"ஆசைதான் எல்லாத் துன்பங்களூக்கும் காரணம்’’ என்பது புத்தரின் கோட்பாடு. மனிதன் மனதில் ஆசைகள் தோன்றவில்லை எனில் இன்று நாம் காணும் புதிய உலகை காணவோ விந்தை அறிவின் விளைவுகளின் பலனை அனுபவித்திருக்கவோ முடியாது. ஏன் அதிகதூரம் போகணும்? அதிரை நிருபர் தளத்தை பார்க்கவோ அரேபியாவிலிருந்து வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை பொண்டாட்டியின் முகத்தை பாத்து பார்த்து குஷியா–குசியா பேச முடியுமா? கல்லூரி இளசுகள் தாவணிப் பூக்களோடு செல் ஃபோனில் புதுஸா-புதுஸா ஒரு காதல் பாட்டு பாடவும் சீர்கெட்டுப் போக்கவும் தான் முடியுமா? விந்தை செய்ய ஆசைபட்டவனின் அறிவும் முயற்சியும் இதுக்கு காரணமாய் அமைகிறது. மனித மனத்தில் எழும் ஆசைக்குத் தடைபோட அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது. என் ஆசையும் அதிரைநிருபர் தளத்தின் வழி நிறைவு பெற்றால் அதுவே என் மகிழ்ச்சி. ஆசைப்படுங்கள்!.ஆசைப்படுங்கள்!ஆசைகள் நிறைவு பெறும் வரை ஆசைப்படுங்கள்!.
மனித இனத்துக்கு புத்தகம் செய்த தொண்டுக்கு கூலி கொடுக்க எந்த மனிதனும் இன்னும் பிறக்கவில்லை; பிறக்கப்போவதும் இல்லை.
காலங்களையும் எல்லைகளையும் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் மனித சமுத்திரத்தின் அலைவரிசை திக்கை ஒரு புரட்டுபுரட்டிப் போட்டது புத்தகமே. இன்று நாம் காணும் உலகின் மாபெரும் மாற்றத்தின் கணிசமான பங்கை அது கைப்பற்றிக் கொண்டது என்றால் மிகையாகாது.
"கல்வி கற்பதன் அவசியத்தை” நமது ரசூல் சல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னதை நினைவூட்ட வேண்டியதில்லை. அந்த அறிவுரை நாமெல்லாம் அறிந்து உணர்ந்த ஒன்று. ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல நண்பன் என்பார்கள். இப்போதெல்லாம் சல்லடை போட்டு சலித்தாலும் நல்ல நண்பர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. புத்தகம் நம்மை நேரம் பார்த்து காலை வாரி விடுவதில்லை. ஆனால் சில நண்பர்களோ துரோகம் செய்யத் தயங்குவதில்லை. (இது சொந்த அனுபவம்) புத்தகத்தின் சக்தி ஒரு எல்லைக்கு உட்பட்டது அல்ல. அது அளவிடா ஆற்றலும் வலிமையும் கொண்டது. ஒருநாட்டின் சரித்திர ஓட்டத்தின் திக்கை மாற்றும் வல்லமை அதற்கு உண்டு.
இப்பொழுது நாம் புத்தகம் பிறந்த பிரசவ வார்டுக்கு வருவோமா? ’உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு!’’ ஞாபகம் உண்டா?. ஒருமனிதனை உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேருதான். ஆனால், நம் கதாநாயகன் புத்தகத்தை உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு அல்ல; உண்டாக்கி விட்டவர்கள் மூனுபேரு, யாருஅந்த மூனு பேரு? மனிதனை அறிஞனாக, கலைஞனாக, ஆட்சியளனாக, சர்வாதிகாரியாக கண்டு பிடிப்பாளனாக ஆக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் புத்தககத்தை தந்த அன்னையும் பிதாவுமான அந்த மூவரும் யார்?அவர்கள் எங்கு பிறந்தனர்? எங்கு வளர்ந்தனர்? என்ற கேள்விகளுக்கு பதில் தேடி புறப்படுவோமா?
