Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... 28

அதிரைநிருபர் பதிப்பகம் | October 23, 2012 | , , , ,

பிஸ்மில்லாஹ்....

நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு தாயகம் சென்று வர வாய்ப்பு கிட்டியது. அதற்கு முதலில் அல்லாஹ்விற்கு நன்றி செலுவத்தியவனாக (அல்ஹம்துலில்லாஹ்)!

விமானப் பயணச்சீட்டு முன்பதிவு செய்ததிலிருந்து எபோது மீண்டும் இந்தியாவையும், பெற்றோர், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் காண்போம் என்ற அவா நைல் நதியின் துள்ளலோடு எண்ணத்தில் அலை மோதிக் கொண்டு இருந்தன.

புறப்படும் நாளும் நெருங்கியது, ஆயிரமாயிரம் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டும், சந்தோஷ துள்ளல்களாக நேரம் நகரத் துவங்கியது.

கலிஃபோர்னியாவில் உள்ள என் சகோதரியின் வீட்டிலிருந்து குடும்ப சகிதமாக உள்ள அந்த சுகமான பயணம் தொடங்கியது.


சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்தபோது இரவு 10:45 மணி.

அங்கிருந்த விளக்கு வெளிச்சங்களும் அந்த விமான நிலையத்தை பகலாக ஆக்கிக் கொண்டிருக்க, என் கடைசி (4வயது) மகள் முல்தஸிமா ஜுவைரியா என்னைப் பார்த்து "நான் ஃபிளைட்டில் வரமாட்டேன், இந்தியாவுக்கு இரயிலில்தான் வருவேன்" என்றாள்.

மகளாருக்கு ஃபிளைட் என்றாலே பிடிக்காது, இரயில் பயணம் என்றால் அலாதி பிரியம், எனவே, நாங்களும் "பறக்கும் இரயிலில்தான் பயணம்" என்று சொல்லி அழைத்து வந்தோம் ஆனால், விமான நிலையத்திலிருந்த விமானங்களை கண்டு விட்டு முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டால்.

ஒருவழியாக லக்கேஜ்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் செக்-இன் செய்து முடித்து விட்டு போர்டிங் பாஸ் பெற்றதும், முரண்டு பிடித்த மகளையும் சமாளித்து வழி அனுப்ப வந்த உறவினர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, செக்யூரிட்டி செக்கிங் நோக்கி நடந்தோம்.

அமெரிக்காவில் குடிபெயரக சோதனைக்கு (emigration clearance) பதிலாக பாதுகாப்பு சோதனை வைத்து அது TSA என்ற பெயரில் இயங்குகிறது (Transportation Security Administration), இது அமெரிக்காவின் ஹோம் லேண்ட் செக்யூரிட்டியின் கீழ் வருகின்றது.

அங்கு இருந்தவர் ஒரு வொயிட் ஆஃபிசர், ஒவ்வொரு பாஸ்போர்ட்டையும் முகத்தையும் கவனித்து அதை ஸ்கேன் செய்துவிட்டு, தனித் தனியே பயண வாழ்த்து சொல்லி புன்முறுவல் பூத்தார் !

பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு, சிங்கப்பூர் செல்லும் விமானம் SQ001 இருக்கும் இடம் (Gate) நோக்கி நர்ந்தோம்.

கண்ணாடிக்கு வெளியே தெரியும், விமானங்களைக் கண்டு கொண்டு, மீண்டும் மகளின் நச்சரிப்பு ஆரம்பிக்க, இரவு நேர சான்பிராசிஸ்கோவின் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்து சிறிதாக செல்லமாக தட்டலாம் என்று எண்ணம் வந்ததை அடக்கிக் கொண்டேன். அதனை போலீஸ் பார்த்தால் பிரச்சினை, ஒவ்வொன்றாக சொல்லி மீண்டும் சமாளிப்புதான் தொடர்ந்தது.

