புறாக்களின் காலில் கட்டி கடுதாசி அனுப்பிய காலங்களிலும் தகவல் தொடர்பு நன்றாகத்தான் இருந்தது, ஒற்றன் வந்து தகவல் சொல்ல வரும் நேரமும் எதிரி நாட்டுப்படை கதவைத் தட்டும் நேரமும் ஒன்றே அமையப்பெற்ற சூழலும் இருந்திருக்கிறது. பின்னர் அனுப்பிய புறாவை சமைத்துச் சாப்பிட்டுவிட்டு தூங்குபவர்களும் அதிகரித்ததால், அந்த தகவல் தொடர்பும் மெல்ல மெல்ல அறுந்து போனது.
இந்திய தபால் / தந்தி துறையின் மகத்தான பணியை எவராலும் மறக்க முடியாது. எல்லா ஊர்களிலும் தபால் காரர் வீட்டுக்குத் தேடிவருவார்கள் அப்படித்தான் இந்தியாவைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 80களில் அதிரையில் காலையிலேயே போஸ்ட்மேனைத் தேடிச் சென்று கடுதாசியைக் வாங்கி வருபவர்களே அதிமாக இருந்தார்கள். ஒரே பெயரில் இருப்பவர்களை மேல்புறம் கீழ்புறம் என்று பிரித்துப் பார்க்கும் போஸ்ட்மேனையெல்லாம் இன்னும் மறக்கத்தான் முடியுமா ?
எழுதிய தபால் போய்ச் சேரும் வரை பொறுமை இருந்தது அதற்கு பதில் வரும் வரை காத்திருப்பும் கசக்காமல் இருந்தது, ஆனால் இன்றோ ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, அல்லது குறுஞ்செய்தி அலைபேசியில் அனுப்பிவிட்டு அது கிடைத்து விட்டதா என்று ஃபோன் போட்டுக் கேட்டுக் கொள்ளும் அவசரம் எதைக் காட்டுகிறது !?
SMS - குறுஞ்செய்தி சிந்திய வினாடிகள் சிக்கென்று பறக்கிறது அங்கே வீடு பூட்டிக் கிடந்தாலும் எல்லையைத் தொட்டு விடுகிறது, தந்தி என்றொரு சேவையே இப்போது இல்லாமல் போகப் போகிறது. இனிவரும் தலைமுறைகளுக்கு அந்தக் காலத்தில் என்று ஆரம்பிக்க தந்தி ஒரு கருவாக இருக்கும்.
சமீபத்தில் நமதூர் சகோதரர் ஒருவர் தனது கூகில் ப்ளஸில் "அந்த காலத்திலேயே ’தந்திய நிப்பாட்டியிருக்கலாம்; பல கெழவிகளின் ‘பகீர்’ பீதி’யான அழுகை அல்லது ஒப்பாரிகளை தவிர்த்திருக்கலாம்;" என்று சொல்லியிருந்தார் !
சரி, அதிருக்கட்டும் நாம பேசுபொருளாக எடுத்துக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன் (சூசியமான அலைபேசின்னும் வச்சுக்கலாம்) வருகை எண்ணிலடங்கா மாற்றங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆடை விலகினாலும் கிளிக் அதனை மேடையேற்றியும் ஒரு கிளிக், அச்சுறுத்தினாலும் கிளிக் இப்படியாக எத்தனையோ கிளிக்கிக் கொண்டே இருக்கவும் வைத்திருக்கிறது.
அடுப்படிக்கு ஒரு ஸ்டேடஸ், அசலூருக்கு ஒரு ஸ்டேடஸ் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
மேற்சொன்னவைகள் சாம்பிள்தான், இனி நீங்களும்தான் சொல்லனும் ஸ்மார்ட் ஃபோன் வரமா / சாபமா !?
வாருங்கள் விவாதிக்கலாம் !
அதிரைநிருபர் பதிப்பகம்
36 Responses So Far:
விவாதம் ஸ்மார்ட் ஃபோனுக்கு மட்டும்தானா? இல்லை பட்டன் அழுத்தி பேசும் [ அது இன்னா போனுபா ] ஃபோனுக்கும்தானா?...
ஏனெனில் என்னதான் நான் நவீனமாக இருந்தாலும் [உண்மை..உண்மையைத்தவிர வேறெதுவுமில்லை] இதுவரை ஸ்மார்ட் ஃபோன் உபயோகிக்கவில்லை. பசங்களுக்கு வாங்கி கொடுத்ததோடு சரி.
நான் இன்னும் சபீர் சொன்னதுபோல் கதவிடுக்கில் வைக்கும் சக்கை போல் உள்ள ஃபோன் தான் உபயோகிக்கிறேன்.
என் ஃபோன் உடைய ஸ்பெசிஃகேசன்.....இதுவரை 234 தடவை கீழே விழுந்தும் இயங்குகிறது...ஸ்மார்ட் ஃபோனின் இந்த வசதி யிருக்கிறதா.
