Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கஞ்சி வருதப்பா...! - பகுதி - 1 of 2 52

அதிரைநிருபர் பதிப்பகம் | August 04, 2013 | , , , ,

கிபி 1950 ம் வருடம் தஞ்சாவூர் ஜில்லா பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் இருக்கும் ஹாஜா செய்கு அலாவுதீன் தர்காவிலும் அத்துடன் சேர்ந்து இருக்கும் தொழுகிற பள்ளியிலும் ரமளான் மாதம் பிறை 1-ல் இருந்து 30 வரை நடந்த நோன்பு கஞ்சி பற்றிய குறிப்புகள் முஹம்மது ஃபாருக் என்ற நானும் என் சக தோழர்கள் மூன்று நான்கு பேர்களும் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்க நடத்திய நாடக நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

நானும் என் நண்பர்களும் அப்போது போலீஸ் பள்ளிக்கூடத்தில் முறையே மூன்றாவது வகுப்பும் ஒருவர் நான்காவது வகுப்பும் படித்துக் கொண்டிருந்தோம். ‘போலீஸ் பள்ளிக்கூடம்’ என்றதும் நாங்களெல்லாம் அப்போதே போலீஸ் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தோம் என்று எண்ணிவிட வேண்டாம். நம் ஊர் மெயின் ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருக்கும் Hindu Boys Board School அதாவது H.B.B.S. என்று அன்று சொல்லப்பட்ட ஆரம்ப பாட சாலையில் பையில் சிலேட்டுடனும் சிலேட்டுக் குச்சியுடனும்  இரண்டொரு புஷ்தகங்களுடனும்  படித்த காலம். சிலேட்டுக் குச்சியின் நீட்டம் அதிக பட்சமா போனால் மூனு இஞ்சிதான். சிலேட்டில் எழுதி வாத்தியாரிடம் கொடுத்தால் அவர் ஒரு வட்டம் அல்லது ரவுண்ட் போட்டு  60 / 100, 30 / 100 என்று மார்க் போட்டு கொடுப்பார் 100 / 100 வாங்கியதாக நினைவு இல்லை. ஆனால் 0/100 100 / 0 வாங்கியவர்களில் நானும் ஒருவன்  0/100 வாங்கியதில் எனக்கு ஒரு திருப்தி என்னவென்றால் 100 / ஒருசைபர் மட்டும் போட்டதுதான். 000 / 100 சைபர் போடாமல் விட்டதே ஒரு சந்தோசமான செய்திதானே? !

எங்களின் காலை BREAK-FAST நீர்ச்சக் கஞ்சி அதில் உரிச்சு போட்ட  வெங்காயம். அப்போ சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் என்ற வயசு சைஸ், ஜாதி பாகுபாடு ஏதும் இல்லை. வெங்காயம் என்றால் அது வெங்காயம் தான். அப்போது அதில் சமதர்ம சமத்துவ நிலை நிலவியது. ‘ஒன்றேகுலம்- ஒருவனே தேவன்’ என்பதுபோல ‘ஒரே வெங்காயம் ஒரே கஞ்சி!’ நாங்கள் வெங்காயம் போட்டு கஞ்சி குடிச்சது ஈ.வெ.ரா. பெரியாருக்கு எப்பிடியோ தெரிஞ்போச்சு! அவர் மேடைக்கு மேடை  ‘அடே வெங்காயமே!’ ‘அடே வெங்காயமே!’  என்று எங்களை  கிண்டலடிக்க ஆரம்பிச்சுட்டார். போறவங்க வர்றவங்களெல்லாம் எங்க முகத்தையே பாக்க ஆரம்பிச்சுட்டங்க. எங்களுக்கோ வெட்கம் பிச்சு திங்க ஆரம்பிச்சிடிச்சு.

எங்களுக்கோ வெட்கம் ஒரு பக்கம் கோபம் ஒரு பக்கம். இப்படியே பெரியாரை பேசவிட்டா சரியா வராது. நாங்க நாலஞ்சுபேர் ஒன்னு சேர்ந்து போய் தி.மு.கவை சேர்ந்த N.S.இளங்கோ அவர்களை கண்டு விசயத்தைச் சொன்னோம். “அப்படியா? நீங்க வெங்காயம் போட்டு கஞ்சி குடிச்சாலும். வெங்காயம் போடாமே கஞ்சி குடிச்சாலும் அல்லது வெங்காயத்தை மட்டும் திண்டாலும் அவரு கஞ்சி-வெங்காயம் ரெண்டையும் மேடைக்குமேடை ஒடை ஓடைன்னு போட்டு ஓடைச்சுகிட்டேதான் இருப்பார்’’ என்றார்.

“கஞ்சி  அவருக்கு என்ன பாவம் செஞ்சுச்சு? சாமி’, புராணம்தானே அவருக்கு எதிரிகள்” என்று நான் கேட்டேன்.   ‘’ஆ...  அப்புடி கேளு!  நீங்கள்லாம் சின்னபுள்ளைய!  விபரம் விளங்காது சொல்றேன் கேட்டுக்கோங்கோ! அறிஞர்  அண்ணா, மு.கருணாநிதி, நான்  எல்லாம் பெரியார் கட்சியிலே இருந்தோம். அப்புறம் அவரை விட்டு விலகி தி.மு.க.ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சோம். அதனாலே அண்ணா மேலே பெரியாருக்கு கோவம், அண்ணா  பிறந்த ஊர் காஞ்சிபுரம். இதை ‘கஞ்சி’ என்றும் சொல்வார்கள். அதனாலே ’காஞ்சி, கஞ்சி ’வெங்காயம்’ என்றால் பெரியாருக்கு அலர்ஜி.. எங்கே போனாலும் எங்களை தாக்க ஆரம்பிச்சுடுவார்.’’ என்றார் N.S.இளங்கோ.

‘’அண்ணா ஊரு காஞ்சிபுரம் அதனாலே ’கஞ்சி’ன்னாலே அவருக்கு புடிக்காதுன்னு சொல்லுறிங்க. சரி! ஒத்துக்குவோம். ஆனா வெங்காயத்தை ஏன் வம்புக்கு இழுக்கிறார். வெங்காயம் அவரை என்ன செஞ்சுச்சு?” இது என் துணை கேள்வி! ‘’அப்புடி கேளுடா என் கப்புட்டி வாயா! என்னை உடமாட்டிய போலே இருக்கே. என்னையும் போட்டு கஞ்சி காச்சுடு வியலோ?’’ என்று செல்லமா ஒரு போடு போட்டுட்டு சொல்ல ஆரம்பிச்சார். ‘’நாங்கள் அவரை விட்டு பிரியும் போது அவர் மீது எங்களுக்கு இருந்த பாசத்தாலே நாங்கள் எல்லாம் அழுதே விட்டோம். அண்ணா அழுதார். இன்றைய தி.மு.க.வின் முன்னணி தலைவர்களை உருவாக்கியவர் பெரியார்தான். அந்த கட்சியில் நாங்கள் தொண்டர்கள் போல் இல்லை அவருடைய பிள்ளைகள் போல நாங்கள் வளர்ந்தோம், அவருக்கு பிள்ளை இல்லை. தன் பிள்ளைகளிடம் காட்ட வேண்டிய அன்பையும் பாசத்தையும் எங்களிடம் காட்டினார் அதேபோல் நடத்தினார் என்று சொல்வதைவிட எங்களைத் தன் பிள்ளை போல் வளர்த்தார் என்றே சொல்ல வேண்டும். பிரிவு வந்தபோது பாசமும் பந்தமும் உடைந்தது. பாசமும் பந்தமும் உடைந்தபோது அது உருகி கண்ணீராய் ஓடியது. பெரியாரும் அழுதார், நாங்களும் அழுதோம். அவர் கண்ணீரும் எங்கள்கண்ணீரும் ஒன்று கலந்து ஆறுபோல் ஓடியது. கண்ணீர் வழியவழிய நாங்கள் தி.க.வை விட்டு வெளியேறினோம். அதனால் எங்களை ’கண்ணீர் துளிகள்’ என்றார். நாங்கள் கண்ணீர் விட்டதெல்லாம் ‘வெறும் நடிப்பு என்றார்.

வெங்காயத்தை உரிச்சா கண்ணில் நீர்வரும் அல்லவா? அதுபோலவே ‘நாங்களும் வெங்காயத்தை உரிசுட்டு கண்ணீர் விட்டோம்’ என்று சொன்னார். அதனால்தான் பெரியார் போற இடமெல்லாம் ’’அடே வெங்காயமே! அடே வெங்காயமே!’’ என்று சொல்கிறார். அவர் தி.மு.க. காரங்களை தான் கிண்டல் பண்றாரே தவிர உங்களை அல்ல. வீட்டுக்கு போய் நிறைய வெங்காயத்தை நோம்பு கஞ்சியிலே போட்டு நல்லா குடிங்க!” என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்த புதிது, வறுமை, பஞ்சம், பிணி, அறியாமை இவைகளின் ஆட்சியில் நாடே மாட்டிக் கொண்டு இருந்த நேரம் 95% குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கி  வதை பட்ட காலம். பள்ளி செல்லும் எங்கள் பாதங்களுக்கு செருப்பு கிடையாது. பணக்கார முதலாளிகள் கூட செருப்பு போட மாட்டார்கள். காலில் இரண்டு கட்டைகள்தான்.

தொழுகிற பள்ளி வாசலில் குதி உயர்ந்த  HIGH HEEL மிதிரிக் கட்டைகள் தான் நிறைய கிடக்கும். ‘’செருப்பால் அடிப்பேன்’’ சப்பாத்தால் அடிப்பேன்’’ என்ற பேச்சே அப்போது கிடையாது. ‘மிதிரி கட்டையால் அடிப்பேன்!”” என்றுதான் சொல்வார்கள்.  பொதுவாகவே ‘கட்டை’ என்று சொல்வதே வழக்கம் ‘மிதிரி’ கட்டையா அல்லது ‘மிதிறி’ கட்டையா?’ ‘மிதி ஏறி’ கட்டை’ என்ற சொல் திரிந்து ‘மிதிறி’ கட்டை ஆனதோ!. அந்தக் கட்டைதான் இல்லையே அதைப் பத்தி இப்போ நமக்கு எதுக்கு ஆராய்ச்சி. நம்ம நம்ம கட்டைக்கு நாம தேட வேண்டியதை தேடிக் கிடுவோம். 

குறிப்பு: இப்பொழுது பள்ளிவாசல்களில் செருப்புகள் காணாமல் போவது போல் அப்போது கட்டைகள் காணாமல் போனதில்லை; போட்டது போட்டபடி அப்படியே ஆடாமே அசையாமே ‘கட்டையா’ கிடக்கும். காரணம் அந்த காலத்தில் அவங்க அவங்க கட்டைக்கு அவங்க அவங்களே சொந்தமா தேடிக்கிட்டாங்க [Self-Help].