சரியாக 12:50க்கு ஃபிளைட்டில் அமர அழைக்கப்பட்டோம் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பணிப் பெண்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள, மீண்டும் என் மகளின் அழுகையும் பிடிவாதமும் அரம்பிக்க என் இல்லாள் ஒரு யோசனை செய்தார்! அங்கு வந்த பனிப் பெண்ணிடம் என் மகளின் பிடிவாத குணத்தை சாடையாக காட்டி விட்டு "at what time this tர்ain will fly? என்று கேட்க அந்தப் பணிப் பெண்ணும் புரிந்து கொண்டு புன்முறுவலுடன் "this train will fly at 01:20am" என அழுத்தி சொல்ல என் மகளின் முகத்தில் சந்தோஷக் களைகட்டியது. நாம் பறக்கும் இரயிலில் தான் பயணிக்கப் போகின்றோம் என்று!. என் இல்லாளின் சமயோசித அனுகுமுறையை நினைத்து பெருமைப் பட்டேன் அதே நேரத்திலும் 'பாராட்டவும் தயங்கவில்லை' மாஷா அல்லாஹ் !

சரியாக 1:20 மணி, அதிகாலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ற அலுமினியப் பறவை - தன் பயணத்தை தொடங்கியது.

எல்லோருமாக, பயண துஆவை ஓதிக் கொண்டோம், அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்தித்துக் கொண்டோம். பயணியின் துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்ற ஹதீஸ் ஞாபகம் வந்தது, துஆ செய்தோம்.

பயணத்தின் ஊடே, என் மகளிடம் கேட்டேன் "ஏன் ஃபிளைட் என்றால் பயப்படுகிறாய்?" என்று..

என் மகள் சொன்னாள் "ஃபிளைட் புறப்படும்போது கீழே விழுந்து விடும்" என்று சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு 'சொலக்' என்றது.
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

28 Responses So Far:

அதிரை சித்திக் said...

அழகான துவக்கம் ..
மலை சொல் ,,இனிமை

sabeer.abushahruk said...

அர அல,

எத்தனை வருடங்களுக்குப் பிறகு ஊருக்குப் போகிறீர்கள் என்பதைச் சொன்னாலே வாசிப்பில் சுவாரஸ்யம் ஏற்படும்.

Shameed said...

நீங்கள் பறந்தது இலகுரக விமானமா ?காரணம் உங்கள் எழுத்தில் அத்தனை இலகு ரகங்கள்

Shameed said...

இன்றைய தேதியில் இருந்து விமானத்திற்கு பறக்கும் ரயில் என்று பெயர் வைத்துவிடவேண்டியதுதான்

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புத் தம்பி அர. அல,
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களின் பயணமும்
தங்க மகளின் பயமும்
உங்கள் துணைவியாரின் சமயோசித அறிவும்
எங்களை உங்களின் குடும்ப்பத்திற்காக துஆச் செய்யத் தூண்டுகின்றது.

அருமையான துவக்கம்
அழகான ஆக்கம்

mulakkam said...

you intended me to fly same way you fly. so inshaallah i am also fly to train. i like this word expecting second part good luck keep it up. i hope you writing more surprise incident. JASAKKALLAH HAIRAN

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் .

அன்புள்ள தம்பி அர. அல. அவர்களே!

வலைதள பின்னூட்டங்களில் புயலாக வலம் வரும் தங்களை ஊரில் எனது வீட்டில் சந்தித்த போது உங்களின் அன்பும் அடக்கமும் என்னைக் கவர்ந்தன. இதை நமது நண்பர்கள் இடமும் சொல்லி மகிழ்ந்தேன்.

உங்களின் இந்தத் தொடரின் ஆரம்பமே அருமையான சொற்களின் பிரயோகத்தால் சுவையூட்டும் குறிப்புகள் தென்படுகின்றன. உதாரணமாக அலுமினியப் பறவை, நைல் நதியின் துள்ளல் ஆகியவை.

தங்களின் இந்தத் தொடர் அ. நி. யின் இன்னொரு சரித்திரம் படைக்கும் தொடராக மலர து ஆச்செய்கிறேன்.

Unknown said...

I glad to know your journey very nice and your child comment awesome write more await for journey experience next episode.thanks.expect continue with duaa

ZAKIR HUSSAIN said...

To Bro Ara Ala,

உங்கள் மகள் AIR CRASH INVESTIGATION program பார்த்து பயந்திருக்களாம். அதெல்லாம் ஜூஜுபிமா நு சொல்லி தைரியப்படுத்துங்கள்.

Hope you like SINGAPORE AIRLINES, one of the best serviced air crafts in the world.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...



மாஷா அல்லாஹ் பல வருடங்களுக்குப்பிறகு அன்பின் சகோ. அ.ர. அப்துல் லத்தீஃபை ஊரில் நேரில் சந்தித்து உரையாடியது எண்ணி மகிழ்கிறேன். உங்களின் ஆக்கம் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி பிள்ளைகளை நல்லினமாக கையாளும் விதம் பற்றி அனைவருக்கும் பாடம் நடத்துகிறது. அருமை. தொடருங்கள் உங்களின் இதமான இதுபோன்ற ஆக்கங்களை.....வாழ்த்துக்கள்.

