Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 27 [ரமளான் ஸ்பெஷல்] 40

அதிரைநிருபர் பதிப்பகம் | August 06, 2013 | , , , ,

தொடர் : இருப்பதி ஏழு

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத்

இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தப் பெருநாளை அரபி மொழியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று  அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே ஈகைக்காக ஒரு ஒரு நாளை திருநாளாகக் கொண்டாடுவது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளில் குறிப்பிடத் தக்க ஒன்று. ஈத்துவக்கும் இன்பத்தை கடமை யாக்கிய ஈடு இணையற்ற மார்க்கமே இஸ்லாம். உலகில் தோன்றிய எந்த மதத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. தர்மமும் மனிதாபிமானமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டு இருக்கும் கொள்கைகள். பிற மதங்களில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்குப் பரிகாரம் கோயில் உண்டியலில் காசு போடவேண்டும்; நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும்; நெருப்பில் நடக்க வேண்டும்; தலையில் மொட்டை அடிக்க வேண்டும்; மண்சோறு சாப்பிட வேண்டும்; ஆணிச்செருப்பு போட வேண்டும் ; அரை நிர்வாணமாய் ஓடவேண்டும்; அலகு குத்த வேண்டும்; பச்சைக்  குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து பின் மீட்டு எடுக்க வேண்டும்; மொட்டை  மண்டையில் மொட்டைத்தேங்காயை உடைக்க வேண்டும்- இப்படி. ஆனால் முஸ்லிம் ஒருவன் பாவமான செயலை செய்துவிட்டால் – அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; இல்லாதோர்க்கு தானியங்களை தாரைவார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தர்மத்தை தனது மூச்சாக வைத்து இருப்பது இஸ்லாம். 

ஜகாத் பற்றிய கடந்த இரண்டுவாரங்களாகப் படித்து வரும் அன்பானவர்களுக்கு இன்னும் ஒரு சிறு விளக்கம் இந்த அத்தியாயத்தில் விவாதித்துவிட்டு பின்னர் இன்னும் சில இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளுக்கு செல்லலாம்.  

யாருக்கு ஜகாத் கடமையாகிறது என்கிற கேள்விக்கு ‘நிஸாப்’ என்கிற அளவுகோலை வைத்து இருக்கிறார்கள். சொத்தானது ஜகாத் கடமையாவதற்குரிய உச்ச வரம்பை  அடைந்திருந்தால்  அதனை  ‘நிஸாப்’ என்று அழைக்கலாம். நிஸாப்  என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொருவகையாக மாறுபட்டு ஜகாத் கொடுப்பதன் அளவை  நிர்ணயம் செய்கிறது. 

பொதுவாக , புனித ரமழான்  மாதத்தில்தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ரமழானில் ‘ஸதகா’ வலியுறுத்தப்படுகின்றது. எனினும், ஜகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும் . வருடக் கணக்குப் பார்ப்பதற்கு முஸ்லிம்கள் பிறைக்   கணக்கின் அடிப்படையில் சந்திர கணக்கு அடிப்படையில்தான் கணிக்க வேண்டும் . மாறாக, சூரிய அடிப்படையிலான கணிப்புகளை செய்தால் நாட்கள் வேறுபடும். பிறை பார்த்து நோன்பு வைக்கிறோம் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுகிறோம் . எனவே வருடம் கணக்கிடுவதற்கு சந்திரக் கணக்கையே தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று நாம் ஏற்கலாம். 

ரமழான் மாதத்தைப்  பொதுவாகத் தேர்ந்தெடுக்கக் காரணம் ரமழான் மாதத்தில் செய்யப் படும் நன்மைகளுக்கும் அமல்களுக்கும் இறைவனிடத்தில் அதிக நன்மைகள் கிடைக்கும் என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். மேலும் பொதுவாக பணம் படைத்தவர்கள் பலர் இந்தப் புனித  மாதத்தில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று நோன்பு மற்றும் அமல்களில் ஈடுபட விரும்புவார்கள்.  ஜகாத்தை தங்களின் கரங்களால் வழங்க வேண்டுமென்று விரும்புவோர்களும் உண்டு.  இந்தக் காரணத்தால் ஜகாத் வழங்குவதற்கு ரமழான் மாதத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் ரமழானில்தான் வழங்க வேண்டுமென்று  சட்டமல்ல. அந்தந்த தேவைகளுக்கு சூழ்நிலைகளுக்கு  ஏற்றபடி ஜகாத்தை வழங்கலாம்.  உதாரணமாக அடிமைகளை விடுவிக்க, கல்விப் பணிகளுக்கு, புதிதாக இஸ்லாத்துக்கு வந்த சகோதரர்களுக்கு உதவ என்று அல்லாஹ் விதித்த ( 9:60)  விதிகளின்படி தேவைக்கு வழங்க வேண்டும். அசாதாரண சூழ்நிலைகளில் ரமழான்  வரும்வரை காத்திருக்க வேண்டுமென்பது  கொடுக்க மாட்டாதவன் சினை  ஆட்டைக் காட்டுவதற்கு ஒப்பானது. தேவையில் உதவுவதே உண்மையான உதவி. 

இன்று நம்மிடையே எழுந்துள்ள ஒரு முக்கியமான கேள்வி ஜகாத்தை எப்படிப் பங்கீடு செய்வது என்பதுமாகும். சிறு செல்வந்தர்கள்  தாங்கள் கொடுக்க வேண்டிய ஜகாத் தொகைகளை கணக்கிட்டு பெரும்பாலும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும், அண்டை அயலார்களுக்கும் வழங்குகிறார்கள். பல பணக்காரர்கள் தாங்கள் கணக்கிடும்  ஜகாத் தொகைகளை சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு ஒரு காம்பவுண்டுக்குள் ஏழைகளின் கூட்டத்தை அடைத்து வைத்துக்கொண்டு ஜகாத் திருவிழா நடத்துகிற அவலங்களும் நடைபெறுகின்றன. இதனால் கூட்டத்தில் சிக்கி பலர் இறந்து போன நிகழ்வுகளும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒரு பொதுவான அமைப்பின் மூலம் ஜகாத் தருவோரிடமிருந்து நிதியைத் திரட்டி அந்த அமைப்பின் மூலம் தேவையானவர்களையும் தகுதியானவர்களையும் கண்டறிந்து உதவுவது என்கிற செயல்முறைகள்  பல பெரிய முஸ்லிம் ஜமாஅத் இருக்கும் ஊர்களில் இன்று நடைமுறைப் படுத்தப் படுகின்றன. இதுவும் தவிர மாறுபட்ட  இயக்கங்களும் தங்களின் சார்பாக போட்டி போட்டுக் கொண்டு ஜகாத் நிதியை  வசூல் செய்கின்றன. 

“(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,..” (9:103).

என்ற வசனம் மூலம் ஜகாத்தை வசதியுள்ளவர்களிடமிருந்து வசூல் செய்யுங்கள்  என்று கூறப்படுகின்றது. மேலும்  நபி(ஸல்) அவர்கள் ஸகாத் குறித்துக் கூறும் போது,

“அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும்”  எனக் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: முஆத் (ரலி). நூல்: முஸ்லிம்.