இப்போது நாம் நோன்பு கஞ்சிக்கு வருவோம். நோன்பு மாதம் வந்ததும் கடல்கரை தெருவில் அரை கிடா-சாபு காய்ச்சும் நோன்பு கஞ்சி நினைவுகள் மனத்திரையில் கமகமவென ஓடும். அதை வாங்கி குடிக்க நாங்கள் போட்ட குட்டிக் கரணங்கள் எல்லாம் எனக்கு அந்த நாள் ஞபாகத்தை ஒரு கலக்கு கலக்கியது’ இளமை நினைவுகள் முதுமையில் இன்பம் அது முதுமைக்கும் கொஞ்சம் இளமையையும் ஊட்டுவதே  இந்த நினைவுகள்தான். 

ஒரு மனோதத்துவ ஆய்வாளர் சொல்கின்றார் முதுமையை பற்றியே நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்.  ‘இளமையாகவே இருக்கிறோம்’ என்றே எண்ணுங்கள். இளமைக் காலத்தில் அணிந்த ஆடைகளையும் ஆடிய ஆட்டங்களையும் எண்ணி இப்போது கவலைப்படாதீர்கள். அதை நினைத்து அதுபோலவே இப்போதும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இளவயதினர் அணியும் ஆடைகளையே அணியுங்கள்.  இளமைச் சிந்தனையை முதுமையோடு பேரம் பேசாதீர்கள்..‘’ இனிமே நமக்கு இங்கே என்ன இருக்கு? வயசாச்சு போய் சேரவேண்டிய இடத்துக்கு போய் சேர வேண்டியது தான்’ என்றும் ‘சட்டி சுட்டதடா ’கை’விட்டதடா’ என்ற பட்டினத்தர் போன்றவர்களின் ‘சிந்தனை’யை விட்டுடுங்கள். ‘அனுபவி ராஜா! அனுபவி!’ வழியில் போகலாமே!. ஆனால், நம்முடைய பாரம்பறிய பிற்போக்கு சிந்தனையாளர்கள் நடுவே நாம் அப்படி நடப்பது கொஞ்சம் கஷ்டமே!

WHEN YOU ARE IN ROME DO AS ROMANS DO என்ற பழமொழியை பொருத்தமில்லாத இடத்திலும் நேரத்திலும் சொல்கிறார்கள். ’பழமொழிகளை மெய்பிக்கவோ அல்லது உயிர்ப்பிக்கவோ’ நாம் உலகில் பிறக்கவில்லை’. என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

இளம் வயதினர்களுக்கு மட்டும் என்று சொல்லப்பட்ட சட்டையை போட்டுக் கொண்டு ஒரு கல்யாணத்திற்கு போனேன்.

"பாருக்! உன் வயசு என்ன?  இந்த வயசில் இந்த இளவயசு காரனுவ போடுற சட்டையை போட்டுருக்கியே? நல்லாவா இருக்கு?” என்று அட்வைஸ் செய்தார் ஒருவர்.  

நான் சொன்னேன் “கடையில் போய் சட்டை கேட்டால் உங்கள் சைஸ் என்ன என்று தான் கேட்கிறார்களே தவிர பிறந்த வருஷம் மாதம் தேதி கேட்க வில்லையே!” என்றேன். இப்படி சொன்னதும் அவர் முகம் மாறிவிட்டது. 

“என்ன நான் சொல்றேன் நீ இப்படி மரியாதை இல்லாமே பதில் சொல்றே?” என்றார். 

“உங்கள் விருப்பத்துக்கு நான் வாழ முடியாது. என் சட்டை உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கிறதா?’’ என்றேன் அந்த இடத்தை விட்டே அவர் போய் விட்டார். 

பக்கத்தில் இருந்தவர் கேட்டார் “நீ என்ன அவரிடம் இப்படி பதில் சொல்லி விட்டாய்?” என்றார். 

“பாஸ்போர்ட் எடுக்கும் போதும் ஜாதகம் பார்க்கும் போதும் தான் பிறந்த தேதி மாதம் கேட்கிறார்கள். சட்டை வாங்கும் போது சைசும் பிடித்த டிஸைன் மட்டுமே” என்று பதில் போட்டேன். மற்றவர்களின் சொந்த விருப்பத்திலும் உரிமையிலும் இன்னொருவர் தலையிடுவது நாகரீகமான செயல் அல்ல.

நோன்பு காலங்களில் பள்ளி கூடம் விட்டதும் புஸ்தக பையை  விட்டு எறிந்து விட்டு பள்ளி வாசலுக்கு போய் நாங்கள் நாலஞ்சு பேர் நோன்பு கஞ்சி வரிசையில் ஒட்டிக் கொள்வோம். அப்போ Q-என்பது போன்ற இங்க்லீஷ் வார்த்தைகளை சாதாரண மக்களும் மாணவர்களும் சொல்வதில்லை.! 1947-ம் வருஷம் ஆகஸ்ட் மாஷம் 15-தேதி வெள்ளைகாரன் சுதந்திரத்தை கொடுத்து விட்டு அன்று காலையே ஃபஜருக்கு பாங்கு சொன்னதும் பெட்டி படுக்கைகளை சுருட்டி ஒரு கையிலும் மறுகையில் பெண்டாட்டி பிள்ளைகளை பிடித்துக் கொண்டு ஓட்டமும்-நடையுமா போய் கப்பல் ஏறி இங்கிலாந்துக்கு புறப்பட்டு இருப்பானோ இல்லையோ!’ என்ற சந்தேகத்தின் பேரில் நம்ம ஊர் போன்ற முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் ஒரு இங்க்லீஸ் வார்த்தை கூட யாரும் பேசவில்லை. இது ‘இங்க்லீஷ் படிக்கவே கூடாது’ என்ற ஒருசபதமே தவிர வேறொன்றும் இல்லை.

அரைகிடா சாபு அங்கிட்டும் இங்கிட்டும் போகும் போது ஓரக்கண்ணால் பார்த்து எங்களை ஒரு நோட்டம் இடுவார். அவர் மன ஓட்டம் எங்களுக்கு தெரியும். அவர் அங்கிட்டும்-இங்கிட்டும் போகும் போது நாங்கள் இங்குட்டும் - அங்குட்டும் எச்சியை துப்பி-துப்பி காட்டுவோம். இது ‘நாங்கள் எல்லோரும் ‘நோன்பு’ பிடித்திருக்கிறோம்’ என்பதை அவருக்கு ஜாடையாக தெரியப்படுத்தும் Body Language.’ ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவையாவது பள்ளி வாசல் கடிகாரத்தை நாங்கள் நோக்காமல் இருப்பதில்லை. அரக்கடா நோம்பு கஞ்சியின் ருசியும் வாசமும் எங்கள் நபுசை ஆட்டி படைத்தது.

அந்த காலத்தில் கையில் ‘வாட்ச்’ கட்டிக்கொள்ளும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் ஊரில் யாரும் இல்லை. யார் வீட்டிலும் சுவர் கடிகாரமும் அவ்வளவு இல்லை. அப்போதெல்லாம் கடற்கரைத் தெருவில் அஞ்சு அல்லது ஆறு வீடுகளில்தான் சுவர்கடிகாரங்கள் இருந்தது.

‘’ கார்த்திகை பிறை காணத் தோனுதே-கானலோடிப் புனலெனப் பாயுதே-வேர்த்து மேனி புழுங்கி ’எரியுதே’’என்று தொடங்கும் நம் ஊர் அண்ணாவியார் புலவர் பாடிய ’மழைப்பாட்டு’ பாடலின் ஒரு வரி. (அந்த பாடலின் முழுதும் நினைவில் இல்லை) அது மழை பொய்த்து போனதில் வந்த பஞ்சத்தில் வறுமை கொடிகட்டிப் பறந்த காலம். 

பள்ளிவாசல் கடிகார பெரிய முள் ஏதோ எங்க மனசு தெரிஞ்சு கொஞ்சம் அசைந்து அசைந்து ஓடும். ஆனால் இந்த சின்ன முள் இருக்கே அதுக்கு ‘ஈரமில்லா நெஞ்சு’ வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தாலும் அசையவே அசையாது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டே இருக்கும். ஒரு வேளை சின்ன முள்ளுக்கு சாவி கொடுக்கலையோ என்னமோ? ஏதோ எங்களுக்கு எதிரா சூது நடக்கிறது போல் தெரிந்தது! 

அரக்கிடா சாபு நோம்பு கஞ்சி சட்டியை திறந்து ஆப்பையை போட்டு ஒரு கடாசு கடாசும் போது வரும் வாசமோ வாசம். ’அந்த வாசம் வந்திடாதோ? என்று பாட்டு எழுத ஒரு கவிஞனாக பிறக்கவில்லையே என்று’ வருத்தப்பட்டேன். அங்கே வரிசை வரிசையா பறத்தி இருந்த மண்சட்டிகளில் ஆப்பையால் கஞ்சியை அள்ளி அள்ளி அரக்கடா சாபு ஊற்றும் ஸ்டைலே ஒரு ஸ்டைல்தான். இந்தகாலத்து ரஜனிகாந்து பார்த்த அசந்து போயி ‘சிலையா’ நின்னுடுவாரு. ஆப்பையே போட்டு கஞ்சி ஒரு கலக்கு கலக்கும்போது கடல்கரைத் தெரு முழுதும் வியாபிக்கும் கஞ்சிவாசம் நாசியை துளைக்கும். எங்கள்  நபுசோ ‘எப்போ வரும் எப்போ வரும்’ என்று தூண்டிலில் மாட்டிய மீனைப்போல துடித்துக் கொண்டிருக்கும்.

அரகிடா சாபு நோன்பு கஞ்சி என்றால் அதிராம்பட்டினமே வந்து ‘’எனக்கு கொஞ்சம் கொடு- எனக்கு கொஞ்சம் கொடு’’ என்று அடிச்சு புடிச்சுக்கிட்டு நிக்கும் படியான பேர் போன கைப்பதம் கொண்ட கஞ்சி. அரக்கடாவின் நோன்பு கஞ்சி ‘நளபாகம்’ நாலா திக்கும் பரவி அவர் புகழ் திக்கெட்டும் கொடிகட்டி பறந்தது.’ கஞ்சியைத்தான் காச்சினாரு அதிலே ருசியே எப்புடி வச்சாரு? !’ என்று குடிச்சவங்கலாம்’ மூக்கின் மேல் விரல் வச்சாங்க’ என்றால் பாத்துக் கொள்ளுங்களேன்!