ஒரு முறை நான் என் தகப்பனாரையும், மகனையும் இரு சக்கர வாகனத்தில் பகல் பொழுதில் ஏற்றிச்சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் சகோ. அர.அல குறிக்கிட்டார். என் வாப்பா அவர்கள் சகோ. அர.அல.வைக்கண்டு கொண்டார்கள். ஆனால் நான் இவர் சகோ. அர.அல.வாக இருக்காது என கண்டும் காணாதது போல் சென்று விட்டேன். பிறகு தான் மரைக்காப்பள்ளியில் நேரில் கண்டதும் அறிந்து கொண்டேன் சகோ. அர. அப்துல் லத்தீஃப் பல வருடங்களுக்குப்பிறகு ஊர் வந்திருப்பதை. அல்ஹம்துலில்லாஹ். வருடங்கள் பல உருண்டோடி இருந்த போதிலும் அதே அடக்கம், அமைதி(ரயில்), அரபு நாட்டு ஆடம்பரங்களுக்கிடையே அமெரிக்காவின் அமைதி என்னை ஆச்சர்யப்படவே வைத்தது. அவர்களின் தகப்பனாரும், என் தகப்பனாரும் இன்றும் உற்ற தோழர்களாய், உறவினர்களாய் இருந்து வருவது கண்டு அந்த இறைவனுக்கே நன்றி கூறிக்கொள்கிறேன்.

ஆறு மாத இடைவெளியிலேயே ஊரில் எத்தனையோ பல மாற்றங்களையும், நம் பிரியமான மூத்த, இளையவர்களின் பிரிவுகளையும் பார்த்து விடுகிறோம் நாம். நிச்சயம், சகோதரர் பெரும் மாற்றத்தை உணர்ந்திருப்பார். சிலவற்றைக்கண்டு இன்னுமா இப்படி? என வருந்தாமல் இருந்திருக்கமாட்டார் நிச்சயம்.

இருக்கும் பொழுது துரத்தும், பிரியும் பொழுது அணைக்கும் ஊர் தான் நம் ஊர்.

ஆயிரம் அசெளகரியங்கள் இருந்தாலும் பிறந்த மண்ணை விட்டு எளிதில் பிரிய எவர்க்குத்தான் இயண்டு விடுகிறது?

இந்த முறை இரண்டு மாத காலம் ஊரில் தங்கி விட்டு திரும்பி வரும் பொழுது இதயம் பெரும் கனத்தை ஏற்படுத்தியது. தூக்கு மேடையில் இன்னும் ஒரு சில மணித்துளிகளில் தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட இருக்கும் வேளையில் ஒரு தண்டணைக்கைதியின் மனம் படும் பாட்டை உணர்த்தியது.

பிரியமான பெற்றோர்கள் து'ஆச்செய்து வழியனுப்புகையில் "தம்பீ! நீ அடுத்த முறை ஊர் வரும் பொழுது நான் உயிருடன் இருக்கிறேனோ? இல்லையோ? அல்லாஹ் நாட்டம். ஒசியத்து சொல்கிறேன் இதை, இதைச்செய், இதை, இதைச்செய்யாதே" என்று சிலவற்றை குறிப்பிட்டு கனத்தக்குரலுடன் உரைத்தது அதை நினைக்கும் பொழுதெல்லாம் என்னை உரைய வைத்து விடுகிறது. என்னடா வாழ்க்கை இது? இதற்கு விமோச்சனமேக்கிடையாதா? என எனக்குள் நடுவரில்லா ஒரு பெரும் பட்டிமன்றமே நடந்து ஓய்ந்திருக்கிறது.

இன்னும் நிறைய எழுதுங்கள் ஏக்கங்களால் பரிதவிக்கும் எம்மை நன்கு பக்குவப்படுத்தட்டும் உங்கள் எழுத்து இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அப்துல்மாலிக் said...

சகோ. லத்தீஃப் அருமையான தொடக்கம், உங்க மகள் ஒரு நாள் வருத்தப்படுவாங்க இப்படியெல்லாமா நாம் அடம்புடிச்சோம்னு. :)))

//கேட்டவுடன் எனக்கு 'சொலக்' என்றது.//
இப்போதான் நம்மூர் வாடை அடிக்கீது

Unknown said...