ஆற்று படுகை வற்றி வறண்ட போதும் அதை தோண்டும்போது பொங்கி வரும் ஊற்று போல கேள்வி ஒன்று பிறந்தால் அதற்கு பதில் ஒன்றும் பிறக்கும். மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு தூவிய முதல் விதை கேள்வி[?] இந்தக் குறி இல்லையென்றால் நாமும் ஒரு தற்குறியே! நல்ல கேள்வி நல்ல விதை. அது நல்ல நிலத்தில் விழுந்தால் அங்கே ஒரு நல்ல மரம் தழைக்கும். நல்ல மரம் தழைத்தால் கோடைக்கு நிழலும் நாவுக்கு சுவையான கனியும் தரும். ஆதலால் கேளுங்கள் பதில் வரும். விதையுங்கள் முளைக்கும்.
‘’மரத்திலிருந்து ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது? அது வானத்தில் போய் விழுந்தால் என்ன?’’ என்ற கேள்வி நியூட்டன் என்பவரின் மூளையில் முளைத்தது. இந்த கேள்விக்கு கிடைத்த பதில் விஞ்ஞான உலகத்துக்கு திசைகாட்டும் ‘ஒளிவிளக்கு’ என போற்றி புகழாரம் சூடப்படுகிறது. நியூட்ட ன்னுக்கு கிடைத்த பதில் ‘பூமிக்கு பிறபொருளை தன்வசம் ஈர்க்கும் சக்தி உண்டு’ [GRAVITY]’. இது விஞ்ஞான வளர்ச்சிக்கு கிடைத்த வைட்டமின் மாத்திரை.
“”தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஏன் கீழே விழுகிறது?” என்று யாரவது நம் ஊரில் கேட்டு பாருங்களேன்! உங்களுக்கு பைத்தியகார பட்டம் கட்டி’ பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்க ஏர்வாடி இப்ராகிம் சாஹிப் ஒலியுல்லா பள்ளி வாசலுக்கு அனுப்பி விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள். அதோடு உங்க கதை முடுஞ்சுதுனு நினைக்கிறியளா? அதுதான் இல்லே! இனிமே தான் அத்தியாயமே ஆரம்பிக்க போவுது."மாட்டுனாண்டா அதிராம்பட்டனத்து மரைக்கா!” என்று! ஏர்வாடிகாரன் என்ன கேப்பான் தெரியுமா? ‘’யாண்டா ” ‘மரத்துலே தேங்கா வெட்டுனா அது ஆகாயத்து மேலே போகாம பூமியிலே விழுதே ஏன்னு கேட்டியாமே! அது கீலே விழுந்தா தானேடா அதை வித்து வாளேமீனு காளே மீனுன்னு மார்கட்டுலே வாங்கி வாய்க்கு ருசியா சோறு உங்கலாம். இல்லேனா என்னத்தை திம்பே”? ஆமா தெரியாமேத்தான் கேக்குறேன். தென்னை மரத்தை பூமில நட்டுனியா இல்லே ஆகாயத்துலே நட்டுனியா”? அப்புடிண்டு கேட்டுக் கேட்டு அடிப்பான்.
அத்துடன் நாலு பேரு முன்னாடி அவமானப் படுத்துவான் அடிப்பான்-உதைப்பான். நாம அதிராம்பட்டினத்துலே ஆட்டை கழுதை ஆக்குன அந்த பாச்சா எல்லாம் ஏறுவாடீ காரங்கிட்டே பலிக்காது. அதனாலே வெள்ளக்காரன் கேட்ட புத்திசாலித்தனமான கேள்வியெல்லாம் கேக்காமே ஊருக்கு நல்லபிள்ளையா பதுவுசா நடந்துக்கோ சொல்லுறது வெளங்குதா?
தொடரும்
S.முஹம்மது ஃபாரூக்
19 Responses So Far:
தொடர்ந்து நகைச்சுவைகளை அள்ளித்தெளித்து வரும் தாங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் குறுந்தொடர் என்ற வட்டத்தில் இதைக்கொண்டு வந்தீர்கள். ஏன் நெடுந்தொடராக தொடரக்கூடாது என்று ஒவ்வரு வாரமும் எண்ணத்தோன்றுகின்றது.
