகை முடிந்த பின்னும் பெண்கள் குளிக்க காரணமாகிவிட்டது என்றார்கள்.

நண்பர்கள் சிலர் ஒன்று கூடினோம் தீர்க்கமாய் முடிவெடுத்தோம் எல்லோரும் சுபுஹு தொழுதுவிட்டு வீட்டில் உள்ள சட்டி கூடை மண் வெட்டிகளை எடுத்துக் கொண்டு ஆலடிக் குளத்தின் பெண்கள் கரையில் இறங்கி தூர்வார ஆரம்பித்தோம் 10 நாட்களுக்கு மேல் வேலைகளை தொடர்ந்தோம் அத்தோடு அந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்தது.


செக்கடிக்குளம்
+++++++++++++++

புதுமனைத்தெரு நடுத்தெரு ஆலடித்தெரு நெசவு தெரு ஆகிய தெரு ஆண்களின் குளியலுக்கு செக்கடிக் குளம் முக்கியப் பங்காற்றியது இப்பொழுது தண்ணீரின்றி வற்றியிருப்பது போல் அப்போதெல்லாம் சுத்தமாக நீர் வற்றவே வற்றாது. மீண்கள் அதிகமாகி விட்டால் குளம் நாற்றம் எடுத்துவிடும் மீண் குத்தகை எடுத்தவர்கள் டீசல் பம்புசெட் வைத்து தண்ணீரை வெளியேற்றி விட்டு மீண்களை மட்டும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். பிறகு குளத்தின் தண்ணீர் தேவைக்காக சி எம் பி வாய்காலில் வரும் தண்ணீரை இரவில் விழித்திருந்து செக்கடி குளத்திற்கு தண்ணீரை மடை திருப்பி விடுவோம். இதில் பக்கத்து ஊர் விவசாயிகளோடு பிரச்சனை வரும் அவைகளையெல்லாம் சமாளித்துதான் செக்கடிக்குளத்தை நிறப்புவோம்.

சலீம் பாய்
++++++++++

பழய பேப்பர் இரும்பு சாமான்களுக்கு நிலக் கடலை விற்கும் ஒரு நல்ல மனிதர் அவர் பெயர் ஞபகமில்லை பிற மதத்தவர் நாங்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது எங்கள் அருகில் வந்து சிறிது நேரம் பேசிவிட்டுதான் செல்வார். பழகுவதற்கு ரொம்ப இனிமையானவர். அடிக்கடி இஸ்லாத்தைப் பற்றி நம்வூர் பழக்க வழக்கங்களைப் பற்றி நாங்கள் சொல்லக் கேட்பார்.

ஒரு சமயம் நாங்கள் அவரை விளையாட்டாக நீங்கள் இஸ்லத்தை ஏற்றுக் கொண்டால் என்ன என்று வினவினோம். அவரும் சட்டென ஒப்புக் கொள்ள உடனே ஆலிம்களை சந்தித்து விசயத்தை சொன்னோம். அவர்களும் இவரை அழைத்து வர சொன்னார்கள் அவரிடம் ஆலிம்கள் எல்லா விசயங்களையும் கேட்டு விட்டு கலிமா சொல்லிக் கொடுத்தார்கள் (அல்ஹம்துலில்லாஹ்). சிறிது காலத்திற்கு பிறகு நமதூரிலேயே குதிரை வண்டிக்காரர் மகளை திருமணம் முடித்து சந்தோசமாக சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு இருந்தார். ஊர் வரும் போதெல்லம் எங்களோடு அன்பாய் இருப்பார் சலீம் பாய் நாங்கள் தான் அவருக்கு பெயரும் வைத்தோம் (காலம் சங்கர், சலீம், சைமன் ரிலீசான நேரமது).

மு.செ.மு.சபீர் அஹமது

20 Responses So Far:

Yasir said...

1970 -கருப்பு / வெள்ளை நினைவுகள் இன்றும் உங்கள் மனதில் கலராக பதிந்து இருந்து இப்பொழுது அது எங்களுக்கும் பல நினைவுகளை பசுமையாக வாரி வழங்கி இருக்கின்றது....படிக்கும்போது பழைய காலத்திற்க்கே போன உணர்வு...வாழ்த்துக்கள்..

Ebrahim Ansari said...

நல்ல நினைவலைகளின் தொகுப்பு. ஆனால் தட்டச்சுப் பிழைகளை சரி செய்திருக்க வேண்டும்.

அதிரை சித்திக் said...