// என் கடைசி (4வது) மகள் முல்தஸிமா ஜுவைரியா //
4வது இல்ல 4 வயது.
மாஷாஅல்லாஹ் அருமை இன்னும் தொடருட்டும்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்ல வேளை தங்களின் மகள் "யான்வாப்பா பறக்கும் ரயிலுக்கு றெக்கை எதற்கு?" என்று கேட்டு விடாமல் இருந்ததே?

இப்புடித்தான் என் மகனும் கொஞ்சம் என் முதுகில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கச்சொன்ன போது கொஞ்சம் சூட்டோடு வைத்து விட்டான். நானும் சூடு தாங்க முடியாமல் கொஞ்சம் உடலை சிலிர்த்துக்கொண்டேன். அதற்கு அவன் கேட்டானே ஒரு கேள்வி "யான்வாப்பா இதுக்கே இப்புடி குதிக்கிறியே, கியாமத் நாளையிலெ எப்புடி குதிப்பியோ" என்று.

மாஷா அல்லாஹ், இப்பொ உள்ள சிறுவர்களெல்லாம் அப்பொ உள்ள சிறுவர்களைப்போல் இல்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிறுவயதிலிருந்தே சகோதரர்கள் (A.R.Sons) அனைவரையும் நன்றாகத் தெரியும், அ.ர.அப்துல் லத்தீஃபின் பழகும் மென்மை எனக்கு ரொம்ப பிடிக்கும் ! கருத்தாடல் எழுத்தில் இருக்கும் பிடிவாதம் பிடிக்கும், தனி மின்னஞ்சலில் சுட்டும் சுடர் பிடிக்கும் ! :) மொத்தத்தில் இந்த தொடரும் எனக்கு பிடிக்கும் ! :)

Yasir said...

சகோ.A.R.அப்துல் லத்தீஃப் அவர்களின் பயணக்கட்டுரை என்னை விசா,போர்டிங் பாஸ்,விமான டிக்கெட் இல்லாமல் அவர்கள் அருகினில் அமர்ந்து இந்த சம்பவங்களையெல்லாம் கண்முன்னால் பார்த்தது நானும் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது...சிறந்த எழுத்துநடை நம்மை இதன் கூடவே நடக்கவைக்கின்றது...வாழ்த்துக்கள் சகோதரே..அல்லாஹ்வின் கருணை என்றும் உங்கள் குடும்பத்தின் மீது பொழிய துவாக்கள்

Yasir said...

//வலைதள பின்னூட்டங்களில் புயலாக வலம் வரும் தங்களை // மார்க்க விசயங்களில் ஒரு முரண்பாடாக கருத்து தென்பட்டுவிட்டால் புயலாக மாறி யாருக்கும் பாதிப்பில்லாமல் சுழற்றி அடிப்பதும் ,அதற்க்கான விளக்கம் தகுந்த ஆதாரத்துடன் கிடைத்துவிட்டால் தென்றலாக வீசுவதும் ஒரு நல்ல இஸ்லாமியனுக்கு அடையாளம் அது தேவையும் கூட..அர அல அதனை பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கின்றார்..அவரின் “பிடி”வாதத்தால் தான் இன்று நமக்கு தலைமுறைக்களுக்கும் உதவக்கூடிய “கவிதை- ஒரு இஸ்லாமியப்பார்வை” கிடைத்தது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அமைதி ரயில் தன் வாரிசை பக்குவமாய் பறக்கும் 'ட்ரெயினில்' பறக்கச் செய்ய கையாண்ட லாவண்யம் அருமை.
வாழ்த்துக்கள் தோழா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

//மாஷா அல்லாஹ், இப்பொ உள்ள சிறுவர்களெல்லாம் அப்பொ உள்ள சிறுவர்களைப்போல் இல்லை.//

இதைப் பற்றி எழுத நிறையே இருக்கே ! என்ன செய்யலாம் !?

இப்னு அப்துல் ரஜாக் said...

எல்லாவற்றுக்கும் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.சகோதரர்கள் அபுஒ
இப்ராகிம் ,தாஜ் அவர்களின் ஒத்துழைப்பு , ஊக்க மருந்து இப்போது பயணக்கட்டுரையாக ....
அன்பின் சித்திக் காக்காவின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
சபீர் காக்கா சொல்வது sari than சுமார் ஒன்பது வருடங்கள் கடந்து செல்ல வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ்

இப்னு அப்துல் ரஜாக் said...