‘’இவருக்கு அரக்கிடா’ என்று யார் பேர் வச்சது?’’  என்று ஒருவரிடம் கேட்டேன். அவர்ஒரு கதை சொன்னார். அவரு வயறு பெருசு; அதுக்கு மேச் ஆகும்படி உடம்பும் பெரிசு. ஒரு செம்பு சட்டி நோன்பு கஞ்சியை வாளியில் அள்ளி அள்ளி ஊற்றினாலும் ஊற்றிய கஞ்சி எல்லாம் எங்கே போச்சின்னு யாருக்கும் தெரியாது. வயிரோ போட்டது போட்ட படி அப்படியே கிடக்கும். கொஞ்சமாவது உப்பனுமே ஊகும் முடியாது. கழுதையா கத்தினாலும் வயறு நேத்து பாத்த அதே வயருதான்.

‘‘வெண்ணாறு மடை உடைச்சு விடிய விடிய பாஞ்சாலும், விடிஞ்சு பாத்தா வீராணம் ஏரிக்கு விரக்கடை அளவுதான்’ என்ற ஒருசொல் வழக்கு உண்டு. சென்னைக்கு  அருகில் உள்ள வீராணம் ஏரி கடல்  போல் பெரிய ஏரி.  இதன்  உண்மை பெயர் ‘ வீர  நாராயணன் ஏரி’. இது நாளடைவில்  மெல்ல மெல்ல மருவி ‘வீராணம் ஏரி’  என்று மாறிவிட்டது. வீர நாராயணன் என்ற சோழ மன்னன் வெட்டியதாக  கல்கியின் ‘ பொன்னியின் செல்வன்’ கதையில்  காணலாம். இது ஒரு உப்பில்லா கடல் என்று சொல்லும் அளவுக்கு பொருத்தமான பெரிய ஏரி.

வெண் ஆற்றுத் தண்ணீர்  ஒரு இரவு  முழுதும் வீராணம் ஏரியில் பாய்ந்தாலும் அடுத்த  நாள் காலையில்   பார்த்தால் ஒரு விரல் அளவு கூட உயர்ந்து இருக்காதாம். அவ்வளவு பெரிய ஏரி. அதை போல  அரைகிடாவின்  வயிறும் பெரியது. எத்தனை ஆடுகளை அறுத்து போட்டாலும் நேற்று பார்த்த அதே வயறுதான் இன்றும். இன்று பார்த்த அதே வயறுதான் நாளையும்.  என்ன ஆனாலும் அது வளர் பிறையும் அல்ல; தேய் பிறையும் அல்ல.  ஆக ‘என்றும் பவுர்ணமியே!’  

ஒரு பந்தயம்  நடந்ததாம். ‘’அரை (ஆட்டுக்)கிடாவை ஆக்கி  கொடுத்தால் உன்னால் சாப்பிட முடிமா?’’  என்று  ஒருவர் அரகிடா சாபுவிடம் சவால்  விட்டாராம்.  எந்த தயக்கமும் இல்லாமல் ‘’கொண்டுவா  அந்த கடாவை! திண்டு காட்டுகிறேன்!’’  என்றாராம். அடுத்த நாள் வந்தது ஒரு பெரிய கடா. வந்த கடாவை வெட்டி முழுசாகவே செம்பு சட்டியில் போட்டு சமைத்து அப்படியே சகனில் அரகிடா சாபு முன் வைத்தார்களாம். 

தெரு  நாட்டாமைகள்  முன்னிலையில்  சரியாக அரை கிடாவை தின்று முடித்து துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு எழுந்தாராம்.                                                                 
அங்கேநின்றுபார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியத்துடன் மூக்கின் மேல் விரல் வைத்தார்களாம். அரகிடா சொன்னாராம் ‘’அடே!  என் கிட்டயா சவால் விடுறிய! மிஞ்சி  இருக்கிற பாக்கி அரை கிடாவையும் நானே சாப்பிட முடியும்டா! பாவம் நான் சாப்பிட்டதை  பார்த்த உங்கள் நபுசும் துடிக்கும். அதனால் தான் அந்த அரகிடாவையும் மிச்சம் வைத்தேன். பிஸ்மில்லாஹ் பாக்கி அரை கிடாவையும் நீங்களே சாப்பிடுங்கள்!’’ என்று பெருந்தன்மையுடன் சொல்லி விட்டு எழுந்தாராம். இவ்வளவுக்கும் ஒரு ஏப்பம் கூடவிடலையாம். அன்று முதல்  அவருக்கு "அறைக்கிடா’ என்று ஊரார் முன்னிலையில் பெயர் விட்டார்களாம். இது வாய் வழி  வந்த செய்தி. 

கஞ்சி  சட்டிகளை  எடுத்து வொவ்வொருவருக்காக அரக்கிடா  கொடுத்து வருவார்.  எங்கள் அருகே  அவர் நெருங்க-நெருங்க எங்கள் நெஞ்சு படக் படக் கென்று  அடிக்கும். கஞ்சி  ‘கிடைக்குமோ’ கிடைக்காதோ?’  என்ற பயம். இந்த கஞ்சி குடிக்க நாங்கள் போட்ட திட்டங்கள் நிறைய. இரண்டு நாள் சாப்பிடாதது போல முகத்தில் ஒரு செயற்கையான வாட்டத்தை பரவ விட்டு,  உதட்டை நன்றாக தேய்த்து  வரண்டு போன உதடு போல் காட்டினோம். ஒரு உண்மையான நோன்பாளி  எப்படி இருப்பாரோ அதை விட இருமடங்கு நாங்கள் எங்களை மாற்றினோம். இது எல்லாம் நாங்கள் கஞ்சிக்காக போட்ட வேஷம்.

அரகடா எனக்கு அருகே வந்தார்  சட்டி காஞ்சியில் கைவைத்தவர் ‘நோம்பாடா?’’  என்றார் நான் பரிதாபமாக ‘’ஆமாம் சாபு!  நெசமா நோன்பு!’’  என்றேன். ‘’பொய்  சொல்றேடா!   எங்கே நிய்யத்து  சொல்லு?’’ 

அடுத்த பகுதியில் மீதியைச் சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ் !

S.முஹம்மது பாரூக்
அதிராம்பட்டினம்.

52 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். வரிக்கு வரி நையாண்டியும் துள்ளும் தழிழும்(தெள்ளுத்தமிழ் இப்ப துள்ளும் தமிழ்)இளைமை,இளைமை, இப்படி ஒவ்வொரு வரியிலும் இளைமை ஊஞ்சலாடுகிறது!
-------------------------------------------------------

crown said...

தொழுகிற பள்ளி வாசலில் குதி உயர்ந்த HIGH HEEL மிதிரிக் கட்டைகள் தான் நிறைய கிடக்கும். ‘’செருப்பால் அடிப்பேன்’’ சப்பாத்தால் அடிப்பேன்’’ என்ற பேச்சே அப்போது கிடையாது. ‘மிதிரி கட்டையால் அடிப்பேன்!”” என்றுதான் சொல்வார்கள். பொதுவாகவே ‘கட்டை’ என்று சொல்வதே வழக்கம் ‘மிதிரி’ கட்டையா அல்லது ‘மிதிறி’ கட்டையா?’ ‘மிதி ஏறி’ கட்டை’ என்ற சொல் திரிந்து ‘மிதிறி’ கட்டை ஆனதோ!. அந்தக் கட்டைதான் இல்லையே அதைப் பத்தி இப்போ நமக்கு எதுக்கு ஆராய்ச்சி. நம்ம நம்ம கட்டைக்கு நாம தேட வேண்டியதை தேடிக் கிடுவோம்.

--------------------------------------
இந்த வரிகளின் என்னை நான் பார்த்தேன்! இவர்களின் எழுத்து சாயலில் என்னதும் கொஞ்சூன்டு இருப்பது எனக்குப் பெருமையாக இருக்குது!- என்ன ஒருவார்தை ஜாலம்????

crown said...

குறிப்பு: இப்பொழுது பள்ளிவாசல்களில் செருப்புகள் காணாமல் போவது போல் அப்போது கட்டைகள் காணாமல் போனதில்லை; போட்டது போட்டபடி அப்படியே ஆடாமே அசையாமே ‘கட்டையா’ கிடக்கும். காரணம் அந்த காலத்தில் அவங்க அவங்க கட்டைக்கு அவங்க அவங்களே சொந்தமா தேடிக்கிட்டாங்க [Self-Help].
----------------------------------------------------
ஆஹாஹா!!! அப்படியே கட்டையாய் கிடக்கும், ஒருகனம் நானும் கட்டையா அசையாம இருந்துட்டேன்!தெரிந்தோ தெரியாமலோ நானும் கட்டை(யர்)தான் எங்களையும் சட்டயர் செய்வதுபோல் இருந்தது!

crown said...

’ இளமை நினைவுகள் முதுமையில் இன்பம் அது முதுமைக்கும் கொஞ்சம் இளமையையும் ஊட்டுவதே இந்த நினைவுகள்தான்.

---------------------------------------------------------
நச்''சென உண்மை உரைக்கும் கட்டளைக்கல் இந்த வரியில் அமைந்தவை!

crown said...

ஒரு மனோதத்துவ ஆய்வாளர் சொல்கின்றார் முதுமையை பற்றியே நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள். ‘இளமையாகவே இருக்கிறோம்’ என்றே எண்ணுங்கள். இளமைக் காலத்தில் அணிந்த ஆடைகளையும் ஆடிய ஆட்டங்களையும் எண்ணி இப்போது கவலைப்படாதீர்கள். அதை நினைத்து அதுபோலவே இப்போதும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இளவயதினர் அணியும் ஆடைகளையே அணியுங்கள். இளமைச் சிந்தனையை முதுமையோடு பேரம் பேசாதீர்கள்..‘’ இனிமே நமக்கு இங்கே என்ன இருக்கு? வயசாச்சு போய் சேரவேண்டிய இடத்துக்கு போய் சேர வேண்டியது தான்’ என்றும் ‘சட்டி சுட்டதடா ’கை’விட்டதடா’ என்ற பட்டினத்தர் போன்றவர்களின் ‘சிந்தனை’யை விட்டுடுங்கள். ‘அனுபவி ராஜா! அனுபவி!’ வழியில் போகலாமே!. ஆனால், நம்முடைய பாறம்பறிய பிற்போக்கு சிந்தனையாளர்கள் நடுவே நாம் அப்படி நடப்பது கொஞ்சம் கஷ்டமே!
------------------------------------------------
இப்படி சொல்லித்தாங்க இன்சா அல்லாஹ் நாளைக்கு எனக்கும்(எமக்கும்)உதவும்.

crown said...