இந்த நபிமொழி ஜகாத் என்பது வசதியுள்ளவர்கள் தாமாக நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதன்று. வசதியுள்ளவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு இதில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

ஜகாத் பெற தகுதியான எட்டு வகையினர்  பற்றி திருமறை  குறிப்பிடும் போது ஜகாத்திற்காக பணிபுரிந்தோரும் ஒரு பகுதியினர் எனக் கூறுகின்றது.

“(ஜகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை,.” (9:60).

என்று கூறுகின்றது. இதுவும் ஜகாத்தைச் வசூலிக்க  ஒரு பணியாளர் மற்றும் அமைப்பு என்கிற  கூட்டம் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இந்த அடிப்படையில் ஜகாத்தை பொது நன்மையைக் கருதும் ஒரு சிலர் ஒன்று இணைந்து ஒரு குழுவாக  சேகரித்து திட்டமிட்டு அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அவை யாவை என்பதைப் பார்க்கலாம்.

அளவில் பெரும் தொகை :

ஒரு ஊரில் ஜகாத் வழங்கத் தகுதி யுள்ளவர்கள் அதிகம் பேர் இருந்து  பேர் இருந்து, அவர்கள் அனைவரது ஜகாத்தும் ஒன்று திரட்டப்பட்டால் வசூலாகும் ஜகாத்தின்  தொகை அதிகமாகின்றது. இதன் மூலம் குறைந்தது வருடத்திற்கு ஊரிலுள்ள கணிசமான  அளவுள்ள ஏழைகளின்  பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படுவதுடன் பல்வேறு வகைப் பட்ட பிரச்னைகளையும் பெரும்தொகை கையில் இருந்தால் பிரச்னைகளை ஒட்டுமொத்தமாக  தீர்க்கும் வகையில் அணுக முடியும்.  இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. சிதறிப் போன செல்வம் சிறப்பாக சாதிக்க இயலாது. திரண்ட செல்வத்தால் நிறைய சாதிக்க வாய்ப்புண்டு.  தனி மரங்கள் தோப்பாவதில்லை. 

முன் திட்டமிட்ட முறையான  பகிர்ந்தளிப்பு:

கூட்டுமுறையில் ஜகாத்  சேகரிக்கப் படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவாரணம் என பகுதி பகுதியாகப் பிரித்து, தேவையுடையோர் இனங்காணப்பட்டு, திட்ட மிட்டுப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

அனைவருக்கும் கிடைக்கும் வகை :

கூட்டுமுறையில் பகிர்ந்தளிக்கும் போது தேவையுடைய அனைவரையும் ஜகாத்  சென்றடையும் வாய்ப்பு அதிகமுள்ளது. தனித் தனியாக வழங்கும் போது குறிப்பிட்ட சிலர் மட்டும் அதிக பயனடையும் வாய்ப்பு கூடுதலாகவுள்ளது.

சுய கௌரவம் பாதுகாக்கப்படும்:

தேவையுடையோர் தனித்தனி நபர்களை அணுகி ஜகாத் பெற பிடரியை சொரிந்து கொண்டும் வீணாகப் புகழ்ந்துகொண்டும்  முயற்சிக்கும் போது ஏழைகளின் சுய மரியாதை  பாதிக்கப்படுகிறது. ஒரு குழுவிடம் தேவையை முன்வைத்து நிர்வாக ரீதியாக தேவையைப் பெறும் போது ஏழைகளின் சுயமரியாதை  பாதுகாக்கப்படுகின்றது.

தற்பெருமைக்கு இடமிருக்காது:

தனித்தனியாக ஜகாத் வழங்குபவர்களிடம் தற்பெருமையும் தம்பட்டமும்  எழ வாய்ப்புள்ளது. தன்னிடம் ஜகாத் வாங்கியவன் தன்னைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும்; தொழுவதற்கு நாற்காலி எடுத்துப் போடவேண்டும்;  பல்லிளிக்க வேண்டும் சில நேரங்களில் வீட்டு வேலைகளைக்கூட செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழ வாய்ப்புண்டு. கூட்டுமுறையில், அந்த வாய்ப்புக்கள் நீக்கப் பட்டு  செல்வந்தர்கள் தற்பெருமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர். யாருடைய பணம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரியாமல் இருக்கும். 

ஜகாத்தின் நோக்கம் நிறைவேறும்:

ஜகாத்தின் நோக்கமே புனர் வாழ்வாகும். தனிப்பட்ட முறையில் ஒருவரது உண்மையான தேவைகளை அளவிடாமல் செய்யப்படும் சிறு அளவிலான உதவிகளால் புனர் வாழ்வு என்பது அவ்வளவு சாத்தியமல்ல. அதே நேரம் பலர் இணைந்து ,  ஒரு கணிசமான தொகையை ஒருவருக்கு வழங்கினால்  வாழ்வை புனரமைத்துக் கொள்ள அவருக்கு உதவும் என்கிற கருத்தும் இருக்கிறது. தனித்தனியாய் நூறு இருநூறு  என வழங்குவதை விடவும் கூட்டாக இணைந்து பத்தாயிரம், இருபதாயிரம் என தொகையினை அதிகரித்து வழங்கும் போது கடன்கலைத்  தீர்க்க அல்லது தொழில் செய்வதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கும் போது ஜகாத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.

ஜகாத்தை கணக்கிடும் முறைக்  குறைபாடுகள் நீங்க :

நூற்றுக்கு இரண்டரை வீதம் என ஜகாத் கட்டாயமாக  கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். தனித்தனியாக வழங்குபவர்கள் ஏதோ வங்கிக் கரன்சிகளை சில்லரையாக  மாற்றி வைத்து வழங்கிவிட்டு, ஜகாத்தை நிறைவேற்றிவிட்டதாக மனதிருப்தி கொள்கின்றனர். இறைவனின் கணக்கில் செலுத்த வேண்டியது பாக்கி நின்று கொண்டே இருக்கும். பகுதியாகக் கொடுத்தால் பயன் இல்லை. . கூட்டு நடைமுறை மூலமாக தான் கொடுக்க வேண்டிய மொத்த ஜகாத் தொகையை கணக்கிட்டு கொடுத்துவிட்டால்   இந்தத் தவறான நடைமுறையை நீக்க முடியும்.

பிச்சைக்காரர்களின் கூட்டத்தை  தடுத்தல் :

தனித் தனியாக ஜகாத்  வழங்கும் நடைமுறைப் பிச்சைக்காரக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. ரமழான் காலங்களில் ஜகாத், சதகா, ஹதியா, பித்ரா என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக வீடுகளுக்குப் படையெடுக்கும் நிரந்த /தற்காலிக  கூட்டம் இதற்கு கண்ணேதிரே காணும்  காட்சியாகும். அது மட்டுமல்ல பல பிற மதத்தவர் முஸ்லிம்களைப் போல் வேடமிட்டு தொப்பி,  முக்காடு போன்ற காஸ்ட்யூம் அணிந்து கலந்து வர ஆரம்பிக்கின்றனர். கூட்டு முறையில் இனம் கண்டு கொடுத்தால் , ஜகாத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டுமென்கிற இறைவனின் விதி மீறப்பட வாய்ப்பில்லாமல் போகும்.  

