Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கருகும் காதல் – பிப்ரவரி 14 [வரலாறு!! : காணொளி] 28

அதிரைநிருபர் பதிப்பகம் | February 13, 2013 | , , , ,


பாட்டனும் பூட்டியும்
பண்புடன் பழகி
பாசத்தைப் பகிர்ந்து
பிழைத்தது பலநாட்கள்

தாத்தனும் பாட்டியும்
தமிழினில் திளைத்து
தூய்மையாய் இல்லறம்
சுகித்ததும் பலநாட்கள்

பிந்தைய நாட்களில்
எந்தையும் தாயும்
சந்ததி பெற்றுச்
சிறந்ததும் பலநாட்கள்

என்னிலே இவளும்
இவளிலே நானும்
இருந்து மகிழ்ந்திடும்
இல்வாழ்வு பலநாட்கள்

ஒவ்வொரு நாளிலும்
சொல்லிலும் செயலிலும்
அன்பினைச் சொன்னோம்
அழகுற பகிர்ந்தோம்

எம்நாட்டுப் பண்பாட்டில்
எத்தினமும் எமக்கு
அன்பினைச் சொல்லிடும்
காதலர் தினமே

மேநாட்டு மனிதருக்கோ
அன்பினைச் சொல்ல
அவகாசம் இல்லை
பண்போடு பழக
படிப்பினை இல்லை

ஒற்றை நாளெடுத்து
அன்பு சொல் என்றனர்
காத்திருந்த கயமையின்
கட்டவிழ் என்றனர்

பண்பாடு கலாச்சாரம்
புண்பட்டு புறையோடி
நாற்றமெடுக்கு முன்
நல் வழி காண்பீர்

நாகரீகப் போர்வையில்
நயவஞ்சகக் கூட்டம்
நங்கையரை நசுக்கி
நல்லொழுக்கம் புதைத்து

நஞ்சினை விதைக்கும்
நாளிதைப் புறக்கனிப்போம்!

sabeer.abushahruk


காதலர் தின என்ற கிருஸ்தவ பூஜை தினம் பற்றிய வரலாற்று தகவல், அவசியம் கேளுங்கள்.

28 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

சகிப்புத்தன்மையும், பொறுமையும், மற்றவர்களுக்கும் உணர்வுகள் இருக்கிறது என்பதை நம்பும் தன்மையும் இருந்தால் அனைத்து தினமும் அன்பர்கள் தினம்தான்.


ரோஜாவை கொடுத்தால்தான் காதல் வரும் என்று எந்த பன்னாடை கண்டு பிடித்தான் என்று தெரியவில்லை. சாதாரண நாட்களில் சீந்துவாரற்று கிடக்கும் ரோஜா இந்த காதலர் தினத்தில் 20 மலேசிய ரிங்கிட் [ வெறும் இரண்டு பூவுக்கு ]

KALAM SHAICK ABDUL KADER said...


’வாலெண்டைன்” என்பவரே ஓர் இளம் பெண்ணுடன் கள்ள உறவு வைத்ததனால் இங்கிலாந்து அரசால் தண்டிக்கப்பட்டு- அவர் இறந்த நாளையே இக்காமுகர்கள் “காதலர் தினம்” என்று கொண்டாடுகின்றனர். அமெரிக்கர்களின் வியாபார உத்திகளில் இப்படிப்பட்ட வினோதமான கொண்டாட்டங்களை உலகுக்கு அறிமுகம் செய்து விட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தக் காமுகர்களின் தினத்தைக் கொண்டாட முஸ்லிம்களும் கடைகளில் பரிசுப் பொருட்களும், வாழ்த்து அட்டைகளும் வாங்குவதற்குச் செல்வதும்; பணத்தை வீணடிப்பதும் தான்! இதனையே கவிவேந்தர் அழகாகத் தன் கவி வரிகளில் சொல்கின்றார்.