நியூட்டன் என்ற அந்த விஞ்ஞானி கேட்ட கேள்வி தான், மனிதன் விஞ்ஞானத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைய காரணமாக அமைந்தது. விஞ்ஞான வளர்ச்சியே கேள்வியில்தான் பிறக்கின்றது. கேள்வி கேள்வியோடு நின்றுவிட்டிருந்தால் (தக்க பதில் கிடைக்காமல்) புதிய உலகின் கண்டுபிடுப்புகள் என்பது எட்டாக்கனியாக போயிருக்கும். கேள்விதான் மனிதனின் ஆறு அறிவின் மூலம்.
கேள்விகள் எதிரொலி புத்தகமாக பிறக்கும்போது அது தன் குறிக்கோளை எட்ட ஒரு ஏனியாகின்றது. மனிதனின் மூளை என்பது குறிப்பிட்ட அளவில் மட்டுமே ஞாபக அளவுகோளைக்கொண்டது. ஆனால் அதே எழுத்து வடிவில் வரும்போது பல மனிதனின் மூளை பவரை ஒருங்கே கொண்டு அங்கே பலரின் அறிவுத்தாகத்தை தீர்க்க காரணமாக அமைகின்றது.
புத்தகம் மனிதன் நன்றியோடு நினைக்கவேண்டிய ஒன்று.
அபு ஆசிப்.
//"ஆசைதான் எல்லாத் துன்பங்களூக்கும் காரணம்’’ என்பது புத்தரின் கோட்பாடு. //
முதல் பத்தியிலேயே தீர்வு !
//மனித மனத்தில் எழும் ஆசைக்குத் தடைபோட அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது...... ஆசைப்படுங்கள்!. ஆசைப்படுங்கள்! அல்லாஹ்வின் நாட்டப்படி ஆசைகள் நிறைவு பெறும் வரை ஆசைப்படுங்கள்!. //
புத்தகம் - அதன் அருமையைச் சொல்ல இருக்கும் இந்த தொடரின் ஊடாலே இதனைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை !
நேற்று இரவு ஒருசாமியாரின் ப்ரோகிராம் பார்க்க நேர்ந்தது... அவர் 17 வயதில் துறவரம் பூண்டாராம் அடுத்து மேலே படிக்க 'ஆசை'ப்பட்டாரம் ! அங்கே ஒரு பெண்ணின் நட்பு கிடைத்ததாம், இவரின் துறவரம் புகுவதை அவரும் ஆட்சேபிக்க வில்லையாம், சேஷ்யமாக தொடர்ந்ததாம் இருவருக்குமுன்டான நன்பு ! இப்போ அந்தச் சாம்பியா தீர்ப்பு சொல்லும் நாட்டாமையாக அங்கே வீற்றிருக்கிறார் !
வருகிறேன் பிறகு ஒரு தனிப் பதிவாக !
//அரேபியாவிலிருந்து வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை பொண்டாட்டியின் முகத்தை பாத்து பார்த்து குஷியா–குசியா பேச முடியுமா? கல்லூரி இளசுகள் தாவணிப் பூக்களோடு செல் ஃபோனில் புதுஸா-புதுஸா ஒரு காதல் பாட்டு பாடவும் சீர்கெட்டுப் போக்கவும் தான் முடியுமா?//
பாரூக் காகாவின் வயது செவேன்டியா செவெண்டீன்-ஆ .. வெளங்கலையே கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
நாசாக்கு நீங்க ராக்கெட் உட்ட மாதிரி நாங்க ஒரு ராக்கெட் அதிராம்பட்டினம் சி எம் பி லைனுக்கு அனுப்பி தெரிஞ்சுக்கிட வேண்டியதுதான்
காக்கா நானும் ஒரு புத்தக பிரியன் அதிரையில் அலுவகத்துக்கு சென்றால் எங்கள் கணக்க பிள்ளை சொல்வார் உங்க தாத்தாவுக்கு பிறகு அதிகம் புத்தகம் படிப்பது நீணாக தான் இருக்கும் விளம்பரத்தையும் விட்டுவிடாமல் ஒரு வரிவிடாமல் படிப்பின்களோ என்று என்னிடம் வினவுவார் எங்க அப்பா மிக பெரிய பதவியில் இருந்தவர்கள் அவர்களின் வாசிக்கும் பழக்கம் தான் என்னிடமும் ஒட்டிக்கொண்டது கல்லூரி நாட்களில் பாலகுமாரனின் இரும்பு குதிரைகளும் .மெர்குரி பூக்களும் இன்றளவும் என் மனதில் நிலாலடுபவை மறக்கமுடியாத நாவல்கள்
புத்தகம்:
அறிவூட்டும் அம்மா
அதட்டாத அப்பா
அடிக்காத ஆசான்
கட்டுரையின் இந்த அத்தியாயம் கருவைவிட்டு ஆங்காங்கே சற்றே விலகிச் செல்வதுபோல் தோன்றினாலும் காரணமாகத்தானா என்பதை ஃபாரூக் மாமா அவர்கள்தாம் சொல்லவேண்டும்.