நோம்புதிறக்க இன்று பள்ளிவாயில்( என் வாயில் போட) செல்ல இருப்பதால் சிறிது நேரம் கழித்து தொடருவேன். தொடரனும், இன்சாஅல்லாஹ்!அவ்வளவும் நவரசம்!உடலெங்கும் பரவசம் படிக்கும் போது,இதயத்தை இழுத்து செல்கிறது காக்காவின் வசம்!இது முதுமையில் இளைமையிசம்! நிசம்!

Ebrahim Ansari said...

//கிபி 1950 ம் வருடம் தஞ்சாவூர் ஜில்லா பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் இருக்கும் ஹாஜா செய்கு அலாவுதீன் தர்காவிலும் அத்துடன் சேர்ந்து இருக்கும் தொழுகிற பள்ளியிலும் ரமளான் மாதம் பிறை 1-ல் இருந்து 30 வரை நடந்த நோன்பு கஞ்சி பற்றிய குறிப்புகள் முஹம்மது ஃபாருக் என்ற நானும் என் சக தோழர்கள் மூன்று நான்கு பேர்களும் //

ஏதோ கிரய சாசனப் பத்திரம் எழுதத்தொடங்குவது போலத் தொடங்கி அந்நாள் நிகழ்வுகளை உங்களுக்கே உரித்த இயல்பான பாணியில் காய்ச்சித் தந்து இருக்கிறீர்கள்.

உங்களுக்குள் இந்தக் "கஞ்சிக் கனலை" மூட்டியது தம்பி சபீர் அவர்களின் கஞ்சி காய்ச்சாமலிருப்பது எப்படி என்கிற பதிவே என்று நம்புகிறேன்.


உங்களிடம் பேசிக்கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாது.

அத்துடன் முதுமையில் இளமை பற்றிய கருத்துக்கள் கல்வெட்டில் பதியப் பட வேண்டியவை. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை என்னை விட முதிய உங்களிடம் பேசும்போதெல்லாம் நான் எனது இளமை திரும்புவதாக உணர்வேன்.

என்றென்றும் இளமையான எண்ணங்களோடும் ,புன்முறுவலோடும் நீண்ட ஆயுளுடன் நல்ல சுகத்துடன் வாழ்ந்து எங்களை தொடர்ந்து வழி நடத்த வேண்டுமென்று து ஆச செய்கிறேன்.

அன்பான அதிரை நிருபர் வாசக சகோதரர்களுக்கு,

இது ஒரு ஆரம்பம்தான். அடுத்து வர இருக்கும் ஒரு புத்தகம் பிறக்கிறது தொடர் ஒரு வரலாற்றுப் பதிவாக இருக்குமென நம்புவோம். எதிர்பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ்.

crown said...

உங்கள் விருப்பத்துக்கு நான் வாழ முடியாது. என் சட்டை உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கிறதா?’’ என்றேன் அந்த இடத்தை விட்டே அவர் போய் விட்டார்.

--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். மார்கத்திற்கு எதிர் இல்லாத சுய விருப்பம் தனிசுதந்திரமாகும் . காக்கா சொன்ன பதில் "சாட்டை அடி!

crown said...

1947-ம் வருஷம் ஆகஸ்ட் மாஷம் 15-தேதி வெள்ளைகாரன் சுதந்திரத்தை கொடுத்து விட்டு அன்று காலையே ஃபஜருக்கு பாங்கு சொன்னதும் பெட்டி படுக்கைகளை சுருட்டி ஒரு கையிலும் மறுகையில் பெண்டாட்டி பிள்ளைகளை பிடித்துக் கொண்டு ஓட்டமும்-நடையுமா போய் கப்பல் ஏறி இங்கிலாந்துக்கு புறப்பட்டு இருப்பானோ இல்லையோ!’ என்ற சந்தேகத்தின் பேரில் நம்ம ஊர் போன்ற முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் ஒரு இங்க்லீஸ் வார்த்தை கூட யாரும் பேசவில்லை. இது ‘இங்க்லீஷ் படிக்கவே கூடாது’ என்ற ஒருசபதமே தவிர வேறொன்றும் இல்லை.
------------------------------------------------------------
நியாயமான ஆதாங்கம்! வஞ்சிக்கப்பட்ட சமுதாயம் நம் சமுதாயம்!இனியேனும் விழிப்புனர்வு அவசியம்.

crown said...

அரைகிடா சாபு அங்கிட்டும் இங்கிட்டும் போகும் போது ஓரக்கண்ணால் பார்த்து எங்களை ஒரு நோட்டம் இடுவார். அவர் மன ஓட்டம் எங்களுக்கு தெரியும். அவர் அங்கிட்டும்-இங்கிட்டும் போகும் போது நாங்கள் இங்குட்டும் - அங்குட்டும் எச்சியை துப்பி-துப்பி காட்டுவோம். இது ‘நாங்கள் எல்லோரும் ‘நோன்பு’ பிடித்திருக்கிறோம்’ என்பதை அவருக்கு ஜாடையாக தெரியப்படுத்தும் Body Language.’ ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவையாவது பள்ளி வாசல் கடிகாரத்தை நாங்கள் நோக்காமல் இருப்பதில்லை. அரக்கடா நோம்பு கஞ்சியின் ருசியும் வாசமும் எங்கள் நபுசை ஆட்டி படைத்தது.
------------------------------------------------------
அன்று தந்தை போட்ட நடிப்பு ஒத்திகைக்கு இன்று ஒத்திகை இல்லாமல் மகனார் படம் எடுத்து தள்ளுறார்!

crown said...

ஆனால் இந்த சின்ன முள் இருக்கே அதுக்கு ‘ஈரமில்லா நெஞ்சு’ வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தாலும் அசையவே அசையாது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டே இருக்கும். ஒரு வேளை சின்ன முள்ளுக்கு சாவி கொடுக்கலையோ என்னமோ? ஏதோ எங்களுக்கு எதிரா சூது நடக்கிறது போல் தெரிந்தது!
----------------------------------------------
இலகுவாய் எழுதப்பட்ட நகைச்சுவை! ஆனாலும் சின்ன முள் "இப்படி நெஞ்சில் குத்தும்" என எதிர் பார்த்திருக்க மாட்டீர்தானே?

crown said...

அரகிடா சாபு நோன்பு கஞ்சி என்றால் அதிராம்பட்டினமே வந்து ‘’எனக்கு கொஞ்சம் கொடு- எனக்கு கொஞ்சம் கொடு’’ என்று அடிச்சு புடிச்சுக்கிட்டு நிக்கும் படியான பேர் போன கைப்பதம் கொண்ட கஞ்சி. அரக்கடாவின் நோன்பு கஞ்சி ‘நளபாகம்’ நாலா திக்கும் பரவி அவர் புகழ் திக்கெட்டும் கொடிகட்டி பறந்தது.’ கஞ்சியைத்தான் காச்சினாரு அதிலே ருசியே எப்புடி வச்சாரு? !’ என்று குடிச்சவங்கலாம்’ மூக்கின் மேல் விரல் வச்சாங்க’ என்றால் பாத்துக் கொள்ளுங்களேன்!
-----------------------------------------------------------------
இலக்கியம் பேசுது இந்த வரிகளெல்லாம் என்றால்
’ கஞ்சியைத்தான் காச்சினாரு அதிலே ருசியே எப்புடி வச்சாரு? !’ இந்த வரி கவிதையும் பேசுதே! மண் வாசனை மணக்கவைக்கும் கஞ்சி வாசனை எழுத்து நெடுங்கிலும் அந்த நெடி வீசுது!வாசக மூக்கு நுகர்ந்து ரசிக்கிறது!

crown said...

அன்று முதல் அவருக்கு "அறைக்கிடா’ என்று ஊரார் முன்னிலையில் பெயர் விட்டார்களாம். இது வாய் வழி வந்த செய்தி.
------------------------------------------------------------
இப்படி தீக்கி திண்டா வாய்வழிச்செய்தியாகத்தான் இருக்கும். சும்மா ஒரு தமாசு!

crown said...

அரகடா எனக்கு அருகே வந்தார் சட்டி காஞ்சியில் கைவைத்தவர் ‘நோம்பாடா?’’ என்றார் நான் பரிதாபமாக ‘’ஆமாம் சாபு! நெசமா நோன்பு!’’ என்றேன். ‘’பொய் சொல்றேடா! எங்கே நிய்யத்து சொல்லு?’’
-----------------------------------------------------------
அடுத்தது எப்ப வரும் ? ஆவலைத்தூண்டும் ஆக்கம்.

ZAKIR HUSSAIN said...

அன்புமிக்க எஸ்.முஹம்மது பாரூக் மாமா அவர்களுக்கு...

வார்த்தைக்கு வார்த்தை உங்களிடம் பேசிக்கொண்டிருந்த உணர்வே எனக்கு ஏற்பட்டது. இந்த ஒரே ஆக்கத்தில் இத்தனை உவமைகள்/பழமொழிகள் ...உரிமையை விட்டுக்கொடுக்காத உங்கள் வார்த்தைகள் [ சட்டை சைஸ் விசயம் ] எல்லாம் எழுத உங்களைப்போன்ற அனுபவசாலிகளால்தான் எழுத முடியும் என நினைக்கிறேன்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Mohammed Farook,

Nice article to read in a single breath.
It contains spirit of youth, vigour and fun.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

نتائج الاعداية بسوريا said...

//அரகடா எனக்கு அருகே வந்தார் சட்டி காஞ்சியில் கைவைத்தவர் ‘நோம்பாடா?’’ என்றார் நான் பரிதாபமாக ‘’ஆமாம் சாபு! நெசமா நோன்பு!’’ என்றேன். ‘’பொய் சொல்றேடா! எங்கே நிய்யத்து சொல்லு?’’ //

கிளைமாக்ஸ் வந்து அந்த நிய்யத் பற்றிய கேள்வி வயிற்றை ஒரு கலக்கு கலக்கி இருக்குமே ?

அபு ஆசிப்.

Iqbal M. Salih said...

ஆரம்பமே ஆரவாரமாகத் துவங்கியிருக்கின்றது! இன்னும் நிறைய இனிய நினைவுகளைச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கத் தூண்டுகிறது!

//மற்றவர்களின் சொந்த விருப்பத்திலும் உரிமையிலும் இன்னொருவர் தலையிடுவது நாகரீகமான செயல் அல்ல.//

அமெரிக்கனிடம் காணப்படும் ஒரு சில நல்ல குணங்களில் இதுவும் ஒன்று!

Yasir said...

