Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தொலைக் காட்சியும் வாழ்க்கைத் தரமும் 56

அதிரைநிருபர் பதிப்பகம் | April 01, 2013 | , ,

பதிவர் : புதுசு !

தொலைக்காட்சிப் பெட்டி இன்றைய காலத்தில் மக்களின் வாழ்வில்
இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது இஸ்லாமியராகட்டும், பிற மதத்தவர்களாக இருக்கட்டும் பாகுபாடின்றி பெரும்பான்மையாக எல்லோருடைய வீட்டிலும் இடம் பெற்றிருக்கிறது இந்த தொலைக்காட்சிப் பெட்டி! இதன் பயன்பாடு சரியானதாக இருக்குமானால் அதனைப் பற்றி நாம் இங்கு எழுத வேண்டியே இருக்காது.

சீர்குலைக்கப் படும் சிறுவர்களின் அறிவு:

இன்றைய காலத்தில் சிறுவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார்களோ இல்லையோ,பள்ளிப் பாடம் மனதில் பதிகிறதோ இல்லையோ,சினிமாவில் வரும் பாடல்கள் மிக எளிதாக மனதில் பதிந்துவிடுகிறது. ஒன்றுக்கும் உதவாத சினிமாப் பாடல்கள் மற்றும் பல தலைப்புகளில் நடத்தப் படும் ஆட்டம்,பாட்டுப் போட்டி இவைகளிலேயே இவர்களது கவனம் செல்கிறது. வாழ்க்கையின் அத்தியாவசியமான கல்வியில் கவனம் குறைந்துவிடுகிறது. இதனை பெற்றோர்களும் பெரிதாக கண்டுக் கொள்வதில்லை. “நமதூர் பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளின் வயிற்றுப் பசியை போக்குவதற்கு ருசியாகச் சமைத்து கொடுக்கிறார்கள்,ஆனால் நம் பிள்ளைக்கு அறிவுப் பசி ஏற்படுவதற்கும் அறிவு பசிக்கு உணவளிப்பதற்கும் எந்த பெற்றோருக்கும் எண்ணமில்லை”

தொலைந்து போகும் அறிவு:

இன்றைய காலத்தில் தரமான கல்வி போதிக்கப் படுவது மிகவும் அறிது,அதற்குக் காரணமும் இந்த தொலைக் காட்சிப் பெட்டிதான்.ஒன்றுக்கும் உதவாத இந்த சினிமா யாரையும் விட்டு வைக்கவில்லை. அது ஆசிரியராக இருக்கட்டும் மாணவனாக இருக்கட்டும், எல்லோருக்கும் இருக்கிறது இந்த சினிமா பைத்தியம். ஆசான் தரமான கல்வி போதித்தால்தான் மாணவர்களிடம் தரமான கல்வி சென்றடையும். இந்தக் காலத்தில் ஆசிரியராக வருபவர்கள் யாரென்று தெரியுமா? படிக்கும் காலத்தில் படிப்பில் நாட்டமில்லாமல் ஏனோ தானோவென்று கடமைக்கு பட்டப் படிப்பு முடித்தவர்கள்தான்…இதனால் மாணவர்களின் நிலை என்ன தெரியுமா? படிப்பில் சரியான நாட்டமில்லாமல்,போதிய தகுதியில்லாமல் வேலை கிடைப்பதற்கு அல்லல் படும் நிலைதான்!

“பெண்கள் படித்தால் மட்டுமே அந்தக் கல்வி அவர்களின் பிள்ளைகளை சென்றடையும்”

இதன் விளைவுகளை சற்று பார்ப்போமா?

பாடல், நாடகம், சினிமா பார்ப்பதில் மூழ்கிவிடும் பெண்கள், தங்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்த தவறிவிடுகிறார்கள், தொழுகையை பிற்படுத்திவிடுகிறார்கள் அல்லது தொழுகையை அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான்!

சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதனை பெற்றோர்களுடன் சேர்ந்து பிள்ளைகளும் பார்க்கின்றனர், இப்படி இருக்கும் சூழலில் சொல்லவா வேணும்? இதனைப் பார்க்கும் இந்த பிஞ்சுகள், அதே போன்று பாடுவதற்கும் நடனம் ஆடுவதற்க்கும் கற்றுக் கொள்கிறார்கள், இதில் எங்கே பள்ளி பாடம் படிப்பது? மார்க்கம் படிப்பது? தங்களின் பிள்ளைகள் பாடுவதையும் ஆடுவதையும் காணும் பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பவர்களாக இருக்கிறார்களா? இல்லவே இல்லை அதனை ரசிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

தங்களை தவ்ஹீத் வாதிகளென்று சொல்லிக் கொள்வோர் இந்தக் காலத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். நம்மால் சொல்ல இயலுமா நமது இஸ்லாமிய மார்க்கம் தடை செய்த இசையை இவர்களெல்லாம் கேட்க மாட்டார்களென்று? இவர்களின் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி தான் இல்லாமலிருக்குமா? எந்த முஸ்லிமிடம் கேட்டாலும் தெரியும் இசை ஹராமென்று!!!

அல்லாஹ் நம்மை படைத்ததன் நோக்கம் இதுதானா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித்தான் நம்மை வாழச் சொன்னார்களா? 

“நாம் தொழுபவர்களாக இருக்கின்றோம்,நோன்பு நோர்ப்பவர்களாக இருக்கின்றோம்,மேலும் நம் மீது கடமையாக்கப் பட்ட எல்லாவற்றையும் செய்கின்றோம்…மேல் கூறப்பட்ட, நமது மார்க்கத்திற்கு எதிரானவைகளை ஏன் தூக்கி எரியக் கூடாது?”

பரிசுத்தமான மார்க்கத்தில் அசுத்தங்களை கலக்காதீர்கள்!!!

அப்துர் ரஹீம் ஜமீல்

56 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

\\பரிசுத்தமான மார்க்கத்தில் அசுத்தங்களை கலக்காதீர்கள்!!!\\

மார்க்கம் என்பது வாழ்க்கை நெறிமுறை; வாழ்க்கை நெறிமுறை என்பதே மார்க்கம் என்பதை உண்மையில் உணர்ந்துவிட்டால் உலகம் எவ்வளவு அழகாக- அமைதியாக இருக்கும் என்பதை எண்ணியதும், இற்றைப் பொழுதில் தலைகீழாக இருப்பதும் கண்டு கோபம் கொப்பளிக்க உங்களின் இறுதி வரிகள் அமைகின்றன.

பதிவர் புதியவரா? அப்படி ஒன்றும் தெரியவில்லையே?! தமிழ்க்குடிலில் பிறந்து வளர்ந்த இவரின் தமிழும் அருமை; மார்க்கம் போதிக்கும் தந்தையின் வழிகாட்டுதல் ஆக்கம் காட்டி நிற்கும் சான்று!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தமிழும் தொகுப்பும் நம்பர் 1
வாழ்த்துக்கள் வளர்க தந்தை வழியில்!

sabeer.abushahruk said...

வருக வருக!
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதி அழகு அவர்களின் மகனே வருக!
அற்புத ஆக்கங்கள் தருக!

(அ.நி.: இந்தப் பதிவின் ஆசிரியர் தொலைக்காட்சிப் பெட்டியே வேண்டாம் என்கிறார் (வளர்ப்பு அப்படி). நீங்களோ பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுபோல் பழைய ட்டிவிப் பெட்டி ஒன்றைப் புகைப்படத்தில் தூக்கி வீசிக் கடாசி இருக்கிறீர்கள். அப்படீன்னா, எல் ஸி டி/ எல் ஈ டி ஓக்கேயா?:-)

அப்துர்ரஹீமுக்கும் அபுநூராவுக்கும் ஒரு கேள்வி:

நன்மையக் கொண்டே தீமையைத்தடுக்க வேண்டும், மாற்றுக்கருத்தில்லை.