அது சரி இந்த விவாதத்துக்கு தலைமை தாங்குவதற்கு யார் ஓயிட் காட்டன் சர்ட்டில் தோளில் சின்ன டவலுடன் மைக் பிடித்து தலைமை தாங்குவது??
அது இதை பாவிப்பளரை பொருத்து வரமாகவும் மாறலாம் சாபமாகவும் மாறலாம்
சரியான வழியில் நல்ல விஷயங்களுக்கு வியாபாரத்திற்கு மனிதனின் முன்னேற்றத்திற்கு உபயோகிப்பருக்கு வரம் என்றே சொல்லலாம்.
தீய தீய விஷயங்களை தேடுபோருக்கும் தீய விஷயங்களுக்காக உபயோகிப்பவருக்கு சாபம் என்றே சொல்லவேண்டும் இதில் வாதிப்பதற்கு ஒன்றுமில்லை.
ஸ்மார்ட் போன் போன்று எத்துனையோ பொருட்கள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு பேனா, கத்தி,
உடலோடு ஒட்டிய உருப்புக்களில்
வாய், கண், காது, கை கால்
இவை அனைத்தும் பாவனையாளர்களைப்பொருத்து நல்லவையாகவும் மாறும் தீயவைகலாகவும்
மாறுபடும்
அதாவது கட்டுரையாளரின் கூட்டுப்படி வரமாகவும் மாறும் சாபமாகவும் மாறும்
அதிரைமன்சூர்
ஜாஹிர் ஹுசைனின் நிலமைதான் என்னுடைய நிலமையும்
அதான் கதவிடுக்கு, ஸ்பெசிஃகேசன்
இந்த வசதிகள் ஸ்மார்ட் போனில் கண்டிப்பாக கிடைக்காது. ஒரு தடவை கீழே விழுந்தாலே இன்னாலில்லாஹி வ இன்னா இலஹி ராஜிஊன் என்று
ஷஹாதா ஓதவேண்டியதுதான்.
இன்றைய ஸ்மார்ட் ஃபோன் (தந்துமந்தான ஃபோன்) மூலம் ஏராளமான நன்மைகள் குவிந்து கிடந்தாலும் அதற்கு நிகராக தீமைகளும் அதில் இல்லாமல் இல்லை. அதில் அப்ளிகேஷன்ஸ் (செயல்பாடுகள்) அதிகம் இருப்பதாலும் அதன் பொருட்டு அதற்கு அதிகமான அலைக்கற்றை கதிர்வீச்சை உட்கொள்ளும் தன்மை உள்ளதாலும் ஒரு காலத்தில் உலகின் எங்கோ ஒரு மூலையில் கேள்விப்பட்ட புற்றுநோய் மரணங்கள் இன்று ஊர் தோறும், தெரு தோறும், குடும்பம் தோறும் பலவகையான தாக்கத்தில் ஏற்பட காரணமாகிவிட்டது என்றால் அது மிகையில்லை.
ஒரு காலத்தில் ஓலை கொண்டு வந்த புறாக்கள் சில அறுசுவை விரும்பும் மன்னர்களாலும், மக்களாலும் தவறுதலாக புசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று செல்ஃபோன் கோபுரங்கள் சிட்டுக்குருவிகளை புசித்து வருவதாக தினம், தினம் செய்தி வந்த வண்ணம் உள்ளன. நமதூர் தோனா.கானாவையும் காற்றோடு காற்றாக அப்படியே ஓரம் கட்டி ஒதுக்கி விட்டது.
இன்றைய உலகில் நடுத்தர மக்கள் கூட தன் வீட்டின் கழிப்பிட அறையை (கக்கூஸ்) நறுமணம் வீச வில்லையெனினும் துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக, நோய் பரவாமல் சுகாதாரமான முறையில் வைத்திருப்பதில் அக்கறை காட்டுவதில்லை. மாறாக, கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
நிச்சயம் வரமாகத் தான் ஏற்றுக்கொள்ளனும். நவீனங்களை நல்லதுக்கு பயன்படுத்தி அதை உருவாக்க அறிவை கொடுத்த அல்லாவுக்கு நன்றி செலுத்தனும்.
