இன்ஷா அல்லாஹ் மாதங்களில் உயர்ந்த மாதங்களாகிய ரமலான் வருகிற நூறாவது நாளில் வர இருக்கிறது. (பிறை உதிப்பதை பொருத்து ஒரு நாள் முன் பின் ஆகக்கூடும்) பலர் ரமலானில் மட்டும் இபாதத்துகளை அதிகப்படுத்தி மற்ற நாளில் பொடுபோக்காக இருந்து விடுகின்றனர். அவ்வாறில்லாமல் நாளின் ஒவ்வொரு ஓட்டமும் இஸ்லாமிய வழியில் செல்லவேண்டும். நமது ஒவ்வொரு செயலும் மற்றவர்களுக்கு படிப்பினையாக அமையும் படி இருப்பதே நாம் இஸ்லாத்தை எத்தி வைப்பதற்கு சமமாகும். இன்சா அல்லாஹ் குறைந்த பட்சம் இன்றிலிருந்தாவது எல்லா செயலும் முழு நடைமுறையும் குர்'ஆன், நபி வழியில் அமையட்டுமாக! ரமலான் பற்றிய சில ஹதீஸ் தொகுப்பு.
நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி, வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.
ரமளான் மாதத்தில் பெருமானார்(ஸல்) அவர்கள் சடைவடையாமல் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதால் தான் மழைக்காற்றை விட வேகமாக வாரி வழங்குவார்கள் என்ற உதாரணத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.
புனித ரமளான் மாதத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழி முறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடையோருக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.
அவ்வாறு தேவையுடையோருக்கு வாரி வழங்குவதால் நம்முடையப் பொருளாதாரம் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் “ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம் மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)
கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல் யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)
சுவர்க்கத்தில் தனி வாசல் நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது. “சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)
அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம் “நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)
இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும்.
உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
எனவே வரும் ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை இப்போதிலிருந்தே செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!
M.H.ஜஹபர் சாதிக்
22 Responses So Far:
மா ஷா அல்லாஹ்! நல்லதொரு பரிந்துறை.
இப்பொழுதிலிருந்தே தொடங்கிவிட்டால் ரமளானில் இன்னும் கூடுதலாக வணங்க முடியும்.
எல்லாம் வல்ல ஏகன் நமக்கு அருள்வானாக!
புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,
எதிர்வரும் ரமலானை இறையச்சத்தோடு அதன் பலனை அடைவதற்கும், இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்கும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவது சாலச் சிறந்தது.
1.ரமலான் வருகைக்கு ஆர்வமூட்டல்:
2.குர்ஆன் ஓத ஆர்வமூட்டல்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக் கூடியதாகும். அது ஏற்கப்படக் கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.
(அறிவிப்பாளர்:இப்னு மஸ்வூத்(ரலி) –ஆதாரம்: முஸ்லிம்)
3.சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தல்:
4.பெண்களை தயார்படுத்துதல்:
5.திக்ரின் பலனை அறிதல்:
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு(தியானம்) செய்யுங்கள். இன்னும் காலையிலும், மாலையிலும் அவனைத் துதிச் செய்யுங்கள்” (அல்-குர்ஆன் 33:41-42)
மேலே சொன்ன குர்ஆன் வசனம் திக்ரின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது.
“இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானதாகும், (நன்மை-தீமை நெருக்கப்படும்) தராசில் கனமானதகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியதாகும்(அவை) ‘சுப்ஹானல்லாஹில் அலீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’.(பொருள்:கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன். அவனைப் போற்றி புகழ்ந்து துதி செய்கிறேன்.)” (ஆதாரம்:ஸஹீஹ் புஹாரி).
6.தர்மம் செய்தல்:
7.சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல்:
ரமலானின் முழுப் பலன்களையும் பெற்றிடும் விதத்தில் முஸ்லிம்கள் முயலும் விதத்தில் ஒவ்வோர் ஆண்டும் கழிகின்றது, அல்ஹம்துலில்லாஹ்!
எல்லாப் புகழும் ரமளானை நமக்கு அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே.
எம் ஹெச் ஜெயின் முன்னறிவுப்புக்கு மிக்க நன்றி. ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.
அதிரைத் தென்றலின் நினைவூட்டல்கள் ஆக்கத்திற்கு வலு சேர்க்கின்றன.
(என்ன ஒன்னு! புயலுக்குப் பின் அமைதியென்பதுபோல் அப்துர்ரஹீமின் பதிவில் புயல் அடிக்க, இப்ப கொஞ்சம் தாமதமாகத் தென்றல் வீசுகிறது.)