ட்டிவீ தீமையெனில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ட்டிவியில் வருவதால், அதை ட்டிவி வேண்டாம் என்போறாகிய தாங்கள் பார்ப்பதில்லையா?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கேள்வி கேட்கும் அளவிற்கு ஞானம் இல்லாததால் எங்கள் கவிகாக்கா கேட்ட கேள்விகளையே நானும் கேட்டுவைக்கிறேன்.
நன்மையக் கொண்டே தீமையைத்தடுக்க வேண்டும், மாற்றுக்கருத்தில்லை.

ட்டிவீ தீமையெனில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ட்டிவியில் வருவதால், அதை ட்டிவி வேண்டாம் என்போறாகிய தாங்கள் பார்ப்பதில்லையா?

Abu Easa said...

தம்பி அப்துர் ரஹீம் ஜமீல் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி.

தொ(ல்)லைக் காட்சி என்பது இன்றைய இன்றைய சமூகப் பிரச்சனை. எடுத்துகொண்ட விசயத்தை எளிமையாகயும் தெளிவாகவும் விளக்கியமைக்கு நன்றி.

Jazakallahu Khairan

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், நல்ல சிந்தனை தூண்டும் ஆக்கம் தம்பி அப்துல் ரஹீம் ஜமீல்.

டிவியை முழுமையாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பது சினிமாவும், சீரழிக்கும் தொடர் நாடகங்களும், சினிமா பாடல்களும், இசை போதையை சுமந்துவரும் நிகழ்ச்சிகளும் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்காது.

சினிமா, இசை இல்லாத நிகழ்ச்சிகள் மட்டும் தான் எங்கள் வீடுகளில் 100% ஒலிஒளிப்பாகிறது என்று சொல்லும் இஸ்லாமிய அன்பர்கள் எத்தனை சதவீதம்?

இஸலாமிய நெறிகளுக்கு உட்பட்ட சுய கட்டுப்பாடுகளுக்கு ஆபத்துவிளைவிக்கும் எந்த ஒரு விசயங்களிலிந்து விளகி நிற்பதால் மட்டுமே மறுவுலகில் வெற்றி கிட்டும். இன்ஷா அல்லாஹ்.

டம்லரிலுள்ள பாலில் ஒரு துளி விசம் இருந்தாலும், பாலை குடிக்க மறுக்கிறோம் பிறர்க்கு விருந்தாக கொடுப்பதில்லை.

டம்லரிலுள்ள விசத்தில் ஒரு துளி பால் இருப்பதற்காக அந்த டம்லரை வீட்டின் விருந்தில் வைப்பது சரியா?

Unknown said...

//அப்துர்ரஹீமுக்கும் அபுநூராவுக்கும் ஒரு கேள்வி:

நன்மையக் கொண்டே தீமையைத்தடுக்க வேண்டும், மாற்றுக்கருத்தில்லை.

ட்டிவீ தீமையெனில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ட்டிவியில் வருவதால், அதை ட்டிவி வேண்டாம் என்போறாகிய தாங்கள் பார்ப்பதில்லையா?//

எல்லாவற்றுக்கும் ஒரு பொதுவான அளவுகோல் உண்டு. அதை வைத்தே எந்த ஒன்றும் தேவையா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். அந்த அளவுகோல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதே. அதுதான்

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுல் மிகை நாடி மிக்க கொளல்"

நன்மை/தீமை இரண்டையும் பகுத்துப் பார்த்து வேண்டும்/வேண்டாம் என்பதை முடிவுசெய்துகொள்ளலாம். அதனடிப்படையில் என்றோ ஒரு நாள் அல்லது தினமும் ஒரு நாளின் ஒரு பகுதில் இஸ்லாமிய நிகழ்சிகள் ஒளிபரப்படுகிறது என்பதற்காக முழு நேரமும் சைத்தானில் முதுகில் சுமப்பது சரியன்றோ.

மேலும் அந்த சைத்தான் நம்முடைய கட்டுக்குள்ளிருந்தால் குற்றமில்லை. ஆனால் யதார்த்தம் நாமல்லவோ கட்டுப்பட்டுவிடுகிறோம்.

எனவே தவிர்ப்பதே சிறந்தது என்பதே என் கருத்து.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

அன்புடன்
அபு நூரா

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

நல்ல ஆக்கம் பாராட்டுக்கள் கணவனுக்கு உணவிடாமல் நண்பர்களிடம் அரட்டையடிக்கும் பெண்ணை பார்த்து [சீரியலில்]பெண்ணா அவள் என்று ஏசும் இவள் அந்த சீரியலில் மூழ்கி தன் கணவருக்கு உணவு பரிமாறாமல் இருக்கும் பெண்கள் இங்கு ஏராளம்.

மார்க்கப்பிரச்சாரம் எனும் போர்வையில் CD விற்பனையாளர்கள் இசுலாமியர்களின் வீட்டிர்க்குல்ளே TV வர காரணமாய் ஆகிவிட்டார் முதலில் உங்கள் CD விற்பனையை விடுங்கள் TVஐ பொது மக்களிடம் விடச்சொல்வோம்.

10th பரிச்சை வந்தால் சிலர் வீடுகளில் பரண் ஏறுகிறது டிவி பெட்டி நாம் அனைவரும் பரிச்சை எழுதத்தான் இவ்வுலகில் வந்தோமேன்பதை மறந்துவிட்டோம்

ஒரு காலம் உண்டு ரமளானில் TVக்கு மூடுவிழா இன்றோ ஆலிம்களின் அணிவருசை சகர் நேர விழாவாக

sabeer.abushahruk said...

//டம்லரிலுள்ள பாலில் ஒரு துளி விசம் இருந்தாலும், பாலை குடிக்க மறுக்கிறோம் பிறர்க்கு விருந்தாக கொடுப்பதில்லை. //

சர்தான். ஆரம்பிச்சாச்சா உதாரணங்களை?

முதலில், என் கேள்விக்கு பதில். பிறகு உதாரணங்கள். சரியா? 

இ.ஓ.இ.மா பார்ப்பதுண்டா இல்லையா?

பாலு விஷமெல்லாம் இப்ப எதுக்கு தாஜுதீன்?

கல் கிடக்கிறதே என்று சோறு ஆக்காமல் இருப்போமா?

புள்ளும் விளையுதே என்று நெல் விளைக்காமல் இருப்போமா?

இவ்ளோவ் ஏன்? போற வழியிலே அசிங்கமான போஸ்ட்டர் ஒட்டியிருக்கானே என்று கண்களை குருடாக்கிடுவோமா?

எங்க வீட்டில ட்டிவி இருக்கு. என் பிள்ளைகள் நேஷனல் ஜியோகிராஃபியைத்தான் விரும்பிப் பார்த்துட்டு கேள்வி கேட்கிறதுகள். நிறுத்திடவா?

நல்லதை எடுத்து அல்லதை விடுக்க பழக்குவதன் மூலமே நாம் நம் வம்சாவழிக்கு வாழக் கற்றுக்கொடுக்கிறோம் என்று அர்த்தம்.

ஓதித்தரும் பள்ளிகளே குட்டை போட்டுவிடுகிற பழக்கத்தை விட்டு நாளாச்சு தம்பிகளா.

(பி.கு.: நாம் சஹாபாக்கள் காலத்தில் இல்லை என்பது எதார்த்தம். ஊடகங்களைவிட தற்போது ஒட்டகப்க்களின் எண்ணிக்கை குறைவு என்பதும் ஞாபகம் இரிஉக்கட்டும்)

Yasir said...

தம்பி அப்துர் ரஹீம் ஜமீல் அவர்களின் சமுதாயக் கவலை ஏக்கம், ஆக்கமாக வந்து இருக்கின்றது,நல்ல சிந்தனை...வாழ்த்துக்கள் தொடருங்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சபீர் காக்கா,

இங்கு நான் குறிப்பிட்டடுள்ளது பொதுவானவை. நீங்கள் குறிப்பிடுவது போல் நேசனல் ஜியோகிராபிக் போன்ற அறிவு சார்ந்த சேனல்கள் பார்க்கும் விடுகள் எத்தனை?

சினிமா, சீரியல், இசை, நடனம் போன்றவைகள் 95% அனைத்து டிவி சேனல்களையும், ஏன் செய்தி சேனல்களையும் ஆதிக்கம் செலுத்துவதை மறுக்க முடியுமா?

அதற்காகத்தான் பால், விசம் உதாரணம் காக்கா.

கண்ரோல்ட் அட்மாஸ்பியர் எல்லா விட்டிலும் இல்லையே காக்கா.

Yasir said...

தொலைக்காட்சியை தொலைத்துக் கட்ட வேண்டும் என்பது ஒரு சிறப்பான அறிவுரைக்கிடையாது...எந்தப் பொருளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவைக்குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் எத்தி வைப்பதில்தான் நாம் பெரும்பாலும் தவறவிடுகின்றோம்...என் வீட்டில் டிவி உணடு அதில் சேனல்களும் உண்டு ,ஆனால் எங்கள் குழந்தைகளும் சரி,இல்லத்தரசியும் சரி சில அனிமல்/கார்டன் சேனல்களைத் தவிர மற்றவற்றை பார்த்தது கிடையாது...படம் பாட்டு என்றால் எத்தனை கிலோ என்று என் குழந்தகைள் கேட்கும்..தீங்கையும்-அதனால் வரும் பாவங்களையும், இறைபயத்தையும் மனதில் உண்டாக்கிவிட்டால் ,அதனை தேவைப்படும்பொழுது மட்டும் பயன்படுத்தும்பழக்கத்தை குழந்தைகளும் மற்றவர்களும் கற்றுக்கொண்டு விடுவார்கள்...மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்த வேண்டும் என்று சொன்னால்...சிக்கிமுக்கி கற்காலத்திற்க்குதான் போக வேண்டும்...டிவியைவிட சிரழிவை உண்டாக்கி கொண்டு இருக்கும் கணிப்பொறியை என்ன செய்வது....தனிநபர் ஒழுக்கமும் .மனக்கட்டுப்பாடும் இருப்பவர்கள் எதனையும் அளவோடு அல்லாஹ்விற்க்கு பயந்து செய்வார்கள்...அதனை வளர்க்கும்போது ஊட்டுவது நம் கடமை

Yasir said...

//கண்ரோல்ட் அட்மாஸ்பியர் எல்லா விட்டிலும் இல்லையே காக்கா.// சகோ.தாஜ்...பேஸ்மெண்டை வீக்காக கட்டிவிட்டு கண்டுபிடிப்புகளை குறை சொல்வது தப்பில்லையா ? ..கண்டுபிடிப்புகள் மாறும்..ஆனால் போட்ட அடித்தளம் எந்த சூழ்நிலையிலும் மாறாது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோ யாசிர், பேஸ்மென்டை வீக் பண்ணியதில் முக்கிய பங்கு டிவிக்கு இருக்கு என்பதை ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.. உதரணங்கள் வேண்டுமா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நாம் ஐவேளை தொழுகை மட்டும் தான் இறைவணக்கம் என்ற குறிகிய சிந்தனைக்கு நிறைய ஈமாந்தாரிகளின் நேரத்தை திண்ற சாதனை டீவிக்கு இருக்கின்றது என்பது எதார்த்தம். 24 மணிநேரத்தில் சுன்னத்தான இபாத்தத்துக்கள் செய்ய பல வழிமுறைகள் இருக்கும் போது, சுன்னத்தான தொழுகைகளை சின்னத்திரை சீரியல்களுக்காக தியாகம் செய்த தாய்மார்கள் எத்தனையோ..

Unknown said...

சபீர் காக்கா / யாசிர் / மற்றும் TV ஆதரவாளர்களுக்கு,

மேற்சொன்ன என் கருத்தில் உங்களின் நிலை என்ன?

sabeer.abushahruk said...

தாஜுதீன்,

//சகோ யாசிர், பேஸ்மென்டை வீக் பண்ணியதில் முக்கிய பங்கு டிவிக்கு இருக்கு என்பதை ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.. உதரணங்கள் வேண்டுமா?//

மட்டுமல்ல. இணையத்திற்கு பலமடங்கு பங்குண்டு (போர்னோ), அலைபேசிக்கும்தான், ஆனந்தவிகடனுக்கும்தான் (நடிகைகள்), குமுதத்திற்கும்தான் (அட்டைப்படம்), நக்கீரனுக்கும்தான் (சினிக்கூத்து) ஏன், தினத்தந்திக்கும்தான் (திரை மலர்?) 

இப்ப நான் வெளியகரைய போகவா அல்லது ஒரு கூண்டு செய்து உள்ளேயே ஃபர்லு சுன்னத்தோடு முடங்கவா?

ஆதம் அலைஹிவஸ்ஸல்லமே தடுக்கப்பட்ட கனியை உண்ணும் பலகீன மனிதராகத்தான் படைக்கப்பட்டிருக்க நம் நிலை என்ன என்று பாசாங்கு இல்லாமல் யாராவது சொல்ல முடியும்னா சொல்லுங்களேன்.


நானும் யாசிரும் யதார்த்தம் பேசுகிறோம். நீங்கள் ஐடியலிஸம் பேசுகிறீர்கள்

உங்கள் பேச்சைக் கேட்டு நான் ட்டிவியை எடுத்துட்டா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலையிலிருந்தே மக்கா லைவ் பார்க்க முடியாது. 

அப்படி ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதையும் ட்டிவி வழியாகவே சொல்வதில் என்ன தவறு.

நவீன கண்டுபிடிப்புகளை ஆக்கபூர்வமாக, ஹலாலான முறையில் உப்யோகிக்க வழி சொல்வதே சிறப்பு.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

Since the 'internet' multi media (larger than TV) is having a lot of archived(recorded) serials(Tamil and other international, regional) and videos and websites of different 'good and bad' categories etc.

Games of different kinds played by all age groups. Using facebook, blogs in unproductive manner thus wasting most of the time checking/watching.

Since there are a lot of bad stuff in "internet unversal multi media", how about avoid using internet or computer at all.?


Thanks and best regards,


B. Ahamed Ameen from Dubai.

http://www.dubaibuyer.blogspot.com


Yasir said...

//சின்னத்திரை சீரியல்களுக்காக தியாகம் செய்த தாய்மார்கள் // அந்த தாய்மார்களுக்கு தொழுகையை தியாகம் :) செய்யும் ( நவுதுபில்லாஹ்) அளவிற்க்கு போவதற்க்கு வீக்கான பேஸ்மேண்டை போட்டது யாரு ?? ...வீட்டில் உள்ளவர்களை நாம் தான் கண்ரோல் செய்ய வேண்டும்...ரீமோட்டை தொலைத்துவிட்டு கண்டுபிடிப்புக்களை சாடுவது நியாமா ? இன்று இஸ்லாத்தை எத்தி வைப்பதற்க்கும் / பல நல்ல விசயங்களை தெரிந்து கொள்வதற்க்கும் பயன்படுவதற்க்கும் தொலைக்காட்சி பயன்படுகின்றது என்பதை மறுக்க முடியாது...அதனைவிட்டு கண்டுபிடிப்புக்களை சாடுவது...கனியிருப்ப காய் கவர்ந்தற்று போன்றதாகும்

Yasir said...


//சபீர் காக்கா / யாசிர் / மற்றும் TV ஆதரவாளர்களுக்கு,

மேற்சொன்ன என் கருத்தில் உங்களின் நிலை என்ன?//
சகோ அபு நூரா...அஸ்ஸலாமு அலைக்கும்

//யதார்த்தம் நாமல்லவோ கட்டுப்பட்டுவிடுகிறோம்//

நாம் நம் உள்ளத்தையும் / உணர்ச்சிகளையும் பல விதத்தில் /பல வகையில் கட்டுப்படுத்தி வருகின்றோம்...அதனைதான் இஸ்லாமும் சொல்கின்றது...நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் மனத்தை ஒரு காரியத்திலேயே லயித்துவிடால் கட்டுபாடாக வைத்து இருக்க பழக்க வேண்டும் / பழகி கொடுக்க வேண்டும்.....அப்படியில்லை யென்றால் டிவி மட்டுமல்ல இன்னும் பல விசயங்களை நாம் தூர எறிய வேண்டி வரும்...அது நடைமுறைக்கு ஒத்து வராது அப்படி வந்தாலும் அது நீண்ட நாள் நிலைக்காது.......

Yasir said...

சகோ.அபு நூரா //TV ஆதரவாளர்களுக்கு//
நாங்கள் எதற்க்கும் ஆதரவோ எதிர்ப்போ கிடையாது எதார்த்தைப் புரிந்து கொண்டு எதற்க்கும் அடிமையாகமல் நடக்க வேண்டும் என்பதுதான் என் அவா

உங்களின் மேலதிக தகவல்களுக்கு நான் என்வாழ்வில் டிவி பார்த்த நேரம் இரண்டு நாட்களுக்கும் குறைவாக இருக்கும் அந்த அளவிற்க்கு கட்டுப்பாடு எனக்கும் உண்டும் என் வீட்டிலும் அதனை திணித்து/ பழக்கியும் உள்ளேன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்றைய சூழலில் முழுமையாக ஒழிக்கச் சொல்வது அக்காலத்தில் ஆங்கிலத்தையே புறக்கணித்ததுக்கு சமமாகும். இதில் டீவி, கம்யூட்டர், லேப்டாப், எல்.சி.டி,- எல்,ஈ.டி,- நவீன செல் போன், எதுவானாலும் சரி. எதிலும் கட்டுப்பாடு வேண்டும். இல்லையேல் நாம் பிற்காலத்தில் வேறு விசயங்களிலும் பின் தங்கி இருப்பதாக ஒரு கமிட்டி அறிக்கை சொல்லும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

என்னுடைய கருத்து, அனைத்து எல்லைகளுக்குள் இருந்தால் நலம்.

ஆனால் மைனாரிட்டி எண்ணிக்கையிலான இஸ்லாமிய வீடுகளில் கட்டுபாடு சபீர் காக்கா, நண்பர் யாசிர், மச்சான் ஜஹபர் சாதிக் சொல்லுவது போல் இருக்கலாம். இது exceptionalகவே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மெஜாரிட்டி எண்ணிக்கையிலான இஸ்லாமிய வீடுகளில் அப்படி இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.

ஜியோகிராப்பிக் சேனாலும், மக்கா சேனலும், செய்தி சேனல்களும் மட்டும் யார் தருகிறார்கள். இதெல்லாம் optional சேனல்களாகவே உள்ளது. கட்டாயம் திணிக்கப்படுவது சைத்தானியதனமானவைகளே...

நண்பர் யாசிர் கருத்துடன் நான் மாறுபடுகிறேன். இணையத்தில் கட்டுப்பாடுகள் நாம் விதித்து பயன்படுத்தலாம். விட்டில் உள்ள கணினியின் உபயோகத்தை கண்கானிக்கும் வாய்ப்பு வீட்டில் இருக்கும் டிவியை விட பல மடங்கு அதிகம் என்பதை நான் உங்கள் சொல்ல வேண்டியதில்லை தானே..

நம்முடைய கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்றுவதற்கு ஏற்ற தொழில்நுட்பத்தை தேடுவதே சிறந்தது. அவ்வகையில் பார்த்தான் டிஸ் ஆண்டனாவுடன் வரும் டிவியைவிட நம்முடைய கட்டுப்பாட்டை முழுமையாக செயல்படுத்த, கண்கானிக்க தகுதியானது இணையம், இதில் நாம் நன்மையான, அறிவு சார்ந்த தேடல்களுக்கு பயன்படுத்தலாம்.

//இப்ப நான் வெளியகரைய போகவா அல்லது ஒரு கூண்டு செய்து உள்ளேயே ஃபர்லு சுன்னத்தோடு முடங்கவா?//

டீவியை தூக்கி எறிவதால், கூண்டு செய்து ஃபர்ளு சுன்னத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற நிலை எல்லாம் வராது காக்கா. மாற்று வழிகளை அல்லாஹ் காண்பித்து தருவான். கொஞ்சம் ரிஸ்க் எடுத்துப் பார்க்கலாமே..

நான் சுட்டிக்காட்டியது இன்றைய காலகட்டத்தில் அதிகம் டிவி நம்முடை இபாத்துக்களுக்கு பாதிப்பு என்பதே. குழுதம், முத்தாரம் ஆனந்த விகடனின் மட்டும் நடுப்பக்க அட்டப்படங்களை நம்பி வந்த பத்திரிக்கைகளும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. நல்ல அருமையான ஹதீத் ஒரு பக்கத்தில் குமுத்தில் போடுகிறார்கள் என்பதற்காக குமுதத்தை வாங்கி அந்த பக்கத்தை மட்டுமா நாம் படிப்போம். அது போலவே இன்றை டிவி சேனல்களின் நிலை.

டிவி சேனல்களால் மட்டும் தான் அறிவு வளர்கிறது என்ற கருத்துருவாக்கம் ஏற்கமுடியாதது. டிஸ், கேபில் இல்லாமல் டிவியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த மறுத்தது நம் தவறு.

Unknown said...

யதார்தம் என்பது பெரும்பான்மை சம்பந்தப்பட்டது என்பதே நான் அறிந்தது. அந்த அடிப்படையிலேயே என் கருத்தும்.

தயவு செய்து எங்கள் வீட்டில் இருக்கு/இல்லை என்பதற்காக கருத்துச் சொல்வதைத் தவிர்து பெரும்பான்மை நிலை உணர்ந்து கருத்துச் சொல்லல் நலம். ஏனெனில் இதுபோன்ற கட்டுரைகள் பெரும்பான்மை நிலை எண்ணியே எழுதப்படுகிறது.

மேலும் TV & இணையதளம் இரண்டும் சமமன்று. இணையதளத்தை நாள் முழுக்க நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் TV அவ்வாறன்று.

நாங்கள் சேனல் மாற்றுவோம் அல்லது அனைத்துப் போடுவோம் என்று யாரும் தயவு செய்து கருத்துச் சொல்ல வேண்டாம்.

மேலும் ஆங்கிலம் தவிர்த்ததும் TV தவிர்ப்பதும் சமமன்று

பிடிவாதம்..
நேரம் கொல்லும்
புரிந்து நடந்தால்...
நோக்கம் வெல்லும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது… இன்றைய சூழலில் முழுமையாக ஒழிக்கச் சொல்வது அக்காலத்தில் ஆங்கிலத்தையே புறக்கணித்ததுக்கு சமமாகும். இதில் டீவி, கம்யூட்டர், லேப்டாப், எல்.சி.டி,- எல்,ஈ.டி,- நவீன செல் போன், எதுவானாலும் சரி. எதிலும் கட்டுப்பாடு வேண்டும். இல்லையேல் நாம் பிற்காலத்தில் வேறு விசயங்களிலும் பின் தங்கி இருப்பதாக ஒரு கமிட்டி அறிக்கை சொல்லும்.//

மாற்று வழியை நாம் கண்டறிய முற்பட்டால் சாத்தியம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//மாற்று வழியை நாம் கண்டறிய முற்பட்டால் சாத்தியம்.//

உலகை அறிய அதன் மூலமும் நாம் வளர்ச்சி அடைய மாற்று வழி என்பது கட்டுபாடு மற்றும் எல்லை மீறாமையா அல்லது வேறு எதுவும் உண்டா?

Yasir said...

சகோ தாஜூதீன்....டிவியைக் கட்டுபடுத்தவும் பல தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டன..ஆனால் அதனைக் கட்டுபடுத்தபவரை கண்ரோல் செய்ய தொழிற்நுட்பங்கள் இன்னும் வரவில்லை வரவும் செய்யாது..அதனைக் நீங்கள் நினைத்தால்,சரியாக”இறை” பயம் உங்களுக்கு ஊட்டப்பட்டால் ,பாவம் எது என்று உங்களுக்கு காட்டப்பட்டால் மட்டுமே முடியும்...தொழிற்நுட்பங்கள் மாறலாம் ஆனால் இச்சைக்க கட்டுப்படுத்தும் “ஈமானின்” வலு என்றுமே மாறாது,அதனை நம் வீடுகளில் உறுதியாக்க முயல்வோம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது… உலகை அறிய அதன் மூலமும் நாம் வளர்ச்சி அடைய மாற்று வழி என்பது கட்டுபாடு மற்றும் எல்லை மீறாமையா அல்லது வேறு எதுவும் உண்டா?//

நம்முடைய கட்டுப்பட்டை எளிதில் முறியடிக்கும் நிலை ட்டிவியிடம் உள்ளது என்பதால், மாற்று வழியை பற்றி சொன்னேன்.

நன்மை அதிகம் உள்ள இடத்தில் தீமை இருக்கத்தான் செய்கிறது, அதற்கும் கட்டுப்பாடு தேவை இருக்கும் நிலை இருக்கும் போது, தீமை அதிகம் இருக்கு இடைத்தில் கொஞ்சம் நன்மை இருக்கிறது என்பதற்காக சாத்தியப்படுத்த முயல்வது சீர்கேடுகளுக்கு எப்படியாவது வழி திறந்துவிடுகிறது என்பது என் கருத்து. இது தான் எதார்த்தம்.. இதில் ஒரு சிலர் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம்.

Yasir said...

//Abu Noorah சொன்னது…// சகோ.அபு நூரா ....இங்கு என்னமோ....டிவி தன்னாக நடந்து வந்து நம் வீட்டில் அமர்ந்து கொண்டு ...கெட்டுவிடு, கெட்டுவிடு என்று சொல்வது போலவும் நாம் மக்கள் கெட்டுக்கொண்டிருப்பது போலவும் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்...அவ்வாறன்று நாம்தான் டிவியை வாங்கினோம்...நாம் தான் சேனல்களை தருவித்தோம்...அவ்வாறு இருக்கையில்...டிவி நம்மை கெடுக்கவில்லை அதனை பயன்படுத்தும் மக்களின் மனம் அடிமையாகி கிடக்கின்றது,அதனைதான் மாற்ற வேண்டும்...நெருப்பு சுடும் என்று சொல்லி வளர்ப்பதுதான் அழகு......சீரியல்களை மட்டும் காரணம் காட்டி தொலைக்காட்சி தவறு என்றால் அது நகைப்புக்குறியது...ஒன்று மட்டும் சொல்லி முடிக்கின்றேன்....இன்னும் கியாமத் நாள் வரையிலும் கண்டுபிடிப்புகளும்,புதிய சாதனங்களும் வந்து கொண்டுதான் இருக்கும் அதில் நன்மைகளும் தீமைகளும் அடங்கியிருக்கும்..ஆனால் எல்லாவற்றிற்க்கும் “ இஸ்லாமிய வரைமுறை” என்ற ஒன்றை வகுத்துக்கொண்டு வீறு நடைபோடுவது நமக்கும் நம் குடும்பத்திற்க்கும் சமுதாயத்திற்க்கும் பலனிளிக்கும் இல்லையென்றால்,பின் தங்கிய நம்மைப்பார்த்து மற்றவர்கள் பல்லிலிக்கும் நிலைமை ஏற்படும்

Yasir said...

//நம்முடைய கட்டுப்பட்டை எளிதில் முறியடிக்கும் நிலை ட்டிவியிடம் உள்ளது என்பதால், மாற்று வழியை பற்றி சொன்னேன்// நம் கட்டுப்பாட்டை எளிதாக முறியடிக்கும் பல விசயங்கள் நம்மைச் சுற்றி இருக்கும்போது....டிவி என்பது ஜுஜுபி சகோ.தாஜூதீன்...”கட்டுப்பாட்டை”க் காட்டிக்கொடுங்கள் ..சீரியல்களைப் பார்த்து சீர்கெடும் கூட்டங்கள் குறையும்

sabeer.abushahruk said...

எவன் எவனோ திணிக்கிறான் என்கிறீர்கள். அந்த எவன் எவனாகவோ நாமிருக்க முயல்வதே புத்திசாலித்தனம்.

தெருமுனைப் பிரச்சாரம் என்கிறோம்; ட்டிவியைக்கொண்டு நடு வீட்டிலேயேப் பிரச்சாரம் செய்யலாமே.

தற்போது தொலைக்காட்சிகளில் எப்போதாவது வரும் நல்ல விஷயங்களை எப்போதும் வரச்செய்வதே சமூக சேவை.

தாஜுதீனின் இணையம் பாதுகாப்பானது என்னும் கருத்து காதுல பூ.:-)

Yasir said...

//தாஜுதீனின் இணையம் பாதுகாப்பானது என்னும் கருத்து// டிவியைவிட இணையம் விஷ(ய)ம் நிறைந்தது...கவனம் கூடுதாலாக இணையத்தில்தான் செலுத்தபட வேண்டும்...ஏனென்றால் வருங்கால தலைமுறை பல வழிகளில் தவறாக நடத்தப்பட்டு கொண்டு இருக்கின்றது இணையம் மூலம்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தாஜுதீனின் இணையம் பாதுகாப்பானது என்னும் கருத்து காதுல பூ.:-)//

//டிவியைவிட இணையம் விஷ(ய)ம் நிறைந்தது...கவனம் கூடுதாலாக இணையத்தில்தான் செலுத்தபட வேண்டும்...ஏனென்றால் வருங்கால தலைமுறை பல வழிகளில் தவறாக நடத்தப்பட்டு கொண்டு இருக்கின்றது இணையம் மூலம்..//

கணினியுடன் இணையம் வைத்திருப்பவர், 24 மணிநேரத்தில், 1 வாரத்தில், 1 மாதத்தில், 1 வருடத்தில் என்ன பார்த்தார் என்பதை எளிதில் அறிந்துக்கொள்ளும் வசதியுள்ளது. மேலும் நமக்கு தேவைப்படுபவைகளை மட்டும் பார்வையிடும் வசதியை நாம் ஏற்படுத்தி கட்டுபாடு விதித்துக்கொள்ளலாம்.

Yasir said...

//என்ன பார்த்தார் என்பதை எளிதில் அறிந்துக்கொள்ளும் வசதியுள்ளது./ சகோ.தாஜூதீன் இதனைவிட அல்லாஹ் நாம் வாழும் காலம் முழுவதும் நாம் என்ன செய்தோம் என்பதைப் ஒவ்வொன்றாக பார்ப்பான் என்ற நம்பிக்கையை /பயத்தை விதைப்பதே எந்தப்பொருளும் நம்மை ஆட்கொள்ள செய்ய முடியாதபடி செய்யும்..மற்றவையெல்லாம் நிரந்தரக் கட்டுப்பாடு இல்லை...சமுகம் கிளம்புது...பின்னர் சந்திப்போம்..மா சலாமா

sabeer.abushahruk said...

தாஜுதீன்,

சில ஒப்பீடுகள்:

01)இணையத்தை யாரும் யாருக்கும் தெரியாமல் தனித்து ஒளித்துப் பார்க்கலாம். உங்களைப்போன்ற ஸ்மார்ட் கணினியாட்களால் என்ன பார்க்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமெனில், அதைப் பார்த்துவிட்டு எப்படி ஹிஸ்டரி இல்லாமல் செய்வது என்பதறிந்த ஸ்மார்ட் ஆட்களும் உள்ளனர். ஆனால், எந்த சூழலிலும் நடு வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் ஒளித்தெல்லாம் பார்ப்பது சுலபமல்ல.

02) ஆபாசத்தின் உச்சமான pornographic contents இணையத்தில் மட்டுமே கொட்டிக் கிடக்கிறது. நாம் கேட்காவிட்டாலும் எப்படியாவது ஒரு flashலாவது காட்டி மறைகிறது. எந்த உருப்படாத ட்டிவி சேனல்கூட போர்னோ காட்டுவதில்லை.

03) ரிமோட் உஙகள் கையில் இருக்கிறது.வேண்டாத சேனல்களை லாக் செய்திடலாம். நீங்கள் விரும்பும் விஷயத்தை மட்டுமே பார்க்கவும் பார்க்க வைக்கவும் உங்களால் முடியும். இணையத்தின் கட்டுப்பாடு உங்களுக்கு மட்டுமே உங்கள் கையில் உள்ளது.

04) நேர விரயம் எனபது எதைப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உ.: கோபிநாத்தின் நீயா நானா, பெரிதிலும் பெரிது கேள், என் தேசம் என் மக்கள், செய்திகள் (தற்போது தாஜுதீனே அ.நியில் வாசிக்கிறார்), எனக்குப் பிடித்த விளையாட்டுகள், தமிழ் பேசு தங்கக் காசு. போன்றவற்றைப் பார்க்கும்போது எனக்கு நேர விரயம் ஆவதில்லை. இணையத்தில் என் மெயில் பாக்ஸில் வந்து விழும் ஜங்க் மெயில்களைக் களைவதில் எனக்கு நேர விரயம் ஆகிறது.

தீர்வாக, யாசிர் சொன்னதுதான்.

//இன்னும் கியாமத் நாள் வரையிலும் கண்டுபிடிப்புகளும்,புதிய சாதனங்களும் வந்து கொண்டுதான் இருக்கும் அதில் நன்மைகளும் தீமைகளும் அடங்கியிருக்கும்..ஆனால் எல்லாவற்றிற்க்கும் “ இஸ்லாமிய வரைமுறை” என்ற ஒன்றை வகுத்துக்கொண்டு வீறு நடைபோடுவது நமக்கும் நம் குடும்பத்திற்க்கும் சமுதாயத்திற்க்கும் பலனிளிக்கும் இல்லையென்றால்,பின் தங்கிய நம்மைப்பார்த்து மற்றவர்கள் பல்லிலிக்கும் நிலைமை ஏற்படும்//

தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

(பி.கு.: எதிர் வாதம் செய்வது பிடிவாதம் ஆகாது, அபு நூரா)

Unknown said...

இது வரை என் முதல் கருத்துக்கு பதில் இல்லை. அதில் எதார்த்தத்தை சொல்லி இருப்பதாக நினைக்கிறேன்.
ஆனால் கருத்தாடல் திசை மாறி நீயா/நானா (TV/INTERNET) என்று போய்கொன்டிருக்கிறது.

மேலும் தாஜுதீன் சொன்ன உதாரனங்களை பிடித்துக்கொன்டு எதிர் உதாரனம் சொல்வது சரியல்ல. காரனம் உதாரனங்கள் உண்மையள்ள, புரிதலுக்காகவே.

என் முதல் கருத்துக்கு தாங்களும் உடன்பட்டால் மேலதிக வாதம் தேவையிருக்காது என நம்புகிறேன்.

என்வே இது பிடிவாதமா அல்லது எதிர்வாதமா?

sabeer.abushahruk said...

அபு நூரா,

வுட மாட்டீங்களா? பையன் ஹோம் ஓர்க் சொல்லிக் கேட்கிறான். சரி முதல்ல உங்களுக்கு பதில் சொல்லிட்டு பிறகு அவனுக்கு.

இப்ப என்னா? உங்கள் கேள்விக்கு பதில் சொல்லனும். சொல்லிடலாம் (ஒரு ச்சின்ன மேட்டரு. நீங்கள் கேள்வி கேட்கும் முன்பதாக உங்களிடம் கேட்கப்பட்டக் கேள்விக்கு பதில் சொன்னாலே யாரும் நீங்கள் கேட்கும் கேட்கும் கேள்விக்கு பதில் தருவர். முதல்ல யார் கேள்வி கேட்டது என்று கவனிக்க)


உங்கள் கேள்வியின் அடிநாதம் வள்ளுவரின் "குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுல் மிகை நாடி மிக்க கொளல்". இதத்தானே நானும் சொல்றேன்.

குணம் என்னும் நல்ல நிகழ்ச்சிகளும் குற்றம் என்னும் தீய நிகழ்ச்சிகளும் நிறைந்த தொலைக்காட்சி என்னும் வெகு ஜன ஊடகத்தில், அப்துர்ரஹீம் துவக்குவதுபோல் இன்றியமையாத ஊடகத்தில், குணம் என்னும் நல்ல நிகழ்ச்சிகளைக் கண்டு; குற்றம் என்னும் தீய நிகழ்ச்சிகளைக் காணாதிருத்தல்.

//என் முதல் கருத்துக்கு தாங்களும் உடன்பட்டால் மேலதிக வாதம் தேவையிருக்காது என நம்புகிறேன்.//உடன்பட்டாச்சு. இது எப்படி மேலதிக வாதத்தைக் தவிர்க்கிறது?

//மேலும் தாஜுதீன் சொன்ன உதாரனங்களை பிடித்துக்கொன்டு எதிர் உதாரனம் சொல்வது சரியல்ல. காரனம் உதாரனங்கள் உண்மையள்ள, புரிதலுக்காகவே.// ச்சும்மா சின்னப்புள்ளத்தனமாவெல்லாம் பேசப்படாது.

உதாரணங்கள் தருவதற்கான அடிப்படைத் தேவை யாதெனில், ஒரு விஷயம் புரியாவிடில் அதைப் புரிய வைக்கவோ மேற்கொண்டு விளக்கவோ மட்டுமே உதாரணங்கள் தரவேண்டும்.

இன்னொன்னையும் கவனியுங்கள் அபு நூரா.

//மேலும் தாஜுதீன் சொன்ன உதாரனங்களை பிடித்துக்கொன்டு எதிர் உதாரனம் சொல்வது சரியல்ல//

தாஜுதீன் சொன்ன உதாரணங்கள் - சரியென்கிறீர்கள்
எதிர் உதாரணம் தருவது - சரியல்ல என்கிறீர்கள்.

இதுபோலவே,

//என்வே இது பிடிவாதமா அல்லது எதிர்வாதமா?//

நான் சரி என்று சொல்வதை நீங்கள் தவறு என்று சொல்வது வாதம். நீஙகள் தவறு என்று சொல்வதை நான் சரி என்று சொன்னால் வாதமல்ல; பிடிவாதம்? என்னாச்சு? (வாங்க, உங்க மாமாட்டே புடிச்சுக் கொடுத்திட்றேன்)

அப்டியே ஒரு ட்டீயும் லேயிஸ்ல பேக்கிங் பண்ண பெப்பர் ச்சிப்ஸும் சொல்லிடுங்க, அபு நூரா.


عبد الرحيم بن جميل said...

எனதன்பிற்க்கினிய கவியன்பரின் பாராட்டை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்,பிறகு???

பின்னூட்டம் அளித்த அன்பிற்க்குரிய எனது அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி!!சபீர் மாமா மற்றும் யாசிர் காக்கா! தங்களின் வீட்டின் நிலையை சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி மற்றும் மனமார்ந்த பாராட்டுக்கள்! எனது இக்கட்டுரையை சரி என சப்போர்ட் செய்தவர்களுக்கு(தாஜுதீன் காக்கா,சகோ.அபுநூரா) இக்கட்டுரை இனிப்பாகவும், இது சரியன்று என கருத்து சொல்வோருக்கு கசப்பாகவும் இருக்கலாம்...இதில் எனக்கு மகிழ்ச்சியை விட அப்சட் தான் அதிகம்...முதல் கட்டுரையே பல முரண்பாடுகள் நிறைந்திருக்கிறதே என்ற வருத்தம்.நான் எது சொன்னாலும் பொல்லாப்புதான் அதிகமாக இருக்கிறது,இனி ஏதேனும் எழுதலாமா என்ற கேள்வி மனதில் எழுந்துவிட்டதே!!!!

sabeer.abushahruk said...

//.இதில் எனக்கு மகிழ்ச்சியை விட அப்சட் தான் அதிகம்...முதல் கட்டுரையே பல முரண்பாடுகள் நிறைந்திருக்கிறதே என்ற வருத்தம்.நான் எது சொன்னாலும் பொல்லாப்புதான் அதிகமாக இருக்கிறது,இனி ஏதேனும் எழுதலாமா என்ற கேள்வி மனதில் எழுந்துவிட்டதே!!!!//

ஹலோ மருமகனே, என்னாது இது? இனி அதிகமாக எழுத வேண்டும் என்பதை ஊக்குவிக்கவே நானு வேலையெல்லாம் போட்டுட்டு யாசிரையும் சேர்த்துக்கிட்டு தாஜுதீனையும் அபு நூராவையும் வம்புக்கிழுத்து ஒரு கருத்துச்செரிவான விவாதத்தையே நடத்தி முடித்திருக்கிறோம், வருத்தம்ன்றீங்க?

for your information: நான், தாஜுதீன், யாசிர் மற்றும் அபு நூரா எல்லோருமே ஏற்கனவே பல விஷயங்களை விவாதித்துவரும் நண்பர்கள். உங்கள் பதிவில் விவாதிக்கக் காரணமே, நீங்கள் புதியவர், உங்கள் கருத்துகள் கண்டுகொள்ளாமல் விடப்படக்கூடாது என்பதற்காகவே ஆகும்.

பு.பி.பூ.ஆ.?

மேலும் எழுதுங்கள்

Yasir said...

தம்பி அப்துர்ரஹீம் ஜமீல் ....நீங்கள் வருத்தபட வேண்டாம் இங்கே உங்கள் கட்டுரையின் மூலம் ஒரு அழகிய விவாதம் முன் வைக்கப்பட்டுள்ளது ,கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்பை தந்தது உங்கள் கட்டுரை மற்றபடி தங்களின் கட்டுரையும் கவலையும் உங்கள் உள்ளத்தில் உள்ள சமுக அக்கரையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது...உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்கள்தான் இன்றைய தேவை தொடர்ந்து எழுதுங்கள்...விமர்சனங்களும்/கருத்துகளும் நம்மை செம்மைப்படுத்துமேயன்றி..பின்வாங்க வைக்கக்கூட நினைக்ககூடாது...வாழ்த்துக்கள்

Yasir said...

தம்பி அப்துர்ரஹீம் ஜமீல் ....நீங்கள் வருத்தபட வேண்டாம் இங்கே உங்கள் கட்டுரையின் மூலம் ஒரு அழகிய விவாதம் முன் வைக்கப்பட்டுள்ளது ,கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்பை தந்தது உங்கள் கட்டுரை மற்றபடி தங்களின் கட்டுரையும் கவலையும் உங்கள் உள்ளத்தில் உள்ள சமுக அக்கரையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது...உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்கள்தான் இன்றைய தேவை தொடர்ந்து எழுதுங்கள்...விமர்சனங்களும்/கருத்துகளும் நம்மை செம்மைப்படுத்துமேயன்றி..பின்வாங்க வைக்கக்கூட நினைக்ககூடாது...வாழ்த்துக்கள்

عبد الرحيم بن جميل said...

தாங்க்யூ சபீர் மாமா மற்றும் யாசிர் காக்கா!இன்ஷா அல்லாஹ் எல்லோருடைய வாழ்த்துக்களுடனும் நீங்கள் தந்திருக்கும் ஊக்கமான வார்த்தைகளுடனும் எழுதுகிறேன்...இன்ஷா அல்லாஹ்!!வாழ்த்து தெரிவித்த அனைவருடைய பெயரையும் குறிப்பிடவில்லை!!எல்லோருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றி!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஹா நான் லேட்டா...

இருவேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது. இந்த தளத்தில் வரும் பதிவுகளில் நிறைய சார்புக் கருத்துக்களும், மாற்றுக் கருத்துக்களும் பரிமாறப்பட்டுள்ளது. சகோதர எண்ணத்துடன் இது போன்ற ஆரோக்கியமான கருத்துப்பறிமாற்றத்தால் பகைமை ஏற்படாது. அல்லாஹ் பாதுகப்பானாக.

இந்த பதிவையும் பின்னூட்டங்களை படிப்பவர்கள் தகுந்த கட்டுப்பாடுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம் என்று நம்பலாம்.

தம்பி அப்துர்ரஹீம் ஜமீல் அவர்களின் அப்செட் கலைந்தது மிக்க மகிழ்ச்சி.

இனி தொடர்ந்து நிறைய பதிவுகள் தங்களிடம் எதிர்ப்பார்கலாமா?

Adirai pasanga😎 said...

soory for the delay to comment here -

தம்பி தொலைக்காட்சி போதாதென்று இப்போது வலைக்காட்சியும்(internet) அல்லவா வந்துவிட்டது அதற்கும் சேர்த்துதானே இந்த பதிவு?

Unknown said...

ஆஹா! ஆரம்பமே கண்ண கட்டுதே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// பு.பி.பூ.ஆ.? //

இப்போதான் கேட்டு சொல்றேன்...

புலிக்கு பிறந்தது பூனை குமா ?

Yasir said...

//புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?// சிர்க்கை வேரறுத்த வேங்கை அது....பலருக்கும் குர் ஆனைக் தெளிவாக ஓதக் கற்றுக் கொடுத்த ஆசான் ஜமீல் காக்கா அவர்கள்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\பதிவர் : புதுசு !//

வருக வருக பல பயனுள்ள ஆக்கங்களை தருக!

இப்பதிவு நல்லதொரு சிந்தனையாக துளிர செய்துள்ளீர்...வாழ்த்துக்கள் தொடருங்கள்

Ebrahim Ansari said...

அன்பின் மருமகன் அப்துற் ரகீம்!

நான் சும்மா ரசித்துக் கொண்டிருந்தேன். இங்கு விவாதித்தவர்கள் எல்லாம் ஒரு சஹனில் சாப்பிடுபவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டியும் விட்டுக் கொள்வார்கள். நீங்கள் அதெல்லாம் கவனிக்க வேண்டாம். மனதில் பட்டதை எழுதுங்கள்.

என் பங்குக்கு நானும் பு. பி. பூ. ஆ. க்கு ஒரு ஓட்டுப் போட்டுவிடுகிறேன்.

عبد الرحيم بن جميل said...
This comment has been removed by the author.
عبد الرحيم بن جميل said...

வாழ்த்துக்கள் தெரிவித்த சகோ.இர்ஃபான் காக்கா! மற்றும் சகோ.இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கும் எனது நன்றிகள்!இன்ஷா அல்லாஹ்!நிச்சயம் எழுதுகிறேன்!

@சகோ.இப்ராஹிம் அன்சாரி! அன்பின் மருமகனா? புரியவில்லையே!தாங்கள் என்னை யாருடைய மருமகன் என குறிப்பிட்டீர்கள்?

புதுசுரபி said...

நம் எல்லோருடைய வீட்டிலும் கத்தி இருக்கிறது. அது ஆபத்து நிறைந்த உபகரணம்.
ஆனால் அந்த உபகரணம் கவனமாக கையாளப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் சிறுபிள்ளைகளுக்கு கையில் எட்டாமலும், தப்பித்தவறி அவர்கள் கையில் எடுத்துவிட்டால், பதறிப்போகும் நாம் அதன் பாதகங்களை எடுத்துச்சொல்லியும், ஆபத்தினை அறியவைத்தும் வாங்கிவிடுகிறோம்.

கத்தியைவிட மிக ஆபத்தான தொலைக்காட்சிப்பெட்டியை நாம் எப்படி கையாளுகிறோம் என்பது தான் 'மில்லியன் டாலர்' கேள்வி!

சாபக்கேடாக, திரைப்படம், திரைப்பாடல்கள்,திரைக்கலைஞர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி என்பது மட்டுமே நமக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகவும் போதாக்குறைக்கு வஞ்சம்,பழிதீர்த்தல்,அடுத்தவர் குடும்பத்தை சீரழிப்பது எப்படி என்று டியூஷன் எடுக்கும் சீரியல்கள் 'குடும்ப' நிகழ்ச்சிகளாகவும்(!) நம்முன்னே வைக்கப்படுகிறது. இதை நமக்கும், நம்பிள்ளைகளுக்காகவும் மாத மாதம் பீஸ் கொடுத்துக்கொண்டு (அதாங்க கேபிள் கட்டணம்) பார்ப்பது நாம்தானே?

தீர்மானிக்கக்கூடிய உரிமை நம்மிடம்தானே இருக்கிறது?

எந்தவொரு சமுதாய முற்போக்கு சிந்தனையில்லாமல் தயாரிக்கப்படும் படம்,பாடல்கள்,அதில்தோன்றும் நட்சத்திரங்கள்; பின்னாளில் அவர்கள்தான் நாட்டையாளும் அரசியல்தலைவர்கள்.

எங்கிருந்து இந்த சிந்தனை மாறும்??

மாற்றவேண்டியது நம்மைத்தானே ஒழிய தொலைக்காட்சிப்பெட்டியை அல்ல,

அந்த சாதனத்தின் உள்ளீடு என்ன என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பது நாம்தானேயன்றி தொலைக்காட்சிப்பெட்டியல்ல!

டி.வி பார்ப்பதைத் தடுக்க என் பிள்ளைகள் கூறும் தீர்வினைக்கேளுங்கள்
http://www.youtube.com/watch?v=vBXQ_bsQB9M

Unknown said...

Masha allah nice post brother...way to go

نتائج الاعداية بسوريا said...

சகோ,
அப்துல் ரஹீம் , அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்களின் "தொலைக்காட்சியும் வாழ்க்கைத்தரமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நான் தாமதமாக பார்க்க நேர்ந்தது.

ஆதலால் தாமதமாக இப்பின்னூட்டத்தை வரைகிறேன்.
தங்களின் கட்டுரைத்தொகுப்பில் எனக்கு அனைத்திலும் உடன்பாடு என்றாலும் ,

ஒரே ஒரு வரியில் உடன்பாடு இல்லை.
தாங்கள் சொல்லி இருப்பது,

நமது மார்க்கத்திற்கு எதிரானவைகளை ஏன் தூக்கி எரியக் கூடாது?”
என்று கேட்டிரிக்கின்றீர்கள்.

தொலைக்காட்சிப்பெட்டியை நமது மார்கத்திற்கு எதிரானது என்று சொன்னது யார்? அதை நாம் பயன் படுத்தும் விதத்தில்தான் அது நம் வீட்டில் வைக்க நம் கும்ப உறுப்பினர்கள் உபயோகிக்க தகுதியானதா இல்லையா என்று முடிவு செய்யவேணும்.

டி.வி யே eithiraanathu என்று நாம் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
நாம் மார்க்கத்தில் ஒரு முடிவு எடுத்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தீர்ப்பு சொல்லிவிட முடியாது.

அல்லா குரானிலே சொல்கிறான் : "வல் கைர, வல் பிகார , வல் ஹமீர, லி தர்க்கபூஹா வ ஜீனா. வ எஹ்ளுக்கு மாலா தளமூன்."

அதாவது ரசூல் (ஸல்) அவர்கள் காலத்தில் வாகனங்கள் என்று பிரத்தியேகமாக சொள்ளவேன்றும் என்றால் , கால்நடைகள்தான். இதைப்பார்த்து அல்லாஹ் சொல்லும்போது , "இந்தக்கழுதை, குதிரை, கோவேறுக்கழுதை , இவை அனைத்தையும் உங்களுக்கு நாம் அலங்காரமாகப்படைத்திரிக்கின்றோம், இன்னும் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நாம் படைககின்றோம்" என்கிறான்.

நீகள் அறியாதவற்றையெல்லாம் படைக்கிறோம் என்றால் என்ன அர்த்தம் , இந்த டி. வி யாருக்காக எல்லாம் மனிதனுக்காக. அல்லாஹ் படைத்தவற்றில்
நாம் ஒன்றை ஹராம் என்று சட்டென தூக்கி எரிந்து விடமுடியாது, அது நாம்
பயன் படுத்தும் முரையைப்பொருத்தது

நம் வீட்டில் டி. வி. இருந்தால் , கண்டிப்பாக நம் பிள்ளைகளின் , ஒழுக்கம், கல்வி, பண்பாடு, நேரம், அனைத்தும் வீணாகிவிடும் என்னும் பட்சத்தில்
அதை வீட்டின் உள்ளே அனுமதிப்பது என்பது முட்டாள்தனம். இதில் நான் உடன் படுகிறேன்.

ஆனால் இதே நம் ஊர் அதிராம்பட்டினத்தில் டி. வி உள்ள எத்தனையோ குடும்பங்கள் அதை , அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்ன
அறிவுபூர்வமான, அறிவை வளர்க்கக்கூடிய விஷயங்களுக்குப்பயன் பயடுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அது பயன் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. டி. வி யே ஹராம் என்றால் அது மார்கத்திற்கு புறம்ப்பன ஒரு வாதம்.

அல்லாஹ் நமக்கு அறிவைத்தந்து , பகுத்தறிந்து , ஒன்று தீமை என்று பட்டாள்
நாம் தான் அதை உள்ளே அனுமதிக்கக்கூடதே தவிர, டி. வி. வைத்திரிப்பவர்களெல்லாம் ஹரமானதையே வைத்திரிக்கிரார்கள் என்று பட்டென்று சொல்லிவிடமுடியாது. உங்களுக்கு தெரியாமல் இல்லை இதிலே
எத்தனையோ அறிவை வளர்க்கக்கூடிய , மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு,
மற்றும் விஞ்ஞனம் , என்று எல்லா விஷயங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆதலால் இதை நாம் முறையாக பயன் படுத்தி ஈருலகப்பேற்றை அடைய அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
ஆமீன்.

அபு ஆசிப்
ரியாத், சவுதி அரேபியா.


عبد الرحيم بن جميل said...

வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.அபுஆசிப்

அழகாக தங்களின் கருத்தை சொன்னீர்கள், இதற்க்கும் மேல் பின்னூட்டம் வருமென நான் எதிர் பார்க்கவே இல்லை.தாமதமாக ஆனாலும் தாங்கள் படித்ததற்க்கு மகிழ்ச்சி!!!

//நமது மார்க்கத்திற்கு எதிரானவைகளை ஏன் தூக்கி எரியக் கூடாது?”
என்று கேட்டிரிக்கின்றீர்கள்.//

நான் பொதுவான விஷயங்கள் எல்லாவற்றையுமே இந்தக் கேள்வியில் உள்ளடக்கி எழுதினேன்!மேலும் தாங்கள் முழுமையாகவே கட்டுரையை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்! கட்டுரையின் நுனுக்கத்தை என்னினால் நன்கு புரியும் தொலைக்காட்சி பயன்படுத்தப் படும் விதம் பெரும்பாலானவை சீரழிவை ஏற்படுத்துபவை என்று..நான் யாரையும் தொலைக்காட்சிப் பெட்டியை தூக்கிய எறிய சொல்லவில்லை...வழிகேடுகளைத்தான் எறிய சொன்னேன்!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.