அசத்தும் மொழிகளுக்கும் மயக்கும் சாப்பாட்டிற்கும் ஆளுக்கொரு பிரச்சினைக்கும் ஆங்காங்கே அசைபோடும் சந்தோஷத்திற்கும் என்றும் குறைவில்லாத அதிரை மண்ணின் மைந்தனின் கையில் இருந்த கேமராக் கண்ணுக்கு சிக்கியதை அப்படியே சிந்திக்கத் தூண்டும் சித்திரமாக தொடர்ந்து அதிரைநிருபரில் வெளிவருவதை நன்கறிவீர்கள்.
இதோ மீண்டும் தொடர்கிறது சகோதரர் ஷஃபி அஹமது அவர்களின் கேமராப் பார்வையும் அதன் கோர்வையும் உங்களின் ரசனைக்கு. - அதிரைநிருபர் பதிப்பகம்.
நேற்று (29-06-2013) சட்டென்று கண்ணில் பட்ட சென்னை மெரினா கடற்கரையின் கலங்கரை விளக்கு கோபுரத்தின் கம்பீரமான அழகு ! மேகங்களின் அணிவகுப்பும் அசத்துகிறது.
சென்னையின் பாலம் ஒன்றின் அலங்கோலம் மழை போட்ட கோலங்களை இப்படிக் கண்டிருப்பவர்கள் எத்தனை பேர் !?
மேகங்களின் ஆடையலங்கரங்களை ஜவுளிக்கடையொன்றி விரித்து வைத்தால் பெண்களின் அலைமோதல் அங்கே கரை ஒதுங்கும்.
வாருங்கள் தொடர்ந்து இன்னும் ரசிக்க ! என்று வழிமேடையமைத்து அழைக்கிறது சாலையோர பசுமைச் சுவர்கள்.
ஷஃபி அஹ்மது
சித்திரங்களின் சிற்பி
12 Responses So Far:
காலைவேளையில் கண்ணுக்கு விருந்து. பாராட்டுக்கள்.
படங்கள் அனைத்தும் சூப்பர். மேகங்களின் அணிவகுப்பு இவ்வளவு அழகாக இருப்பது நம் பகுதியில் மட்டும்தான் என நினைக்கிறேன்.
மேகங்களின் வர்ணஜாலங்களை தங்களின் கைக்குள் அடைக்கலம் புகுந்த
கேமரா தனக்குள் அடக்கியது அழகிய காட்சிகளை.
வால் பேப்பர் விற்கும் கடைக்குள் புகுந்து , இந்த காட்சி என்ன விலை ? என்று
கேட்ட அனுபவத்தை ஏற்ப்படுத்துகின்றது உங்களின் இந்த காட்சி பட்டியல்.
வாழ்க உங்கள் கேமரா
வளர்க உங்கள் இயற்கை சிந்தனை.
அபு ஆசிப்.
1. கலம் கறையை அடைவதற்குள் அப்படி என்ன உனக்கு அவசரம் என மேகத்தை எச்சரிக்கிறது கலங்கரை விளக்கம்.
2. உலக மகா நாற்றத்தை தனக்கு கீழே மறைத்து சென்னையை அழகு படுத்தி தன்னுடைய நல்ல என்னத்தை வெளிப்படுத்தும் நேப்பியர் பாலம்.
3. மும்முனையில் போட்டி போட்டு பூமியில் கொட்ட துடிக்கும் மேகம் ,
4. மேகத்தை பார்த்து நீ என்னை மறைக்காவிட்டால் நான்தான் அழகு என்கிறது வானம்.
5. நான் உன்னை மறைத்தால் தான் உனக்கு அழகு என்கிறது கார் மேகம்.
6. அதையும் தாண்டி நான் உங்களோடு சேர்ந்தால் தான் உங்கள் எல்லோருக்கும் அழகு என்ற உண்மையை எடுத்து வைக்கிறது நீரோடை.
7. மேலே.....வானம் கோபப்பட்டதால் அதனுடைய அழகை மறைத்து மறுபடியும் அழுக்காக்கி விட்டது. மேகம்.
8. அனைத்திற்கும் மேலாக நான்தான் பூமியை அழகு படுத்துகிறேன் என்று ரம்மியமான காட்சியுடன் வரிசையாக நிற்கிறது மரங்கள்.
Above all.... தன்னுடைய கவித் திறமையால் அதிரை நிருபறை அழகு படுத்தி கொண்டிருக்கும் மகா கவி சபீர் காக்கா, எதாச்சும் IDEA சொல்லி இதை எப்படி நல்ல கவிதையாக மாத்துரதுனு வெலக்குனா HAPPIYA இருக்கும்.
