Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் அட்டை - கிரடிட் கார்டு - வரமா ? சாபமா ? - விவாதக்களம்...! 46

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2013 | , , , , ,


கடன் அன்பை முறிக்கும் ! இன்னும் ஒரு படி மேலே போய் எலும்பையும் முறிக்கும் என்று சொல்லிய காலம் மருவி இப்போது, கடன் அட்டைகள் இல்லாத சட்டைப் பைகள் இல்லை என்று சொல்லுமளவுக்கு அதன் தாக்கம் அதிகம் என்றால் மிகையில்லை !

கடன் அட்டையினை தானாக வந்து வாசல் தட்டி கொடுத்து விட்டுச் சென்று பின்னர் தடியர்களோடு வந்து வாசல் தட்டி இழுத்துச் செல்லும் சோகமும் உண்டு. தானாக வந்தாலும் தள்ளியே இருக்கச் சொல்லி அதிலிருந்து ஒரு துளிகூட எங்களை நெருங்க வேண்டாம் என்று சொல்லும் ரகமும் உண்டு.

அவர்/அவன் எடுத்தான் அதனால்தான் நானும் எடுத்தேன் ஒரு கடன் அட்டை மட்டும்தான், அதனை அடைக்க மற்றொன்று எடுத்தேன் இப்படியாக புலம்பல்களும் கண்டிருக்கிறோம் கேட்டிருக்கிறோம்.

கடன் அட்டைகள் அவரவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அதனை முறையாக பயனாளிகளால் கையாளத் தெரிந்தவர்கள் அதனைப் பயன்படுத்தியும் வருகின்றனர். எப்படி அது சாத்தியம் என்று கேட்டால் திட்டமிடல், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்துதல் என்று அளவாக சொல்லி விடுகின்றனர்.

கடன் அட்டையா? (அதாங்க கிரடிட் கார்டு) அப்படின்னா என்ன என்று கேட்டவர்களும் நம்மிடையே இன்றளவும் இருக்கிறார்கள் !

சரி ! அனுபவத்தினூடே கருத்தாடல் செய்வோமா ! நீங்கள் எந்த ரகம் !? உங்களைச் சார்ந்தவர்களுக்கு இது சாபமா ? வரமா ? 

வேண்டுமா ? வேண்டாமா ? (கடன் வாங்கலாம் வாங்க...! என்ற தொடர் பதிவையும் ஒரக்கண்ணால் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்).

விவாதிக்கலாமே !

அதிரைநிருபர் பதிப்பகம்

46 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

Credit cards are simply inducing virtual buying power and make the credit card holder to get into dangerous dept hole.

I don't use credit cards, I use debit card of an Islamic Bank.

Please have a look at my article in Adirai Nirubar and www.dubaibuyer.blogspot.com

"Beware of killer offers in Dubai"

http://www.adirainirubar.blogspot.ae/2012/11/beware-of-killer-offers-in-dubai.html



Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.
www.dubaibuyer.blogspot.com

aa said...

கடன் அட்டைகள் (Credit cards) என்பது ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக்கு வழங்கும் ஒரு மின்னனு அட்டை (Electronic card). அந்த அட்டையைக் கொண்டு வாடிக்கையாளர் எந்த கடையில் வேண்டுமானாலும் பணம் ஏதும் செலுத்தாமல் பொருட்களை வாங்க முடியும். பின்னர் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் வங்கியிடம் அந்த தொகையை வாடிக்கையாளர் திருப்பிச் செலுத்துவார்.

உதாரணமாக. ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கடையில் சாமான்கள் வாங்குகிறார். அவர், அந்த ஆயிரம் ரூபாயை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் (உதாரணம்: ஒரு மாதம்) அந்த வங்கிக்கு செலுத்தி விடவேண்டும். அந்த ஒரு மாத காலத் தவனை முடிந்த பிறகும் அவர் கடனை திருப்பிச் செலுத்த தவறினால் அவர் அசலை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும்.

அதாவது, அவர் ருபாய் 1100ஆக 2வது மாதத்தில் வங்கிக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு, அவருடைய காலத்தாமதத்திற்கேற்ப அவர் அதிக வட்டி செலுத்த வேண்டும்.

ஒருவர் அந்த குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள் வட்டி ஏதும் இல்லாமல் கடனை திருப்பிச் செலுத்தினாலும், இந்த வகையான கடன் அட்டைகள் ஹராமாகும்.

ஏனெனில், அவர் 'காலத்தாமாதமானால் வட்டி செலுத்துவேன்' என்று வங்கியுடன் உடன்படிக்கை செய்கிறார். இந்த வகையான உடன்படிக்கையே ஹராமாகும். மேலும், எதிர்காலம் குறித்த ஞானம் அவரிடம் இல்லை. அவருடைய சூழ்நிலைகள் அவரை வட்டி செலுத்துமாறு செய்துவிடலாம். எனவே, இந்த வகையான வியாபார பரிவர்தனைகள் ஹாராமானாவை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு பார்க்க, சேஹ் இப்னு உதைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஃபத்வா http://www.fatwa-online.com/fataawa/buyingandselling/buying/buy002/0020602.htm

sabeer.abushahruk said...

நான் கடன் அட்டை உபயோகித்ததில்லை. ஓர் இஸ்லாமிய வங்கியின் டெபிட் கார்ட் உபயோகிப்பவன். 

கிரடிட் கார்ட் உபயோகிக்கும் நண்பர்கள் பலர் அவற்றைக் கொண்டு வாங்கியதாகச் சொல்பவை பெறும்பாலும் ஆடம்பரப் பொருட்களேயன்றி அத்தியாவசியப் பொருட்கள் அல்ல.

கிரடிட் கார்டைக் கொண்டு அரிசி பருப்பு வாங்கியவர்களைவிட ஆஃபரில் வரும் எலக்ட்ரானிக் வாங்குபவர்களே அதிகம்.

பையில் காசுடன் ஒரு பென்சில் வாங்கப் போபவர் கிரடிட் கார்ட் இருப்பின் ஒரு பெட்டி பென்சில்களுடன் வீடு திரும்புவார்.

கையில் இல்லாத பணத்தைச் செலவு செய்வது மடைமை.