மலரும் நினைவுகள் ...
நல்ல விசயங்கள் அசை போடுவது
நன்மையே பயக்கும் ..சலீம் பாய்
முந்தைய பெயர் போஸ் ...

அதிரை சித்திக் said...

மலரு நினைவுகள் ..
பெண்கள் வெள்ளை குளத்தில்
பகல் நேரத்தில் குளிப்பதை தவிர்க்க
கர்ச்சமணியை சுத்தம் செய்தோம்..
ஹபீப் முகம்மது காக்கா மகன் நெய்னா முகம்மது
முக்கிய மாணவர் சலீம்பாய் இஸ்லாத்தை தழுவும்போது
எங்களோடு துணையாய் நின்ற எனது நண்பன்
சுண்டைக்காவீட்டு ஹாஜா அலாவுதீன்
மறக்க முடியாத நபர் அவர் நம்மோடு இல்லை
மறைந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலை ஹி
ராஜிவூன் )

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// எங்களோடு துணையாய் நின்ற எனது நண்பன் ஹாஜா அலாவுதீன்
மறக்க முடியாத நபர் அவர் நம்மோடு இல்லை மறைந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலை ஹி ராஜிவூன் ) //

அதெப்படி மறக்க முடியும் அந்த பளீரென்ற முகத்தை... எதனையும் பட்டென்று சொல்லும் பழக்கமுடையை ஹாஜா அலாவுதீன் காக்காவை !

Shameed said...

அழகிய மலரும் நினைவுகள்

இப்போதெல்லாம் ஊரில் குளங்கள் மெல்ல மெல்ல காணமல் போய் வருகின்றன


KALAM SHAICK ABDUL KADER said...

தோண்டத் தோண்டத் தண்ணீர் வராவிட்டாலும், தோண்டத் தோண்டக் கண்ணீர்க் கதைகளாய்- மலரும் நினைவுகளை உண்டாக்கி விட்டன, ஆலடிக் குளம்/ செக்கடிக் குளம். புதுமணப் பெண்ணின் தோழிகள் அக்குளங்களில் ஒன்றில் குளிப்பதற்காகப் புதுமணப் பெண்ணின் அறைக்கதவைத் தட்டி எழுப்பியக் காலம்; அதன் கோலம் எல்லாம் நினைவுக்கு வந்து விட்டன, “தொழிலதிபரின்” எழிலான நினைவு நாடாக்களின் சுழற்சியால்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனதுக்கு இனிமை தரும் பொற்கால நினைவலைகள்!

அது எப்படி ஆலடி ஆலை+அடி,
செக்கு+அடி செக்கடி
இது தான் பெயற் காரணமாய் இருக்குமோ!

//(சித்தீக் பள்ளியின் மேற்புறமாய் அமைந்திருக்கிறது !!)//
2 வியப்புக்குறியுடன்?
அதுவும் சித்தீக் பள்ளி மேட்டருடன் சேர்ந்ததா?
அப்படின்னா ஏன் அதன் பெயர் மரைக்கா குளம்?

ZAKIR HUSSAIN said...

குளங்கலில் தூர் வாரும் பணி நானும் எங்கள் தெருவில் செய்திருக்கிறேன். ஆனால் அப்படியெல்லாம் வேலை செய்து சுத்தமாக்கி வைத்த பல குளங்கள் இப்போதைய சந்ததியினரால் ப்ளாஸ்டிக் குப்பையை வீச பயன்படுத்தும் குப்பை தொட்டியாகவே பயன் படுத்த படுகிறது.

இஸ்ரோ இருப்பதும் இந்தியாவில்தான் , இயற்கை கொடுத்த வரங்களை அழிக்கும் இளித்த வாயர்கள் இருப்பதும் இந்தியாவில்தான்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மலரும் நினைவுகளை இனிமையாக அசைப்போட வைத்த சபீர் காக்காவின் தொடர் அசத்தல்

முன்பெல்லாம் ஒரு நாள் மழை பெய்ததும் செக்கடி,ஆலடிக்குலம் மற்றும் அனைத்து குளங்களும் தண்ணீர் ஓரளவு நிறைந்து காணப்படும் தற்போது நம்மூரில் தான் அதிக அளவு (நேற்றைய அளவு 70.8 மிமீ) மழை பெய்தும் குளங்கள் அப்படியே ரோட்டில் காணப்படும் நீர் தேக்கம் போல காட்சியளிக்கிறது

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அனைத்து அன்பர்களின் ஆதரவுக்கு நன்றிகள்(அல்ஹம்துலில்லாஹ்) ஜஹபரின் சந்தேகம் ஒன்றுக்குமட்டும் என்னிடம் பதில் உல்லது ஒருகாலத்தில் செக்கு இழுத்த இடம்தான் செக்கடிக்குலம்
மரைக்கா குலம் அல்லாஹ்விர்க்கே வெளிச்சம்

sabeer.abushahruk said...