ஜாஹிர் காக்கா போன் சட்டமன்ற எண்ணிக்கையளவுக்கு இது வரை விழுந்திருக்கிறது. நாடாளுமன்றத்தை தொடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஸ்மார் போனை “ஸ்மார்ட்டான” புத்தியுடன் பயன்படுத்தினால் அது வரம்தான் அந்த வகையில்...எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வகையில் ஸ்மார்ட போன் கள் உதவிக்கொண்டிருக்கின்றன..அல்லாஹ் “ஸ்மார்ட்” போனுக்கு ஆயுசை நீட்டி போட்டு வைக்கட்டும்
//அல்லாஹ் “ஸ்மார்ட்” போனுக்கு ஆயுசை நீட்டி போட்டு வைக்கட்டும்.// சகோ. யாசிர், உங்களின் இந்த து'ஆ மேட்டரு ஸ்மார்ட் ஃபோன் கம்பெனிக்கு தெரிந்தால் அவர்கள் உங்களை ஆப்பிரிக்காவின் விற்பனை மேலாளராக ஆக்கி அழகு பார்த்துக்கொள்ளும்......ப்ளேக் பெர்ரியை ஆப்பிரிக்கா பெர்ரி என வெளியிடலாம்....
//ஆப்பிரிக்காவின் விற்பனை மேலாளராக ஆக்கி அழகு பார்த்துக்கொள்ளும்//சகோ.நெய்னா அவர்களே...ஆச்சரியமாக இருக்கின்றது நீங்கள் இதை எழுதியதை பார்க்கும்போது...அல்ஹம்துல்லிலாஹ் எனக்கு அந்த வாய்ப்பு வந்தது....வெஸ்ட் ஆஃபிரிக்காவின் சில நாடுகளுக்கு சாம்சங்கின் கன்ரி மேனஜராக அவர்களின் லைஃப் ஸ்டையில் பொருட்க்களை கையாளுவதற்க்காக...ஆனால் ஆஃபிரிக்காவில் அடிக்கடி தங்கி வேலைப்பார்ப்பதைவிட கேரளாவிற்க்கு அடிமாடாக போய்விடலாம் என்று அனுபவ உண்மை சொன்னதால்...மறுத்துவிட்டேன்...துபாயின் மார்க்கவிதிகளுக்கு உட்பட்டு வாழும் சொகுசு வாழ்க்கையும் இந்த முடிவை எடுக்க தூண்டிவிட்டது....
முதலில், ஜாகிர் வைத்திருப்பதுபோன்ற காலஞ்சென்ற அலைபேசிகள் தாமதமின்றி உடனடியாக நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். 20 முறை கீழே விழுந்தும் உடையவில்லை என்பதெல்லாம் சரிதான். கருங்கற்கள் அத்தனை இலகுவாக உடைவதில்லை என்பது நாடறிந்தது. ஸ்மார்ட் ஃபோன்கள் கவனமாகக் கையாளப்படவில்லையென்றால் அகால மரணமடைகின்றன என்பது உண்மைதான். எனினும், ஸ்மார்ட் ஃபோன்கள் வரமே.
என் வாதம்:
-இதிலுள்ள மென்பொருள்களால் அன்றாட வாழ்க்கையின் அலுவல்கள் பலவற்றை இலகுவாகச் செய்துவிட முடிகிறது.
-செறிவான இணையத்தொடர்பால் மின்னஞ்சல், நெட் ப்ரெளசிங் போன்றவற்றை எந்நேரமும் எவ்விடத்திலும் செய்துவிட முடிகிறது
-ட்டச் ஸ்கிரீன்கள் அவ்வளவு சுலபமாக வீணாகி விடுவதில்லை. ஜாகிர் ஃபோனில் டயல் பேட், குழந்தைகளின் ப்பேம்பர்ஸை விட அதிகமாக அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கிறது.
-ஸ்மார்ட் ஃபோனோடு வெளியே போகும்போது ஏதோ ஒர் இனம்புரியாத தைரியம் வந்து விடுகிறது.
மேலும் என்னென்னவோ இருக்கு, ஞாபகம் வந்தால் சொல்றேன்.
ஸ்மார்ட் ஃபோனின் ஆயுளை நீட்டித்துக் கேட்கும் துஆவுக்காக, ஒரு ஆமீன்.
//ஸ்மார்ட் ஃபோனோடு வெளியே போகும்போது ஏதோ ஒர் இனம்புரியாத தைரியம் வந்து விடுகிறது..//
பாஸ் அது என்ன தாயத்து மாதிரி எழுதியிருக்கீங்க!!
ஸ்மார்ட் போன் நான் வைத்துக்கொள்ள முடியாது காரணம் ஒரு உறையில் ஒரு வாள் தான் வைக்க முடியும் புரியலையா ! நானே "ஸ்மார்ட்"நமக்கேன் ஸ்மார்ட் போன்
இணையத்தோடு இருக்க இருக்கையில் அமர்ந்தால் இடுப்பு வலிக்குமா !?
சமீபத்திய கண்டுபிடிப்பு : வயிறும் வலிக்குமென்று - ஒரு டாக்டரம்மா சொன்னார்கள் !
மேட்டரு அதுவல்ல இப்போ !
என்னோட பாஸ் வாங்குவாரு நான் யூஸ் பன்னுவேன் அதுதான் எனக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் இருக்கும் தொடர்பு அந்த தொடர்பை அப்படியே வீட்டுக்கும் எக்ஸ்டேன்ட் செய்து புள்ளைங்களின் கைக்கு எட்டிவிட வைத்து விடுவேன்னு வச்சுக்குங்களேன்...