என் கட்சி: no to credit card!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கடன் அட்டை வாங்கு என்று சொன்னவன் (தனக்கு கிடைக்கு ஆதாயத்திற்காக என்னை வாங்க வைத்து விட்டு) கனடா சென்றுவிட்டான்...

ஆரம்பத்தில் கையில் இருக்கும்போது ஏதோ எல்லாமே கையில் என்ற பிரம்மை அதன் பின்னர் ஒவ்வொன்றாக நிழ்ந்தவைகள் ஒரு நீண்ட தொடருக்கும் நிகரான அனுபவம்...

சொல்லித்தான் ஆகனும்...

அப்புறமா வர்ரேனே...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அது ஆயிரத்து தொல்லாயிரத்து தொன்னூற்றி ஒன்பதாம் வருடம்.... ஆரம்பித்தது...

பின்னர்,

கடன் வாங்கலாம் வாங்க எழுதிய அன்புக்குரிய அலாவுதீன் காக்கா அவர்களின் ஆலோசனை மட்டுமல்ல அறிவுரையும் 27 நிமிட அலைபேசி உரையாடலில் எப்படி தூக்கியெறிவது எப்படி என்று சொன்னதோடு அல்லாமல் அதனை கடாசிவிட்டுதான் இருக்க வைத்தார்கள்....

இந்த நேரத்தில் தம்பி யாசிருக்கும் ! ஒரு டேங்க்ஸ்...

அல்ஹம்துலில்லாஹ் !

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

கடன் அட்டைகள்.
இது தேவையா?

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் சம்பாதிக்க ஆரம்பித்த நாள் முதல் கடன் அட்டைகள் எளிதில் வைத்திருக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது, ஆனால் இன்று வரை ஒரு கடன் அட்டை கூட வைத்திருக்க வில்லை. இனியும் வைத்திருக்க போவதில்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக.

சகோதரர் ஃபிர்தவ்ஸின் கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதே...

வட்டி என்ற கொடிய பாவத்திலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தவிர்த்திருப்பதே சிறந்து என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நம்முடைய பணத்தில் பொருட்கள் வாங்குவதில் இருக்கும் திருப்தி கடன் அட்டையை பயன்படுத்தி வாங்கும் பொருட்களில் திருப்தி இருப்பது கேள்விகுறியே.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அலாவுதீன் காக்கா அவர்கள் எழுதிய கடன்வாங்கலாம் தொடரின் இந்த பதிவை கொஞ்சம் வாசித்துப்பாருங்களேன்... http://adirainirubar.blogspot.com/2010/10/3.html

aa said...

கிரெடிட் கார்டுகள் சம்பந்தமாக சௌதியின் மறைந்த Grand Mufti சேஹ் அப்துல் அஜீஜ் பின் பாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தலைமையிலான சௌதி அரேபிய அரசின் மூத்த அறிஞர்கள் குழுவான ‘அல் லஜ்னத்து தாயிமா லில் புஹீத் அல் இஸ்லாமிய வல் இஃப்தா’ (The Permanent Committee for Scholarly Research and Verdicts) அளித்த மார்க்க தீர்ப்பை காண: http://alifta.com/Fatawa/fatawacoeval.aspx?View=Page&HajjEntryID=0&HajjEntryName=&NodeID=4720&PageID=5038&SectionID=7&SubjectPageTitlesID=56142&MarkIndex=3&0

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அனுபவத்தில்...
கடன் அட்டையும் கிடையாது
காசு அட்டையும் கிடையாது
கடவுட்சீட்டு மட்டுமே உண்டு.

அலாவுதீன்.S. said...

//// கடன் அட்டை - கிரடிட் கார்டு - வரமா ? சாபமா ? ////

))) சாபம்தான் )))

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அலாவுதீன்.S. சொன்னது…
//// கடன் அட்டை - கிரடிட் கார்டு - வரமா ? சாபமா ? ////

))) சாபம்தான் )))//

காக்கா,

இவ்வ்ளோ கோபமா சொல்லிட்டு போய்ட்டீங்களே....

சாபத்திற்கு எவ்வாறான தூபங்கள் என்று சொல்லியிருக்கலாமே....

அப்துல்மாலிக் said...

சாபமே..!
சபீர் காக்கா சொன்னது மாதிரி கையில் காசில்லை என்றால் மால்/சூப்பர் மார்கெட்/ஜுவல்லரி போய்ட்டு திரும்ப வந்துடலாம் ஆனால் கிரெடிட் கார்ட் இருந்தால்.........

sabeer.abushahruk said...

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அனுபவத்தில்...
கடன் அட்டையும் கிடையாது
காசு அட்டையும் கிடையாது
கடவுட்சீட்டு மட்டுமே உண்டு.\\

So touching and speaks nothing but reality.
கடன் அட்டை
காலில் ஒட்டும் அட்டை
குருதி யுறிஞ்சாமல் நீங்காது!

கடன் அட்டை
கதர் சட்டை கட்சிக்காரன்
கழுத்தை நெறிக்காமல் விடாது

கடன் அட்டை
காக்கிச் சட்டை காவல்
கை யொடிக்காமல் ஓயாது

கடன் அட்டை
கண்தெரிந்தே இறங்கும்
உடன்கட்டை
முடிக்காமல் முடியாது

கடவு அட்டைதான்
நமக்கு நடவு
அறுவடைதான் வரவு!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே எப்படி இந்த கிரடிட் கார்டுகளால் ஏமாற்றப்படுகிறார்கள், வங்கிகளின் மற்றொரு முகத்தை எந்த நேரத்தில் வெளிக்காட்டுகிறார்கள், புலணாய்வு என்று சொல்லும் சிலரால் மொழியறியா அப்பாவிகளை(!!?) எவ்வாறு அலைக் கழிக்கிறார்கள், எந்த வகையில் மன அழுத்தம் கொடுக்கிறார்கள்,வங்கிகளில், கலெக்ஷன் பக்கெட் என்று சொல்லும் கொள்ளைக் கூட்டத்தில் யாரெல்லாம் வேலை செய்கிறார்கள், அவர்களின் சதி என்ன, யாரை குறிவைக்கிறார்கள்.... இன்னும்... அலசல் விரைவில் பதிவாக (இனியாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில்) விரைவில் இன்ஷா அல்லாஹ் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கடன் அட்டை
கண்தெரிந்தே இறங்கும்
உடன்கட்டை
முடிக்காமல் முடியாது//

கவிக் காக்கா....