ஆரம்பமே ஆரவாரமாகத் துவங்கியிருக்கின்றது! இன்னும் நிறைய இனிய நினைவுகளைச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கத் தூண்டுகிறது!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நல்லவேளை, பதிவின் கீழே ஃபாருக் மாமாவின் பெயரைப் பார்த்தேன். இல்லையெனில் இது ஹமீதின் திருவிளையாடல்கள் என்றே எண்ணியிருப்பேன். தலைகீழாகவல்லவா இருக்கிறது. ஹமீதே 8 அடிதான் பாய்வார்; ஃபாருக் மாமா 16 அடி பாய்ந்திருக்கிறீர்கள்.

கருப்பு வெள்ளைக் காலத்தின் நிகழ்வுகளை இப்படி அழகான வர்ணங்களடித்துத் தந்திருப்பது அசத்துகிறது. உங்களின் விட்டகுறை தொட்டகுறைகளை எங்கள் குரூப்பும் சதாய்த்திருக்கிறதுதான். முன்னோடிகள் எவ்வழி பின்பற்றுவர் அவ்வழி. ஆனா என்ன, நீங்கள் நோன்பு வைக்காமல் வேஷம் போட்டிருக்கிறீர்கள். நாங்களோ நிசமாக நோன்புவைத்து டிஜிட்டலில் நோன்பாளி தோரணை காட்டுவோம். அப்பதான் கஞ்சி கிடைக்கும். வாழையடி வாழையாக எங்களையும் வயித்துநோன்புக் காரர்களாக உருவகப்படுத்தி வைத்தது நீங்களும் உங்கள் தோழர்களும்தானா?

செம கலக்கல் பதிவு. அடுத்ததையும் உடனே போடுங்கப்பா.

வெல்கம், ஃபாருக் மாமா

sabeer.abushahruk said...

அம்மா மடி சாய்ந்து பழங்கதை கேட்கப் பிடிக்கும். இதோ மாமா உங்கள் மடிசாய்ந்து கேட்பது போன்றதொரு உணர்வு வியாபிக்கிறது உங்களின் அந்நியோநியமான எழுத்து நடையில். உங்கள் விரல் பிடித்துத் தொடர்ந்து வரும் வரிசையில் நானும் இணைகிறேன். இன்னும் இன்னும் ஏராளமான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்; அதிகமதிக நிகழ்வுகளைச் சொல்லிக்காட்டுங்கள். எதிரே அமர்ந்து கேட்பது போன்றொதொரு உணர்வைத் தருகிறது இந்தப் பதிவு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வருக வருக வருக !

இப்படிக்கு
அமீரக(த்தில்) உழைப்பாளி !
அதிரை(யின்) ஊர்வாசி !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பழமையின் இனிமைகளை வண்ணமயமாய் கலக்கலுடன் வரைந்து கேட்பதற்கு அதிரை நிருபருக்கு கிடைத்த அழகிய பொக்கிசம் தாங்கள்.

இன்னும் தாங்கள் அடுத்தடுத்து தரும் எழுத்தோவியங்களும் சுவராஸ்யம் மிகுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அவ்வாறே அமைய தங்களுக்கு ஆரோக்கியத்தையும் ஆயிசையும் அல்லாஹ் அள்ளித் தருவானாக! ஆமீன்.

نتائج الاعداية بسوريا said...

காக்கா 40 வருடங்களுக்கு முன்பு நோன்பு திறப்பதற்கு, ஜாவியாலில் கஞ்சி சிட்டிக்கு முன் அமர்ந்த ( அது அரக்கிடா காக்காவின் கஞ்சி அல்ல ) அனுபவம்
என் கண் முன்னே வந்து கண்ணை விட்டு அகல மறுக்கின்றது உங்கள் அனுபவத்தை கேட்டவுடன்.

உங்களின் எளிய எழுத்து நடைய , அந்த பேச்சு தமிழ், நகைச்சுவை உரையாடல், அனைத்தையும் நினைத்து நான் தனிமையில் இருக்கும்போது இவைகள் நினைவுக்கு வந்தால் , அப்பொழுது நான் சிரித்து விடுவேனோ என்று பெயப்படுகின்றேன் ,

ஏனனில் யாரும் என்னை வேறு மாதிரியாக பார்த்துவிடக் கூடாது அல்லவா ?


உங்கள் எளிய எழுத்து நடையின் ரசிகன்,
இதுவரை உங்களை பார்த்திராத, உங்களுடன் பேசிராத,

அபு ஆசிப்.

نتائج الاعداية بسوريا said...

மரியாதைக்குரிய பாரூக் காக்கா அவர்களுக்கு

முதல் நாளே முத்திரை நாளாக இருப்பதால்,
A.N. சார்பில் " நகைச்சுவை தென்றல்" என்னும் பட்டம் சூட்டி
மகிழ்வதில் பெருமைப்படுகின்றேன்.

அபு ஆசிப்.

M.B.A.அஹமது said...

35 வருடங்களுக்கு முன்பு செக்கடி பள்ளியில் நோன்பு
திறக்க செல்லும்போது உங்களுக்க்கு அரக்கிடா சாபுவிடம் ஏற்பட்ட அனுபவங்கள் எங்களுக்கும் பெரியவர் பாரகல்ல காகாவிடம் ஏற்பட்டிருக்கிறது அவர் ஒற்றை மாரு கண்ணுடன் காஞ்சி சட்டி அருகில் நிக்கும்போதேல்லாம் எங்களுக்கு p s வீரப்பா பார்ப்பது போன்று தோன்றும் பெரியவர்களுக்கு பெரிய வெள்ளை கிண்ணமும் சிறியவர்களுக்கு சிறிய வெள்ளை கிண்ணமும் இருக்கும் . போகும்போது கஞ்சி சட்டியை கையில் எடுத்துகொண்டு போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும் எடுக்கும் போது பெரிய கிண்ணியை எடுத்தா ஒரு முறைப்பு தான் பயத்திலேயே சின்ன கிண்ணியை எடுத்து செல்வோம் அவர் பாத்ரூம் போகும் சமயம் பார்த்து ஒரு பெரிய கிண்ணி கஞ்சியையும் எடுத்து கொண்டு அகல் பக்கமாக போய் ஒளிந்து உட்கார்ந்து கொள்வோம் உங்களுக்கு அரக்கிடா சாபுவிடம் ஏற்பட்ட அனுபவங்கள் எங்களுக்கு பெரியவர் பாரகல்லா காகாவிடம் நிறையவே ஏற்பட்டிருக்குது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் மூத்த சகோதரர் பாசம் நிறைந்த ஃபாருக் காக்கா,

என்ன சொல்லுகிறது என்றே தெரியவில்லை, அனைத்து செய்திகளும் நல்ல நகைச்சுவை...

//பள்ளிவாசல் கடிகார பெரிய முள் ஏதோ எங்க மனசு தெரிஞ்சு கொஞ்சம் அசைந்து அசைந்து ஓடும். ஆனால் இந்த சின்ன முள் இருக்கே அதுக்கு ‘ஈரமில்லா நெஞ்சு’ வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தாலும் அசையவே அசையாது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டே இருக்கும். ஒரு வேளை சின்ன முள்ளுக்கு சாவி கொடுக்கலையோ என்னமோ? ஏதோ எங்களுக்கு எதிரா சூது நடக்கிறது போல் தெரிந்தது! //

இதை எத்தனை முறை படித்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை..

வல்ல ரஹ்மான் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக.

பணிச்சுமை அதிகமிருந்த காரணத்தால் உடன் கருத்திட முடியவில்லை. சென்ற தங்களின் பதிவிற்கும் கருத்திட முடியவில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//மரியாதைக்குரிய பாரூக் காக்கா அவர்களுக்கு

முதல் நாளே முத்திரை நாளாக இருப்பதால்,
A.N. சார்பில் " நகைச்சுவை தென்றல்" என்னும் பட்டம் சூட்டி
மகிழ்வதில் பெருமைப்படுகின்றேன்.

அபு ஆசிப்.//

அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் காதர் காக்கா..

இது போன்ற பட்டங்கள் கொடுத்து அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நகைச்சுவை என்ற ஓர் வட்டத்தில் மட்டும் ஃபாருக் காக்காவை வைத்து பார்க்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஃபாருக் காக்காவிடம் ஒரு மணிநேரம் இருந்து பேசிப் பார்த்தால் பல நாட்கள் இருந்த அனுபவம் கிடைக்கும், இது நான் அவர்களிடம் சில நிமிடங்கள் ஊரில் இருக்கும்போது சந்தித்து அவதானித்து உணர்ந்தது. பல புத்தகங்கள் எழுத தேவையான நிறைய செய்திகள் அவர்களிடம் உள்ளது.

பட்டம் என்ற பெயரில் வார்த்தை வித்தைகளை வைத்து விளையாடும் ஓரு பொழுதுபோக்காகவே பட்டங்களை நான் பார்க்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

மரியாதைக்குரிய காக்கா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

முன்னர் “புத்தகம் பிறக்கின்றது” முன்னறிவிப்பில் என் பின்னூட்டத்திலும் சொன்னேன்; இப்பொழுதும் மேற்காணும் எனக்கு விருப்பமான இக்கட்டுரையின் “ஹைலைட்” ஆன இவ்விடயத்திலும் பார்க்கிறேன்; என்னுடைய கொள்கை, நடைமுறையை அப்படியே தாங்கள் ஒத்திருக்கின்றீர்கள் என்பது தான் தங்களின் மீது எனக்கு மேன்மேலும் அளவற்ற பாசம் உண்டாகி விட்டது.

முன்னர் எழுதிய பின்னூட்டத்தில் சொன்னபடி , என்னைப் போலவே நூலகப்பிரியராக இருப்பதும், இன்று வரை தமியேன் கடைபிடித்து வரும் மேற்கண்ட கொள்கையான “முதுமையில் இளமையுடன் இருக்கும் வழிகள்” நூற்றுக்கு நூறு தாங்களும் கடைபிடித்து மற்றவர்கட்கும் ஊக்கமளிப்பதிலும் எனக்கும் பெருமிதம் உண்டானது!
1) பள்ளிப்பருவத்தில் தமிழ் உரைநடை பகுதியில் ஓர் ஆக்கம் வந்தது; அதில் சொல்லப்பட்டது: “ என்றும் இளம் வயதினருடனே நீங்கள் இருந்து கொண்டிருந்தால் உங்களைச் சுற்றியும் ஓர் இளமையின் அதிர்வு பாயும்; அதனால் இளம் நண்பர்களுடன் இருங்கள்: என்று. இதனை என்று படித்தேனோ அன்று முதல் இந்த நிமிடம் வரைக்கும் தமியேனின் பழக்கமும் அஃதே என்றானது.