அதிரைத் தென்றலைப் போன்ற சத்தான பின்னூட்டவாதிகளைக் காண எப்பவும் தேட்டம்தான்.
ரமலானின் மகத்துவத்தை முன்கூட்டி அறிந்து அதற்கு முன் ஏற்பாடாய் தயாராகி முதலில் வந்த இனிய மூவருக்கும் முகமன் உண்டாவதாக!
சகோ. இர்பானின் கருத்துத் தொகுப்பு இங்கே மேலும் வலு சேர்க்கக் கூடியவை.
ஒவ்வொரு முறையும் பின்னூட்டத்தினடியில் பிறைக் கணக்கைக் குறிப்பிட்டு வந்தது இந்த முன்னறிவிப்பிற்காகத் தான் என்பதை உணர்கிறேன்.அமலால் நிறைபும் ரமலானை அகமகிழ்வுடன் வரவேற்கவும்; அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடவும் தூண்டும் நல்லதொரு ஆக்கம். உங்களின் ஒவ்வொரு ஆக்கத்திலும் ஏதேனும் ஒரு புதுமையைக் கையாள்கின்றீர்கள்; எவரும் சிந்திக்காத ஓர் அரிய பணியைச் செய்து விட்டீர்கள்; ஜஸாக்கல்லாஹ் கைரன். முதல் மூன்றாவது ஆளாக இருப்பதில் தவறிவிட்டேனே; இடையில் என் வலைத்தளம் நோக்கியதால் ஏற்பட்ட பின்னடைவு!
முதன் முதலாக இந்த நிருபர் அவைக்குள் குழந்தையாய் நுழையும் நான் என் முதல் கருத்தாக எதிர் வரும் ரமலானுக்கு , இன்னும் நூறு நாட்கள் இருந்தாலும், "இனிய ரமலானே வருக! உன் ரஹ்மத்தை எங்கள்ருக்கு சொரிக ! என்று பரகத் பொருந்திய மாதத்திற்கு நல்வரவு கூற இந்த முதல் பத்தியை பதிவு செய்தவனாக தொடர்கிறேன்.
எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் அல்லாஹ்விடம் ஒரு கணக்கு இருக்கின்றது நன்மையைப்பெற்றுக்கொள்ள நோன்பைத்தவிர . ஏனெனில், நோன்பு எனக்காக உள்ளது அதற்க்குண்டான கூலி என்பொருப்பில் நேரிடையாக அளவுகோலே இல்லாத நன்மையாக அல்லாஹ் தரக்காத்திருக்கும் ஒரு அமல். ஏனனில், ஒருவன் எல்லா நன்மையான விஷயங்களும் அல்லாஹ்வுக்காக செய்தாலும், அது வெளிப்படையான ஒன்று. ஆனால் நோன்பு என்பது தனித்து இருந்து, பசித்திருந்து, விழித்திருந்து , தன்னை தானே அல்லாஹ்வுக்காக வருத்திக்கொண்டு, எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அவனும் ஒரு ஏழையின் பசியை உணரவேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் ஏற்ப்பாடு.
இந்த தகித்திருத்தலோ அல்லது பசித்திருத்தலோ அல்லாஹ்வுக்கு
அவனுடைய தன்மையில் எந்த கூடுதல் குறைவை ஏற்படுத்திவிடப்போவதில்லை. அவன் விரும்புவது உள்ளச்சத்துடன் கூடிய அமல்களே.
அந்த இனிய அமல்களை அப்புநிதநாளில் செய்திட, நூருனாட்களில் வர இருக்கும் ரமலான் இன்னும் பத்து நாட்களில் வந்தால் நன்றாக இருக்குமே என்று
ஏங்கியவனாக
அப்துல் காதர்
மரியம்மா
ரியாத், சவுதி அரேபியா.
என் இனிய நண்பன் காதர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
என் அழைப்பை ஏற்று இங்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி. ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது உன்னுடன் இன்று பேசியபோது. மனம் நிறைவாக இருந்தது.
இங்கு அடிக்கடி வந்து தொடர்பில் இருந்து கொள்.
//இனிய அமல்களை அப்புநிதநாளில் செய்திட, நூருனாட்களில் வர இருக்கும் ரமலான் இன்னும் பத்து நாட்களில் வந்தால் நன்றாக இருக்குமே என்று
ஏங்கியவனாக//
நானும்தான்டா.
சகோ. இப்னு அப்துல்வாஹித் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்.
எங்கள் கவிஞர் அவர்களின் அழைப்பை ஏற்று இங்கு முதன் முதலாய் அமல்களாய் கருத்திட்ட சொந்தம் அப்துல் காதர் காக்காவுக்கு நன்றி. வருக வருக.
இப்படிக்கு
ஜஹபர் சாதிக் பின் முஹம்மது ஹனீபா.
சபையோர்கள் பொருத்தருள்க.... !
சீரியஸாகவும், சிந்தனைக்கு சிகரமாகவும் சிலாகித்துக் கொண்டிருக்கும் வேலையில்...
மெய்யாலுமே தலைப்புல நூறு நாள்னதும், ஏதோ நம்ம சிங்கு அறிவிச்ச நூறுநாள் வேலைத் திட்டம் பற்றிதான்னு நெனச்சுட்டேன்...
ஒவ்வொரு பத்தியாக வாசித்ததும் ரமளானின் வருகையை எதிர்பார்க்க மட்டும் வைக்க வில்லை சுறுசுறுப்பையும் கொடுத்தது...
MHJ வாழ்த்துகிறேன், தமக்கென்று இருக்கும் எழுத்தாற்றல் மட்டுமல்ல, சிந்தனைச் சுரபியை சும்மா இருக்க விட வேண்டாம் !
அருமையான நல்ல நினைவூட்டல்...
இன்ஷா அல்லாஹ்... வரும் ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை இப்போதிலிருந்தே செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!
எல்லாம் வல்ல ஏகன் நமக்கு அருள்வானாக!
இன்னும் 99 நாள் மட்டுமே...........
ஊட்டம் தரும் கருத்திட்ட நெய்னா தம்பி காக்கா, அபுல் கலாம் காக்கா ரொம்ப மகிழ்வும் நன்றியும்.
அதுபோல சொந்தம் ஒன்றை இங்கு புதுசா கொண்டு வந்து கருத்திட்டு நம்மோடு இணைத்த சபீர் காக்கா. ஸ்பெசல் நன்றி.
இன்னும் நல்லுபதேசங்களை இங்கு இட்டு சென்ற சகோ. அப்துல் காதர், சகோ இர்பான் மற்றும் சகோ. அபூ நூரா, மச்சான் தாஜுதீன் இன்னும் ரமலான் வருவதை நாள் எண்ணிக்கையாக வாசித்தறிந்த யாவர்களுக்கும் நன்றி.
---------------------------------------------------------------------------------------------------
ஜமாத்துல் அவ்வல் பிறை 22 / 1434
என் இனிய நண்பனே ,
அதிரை நிருபரை அறிமுகம் செய்த சபீரே, அத்தோடு, எனக்கு இன்னொரும் உதவியும் செய்திடு.
என்னவென்றால், இந்த அதிரை நிருபரில் நான் நேரிடையாக நுழைவதில் ரொம்பவும் சிரமமாக உணர்கிறேன். ஏனனில் நான் வார்த்தைகளை டைப் செய்யும்போது,வார்தைப்பிழைகளை,அதிகமாகக்கான்கிரேன். ஆதலால் அதிரை expressukkul நுழைந்து, அங்குள்ள தட்டச்சில் நுழைந்து டைப் செய்து அதை அதிரை நிருபரில் பேஸ்ட் செய்து அனுப்புகிறேன்.
நேரிடையாக நுழைந்து என் கருத்தை சொல்ல எனக்கு உதவு.
உன் அன்பு நண்பன்,
அப்துல் காதர் ( மரியம்மா )
ரியாத் சவுதி அரேபியா
வரும் ரமலானை எதிர்நோக்இருப்பதும் அதற்காக துஆக்களை கேட்பது நபி{ஸல்]அலைகிவசல்லம் அவர்களின் வழிமுறை அதன் அடிப்படையில் மச்சான் ஜகஅபரின் நினைவஊட்டளுக்கு ஜசக்கல்லாஹ் ஹைர்
அ.நி.:
காதருக்கு உடனடியாக உதவவும். அவன் ஈமெயில் ஐ டி:
arbkhadir714@gmail.com
நண்பர் M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)….அவர்களின் வரும்முன்னே தயார் படுத்திக்கொள்ளத் தூண்டும் வித்தியாசமான சிந்தனை உள்ள ..நன்மை பயக்ககூடிய இவ்வாக்கம் நம்மை நல்வழியில் செலுத்த உதவும் என்பதில் ஐயமில்லை…இன்னொரு விசயம் லண்டன் –ல நோன்பு இந்த தடவை 16 மணி நேரமா இல்லை அதைவிடக் கூடுதலா அல்லது குறைவாக இருக்குமா ?
ஆக்கம் நோன்புக் கஞ்சி வாசனையும் கொஞ்சம் கிளப்பி விட்டுவிட்டது
பின்குறிப்பு : இந்த நோன்பு முழவதும் ஊரிலே தங்கி அமல்கள் செய்ய டிக்கெட்ட புக் செய்துவிட்டேன்…யாராவது நோன்பு நேரத்துல ஊருக்கு வர்ரீங்களா ?
நண்பர் யாசிர்: கருத்திட்டமைக்கு மிக்க நன்றி
முதல் நோம்பில் சஹர் முடிவு 01- 23
இப்தார் 09- 10
ஆக சுமாராக 20 மணி நேரம்.
உயிரை படைத்து அவற்றை பரிபாலித்து வரும் நாயனுக்கு இந்த நேரத்தையும் தாங்கக்கூடிய சக்தியை தருவதும் அவனுக்கு பெரிய விசயமல்ல.
--------------------------------------------
ரமலான் பற்றிய சிந்தனைத்துளிகளையும் சொன்ன சபீர் அஹமது மச்சான். நன்றி.
//தாங்கக்கூடிய சக்தியை தருவதும் அவனுக்கு பெரிய விசயமல்// Alhamdulillah
அல்லாஹ்வின் அருட்கொடை மாதத்தை நினைவூட்டிய அருமைத்தம்பி ஜஃபர் ஸாதிக் அவர்கட்கு மறுமையில், 'ரய்யான்' என்ற சுவனவாயிலை அல்லாஹ் (ஜல்) திறந்து அருள்வானாக!
அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி ஜகபர் சாதிக்
நீங்கள் நூறு நாட்கள் என்று சொல்லியதில் நான் கருத்திட இரண்டு நாள் இன்னும் குறைந்துவிட்டது. தேவையான நினைவூட்டல். அந்த தலைப்பிறையை அனைவரும் எதிர் நோக்கிக் காத்து இருக்கிறோம். பாராட்டுகள்.
அப்பறம் கருத்திட்ட மரியாதைக்குரிய இப்ராஹிம் அன்சாரி காக்கா, இக்பால் காக்கா. நன்றி. அனைவருக்கும் மறுமையில், 'ரய்யான்' என்ற சுவனவாயிலை அல்லாஹ் (ஜல்) திறந்து அருள்வானாக! ஆமீன்.
\\அதிரைத் தென்றலைப் போன்ற சத்தான பின்னூட்டவாதிகளைக் காண எப்பவும் தேட்டம்தான்.//
ஜசக்கல்லாஹ் ஹைர் சபீர் காக்கா...இன்னும் நிறைய பேர் உள்ளனர் அவர்களுக்கு சரியாக இதுபோன்றதொரு நற்பதிவுகள் காண வாய்ப்பில்லாத காரணத்தால் அவர்கள் பின்னுட்டமிட முன் வருவதில்லை போல
என் நண்பனிடம் அ.நி 'ல் வெளிவரும் பதிவுகளை கான்பதுண்டா என்றேன் அதற்கு அவனோ அதெல்லாம் செம போர் மிக நீளமான கட்டுரைகள் அதுவும் 7,8 பதிவர்களுக்குலேயே கருத்துகளை பரிமாறிக்கொள்வர் என்றான்..நானோ நீயும் உனது கருத்துகளை பதிந்து உனது நண்பர் மத்தியில் எடுத்து செல் என்றேன் அதற்கு தலையை ஆட்டியவனாக சென்றான்.
அ.நி யை குறைக்கூருவதற்கல்ல மிக ஆர்வத்துடன் பதியும் பதிவர்களுக்கு மேலும் வழுவூட்டுதலும் அதேபோல் அதிமதிகம் எழுதத் தூண்டும் என்பது உண்மை
இன்னும் பல இஸ்லாம் சம்மந்தமான மிக சுலபமாகவும் எழுத்து ஈர்ப்பின் மூலம் கவரக்கூடிய நல்ல கட்டுரையாளர்கள் இங்கே அதிகம் உள்ளனர் அல்ஹம்துலில்லாஹ், இவர்களின் எழுத்து மூலம் அனைவரும் மயங்குவர் என்பதை மறுக்க முடியாது ஆக மாற்று மதத்தவர்களுக்கு இதில் இடம்பெறும் பதிவுகள் அனைத்தும் கவனத்தில் எடுத்து செல்ல வேண்டியது அ.நி 'ன் கடமை இதன் மூலம் நமது தூய இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது நமது தலையாயக் கடமை.
Post a Comment