ஆனால், எல்லாமே போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்ச்... இப்போ நோக்கிய 101 மாடல் என்னமா பேசுது தெரியுமா ? அங்கே தமிழில் பேசினால் இங்கேயும் தமிழில் பேசுது, அங்கே ஆங்கிலத்தில் பேசினால் இங்கேயும் ஆங்கிலத்தில் பேசுது !
அடா டா ! அதுவல்லவா விரலடக்க அலைபேசி...
ஸ்மார்ஃபோன்களின் பலன்களை விட அது ஊத்திக்கிட்டதும் அதன் பின்னர் நிகழும் சிக்கல்களே ஆபத்தானது... தனிப் பதிவுக்குரிய மேட்டரு அவைங்க !
m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது… //ஸ்மார்ஃபோன்களின் பலன்களை விட அது ஊத்திக்கிட்டதும் அதன் பின்னர் நிகழும் சிக்கல்களே ஆபத்தானது// ஆமா இங்கே நீதிபதி யாரு....!!!!
அப்ஷக்ஷன் யுவர் ஹானர்....எதிர்தரப்பு வக்கீல் உறுதியான ஆதாரம் இல்லாமல் இக்குற்றச்சாட்டை வைப்பதை எதிர்க்கின்றேன்....ஆதாரங்களை தருமாறு ஆவணச் செய்ய கோருகின்றேன்...
வெளிநாட்டுலே/வெளியூர்லே வேலை செய்பவர்களை விடுங்க நம்மூர் மக்கள் கரண்ட் இல்லாத நேரத்திலேயும் இணையத்துலே இணைந்திருக்காங்க என்றால் அது ஸ்மார்ட் ஃபோன் என்ற ஒன்றால் மட்டுமே...
இந்த ஒரு உதாரணம் போதும் என்று நினைக்கிறேன்...
சாபம்: குடும்பத்தினர்/நண்பர்களின் ஒன்றுதல் இல்லாமல் போய்விட்டது. மனைவி, மக்கள், நண்பர்கள் இப்படி தனித்தனியே ஸ்மார்ட் ஃபோன்களோடு மட்டுமே பேசிக்கிட்டிருக்காங்க எல்லோருமே ஒரு அறைக்குள் இருக்கும்போதும்...........
ஜாயிரு,
நீ அந்த ஃபோனை மாற்றாவிட்டாலும்கூட பரவாயில்லை, கழட்டி கொஞ்சம் மராமத்து வேலையாவது பார்த்து வை. ஏன்னா, சமயத்திலே உன்னோடு பேசும்போது ஏசுதாஸ் மாதிரியான உன் குரலை பறவை முனியம்மா மாதிரி ஒலிக்க வைக்குது.
அங்கே கோலாலம்பூரில் உன்னோடு இருக்கும்போது என்னையும் உன் ஃபோனையும் கார்ல தனியா வச்சிட்டுப் போய்டுவியோன்னு லேசா பயமாகவே இருந்திச்சி. ஏதோ 20 தடவை கீழே விழுந்தும் உடையலன்னு பீத்திக்கிர்ரியே, கீழேன்னா பெட்ரோனாஸ் உச்சிலேர்ந்தா விழுந்துச்சு? ஏதோ கார் சீட்லேர்ந்தோ சோஃபாவிலேர்ந்தோதானே விழுந்திருக்கும்? இனி உடையவே உடயாத மாதிரி கடைசியா சர்வீஸ் செய்தவன் ஸ்க்ரூக்கு பதிலா ஃபெவிகால் வச்சி ஒட்னது உனக்குத் தெரியுமா?
உன் பாடாவதி ஃபோனை யாராவது உனக்குப் பிடிக்காத ஆளுக்கு அன்பளிப்பா கொடுத்திட்டு ஸ்மார்ட் ஃபோனுக்கு மார்டா என் வென்ட்ரு. அப்புறம் பாரு, உனக்கு சுக்கிர திசைதான். உன்னை நீயே ஃபோட்டோ எடுத்து ஸ்மார்ட் ஃபோனில் எடிட் செய்தால் உன்னய காக்கான்னு கூப்ட்ரவங்க எல்லாம் தம்பின்னு கூப்பிட ஆரம்பிப்பாங்க. படிக்கட்டு கட்ற பக்குவத்தை விட்டுட்டு மனசு ‘கொலவெறி’ ரசிக்க ஆரம்பிச்சுடும்.
கிவ் அ ட்ரை லா.