குறிப்பு:
கை முஷ்டி மடக்கி
விரல் நீக்கி
வானைச் சுட்டும்
கலங்கரை விளக்கம்
கடலாடி கரையாடி
நீராடி
நீராடிய ஆட்டம் ஓயுமுன்னே
வான் வாழ்வை நினை
என
நீ வாழும்
கணங்களை விளக்கும்!
வர்ணஜாலம்:
மழையில் நனைகிறது பாலம்
ஒளியில் நனைகிறது மழை
தார்ச்சாலையில்
வண்ணவண்ணக் கோலங்கள்
யார்ச்சேலையின் வடிவங்களோ
பெய்யுமுன் மழை:
புகைமூட்டம் போன்ற மேகமூட்டம்
எப்போதுமே காணத் தேட்டம்
பெய்வதற்குள்
காமிராவுக்குள்
பிடிக்கப்பட்ட மழை
மெய்யழகு.
மழை மிரட்டல்:
இரண்டு வாரங்களாக
அமீரகத்தில்
மழை மிரட்டல் தொடர்ந்தது
காசு கொடுத்துக் கூட்டிவரப்பட்டக்
கட்சித் தொண்டர்களைப் போல
கார்மேகங்கள் திரண்டன
கயிறு கட்டிக் கட்டுப்படுத்தப்பட்டதுபோல
ஒன்றோடொன்று
மோதிக் கொள்ளாமலும்
முழங்காலும் மின்னாமலும் திரண்டு
ஊரே இருண்டு கிடந்தது
அடைமழைக்கான
அத்துணை அடையாளங்களோடும்
காற்று வீச்த்தீர்த்தது
மணல் காற்றின் புயலையே
அநாயசமாகச் சந்தித்திருக்கும்
மண்ணின் மைந்தர்கள்
மழைக்குத் தயாராக
வீடுகளை நோக்கி விரந்தனர்
மறுநாள் காலையில்
வாகனங்களின் மேலான
அம்மைத் தளும்புகளிலும்
சாலையின் இருமருங்கிலும்
தேங்கிநின்ற சொற்ப நீரிலும்
இந்த
சீஸனுக்கான ]
மழை மிரட்டல் நிறைவுற்றிருந்தது
மேகங்களின் போர்வை
யூகங்களை தகர்தெரிந்தது
சாலையை கழுவுகிறது !
கவித்துவமான படங்களை கவிஞர்களின் பார்வையில் பட்டால்...
//மழையில் நனைகிறது பாலம்
ஒளியில் நனைகிறது மழை
தார்ச்சாலையில்
வண்ணவண்ணக் கோலங்கள்
யார்ச்சேலையின் வடிவங்களோ//
சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் ! -
இபப்டித்தான் கவிக் காகாவின் வரிகள் அமையும் ! அருமை !
//புகைமூட்டம் போன்ற மேகமூட்டம்
எப்போதுமே காணத் தேட்டம்
பெய்வதற்குள்
காமிராவுக்குள்
பிடிக்கப்பட்ட மழை
மெய்யழகு.//
இப்படி போட்டு வாங்குவதற்காகவது ஷஃபின் சிற்பங்கள் தொடரும் !
அத்தனையும் கொள்ளையழகு
அதன் பின் கவி இன்னும் அழகு!
1)
கரைதேடும் மாலுமிக்குக்
கலங்கரை விளக்கம்
இரைதேடும் பறவைகட்கு
இம்மேகங்கள் மார்க்கம்!
2)
மின்வெட்டு நேரத்தில்
மின்னொளி கண்டதால்
கண்பட்டுப் போகுமுன்பு
காமிராவில் தஞ்சம்!
3)
தீக்குச்சி இல்லாமல்
தீமேகம் செடிகளால்!
4)
மேகங்களின் அணிவகுப்பை
மாண்புமிகு பனைமரம் ஏற்பு!
5)
வானமகள் கார்குழலும், காதோரம் வைத்து
வசீகரத்தைக் கூட்டும் பச்சைத் தோடு!
6)
மேகமில்லா வானும் அழகில்லை;
நீரில்லா நிலமும் அழகில்லை
வேகமில்லாக் காற்றும் வீசாமல்
வெற்று மரமும் அழகில்லை!
7)
வியர்த்து நீந்தும் மேகங்களை
”விசிறி”யால் வீசும் பனைமரங்கள்!
8)
முகவரிகள் தொலைத்திட்டு அலையும்
முகிலங்கட்குத் திசைகாட்டும் பனைமரம்!
9)
பச்சைப் பட்டுச் சேலைக்கு
“பார்டர்” கட்டும் சாலை!
முகிலே! முகிலே! மழைகொள் முகிலே! அருகில் வாராய்
அகில முழுதும் அலையும் உன்றன் அயர்வை அறிவேன்
Post a Comment