/இன்றைய தேதியில் இருந்து விமானத்திற்கு பறக்கும் ரயில் என்று பெயர் வைத்துவிடவேண்டியதுதான் /


அப்படி வந்தாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்லை ஹமீது காக்கா.உங்கள் மூன்றாம் எனக்கு முதற்கண் .நன்றி

அபுல் கலாம் காக்காவின் துவாவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி காக்கா

To muzhakkam
I wish you the same

இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் சந்திப்பு மிக மகிழ்ச்சி தரும் ஒன்று.அவர்கள் வாயால் நான் துவாவும்,வாழ்த்தும் பெறுவது உண்மையில் கொடுத்து வைத்தவன்.அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

Thanks to oorvaasi for your valuable comment.


/உங்கள் மகள் AIR CRASH INVESTIGATION program பார்த்து பயந்திருக்களாம். அதெல்லாம் ஜூஜுபிமா நு சொல்லி தைரியப்படுத்துங்கள்.

Hope you like SINGAPORE AIRLINES, one of the best serviced air crafts in the world. /
ஆமாம்,ஜாகிர் காக்கா சரியாக சொன்னீர்கள்.பயணம் போகும் முன்பு பிள்ளைகளுக்கு விமானம் பற்றிய எல்லா வீடியோக்களையும் - எமிக்ராஷன் -கஸ்டம்ஸ் இப்படி இயங்குகிறது என விளக்கி கூறினேன்,வீடியோக்களை காட்டி.அதில் விமான விபத்து நடந்த வீடியோக்களும் உண்டு.நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை,அதுவே காரணமாக இருக்கலாம்.இன்று என் மகளிடம் பேசினாலும் நான் பறக்கும் ரயிலில்தான் வந்தேன்,மீண்டும் அமெரிக்காவுக்கு பறக்கும் ரயிலில்தான் வருவேன் என்று சொல்கிறாள்.

Yes,it's true.I like American Airlines too.very nice service on the board.

இப்னு அப்துல் ரஜாக் said...

To bro Naina சகோ நெய்னா அவர்களை ஊரில் பார்த்து மிக மகிழ்வு கொண்டேன்.சொல்லப் போனால் சகோ நெயனாவின் மரணம் பற்றிய சிந்தனை ஊட்டும் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்,அதை நேரில் சொல்லி - வாழ்த்தினேன்.சொல்லப்போனால் நான் நெயனாவின் விசிறி.வாப்பாவை விசாரித்ததாக சொல்லுங்கள்.உயர்ந்த உள்ளம் கொண்ட - எளிமையான மனிதர்.

To bro Malik //கேட்டவுடன் எனக்கு 'சொலக்' என்றது.//
இப்போதான் நம்மூர் வாடை அடிக்கீது

சகோ மாலிக்,அது சகோ நெய்னா மூலம் கிடைத்த அரிய அதிரை சொல்.உண்மையில் இந்த வார்த்தை போடும்போது சகோ நைனா அவர்களின் எண்ணம்தான் வந்தது.
உங்கள் கருத்து எனக்கு டானிக் சகோ மாலிக் அவர்களே.

To bro ARH(adirai post)
// என் கடைசி (4வது) மகள் முல்தஸிமா ஜுவைரியா //
4வது இல்ல 4 வயது.
மாஷாஅல்லாஹ் அருமை இன்னும் தொடருட்டும்...

ஆமாம்,சிறு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.நன்றி சகோதரா

இப்னு அப்துல் ரஜாக் said...

Yo bro Naina இப்புடித்தான் என் மகனும் கொஞ்சம் என் முதுகில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கச்சொன்ன போது கொஞ்சம் சூட்டோடு வைத்து விட்டான். நானும் சூடு தாங்க முடியாமல் கொஞ்சம் உடலை சிலிர்த்துக்கொண்டேன். அதற்கு அவன் கேட்டானே ஒரு கேள்வி "யான்வாப்பா இதுக்கே இப்புடி குதிக்கிறியே, கியாமத் நாளையிலெ எப்புடி குதிப்பியோ" என்று.

மாஷா அல்லாஹ்.சகோ நெய்னா உங்கள் மகன் உங்களைப் போன்று இருக்கிறார்.