சுவையான நிகழ்வுகள். தொடர்ந்து பகிருங்கள்.

வாழ்த்துகள்.

அப்துல்மாலிக் said...

மறக்கமுடியாத ஒரு குளம் செக்கடி குளம். டைவ் அடிக்க, நீச்சல் கத்துக்கிட்டது (இன்று பல ஆயிரம் செலவழித்தாலும் அந்தளவுக்கு முடியாது)
நோன்பு காலத்தில் பசி வந்துடும் என்று அஸர் முதல் நோன்பு திறப்பதற்கு 30 நிமிடம் முன்பு வரை குளத்தில் ஊறியது, முகைதீன் பள்ளி படித்தரை வரை நீந்தி சென்றது, இப்படி எத்தனையோ சொல்லலாம்....

//இரவில் விழித்திருந்து செக்கடி குளத்திற்கு தண்ணீரை மடை திருப்பி விடுவோம்.//

மரைக்கா குளத்திற்கும், செக்கடி குளத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் பணியில் நானும் ஈடுபட்டிருக்கேன்...

Unknown said...

ஒரு அருமையான பதிவு பலைய நினைவு திரும்பியது பொல் ஒரு நினைவு

Unknown said...

ஒரு அருமையான பதிவு பலைய நினைவு திரும்பியது பொல் ஒரு நினைவு

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அண்மையில் மருத்துவ ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில், தற்போது உலகளாவிய அளவில் ஆண்-பெண்களுக்கு அதிகரித்துவரும் கால்வலி, கழுத்துவலி, விரல்களில் வலி, முதுகுவலி ஆகியவற்றுக்குக் காரணமாக 'நீச்சல் மறைந்து போனது' காரணமாகச் சொல்லப்பட்டிருந்தது.

நம்முடைய ஆரோக்கியத்துக்காவது நமதூர்க் குளங்களைத் தூர் வாரி, சுத்தப்படுத்தி வைத்துக்கொள்வதோடு நாம் ஷவரை மறந்துவிட்டுப் பழையபடி குளத்தில் நீச்சலடித்துக் குளிக்கவேண்டும்.

தூய்மையான குளங்களில் மீண்டும் நீச்சல் செயலுருப் பெறக் கூட்டு முயற்சி இருந்தால் போதும்.

கட்டாயத் தேவை எனக் கருத்தில் கொண்டதால் இப்பின்னூட்டம்.

நன்றி!

அப்துல்மாலிக் said...

இன்றைய தேதியில் எத்தனை சிறுவர்/சிறுமியருக்கு நீச்சல் தெரியும்???
இப்போ கொஞ்சம் வசதி வந்து தன் வீட்டிலே நீச்சல் குளம் கட்டியிருந்தாலும் எத்தனை சிறுவர்களை அங்கே குளிக்க அனுமதிப்போம்..

ஆகவே தேவை “பொதுவான நீச்சல் குளம், தூர் வாரி சுத்தமான நீருடன் கூடிய குளங்கள் தேவை இக்கணம், கவனம் செலுத்துவாங்களா ஆட்சியாளர்களும், பொதுமக்களும் ....

இல்யாஸ் said...

// எங்களோடு துணையாய் நின்ற எனது நண்பன் ஹாஜா அலாவுதீன்
மறக்க முடியாத நபர் அவர் நம்மோடு இல்லை மறைந்து விட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலை ஹி ராஜிவூன் ) //

அல்லஹ் யர்ஹம்ஹும்

சவுதியில் இறந்தவர்களை பற்றி பேசும்போது இது போல் சொல்லுவார்கள். இந்த நல்ல பழக்கத்தை நாமும் கடைபிடிக்கலாமே.

ஜமீல் காக்காவின் கருத்தை வழி மொழிகிறேன்.

ajmal hussain said...

SO SWEET TO REMEMBER THIS
SWEET MEMORIES ARE JOY FOR EVER ALWAYS
I AM ALSO FROM 70s ERA.
People need to post something like this.

Keep going . All the best .

Bashin Beach said...

நினைத்தலெ இனிக்கும், மலரும் நினைவுகல் அருமை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.