2) அமெரிக்காவில் பணியாற்றிய வேளையில், தாங்கள் குறிப்பிட்ட அதே உளவியல் தொடர்பான வாசகம் கொண்ட (IF YOU THINK OLD, YOU WILL BECOME OLD) வாழ்த்து அட்டைகளை நான் பணியாற்றிய கடையில் விற்கின்ற வேளையில், எனக்குள்ளும் அப்படித்தான் நாமும் நினைத்து என்றும் இளமையாகவே இருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதிலும் தாங்கள் குறிப்பிட்ட அந்தத் தனிமனித சுதந்திர உணர்வில் பிறர் தலையிடக் கூடாது என்பன போன்றவைகளும் (அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களும் சொன்னதன்படி) அமெரிக்கர்களிடம் யான் கற்றுக் கொண்ட சில நல்ல விடயங்களில் ஒன்றாகும்.

3) இன்று கூட என் அலுவ்லகத்தில் என் மேலாளரும், சக ஊழியர்களும் கேட்டார்கள், “ கலாம் நீ என்ன உன் பையன் போடும் டிசைன் சர்ட் எல்லாம் போடுகின்றாய்” என்றனர். தங்கட்கும், தமியேனுக்கும் விருப்பமான அந்த “இளமை உணர்வுகளின் அதிர்வுகளைப் பற்றி” ஒரு பாடம் நடத்தி விட்டேன்; அவர்களும் ஒத்துக் கொண்டனர்;

இன்று நான் அவர்கட்கு (அலுவலகத்தில் ) இளமையின் இரகசியம் பற்றி பாடம் நடத்தி விட்டு வந்து உறங்கப் போகு முன்பு அதிரை நிருபர்க்குள் நுழைந்ததும் தங்களின் மேற்காணும் ஆக்கத்தில் எனக்குப் பிடித்தமான அவ்வரிகளைக் கண்டதும் உறக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு இப்பின்னூட்டத்தை எழுதினேன்,

Anonymous said...

//ஒரு மனோதத்துவ ஆய்வாளர் சொல்கின்றார் முதுமையை பற்றியே நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள். ‘இளமையாகவே இருக்கிறோம்’ என்றே எண்ணுங்கள். இளமைக் காலத்தில் அணிந்த ஆடைகளையும் ஆடிய ஆட்டங்களையும் எண்ணி இப்போது கவலைப்படாதீர்கள். அதை நினைத்து அதுபோலவே இப்போதும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இளவயதினர் அணியும் ஆடைகளையே அணியுங்கள். இளமைச் சிந்தனையை முதுமையோடு பேரம் பேசாதீர்கள்..‘’ இனிமே நமக்கு இங்கே என்ன இருக்கு? வயசாச்சு போய் சேரவேண்டிய இடத்துக்கு போய் சேர வேண்டியது தான்’ என்றும் ‘சட்டி சுட்டதடா ’கை’விட்டதடா’ என்ற பட்டினத்தர் போன்றவர்களின் ‘சிந்தனை’யை விட்டுடுங்கள். ‘அனுபவி ராஜா! அனுபவி!’ வழியில் போகலாமே!. ஆனால், நம்முடைய பாரம்பறிய பிற்போக்கு சிந்தனையாளர்கள் நடுவே நாம் அப்படி நடப்பது கொஞ்சம் கஷ்டமே!

WHEN YOU ARE IN ROME DO AS ROMANS DO என்ற பழமொழியை பொருத்தமில்லாத இடத்திலும் நேரத்திலும் சொல்கிறார்கள். ’பழமொழிகளை மெய்பிக்கவோ அல்லது உயிர்ப்பிக்கவோ’ நாம் உலகில் பிறக்கவில்லை’. என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

இளம் வயதினர்களுக்கு மட்டும் என்று சொல்லப்பட்ட சட்டையை போட்டுக் கொண்டு ஒரு கல்யாணத்திற்கு போனேன்.

"பாருக்! உன் வயசு என்ன? இந்த வயசில் இந்த இளவயசு காரனுவ போடுற சட்டையை போட்டுருக்கியே? நல்லாவா இருக்கு?” என்று அட்வைஸ் செய்தார் ஒருவர்.

நான் சொன்னேன் “கடையில் போய் சட்டை கேட்டால் உங்கள் சைஸ் என்ன என்று தான் கேட்கிறார்களே தவிர பிறந்த வருஷம் மாதம் தேதி கேட்க வில்லையே!” என்றேன். இப்படி சொன்னதும் அவர் முகம் மாறிவிட்டது.

“என்ன நான் சொல்றேன் நீ இப்படி மரியாதை இல்லாமே பதில் சொல்றே?” என்றார்.

“உங்கள் விருப்பத்துக்கு நான் வாழ முடியாது. என் சட்டை உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுக்கிறதா?’’ என்றேன் அந்த இடத்தை விட்டே அவர் போய் விட்டார்.

பக்கத்தில் இருந்தவர் கேட்டார் “நீ என்ன அவரிடம் இப்படி பதில் சொல்லி விட்டாய்?” என்றார்.

“பாஸ்போர்ட் எடுக்கும் போதும் ஜாதகம் பார்க்கும் போதும் தான் பிறந்த தேதி மாதம் கேட்கிறார்கள். சட்டை வாங்கும் போது சைசும் பிடித்த டிஸைன் மட்டுமே” என்று பதில் போட்டேன். மற்றவர்களின் சொந்த விருப்பத்திலும் உரிமையிலும் இன்னொருவர் தலையிடுவது நாகரீகமான செயல் அல்ல.\\

மரியாதைக்குரிய காக்கா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

முன்னர் “புத்தகம் பிறக்கின்றது” முன்னறிவிப்பில் என் பின்னூட்டத்திலும் சொன்னேன்; இப்பொழுதும் மேற்காணும் எனக்கு விருப்பமான இக்கட்டுரையின் “ஹைலைட்” ஆன இவ்விடயத்திலும் பார்க்கிறேன்; என்னுடைய கொள்கை, நடைமுறையை அப்படியே தாங்கள் ஒத்திருக்கின்றீர்கள் என்பது தான் தங்களின் மீது எனக்கு மேன்மேலும் அளவற்ற பாசம் உண்டாகி விட்டது.

தொடரும் 1/2

Anonymous said...

தொடர்கிறது 2/2

முன்னர் எழுதிய பின்னூட்டத்தில் சொன்னபடி , என்னைப் போலவே நூலகப்பிரியராக இருப்பதும், இன்று வரை தமியேன் கடைபிடித்து வரும் மேற்கண்ட கொள்கையான “முதுமையில் இளமையுடன் இருக்கும் வழிகள்” நூற்றுக்கு நூறு தாங்களும் கடைபிடித்து மற்றவர்கட்கும் ஊக்கமளிப்பதிலும் எனக்கும் பெருமிதம் உண்டானது!

1) பள்ளிப்பருவத்தில் தமிழ் உரைநடை பகுதியில் ஓர் ஆக்கம் வந்தது; அதில் சொல்லப்பட்டது: “ என்றும் இளம் வயதினருடனே நீங்கள் இருந்து கொண்டிருந்தால் உங்களைச் சுற்றியும் ஓர் இளமையின் அதிர்வு பாயும்; அதனால் இளம் நண்பர்களுடன் இருங்கள்: என்று. இதனை என்று படித்தேனோ அன்று முதல் இந்த நிமிடம் வரைக்கும் தமியேனின் பழக்கமும் அஃதே என்றானது.

2) அமெரிக்காவில் பணியாற்றிய வேளையில், தாங்கள் குறிப்பிட்ட அதே உளவியல் தொடர்பான வாசகம் கொண்ட (IF YOU THINK OLD, YOU WILL BECOME OLD) வாழ்த்து அட்டைகளை நான் பணியாற்றிய கடையில் விற்கின்ற வேளையில், எனக்குள்ளும் அப்படித்தான் நாமும் நினைத்து என்றும் இளமையாகவே இருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதிலும் தாங்கள் குறிப்பிட்ட அந்தத் தனிமனித சுதந்திர உணர்வில் பிறர் தலையிடக் கூடாது என்பன போன்றவைகளும் (அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களும் சொன்னதன்படி) அமெரிக்கர்களிடம் யான் கற்றுக் கொண்ட சில நல்ல விடயங்களில் ஒன்றாகும்.

3) இன்று கூட என் அலுவ்லகத்தில் என் மேலாளரும், சக ஊழியர்களும் கேட்டார்கள், “ கலாம் நீ என்ன உன் பையன் போடும் டிசைன் சர்ட் எல்லாம் போடுகின்றாய்” என்றனர். தங்கட்கும், தமியேனுக்கும் விருப்பமான அந்த “இளமை உணர்வுகளின் அதிர்வுகளைப் பற்றி” ஒரு பாடம் நடத்தி விட்டேன்; அவர்களும் ஒத்துக் கொண்டனர்;

இன்று நான் அவர்கட்கு (அலுவலகத்தில் ) இளமையின் இரகசியம் பற்றி பாடம் நடத்தி விட்டு வந்து உறங்கப் போகு முன்பு அதிரை நிருபர்க்குள் நுழைந்ததும் தங்களின் மேற்காணும் ஆக்கத்தில் எனக்குப் பிடித்தமான அவ்வரிகளைக் கண்டதும் உறக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு இப்பின்னூட்டத்தை எழுதினேன்,

ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ் ஆஃபியா.

தங்களின் எழுத்துக்களைப் படித்தால் அள்ளும் நகைச்சுவை உணர்வு, துள்ளும் இளமைக் கனவு என்று பட்டியலிடலாம்; அஃதேபோல், இன்ஷா அல்லாஹ் ஊரில் தங்களுடன் அருகில் இருந்து உரையாடினால் முதுமை நீங்கிப் புதுமை நிறைந்த ஓர் அனுபவம் கிட்டும்; அதனால் நோய்கள் ஓடும் நம்மை விட்டும்.

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

sabeer.abushahruk said...

நான் தல நோன்பு வைத்த வேடிக்கை (6 வயதில்)


55) விடாதே பிடி!
 
தலைநோன்பு பிடித்தவொரு
கலையாத நினைவு ...

பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!
 
மண்பானைத் தண்ணீரும்
முதல்நாள் நோன்பும்
ஒன்றுக்கொன்று ஒவ்வா
எதிர்மறைச் செயல்கள்!
 
வீம்பு பிடித்தேனும்
நோன்பு பிடித்தோம்
அன்னை தடுத்தார் 
சொன்னதைக் கேளோம்!
 
சஹரில் விழித்து பின்
லுஹரில்தான் விழித்தோம்
இடைப்பட்ட நேரத்தில்
பசிதாகம் பொறுத்தோம்!
 