மறுமை சிந்தனை இந்த சிறுவயதில்.அல்லாஹ் உங்கள் பிள்ளைக்கு அருள் புரியட்டும்.
To bro Yasir //வலைதள பின்னூட்டங்களில் புயலாக வலம் வரும் தங்களை // மார்க்க விசயங்களில் ஒரு முரண்பாடாக கருத்து தென்பட்டுவிட்டால் புயலாக மாறி யாருக்கும் பாதிப்பில்லாமல் சுழற்றி அடிப்பதும் ,அதற்க்கான விளக்கம் தகுந்த ஆதாரத்துடன் கிடைத்துவிட்டால் தென்றலாக வீசுவதும் ஒரு நல்ல இஸ்லாமியனுக்கு அடையாளம் அது தேவையும் கூட..அர அல அதனை பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கின்றார்..அவரின் “பிடி”வாதத்தால் தான் இன்று நமக்கு தலைமுறைக்களுக்கும் உதவக்கூடிய “கவிதை- ஒரு இஸ்லாமியப்பார்வை” கிடைத்தது //

சகோ யாசிர்.நீங்கள் சொல்லும் கருத்துக்கு நான் தகுதி இல்லாதவன்,பெருந்தன்மையாக இருக்கிறீர்கள்.உங்கள் அன்புக்கும்,கருத்தும் அக மகிழ்வும்,துவாவும்.


இப்னு அப்துல் ரஜாக் said...

To bro MHJ

//அமைதி ரயில் தன் வாரிசை பக்குவமாய் பறக்கும் 'ட்ரெயினில்' பறக்கச் செய்ய கையாண்ட லாவண்யம் அருமை.
வாழ்த்துக்கள் தோழா!//


நன்றி தோழா.உங்கள் தந்தையை கண்டேன்,சலாம் சொன்னேன்,அதே புன்னகை.மாஷா அல்லாஹ் -அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளும்,நல சுகமும் தருவானாக - ஆமீன்

இப்னு அப்துல் ரஜாக் said...

//சிறுவயதிலிருந்தே சகோதரர்கள் (A.R.Sons) அனைவரையும் நன்றாகத் தெரியும், அ.ர.அப்துல் லத்தீஃபின் பழகும் மென்மை எனக்கு ரொம்ப பிடிக்கும் ! கருத்தாடல் எழுத்தில் இருக்கும் பிடிவாதம் பிடிக்கும், தனி மின்னஞ்சலில் சுட்டும் சுடர் பிடிக்கும் ! :) மொத்தத்தில் இந்த தொடரும் எனக்கு பிடிக்கும் ! :) //


காக்கா,கல்லூரியில் நீங்கள் படிக்கும் போது,நான் பள்ளி மாணவன்.நீங்கள் கல்வி குறித்து ஆவலுடன் விசாரிப்பீர்கள்.பினசில் இருக்கும் போது - கரிசனமாய் இருப்பீர்கள்,எப்படி போகிறது என்று.இன்று என் கிறுக்கல்களுக்கு - ஆசிரியராக இருக்கிறீர்கள்.நன்றி காக்கா

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சிறந்த எழுத்தாளரான என் சகோதரரிடமிருந்து இன்னும்,இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

Unknown said...

//சகோ நெயனாவின் மரணம் பற்றிய சிந்தனை// - அர அல.

படித்துக்கொண்டு வந்தபோது, ஒரு நொடியில் அதிர்ந்து போனேன்!
பிறகுதான் புரிந்தது, இது இடம் மாறிய சொற்பயன்பாடு என்பது.
இப்படிப் பயன்படுத்தியிருந்தால், அந்த அதிர்ச்சிக்கு நான் ஆளாகியிருக்க மாட்டேன்: "மரணம் பற்றிய சகோ நெய்னாவின் சிந்தனை".
இது போன்ற தவறுகள் பற்றியெல்லாம் 'அதிரை எக்ஸ்பிரஸ்' தளத்தில்
எனது 'நல்ல தமிழ் எழுதுவோம்' என்ற தொடரில் குறிப்பிட்டிருந்தேனே, படிக்கவில்லையா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//Adirai Ahmad சொன்னது…
//சகோ நெயனாவின் மரணம் பற்றிய சிந்தனை// - அர அல.

படித்துக்கொண்டு வந்தபோது, ஒரு நொடியில் அதிர்ந்து போனேன்!
பிறகுதான் புரிந்தது,//

உண்மையாகவே அன்று படிக்கும் போதே நானும் அதிர்ந்தேன் காக்கா!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.