பட்டவர்களின் ஹார்ட்டை தொடும் வரிகள் !

crown said...


கடன் அட்டை
காலில் ஒட்டும் அட்டை
குருதி யுறிஞ்சாமல் நீங்காது!

கடன் அட்டை
கதர் சட்டை கட்சிக்காரன்
கழுத்தை நெறிக்காமல் விடாது

கடன் அட்டை
காக்கிச் சட்டை காவல்
கை யொடிக்காமல் ஓயாது

கடன் அட்டை
கண்தெரிந்தே இறங்கும்
உடன்கட்டை
முடிக்காமல் முடியாது

கடவு அட்டைதான்
நமக்கு நடவு
அறுவடைதான் வரவு!

----------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
இந்த அட்டை அன்பை முறிக்கும்.
இந்த அட்டை சட்டைபையில் ஏறியவுடன்
என்றும் மானம் துகிலுரியப்படலாம்.
இது ரெட்டை வேடம் போடும் அடையாள அட்டை!
நல்லது செய்வதுபோல் தீயதில் தள்ளிவிடும்!
நம்மை அடையாளம் தெரியாமல் செய்துவிடும்!

அதிரை முஜீப் said...

கடன் அட்டை வரமாவதும், சாபமாவதும் அவரவர் உபயோகத்தின் அடிப்படையிலானது ஆகும். கிரடிட் கார்ட் மூலம் மட்டுமே ஒருவர் கடனாளி ஆவது கிடையாது. கிரெடிட் கார்ட் அல்லாமல் வங்கியில் வாங்கும் நகை கடன்,லோன்,கார் கடன் மற்றும் தனி நபர் கடன் என்று இது நீளும். மேலும் எந்த ஒரு பயன்பாட்டையும் மனிதன் தன் தேவைக்கு மட்டும் பயன் படுத்தினால் அது மார்க்க வரம்பிற்குள்ளும் அடங்கிவிட்டால் அது நன்மை பயக்கும்.

நானும் சுமார் பதினைந்து வருட காலமாக இந்த கடன் அட்டையை உபயோகித்து வருகின்றேன். ஆனால் இன்றுவரை இறைவன் மேல் ஆனையாக வட்டி என்று ஒரு பைசா கூட கட்டியது கிடையாது. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்தது கிடையாது. ஒவ்வொரு மாதமும் எனக்கு வரும் ஸ்டெட்மென்ட் தொகையை காலக்கெடுக்கு முன்னே கட்டி விடுகின்றேன். ஆதலால் லேட் பேமென்ட் அபராதமும் கட்டியது கிடையாது.
மேலும் ஒரே ஒரு முறை குறித்த காலத்திற்குள் என்னால் பணம் அடைக்க முடியவில்லை. மூண்று தினங்கள் கால தாமதம் ஆகிவிட்டது. இதற்கு காரணம் துபையில் இடைவிடாது வந்த மூண்று தின விடுமுறையே. இதனால் சம்பளம் டிரான்ஸ்பர் லேட்டானதால் பணம் அடைப்பதும் லேட்டானது. இதனால் 75 திர்ஹம் லேட் பேமன்ட் என் ஸ்டேட்மென்ட்டில் சார்ஜ் செய்து விட்டார்கள். பின் வங்கியை தொடர்பு கொன்டு விளக்கம் அளித்ததும் அதையும் அப்படியே ரிவர்ஸ் செய்து விட்டார்கள்.

என் தேவைக்கு மேல் உபயோகத்திற்கு மேல் நான் எதையும் வாங்குவது கிடையாது. இதனால் பல நல்ல காரியங்களுக்கு என்னால் உதவ முடிகின்றது.

கடன் அட்டை வைத்திருப்பது ஒன்றும் சாபமல்ல. அது பல வகைகளிலும் உதவி செய்யக்கூடியதே. உதாரனத்திற்கு, தற்போது ஆன்லைன் வர்த்தகம் என்பது சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தாங்கள் ஊர் செல்ல விமான டிக்கெட் பதிவு செய்ய ஆன்லைன் மூலம் புக்கிங் செய்ய நேரிடும் போது இந்த கடன் அட்டை இல்லாமல் செய்ய முடியாது.

கடன் அட்டையை அதிகம் பயன் படுத்தும் போது நம் கையில் அதிகம் பனம் கொன்டு செல்ல அவசியம் கிடையாது. இதனால் வெளியூர் செல்ல நேரிடும் போது கையில் பனம் இல்லை என்றால் கூட உதவிக்கு இந்த கடன் அட்டை பயன் அளிக்கும்.

என் மகனின் ஸ்கூல் பீஸ் முதல், மளிகை சாமான்கள் வரை இந்த கடன் அட்டையையே பயன் படுத்துகின்றேன். இதனால் எனக்கு ரிவார்ட்ஸ் புரோகிராம் மூலம் நாம் ஒவ்வொரு மாதமும் உபயோகிக்கும் தொகைக்கு ஏற்ப்ப எனக்கு பாயின்ட்ஸ்கள் கிடைக்கின்றது. இந்த பாயின் மூலம் மைக்ரோஒவன்,புட்பிராசசர் போன்றவைகளும் பரிசாக கிடைத்தது.

எதையும் தங்களால் கன்ட்ரோல் செய்ய முடியும் என்ற மன பக்குவம் உள்ளவர்களுக்கு இந்த கிரடிட் கார்ட் வரமே. அளவுக்கு மீறி கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்பவருக்கு சாபமே. இது கிரடிட் கார்டுக்கு மட்டுமல்ல வாழ்க்கையை வரம்பு மீறி வாழும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

sabeer.abushahruk said...

முஜீபைப் போல இன்னும் எத்தனை விதிவிலக்குகளோ? :-)

Unknown said...