Sabeer
//உன் பாடாவதி ஃபோனை யாராவது உனக்குப் பிடிக்காத ஆளுக்கு அன்பளிப்பா கொடுத்திட்டு ஸ்மார்ட் ஃபோனுக்கு மார்டா என் வென்ட்ரு. அப்புறம் பாரு, உனக்கு சுக்கிர திசைதான்.//
பாஸ் இது கூட ஏதோ குடுகுடுப்பை ஸ்டைலில் இருக்கு...Any way I will buy the latest smart phone...already looking for it
//ஆதாரம் இல்லாமல் இக்குற்றச்சாட்டை வைப்பதை எதிர்க்கின்றேன்....ஆதாரங்களை தருமாறு ஆவணச் செய்ய கோருகின்றேன்...//
தம்பி யாசிர்:
ஆதாரம் கேட்டுத்தானே ஆயிரம் இயங்கங்களானோம்.... பரவாயில்லை, வெயிட் பன்னுங்க ஆதாரங்களை திரட்டிக் கொண்டு அடுத்த கூட்டத்திற்கு வருகிறேன்... இப்போ நான் அவசரமா புறப்பட்டுகிட்டு இருக்கேன் (இதுதானே இப்போ டிரண்டு ஊரிலே)
//Any way I will buy the latest smart phone...already looking for it//
காக்காவிலிருந்து தம்பியாக விரும்பும் காக்கா,
இவ்வளவு யோசிச்சிங்க இன்னும் கொஞ்ச யோசிங்களேன்... ஸ்மார்ட் ஃபோனுன்னு சொல்லி உங்களை இந்த உலகை விட்டு ஒதுக்கி வைக்க சதி நடக்குற மாதிரி ஒரு ஃபீலிங்க்...
டச் பன்னா என்ன நடக்கும்னு தெரியும்தானே !
சும்ம சொல்லி வச்சேன்...
இப்போது ஸ்மார்ட் ஃபோன் உபயோகிக்கும் பலர் பிடிக்காத பேச்சு பேசுபவர்களை [ மனைவி நகை வாங்கி கேட்கும்போது / பெரியவர்கள் அறிவுரை சொல்லும்போது ] உடனே இடதிலிருந்து வலதுக்கு டச் ஸ்க்ரீனில் தள்ளுவதுபோல் தள்ளி விடுகிறார்களாம்.
ஒரு முக்கிய அறிவிப்பு:
அபு இபுறாகீமிடம் ரெண்டு ஸ்மார்ட் ஃபோன்கள் இருக்கின்றன.
//ரெண்டு ஸ்மார்ட் ஃபோன்கள் இருக்கின்றன.// - போட்டுக் கொடுக்கிறியாலா !?
காக்கா,
பல்லு விழுந்தா சொல்லு போச்சு - அந்தக் காலம்
செல்லு விழுந்தா(லும்) சொல்லு போச்சு - இந்தக் காலம்...
அப்படி ஒன்னும் சூச்சியமா இல்லே காக்கா....
விரலால் இடமிருந்து வலம், வலமிருந்து இடம் தேய்க்கும்போது கையைவிட்டே ஸ்மார்ட் ஃபோன் எஸ்கேப் !! :)
அதனாலதான் நோக்கியா 101 அவசர அழைப்புக்கு இரன்டு ஜிம்மோடு ஜம்முன்னு இருக்கு இப்போ !! :)
ஸ்மார்ட் போன்
ஒவ்வரு கால கட்டத்திற்கும் ஒவ்வரு நவீனம், நமக்கு இது நவீனம், ஆனால் நம் பேரக்குழந்தைகளுக்கு இது.. நமக்கு எப்படி தந்தி பழயதாகிப்போனதோ அதுபோல .அதனால் , சாபம், வரம் என்ற வரம்புக்குள் ஒரு மனிதனின் அதீத கண்டு பிடிப்பை கொண்டு செல்வதில் எனக்கு உட்னப்பாடு இல்லை. தொலைக்காட்சிப்பெட்டியை எப்படி நாம் 1979-80 களில் ஒரு நவீனமாகப்பார்த்தோமோ, அதுபோல இன்று ஸ்மார்ட் போன்.
இது வரமா சாபமா என்றால், தொலைக்காட்சிப்பெட்டிக்கும், இதே கேள்வியை, 1979-80கலில் கேட்கக்கூடிய அளவுக்கு அன்றைய சூழ்நிலை இருந்தது. அப்பொழுது இந்தக்கேள்வியை யாரும் கேட்கவில்லை. உலகம் முடியும் வரை கண்டுபிடிப்புகள் தொடரும் என்று அல்லாஹ் குரானிலே சொல்லும்பொழுது, நமக்கு அறிவைத்தந்து, உன் அறிவுக்கு விட்டு விடுகின்றேன், நீ பயன் படுத்துவதைப்பொருத்து, என்று அல்லாஹ் ஆறறிவைத்தந்து , உலக முடிவு நாள் வரை க்னடுபிடுப்புகள் தொடரும் என்று சொல்லும்பொழுது, ஸ்மார்ட் போன் சாபம், வரம் என்று சொல்லுதல் நம் அறிவுக்கு அன்யோன்யமாக தென்படுகின்றது.
மேலும் , தந்தி என்ற சொல் அப்பொழுது ஒரு ஆச்சரியமான தொலை தொடர்பு சாதனமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது, ...... போஸ்ட் ஆபீசில்
அந்த கடா கட் என்று டைப் செய்து செய்திகளை அனுப்பும்பொழுது , ஆச்சரிய மாகத்தான் பார்த்தோம். ஆனா இன்று அதை அப்படி பார்க்க முடியாது.
இந்த ஸ்மார்ட் போனைவிட எத்தனையோ உலகில் வரவேண்டியது இருக்கின்றது ( அது ஷைத்தனியத்தையும் கொண்டு வரலாம் அல்லது நன்மையின் பக்கம் கொண்டு செல்வவதாகவோ இருக்கலாம்) ஆனால் வரவிருப்பது என்னவோ உண்மை. ஏனனில், குரானின் கூற்று அப்படி,
மார்க்கத்தை முழுமைப்படுத்தியதாக சொல்லும் அல்லாஹ், துன்யாவை முழுமைப்படுத்தியதாக சொல்லவில்லை. இதை நம்புபவர்கள் , அல்லாஹ்வின் படைப்பை, சாபம் வரம் என்ற சொல்லுக்குள் அடக்காமல் நம் அறிவுக்குள் அடக்கி அதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வரை, அல்லாஹ் உவ்வுலகில் அறிமுகப்படுத்தும் அனைத்தும் , நமக்கு நன்மையைப்பெற்றுத்தரும் வரமே !
அல்லாஹ்வின் படைப்பை கொண்டு நன்மையையே ஏவுவோம்
நன்மையையே செய்வோம்,
அதன் மூலம் நன்மையையே நாடுவோம்.
அதன்மூலம், சுவன இன்பத்தை அடைவோம்.
அபு ஆசிப்.
சமயத்திலே உன்னோடு பேசும்போது ஏசுதாஸ் மாதிரியான உன் குரலை பறவை முனியம்மா மாதிரி ஒலிக்க வைக்குது.
சபீரு உன் காமெடியை டீ குடிசிக்கிட்டே படிச்சேனா கிலீன் பன்ன பங்காளியை கூப்பிட வேண்டியது ஆயிற்று
//அபு இபுறாகீமிடம் ரெண்டு ஸ்மார்ட் ஃபோன்கள் இருக்கின்றன.//
சபீர்,
அதில் ஒன்றை எனக்கு தரச்சொல்லு .
//உன் பாடாவதி ஃபோனை யாராவது உனக்குப் பிடிக்காத ஆளுக்கு அன்பளிப்பா கொடுத்திட்டு ஸ்மார்ட் ஃபோனுக்கு மார்டா என் வென்ட்ரு. அப்புறம் பாரு, உனக்கு சுக்கிர திசைதான். உன்னை நீயே ஃபோட்டோ எடுத்து ஸ்மார்ட் ஃபோனில் எடிட் செய்தால் உன்னய காக்கான்னு கூப்ட்ரவங்க எல்லாம் தம்பின்னு கூப்பிட ஆரம்பிப்பாங்க. படிக்கட்டு கட்ற பக்குவத்தை விட்டுட்டு மனசு ‘கொலவெறி’ ரசிக்க ஆரம்பிச்சுடும்.//
கிவ் அ ட்ரை லா.
சபீர்,
ஜாகிர் உண்மையில் பிழைக்கத்தெரிந்தவன்
இப்படி இருந்தால்தான் சொத்து பத்து சேர்க்கமுடியும்
//இப்படி இருந்தால்தான் சொத்து பத்து சேர்க்கமுடியும் //
காதரு,
எனக்குத் தெரிந்து மேட்டர் அப்டியே உல்ட்டா.
ஸ்மார்ட் ஃபோன் வச்சிருக்கிறவங்கல்ட்டதான் சொத்து பத்து இருக்கு.
இன்னும் யுவர் ஆனர்,
-ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கும் பலர் கணினிப்பக்கமே போவதில்லை. எல்லாம் ஃபோனிலேயே முடிச்சிட்றாங்க.
-சாதாரண் ஃபோனில் ஆடியோ ஃபைல்கள் கேட்கும்போதெல்லாம் காட்சிகள் ப்ளாக் அன்ட் வொய்ட்டில் கண்முன் விரிகின்றன. ஸ்மார்ட் ஃபோனில் கேட்கும்போது எல்லாம் டிஜிட்டல் கலர்ஃபுல்லாத் தெரியும்
-ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் பொதுவாக மற்ற ஃபோன் வைத்திருப்பவர்களைவிட இளமையாகத் :-) தெரியும்படி ஒரு மாயை இருந்து வருகிறது.
-மன்சூரும் காதரும் தனித்தனியாக ஸ்மார்ட் ஃபோன் வைத்தில்லாவிடினும் கூட்டுச்சேர்ந்து ஒன்னு வைத்துக் கொள்வது உடம்புக்கு நல்லது, கைகால் மூட்டு வலி வராம பார்த்துக்கும். பித்தவாத ஜுரத்துக்குல்லாம் நல்லது. (எதையாவது சொல்லி வாங்க வைக்கலாம்னுதான்).
-ஆஸ்பிட்டல், அரசாங்க அலுவலகங்கள், ரயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் இன்னும் எங்கெல்லாம் தேமே என்று காத்திருக்க வேண்டியிருக்கிறதோ அங்கெல்லாம் ஸ்மார்ட் ஃபோனை வைத்து ரெண்டு மூனு கவிதை எழுதிவிடலாம்.
இப்படி பல.
-
ஸ்மார் ஃபோன் / ஸ்மார்ட் டிவைஸ் வைத்திருப்பவங்க கவணத்திற்கு !
ஸாம்சங் கேலக்ஸி நோட் 10.2 கையில் அழகாக ஏந்திக் கொண்டு படிப் படியாகத்தான் இறங்கி வந்தான் பொடிப்பையன், நானும் படி படி என்றேன்... ஒகே ஒகே என்று சொல்லிக் கொண்டு வந்தவன் கடைசிப் படி வந்ததும் பிடி தளர்ந்து வீழ்ந்தது தரையில் அந்த ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்மார்ட் டிவைஸ் !!!!
அவ்வளதான், உறைந்த கடப்பாசியில் கால் வைத்த மாதிரி தெறிப்பு !
ஊரைவிட்டு வந்ததும்,
இன்றுதான்... "அன்னாத்தே, டிராவலில் கண்ணாடி வெடித்து விட்டது என்றதும்..."
ஸ்மைல் செய்துவிட்டு "பரவாயில்லை நாங்க சரி செய்து விடுகிறோம்"னு சொன்னதும்.
'அட இவ்வளவு இலகுவாக முடிகிறதே என்று பின்னாடி தளர்ந்து உட்கார்ந்தேன் அந்த கஸ்டமர் சர்வீஸ் காரன் முன்னாடி'
அடுத்த ஸ்மைல், "வாரண்டி ஒரு வருசம்" என்றதும் அப்பாடா நெஞ்சில் பால் வார்த்தான் புன்னியவான்னு நினைத்துக் கொண்டே அடுத்த இரண்டு நாட்களில் ஸ்ஸ்ஸ்ஸ்மார்டாக ரெடியாகிடும்னு நெனச்சுகிட்டு இருக்கும்போது....
அடுத்து "கண்ணாடிக்கு வாரண்டி இல்லை, அதை மாற்றினால் வாங்கிய விலையில் பாதியின் விலை"யைச் சொன்னதும் இன்னொரு முறை கத்தி போட்டு கீறிய கடப்பாசி போன்று மனசு வலித்தது...
அடப்போங்கடா நீங்களும் உங்க ஸ்மார்ட் டிவைசும்னு... கெளம்பி வந்துட்டேன்...
இவ்வ்வ்வ்ளோவும் இன்றே நிகழ்ந்தது....
என்ன ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய ரசூலையும் தொடர்பு கொள்ள முடியாது. இந்த மாதிரியான போன்களை எல்லாம் பள்ளிக்கு கொண்டு வந்து அந்த போனை ஆப் செய்யாமல் அடுத்தவர்களுடைய தொழுகைகளையும்,மற்ற அமல்களையும் கெடுத்து விடுகிறது. நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன்கள் புதிது புதிதாக வர ஆரம்பித்ததும் மனிதனுக்கு குழப்பங்கள் ஏற்பட்டு விடுகிறது
பிரதர்ஸ்,
- தமிழுக்கான பெட்டியில் பின்னூட்டம் தட்டச்சிட்டு,
- கருத்தை உள்ளிடுக பெட்டியில் போட்டு
- வெளியிடு பொத்தானை அழுத்தி
- ஏதாவதொரு கணக்கை திறந்து காட்டி
- நெறியாளர் நெற்றிக்கண் திறப்பதற்குள் பின்னூட்டமிட்டு....!!!
ஹைய்யோ...
பிரதர் WhatsApp இருக்கா?!
பின் தடமறிதல் கருத்துகள்(Followup Comments) @gmail.com க்கு வேறு அனுப்பப்படுமாம்..
//அது சரி இந்த விவாதத்துக்கு தலைமை தாங்குவதற்கு யார் ஓயிட் காட்டன் சர்ட்டில் தோளில் சின்ன டவலுடன் மைக் பிடித்து தலைமை தாங்குவது??//
சகோதரர் ஜாகிர் அவர்களை இந்த விவாதத்துக்குதலைமை ஏற்று தரும்படி கேட்டுகொள்கிறேன் ஏன் என்றால் விவாத மேடைக்கு முதல் பின்னுட்டம் இட்டவரையே தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இத யாராவது வழி மொழின்கப்பா .
ஆமா சகோதரர் ஜாகிர் அவர்களே நீங்க ஆங்கிலத்தில் 87./. முதல் மார்க்கா அதான் உங்கள் டீமில் நால்வர் அணியில் ஒருவர் (நால்வர் அணி என்றதும் நெடுஞ்செழியன் அணி அல்ல) அமெரிக்க காரர் ., மலேசியா காரர்.. புகைப்பட காரர் ,.துபாய் காரர் அந்த நால்வரில் ஒருவர் அடிக்கடி நான் கடைசி பெஞ்ச் .,கடைசி பெஞ்ச்ன்னு சொல்லிக்கிட்டுருக்கரா.அதற்க்கு விளக்கம் இப்ப தான் தெரிஞ்சுது
.
நான் ஒரு முறை சென்னை விஜயா ஹாஸ்பிடல் எதிரில் உள்ள உணவகத்திலிருந்து எதிரில் உள்ள விஜயா ஹாஸ்பிடலுக்கு அவசரத்தில் ரோட்டை கிராஸ் செய்த போது சட்டை பையில் இருந்த நோக்கியா அதாங்க( கருங்கல்லு) தவறி கிழே விழுந்துவிட்டது அப்போது அவ்வழியே வந்த 12 B பஸ் (வடபழனி- பட்டினப்பாக்கம் ) சும்மா நம்ம கருங்கல்லில் ஏறி இறங்கியது அதாங்க நம்ம நோக்கியா போனில். போனுக்கு எதாவது ஆகி இருக்குமோ என்று எடுத்து பார்த்தால் பேட்டரி யை கலட்டி மாட்டியவுடன் போன் ஒ கே . பஸ் டயர் பஞ்சர் ஆகியிருந்தாலும் ஆகியிருக்குமோ தவிர நம்ம போன் ஓகே அந்த போன் என்னிடம் உள்ளது சகோதரர் ஜாகிர் அவர்களே அதை பெடனமொஸ் டவரில் ட்ரை பண்ணனும் . நமது ஊருக்கு நோக்கியா போதும் தங்கை குழந்தைகளோ உறவினர் நண்பர் குழந்தைகளோ போனை எடுத்து கிழே போட்டால் கூட ஒரு பதஷ்டமும் படவேண்டியதில்லை .ஆனால் வெளிநாட்டில் ஸ்மார்ட் போனின் சுகமே தனி தான் காரில் செல்லும்போது நேவிகடர் தேவை இல்லை .ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் ஸ்கைப்பில் நடந்துகொண்டோ பார்க்கில் உட்கார்ந்துகொண்டோ சிடார்புக்ஸில் உட்கார்து காபி குடித்துகொண்டோ பேசி கொள்ளலாம் அப்படியே இ மெயில் செக் பண்ணலாம் டிக்கெட் புக் பண்ணலாம் அதிரை நிருபர் படிக்கலாம் ஆனால் கமெண்ட்ஸ் வீட்டுக்கு வந்த பிறகு நோட் புக்கில் தான் அடிக்கிறேன்
To Brother M.B.A அஹமது
சிடார்புக்ஸில் = STARBUCKS
பெடனமொஸ் டவரில் = PETRONAS TOWER [ TWIN TOWER ]
முடிந்த அளவு சரி செய்திருக்கிறேன். இப்படி செளகார் பேட் சேட்ஜி மாதிரி எழுதியதை என்னைப்போலும் / கடைசி பெஞ்ச் என்று முன்னால் இருக்கும் சபீரும் திருத்த வாய்ப்பு தந்தமைக்கு நன்றி
//ஆமா சகோதரர் ஜாகிர் அவர்களே நீங்க ஆங்கிலத்தில் 87./. முதல் மார்க்கா//
அது 1973 ல் என்பதற்காக 95% என்று கூட எழுதலாம். [ யார் போய் செக் பன்னப்போராங்க ] இருந்தாலும் உண்மையை எழுதுவதில்தான் நிம்மதியிருக்கிறது.
பொய் சொன்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையை சொல்ல ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை.
Assalamu Alaikkum
Generally people purchase Smart Personal Gadgets(PDA, Smartphones, Tablets etc) to 'show' themselves smarter.
Actually people should be intelligent and smarter enough to handle and use those devices. Inherent technology orientation of mind is necessary.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
* Gadget I use : HTC P4350, Windows Mobile 5.0 purchased in June 2007.
* Have researched, evaluated and received feedbacks from different set of gadget users - from iPhone, BlackBerry, HTC, iPad, Samsung Galaxy phones and tablets, and china tablets.
http://kalvikalanjiam.com/tamil/2013/06/22/smart-phone-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3/
Post a Comment