உச்சி  வெயில்வேளை
ஊருணியில் குளித்தோம்
குளித்த தண்ணீரைக்
குடல்முட்டக் குடித்தோம்
 
அச்சுவெல்லப் பாச்சோறும்
பச்சரிசிப் பிடிமாவும்
இளநீரின் வழுக்கையும்
இறால் பதித்த வாடாவும்
நோன்புக் கஞ்சி மல்லாவும்

 
மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!

Thanks: satyamargam.com

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பு நிர்வாகி அவர்கட்கும், வாசகர்கட்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

முன்னர் மின்மடல் வழியாக அனுப்பப்பட்ட மேற்காணும் என் பின்னூட்டம் முதலில் பதிவாகியிருக்கவில்லை (நோன்பு காலத்தில் அசதியாக இருந்திருக்கலாம்) என்றெண்ணி முற்பகுதியை வெட்டிச் சுருக்கி நேரடியாக நான் பின்னூட்டமிட்டதும் பதிவாகியிருந்த போதும், என் மின்மடல் பின்னூட்டமும் தொடரந்து இப்பொழுது பதிவாகி இருப்பதால் மன்னிக்க வேண்டுகிறேன். இப்பக்கங்களை ஆக்ரமிக்க வில்லை; மாறாக, மரியாதைக்குரிய காக்கா அவர்களின் அருமையான ஆக்கத்திற்கு உடன் பின்னூட்டம் இடல் என் கடன் என்றெண்ணியாதால் அவ்வண்ணம் ஆகி விட்டது. இரட்டிப்புப் பின்னூட்டத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியை அன்பின் காக்கா அவர்களும் அனுபவிப்பார்களாக.

Unknown said...

//இது போன்ற பட்டங்கள் கொடுத்து அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நகைச்சுவை என்ற ஓர் வட்டத்தில் மட்டும் ஃபாருக் காக்காவை வைத்து பார்க்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.//

பட்டம் என்பது என் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடு. இது பல்கலைக்கழகமோ , அல்லது வேறு எந்த கல்வி சார்ந்த நிறுவனமோ கொடுத்ததல்ல, மரியம்மா வீட்டு அப்துல் காதர் கொடுத்தது அவ்வளவுதான்.

இதனால் அவர்களிடம் உள்ள மற்ற திறமைகளை மறைத்துவிட்டேன் என்றோ அல்லது மறுக்கின்றேன் என்றோ அர்த்தமல்ல

அவர்களின் மீதுள்ள அன்பின் வெளிப்பாட்டு வாரத்தைப்பிரயோகமே .

அபு ஆசிப்.

Unknown said...

//அடுத்த பகுதியில் மீதியைச் சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ் !//

காக்கா என்னால் பொறுக்க முடியவில்லை காக்கா இப்பவே உங்கள் பதிவு வந்து அதை பார்த்து சிருச்சிகிட்டே இருக்கணும்போல இருக்குது கவலைகளை மறந்து.

இன்ஷா அல்லாஹ் நான் ஊர் வந்தால் அந்த நேரம் நீங்களும் ஊரில் இருக்க அல்லாஹ் நாடினால் கண்டிப்பாக உங்களை தேடி வந்து பார்த்து உங்களுடன் ஒரு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அமர்ந்து கொஞ்சம் நகைச்சுவை அறிவை பெற்று செல்ல மனம் ஏங்குகின்றது.

அல்லாஹ்வின் நாட்டத்தில் இந்த சந்திப்பு இருந்தால் அது நடக்கும்..

அபு ஆசிப்.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

ஆனால் இந்த சின்ன முள் இருக்கே அதுக்கு ‘ஈரமில்லா நெஞ்சு’ வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தாலும் அசையவே அசையாது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டே இருக்கும். ஒரு வேளை சின்ன முள்ளுக்கு சாவி கொடுக்கலையோ என்னமோ? ஏதோ எங்களுக்கு எதிரா சூது நடக்கிறது போல் தெரிந்தது!இப்படி எல்லா இடங்களிலும் நகைச்சுவையாய் எழுதிஉள்ளார்கள் ‘’ கார்த்திகை பிறை காணத் தோனுதே-கானலோடிப் புனலெனப் பாயுதே-வேர்த்து மேனி புழுங்கி ’எரியுதே’’என்று தொடங்கும் நம் ஊர் அண்ணாவியார் புலவர் பாடிய ’மழைப்பாட்டு’ பாடலின் ஒரு வரி. (அந்த பாடலின் முழுதும் நினைவில் இல்லை) அது மழை பொய்த்து போனதில் வந்த பஞ்சத்தில் வறுமை கொடிகட்டிப் பறந்த காலம். இதோ அந்த பாடலின் முழுவரிகள்
கார்த்திகை பிறை கானவிளங்குதே
கானலோடிப் புனலெனப் பாயுதே வேர்த்து மேனி புழுங்கி ’எரியுதே
வீதிதோறும் மணல் சுட்டுக்காயிதே
மாற்றியேகு நல்வாடை கொழுந்துளி
நல்ல மைப்புடன் குளிர்ப்பை உண்டாக்கியே
மாமழை பெய்ய அருள் புரிவாய்
கோதில்லாவடிவே எங்கள் நாயனே
இதேபோல் 27 பாராக்களைக் கொண்டது மழைப்பாட்டு

KALAM SHAICK ABDUL KADER said...

\\பட்டம் என்பது என் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடு.\\

பட்டங்களை யாரும் தேடிப் போவது கிடையாது; ஆயினும் அன்பினாலும், அவரவர்களின் திறமைகள், சாதனைகள், போட்டிகளின் வெற்றிக்கான அங்கீகாரம் ஆகியவற்றை வைத்துத் தருபவர் உள்ளம் தூய எண்ணத்துடன் இருந்து அதை அவர்கட்காக ஏற்க வேண்டும் என்பதும் ஏற்பவரின் மனத்தூய்மையின் வெளிப்பாடு ஆகும்.

இதே தளத்தில்:

அன்புத் தன்பி தாஜுதீன் “அக்னிக் குஞ்சு’ என்று அவரின் உணர்ச்சி மயமான கருத்துகட்குப் பாராட்டி அழைக்கப்பட்டிருகின்றார்கள்.

சபீர் அவர்களின் கவிப்புலமைக்குப் பாராட்டுப் பத்திரமாக கவிகாக்கா, ஆஸ்தானக் கவிஞர், கவிவேந்தர் என்று வாழ்த்தி அழைக்கப் பெறுகிறார்.

அப்துல்காதர் அவர்களின் குரலினிமைக்கு இசைவேந்தர் என்று அழைத்திருக்கிறேன்.

இப்ராஹிம் காக்கா அவர்களின் பொருளாதார ஆய்வுக்கு அமெரிக்கவிலிருந்து அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களால் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு அதனை மனமுவந்து இ.அ.காக்கா அவர்களும் ஏற்றிருக்கின்றார்கள்(அபுஹூரைரா(ரலி) முதல் இன்னும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் ஸஹாபி(ரலி அன்ஹும்)கட்குப் பட்டப்பெயரல் அன்பொழுக வாய்மை நபி(ஸல்) அவர்கள் திருவதனத்தால் அழைக்கப்பெற்றதும் அன்புச் ச்கோ. இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் நபிமணியும் நகைச்சுவையும் தொடரில் எழுதியிருப்பதும் நமக்கோர் அரிய சான்றாகும்..

KALAM SHAICK ABDUL KADER said...

\\மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!\\

நச் என்று
நாலு வரிகட்குள்
உச் கொட்ட வைத்த
உச்சமாய்த் தைத்த
வலிகள்
கவிவேந்தரின்
கவிதை
வரிகள்.

ஆஸ்தானக் கவிஞர்க்கு ஆயுளை நீட்டித்து, ஆரோக்யம் வழங்க வேண்டுகிறேன், அல்லஹ்விடம்.!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பின் அப்துல் காதர் காக்கா, உங்கள் கருத்து அன்பின் வெளிபாடு என்பதை நான் அறிவோன் காக்கா, நிறைய வரலாற்று செய்திகளை தன் வசம் வைத்துள்ள ஃபாருக் காக்காவை நகைச்சுவை என்ற வட்டத்தில் மட்டும் அழைக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் உங்கள் அன்பின் வெளிப்பாடுக்கு வலுவூட்டவே என் கருத்தை பதிந்தேன் வேறு எந்த நோக்கமும் இல்லை காக்கா.. தங்களின் பதிலுக்கு ஜஸக்கல்லாஹ் ஹைரா...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் கலாம் காக்கா,

தாங்கள் சுட்டிக்காட்டிய அழகான கருத்துக்களுக்கு மிக்க நன்றி... ஜஸக்கல்லாஹ் ஹைரா...

பட்டம் என்ற பெயரில் வார்த்தை வித்தைகளை வைத்து விளையாடும் ஓரு பொழுதுபோக்காகவே பட்டங்களை நான் பார்க்கிறேன் என்ற என் நிலைப்பாட்டில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருப்பதை நான் குறையாக சொல்லவில்லை. அன்பின் வெளிபட்டால் எனக்கு பட்டம் கொடுத்து அழைப்பதை விரும்பவில்லை என்பதிலும் நான் தெளிவாக உள்ளேன். இதற்காக பட்டம் கொடுப்பவர்களை வெறுக்கிறேன் என்று அர்த்தமல்ல... :)

ஒரு நபரை பற்றி எழுத்தால், பேச்சால் பல பட்டங்கள் சூட்டி எழுதி புகழ்ந்து தள்ளுவது ஒரு நிலை, அதே நபரை தனிநபர்களிடம் அதற்கு நேர்மாறாக விமர்சிப்பது ஒரு நிலை. இது தான் எதார்த்தம் இதில் சிலர் விதிவிளக்காக இருக்கலாம். நான் சொல்லுவது சரிதானே காக்கா...

அல்லாஹ் போதுமானவன்.

Ebrahim Ansari said...

அன்பின் சகோதர்களுக்கு,

ஒரு தந்நிலை விளக்கம்.