தன்மானம் கருதும்  மரியாதையுள்ள  ஏழைகள் பாதுகாக்கப்படல்:

வறுமையில் உழன்றாலும் ‘ஏற்பது இகழ்ச்சி’  என்று எண்ணும் குணமுள்ளோர்- கையேந்த தயங்கும் குணமுள்ளோர் ஜகாத்தை கேட்கவோ வேண்டிப் பெறவோ தயங்குவார்கள். ஆனாலும் ஜகாத் பெறத் தகுதி படைத்த அத்தகையோரைக் கண்டறிந்து அவர்களுக்கும்   ஜகாத்தின் பங்கு வழங்கப் பட கூட்டு முறை ஜகாத் துணை புரியும். அழும் பிள்ளையே பால் குடிக்கும் அதற்காக அழாத பிள்ளைகளை பட்டினி போடுவது தர்மம் அல்லவே. 

குறிப்பிட்ட சிலர் பயனடையும் நிலை:

வாய்ப்பகட்டு பேசும்  பல புரபஷனல் இரப்போறை  நாம் நிறையக் கண்டு இருக்கிறோம். கேட்டுப் பழகியவன் எல்லோரிடமும் கேட்பான். இந்த வகையில் தனித் தனியாக ஜகாத் வழங்கும் நடைமுறையில் சிலர் ஊர்கள்  பூறாகச் சுற்றிச்  சுற்றி பணம் சேர்க்கின்றனர். இதனால், கேட்டுப் பழகியவர்கள் எல்லோரிடமும் பெற்று அதிகமாக திரட்டிக் கொள்ளவும் வாயற்ற  இப்பழக்கமற்ற ஜகாத் பெற தகுதி உடைய நல்லோர்கள் பாதிக்கவும் படுகின்றனர். அனைவரையும் அளவிட்டு வழங்கப் படும் கூட்டு நடை முறை இதைத் தடுக்கும். 

 உள்ளூரில் ஜகாத் வழங்கப்பட:

ஒரு ஊரில் திரட்டப் படும்  ஜகாத் நிதி, அவ்வூர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படுவது உள்ளூர்ப் பொருளாதாரத்தை - அண்டை அயலாருடைய செல்வ நிலையை மேம்படுத்தும். வாழ்வின் அத்தியாவசியங்களை நிறைவேற்றும்.  இது அடிப்படைத் தத்துவம்.  பொதுவாக ஒருவன் தனது ஊரில் தன்மானம் போய்விடக்கூடாது என எண்ணி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று ஜகாத் பெறுகின்றான். இதனால் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தடைப் படுகிறது. இது ஜகாத்தின் அடிப்படைக்கே மாற்றமாகும். கூட்டு முறையில் இந்நிலை தவிர்க்கப் படும். 

உள்ளூர் செல்வந்தர்களிடையே ஒன்றுபட்ட  புரிந்துணர்வு:

கூட்டுமுறையில் பணம் சேகரிக்கப்பட்டு திட்டமிட்டுப் பகிரப்படும் போது, ஒரு ஊரிலுள்ள அத்தனை செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்பரம் நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்நெருக்கம் ஊர் விவகாரங்களில் அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். இவ்வடிப்படையில் ஜகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்தளிக்கும் முயற்சியை ஒவ்வொரு ஊரின் அனைத்து ஜமாத்துகளும் இணைந்து பைத்துல் மால் போன்ற அமைப்பை ஏற்படுத்தி ஜகாத்தைப் பகிர்ந்து அளிக்கலாம். 

கூட்டுமுறையில் ஜகாத் திரட்டப் பட்டு கொடுக்கப் படக்கூடாது என்கிற வாதமும் நிலவுகிறது. இதற்கு சொல்லப் படும் முக்கியமான காரணம், இத்தகைய நிதிகளை கையாள்வோருடைய கைசுத்தம் பற்றியது. மேலும் தனக்கு வேண்டியவர்களுக்கு, தெருக்காரர்களுக்கு , உறவினர்களுக்கு பொது நிதியிலிருந்து  எடுத்து தாராளமாக வழங்கி தங்களுடைய சொந்த செல்வாக்குகளை வளர்த்துக் கொள்வார்கள் . அதாவது ஊரார் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஒதிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அண்மையில் சில இயக்கங்கள் திரட்டிய ஜகாத் மற்றும் பித்ரா போன்ற நிதிகள் சரிவர பகிரப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை  ஒருவர் மீது ஒருவர் சாட்டிக்கொண்டனர்.  

கூட்டு முறையில் ஜகாத் வழங்கிய செல்வந்தர்கள் அப்படி தாங்கள் வழங்கிய புனிதப் பணம் சரியான முறையில் பகிரப் படவில்லை என்று அறிந்தால் அடுத்தடுத்த வருடங்களில்  இந்த பைத்துல்மால் போன்ற பொது அமைப்பை நம்பி ஜகாத் நிதியைதர யோசிப்பார்கள். இந்த அறப்பணியில்  தொய்வு ஏற்படும். 

இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு ஒன்றுபட்ட ஜகாத் அமைப்பு நிறுவப் படுவதற்கான சாத்தியக்கூறு ஒரு சதவீதம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். இங்கு ஒன்று பட்ட  முஸ்லிம் தலைமை இல்லை. இதனால் அருட் தூதர் முகம்மது ( ஸல்) அவர்கள் காலத்திலும் ஏனைய கலிபாக்கள் மற்றும் நபித்தோழர்கள் காலத்திலும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்ட இந்த வறுமை ஒழிப்புத் திட்டம் இன்றைக்கு இறை அச்சம் குறைவானதன் காரணமாகவும் போட்டி அரசியல் காரணமாகவும் தலைவர்கள் என்று பவனி வருகிறவர்களிடம் ஏற்பட்டுள்ள ஈகோ காரணமாகவும் நடைமுறைப் படுத்த இயலவில்லை. இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். களை எடுக்க வேண்டுமென்றால் களை எடுக்க வேண்டும்.  

ஆயினும் இந்தப் பணியை இப்படி அரைகுறையாக சரியான நிர்வாகம் இல்லை என்று காரணம் கூறி விட்டுவிட இயலாது. எமது ஊராம் அதிரையைப் பொறுத்த மட்டில் இரண்டு அமைப்புகள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஊர் முழுமைக்கான பைத்துல்மால் என்கிற அமைப்பு ஊரின் பொதுநல விரும்பிகளால் ஒன்றிணைந்து நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் கர்ழன் ஹசனா என்கிற அல்லாஹ்வுக்கு அழகிய கடன் என்கிற அமைப்பும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்புத் திட்டத்தில் இவை இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்னும் சிறப்புடன் செயல்பட வேண்டும். பல காரியங்களில் இவ்விரண்டு அமைப்புகளும் ஒருங்கிணைந்து (Co- ordination)  செயல்பட வேண்டுமென்பது பலரின் ஆவல். 

ஏழைப் பொதுமக்களின் நலனுக்காக இறைவனால் வழிகாட்டப்பட்ட-  வகுக்கப்பெற்ற இந்தத் திட்டம் ஒருபோதும் தோல்வியுறுவதில்லை. இது  இறைவனால் கட்டளையிடப்பட்ட கடமை. இது தனிமனிதர்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட சொந்த விஷயமல்ல . ஆகவே ஜகாத்தை தருவதற்கு தகுதி பெற்றோர் துல்லியமாகக் கணக்கிட்டு அதனைப் பெற்றிட தகுதி உடையோருக்கு நேரடியாகத் தாங்களே இயன்றவரை கொடுத்துவிட்டு தாங்கள் கணக்கில் மிகுதி இருப்பதை பொதுவான இறையச்சம் கொண்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பிடம் கொடுத்து பகிரச்செய்யலாம்; பகிர்வைக் கண்காணிக்கலாம்; மேற்பார்வை இடலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும். ..
இபுராஹீம் அன்சாரி

குறிப்பு : வாரந்தோறும் பிரதி சனிக்கிழமைகளில் வெளிவரும் இந்த தொடர், ரமளான் காலங்களில் ஈடுபடும் வணக்க வழிபாடுகளை அதிகம் முன்னெடுத்து வருவதால் இன்று முக்கிய பதிவாக பதிக்கப்பட்டுள்ளது, இந்த அத்தியாயத்தின் பேசுபொருள் அனைவருக்கும் உரிய காலத்தில் பயன்படவேண்டும் என்ற தூய எண்ணத்தில் இன்ஷா அல்லாஹ் !

40 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தக்க தருணத்தில் தானம் செய்வதின் முறைகள் பற்றி தாராளமாய் நல் விளக்கம் தந்தமை மிகவும் பயனுள்ளவை!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்! காக்கா.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி ஜகபர் சாதிக்!அஸ்ஸலாமு அலைக்கும்.

தொடர்ந்து முதல் பின்னுட்டம் தருவதில் ஹாட்ரிக் அடித்து இருக்கிறீர்கள். ஜசக் அல்லாஹ் ஹைர் .

எங்களது அட்வான்ஸ் பெருநாள் வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அற்புதமான ஆலோசனைகள்
ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்கள்
இஸ்லாமியப் பொருளாதாரத்தில்
ஈகைக்கான கட்டளைகள் வழிமுறைகள்

தக்க நேரத்தில் இந்த உபதேசங்களைத் தந்துவிட வேண்டும் என்னும் தங்களின் துடிப்பில் ஒரு தலைவனின் பொருப்புணர்ச்சி.

நன்றி நன்றி நன்றி

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அலைக்குமுஸ்ஸலாம். மரியாதைக்குரிய காக்கா!

உங்களுக்கும் (கூடவே நம்மவர் யாவர்களுக்கும்) அதே பெருநாள் வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

தம்பி சபீர்! அலைக்குமுஸ் ஸலாம்.

கடந்த இரண்டு அத்தியாயங்களுக்கு முன் தாங்கள் கேட்டிருந்த கேள்விக்கு இந்த அத்தியாயத்தில் பதில் கண்டிருப்பீர்களென நம்புகிறேன். May be confirmed.

crown said...

தக்க நேரத்தில் இந்த உபதேசங்களைத் தந்துவிட வேண்டும் என்னும் தங்களின் துடிப்பில் ஒரு தலைவனின் பொருப்புணர்ச்சி.

நன்றி நன்றி நன்றி

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
---------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இதுதான் நான் சொல்ல வந்ததும்.

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன் அவர்களே! அலைக்குமுஸ்ஸலாம்.

வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.

sabeer.abushahruk said...

//கடந்த இரண்டு அத்தியாயங்களுக்கு முன் தாங்கள் கேட்டிருந்த கேள்விக்கு இந்த அத்தியாயத்தில் பதில் கண்டிருப்பீர்களென நம்புகிறேன். May be confirmed. //

கவனித்தேன் காக்கா.

கேட்ட கேள்விகளுக்கு மட்டுமல்ல. கேட்கலாம் என்று எண்ணியிருந்த கேள்விகளுக்கும் இந்த அத்தியாயத்தில் பதில் இருந்ததால்தான் நான் கப்சிப்.

அன்றியும், தாங்கள் முன்மொழியும் கூட்டு ஜக்காத் முறைக்கு, அதாவது, செல்வந்தர்கள் தனித்தனியாகக் குறைவாகக் கொடுத்து தற்காலிக பிச்சைக்காரர்களை உருவாக்குவதைவிட கூட்டாகக் கொடுத்து ஏழ்மையிலிருந்து மீட்கவே நம்மூர் பைத்துல்மால் உருவாக்கப்பட்டது. நாம்தான் சரியாகப் பயன்படுத்துவதில்லை.

அடிமேல் அடி அடித்துக்கொண்டே இருப்போம் காக்கா.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் "குல்லு ஆம் வ அன்த்தும் பி க்ஹைர்"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த அத்தியாயத்தின் பேசுபொருள் அனைவருக்கும் உரிய காலத்தில் பயன்படவேண்டும் என்ற தூய எண்ணத்தில் இன்ஷா அல்லாஹ் !//

இன்ஷா அல்லாஹ் இந்த நோக்கத்தை அலலஹ் பொருந்திக் கொள்வானாக !

// "குல்லு ஆம் வ அன்த்தும் பி க்ஹைர்" //

என்னாது ? பெருநாள் லீவு உட்டாச்சா ? எங்களுக்கு பெருநாளைக்கு அடுத்த நாளெல்லாம் வெறும்நாள்னு சொல்லிட்டாங்க (ஒரே ஒரு நாள்தான் லீவாம்) !

Ebrahim Ansari said...

//குறிப்பு : வாரந்தோறும் பிரதி சனிக்கிழமைகளில் வெளிவரும் இந்த தொடர், ரமளான் காலங்களில் ஈடுபடும் வணக்க வழிபாடுகளை அதிகம் முன்னெடுத்து வருவதால் இன்று முக்கிய பதிவாக பதிக்கப்பட்டுள்ளது, இந்த அத்தியாயத்தின் பேசுபொருள் அனைவருக்கும் உரிய காலத்தில் பயன்படவேண்டும் என்ற தூய எண்ணத்தில் இன்ஷா அல்லாஹ் !//

தம்பி அபூ இப்ராஹீம் ! அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்போ நான் சனிக்கிழமைக்கு லீவு எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

Thameem said...

ஜகாத் கொடுங்கள்!

وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ) (البقرة:110)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஜகாத்தை வழங்குங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடத்தில் பெற்றுக் கொள்வீர்கள்! நீங்கள் செய்பவற்றை நிச்சயம் அல்லாஹ் பார்க்கிறான். (2:110)

KALAM SHAICK ABDUL KADER said...

Zakat is central to Islam’s concept of humanity

Zakat (alms) is one of the five pillars of Islam. Its importance can be realized from the fact that in 82 verses of the Qur’an, Zakat is associated with prayer (Salah), such as: “Establish regular prayer and give Zakat; and obey Allah and His Messenger.” (Qur’an, 33:33)
If social justice and compassion to fellow humans who are disadvantaged is one of the central themes in the message of Allah to humanity, then it is no wonder that Zakat, like prayer and fasting, was also enjoined upon the people of the past messengers: “And We made them (descendants of Abraham) leaders, guiding by Our command, and We sent them inspiration to do good deeds, to establish regular Prayers and to practise Zakat; and they constantly served Us.” (Qur’an, 21:73)

The wisdom of giving Zakat
It purifies your wealth as Allah Almighty says in the Qur’an: “Take alms from their wealth in order to purify them and sanctify them with it and pray for them.” (Qur’an, 9:103)
It reminds Muslims of the fact that whatever wealth they may possess is due to the blessings of Allah and as such it is to be spent according to the His commands.
Zakat functions as a social security for all. Those who have enough money today pay for what they have. If they need money tomorrow they will get what is necessary to help them live decently. Zakat payer pays his dues to Allah as an act of worship, a token of submission and an acknowledgment of gratitude. The receiver of Zakat receives it as a grant from Allah out of His bounty, a favor for which he is thankful to Allah.
Economically, Zakat is the best check against hoarding. Those who do not invest their wealth but prefer to save or hoard it would see their wealth dwindling year after year due to inflation etc. Zakat helps increase production and stimulates supply because it is a redistribution of income that enhances the demand by putting more real purchasing power in the hands of poor.
It keeps one away from sin and saves the giver from the moral ill arising from the love and greed of wealth.
Through Zakat, the poor are cared for, these include widows, orphans, the disabled, the needy and the destitute.
Zakat is the right of the poor. Zakat is not considered a favor that is given to the poor by the rich. It is the right of the poor on the wealth of the rich. Allah says: “(In their) wealth there is a known share for the beggars and the destitute” (Qur’an, 70:24-25)
Zakat, therefore, is unlike charity that is given to the needy voluntarily. Withholding Zakat is considered depriving the poor of their due share. Thus one who pays Zakat actually “purifies” his wealth by separating from it the portion that belongs to the poor.

KALAM SHAICK ABDUL KADER said...

Virtues of Zakat
Allah says in the Qur’an: “The parable of those who spend their wealth in the way of Allah is that of a grain of corn. It grows seven ears and each ear has hundred grains. Allah increases manifold to whom He pleases.” (Qur’an, 2:261)
The beloved Messenger of Allah (peace be upon him) is reported to have said about Zakat:
• Zakat is a (great and strong) bridge of Islam.
• If a man pays the Zakat due on his property, it causes its evil influence to vanish.
• Gains the pleasure of Allah.
• Increases wealth and protects from losses.
• Causes Allah’s forgiveness and blessings.
• Protection from the wrath of Allah and from a bad death.
• A shelter on the Day of Judgment.
• Security from seventy misfortunes.
Alqamah (may Allah be pleased with him) says that when a group of people visited the Prophet (peace be upon him) he said to them, “Verily you can make your Islam perfect by your payment of the Zakat due on your property.”
The Prophet (peace be upon him) said, “He who observes three things will taste the sweetness of Iman (faith): One who worships Allah alone and believes (from his heart) that there is no one to be worshipped but Allah and one who pays the Zakat on his property, willingly, every year. In Zakat on the animals, one should not give an aged animal or one suffering from itch or any other ailment, or an inferior one, but should give animals of average quality. Allah Almighty does not demand from you the best of your animals, nor does He command you to give animals of the worst quality.”

sabeer.abushahruk said...

//அப்போ நான் சனிக்கிழமைக்கு லீவு எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? //


கடிகாரம் லீவெடுத்தால்
காலநேரம் காட்ட யாரு
குளிர்நிலா லீவெடுத்தால்
மும்மிருட்டைக் களைவ தாரு

விடிகாலை சிற்றுறக்கம்
துரிதாக விட்டெழுந்து
புதிதாக உதிக்குமுங்கள்
சிந்தனைகள் சொல்லிவிட்டு

வடிநீரோ தேநீரோ
அருந்தி நீங்கள் லீவெடுங்கள்
அல்லாஹ்வின் அருள்நிலவும்
அழகாய்த்தான் நாள் தொடரும்

மாற்றி நீங்கள் ஓய்வெடுத்தால்
அடுத்தவாரம் முழுவதுமே
அதிரை நிருபர் வாசகனுக்கு
ஆறுநாள்தான் சனியில்லை

KALAM SHAICK ABDUL KADER said...

Do I have to give Zakat?
Zakat is obligatory on an adult sane Muslim who has wealth that reaches or exceeds a certain level called the nisab for a lunar year. (You may contact your local scholars about the exact amount of nisab in your local currency). Unlike tax, however, Zakat is an act of worship for which one receives reward from Allah Almighty.
Ignoring to pay Zakat, on the other hand, is a major sin.
How much do I have to give?
If you are in possession of money, gold, silver, stock in trade or shares that amount to more than the value of nisab (at current market rates) then you are obliged to pay Zakat. What amounts are owed by you should be deducted from the capital amount before Zakat is calculated. The rate of Zakat is 2.5%.
The Prophet (peace be upon him said: “The upper hand is better than the lower hand (i.e. he who gives in charity is better than him who takes it).” (Bukhari)

• Courtesy of Jamiat.org.sa

Unknown said...

ஜக்காத் வழங்கக்காத்திருப்போருக்கும், ஜக்காத் பற்றி அறிய விரும்புவோருக்கும், அழகிய விளக்கங்களை அள்ளி தெளித்து இருக்கின்றீர்கள் தொடர்முழுவதும்.

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஈமானுடன் கூடிய ஆயுளை ததருல்வானாக !
ஆமீன் !

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

Dear Brothers and Sisters,

Assalaamu alaikkum,

The above article has been found in the following link:

http://www.arabnews.com/news/459928








;

Unknown said...

தக்க தருணம் பார்த்து தாங்கள் உலவவிட்ட சிந்தனைத்துளிகள்.

அபு ஆசிப்.

Thameem said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜகாத்தை பற்றி அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் அளவுகோள் எவ்வளவு என்று குறிப்பு missing என்று நினைக்குறேன்.கீழ கொடுக்கப்பட்ட அளவுகோள் சரிகைத் சட்டத்தின் படி ஜகாத் குக்க பட வேண்டும்.

ஷரீஅத் விதிக்கும் (நிஸாப்) குறிப்பிட்ட அளவு:

1.தங்கம்- 85 கிராம் இருந்தால் 2.5% ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.
2.வெள்ளி- 595 கிராம் இருந்தால் 2.5% ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.
3.பணம்-தங்கம் அல்லது வெள்ளியின் அளவை அடைந்தால் 2.5% ஸகாத் கொடுக்க வேண்டும்.
4.விவசாய பொருட்கள், மீன்கள் 653 கிலோ இருந்தால் (தானாக உற்பத்தியானால் 10 சதவிகிதமும் நாம் உற்பத்தி செய்தால் 5 சதவிகிதமும்) ஸகாத் கடமையாகும். வாடகை கட்டிடங்கள், வாகனங்கள்,தொழிற்சாலைகள் பணத்தின் அளவை அடைந்தால்(செலவினம்போக) 2.5% ஸகாத் கடமையாகும்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர்/அபூ இப்ராஹீம்

இந்த அழகிய கவிதைக்காகவே லீவு எடுக்கும் யோசனை கைவிடப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் வழக்கம்போல்.

sabeer.abushahruk said...

//மும்மிருட்டைக்//

கும்மிருட்டை

Thanks

adiraimansoor said...

காக்கா பதியும் ஓவ்வொரு விஷயம்மும் மிகவும் சிறப்பான பதிவாக அதுவும் 100% முழுமை அடைந்த பதிவாக அமைப்பது கண்டு புருவம் உயர்கின்றது மாஷா அல்லாஹ்
பாரட்ட நேரம் போதவில்லை வார்த்தைகளும் கிடைக்கவில்லை.
கடுமையான உழைப்பு கடுமையான ஆராய்ச்சி
ஆலிம் படித்தவர்களிடம் கூட இவ்வளவு மசலாவைப்பார்த்தது கிடையாது. நீங்கள் இடும் உரம் எங்களை வலுப்படுத்துகின்றது . உங்களுடைய பதிவை படிப்பத்ற்க்காகவே அதிரை நிருபரின் வலைத்தளத்தை நிறைய நன்பர்களிடம் அறிமுகம் செய்யும் விதமாக உங்கள் பதிவின் லிங்கை முக நூல் நன்பகளுக்கு அடிக்கடி அனுப்பிவிடுவது ஷேர்பன்னுவது போன்ற விஷயங்களை செய்துகொன்டே இருக்கின்றேன்
கக்கா எனக்கு ஒரு சந்தேகம்
சில சமயங்களில் உங்களின் இந்த தொடரை படிக்க முனையும் போது பின்னூட்டம் 0 வாக இருக்கும் ஆக இன்று பின்னூட்டமிடப்போவது நாம்தான் முதல் ஆல் என்று பதிவை படித்துவிட்டு வருவாதற்குள் 10 12 பேர் பின்னூட்டமிட்டுவிடுகின்றனர். அதில் குறிப்பாக லன்டன்காரர் அதான் டீ அடிக்கடி கேட்பீர்களே டீபாய்
என் இனிய நன்பர் ஜாபர் சாதிக் எப்பொழுதுமே முந்திக்கொண்டு சூரியனை லன்டனிலிருந்து உதிக்கவைத்து விடுகின்றாரே அது எப்படி?
ஒருவேலை உங்கள் பதிவை பார்த்தவுடன் சூரியனை உதிக்கும் வேலையை முதலில் முடிப்பதற்க்காக காமனா தலையங்கம் தொடர்பாக ஒரு பின்னுட்டமிட்டுவிட்டு பிறகு படித்துக்கொள்ளலாம் என்று செயல் படுவாரோ என்று சின்ன சந்தேகம்தான்.

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

என் இதயம் கனிந்த நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

அதிரை நிருபர் நிர்வாகிகள், நன்பன் இக்பால் சாலிஹ் அ.இ.கக்கா, சகோ.அபுஇபு, நன்பர் சபீர், பரூக் காக்கா, ஜாஹிர் நன்பன் கலாம், க்ரவுன்,ஹிதாயத்துல்லாஹ் மச்சான்ஸ் மற்றும் அதிரை நிருபர் வாசகர்கள் அணைவருக்கும் என் இதயம் கனிந்த நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் இபுறாஹீம் அன்சாரி காக்கா,

ஜக்காத் பற்றி 7 வருடம் ஒரு மதர்ஸாவில் படித்த மார்க்க அறிஞர்கூட இவ்வளவு தெளிவாக சொல்லுவார்களா என்பது சந்தேகமே. இந்த பதிவின் சிறப்பு, சிறு தலைப்பிட்டு விளக்கம் அளித்ததே, ஜக்காத் ஏன் எப்படி யாரால் விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லியமைக்காக ஜஸக்கல்லாஹ் ஹைரா...

ஜக்காத அல்லாஹ்வின் வறுமை ஒழிப்பு திட்டம், நிச்சயம் அது தோல்வியுறாது சில்லரைத்தனமான விநியோகத்தை ஒதுக்கி சரியான முறையில் ஓர் போது அமைப்பின் (பைத்துல்மால் போன்ற) மூலம் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

ஜக்காத் பித்ரா வசூல் செய்யும் சங்கங்கள் அமைப்புகள் அதிரை பைத்துல்மால் போன்ற ஒரு போதுவான அமைப்பிடம் கொடுத்தோ அல்லது அவர்களோடு ஒன்றிணைந்தோ, ஜக்காத்தை பங்கீடு செய்தால் நிறைய வரியவர்களுக்கு ஜக்காத்தின் பலன் சென்றடையும். இல்லை எங்கள் ஜமாத்து முடிவு எங்கள் சங்க முடிவு என்று ஈகோவை முதன்மைபடுத்தி மார்க்கத்தை பின்னுக்கு தள்ளினால் எத்தனை கோடி வருசத்துக்கு ஜக்காத் வசூலித்தாலும் தனித்தனியாக செயல்படுத்தப்படும் ஜக்காத் பங்கீட்டு திட்டத்தால் முழுமையான பயன் அடைய முடியாது என்பது ஏதார்த்த உண்மை.

நன்மையை நாடி ஜக்காத் பங்கீட்டிலாவது ஒன்றுமை காண முயற்சிக்க நல்ல தலைவர்கள் அதிரையில் இல்லையே என்ற ஆதங்கள் கடந்த பல வருடங்களாக என்னைப் போன்ற பலரின் உள்ளத்திலும் உள்ளது என்னவோ மறுக்க முடியாத உண்மை.

அல்லாஹ் போதுமானவன்.

அவன் நாடினால் ஈகோத்தனம் உள்ள அமைப்புகளின் பொறுப்புள்ளவர்களின் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, அதிக ஜக்காத் நிதி திரட்டி அதிரை பைத்துல்மால் போன்ற ஒரு பொது அமைப்பின் மூலம் குர்ஆன் சுன்னா அடிப்படையில் தொலை நோக்கு பார்வையில் ஒரு வறுமை ஒழிப்பு திட்டத்தை உருவாக்கி, ஏழைகள் இல்லா அதிரை உருவாக வேண்டும், இதற்கு வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்வோம்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து உள்ளூர் மார்க்க அறிஞர்கள் அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் பெறுப்புகளுக்கு வரவேண்டும், அவர்கள் மனிதர்களுக்கு பயப்படாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படும் தலைவர்களாக உருவாகி ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும். இது போன்ற நிகழ்வு நடந்தால், அல்லாஹ் வரையரை செய்த ஜக்காத் போன்ற திட்டத்தை அதன் நோக்கத்தின் பக்கம் பயணிக்க செய்ய முடியும்.