//எம்நாட்டுப் பண்பாட்டில்
எத்தினமும் எமக்கு
அன்பினைச் சொல்லிடும்
காதலர் தினமே//

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சொன்னாலும் திருந்த மாட்டேங்கிறாய்ங்க...
பட்டாலும் திருந்த மாட்டேங்கிறாய்ங்க... !

காதலால் கருகுவது... விலைமதிக்க முடியாத எத்தனையோ !

Unknown said...

Assalamu Alaikkum

True love needs no reminder
True love is universally selfless


The loving spirit finds happy every moment
By endless giving without expectations


The formality of celebrating proves
The real love is becoming rare element


So its scheduled on a day of a year, realize
Its theme is based on uglier relationship


B. Ahamed Ameen

KALAM SHAICK ABDUL KADER said...

காதலிக்காத மனித மனம் இல்லவே இல்லை: ஆனால் அது காதல்தானா என்பதை உணரவோர் நடுநிலையான உள்ளம் தேவைப்படுகிறது எல்லோருக்கும்; அது நான் உள்பட! பேறு பெற்ற பெண்மணிகளில் பலர் வாழ்விலும் காதல் தூய்மையானதாய் அமைந்து அக்காதலே திருமணம் என்னும் இல்லற வாழ்வில் நல்லறம் பேண வைத்திருப்பதைக் காண்கின்றோம்.

புவியதில் சுழன்றிடும் காற்றெனவே
தவித்திடும் உணர்வலை ஊற்றெடுக்கக்
குவிந்திடும் கனலென மோதிடவே
கவிந்திடும் நினைவுகள் காதலென்போம்!


பழுதறு மனம்முதிரச் சோதனையை
அழுதிடும் அவர்மனம் கூறிடவே
முழுமதி அணங்கவள் உள்ளமதால்
வழுவற உணர்ந்திடல் காதலென்போம்!


அனைத்துமே சரியெனச் சொல்பவரே;
வனிதையர், வருத்தமில் வாலிபரே!
அனுதினம் உயர்ந்தநல் வாழ்வினையே
மனிதனாய் புரிதலே காதலென்போம்!

காதலித்த பெண்ணையே மணமுடிப்போம்; மணமுடித்த பின்னர் மனைவியைக் காதலிப்போம்! காதலித்து விட்டுக் கை விடுதலும்; மணமுடித்து விட்டு மனைவியைக் காதலிக்காமல் இருப்பதும் காதலுக்கே சாதல்!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahrukh,

The suitable title of the poem could be "அருகும் காதல்"

Actually true love is not destroyed on fire or acid.

Thanks and best regards,

sabeer.abushahruk said...

இதேக் கருத்தில் இன்னொன்று இங்கே:

http://www.satyamargam.com/2061




Unknown said...

//இதேக் கருத்தில் இன்னொன்று இங்கே:

http://www.satyamargam.com/2061
//
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahrukh,

Excellent lines which beat danger alarm on celebrating valentines' day.

KALAM SHAICK ABDUL KADER said...

எல்லோருக்குமான காதல்...

பார்வையில்
பரவசம்...

மெளனங்களின்
மொழிபெயர்ப்பு...

ஓசையின்றி
உளம் போடும்
கூப்பாடு...

விரல் தீண்டலில்
மின்சாரப் பாய்ச்சல்...

உதடுகள் மெளனமாய்
உச்சரிக்கும் உன்பெயர்...

நீண்ட தூக்கமில்லாத
இரவுகள்...

கனவுகளில் கழிந்த
பகல்கள்...

எல்லொருக்குமான
காதல்
இப்படித்தான் இருக்கிறது...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கலாச்சாரமற்ற ஒரு நாள்
கள்ளத்தனத்தின் நிகழ்வே
கவிஞர் காக்கா வழியில்
கரம் பிடித்தவளை மனமாற
காலமெல்லாம் காதல் செய்வோம்!

அதிரை சித்திக் said...

நன்றாக சொன்னீர்கள் ...



மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

ஆஹா அற்புதம்
கவிஞரே கலக்குங்கள்
உள்ளம் உருகிவிட்டேன்

Ebrahim Ansari said...