தம்பி இக்பால் அவர்களால் முனைவர் என்று அழைக்கப் பட்டது . நான் ஏற்க விரும்பவில்ல.. தம்பி சபீர் அவர்கள் உட்பட சிலர் வற்புறுத்தியதால் நான் ஒன்றும் சொல்ல வில்லை. மற்றபடி அதை ஏற்றுக் கொண்டேன் என்ற பொருள் அல்ல. துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் படும் அவஸ்தை அது. அதை விவாதமாக்க விரும்பவில்லை. ஆனால் எனது உள்ளுணர்வு அப்படிப் பட்ட பட்டங்கள் பெறுவதற்கு எனக்கு இன்னும் தகுதி இல்லை என்பதே. அதே நேரம் அன்பின் மிகுதியால் சிலர் இட்டு அழைக்கும்போது நாம் தடுக்க விரும்பவில்லை. பட்டங்களைப் படிக்கும்போது ஒருவகையான சங்கடத்தையே உணர்கிறேன். சிலர் பட்டங்களை முன்னினைப் படுத்துவதில் முன்னிலை வகிரார்கள். அது அவர்களின் இயல்பு விருப்பம் என்ற வகையில் அதையும் வரவேற்போம்.

அனைவரும் அன்புடன் காக்கா என்று அழைப்பதையே பெரிய பட்டமாக கருதுகிறேன். மற்றபடி பட்டம் எல்லாம் வேண்டாத ஒன்று என்பதே என் நிலைப்பாடு. அநேகமாக இதே நிலைதான் மச்சான் அவர்களுக்கும் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.தம்பி அபூ ஆசிப் அவர்கள் இப்போது வழங்கி இருக்கும் பட்டம் அவர்களின் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. அதை அப்படியே விட்டு விடலாம்.


மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நீங்கள் இங்கு சிக்கலில்லா நல்ல நூல்களை விடுவதால் தான் பட்டங்கள் உயரப்பறக்கின்றன. "பட்டப்பெயர்கள்" என்பது அப்படியல்ல சிக்கலான நூலால் மரத்தில் மாட்டிக்கொண்ட கிழிந்த பட்டமாகும்.

அப்துல்மாலிக் said...

//தொழுகிற பள்ளி வாசலில் குதி உயர்ந்த HIGH HEEL மிதிரிக் கட்டைகள் தான் நிறைய கிடக்கும்.// இந்த வகை செருப்பை நானும் என் வாழ் நாளில் பார்த்துட்டேன் (செக்கடிப்பள்ளிக்கு வரும் பார்லாக்கா, இவரும் அரக்கிட சாபு மாதிரி நோன்புக்கஞ்சி வினியோகிப்பதில் கில்லாடி)

பாருக் காக்கா, இப்போதான் தாங்களின் ஆக்கத்தை படிக்கிறேன். ஒரு விசயத்தை சொல்லப்போய் அதற்குள் உட்கருத்தா நிறைய சொல்லிருக்கும் விதம் அருமை.. படிக்க படிக்க வரிகளை கண்கள் விட்டு நகர மனசு வரலே...

Anonymous said...

பட்டம் பற்றிய விவாதம் ரெம்பவே சூடாகி பற்றிப்பிடித்து புகைவது போல் தெரிகிறது!

இதில் என் மைத்துனர் இபுராஹிம் அன்சாரி சொன்ன கருத்தே என் கருத்தும்
இருந்தாலும் கொடுப்பவர்கள் கொடுங்கள். அது உங்கள் விருப்பம்-உரிமை.
'அது எனக்கு வேண்டாம்'' என்றால் அவர்கள் மீது கோபமோ அல்லது உங்களை ''நிராகரித்து விட்டார்கள்' 'என்றோ'' என்ன வேண்டாம்' என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தம்பி.முசெமு.சொன்ன கமெண்டுக்கு ஹ.ஹஹஹaaaaaaa. வயிறு வலிக்கிது .மருந்து இருந்தா தாங்களேன்!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Thameem said...

மதிப்பிற்கும் பாசத்திற்குரிய என் இனிய வாப்பா உங்கள் கட்டுரை நேற்று படித்து விட்டு சிறி சிரின்னு சிரிச்சு என் கண்ணில் நீர் கொட்டி விட்டது. ஒவ்வொரு வரிகளிலும் reality யும் comedy யும் கலக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் எழுத்தின் மூலம் அதிரை வாசிகலையே சிரிக்கவைத்து விட்டீர்கள். நீங்கள் நோய் நொடியின்றி வாழ எல்லா வல்ல இறைவனிடம் துவா கேட்டுக்கொண்டு இருக்கிறேன். ஆல் தி பெஸ்ட். “”MY FATHAER”” .HE IS STILL YOUNG AND HE IS MY HERO.

Ebrahim Ansari said...

அன்பான நண்பர்களே! சகோதரர்களே!

இந்தப் பதிவின் ஆசிரியர் - பெரியவர் - எஸ். முகமது பாரூக் அவர்களின் ஏற்புரை என் மூலமாக காரணம் அன்னாரின் கணிணி நேற்று முதல் இயங்கவில்லை. கணினிப் பெரியாளர் ஒருவர் வந்து பார்த்து முன்பு இருந்ததையும் கெடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள். ஆகவே ஏற்புரை என்மூலம்.

இதோ:-

=====================================================================
அன்பானவர்களே!

கஞ்சி வருதப்பா என்கிற இந்த சிறு தொடரின் முதல் பகுதியை படித்துவிட்டு பல பகுதிகளில் இருந்தும் அதிரை நிருபர் வலைத்தளத்தின் பல பதிவாளர்களும் அன்பர்களும் சகோதரர்களும் அளித்துள்ள பாராட்டுதல்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஏதோ படித்தோம் ரசித்தோம் என்கிற அளவில் அமையாமல் எழுதியவரைப் பாராட்ட வேண்டுமென்ற நல்ல எண்ணம் எல்லா இளைஞர்களிடமும் மேலோங்கி செயல்பட்டு இருப்பது நல்ல அறிகுறியாக எனக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக தம்பி கிரவுன் அவர்கள் வரிக்கு வரி ரசித்துப் பாராட்டி இருப்பது ஒரு சிறப்பம்சமாகவே தோன்றுகிறது. மேலும் மருமகன் சபீர், கவியன்பன் கலாம், தம்பி தாஜுதீன் , அப்துல் மாலிக், மு.செ.மு. நெய்னா முகமது, அபூ ஆசிப், M.B.A. அஹமது , அண்ணாவியார் அவர்கள், இக்பால், ஜகபர் சாதிக், அகமது அமீன், யாசிர், மன்சூர் ஆகிய அனைவருக்கும் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பதிவை வெளியிட்டு அன்பு காட்டும் நெறியாளர் தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுக்கும் மிக்க நன்றி.

யார் பெயராவது விடுபட்டு இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

மீண்டும் தொடரின் நிறைவுப் பகுதியில் இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்.

வஸ்ஸலாம்.

எஸ் . முகமது பாரூக் அதிராம் பட்டினம்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.பெரியவர் - எஸ். முகமது பாரூக் அவர்களின் ஏற்புரையில் என்னையும் ஒருப்பொருட்டாய் குறிப்பிட்ட பெருந்தன்மைக்கு நன்றி சொல்ல கடமைப்படுகிறேன். அவர்களின் கணினி வைரஸ் பினி நீங்கி இனி நன்முறையில் செயல் பட வேண்டுவதுடன் மீண்டு(ம்)வர ஆவலாய் காத்திருக்கிறேன்.காக்கா கணினியை நல்ல பாத்துக்குங்க! நல்ல கணினிபொறியாள மருத்துவரிடம் காட்டுங்கள்.

Ebrahim Ansari said...

பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்கள் மீண்டும் சொல்ல நினைப்பது.

மருமகன் ஜாகிர் ! ஏற்புரையில் உன் பெயர் விடுபட்டுவிட்டது என எண்ணிவிடாதே! நீ என்றும் எப்போதும் என் இதயத்தில் இருப்பவன். என் கண் காண வளர்ந்த நல்ல பிள்ளை. உன்னை இந்தனன்னாளில் வாழ்த்துகிறேன் அன்பின் மருமகனே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பெரியவர் எஸ். முகமது பாரூக் அவர்கள் மீண்டும் சொல்ல நினைப்பது.

//நீ என்றும் எப்போதும் என் இதயத்தில் இருப்பவன். //

என்னமோ காக்கா, பெரியவர் என்றாலே மு.க. ஞாபக்கம்தான் வருது அதுலேயும் இதுவும் அவரைத்தான் ஞாபகப்படுத்து, ஒரு சமுதாயத்தையே இதயத்தில் வைத்துக் கொண்டு எவ்வ்வ்வ்வ்வ்ளோ கஷ்டப்படுவார் அந்தப் பெரியவர்...

அந்த சமுதாயத்தை இதயத்திலிருந்து இறக்கி விட்டு ஒரு வீடு கட்டி கொடுங்கன்னா கேட்ட்கவும் மாட்டேங்கிறார்...

ZAKIR HUSSAIN said...

அன்புமிக்க எஸ்.முஹம்மது பாரூக் மாமா அவர்களுக்கு....நீங்கள் ஏற்புரையில் என் பெயர் விடுபட்டதற்காக கவலைப்பட்டதை எழுதியிருக்கிறீர்கள். நமக்குள் எப்போதும் எந்த ஃபார்மாலிட்டியும் கிடையாது.

Ebrahim Ansari said...

//என்னமோ காக்கா, பெரியவர் என்றாலே மு.க. ஞாபக்கம்தான் வருது அதுலேயும் இதுவும் அவரைத்தான் ஞாபகப்படுத்து, ஒரு சமுதாயத்தையே இதயத்தில் வைத்துக் கொண்டு எவ்வ்வ்வ்வ்வ்ளோ கஷ்டப்படுவார் அந்தப் பெரியவர்...//

தம்பி அபூ இபுராஹீம் . புரியுது உங்க டெக்னிக். பெருனாளைக்குப் பிறகு நேற்று இன்று நாளை தொடர் பற்றி நண்பர் பகுருதீனுக்கு நினைவூட்டச் சொல்லி இருக்கிறீர்கள்.

ஆமாம். வட்டிலப்ப ருசிக்குப் பிறகு இந்த ருசி மிகுந்த தொடர் பரிமாறப்படும். இன்ஷா அல்லாஹ்.

adiraimansoor said...

இதில் என்னை கவர்ந்த வார்த்தைகள் பல இருந்தாலும் முக்கியமகக ரசிக்கவைத்த வார்த்தை
"பாருக்! உன் வயசு என்ன? இந்த வயசில் இந்த இளவயசு காரனுவ போடுற சட்டையை போட்டுருக்கியே? நல்லாவா இருக்கு?” என்று அட்வைஸ் செய்தார் ஒருவர்.

நான் சொன்னேன் “கடையில் போய் சட்டை கேட்டால் உங்கள் சைஸ் என்ன என்று தான் கேட்கிறார்களே தவிர பிறந்த வருஷம் மாதம் தேதி கேட்க வில்லையே!” என்றேன். இப்படி சொன்னதும் அவர் முகம் மாறிவிட்டது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு