Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமீரக தமிழ் மன்றம் 13வது ஆண்டு விழா ! பார்வையாளனின் பார்வை ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | April 10, 2013 | , , , ,


ஒரு வெள்ளிக்கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு கோடி ருபாயை கொட்டிக் கொடுத்தாலும் வளைகுடா விடுமுறை பகல் பொழுதில் எழுந்து செல்ல மனது இடம் கொடுக்காத அந்த நேரத்தில் "தம்பி அ.த.ம.ஆண்டு விழாவுக்கு வர்ரீங்களா நமக்கு ஃப்ரீ டிக்கெட் இருக்குன்னு" கவிக் காக்கா உசுப்பேத்த 'சரி அதுல என்னமோ நம்மூரு காரவெலெல்லாம் பேசி வாதாடப்போறாங்கன்னு' ஒரு பில்டப் கொடுத்து, அந்தப் பேச்சாளரை தேராவிலிருந்து நீ(ங்கதான்) கூப்பிட்டுக்கிட்டு வரனும்னு வேற சொல்லிட்டாங்க....

இதற்கு முன்னர் நடந்த எத்தனையோ விழாக்களுக்கெல்லாம் இலவசமாகவும், சிறப்பு அழைப்பின் பேரிலும் செல்ல வாய்ப்பு கிடைத்திருந்தாலும் இந்த மாதிரியான ஒரு வாய்ப்பு நிரம்பவே வித்தியாசமாக இருந்தது என்று சொல்லாவிட்டாலும் மிகையாயிருக்காது.

இன்முக வரவேற்பு, சேர்த்து வைத்தால் ஒரு புத்தகம் போடும் அளவுக்குத் துண்டு விளம்பரப் பிரசுரங்கள், இலவச மருத்துவ முகாமுக்கான படிவம், அதற்கிடையில் வழியிலேயே மறித்த புடவை கட்டிய பெண்களில் இருவர் "சார் (தமிழில் ஐயா என்பதை மாத்திட்டாங்களாம்) இதில் உங்க பெயரையும் மொபைல் நம்பரையும் எழுதிக் கொடுங்க" என்று மிக அருகில் நெருங்கி நின்று கொண்டார் அதனை வீட்டுக்காரவொல்லாம் பார்த்தங்கன்னா எவ அவன்னு கோபப்பட்டால் வருத்தப் பட வாய்பே இல்லை.

அமீரகத்தில் தமிழ் வளர்த்த, அமீரகத்தில் தமிழ் போற்றும், அமீரகத்தில் தமிழர்களின் நலனை(!?) போற்றும் மன்றம் இப்படியாக அடைமொழிக்கெல்லாம் சொந்தமானதாக இருக்குமோ என்றுதாங்க நாங்களும் ஆவலாய் சென்றோம்.

அங்கே ஆல்-இன்-ஆல் அழகராஜாவாக ஒருவரே எல்லாம் என்று மைக்கையும் பிடித்தார்... தமிழ் தாய் வாழ்த்து என்று அ.த.ம.பொறுப்பாளர்கள் பார்வையாளர்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து பாடினார்கள்.... அப்போதுதான் பள்ளிக் காலங்களில் படித்த பாட்டு அப்படியே மனதிற்குள் ஓடியது ! பக்கத்திலிருந்த கவிக் காக்கா இதில் வணக்க வழிபாடுகள் வருகிறதே... என்று முனுமுனுத்தார்கள்... யோசிக்க நேரம் கொடுக்கவில்லை வாழ்த்துப்பா படிய அமைப்பாளர்கள்.

ஸ்பான்சர்ஸ் லிஸ்ட்டை ரொம்பவே கஷ்டப்பட்டு வாசித்துக் காட்டினார்கள்

தமிழுக்கான சேவை ஆரம்பமானது....!!? வேற என்னங்க ! இரண்டு இளம் பெண்கள் புதுமையாக வடிவமைத்த நடனம், புதுமையான பெயர் வேறு அதுக்கு வைத்து இருட்டிலும், வெளிச்சத்திலும் ஆடிவிட்டு கைத்தட்டு பத்தாதுன்னு மைக்கைப் பிடித்த ஒரு பெண் சொல்ல பார்வையாளர்களும் போனாப் போகட்டும் என்று கையில் இருந்த தூசியை தட்டினார்கள்.

வரவேற்புரை, வாழ்த்துரை இப்படியாக வழமையான விழாவாக துவங்கியது, அந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆண்டுவிழா மலர் வெளியீடும் இருந்தது. சிறப்பு விருந்தினராக வந்தவர்களும், சிரிப்பு விருந்தினராக வந்தவரும், சினிமாவைத்தான் பேசினார்கள் (தமிழுக்கான சேவை).

இன்றைய காலகட்டத்தில் கருவிலிருந்து வெளிவரும் சிசுவுக்கும் ஒரு சிம் கார்டு என்ற எழுதப்படாத பாலிஸி இருப்பதால் தாய் மொழியை செல்லிடையில் தட்டி தட்டி தாலாட்டு பாடுவது எப்படின்னு சொல்லிக் காட்டினார்கள், நான்காம் தமிழ் என்றார்கள்… ஏனோ தமிழ் யுனிகோடுக்கு கோடு போட்டவங்களை ஞாபகமே படுத்தலை ஒருவேளை அது போன தலை முறைக்குத்தான் ஞாபகம் இருக்கும்னு விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன். இருந்தாலும் அங்கே சொன்ன விஷயம் ஆண்ட்ரய்டு பயனாளிகளுக்கு பயன்பட்டிருக்கும் நிச்சயம்.

சிறப்பு விருந்தினர் அவர் பட்டிமன்ற சிறப்பு பேச்சாளார், எடுத்த எடுப்பில் சொன்னது ஆண்டுவிழா மலரில் அவரின் பெயரில் தமிழ் நிமிர்ந்து நின்றதாகச் சொன்னார் அவரின் பெயருக்கு முன்னாள் இட்டுக் கொள்ளும் 'அவனி' என்ற பெயரை 'ஆவனி' என்று அச்சடித்தது மட்டுமல்ல திரு என்பதற்கு பதிலாக திருமதி என்று அச்சடித்த அ.த.ம.ஐ பாராட்டினார்.... அந்த திருமணமாகாத ஆண் சிறப்பு விருந்தினர்.

ஆண்டுவிழா மலர் வெளியிடப்பட்டது, வெளியிட்டவர்களும் அதனைப் பெற்றவர்களும், மைனா, கும்கி என்ற இரண்டு சினிவைப் பற்றி சிலாகித்தார்கள், எல்லா நல்ல(!!?) படங்களையும் பார்ப்பதாகச் சொன்ன நன்கறியப்பட்ட  சிறப்பு விருந்தனர் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற சினிமா பார்த்ததாகவும் அதனைப் பாராட்டியும் தகவல்கள் சொன்னார்கள்.

கும்கி என்ற சினிமாவை எடுத்த சாலமன் என்ற சினிமா இயக்குனர், அவரும் எப்படி படம் எடுத்தேன் எப்படி தோற்றேன், எப்படி ஜெயித்தேன் என்று சினிமா காட்டினார் பூரித்துப் போனது பார்வையாளர் பக்கம் அதன் தாக்கம் யார் வேனும்னாலும் கேள்வி கேட்லாம்னு அறிவித்ததும் போ(ட்)டா போ(ட்)டி அங்கே முகஸ்துதிக்குதான் !

சிரிப்பு விருந்தினர் ஆரம்பத்தில் கிச்சு கிச்சு மூட்டினர், கைதட்டனும் என்ற கட்டாயம் இருந்ததுபோல் பார்வையாளர்களும் தூசியை தட்டிக் கொண்டிருந்தனர் ஆரம்பத்தில் அவரும் சினிமாவுக்குள் புகுந்தார் அரங்கம் பரபரப்பானது, நிறைவில் அம்மாவையும் தாத்தாவையும் இழுத்தார் அரங்கம் அதிர்வில் ஆடியது!

வயர்லெஸ் மைக்கை கூகிலிலும், யாஹுவிலும் தேடச் சொல்லியிருந்தால் பட்டென்று படமாவது கிடைத்திருக்கும், ஆனால் இரண்டு குழுவுக்கும் கொடுக்க மைக் போதவில்லை எங்கே மைக் என்று கேட்டது மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது மைக்கில்.

இதெல்லா வற்றையும் விட முத்தாய்ப்பாக "அவர்களா இவர்களா" என்று கருத்தாடல் இரண்டு குழுக்களுக்கிடையே "விஜய் டிவி நீயா நானா கோபிநாத்" நடத்தினார், அவரின் மடைதிறந்த பேச்சும், தெளிவான காட்டுகளும், நிதர்சனம் சொல்லும் நேர்மையும் என்று அசத்தினார் இடையிடையே பசி வயிற்றை கிள்ளுது என்று தோசைப் பிளாசாவை நினைத்தே புலம்பியும் கொண்டிருந்தார்.... (இங்கே தாங்க தமிழ் எழுதிருச்சு உட்கார்ந்தது)

மூவரைத் தவிர மற்றவர்கள் பேசியதில் எதுவுமே சரியாக பிடிபடவில்லை, அந்த மூவரில் நம்ம ஊருக்கரவொலும் நச்சென்று பேசியது அது அவருக்கே உரிய பாணியில் பேசியது ரசிக்கும் படி மட்டுமல்ல அந்த நிகழ்வின் சுவராஸ்யத்தை கூட்டியது...  அங்கே தாங்க தமிழ் எழுந்து நின்றது...

நிறைவாக கோபிநாத் அவரின் வழக்கமான உரையை நிகழ்த்தி விட்டு சிறந்த பேச்சாளரை (!!?) தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரிடம் கொடுக்க அவரோ இரண்டு குழுக்களில் இருந்தவர்களிடமே கேட்டு தேர்ந்தெடுத்து விட்டார்... இங்கே தாங்க தமிழ் எழுந்ததும் நடையைக் கட்டியது !

இன்பத் தமிழ் எனும் போதினிலே தேன் வந்து பாயுது காதுனிலேன்னு பாடவெல்லாம் தோனலைங்க விட்டாப் போதும் என்று வெளியில் விறு விறுவென்று வந்துட்டேன், திரும்பிப் பார்த்தா கவிக் காக்காவைக் காணோம் ஆஹா ! தமிழ் சங்கமத்தில் தொலைத்து விட்டோமா என்று ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தேன்... அந்த தமிழ் சங்கமத்தில் நீச்சல் அடித்து ஒரு மீனைப் பிடித்த சந்தோஷத்தில் வெளியில் வந்தார்கள் அதுதாங்க ஆண்டு விழா மலர்.

ஆளுக்கு ஒரு திசையில் காரை ஓட்டிக் கொண்டு வந்துட்டோம்.... இதுக்குமேலே கவிக் காக்கா தொடர்வார்கள்....

தொடர் ஓட்டப் பந்தயத்தில் பள்ளிப்பிராயத்தில் அஸ்லத்திடம் வாங்கிய பட்டனுக்குப் பிறகு அதே தோரணையில் எழுதிய இந்தப் பதிவின் பட்டனை முந்தி வந்து தந்த அபு இபு(வின் தொந்தி) நிறைய வாழ்த்தி…

ஆளுக்கு ஒரு திசையில் காரை ஓட்ட நினைத்ததென்னவோ சரிதான்.  ஆனால், அபு இபு  துபை போவதற்குப் பதில் ஷார்ஜா ரோட்டைப் பிடிக்க, பின்னால் வந்த நான் அலைபேசி “எங்கே போறீங்க?” என்று கேட்டேன்.  “துபை” என்றவரிடம் “அப்டீன்னா ஒரு யு டர்ன் அடிச்சு மம்ஸார் சாலையைப் பிடிங்க” என்றேன்.  பேச்சாளரைக் கடத்திச் செல்லும் எண்ணம் அவரிடம் இல்லையென்றாலும் ‘அந்த நெருங்கி நின்ற புடவை’ வழியை மாற்றக்கூடாதல்லவா?