அதிரை முஜீப் சொன்னது…
//கடன் அட்டையை அதிகம் பயன் படுத்தும் போது நம் கையில் அதிகம் பனம் கொன்டு செல்ல அவசியம் கிடையாது. இதனால் வெளியூர் செல்ல நேரிடும் போது கையில் பனம் இல்லை என்றால் கூட உதவிக்கு இந்த கடன் அட்டை பயன் அளிக்கும்.//

//எதையும் தங்களால் கன்ட்ரோல் செய்ய முடியும் என்ற மன பக்குவம் உள்ளவர்களுக்கு இந்த கிரடிட் கார்ட் வரமே. அளவுக்கு மீறி கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்பவருக்கு சாபமே. இது கிரடிட் கார்டுக்கு மட்டுமல்ல வாழ்க்கையை வரம்பு மீறி வாழும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.//
சகோ.முஜீபின் கருத்தில் உடன்படுகிறேன்.

அதிரை முஜீப் said...

கூடுதல் தகவல்: எங்கெல்லாம் கிரெடிட் கார்டு உபயோகப்படுத்தினால் சர் சார்ஜ் செய்கின்றார்களோ அங்கெல்லாம் நான் இந்த கடன் அட்டையை பயன்படுத்துவது கிடையாது. உதாரனத்திற்கு நகை வாங்கினால் 2 - 3 சதவிகிதம் சார்ஜ் செய்வார்கள். மேலும் ஒரு சில கடைகளில் இது போல சார்ஜ் செய்வார்கள்.

இப்படி நான் வாங்கும் பொருளின் மதிப்பைவிட (கிரெடிட் கார்டிற்கு ஒரு விலையும் கேஸ் டிரான்ஸாக்க்ஷன் ஒரு விலை என்றால்) அந்த தருனத்தில் கிரெடிட் கார்ட் உபயோகத்தை தவிர்து விட்டு அருகில் உள்ள ஏ.டி.எம்.மில் பனம் எடுத்து பனத்திற்கே பொருட்களை கொள்முதல் செய்கின்றேன்.

ZAKIR HUSSAIN said...

Credit Cards can be used wisely [ Most of the time it is not possible for many people, the percentage may be 95%].

Most of the people trapped by the interest rate they charge on monthly basis. Here in Malaysia is about 1.5% per month. But if you calculate on yearly basis it is 18%. It is worst than a loan sharks.

But people have strong savings habits can forget about this card. Wherever the cumulative interest system is followed, Men have to sacrifice at least 10% of his EARNING IN HIS LIFE TIME.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சில தினங்களுக்கு முன்பு நகை விலை குறைந்ததால், ஊரில் உள்ள சொந்தங்களின் வற்புறுத்தலால் கடன் அட்டையை உபயோகப்படுத்தாத ஒரு சிலரையும் நகை மேல் உள்ள மோகம் பயன்படுத்த வைத்தது என்பது எதார்த்த உண்மை.

கையில் காசு இருந்தால் நகை வாங்கலாம் என்ற காலம் போய் கடன் வாங்கி நகை வாங்கலாம் என்பது லேட்டஸ்ட் டிரண்ட், காரணம் கடன் அட்டை தான் இருக்கிறதே என்ற தைரியம் சில அம்மணிகளுக்கு..

aa said...

@Adirai Mujeeb @M.K Abu Backer @Zakir Hussain

ஒருவர் அந்த குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள் வட்டி ஏதும் இல்லாமல் கடனை திருப்பிச் செலுத்தினாலும், இந்த வகையான கடன் அட்டைகள் ஹராமாகும்.

ஏனெனில், அவர் 'காலத்தாமாதமானால் வட்டி செலுத்துவேன்' என்று வங்கியுடன் உடன்படிக்கை செய்கிறார். இந்த வகையான உடன்படிக்கையே ஹராமாகும். மேலும், எதிர்காலம் குறித்த ஞானம் அவரிடம் இல்லை. அவருடைய சூழ்நிலைகள் அவரை வட்டி செலுத்துமாறு செய்துவிடலாம். எனவே, இந்த வகையான வியாபார பரிவர்தனைகள் ஹாராமானாவை ஆகும்.

கிரெடி கார்டுகள் (Not Debit/ATM cards) ஒட்டுமொத்தமாக ஹராமாகும்.

Meerashah Rafia said...

தவறினால் வட்டி கட்டுவேன் என்று உத்திரவாத கையெழுத்து போட்டு கடன் அட்டை வாங்குவது சாபம்தானே!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//கடன் அட்டை
கண்தெரிந்தே இறங்கும்
உடன்கட்டை
முடிக்காமல் முடியாது

கடவு அட்டைதான்
நமக்கு நடவு
அறுவடைதான் வரவு!//

சபீர் காக்கா,
எனது மூவரிகளுக்கு மூவைந்து கருக் கவி வரிகள்! so....touching

Unknown said...

கிரெடிட் கார்டு கண்டிப்பாக சாபமே,,, நவீன முறையில் மக்களை வட்டிக்கு அடிமையாக்கும் முறையே.நிச்சயமாக இதில் பலனடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்களே அதிகம் என்பேன்.சகோ பிர்தவ்சின் கருத்துக்கு எனக்கு உடன்பாடு உண்டு.சகோ முஜீப் போன்றவர்களின் சுய கட்டுப்பாடு உள்ள அணுகுமுறை நன்மையே பயக்கும் என்பதும் உண்மை ஆனால் இது நம் சமுதாய மக்களால் புறக்கணிக்க வேண்டிய ஒன்று.பேரம் பேசுவதே கூடாது என்ற இஸ்லாமிய பொருளாதார தத்துவத்தின் எதிர்மறையான பொருளாதார கொள்கை
கடன் அட்டை யூதர்களின் திணிப்பு மக்களை சீரழிக்கும் கடன் அட்டையை புறக்கணிப்போம்

Ahamed irshad said...

கடன் அட்டை சாபம்தான்..மொத்தமாய் பார்க்கும்போது கிடைக்கும் பெனிஃபிட், ரிவார்ட்ஸ்களை வைத்து வரமென்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து.. சுய கட்டுப்பாடு கொண்டாலும் மறைமுக வட்டி முறையை திணிக்க முற்படுகிறது என்பது நிதர்சனம்..

நடைமுறைக்கு வரம்

நம் மார்க்கத்திற்க்கு சாபம்..

Yasir said...