Ebrahim Ansari said...

//என்னுடைய தனிப்பட்ட கருத்து உள்ளூர் மார்க்க அறிஞர்கள் அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் பெறுப்புகளுக்கு வரவேண்டும், அவர்கள் மனிதர்களுக்கு பயப்படாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படும் தலைவர்களாக உருவாகி ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும். இது போன்ற நிகழ்வு நடந்தால், அல்லாஹ் வரையரை செய்த ஜக்காத் போன்ற திட்டத்தை அதன் நோக்கத்தின் பக்கம் பயணிக்க செய்ய முடியும்.//

EXACTLY.

Ebrahim Ansari said...

மருமகன் தமீம்! அலைக்குமுஸ் ஸலாம்.

உனது குறிப்புகளுக்கு நன்றி.

உன் தந்தை மற்றும் தனயரைப் போலவே உன்னுள்ளும் எழுதும் திறமை எங்கோ இருக்கலாம். அதைத் தேடித் பிடித்து செயல் வடிவில் கொண்டுவர நீ முயன்றால் முடியும் என்பது எனது கருத்து மற்றும் ஆசை.

ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி அதிரை மன்சூர்!

தங்களின் அன்பான கருத்துக்கள் மகிழ்வளிக்கின்றன. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர், நண்பர்கள் , சவுதியில் வாழும் நமது ஊர் நண்பர்கள் சகோதரர்கள் அனைவருக்கும் இந்த நோன்புப் பெருநாளை அல்லாஹ் சிறப்புடன் ஆக்கிவைப்பானாக.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பிகள் கவிஞர் சபீர், அபூ இப்ராஹீம் !

தங்களின் வாழ்த்துக்களுக்கு ஜசாக் அல்லாஹ் ஹைரன். அவ்வாறே தாங்கள் அனைவர் மீதும் ஆகட்டும்.

அதிரை நிருபரின் அனைத்து பதிவாளர்களுக்கும், வாசக சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துக்கள். என்றென்றும் நினைவூட்டிக் கொண்டிருக்கும் துஆ.

"குல்லு ஆம் வ அன்த்தும் பி க்ஹைர்"

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari

ஜக்காத் பற்றிய இந்த பதிவை பிரின்ட் செய்து படித்துக்கொள்ளவேண்டும். [ பெரும்பாலும் வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை இப்படித்தான் நான் இணையத்திலிருந்து படிப்பது ]

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் ! மிக்க மகிழ்ச்சி. வாப்பா உம்மா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அனைவரின் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Iqbal M. Salih said...

அறிஞர் அன்சாரி காக்கா அவர்களை நான் 'டாக்டர்' என ஆரம்பத்திலேயே அன்புடன் அழைத்த செல்லப் பெயரை இந்த 31 பின்னூட்டங்களும் சாட்சியமளித்து கௌரவிக்கின்றன!

எனவே, அன்சாரி காக்கா அவர்கள் அந்த அழைப்புக்கு முற்றிலும் தகுதியானவர்கள் தான் என்று கூறி, இன்னும் அவர்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் என்ற உறுதியுடன் முடித்துக் கொள்கிறேன்.

அப்துல்மாலிக் said...

வறுமையற்ற சமுதாயம் உருவாக்குவதில் இஸ்லாம் கூறும் இந்த வழிவகையை மிக ஆழமாக சிந்திக்க வேண்டும்..

எந்த காரியமும் முறையாக செயல்படுத்தவில்லை என்றால் அது திருப்தியின்மையே. ஜக்காத் வாங்க ஒரு கூட்டமே அலைவதை நோன்பு வந்துவிட்டால் கண்கூடாக பார்க்கிறோம். 10 பேர் 100 ரூபாய் வாங்கி அரைகுறையாக இருப்பதுக்கு ஒருத்தன் 1000 ரூபாய் வாங்கி ஏதாவது ஒரு வகையில் செலவு செய்தானேயானால் கொடுத்தவருக்கும் திருப்தி அந்த ஜக்காத் முறையாக செலவு செய்யப்ப்ட்டிருக்கு என்ற நிலையும் வரும். நிறைய படிப்பினை/தெளிவு பெற்றேன் காக்கா இந்த பதிவிலிருந்து, ஜஜாக்குமுல்லாஹ்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அறிஞர் அன்சாரி காக்கா!அவர்களை மனதறிந்து அறிஞர் என சொல்கிறேன் இது அவர்களுக்குச் சாலப்பொருந்தும். அவ்வாறு அழைக்காவிடின் அந்த அறிஞர் என்னும் பட்டத்தையே அவர்களைப்போல் அறிஞர்யாருக்கும் சுட்டாமல் தூக்கி குப்பைத்தொட்டியில் போட இந்த உலக சுமூகம் சம்மதிக்கும் வரை அவர்களை அப்படித்தான் அழைப்பேன். இது அவர்களின் தகுதிக்கு சற்று குறைந்ததும் கூட தான் , அறிஞருக்கு மேல் மேதை என்பதோ அல்லது பிற வார்த்தையோ உண்டென்றால் அதை சொல்லி அழைப்பதுதான் சிறந்தது. அதுவரை அவர்களை அறிஞர் என்பதும் பொருந்தும்.எல்லோருக்கும் பெருனால் வாழ்த்துக்கள்.

adiraimansoor said...

சகோதரர் இக்பால் சலிஹ் சொல்லும் கருத்தை நானும் மிக ஆனித்தரமாக ஆதரிப்பதோடு அல்லாமல் மற்ற சகோதரர்களும் இதற்கு வழிமொழிய வேன்டும் என்று வலியுறுத்துகின்றேன் இனி டாக்டர் என்றே அழைப்போம்

adiraimansoor said...

நன்பா கவியன்பன் கலாம்
கவிதையெல்லாம் தூய தமிழில்தரும் உனக்கு எங்கிருந்து வந்தது பின்னுட்டம் மட்டும் ஆங்கிலத்தில்
நீயுமா இப்படி?
நீ ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பின்னூட்டம் என்னை வந்தடையவில்லை

என்னைப் போன்றவர்களுக்கு உன் கருத்தூட்டம் வந்தடைய வேண்டுமென்றால் நீ கவிதை எழுதும் மொழியிலேயே பின்னுட்டத்தை எழுதலாம்

டாக்டர் இ.அ காக்கா அவர்கள் ஆங்கிலத்தை தூய தமிழில் தருகின்றார்கள்

அவர்களின் பெருந்தன்மை எல்லொருக்கும் வரவேண்டும்

adiraimansoor said...