இதிலே வேடிக்கை என்னவென்றால், என்னுது காம்ரி கார் என்றாலும் அதைக் கார்ஷா குதிரைவண்டி ரேஞ்சுக்குத்தான் பழக்கி வச்சிருக்கேன்.  ஸ்டார்ட் பண்ணினால் வீடு, வீட்டிலிருந்து அலுவலகம், அங்கிருந்து ஸ்கூல் என்று தானாகவேப் போய்ட்டு வந்துடும்.  நான் வளைச்சி நெளிச்செல்லாம் ஓட்ட வேண்டியதில்லை.  அத்தோடு, என் கார் பூகோளத்தில் கொஞ்சம் வீக், நானோ எங்கே எத்தனை முறை போய் வந்தாலும் அந்த இடத்திற்கு மீண்டும் போக சரித்திரத்தில் கொஞ்சம் வீக்.  அப்பேர்பட்ட நானே சாலை வழிகளில் தேர்ந்த அபு இபுவுக்கு வழி சொன்னேன் என்றால் கிரகத்தை என்னவென்பது.  இதுல இன்னொரு மேட்டர் என்னென்னா, பேச்சாளன் என் நண்பன் செய்யது அஹமது கபீர் வேறு அந்தக் காரில் இருந்தான்.  அவனுக்கு துபையின் எல்லா ரூட்டும் அத்துபடி.  எனக்குத் தெரிந்து துபையில் கார் லைசென்ஸ் வாங்கிய 20 ஆண்டுகளில் ஒரு விபத்துகூட செய்யாத ஒரே ஆள் இவன் தான்.  அதெப்படி என்கிறீர்களா? கடைசியில் சொல்றேன்.

அடுத்த இரண்டு நாட்கள் அமீரகத்தனமாகக் கடக்க, மூன்றாவது நாள் ஆஸ்ஃபால்ட் பேவரின் (asphalt paver) லெவெலிங் சென்ஸார் (leveling sensors) செயல்திறன் குறைபாடு பற்றிய பரிசோதனையில் இருந்தபோது அந்த ஃபோன் வந்தது.  அதில் ஒரு பெண் என்னை வாழ்த்தி எனக்குப் பரிசு விழுந்திருப்பதாகச் சொன்னது.  பிறந்த நாள் முதல் எந்த ரூபத்திலும் எனக்கு எந்தப் பரிசும் விழுந்திருக்கவில்லையாதலால் குழம்பினேன்.  “மலையாளியானோ?” என்ற கேள்விக்கு, “மலையாளம் மனசுலாக்காம்” என்று சொல்ல, அந்தப் பெண் ஏற்கனவே பதிவு செய்து வைக்கப்பட்ட தோரணையில் மலையாளத்தில், “அமீரகத் தமிழ் மன்ற” நிகழ்ச்சியின்போது நான் எழுதிய கூப்பனுக்குப் பரிசு விழுந்திருப்பதாகவும், அதன்படி இந்தியாவில் எந்த நட்சத்திர ஹோட்டலிலும் ஒரு வாரம் குடும்பத்தோடு இலவசமாகத் தங்கலாம்” என்றும் “ஓஃபிஸில் வந்து வாங்கிக்கொள் ச்சேட்டா” என்றும் பரைஞ்ஞது.

எனக்கு எதிர்வரும் ஜூலை ஆகஸ்ட் விடுமுறையில் என்ன செய்யலாம் என்கிற குழப்பம் சட்டெனத் தீர்ந்தது. சர்தான், வடநாட்டுப்பக்கம் குடும்பத்தோடு போய் தங்கிட்டு வரலாம் என்று திட்டமிட்டுக்கொண்டே அபு இபுவை அழைத்தேன்.  அந்தப் பெண் எவ்வளவுதான் விளக்கமாக அட்ரெஸ் சொல்லியும் விளங்காத நான் (என் காரின் பூகோள அறிவைப்பற்றி ஏற்கனவே சொல்லியாயிற்று) அபு இபுவிடம் சொன்னதும் “ஓ அந்த ஹோட்டலா, வாங்க போலாம்” என்றார்.

Country club  ஹோட்டலின் ஒரு ஹால். சிங் என்னும் பெயரைத் தவிர வேறு சர்தார்ஜிக்கான எந்த அடையாளமும் இல்லாத இளைஞனும் அவன் மேலாளரும் வரவேற்று வார்த்தைகளால் உபசரித்தார்கள். கட்டாயப்படுத்தியதால் நான் ட்டீ சொல்ல, அபு இபு ஒன்றுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

கூப்பனைத் தரப்போவதாக, இதோ தந்துவிடப் போகிறோம், இன்னும் சிறிது நேரத்தில் தந்து விடுவோம், தந்தே விட்டோம் என்றெல்லாம் உஷார் காட்டிவிட்டுக் கொண்டே திருநெல்வேலிப் பக்கம் வீட்டு மனை வாங்கச் சொல்லியும் ஏதோ ஒரு விடுமுறைகால ரிஸார்ட்ஸில் ‘தங்க அட்டை’ உறுப்பினராகச் சேரச் சொல்லியும் பேசிக்கொண்டே இருந்தான் அந்த ட்டை கட்டிய ஆசாமி.  (எனக்கு ட்டை கட்டிய ஆட்களுடன் பேசுவதென்றாலே சற்று அலர்ஜி.  ஏனென்று பிரிதொரு பதிவில்).  கடமையே கண்ணாயிய அபு இபுவோ யாவற்றையும் வழக்கம்போல் உண்ணிப்பாகக் கவனித்து நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.  காரியதரிசியைப் பேசவிட்டுவிட்டு பதவிசாக அருகில் அமர்ந்திருக்கும் வெளிநாட்டுத் தூதுவர் போல இருந்தார் என்று சொன்னால் சரியாக விளங்கும்.

“ நேரமாகுது, ஆத்தா வையும், கூப்பனைக் கொடு” என்று அழாத குறையாகக் கேட்கவில்லையே தவிர, எல்லா அஸ்திரத்தையும் பிரயோகித்தும் விடாக்கண்டனாக அந்த ‘பல்லேபல்லே’ பேசிக்கொண்டேயிருந்தான்.  நான் விவரமாக, “உங்கள் ப்ரொஜெக்ட் சம்பந்தமான ப்ரோச்சர்ஸ் இருந்தால் கொடுங்கள். பார்த்துவிட்டு முடிவெடுக்கிறேன்” என்று கொடாக்கண்டனாக இருப்பதை உணர்ந்துகொண்ட அவன், எங்கள் விதிகளின்படி கூப்பன்களை உங்கள் ஈ மெயிலுக்கு அனுப்புகிறோம் சார்” என்றான். அப்பதான் இவிங்க எதுக்குக் கூப்பிட்டான்கள் என்று விளங்கியது. 

3 நாட்களுக்குப் பிறகு மெயிலில் வந்த கூப்பனில் ஆயிரெத்தெட்டு நிபந்தனைகளோடு கூப்பனை பிரின்ட் அவுட் எடுக்கச் சொல்லி யிருந்தது. ஆனால், கூப்பனைப் பார்க்க அதை திறக்கவே முடியவில்லை.  எங்கள் கம்பெனியில் ஐ ட்டி மேனேஜர் வரை முயற்சி செய்தாயிற்ரு. ம்ஹூம்.  எல்லாம் உட்டாலக்கடி வேலை என்பது தெளிவாகத் தெரிகிறது.  

20 வருடங்களாக ஒரு ஆக்ஸிடென்ட் கூட செய்யாமல் லைசென்ஸ் வைத்திருக்கும் என் நண்பன் செய்யது அஹமது கபீரின் ட்ரைவிங் திறமைக்கு  ஒரு “ஓ” போடுவதற்கு முன், கொஞ்சம் காதைக் கொடுங்க, “ஏய்யா, கார் ஓட்டினாத்தானேயய்யா ஆக்ஸெடென்ட்லாம். லைசென்ஸ் வச்சிக்கிட்டு அவன் பஸ்லேல்ல போறான்.”

நிறைவாக, நிகழ்ச்சியில் நான் கவனித்தவற்றில் குறிப்பிடத்தகுந்தவை:
  • சகோ. ஆஸிஃப் மீரானின் கடின உழைப்பின் பிரதிபலிப்பு நிகழ்ச்சியின் ஒவ்வொரு பொழுதிலும்.
  • சகோ. ஜெஸிலா அவர்களின் நேர்த்தியான நிகழ்ச்சி தொகுப்பு
  • நிகழ்ச்சியின் முதல் பாடலாக “ஐய்யய்யோ” என்று துவங்கும் கும்கி பாடல் கொண்டு துவங்கியதில் நெருடல்
  • பலகுரல் மன்னன் சேதுவின் மிமிக்ரியில், மன்மோகன் சிங் குரலில் பேசச்சொன்னதும், கைகள் கட்டி தலை தாழ்த்தி மெளனித்து நின்ற டைமிங் கண்டு அரங்கமே அதிர்ந்தது.
  • 'அவனி மாடசாமியின்' பேச்சில் அழகாய்த் தெரிந்த தமிழ்.
  • இயக்குனர் பிரபு சாலமனின் நேர்மையான பேச்சு. “மதங்களை புண்படுத்தி படம் எடுக்கவே மாட்டேன்”
  • கோபிநாத்தின் பிரமிக்க வைக்கும் அறிவார்ந்த பேச்சும் நிகழ்ச்சியை நடத்திய பாங்கும்.
  • என் நண்பன் கபீரின் நறுக்கென்று பேச்சு. குறிப்பாக, அன்பா பணமா என்னும் தலைப்பில் பணமே என்று பேசிய கபீரை மட்டும்தான் “சூப்பர்” என்று சொன்னார் கோபிநாத்.  அன்பு பார்ட்டிகளைப் பார்த்து கபீர், “அன்பானவர்களுக்கிடையே கடன் கொடுத்துப் பாருங்கள். அன்பு படும் பாட்டை. கடன் அன்பை முறிக்கும்” என்று சொன்னபோது அவன் வாதத்திறமை கண்டு வியந்தேன்
ஆனா, பரிசு? கடைசிவரை…வடையும் போச்சு…ட்டீ இன்னும் வரல.

அபூஇப்ராஹீம் - அபூசாஹ்ரூக்

30 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

ரிசார்ட் , ஹோட்டல் கார்டுகள் இங்கேயும் இப்படி விற்பது உண்டு. உங்களுக்கும் , உங்கள் மனைவிக்கும் "டின்னர் இலவசம்" என்று அன்புடன் அழைப்பார்கள். [ நீங்க டின்னர் கொடுக்காட்டியும் சாப்பிடாமயா இருப்போம் என்று இங்லீஸ்லெ கேட்டா அவ்லோ நல்லா இருக்காது ]

கூப்பிட்டு வைத்து அவர்களது ஹோட்டல்களை பற்றி 'ஆத்து ..ஆத்து" நு ஆத்துவாங்க. கடைசியில் 'சிக்கிய" கஸ்டமர், அந்த கார்டை எடுத்து போகும்போது, ஞாயிற்றுகிழமையிலும், விடுமுறை நாட்களிலும் பயன்படுத்த முடியாது. பப்ளிஸ் ரேட் என்று குதிரை விலை போட்டு வைத்து அதில் 50% டிஸ்கவுன்ட் கொடுப்பானுங்க'.

நம்ம பக்கத்தில் சட்டை கசங்கி, ஒழுங்கா தலைவாராத தறுதலைக்கும் அதே டிஸ்கவுன்ட் ரேட் தான் [ அவனிடம் மெம்பர்சிப் கார்டு எல்லாம் இருக்காது ].

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. துபாயில் நிறைய ஏமாற்றிவிட்டு , நியூயார்க்கில் ட்வின் டவர் இருந்த இடத்தில் மனை வாங்கி போடலாம் போல தெரிகிறது. இவ்வளவு பேர் ஏமாற தயாராக இருக்கும்போது ஏமாத்துறவன் ....அட இவ்வளவு பெரிய "மார்க்கெட்" இருக்கே" நு வந்து உட்கார்ந்துடுவான்.


அதிரை நிருபரை நைஜீரிய மொழியில் வெளியிட்டுடாதீங்க....அப்புறம் இன்டர்நெட்டில் குடியிருக்கமுடியாது.









نتائج الاعداية بسوريا said...

சபீர் (கோபத்துடன் எழுதுகிறேன்)

இதைப்படிக்கவே, கால் மணி நேரத்துக்கு மேலாச்சு. உருப்படியா ஏதாவது
ஒன்னு இருக்குமான்னு பார்க்கிறேன், ஒன்னுமே இல்லை.

இதைப்படித்த பிறகு உன்னை ஒரு கை பார்க்கணும் என்று நினைத்தேன்.
நீதான் துபாயில் நான் சவுதியில்
ஊரில் வந்து பார்த்துக்கொள்கிறேன்.

வைக்கட்டுமா ?

கோபத்துடன்,
காதர்.
ரியாத், சவுதி அரேபியா.

அப்துல்மாலிக் said...

கண்ட்ரி கிளப் லே மாட்டிக்கிட்டீங்களா? ஹா ஹா, இதை பற்றி ஒரு விளிப்புணர்வு பதிவு எழுதலாம்னுஇருந்தேன்...

அ.த.ம பற்றி - சினிமாவை பற்றி பேசினால் மட்டுமே கூட்டம் இருக்கவும் நீங்க சொன்னா மாதிரி தூசியும் தட்ட காத்திருக்கு, எத்தனையோ தமிழ் இலக்கியம் மன்ற்ம் நடக்குது, ஒருத்தன்கூட போறாங்களா ம்ஹூம்....

எனவே சினிமா நம் மக்கள் வாழ்க்கையோடு கலந்து உருண்டு பெரண்டுக்கிட்டு இருக்கு என்பதுதான் உண்மை

** இந்த வருடம் அ.த.ம விழாவுக்கு நான் மிஸ்ஸிங்...

sabeer.abushahruk said...

காதரு,

என்ன இப்டி கோவிச்சுக்கிறே! எப்பப் பார்த்தாலும் கடுசாவும் அக்கப்போராவும் எழுதுனா கூட்டம் கலஞ்சிடும் அப்பு. உன்னயமாரி அப்பாக்கள் மட்டுமா வாசிக்கிறாங்க? என்னய மாதிரி எளசுகளும் புழங்குறாங்கல்ல? அதான் கொஞ்சம் ஹாஸ்யமா...

என் நகைச்சுவையான எழுத்து உன்னய கோவப்பட வைக்குதுன்னா என் நகைச்சுவையை என்னவென்பது? அல்லது வயசானதால சீரியஸாயிட்டியா?

ஆங்,

ஜாகிரின் பின்னூட்டத்தைப் பார்த்தியா?
இப்படி ஏமாறாதீங்கன்னு சொல்ற விழிப்புணர்வு (ஹிஹி) பதிவுடா இது.

மற்றபடி, ஐ லவ் யுடா ச்செல்லம், கோவிக்காத.

KALAM SHAICK ABDUL KADER said...

அமீரகத் தமிழ் மன்றம்..ஆஹா என் கடந்த கால நினைவு நாடாவைச் சுழற்றிவிட்டீர்கள் நீங்கள் இருவருமாய்ச் சேர்ந்து. ஆம். அ.த.ம பற்றியெல்லாம் எனக்கு அப்பொழுது தெரியாது. முகநூலில் என் கவிதையின் முதல் வாசகியாய் அறிமுகமாகி- எங்கெல்லாம் என் கவிதைகள் பதியப்பட்டிருக்கின்றதோ அங்கெல்லாம் சென்று பார்த்து உறக்கத்திலும் கொஞ்சு தமிழாம் ஈழத்துத் தமிழில் பாராட்டும் “மஞ்சுபாஷிணி” என்ற வாசகி மூலம் தான் அ.த.ம.வின் மகளிர் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டேன்; அவ்வாசகி மூலம் சகோதரி ஜெசீலா ரியாஸ் அவர்களின் அறிமுகமும் அவர்களின் குடும்பத்தினரின் அறிமுகமும் கிடைத்தது; தொடர்ந்து உறுப்பினராகி (திர்ஹம் 100 சந்தா கட்டி) ஓரிரு விழாக்களில் மட்டும் பங்கெடுத்தேன்; பார்வையாளரகவே! போகப் போகப் புரிந்தது நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை விடயங்களிலும் எனக்கும் ஒரு கைப்பு உணர்வு ஏற்பட்டு அ.த.ம. விழாக்கட்கு உறுப்பினர் என்ற முறையில் அழைப்புகள் வந்த போதிலும் செல்வதில்லை என்ற திடமான முடிவில் இருக்கிறேன்.

ஆனால் இதற்கு நேர்மாற்றமாக,

பன்னாட்டு இஸ்லாமியக் கழகம், துபை
சங்கமம் தொலைக்காட்சி , துபை
வானலை வளர்தமிழ்த் தேர், துபை
யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம் , துபை
துபாய்த் தமிழர்ச் சங்கமம், துபை

ஆகிய அமைப்புகள் எனக்குத் தருகின்ற பெருமதிப்பும் மரியாதையும் கண்டு நான் வியக்கின்றேன்; என் உடல்நிலைச் சரியில்ல்லாமல் தற்பொழுது வார விடுமுறையில் ஓய்வெடுத்து வருவதால் மேற்சொன்ன அமைப்புகளிடமிருந்து வாரந்தோறும் வருகின்ற அழைப்புகளைக் கண்டும் செல்லாமல் இருந்தாலும், என்னை விடாமல் கேட்டுக் கொண்டு என் மீதும் என் கவிதையின் மீதும் பற்று கொண்டவர்களாக மீண்டும் மீண்டும் அழைப்புகள் அனுப்பியதால்,

இன்ஷா அல்லாஹ்,

12-04-13 வெள்ளிக்கிழமை வானலை வளர்தமிழ்த் தேர் என்னும் அமைப்பினர் நடத்தும் கவியரங்கில் “கல்வி” என்னும் தலைப்பில் கவிதையை வாசிக்க உள்ளேன்.

19-04-13 வெள்ளிக்கிழமை துபாய்த் தமிழர்ச் சங்கமம் எனனை கவுரவித்து விருது வழங்கும் விழாவில் கவிதை வாசிக்க உள்ளேன்.

எனவே, மதிப்போர்க்கு மதிப்பளிப்போம்.


குறிப்பு; எல்லாத் தமிழ்ச்சங்கங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி, எழுந்து நிற்கும் வேளையில் நாம் மட்டும் உட்கார்ந்திருக்க முடியாத ஒரு சூழ்நிலை; அந்நேரம், பள்ளிக்கூடத்தின் மைதானத்தில் காலையில்
தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடி வணக்கமும் செய்த்ததை நினைத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

இவ்விடயங்கள் என்னைத் தற்பெருமை படுத்திக் கொள்வதாக எண்ண வேண்டா. கவிவேந்தர் சபீர் அவர்களும் அமீரக மேடைகளை அலங்கரிக்க வேண்டும் என்ற தூண்டுகோல் என்னும் தூண்டிலாகவே இவண் பதிகிறேன்.

Unknown said...

நாங்க பழசா ? நீங்க இளசா ?
மண்டை வெளுக்கலன்னா இளசா?
இது என்ன புதுசா இருக்கு?
எத்தன நாளைக்கு சொல்லிக்கிட்டு இருக்கப்போரேன்னு பாக்குறேன்

முறைப்புடன்,
அபு ஆசிப்

KALAM SHAICK ABDUL KADER said...

பாடகரே! அ|ஸ்ஸலாமு அலைக்கும்!

உங்களின் குரலில் இனிமையும் இருக்கும்; இளமையும் இருக்கும் என்பது போலவே என்றும் இன்ஷா அல்லாஹ் நீங்கள் இளைஞரின் தோற்றம் உடையவர் தான் என்பதை நான் சான்று பகர்கின்றேன். எப்பொழுது என்னுயிர் தமீம் (உங்கள் அருமை மருமகனாரை இங்கு அழைத்து வருவீர்கள்?) தோழர்களான நீங்களும் கவிவேந்தரும் செல்லச் சண்டை போடும் பொழுது, என்னுயிர் தோழன் தமீமும் என்னுடன் இங்கு வந்து இதுபோல் கதைப்பானா என்ற ஏக்கத்தை உண்டாக்கி விட்டீர்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சார்...இதெல்லாம் பார்வையாளன் சீட்டுல உட்கார்ந்துகிட்டு அனுபவச்சிருக்கனும்.... !

இருந்தாலும் நம்மூரு குப்புசாமி நம்ம தோஸ்து பில்கேட்சுக்கு லெட்டரு எழுதிவைக்க அதையாரோ சுட்டு முகநூலில் போஸ்டர் அடிச்சு போட்டிருக்காங்க நம்ம இ.அ.காக்கா அவர்கள்

"தம்பி முனுசாமியோட பிரச்சினையை தீர்க்க முடியுமான்னு கேட்டிருந்தாங்க"

நானும் "இது மிகப் பெரிய ப்ராஜெக்ட் காக்கா" வேனும்னா நம்ம மக்கள்கிட்டே கேட்டுப் பார்க்கலாமேன்னு சொல்லிட்டு இந்த அட்ரஸ்க்கு போஸ்ட் செய்திருக்கேன்... மக்களே முடிந்த உதவியை செய்வீங்களா ?

#####

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது தென்கிசியிலிருந்து நெல்லை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,
குப்புசாமி//

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரை நிருபரை நைஜீரிய மொழியில் வெளியிட்டுடாதீங்க....அப்புறம் இன்டர்நெட்டில் குடியிருக்கமுடியாது. //

நம்ம யாசிருக்காக செய்யலாம்னு ஒரு ஐடியா இருந்துச்சே... அடடா ! என்னது !?

அலாவுதீன்.S. said...

இரண்டு பேரும் தெரிந்துதான் போனீர்களா?
அங்கு என்ன கூத்தெல்லாம் நடக்கும் என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?
சினிமாவை புகழ ஒரு மன்றம்???
இந்த கூத்தை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்
நம் மக்கள் பொழுது போக கண்டிப்பாக போகத்தான் செய்வார்கள். ஏனெனில் தூய தமிழுக்கு??? சொந்தமான மன்றம் அல்லவா?
அங்கு போய் வந்ததற்காக உங்களுக்கு அன்று இரவு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டிருக்க வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அங்கு போய் வந்ததற்காக உங்களுக்கு அன்று இரவு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டிருக்க வேண்டும்.//

அதுவும் நடந்துடுச்சே... (கண்டு புடிச்சீட்டீங்களா ?) வீட்டுக்கு வந்தது லேட்டோ லேட்டு ! அடுத்த நாள் கருக்கால ஆபீஸ் வேற இரண்டு பேருக்கும் !

காக்கா,,, ஸாரி மெய்யாலுமே தெரியாது, நீயா-நானா கோபியோட ப்ரோகிராம்னுதான் கெளம்புனோம்...

அலாவுதீன்.S. said...

மார்க்கதிற்கு முரணான காரியங்கள் நடக்கும்பொழுது அந்த இடத்தை விட்டு அகன்று விடுவதே இறை நம்பிக்கையை பாதுகாக்கும்.

அலாவுதீன்.S. said...

To Bro : அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
வணக்கம் என்று வந்து விட்டால் அல்லாஹ்வை தவிர யாருக்கும் கிடையாது.

///குறிப்பு; எல்லாத் தமிழ்ச்சங்கங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி, எழுந்து நிற்கும் வேளையில் நாம் மட்டும் உட்கார்ந்திருக்க முடியாத ஒரு சூழ்நிலை; அந்நேரம், பள்ளிக்கூடத்தின் மைதானத்தில் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடி வணக்கமும் செய்த்ததை நினைத்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். ///
****************************************************************************

கொடிக்கு – பாடலுக்கு – மரத்திற்கு, மனிதர்களுக்கு என்று வணக்கம் நடைபெறுகிறது என்றால் இறை நம்பிக்கையாளர்கள் தவிர்த்துக் கொள்வதுதான் இம்மையிலும் - மறுமையிலும் நன்மை அளிக்கும்.

மார்க்கதிற்கு முரணான காரியங்கள் நடக்கும்பொழுது அந்த இடத்தை விட்டு அகன்று விடுவதே இறை நம்பிக்கையை பாதுகாக்கும்.

sabeer.abushahruk said...

அலாதீன் வன்ட்டான்.

நான் ஜூட்.

sabeer.abushahruk said...

அலாவுதீன்,

இதோ போய்ட்டோம்,வெளியாயிட்டோம். நீ இவ்ளோவ் சொன்னபிறகு எங்களுக்கு இங்கென்ன வேலை. வெளியாயிட்டோம்

போற போக்கில ஒன்றைச் சொல்லிவிட்டுப் போய்ட்றோம்.

நாங்கள் பார்க்கப் போனது கோபிநாத்தின் நிகழ்ச்சியை. அங்கு நடந்த அனாச்சாரங்கள் (திரையிசைப் பாடல்கள்/சிறார்களின் நடனங்கள்)தேய்ரா வீதியில் உலவும் பெண்களின் அரைகுறை உடையைவிடவும், துபயின் மால்களில் நடக்கும் அனாச்சாரங்களை விடவும் மோசமில்லை என்பது என் கருத்து.

கொஞ்ச நாட்களுக்கு முன் நம் இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் சொன்ன விஸ்வரூபம் திரைப்படத்திற்கெதிரான கருத்தான "மத உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள்" என்னும் முழக்கத்தைத்தான் திரைப்பட இயக்குநர் பிரபு சாலமனும் சொன்னார். நம் தலைவர்கள் சொன்னதைவிட திரைப்படத் துறையில் இருக்கும் ஒருவரே சொன்னது வரவேற்கத்தக்கது.


வெளியாய்ட்டோம்பா.

Unknown said...

உடனே அந்த எடத்தை விட்டு காலிபண்ணு !

இல்லையேல் .............

ஆமா

அபு ஆசிப்

புதுசுரபி said...

இந்த நிகழ்சிக்கான பேச்சாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது. தேர்ந்தெடுத்த பிள்ளைகள(!) பேசும்போது காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அழைப்பிருந்தும், அதேநாளில் வேறொரு நிகழ்விற்கு வருவதாய் வாக்கு தந்திருந்ததால் வாய்ப்பு நழுவிப்போனது. ஆனாலும் நான் சென்ற இடத்தில் தான் தம்பி தாஜுதீனை காண வாய்ப்பு கிட்டியது..
அ.த.ம நிகழ்வுக்கு வந்திருந்தது போலவே இருந்தது உங்கள் எழுத்து... மகிழ்ச்சி!!!

عبد الرحيم بن جميل said...

சென்ற வருடம் நானும் சென்றேன்!துபை வெமன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது!! தமிழை அமீரகத்தில் நிலை நாட்டி வருகிறோம் என்ற பெயரில் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்!!பாட்டு போட்டியும் நடை பெற்றது,அதில் ஒரு மனிதர்(ஏதோ இஸ்லாமிய பெயர் கொண்டு அவரை அழைத்தார்கள்)எந்த எழுத்தில் நிருத்தினாலும் பாடுகிறார்...வியந்தே போனேன்!,இறுதியில் அதற்காக பரிசும் வென்றார்...சற்று யோசனை வந்தது,இவருக்கு 5 சூரா வாச்சிம் சரியா தெரியுமா னு....ஒருங்கினைப்பாளர் யார் என்று பார்த்தால்,ஒரு புர்கா அணிந்த ஒரு பெண்!!அல்லாஹ் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்

Unknown said...

இன்ஷா அல்லா கூடிய விரைவில் கூட்டிவருவேன்.

நேரம் கனியும் வரை கவிஞர் காதிருக்கக்கூடாதோ ?

விரைவில் வருவார் என் மருமகன்.


சகோதரியின் மகனுடன் நிருபர் அவையில் அமர்ந்து அளவளாவ
எனக்கு மட்டும் ஆர்வம் இல்லாமலா?

அபு ஆசிப்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ரெண்டு பேரின் கூட்டுத் தயாரிப்பு சூப்பர் நடை!

அதன் பின்ணணி கருத்துக்கள் சூடும் சுறுசுறுப்பும் நிறைந்திருக்கு!

அப்ப அங்கே பூமி ஆடுனதே அது எதுனாலே!?

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


//மார்க்கதிற்கு முரணான காரியங்கள் நடக்கும்பொழுது அந்த இடத்தை விட்டு அகன்று விடுவதே இறை நம்பிக்கையை பாதுகாக்கும்.//

இதனை நானும் வழிமொழிகிறேன்.

Ebrahim Ansari said...

நீங்கள் இருவரும் நிகழ்ச்சியை ரசித்தீர்களோ இல்லையோ நாங்கள் உங்கள் எழுத்தை ரசித்தோம்.

இந்த கன்ட்றி கிளப் கிளப் வலையில் நானும் மாட்ட இருந்தேன். அதுவும் கம்பெனியில் அலுவலகத்தில் இருந்த கிட்டத்தட்ட ஐநூறுக்கு மேல் உள்ளவர்களை உறுப்பினர்களாக்கிக் கொடுக்க பேரம். வலையில் சிக்கி சில மீன்கள் மீண்டும் கடலுக்குள் குதித்துத் தப்பிக்குமே அப்படித் தப்பித்தோம்.

தம்பி அப்துல் மாலிக் அவர்கள் இது பற்றி ஒரு ஆக்கம் எழுதினால் வரவேற்கிறோம்.

இன்றும் கூட சிட்டி சென்டர் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் போவோர் வருவோரை அழைத்து ஒரு கூப்பன் எழுதி வாங்குகிறது. பிறகு தொந்தரவுதான்.

அமீரகத்தில் எல்லாமே வியாபாரமாகிவிட்டன. அங்கங்கே வலைகள் விரிக்கப் பட்டு இருக்கின்றன. அல்லாஹ் காப்பானாக.

adiraimansoor said...

தம்பி நெய்னா தம்பியின் கம்பியூட்டர் நகைச்சுவை சுவையாக இருந்தது

அம்பி கடைசி சந்தேகத்தை மட்டும் தீர்த்துவைத்துட்ரேன்.

வின்டோவை யாரும் ஃப்ரியா தூக்கிக்கிட்டு போய்விடக்கூடாது என்றுதான் அவருக்கே கேட்டு போட்டுவைத்துள்ளார்.

எழுதியதை மீண்டும் படித்தேன் அட என்னடா தம்பி என்ற வார்த்தைய இரண்டு முறை உப்யோகித்துள்ளோமே என்ற் ஒரு தம்பியை நீக்கிவிடலாம் என்று முற்படும்போதுதான் தெரியா வந்தது இரண்டாவது தம்பி அவரின் பெயருடன் ஒட்டிய தம்பி என்று விட்டுவிட்டேன்.

அப்துல்மாலிக் said...

2 வருடங்களுக்கு முன் சென்ற ஒரு தமிழ் மன்றத்தில் (வானலை வளர்தமிழ்த் தேர், துபை) என்றுதான் நினைக்கிறேன், அங்கே ஒரு புது நடிகர் தான் தயாரித்து நடித்து வெளிவந்த ஒரு திரைப்படத்தை official trailer ஆக அந்த மன்றத்தில் வெளியிட்டார்கள். இதிலேர்ந்து தெரியவேண்டாமா, சினிமாவை விட்டால் வேறில்லை என்று...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மன்சூர் காக்கா:

நம்ம முனுசாமிக்கு ஒரு பதில் கடுதாசி பில்கேஸ்கிட்டேயிருந்து விபரம் கேட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன் அதோடு ஸ்டீவாவ்ஸும் கனவுல வந்து காதுல ஒரு விஷயம் சொன்னாரும் நம்ம ஐஃபோன் ஐபேடு பத்தி முனுசாமி ஒன்னுமே சொல்லலையேன்னு... அதனாலென்னா அதையும் கேட்டு எழுதிட்டா போச்சுன்னு சொல்லிட்டேன் அவர்கிட்டேயும் ! :)

விரைவில்..

Unknown said...

ஸ்டீவ் வாவ்ஸா ஸ்டீவ் ஜோப்ஸா.

தம்பிக்கு கிரிக்கட்டு ரொம்ப பிரியம் போலிரிருக்கு.

sabeer.abushahruk said...


//தம்பிக்கு கிரிக்கட்டு ரொம்ப பிரியம் போலிரிருக்கு.//

அபு இபுறாகீம்,


கொக்கி போட்றாங்க. சிக்கிக்காதிய அப்பு. அப்புறம் உங்கள இட்டான்டு போய் ஓதிக்கொடுக்கிற பள்ளில வச்சி கால்ல குட்டையப் போட்டு விட்டுடுவாங்க.

அதனால, அறிவழகு கேட்கும் கேள்வியை ஒன்னு ச்சாய்ஸ்ல விட்டுடுங்க அல்லது "கிரிக்கெட்டா? அப்டீன்னா என்ன?"னு பதில் எழுதிடுங்க.

ஸீசன் அப்டி.

Unknown said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
மன்னிக்கவும்
மேலே உள்ள பெரிய ஸ்டோரியை படிக்க
நேரமில்லாதது ஒரு பக்கம்
இன்னொரு பக்கம் என்னுடைய சோம்பல்
சபீர்,நிஜக்கவிதை மன்னா
என்னுடைய பின்னூட்டத்தை இங்கேயும் பதிவு செய்கிறேன்.
மலேசியா ட்ரூலி ஆசியா
என்ற தலைப்பில்
நண்பர் ஜாஹிரின் பதிப்பில்
பின்னூட்ட உன் கவியை பார்த்து
ஈர்க்கப்பட்டேன் மிகவும் அருமை
அத்துனையும்
அருமையான படைப்புகள்
உண்மையிலேயே யு ஆர் சோ கிரேட்
உன்னைத்தெரியும் நன்றாகவே தெரியும் இருந்தும்
நீ ஒரு படைப்பாளன் என்பது எப்படி எனக்கு தெரியாமல் போனது
பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தேன்
பிடி கிடைக்கவில்லை.வருந்துகின்றேன்
இனி
தவற விடமாட்டேன்.
எல்லா வரிகளும்
ரசனைக்குரியவை
எதையும் தள்ளமுடியாது
நான் அதிக அதிகம் ரசித்தது
இதைத்தான் இப்படியும் ஒரு வர்ணனையா?

"எங்களூர் மலைமகள்
சீஸனில் மட்டுமதான்
கூரைப் புடவையளவில்
அருவி ஆடை அணிவாள்

மற்றைய தினங்களில்
மாடர்ன் ட்ரெஸ்தான்

உங்கூரு அருவி
ஒழுக்கமானதோ?
அடர்த்தியான புடவையாகவே
அருவி கொட்டுகிறது!"

எப்படிப்பா உன்னால் முடிகின்றது
எனக்கு கவிதை என்றாலே புடிக்காது
காரணம் கவிதை எழுதுகின்றோம் என்று
நிறைய பேர் பொய்யைத்தான் புனைகின்றது
உன்னிடம் பொய்மை வெளிப்படவில்லை
அத‌னால்தான்
உன்னை "நிஜ‌க்க‌வி ராஜா" என்ற‌ புனைப்பெய‌ரை நான்
உன‌க்கு சூடி ம‌கிழ்விப்ப‌தோடு அல்லாம‌ல், நில்லாம‌ல்
இனி நான் உன்னை இப்ப‌டித்தான் அழைப்பேன்
வாழ்த்துக்க‌ள்
வ‌ழ‌முட‌ன் வாழ...........


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.