சகோ.Ahamed Firdhous அவர்களின் கருத்துக்கள் பயத்தை தந்தாலும்....கிரெடிட் கார்டு இல்லாமல்,நாங்கள் வியாபார பயணங்களில் நிறைய பணங்களை எடுத்துக்கொண்டு செல்வது கடினமே,திருட்டு,கடத்தல் பயம்.கொலை போன்றவற்றை தவிர்ப்பதற்க்காக.......ஆனாலும் உண்மையான நிய்யத் வட்டி கொடுப்பேன் என்று இல்லை...மனங்களை பார்க்கும் வல்ல நாயன் பிழைபொறுக்க வேண்டும். எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொண்டால் தவறு செய்வ்தற்க்கான வாய்ப்புகள் குறைவே...விவாததிற்க்காக கேட்கவில்லை..கிரடிட் கார்டு எடுக்க கூடாது என்று “பத்வா” ஏதும் உள்ளதா ?? நிச்சயமாக அது “சைத்தானின் ஒரு அங்கம் தான்” என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை...அல்லாஹ் பாதுகாப்பான்

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Yaseer,

Brother Ahmed Firdous has provided link for the fatwa in the previous comment.

The following is the link: http://alifta.com/Fatawa/fatawacoeval.aspx?View=Page&HajjEntryID=0&HajjEntryName=&NodeID=4720&PageID=5038&SectionID=7&SubjectPageTitlesID=56142&MarkIndex=3&0

Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Meerashah Rafia said...

சகோ. யாசிர் சொல்வதுபோல் வியாபாத்திற்கு தற்போது கிரடிட் கார்ட் உபயோகிக்கவேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள்.. இருப்பினும் எந்தெந்த இடங்களில் கிரெடிட் கார்டை உபயோகிக்கமுடியுமோ அத்தகைய இடங்களில் டெபிட் கார்டையும் உபயோகபடுத்த முடியும்..

வியாபாரம் ஒரு புறம் இருக்கட்டும்.. தனி மனிதனுக்கு கிரடிட் கார் ஏன் தேவைபடுகின்றது? டெபிட் கார்டை வைத்து ஏன் சமாளிக்க முடிவதில்லை?
இருக்கும் பணத்திற்கு பொருள் வாங்கவேண்டும் என்ற எண்ணம் ஓன்று மட்டும் இருந்தாலே போதும்.. கிரடிட் கார்டில் வாங்கும் அதே லட்ச ரூபாய் பொருளை டெபிட் கார்டிலும் வாங்கமுடியும்.. பேங்கில் கோடி ரூபாய் சேமித்து வைத்திருந்தால் கோடிக்கும் பொருள் வாங்கலாம்.. இதற்கு மேல் நெட் பாங்கிங், ATM என்று பல அம்சங்கள் வட்டியின் பக்கத்திலிருந்து தப்பிக்க வழியிருந்தும் கிரடிட் கார்ட் உபயோகிப்பதேன்பது ஒரு வகை பேராசை என்று சொல்லலாம்.


இருப்பதை வைத்து வாழ நினைப்பவர்களுக்கு டெபிட் கார்ட் வரப்பிரசாதம்..

இல்லாததை நினைத்து வாழ நினைப்பவர்களுக்கு கிரடிட் கார்ட் வரப்பிரசாதம்..

Yasir said...

சகோ.மீராஷா தங்களின் கருத்துடன் உடன்பட்டாலும்..இன்னும் சில பிராக்டிகள் அசவுகரியங்கள் இருக்கின்றன டெபிட் கார்டை பயன்படுத்துதில்..ஒரு சில ஆஃபிரிக்க நாடுகளிலிருந்து வரும் டெபிட் கார்டு டிரான்ஷக்சனை பேஃகுகள் உடனே பாஸ் செய்வதில்லை பலதடவை அது(அனுபவ உண்மை ஆஃபிரிக்காவில் அல்ல,இது எனக்கு லண்டனிலும் கூட ஏற்ப்பட்டது)...சில மணி நேரமோ ஒரு சில சமயங்களில் சில நாட்களோ எடுத்துக்கொள்ளும் ஆனால் கிரடிட் கார்டில் அப்படியில்லை ..ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுக்கும் லோக்கல் ஏஜெண்ட் இருப்பதால் உடனடியாக பரிவர்த்தனை நடக்கும்..இது அவர்களின் ஏற்பாடாக கூட இருக்கலாம்...

முடிந்த அளவிற்க்கு இனிமேல் பயணங்களில் கூட பணத்தை எடுத்துச் செல்ல முயற்ச்சிக்கின்றேன்

//இல்லாததை நினைத்து வாழ நினைப்பவர்களுக்கு கிரடிட் கார்ட் வரப்பிரசாதம்.// என்ன இப்படி டக்குண்டு சொல்லிப்புட்டிய....என் விசயத்தில் ”இருந்து கொண்டே” தான் நான் இதனை ஒரு சில வசதிகளுக்காக எடுத்துச்செல்கின்றேன்

Meerashah Rafia said...

//என்ன இப்படி டக்குண்டு சொல்லிப்புட்டிய....என் விசயத்தில் ”இருந்து கொண்டே” தான் நான் இதனை ஒரு சில வசதிகளுக்காக எடுத்துச்செல்கின்றேன்//

யாசர் காக்கா...உங்களைப்போல் பிசினஸ் மேக்னட், பட்ஜெட் பத்மனாதர்கள் சொற்பமாகவே இருக்கின்றார்கள்.. துண்டு விழாமல் பட்ஜெட் போடுகின்ற உங்களைப்போன்றவர்களே அதிக சதவிகிதம் உள்ளவர்கள் இருந்திருந்தால் இந்த கடன் அட்டை வந்தே இருக்காது..யாரும் இல்லாத கடைக்கு ஏன் டீ ஆத்தனும்னு விட்டுட்டு ஓடிருப்பார்கள்..

அதிரை முஜீப் said...

கடன் அட்டை சிலருக்கு வரமாகவும் சிலருக்கு சாபமாகவும் அமைவதில் மாற்றுகருத்து இல்லை, அதை அவரவர் உபயோகப்படுத்துவதை பொருத்தே..! அதுவும் மார்க்க அடிப்படையை மீறாதவகையில் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். என் கடன் அட்டையின் ஸ்டேட்மென்ட் தொகையை முழுவதும் வங்கியின் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ள முழு அனுமதி வழ்ங்கியுள்ளேன். தவறினால் வட்டி கட்டுவேன் என்று ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதை காரணம் காட்டியும்,சவுதியின் பத்வாவை காரனம் காட்டியும் சிலர் தங்கள் வாதங்களை முன் வைத்து இருக்கின்றார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம். அதையும் இங்கே தக்க பதிலுடன் தந்தால் நலம். நாம் இன்று பரவலாக உபயோகப்படுத்திக்கொன்டிருகின்ற இனையம், பேஸ்புக் போன்றவைகள் மார்க்க அடிப்படையில் ஹலாலா அல்லது ஹராமா...?. ஏன் எனில் இந்த இனையத்தில் குறிப்பாக பேஸ்புக்கில் ஆபாச அசிங்கங்கள் குவிந்து கிடக்கின்றன. இது மார்க்க அடிப்படையில் பெரும் குற்றம். ஆனால் அதை எல்லாம் நாம் தவிர்த்து விட்டு நமக்கு தேவையான வற்றை ஹலாலான முறையில் உபயோகப்படுத்துகின்றோம். இருந்தாலும், ஆபாசம் நிறைந்து கிடக்கும் ஒரு தளத்தை எப்படி நாம் உபயோகப்படுத்தலாம்...?. நான் ஒன்றும் அதுமாதிரியான பக்கங்களுக்கு செல்வதில்லை என்று கூறினாலும், அந்த தளத்தில் ஆபாசம் நிறைந்து உள்ளதா இல்லையா...? இன்று செல்லவில்லை என்றாலும், நாளை சென்றுவிடலாம் இல்லையா...? ஏனெனில் //எதிர்காலம் குறித்த ஞானம் அவரிடம் இல்லை.// என்பது இதற்கும் பொருந்தும் அல்லவா....?பதில் வேண்டும்!.

முன்பு இப்படித்தான் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று பத்வா கொடுத்தார்கள். போட்டோ எடுப்பது ஹராம் என்றார்கள்.ஆனால் ஹஜ்ஜுக்கு செல்ல பாஸ்போர்ட் வேன்டும் என்பதால் அதற்குமட்டும் புகைப்படம் எடுக்கலாம் என்றார்கள். தொலைக்காட்சி பார்ப்பது ஹராம் என்றார்கள். பின் அதில் ஆபாசம் இல்லாத காட்சிகள், செய்திகள், மார்க்க நிகழ்ச்சிகள் பார்க்கலாம் என்றார்கள். இன்று கேபிள் டி.வி இல்லாத வீடுகள் எத்தனை...? இதற்காக ஒரு கடன் அட்டைக்காக அதுவும் நான் உபயோகம் செய்வதாலும் சப்பை கட்டு கட்டி மார்க்கத்திற்கு முரனாக நான் கருத்து கூற நான் வரவில்லை..!

சகோதரர்களே...! நாம் வாழும் இந்த உலகம் கடும் சோதனைகளுக்கும், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் வந்து கொன்டே இருக்கும். இது தவிர்க்க முடியாதது. ஆனால் இவற்றை எப்படி மார்க்க வரம்பிற்குள் நாம் கொன்டுவந்து அதை ஹலாலான வழியில் உபயோகப்படுத்த முடியும் என்று ஆராய வேண்டும். அதில் ஏதும் மார்க்கத்திற்க்கு முற்றிலும் எதிரானதாக உள்ளதோ, எந்த விதத்திலும் ஒத்துப்போக வில்லையோ அதை முற்றிலும் தவிற்க்க வேண்டும்.

பதில் கருத்துக்கள் இருந்தால் கூறலாம். வீம்புக்காக என் கருத்தை கூறவில்லை. ஏன் எனில் இது விவாதக்களம்.....

வல்ல அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறிந்தவன். மனிதன் என்ற முறையில் நான் கருத்து கூறியுள்ளேன். மறைவான அறிவு அல்லாஹ்விடமே உண்டு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் முஜீப் வெளிப்படையான கருத்து வரவேற்கதக்கது.

இருப்பினும்,

நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளில் நிர்பந்தத்தால் மாற்று வழிகள் இன்றி தவிர்க்க முடியாத நிலையும் உண்டு, மாற்று வழிகளுடன் தவிர்க்கக்கூடிய நிலையும் உண்டு.

நீங்கள் குறிப்பிட்டுள்ள உதாரணங்கள் தற்போது விவாதிக்கபடும் கடன் அட்டை தொடர்பானவைக்கு பொருத்தமாக இருப்பதாக தெரியவில்லை.

தீயவைகளுக்கு மத்தியில் நாம் எப்படி நம்முடைய ஈமானை பாதுகாத்து நல்ல முஃமீனாக வாழ்கிறோம் என்பது தான் நமக்கு இருக்கும் சவால்,.

கடனை கட்ட தவறினால் வட்டி கட்டுவேன் என்று வாக்குறுதி வழங்குவது நம்முடைய ஈமானுக்கு ஏற்பட்டுள்ள சவால் என்பதாகவே என்னால் கருத முடிகிறது. அல்லாஹ் எந்த ஒரு மனிதனையும் அவன் சக்திக்கு மீறி சோதிக்க மாட்டான் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 7:200)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்லாஹ்வுடைய மார்க்கம் இவ்வுலகில் இருக்கும்போது, வட்டியுடனான நேரடி மற்றும் மறைமுக ஆதிக்கமில்லாத வாழ்வு இவ்வுலகில்ஏன் இருக்காது? என்பது தான் நம்மில் எழும் நியாயமான கேள்வியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அதிரை முஜீப் said...