நன்பா கவியன்பன் கலாம்
கவிதையெல்லாம் தூய தமிழில்தரும் உனக்கு எங்கிருந்து வந்தது பின்னுட்டம் மட்டும் ஆங்கிலத்தில்
நீயுமா இப்படி?
நீ ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பின்னூட்டம் என்னை வந்தடையவில்லை

என்னைப் போன்றவர்களுக்கு உன் கருத்தூட்டம் வந்தடைய வேண்டுமென்றால் நீ கவிதை எழுதும் மொழியிலேயே பின்னுட்டத்தை எழுதலாம்

டாக்டர் இ.அ காக்கா அவர்கள் ஆங்கிலத்தை தூய தமிழில் தருகின்றார்கள்

அவர்களின் பெருந்தன்மை எல்லொருக்கும் வரவேண்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் நண்பா மன்சூர், அஸ்ஸலாமு அலைக்கும்,

அப்பதிவை அனுப்பும் போதே அதிரை மன்சூரின் அதிரடி வினா வரும் என்று எதிர்பார்த்தே அனுப்பினேன்; நிற்க., இது என் சொந்தப் பின்னூட்டமாக இருந்தால் உறுதியாக நீ விரும்பும் வண்ணம் தூய தமிழில்- கவிதை வடிவில் அமையும். ஆனால், அரப் நியூஸ் என்னும் ஆங்கிலத் தாளிகையில் வந்தது; அப்படியை சொடுக்கினேன்; இடுக்கினேன். ஏற்கனவே, அன்புச் சகோ. அஹ்மத் அமீன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருப்பதும் ஏற்கப்பட்டிருக்கும் இத்தளத்தில் இந்த அரப் நியூஸ் ஆங்கிலக் கட்டுரையை ஏற்பார்கள் என்றே பதிந்தேன்; மேலும், இன்னுமோர்த் தாக்கம்; ஆம், இவ்வாரம் முழுவதும், என் கவிதைகளை ஆங்கில மொழியில் வெளியிடும் ஓர் எண்ணத்தில் உழன்று கொண்டிருக்கு என் உள்ளக் கிடங்கிலிருந்தும் இப்படிப்பட்ட ஓர் ஆவல் உண்டாகியிருக்கலாம். “இண்டர்நேஷனல் போயட்ஸ் அஸோசியேஷன்” எனக்கு விடுத்திருக்கும் ஓர் அழைப்பை உளம்நிறைவுடன் ஏற்று என் கவிதைகளை ஆங்கிலத்திலும் ஒரு தனி வலைப்பூவில் பதியும் முயற்சிகளில் ஈடுபட்டு, அதன் முதற்கட்டமாக, இதுவரை யான் இயற்றி வரும் ஆங்கிலக் கவிதைகளை அன்புச் சகோதரர்கள் அஹ்மத் அமீன் , மற்றும் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் ஆகியோர்களிடம் திருத்தம் வேண்டி அனுப்பி உள்ளேன்; அவர்களின் ஊக்கமும் கிடைத்து விட்டதால், என்னுள் இந்த ஆங்கில மொழிப் புலமையின் தாக்கம் இப்பொழுது ஏற்பட்டதன் விளைவாகவும் இருக்கலாம்.

தாய்த்தமிழை மறக்காமலும் தனியாத காதலுடனும் இருப்பதாற்றான் என் யாப்பிலக்கண இணையக் குழும ஆசானின் அறிவுறுத்தல்- வழிகாட்டலின்படி (தமியேன் 1973 பள்ளியிறுதி வகுப்பில் கொண்ட) பேரவாவினை நிறைவு செய்யும் வண்ணம் “புலவர்” பட்டயம் படிக்க இன்ஷா அல்லாஹ் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன்.

அதுவேபோல், ஆங்கிலம் என்னும் அகில மொழித் தோட்டத்தில் (மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டல்லவா?) என் கவிதைச் செடிகள் பதியமிடப்படும், இன்ஷா அல்லாஹ்.

மேலும், இத்தளம் தமிழ் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அகிலமெங்கும் உள்ள சகோதர சமய சகோதர/சகோதரிகளும் காண்பதால் ஜகாத் பற்றிய அரப்நியூஸ் கட்டுரையை மீள்பதிவு செய்தேன்; இதுவே என் மனசாட்சியின் பதிலாகும்.

Anonymous said...

//சில பணக்காரர்கள் கம்பௌண்டுக்குள் அடைத்து//

இப்படி பணக்கார்கள் செய்தார்களேயானால் இவர்களின் பிற்கால சந்ததியர்கள் ''நாங்கள் யார் தெரியுமா? எங்கள் பாட்டனார் காம்பௌண்டுக்குள், மில்லுக்குள், வாடிக்குள், பங்களாக்குள் பிச்சைகார்களை அடைத்து சக்காத் கொடுத்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள்" என்று தங்கள் குடும்ப பெருமையை தம்பட்டம் அடிப்பார்கள். இதன்மூலம் கொடுத்த சக்காதின் நண்மைகள் கொடுத்தவருக்கு இல்லாமல் போகிறது.

"வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் கொடுப்பதே உண்மையான சக்காத் ஆகும். இன்னு சிலர் தாங்கள் கொடுக்கும் அரிசி பைகளில், பொருள்களின் பைகளில் தங்கள் நிறுவனங்களின் பெயர்களையும் பிரிண்ட் செய்து தான-தர்மம் செய்கிறார்கள் [இனிமேல் அரிசிபைகளில் தங்கள் போட்டோவை Print செய்து கொடுத்தாலும் கொடுக்கலாம்] இவையெல்லாம் தர்மம் பெறுவோரின். சுயமரியாதைக்கு சவால்களாகவே இருக்கிறது.

சக்காத் என்பது கொடுப்பவருக்கு கடமை பெறுவோருக்கு நிற்பந்தம் !

S.முஹம்மதுபாரூக். அதிராம்பட்டினம்

Anonymous said...

நம் ஊருக்கு வெகு தொலைவில் இருந்த ஒருவர், காலமான தன் நண்பர் குடும்பத்திற்கு ஒருகுறிப்பிட்ட கணிசமான தொகையே நம் ஊர் காரர் ஒருவர் மூலம் பல ஆண்டுகளாக வழங்க அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் நம் ஊருக்கு வரவேண்டிய வேலை இருந்ததால் ஊருக்கு வந்தார். வேலை முடிந்துததும்'' அப்படியே காலமான' நண்பர் வீட்டையும்
விசாரித்து விட்டு போவோமே' என்று அந்தவீட்டிற்கு சென்றார். கொஞ்ச நேரம் அவர்களிடம் பேசிகொண்டிருந்தவர். ''இவளவு நேரம் நாம்
பேசிக் கொண்டிருக்கிறோம். வருசா வருசம் அனுப்பிய
பணத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே!'' என்று ''நான் ஒன்று கேட்கிறேன், வருதப்படாதீர்கள்! 'வருசா வருசம் அந்த நபர் மூலம் பணம் அனுப்பினேனே! வந்ததா'/' என்றார்.

பதில் ''அப்படி யாரும் பணம் தரவில்லையே!' வந்தவர் ''யா! அல்லாஹ்! இப்படியுமா மனிதன் இருக்கிறான்?. ''என்று தலையில் 'கை'வைத்து அப்படியே ஆடாமல் அசையாமல் சிலையாக இருந்து விட்டார்] Beware of the Wolf with Sheep's Skin! [இயக்கங்கள் சங்கங்கள்l மூலம் zakath கொடுப்பதில் இப்படியும் நடக்கலாம்]

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு