Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிலால் நகர் தாருத் தர்பியாவில் அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் பெண்கள் பயான் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2012 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அல்லாஹ்வின் பேரருளால் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினால் பிலால் நகரில் புத்தம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தாருத் தர்பிய்யா மையத்தில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (30-11-2012)  அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு : "இளைய தலைமுறையினரின் எதிர்காலம்"

சிறப்புரை : அஃப்ழலுல் உலமா ஷஃபான், ஆலிமா ஸித்தீக்கியா (முதல்வர், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, அதிரை)

பிலால் நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருக்கும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.

அதிமுக்கியமாக, ஆண்களுக்கு தனியிட வசதியுண்டு.

புதிய தர்பியா மையம் சிறப்புடனும் வலிமையுடனும் செயல்பட வாழ்த்துகிறோம் அதற்காக பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...


அதிரைநிருபர் குழு

22 Responses So Far:

Shameed said...

சீரும் சிறப்புமாய் செயல் பட எங்களின் துவா

Unknown said...

மாஷா அல்லாஹ் இறைவனின் மார்க்கத்தை அதன் தூய வடிவில் பெருமானார் காட்டித்தந்த வழிமுறையில் கற்பதும் கற்பிப்பதும் நம் கடமை. எல்லாம் வல்ல ரஹ்மான் இப்பணியை ஏற்றுக்கொள்வானாக,,,,,தாருத் தவ்ஹீதின் இப்பணி இறைவனின் அருளுடன் மேலும் சிறப்புடன் வளர வேண்டும். அர்பணிப்புடன் செயல்படும் அறப்பணியில் நாமும் இணைத்து கொள்வோமாக
,,,,,,,,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

இப்னு அப்துல் ரஜாக் said...

சீரும் சிறப்புமாய் செயல் பட எங்களின் துவா

Iqbal M. Salih said...

மாஷா அல்லாஹ்!

மனம் நிறைந்த துஆக்களுடன்.......

Ebrahim Ansari said...

மனம் நிறைந்த துஆக்களுடன்.......

ZAKIR HUSSAIN said...

இந்த பயானுக்கு ஊரில் இருக்கும் நம் சொந்தங்களுக்கு தெரிவித்து போகச்சொல்வது நிச்சயம் நலம் தரும்.

10 வாரம் வாசிக்கும் விசயத்தை 10 நிமிட பயான் கேட்டால் கற்றுக்கொள்ளலாம்.

அப்துல்மாலிக் said...

அனைவரும் பயனடைய என் வாழ்த்துக்கள்

Unknown said...

நேர்மை மிக்க ஸஹாபாக்களுடைய காலத்தில் நடக்காத, ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களோ முஃ மீன்களின் தாய்மார்களாகிய இந்த உஸ்தாத் அம்மாவைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகம் தகுதி உடைய ஸஹாபா பெண்களோ காட்டித் தராத விஷயத்தை இஸ்லாத்தின் தூய வழி என்று கூறுபவர்கள் அல்லாஹ்வை சந்திக்கும் நாளை பயந்து கொள்ளட்டும்.

பெண்கள் , பெண்களுக்கு பயான் செய்வது தவறல்ல. ஆனால் ஆண்களுக்கு தனி இட வசதி அளித்து, காலப்போக்கில் ஜூ ம் ஆ கதீப் ஆக்கும் அளவுக்கு சென்று விடும். இச்செயலை கண்ணியம்மிக்க நமது தாய்மார்களான நபிகளாரின் மனைவிமார்கள் செய்யவில்லை. ஆம் அவர்களிடம் ஹதீத் கேட்கப்பட்டது, அவர்களிடம் றஸூளுல்லாஹ் (ஸல்) அவர்களின் கருத்துக்கள், அவர்களின் வாழ்க்கை முறை பற்றி கேட்கப்பட்டது. அவர்கள் ஒருகாலும் ஆண்களுக்கு பயான் செய்யவில்லை.

Unknown said...

சகோ. சஈத் அரிய:
பதிவின் தலைப்பில் உள்ளபடி, இந்நிகழ்ச்சி பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியே. காரணம், பிலால் நகரில் பெண்களுக்காகப் பெண்களால் பயான் செய்யப்படுவதில், அவர்களிடம் காணப்படும் (வெளியில் சொல்ல முடியாத) வழிகேடுகள் நீக்கப்படும் சாத்தியக் கூறுகள் ஏராளம். எனவே, இது ஆண்களுக்குக் குறிப்பான நிகழ்ச்சியன்று. இருப்பினும், நிகழ்வில் பங்குபெற வருகின்ற பெண்களின் துணைவர்களும் இருந்து கேட்கும் அளவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது, ஏற்பாட்டாளர்களின் பொறுப்பல்லவா? சிந்திக்கவும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

புதிய தர்பியா மையம் சிறப்புடனும் வலிமையுடனும் செயல்பட நம் எல்லோரும் து ஆ செய்வோமாக..

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் கவுன்ஸிலிங் செய்யக்கூடிய முஸ்லிம் பெண் டாக்டர்கள் நம் சமுதாயத்துக்கு வேண்டும்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பள்ளிகளில்/கல்லூரிகளில் பாடம் நடத்துவதற்கு முஸ்லிம் ஆசிரியைகளும் விரிவுரையாளர்களும் நம் சமுதாயத்துக்கு வேண்டும்.

பெண்களிடம் மட்டுமின்றி ஆண்களிடமும் பொதுமேடை/தொலைக்காட்சிகளில் அரசியல் பேசும் சகோ. ஃபாத்திமா முஸஃப்ஃபர் போன்ற அரசியல்வாதிகள் வேண்டும்.

ஆனால்,
ஆனால்,
ஆனால்,

பெண்கள் மார்க்கம் சொல்வதற்கும் அதை ஏற்பாடு செய்வதற்கும் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டுமாம்.

ஸூப்பர் அட்வைஸு!

"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள் ...3:110

அல்லாஹ் கூறும் சிறந்த சமுதாயத்தில் பெண்களுக்குப் பங்கில்லையா?

sabeer.abushahruk said...

// அவர்களிடம் ஹதீத் கேட்கப்பட்டது, அவர்களிடம் றஸூளுல்லாஹ் (ஸல்) அவர்களின் கருத்துக்கள், அவர்களின் வாழ்க்கை முறை பற்றி கேட்கப்பட்டது. அவர்கள் ஒருகாலும் ஆண்களுக்கு பயான் செய்யவில்லை.//

சொல்லும் கருத்திற்காகத் தரும் ஆதாரம் முரணாக இருக்கிறதே?

ஹதீது கேட்கப்பட்டது பெண்ணிடம்; கேட்டது ஆண்! ஹதீத் சொல்வதற்கும் பயான் செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

தவிர, தற்காலத்திய தொழில்நுட்பத்தில் யு ட்யூபில் பெண் ஆலிமாக்களின் சொற்பொழிவுகளை உட்கார்ந்து கேட்கும் நான் குற்றம் பிடிக்கப்படுவேனா?

லாஜிக் இடிக்கிறதே?

நல்லவற்றை/சரியானவற்றை யார் சொன்னாலும் கேட்கனும். மார்க்க விஷயத்தில் ஆதாரங்களை வைத்து விளக்காமல் சொந்த அனுமானங்களை மார்க்கம் சொல்வதாய் சொல்லி வைத்தல் நல்லதல்ல.

KALAM SHAICK ABDUL KADER said...




//

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் கவுன்ஸிலிங் செய்யக்கூடிய முஸ்லிம் பெண் டாக்டர்கள் நம் சமுதாயத்துக்கு வேண்டும்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பள்ளிகளில்/கல்லூரிகளில் பாடம் நடத்துவதற்கு முஸ்லிம் ஆசிரியைகளும் விரிவுரையாளர்களும் நம் சமுதாயத்துக்கு வேண்டும்.

பெண்களிடம் மட்டுமின்றி ஆண்களிடமும் பொதுமேடை/தொலைக்காட்சிகளில் அரசியல் பேசும் சகோ. ஃபாத்திமா முஸஃப்ஃபர் போன்ற அரசியல்வாதிகள் வேண்டும்.

ஆனால்,
ஆனால்,
ஆனால்,

பெண்கள் மார்க்கம் சொல்வதற்கும் அதை ஏற்பாடு செய்வதற்கும் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டுமாம்.

ஸூப்பர் அட்வைஸு!//

ஜெமீல் காக்கா அவர்களின் அழுத்தமான வாதத்தை அடியேன் உளப்பூர்வமாக வழிமொழிகிறேன்.
ஆண்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றும் “பைத்துல்மால்” ஏற்பாடுச் செய்யும் திருக்குர்ஆன் மாநாடுகளில் “பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு” என்று அறிவித்து, அதன்படி செயல்படுத்தப்பட்டு வந்ததை இச்சகோதரர் மறந்து விட்டாரா? மறைத்து விட்டாரா? அல்லது அண்மையில் இமாம் ஷாஃபிப் பள்ளியில் அதிரை நிருபர் ஏற்பாட்டில் நடந்து முடிந்த வினாடி வினா நிகழ்வில் பெண் ஆசிரியைகள்/ ஆண் ஆசிரியர்கள் சிறப்பாக நடத்தித் தரவில்லையா?


இதே தளத்தில் வேறொரு ஆக்கத்தில் அடியேன் இட்டுள்ள பின்னூட்டத்தில் .”ஃபாலஸ்தீன் நாட்டில் பள்ளிச் சிறுமி நகராட்சி மேயராகப் பணியாற்றுகின்றார் என்ற செய்தியைப் பதிந்துள்ளேன். அன்புச் சகோதரர் அதிரை சஈத் அவர்களின் பார்வையில் படும் வண்ணம் மீண்டும் இப்பின்னூட்டத்தில் பதிகின்றேன்:

மேற்குக் கரைப் பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் தொகைக் கொண்ட சிறு நகரத்தின் நகராட்சி மேயராகப் பதினைந்தே வயதானப் பள்ளிக்கூடம் செல்லும் இளம் பெண் பஷீர் ஒத்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது பாராட்டுதற்குரியது - போற்றுதற்குரியது. ஓர் இளம் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என்பது, இளைஞர்கள் மத்தியில் ஆளுமைக் குணத்தையும், தலைமைப் பண்பையும் வளர்க்கும் கூடிய முற்போக்கானச் சிந்தனையாகும்.
மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஷீர் என்ற அந்தப் பெண்ணை வெறும் சம்பிரதாயமாகவோ பெயரளவிலோ மேயராக அலங்கரித்து அழகு பார்க்காமல், நகராட்சி அதிகாரங்களை அந்தப்பெண்ணின் கையில் கொடுத்திருப்பது என்பது பாராட்டுதற்குரியது. அந்தப் பெண்ணே தன்னிச்சையாக நகராட்சி அலுவல்களைக் கவனிக்கிறார். கோப்புகளில் கையெழுத்திடுகிறார். நகராட்சிக் கூட்டங்களைத் தலைமைத் தாங்கி நடத்துகிறார். மக்களைச் சந்தித்துக் குறைகளைஜ் கேட்கிறார். மக்கள் கூட்டங்களில் சுதந்திரமாகப் பேசுகிறார். பொது விழாக்களில் கலந்துகொள்கிறார். இவைகளுக்கு நடுவில் இந்தப் பெண் படிப்பதற்குப் பள்ளிக்கும் சென்று வருகிறார்.
மிகப்பெரிய மக்கள் பணியைச் செய்யும் பஷீர், மக்களைக் கவர்ந்திழுக்கும் பலம் வாய்ந்தத் தலைவராகத் திகழ்கிறார் என்று மேற்குக் கரைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள். அந்த மக்கள் இவரைப் பெரிதும் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் தன் நாட்டை ஆளக்கூடிய பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே பஷீரின் ஆவலும், கனவும், இலட்சியமும் ஆகும். உலகத்திலேயே சிறு வயது மேயரான பஷீர் ஒத்மான் தனது இலட்சியத்தில் வெற்றிபெற நாமும் வாழ்த்துவோம்.

AbuAdnan said...

புதிய தர்பியா மையம் சிறப்புடனும் வலிமையுடனும் செயல்பட நம் எல்லோரும் து ஆ செய்வோமாக..

Ebrahim Ansari said...

நம்மில் நல்லது செய்தாலும் குறை சொல்ல எங்கிருந்தாவது யாராவது எப்படி வருகிறார்கள் என்று தெரியவில்லை.

நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் பெண்களின் பேச்சைக் கேட்டு முடிவுகள் எடுக்கும் மக்களுக்கு மத்தியில் எப்படி இதெல்லாம் தோன்றுகிறதோ தெரியவில்லை. சமுதாயத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக.

KALAM SHAICK ABDUL KADER said...

//நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் பெண்களின் பேச்சைக் கேட்டு முடிவுகள் எடுக்கும் மக்களுக்கு மத்தியில் எப்படி இதெல்லாம் தோன்றுகிறதோ தெரியவில்லை. சமுதாயத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக. //

டாக்டர் இப்றாஹிம் காக்கா அவர்கள் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளப்டியே உரைக்கும் உண்மையாளர் என்பதற்கு அவர்களின் ஆக்கங்கள் உரைகல்லாகும் என்பது போல், இப்பின்னூட்டமும் அவ்வண்ணம் எடுத்தியம்புவது முற்றிலும் உண்மை. துணிவுடைமை, நேர்மை, உண்மை இவைகள் தான் ஓர் எழுத்தாளனின் அடிப்படைத் தகுதிகள் என்பதும் தங்களின் பின்னூட்டங்கள் மிளிரச் செய்கின்றன.



முதுகின் அழுக்கை
....முழுவதும் களையாமல்- பிறரின்
முதுகின் புறத்தில்
...முணுமுணுத் தலும்நீதான்!

(இன்று படைத்துக் கொண்டிருக்கும் “முரண்பாடுகள்” என்னும் தலைப்பிலான என் கவிதையின் முதல்வரிகள்; உங்களின் பின்னூட்டத்திற்கு வலுச் சேர்க்க முதன் முதலாக முழுமைப் பெறா நிலையில் அனுப்பி விட்டேன்; இன்ஷா அல்லாஹ் முழுமை பெற்றதும் இத்தளத்தில் காணலாம்)

Unknown said...

போற போக்கப் பாத்தா இப்படி அதிரையும் ஆயிடுமோன்னு பயமாயிருக்கு
இந்த விடியோவை பாக்கவும்

http://www.youtube.com/watch?v=GkRZHR29sPU&feature=player_embedded

http://www.youtube.com/watch?feature=endscreen&v=gcwxY_zvtFA&NR=1



http://cdn2.mz-mz.net/wp-content/up/mz-mz53.jpg

http://www.islamweb.net/emainpage/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=82157
Fatwa No : 82157
Women giving speeches before male audiences
Fatwa Date : Muharram 18, 1421 / 23-4-2000
Question
I have been asked by many unbelievers why women do not give religious speeches in front of men and women.
Answer

Praise be to Allah, the Lord of the Worlds; and blessings and peace be upon our Prophet Muhammad and upon all his Family and Companions.

Women are asked by the Shari'a to participate actively in teaching, calling for Islam and reforming for the good as well as they can. Indeed the woman is like the man and is responsible for what she does with her knowledge. She is asked to write and to criticize and men can read her books, if they want to.
Thus, during the flourishing Islamic era which was the era of virtue, morality, chastity and abatement of the causes of temptations and seduction, women used to teach from behind a screen narrating Hadith and explaining different issues. Women even used to compete with men in the search for knowledge but with the good conduct and morality of Islam. It is narrated from Abu Said al-Khudri () that women said to the Prophet Muhammad (Blessings and peace of Allah be upon him): "A woman came to Allah's Apostle and said, "O Allah's Apostle! Men (only) benefit by your teachings, so please devote to us from (some of) your time, a day on which we may come to you so that you may teach us of what Allah has taught you." Allah's Apostle said, "Gather on such-and-such a day at such-and-such a place." They gathered and Allah's Apostle came to them and taught them of what Allah had taught him."
So, women didn't ask to compete with men during the sessions, they rather wanted a special session for themselves. Despite the great number of knowledgeable and learned women throughout history, only a few of them had councils where they used to teach men from behind a screen.

Unknown said...

On the other hand, women used to attend the knowledge sessions presented by men but they would stay modest and chaste, they would sit in a place from which they could hear the knowledge and yet not get mixed with men. This has been the path of Muslims. Nowadays and with the increasing number of Muslims emigrating to non-Muslim countries, it has become necessary for Muslims to gather in the mosque and Islamic centres that exist in the host countries to protect themselves and their children as well as to learn the Islamic Shari'a and to call for Islam.
Thus, a woman should have a key role in such activities; but how?
What we think is the right opinion in such circumstances is to participate in all such activities, but within her sisters as this will satisfy her ambition to participate and will preserve her from losing some of the Islamic characteristics relative to her. We think that she should not get involved with alien men in any way whatsoever, for the following reasons:

1 - Women are required to veil themselves and not to talk to alien men except for a sound reason and without elaborateness, and during the lectures there is enough to break this barrier as they usually require lengthy explanations and verbal exchanges.

2 - It is almost impossible to find any mosque or Islamic centre where the number of learned men in Shari'a is not many times that of learned women in the same field. It is more appropriate then to activate the men's role and to leave women in places that are more appropriate to their very nature. But if there is not a sufficient number of learned men in a place, then it is very possible to bring them from other places; this practice is widespread and very useful.

Opening this door, i.e. women delivering lectures to men, even with full reservations, will cause so much harm in the future; we can not imagine it.
Moreover, this could become a bad example for others. Probably you may bear a portion of its sin. Therefore we believe that avoiding this practice is better to close the harmful ways, that could be opened by it, to follow the Sunnah in teaching Islam and calling for it, and to protect the dignity of women as not to put them in embarassing situations.
Therefore, many Shari'a constraints confirm that avoiding this practice ensures so many advantages that one should cling to it, and ignore any suspected benefits from other practices because they are few, compared to harm they can cause.
Following evidence support this point.
A: Raising the voice for Talbiyah (A kind of Zikr recited by pilgrims) in Hajj and Umrah is demanded in Shari'a but women are excepted from this rule, just as they are also excepted from raising their voices in prayer and in calling for the prayer (i.e. making Azan). Although raising the voice during these two rituals is Rukun (Principle), women are exempted from it, because their raising their voices could cause more harm than benefit. (Should not, He who has created know? And He is Most kind and Courteous (to His slaves) All-Aware (of everything) al-Qur'an) .[67:14].

In short, the disadvantages of women delivering lectures to men are greater than the advantages. The Muslim scholars are agreed that avoiding disadvantages is preferable than getting advantages if there is a conflict between the two. Allah knows best.

Unknown said...

Assalamu Alaikkum

Women can involve in teaching sharia, make Dhawa if they are skilled and capable enough. They should be encouraged to involve in those activities(speech, writing, leading which are intellectual capabilities which are belongs to women also).

If women are involving in teaching, they should have been master in those concepts, including regulations of keeping away from men's sight while preaching.

Please note that a principle appointed in Al Rawdha Islamic Women's College, Adirampattinam has given a speech on the topic "Future of young generation".

I hope speech was given exclusively for women audience. Attendance by men is optional. If men wish to attend the speech then they would have separate place there.

There should not be any controversies by this. If there is so, then all concerned people(ulamas, jamaaths) can sit and talk and find resolution as simple as that.

I hope our pepole there would not go to extreme level to break synergy and not make chaos for this matter.

Best regards




தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நேற்று நடைபெற்ற பிலால் நகர் மர்கஸ் தர்பிய்யா பயான் நிகழ்ச்சியில் 150க்கு மேல் பெண்கள் கலந்து கொண்டார்கள். நல்ல பயனுள்ள மார்க்க சொற்பொழிவு. அல்ஹம்துலில்லாஹ்..

அன்பு சகோதரர் நியாசுதீன் நெய்னா அவர்களுக்கு..

நீங்கள் குறிப்பிட்ட யூடியூம் சுட்டிகளை போன்று ஏராளம் உள்ளது. மார்க்கத்தை சரியாக புரியாதவர்கள் செய்யும் வேலை இது. வருத்தப்பட வேண்டியவைகளே.. அல்லாஹ் பாதுகாப்பானாக..

தாங்கள் சுட்டிக்காடிய ஹதீஸ் மார்க்க தீர்ப்பு பற்றிய சுட்டிக்கு மிக்க நன்றி..

எல்லோரும் தெளிவு பெறுவதற்காக நேரம் கிடைத்தால் பின் வரும் இந்த சுட்டிகளுக்கு சென்று பாருங்கள்.. தாஃவா பணிகளிலும், போர்களிலும் பெண்கள் பங்குபெற்றார்கள் என்ற தகவல் நமக்கு கிடைக்கிறது.

http://www.youtube.com/watch?v=aH26x9hrvxk

http://www.youtube.com/watch?v=aY6WnRUdAl4

Unknown said...

சகோ நியாசுதீன் சுட்டிக்காட்டிய காணொளி தான் நான் என் கருத்தை தெரிவிக்க முக்கிய காரணம்.

பெண்கள் தவா செய்வது, மற்ற மார்க்க, சமூக தொண்டுகளில் ஈடுபடுவதில் நாம் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் அது இஸ்லாமிய வரையறைக்குட்பட்டு இருக்கவேண்டும் என்பதுதான் நம் கருத்து.

சில தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பெண்களுடன் சில்மிசங்களில் ஈடுபட்டு சமீபத்தில் நாறியது நம் அணைவருக்கும் தெரியும்.

http://www.youtube.com/embed/gcwxY_zvtFA

Unknown said...

Assalamu Alaikkum,

"Epporul Yar Yar Voikerpinum Apporul
Maipporul Kanbathu Arivu."

If all of us can internalize the meaning of the above ThirukkuKural, then there are franctions of chances for doubt, misunderstandings, and conflicts.

So, brothers, sisters don't blindly believe any news, any youtube videos, any other source(tv, newspaper, rumours etc), except the reliable sources. It may lead to confusion, doubts and destructions if we don't double check before take any action.

May Allah save us from Saitan.

MaAssalamah

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.