வாலேண்டின் என்கிற பாதிரியார் காதலித்த குற்றத்துக்காக அல்ல ஒரு காதல் ஜோடியை இணைத்து வைத்த குற்றத்துக்காக ரோமன் சாம்ராஜ்யத்தால் தலை துண்டிக்கப் பட்ட நாள் என்று கூறக்கேட்டு இருக்கிறேன். ( சுகி சிவம்) . அப்படிப் பார்த்தால் இது உண்மையிலேயே ஒரு துக்க தினம்.

இதைக் கொண்டாட உலகம் முழுதுமிருந்து ரோஜாப்பூக்களுக்கு ஆர்டர் வருகிறது.

எனக்கிருக்கிற வருத்தம் நமது இளைஞர்களும் இளம் பெண்களும் கூட இப்போது தீவிரமாக இதற்காக வாழ்த்துக்களைப் பரிமாற குறைந்த பட்சம் செல்போன்களை அதிக அளவு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே. பேசிவைத்துள்ள மாப்பிள்ளை பெண்கள் இப்படி செய்து கொள்வதை- பரிசுகள் அனுப்பிக் கொள்வதை பல வீட்டாரும் ஆதரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான செய்தி.

இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ?

சமூக அக்கறையுள்ள நமது கவிஞரின் இந்த சமூக அவலத்தைப் பற்றிய கவிதை போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது.

அலாவுதீன்.S. said...

காதலர் தினம் என்ற போர்வையில்
பண்பாட்டைச் சீரழிக்கும்
கயவர்களின் தினம்தான்
பிப்ரவரி 14!

உண்மையான காதல் தினம் எது என்பதற்கு முன்னோர்களின் வாழ்வையும்;
கற்கால காதல் போர்வை கயவர்களின் பண்பாட்டுச் சீரழிவையும் விளக்கி வரைந்த நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் bro Ahamed Ameen,

'அருகும் காதல்' is a simple title, sounds quite flat and not pointing out the Valentine's day exclusively.  It is a general theme these days. 

உண்மைக் காதல் அருகித்தான் போய்க் கொண்டிருக்கிறது. I agree with your point of view towards 'love these days' but the poem is on Valentine's Day only.

களவியல் ஒழுக்கம் இஸ்லாத்தில் இல்லை எனினும் தமிழ் இலக்கியங்களில் உண்டு. பாவனை செய்யாமல் சொல்ல வேண்டுமெனில் எல்லா நாட்டிலும் எல்லா மதத்திலும் பெரும்பான்மையான மனிதர்கள் காதல் வயப்படுகின்றனர். இது நாளுக்கு நாள்  கூடுகிறதேயொழிய குறைவதில்லை, அதாவது அருகுவதில்லை.  எனவே, அருகும் காதல் இந்தப் பதிவுக்குத் தலைப்பாகாது.

கருகும் காதல்: இப்படியாகப்பட்ட  கொஞ்சநெஞ்ச கட்டுப்பாடுகளுடன் நிலவி வரும் காதலையும் காதலர் தினம் என்னும் லைஸென்ஸ் கட்டவிழ்த்து விட்டுவிடுவதால் மனத்தளவிலான நாகரிகக் காதலும் உடல் வேட்கைக்கு உந்தப்பட்டு காமத்தீயில் கருகிப்போய் விடுகிறது. அதனால்தான் ' கருகும் காதல்' இத்தினத்துக்குப் பொருத்தமான poetic தலைப்பு.

(அபு இபு: நீங்க வச்ச தலைப்புக்கு நான் எப்புடி சிக்கி நிக்கிறேன் பார்த்தியலா!?)

Yasir said...

இந்த கன்றாவியான காதலர் தினத்தில்தான் காதலே கொண்டாட வேண்டுமா ?, அவளுடன்/அவருடன் வாழும் ஒவ்வொரு நாளும் காதல்-அன்பு நிரம்பிய நாளே என்று ஏதார்த்தமாக அதே சமயத்தில் வலு பொருந்திய வார்த்தைகளுடன் அந்த பட்டிகளுக்கு காலணி அடிக் கொடுக்கின்றது கவிக்காக்காவின் இக்கவிதை....அல்லாஹ் இந்த மாதிரியான சிரழிவுகளிருந்து நம்மையும் நம் குடும்பத்தவர்,குழந்தைகளையும் காத்தருள துவாச்செய்வோம்

Ebrahim Ansari said...

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக பாம்பன் பாலம் அருகில் உள்ள தங்கச்சி மடம் என்கிற ஊருக்குச் சென்று இருந்தேன். மஸ்கட்டிலில் இருந்து ஒரு "கெழுதகை" நண்பர் வந்து இருந்தார். அவர் வீட்டில் பகல் உணவுக்குப் பின் ( நல்ல முரல் மீன்) அமர்ந்து இருந்த போது அவர் ஒரு பார்சலைக் கொண்டுவது காட்டினார். பல பளக்கும் பளிங்க்குத்தாளில் மிக கவனமாக கசங்காமல் சுற்றப்பட்டு இருந்தது. அவர் சொன்னது. இந்தப் பரிசு மஸ்கட்டில் வேலை செய்யும் ஒருவர் தனக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்து வைத்திருக்கும் பெண்ணுக்கு பெப்ரவரி பதினாலாம் தேதி காலை கொண்டுபோய் கொடுக்கப்படவேண்டுமாம். அந்தப் பரிசுப் பொட்டலத்தில் இருந்தது ஒரு செல் போன். பி எஸ் என் எல் சிம் கார்டுடன் அனுப்பப் பட்டு இருக்கிறது. காதலர் தினத்தன்று முதன் முதலாக அவர்கள் இருவரும் பேசுவதற்காக இந்த ஏற்பாடாம்.

சிரிக்கலாமா? அழலாமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சிரிக்கலாமா? அழலாமா?//

காக்கா:

எனக்கு இன்று வந்த எஸ்.எம்.எஸ். இதோ:- (பொருத்தருள்க)

அவனாக காதலித்து திருமணம் செய்து கொண்டால் அது அவனது காதலியாம்

வீட்டார் பேசி திருமணம் செய்து வைத்தால் அது அடுத்தவனின் காதலியாம் !

இதுக்கு என்ன செய்வது !?

Adirai pasanga😎 said...

ஒரு புறம் வினோதினிகள்
மறு புறம் காதல்ர் தினம்
அதற்க்கு வரவேற்பு- வாழ்த்துக்கள்
கேவலம் இந்த சமுதாயம்
say no to drugs-also
say no to valentine's day

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//(அபு இபு: நீங்க வச்ச தலைப்புக்கு நான் எப்புடி சிக்கி நிக்கிறேன் பார்த்தியலா!?)//

தலை(யில)பு தானே வச்சேன்..

ஆனால், அவய்ங்க காதுலயில பூ வச்சுகிட்டு அலையிறாய்ங்க இந்த கேடுகெட்ட கொண்டாட்டத்திற்கு !

sabeer.abushahruk said...

காதலர் தின ஆதரவாளர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி:

காதல் உணர்வுபூர்வமானதுதானே? ஆமெனில் காதலின் திருவிழா நாளான இன்று அம்பு துளைக்கும் இதயத்தின் படமும் வாழ்த்து அட்டைகளும் ரோஜாக்களும்தனே அதிகம் விற்கப்பட வேண்டும்?

கான்ட்ராஸெப்ட்டிவ்ஸும் லாகிரி வஸ்துகளும் மதுவும் அல்லவா அதிக விற்பனையாகிறது.

எனவே, இந்நாள் உணர்வுபூர்வமான காதலர் தினமா உடல்கள் சார்ந்த காமுகர் தினமா?

Yasir said...

pls look at this (dirty) survey
Do you have great 'sexpectations' for Valentine's Day?
http://edition.cnn.com/2013/02/13/health/kerner-valentines-day/index.html?hpt=hp_c2

KALAM SHAICK ABDUL KADER said...

\\கான்ட்ராஸெப்ட்டிவ்ஸும் லாகிரி வஸ்துகளும் மதுவும் அல்லவா அதிக விற்பனையாகிறது.

எனவே, இந்நாள் உணர்வுபூர்வமான காதலர் தினமா உடல்கள் சார்ந்த காமுகர் தினமா?//

உள்ளார்ந்த ஆதங்கம்;கோபத்தின் வெளிப்பாடு; உண்மையின் உரைகல்;வலிகளின் வரிகள்.

காதலின் உச்சம் காமம் என்றே முடிவுக்கு வந்து விட்டனர் இற்றைப் பொழுதின் இளைஞர்/ இளைஞிகள். மேலும் சீரழிக்க மேலை நாடுகள் வைத்து விட்டத் தீ ஜுவாலைதான் இந்த வேலை! அன்பென்னும் ஊற்றின் அழகிய வடிகால் தூய்மையான மெல்லிய மணமிகுப் பூப்போன்ற காதல்; ஆனால், இவர்கள் நினைத்துக் கொண்டு அழிவது காதல் என்னும் போர்வைக்குள் ஒரு பூகம்பம்; ஆனால் பெயரளவில் பறிமாறிக் கொள்கின்றனர் ரோஜாவின் பூக் கம்பம்!


KALAM SHAICK ABDUL KADER said...

நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா என்று யாரிடமாவது சொல்லி புலம்ப ஆசைப்படுபவர்கள் உயிரே உயிரே என்று கைவிரித்து பாடுகிறார்கள்.. வந்து என்னோடு கலந்து விடு என்று அழுகிறார்கள்..

நெல் முனையும் யாரும் யாரோடும் கலக்க முடியாது என்பது தான் உண்மை.. நெருப்பு சுடும் என்பதான உண்மை.

காதலின் முதல் இலக்கணம் கம்பீரம்.. அந்த கம்பீரம் மிக உண்மையாக இருக்க வேண்டும்..
உண்மையான கம்பீரம் காதலிக்கிறேன் என்று சொல்லவே சொல்லாது.. என்னைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பமா என்றுதான் கேட்கும்..

- காதலர் தினமென்றதும் நினைவுக்கு வந்த பாலகுமாரன் கட்டுரையில் படித்த சில வரிகள்..

sabeer.abushahruk said...

ச்சின்னதா ஓர் ஏற்புரை எழுதிவிடலாம்.

தவித்திருக்கிறது தமிழ்
தனித்தமிழ் காதலனின்
‘மகுட’த்திற்காக

என்கிற ஓர் நினைவுகூறலோடு…

ஜாகிர்,

இந்த நாளில்
ராஜா கையில் ரோஜா
கவனமோ
ராணி கொண்ட மேனியில்

கவியன்பன்,

கவிஞர்கள் அதிகம் பாடியது காதலைப் பற்றியதாய்த்தான் இருக்கும்.

//முழுமதி அணங்கவள் உள்ளமதால்
வழுவற உணர்ந்திடல் காதலென்போம்//

நீஙகளும் அதற்கு விதிவிலக்கல்ல, அல்லவா?

Bro. B.Ahamed Ameen,
Thanks for your comments.

//So its scheduled on a day of a year, realize
Its theme is based on uglier relationship//

That’s what I mean

எம் ஹெச் ஜே,

வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.

//கரம் பிடித்தவளை மனமாற
காலமெல்லாம் காதல் செய்வோம்!//

....அது…!!! (ஐஸ்ஸ்ஸ்ஸ்.:-) )
.

அதிரை சித்திக் / சஃபீர் பாய்,

நன்றி.

ஈனா ஆனா காக்கா,

நன்றி.
//
! பேசிவைத்துள்ள மாப்பிள்ளை பெண்கள் இப்படி செய்து கொள்வதை- பரிசுகள் அனுப்பிக் கொள்வதை பல வீட்டாரும் ஆதரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான செய்தி.//

பயமாயிருக்கிறது இந்தச் சமூதாயச் சீரழிவு.

அலாவுதீன் / யாசிர்
,
நன்றி.

//அவளுடன்/அவருடன் வாழும் ஒவ்வொரு நாளும் காதல்-அன்பு நிரம்பிய நாளே//

உரக்கச் சொல்வோம்,(உதைபடாமல் தப்பிப்போம்? :-) )

அபு இபுறாகீம் / இப்ன் அப்துல் வாஹித்,

நன்றி.

முத்தாய்ப்பாக, கவியன்பனுக்கு நிறைவான ஒரு கருத்துக்காக மீண்டும் நன்றி.

//இவர்கள் நினைத்துக் கொண்டு அழிவது காதல் என்னும் போர்வைக்குள் ஒரு பூகம்பம்; ஆனால் பெயரளவில் பறிமாறிக் கொள்கின்றனர் ரோஜாவின் பூக் கம்பம்!//

..............................வஸ்ஸலாம்……………………….....................….

KALAM SHAICK ABDUL KADER said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

பெற்றவர் நேசம் உனக்குப்
.....பெரிதினும் பெரிதாய்க் காதல்
கற்றவர் கல்வி மீது
....காமுறும் நிலையும் காதல்
குற்றமே புரிந்திட் டாலும்
...குழந்தையின் மீதும் காதல்
வற்றிடா அன்பின் பெயரே
..வையகக் காதல் என்போம்!

KALAM SHAICK ABDUL KADER said...

\\தவித்திருக்கிறது தமிழ்
தனித்தமிழ் காதலனின்
‘மகுட’த்திற்காக//

என்னுள்ளத்தினுள்ளே இருப்பதும் நீண்ட நாட்களாய் அவாவுற்றிருப்பதுமான இந்தத் தனித்தமிழ் மோகம், தமிழின் பால் யான் கொண்ட காதல் என்ற என் விருப்பத்தினை எப்படியோ வெளிக்கொணர வைத்துவிட்டீர்.! மிக்க நன்றி.

//கவிஞர்கள் அதிகம் பாடியது காதலைப் பற்றியதாய்த்தான் இருக்கும்.

//முழுமதி அணங்கவள் உள்ளமதால்
வழுவற உணர்ந்திடல் காதலென்போம்//

நீஙகளும் அதற்கு விதிவிலக்கல்ல, அல்லவா?\\

இங்கும் என் மனத்தினில் ஊடுருவியிருக்கும் தூய அன்பை நீங்களும் ஊடுருவிக் கண்டுபிடித்து விட்டீர்கள். இங்குப் பின்னூட்டங்களிலும் என் வரிகளில் அத்தகு வெளிப்பாடுகள் காண்க. உண்மை;ஒப்புக்கொள்ளத் தயங்க மாட்டேன். அண்மையில் வெளியான “இலண்டன் தமிழ் வானொலியில் என் கவிதையில்” அடியேன் எழுதிய (இப்பாடலை முன்பு அ.நி.க்கு அனுப்பினாலும், அதில் காதலை முன்னிருத்தியிருப்பதாக நினைத்துப் பதியாமல் விட்டிருக்கலாம்) “கடைக்கண் திறவாயோ காவிரியே” என்ற அப்பாடலைக் கேட்டு அவ்விடத்திலேயே(ஸ்கைப் வழியாக)கருத்துரையளித்த அவ்வானொலியின் தொகுப்பாளினிச் சொன்னார்கள்,”இப்பாடலைக் கேட்டால் காதல் கவிதை போல் தெரிகின்றது; ஆயினும் அபுல்கலாம் அவர்கள் காவிரிநதியைக் காதலியாய் உருவகித்து எழுதியுள்ளார்கள்” என்று. எனவே, உணமையிலும் அக்கவிதையிலும் காதலின் வெளிப்பாடே என்பதும் முக்காலும் உண்மை!

ஏற்புரைக்குப் பின்னும் யான் எழுதும் இக்கருத்துரையை ஏற்பீராக, கவிவேந்தரே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.