தாஜுதீன் சொன்னது… //நீங்கள் குறிப்பிட்டுள்ள உதாரணங்கள் தற்போது விவாதிக்கபடும் கடன் அட்டை தொடர்பானவைக்கு பொருத்தமாக இருப்பதாக தெரியவில்லை.//

சரி ..! கடன் அட்டை மற்றும் வங்கி தொடர்பான நேரடி கேள்வியையே கேட்கின்றேன். கடன் அட்டை வின்னப்பத்தில் எப்படி தாமதமானால் வட்டி கட்டுவேன் என்று ஒப்பமிடுகின்றோமோ அதே போலதான் வங்கியில் கணக்கு தொடங்கும் போதும் வட்டிக்கு உட்படுவதாகவும் அந்த வின்னப்பத்தில் கையொப்பம் இடுகின்றோம். தற்பொது சொல்லுங்கள்...!. வங்கியில் கணக்கு தொடங்கிய காலத்தில் இருந்து நம் கணக்கில் வட்டி வரவோ அல்லது பற்றோ பதிவு செய்திருப்பார்கள். வங்கி என்பது வட்டியுடன் நேரடி தொடர்பு உள்ள ஒரு நிருவனம் என்று தெரிந்தும் நாம் வங்கியில் கணக்கு தொடங்குவது சரியா....?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அதிரை முஜீப் சொன்னது…வங்கியில் கணக்கு தொடங்கும் போதும் வட்டிக்கு உட்படுவதாகவும் அந்த வின்னப்பத்தில் கையொப்பம் இடுகின்றோம். தற்பொது சொல்லுங்கள்...!. வங்கியில் கணக்கு தொடங்கிய காலத்தில் இருந்து நம் கணக்கில் வட்டி வரவோ அல்லது பற்றோ பதிவு செய்திருப்பார்கள். வங்கி என்பது வட்டியுடன் நேரடி தொடர்பு உள்ள ஒரு நிருவனம் என்று தெரிந்தும் நாம் வங்கியில் கணக்கு தொடங்குவது சரியா....?//

சகோதரர் முஜீப்,

இந்தியாவில் பல வங்கிகளில் வட்டியில்லா சேமிப்பு திட்டம் உள்ளது, இதற்கு நாம் ஓர் வேண்டுகோள் வைக்கவேண்டும் வங்கி மேலாளருக்கு, அந்த வசதி இருக்கும் போது அதை பயன்படுத்தலாமே. இங்கு நான் வட்டிக்கு உடன்படவில்லை என்று தானே அர்த்தம். நாம் உடன்படாமல், அந்த பேங்க் நமக்கு வட்டியை தினித்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியுமா?

வட்டியோடு தொடர்பில்லாத எந்த ஒரு நிறுவனத்தை காண்பது மிக மிக மிக அரிது.வங்கு கணக்கு பண பரிவர்தனை செய்வதற்கான வேறு வழியின்றி தவிற்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால் வட்டி கட்டுவேன் என்று உடன்படுவதற்கும்.
என்னுடைய வட்டி எனக்கு வேண்டாம் என்று சொல்லுவதற்கும், நமக்கு அது வலுகட்டாயமாக தினிக்கப்படுவதற்கு நிறைய வித்தாசம் உள்ளது தானே...

கடன் அட்டை இல்லாமல் என்னால் வழ முடிகிறது.

என் வங்கி கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி சேராத வண்ணம் வங்கிக்கு வேண்டுக்கொள் வைக்கவும் வாய்ப்புள்ளது, மேலும் வங்கி சேமிப்பில் உள்ள பணத்திற்கு வட்டி சேராத வண்ணம் நம்முடைய சேமிப்பை திட்டமிட்டு கையாளும் வழிகளில் நாம் வாழமுடியும் என்பதில் அதீத நம்பிக்கை எனக்கு உண்டு.

அப்படித்தான் வாழ வேண்டும் என்பதைவிட இப்படியும் வழலாமே என்ற நிலைபாடு நடைமுறையில் எனக்கு சிரமம் ஏற்படுத்தவில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

கடன் கொடுக்கள் வாங்கள் தொடர்பான குர் ஆன் வசனத்தையும் வாசித்துப்பாருங்களேன்...

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன் -(குர்ஆன் 2:282)

Yasir said...

//என்னுடைய வட்டி எனக்கு வேண்டாம் என்று சொல்லுவதற்கும், நமக்கு அது வலுகட்டாயமாக தினிக்கப்படுவதற்கு நிறைய வித்தாசம் உள்ளது தானே...// சகோ.தாஜூதீன்...எல்லோரும் கடன் அட்டைகளை எடுக்கும்போது வங்கியின் ரூல்ஸை கடைபிடித்துதான் ஆக வேண்டும்...பேங்க் கணக்கு தொடங்கும் போது அதேபோல் ஒன்றில்தான் நீங்கள் கையெழுத்து இடுகின்றீர்கள்..ஆனால் நம் அனைவரின் “உண்மையான” நிய்யத்தும் வட்டி கொடுக்கமாட்டேன் அந்த நிலையை உருவாக்க மாட்டேன் என்பதுதான்....”மனங்களை” மட்டுமே பார்க்கும் அந்த வல்லோன் நிச்சயமாக இந்தச் செயலை மன்னிப்பான் நாம் வட்டி விசயங்களில் ஈடுபடாத போது....இந்த காலத்தில் கட்டுப்பாடு இருப்பின் “பணம் இருந்தும்” கடன் அட்டையில்லாமல் வாழ்வது.பிற்ப்போக்கு காலத்திற்க்கு தள்ளிவிடும்...இஸ்லாம் விஞ்ஞானத்திற்க்கும் நவீன முன்னேற்றதிற்க்கும் வழிவகுக்கும் / வழிநடத்தும் மார்க்கம்...அதனால்தான் இன்றுவரை இது மங்காமல் ஜொலிக்கின்றது..மற்ற மதங்கள் எல்லாம் மண்ணாகி போய்விட்டது/போய்க்கொண்டு இருக்கின்றது...அல்லாஹ் பாதுகாப்பான்

அதிரை முஜீப் said...

தாஜுதீன் சொன்னது…

//கடன் அட்டை இல்லாமல் என்னால் வழ முடிகிறது.
என் வங்கி கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி சேராத வண்ணம் வங்கிக்கு வேண்டுக்கொள் வைக்கவும் வாய்ப்புள்ளது, மேலும் வங்கி சேமிப்பில் உள்ள பணத்திற்கு வட்டி சேராத வண்ணம் நம்முடைய சேமிப்பை திட்டமிட்டு கையாளும் வழிகளில் நாம் வாழமுடியும் என்பதில் அதீத நம்பிக்கை எனக்கு உண்டு.//


இதைத்தானே நானும் சொல்கின்றேன்...! நீங்கள் வங்கியில் கனக்கு வைக்க கூறும் அதே காரனத்தைதானே நானும் கடன் அட்டைக்கு கூருகின்றேன்...!!

//என் வங்கி கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி சேராத வண்ணம் வங்கிக்கு வேண்டுக்கொள் வைக்கவும் வாய்ப்புள்ளது.//

இதே அளவு கோள்தான் கடன் அட்டைக்கும் வட்டி சேராத வன்னம் பணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.

//நம்முடைய சேமிப்பை திட்டமிட்டு கையாளும் வழிகளில் நாம் வாழமுடியும் என்பதில் அதீத நம்பிக்கை எனக்கு உண்டு.//

நம் கடன் அட்டை கனக்கை திட்டமிட்டு கையாளும் வழிகளில் நாம் வட்டி இல்லாமல் உபயோகப்படுத்த வழி உண்டு, நம்பிக்கை உண்டு என்கின்றேன்.

ஆனால் கடன் அட்டை இல்லாமல் வாழ முடியும் என்ற தங்களின் கருத்தில் எனக்கு மற்று கருத்து இல்லை. அதற்கு உடன் படுகின்றேன். ஆனால் வட்டி இல்லாமலும் இந்த அட்டையை உபயோகப்படுத முடியும் என்பதையும் நான் மறுப்பதற்கில்லை. அதற்காகத்தான் வாதிடுகின்றேன். ஒரேடியாக இது ஹராம் என்று ஒற்றை வார்த்தையில் எனக்கு உடன்பாடில்லை. இது தான் விவாதத்திற்க்கு உரியது என்கின்றேன்.

//ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;//

குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால்,என்று கூட இறைமறை கூறுகின்றது. இங்கே தவனை என்றால் வட்டி இல்லாத தவனை(காலக்கெடு)தானே..!. அதே வட்டி இல்லாத குறிப்பிட்ட தவனை முறையில் நீங்கள் இந்த கடன் அட்டையை கையான்டாள் அது ஹராமாகுமா...?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் முஜீப், அஸ்ஸலாமு அலைக்கும்,

வட்டியில்லாமல் நம்முடைய கடன் அட்டையை பயன்படுத்தி வரவு செலவுகளை நீங்கள் செய்யும் முறையை யாரும் குற்றம் காணவில்லை.

நம்மில் எழும் கேள்வி. நீ எனக்கு கடன் தாரவேண்டும், நான் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி செலுத்த தவறினால் வட்டி கட்டுகிறேன் என்று ஒப்பந்தம் செய்வது சரியா? தவறா? என்பதே

நாம் என்ன உதாரணங்கள் எடுத்துக்கூறினாலும், மேற்கூறிய விசயத்தில் கொஞ்சம் அதிகமாக நம்முடைய ஈமானுக்கு ஒரு சவால் உள்ளது என்பது என்னவோ உண்மை தானே.

அதிரை முஜீப் said...

wa Alaikkum Wassalaam.

மேற்கூறிய விசயத்தில் கொஞ்சம் அதிகமாக நம்முடைய ஈமானுக்கு ஒரு சவால் உள்ளது என்பது என்னவோ உண்மை தானே.

Yes i do agree with you

sabeer.abushahruk said...

சூப்பரான விவாதம் சட்டுன்னு நின்னுடுச்சே, என்னாச்சு, முஜீபும் தாஜுதீனும் ஃபோன்ல பேசிக்கிட்டியலோ?

ஹவ்வெவர், இதுவரை எனக்குத் தெரியாத பல விஷயங்களை முஜீபின் விவாதத்தில் தெரிந்து கொண்டேன்.

அது சரி, முஜீப், கடந்தமுறை தங்களின் ஷார்ஜா வீட்டில் சந்தித்தபோது, "சபீர், ரொம்ப நெஞ்ச நக்குற கவிதையா எழுதாம, நம் சமுதாய்த்திற்கு உத்வேகம் ஊட்டும் கவிதையா எழுதுங்க"ன்னு சொன்னீங்களே, நெஞ்சில் உரமின்றி வாசிக்கலயா?

அதிரை முஜீப் said...

sabeer.abushahruk சொன்னது…

//என்னாச்சு, முஜீபும் தாஜுதீனும் ஃபோன்ல பேசிக்கிட்டியலோ?//

//அது சரி, முஜீப், கடந்தமுறை தங்களின் ஷார்ஜா வீட்டில் சந்தித்தபோது, "சபீர், ரொம்ப நெஞ்ச நக்குற கவிதையா எழுதாம, நம் சமுதாய்த்திற்கு உத்வேகம் ஊட்டும் கவிதையா எழுதுங்க"ன்னு சொன்னீங்களே, நெஞ்சில் உரமின்றி வாசிக்கலயா? //

போன்லே பேசிக்கொன்டால், டக்குன்னு விவாதம் அப்பவே முடிவுக்கு வந்து இருக்கும்...! அதனால் தான் இவ்ளோ..... கமென்ட்....!!

நெஞ்சில் உரமின்றி வாசிக்கலயா?.. நிச்சயமாக வாசித்தேன். ஆனால் இந்த கவிதைக்கு (ஏறத்தாழ) ஏன் இத்தனை மாதம் என்றும் யோசித்தேன்...?.

//வருவதை ஏற்று வாழ்க்கையை வாழ்பவர்
வறுமையைச் சகித்து வான்மறை ஓதுவர்
பொறுமையைக் கொண்டு புண்களை ஆற்றுவர்
மறுமையை நாடி ஒருவனைப் போற்றுவர்//

எனும் அடியையும் வாசித்தேன். இதையே நானும் என் இறைவனிடம் யாசித்தேன். தேன் சிந்தும் கவிதை அது...!. பசித்தேன் என்று அதை திரும்பவும் வாசித்ததால், மறந்தென் எனை நான் கவிதைக்கு கமென்ட் அடிக்க.

இருந்தாலும் இப்போ போட்டு வாங்கிட்டீய என் கமென்ன்ட கேட்டு வாங்கீட்டீய....

அதிரை நிருபரே அமைதியின் ஆளுமைதானே.. அதனால் தான் இதில் வரும் பதிவுகளையும் அமைதியாக தினமும் வாசித்துக்கொன்டிருக்கின்றேன். தேவைப்படும் போது முன் வந்து நிற்ப்பேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.