இருப்பினும், இப்படி அகலமாகப் புள்ளி வைப்பது பிரமாண்ட கோலமிடத்தான் என்று யூகிக்க முடிகிறது.
சுவாரஸ்யமான எழுத்தோ நெஞ்சை அள்ளிச் செல்கிறது.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
//பாரூக்காக்காவின் வயது செவேண்டீனா? செவென்ட்டியா?//
தம்பி M.B.A அஹமத்!,
அஸ்ஸலாமுஅலைக்கும்.
இரண்டும்அல்ல. Seventy Five Plus Birth Date 4.03.1938. கணக்குபடி 75 வயசும் 5 மாசமும் பதினான்கு நாட்களும் ஆகிறது. வயது ஏற-ஏற என் நினைவுகள் இளமையே நோக்கி பயணத்தை தொடரும்.
மலேசியாவில் இருக்கும் போது பிறந்த நாளை கொண்டாடுவதுண்டு. ''இந்த வயதிலுமா பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள்?'' என்று சிலர் கேட்பதுண்டு. ''இறந்த பின் பிறந்தநாள் கொண்டாட முடியாதே!'' என்று பதில் சொல்வேன்!
அடுத்த பிறந்த நாளைக்கு அவர்கள் ஆப்சென்ட் போக போக 'கழுதை தேய்ந்து கட்டறும்பு' ஆனது. பிறருடைய விருப்பத்துக்காக நம் விருப்பங்களை 'லேத்து பட்டறையில் போட்டு விடக்கூடாது!.
இப்பொழுது பிறந்த நாளை காலண்டரில் பார்த்துக் கொள்கிறேன்.
அன்புடன்.
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.
// வயது ஏற-ஏற என் நினைவுகள் இளமையே நோக்கி பயணத்தை தொடரும்//
தொடருது தங்களது ஒரு புத்தகம் பிறக்கிறது தொடரில் தொடரனும் .தொடரும் அது மென்மேலும் தொடர இறைவனிடம் நாங்கள் துவா செய்கிறோம் ஒருவகையில் நீங்களும் நானும் ஒன்னு
//மலேசியாவில் இருக்கும் போது பிறந்த நாளை கொண்டாடுவதுண்டு. ''இந்த வயதிலுமா பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள்?'' என்று சிலர் கேட்பதுண்டு. ''இறந்த பின் பிறந்தநாள் கொண்டாட முடியாதே!'' என்று பதில் சொல்வேன்!//
இதில்
//மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு தூவிய முதல் விதை கேள்வி[?] இந்தக் குறி இல்லையென்றால் நாமும் ஒரு தற்குறியே! //
நான் A.B.E [Stamford College] படிக்கும் போது ஒரு சீன பேராசிரியர் சொல்வார், கேள்வி கேட்பது மரியாதைக்குறைவு என்று ஆசியாவில் வாழ்பவர்களுக்கு தவறாக போதிக்கப்பட்டிருக்கிறது என்று. அதை உடைத்து எறிய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு நானும் உடன்படுகிறேன்.
மச்சான்!
சொல்லுங்கள் உங்கள் பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடலாம்.
இத்தொடர் முழுவதும்
எழுத்துக்களாலான
ஹார்லிக்ஸ்
பூஸ்ட்
போர்ன்விடா
வைடமின் மாத்திரைகள்
யோகா
நடைப்பயிற்சி
மூச்சுப்பயிற்சி
அத்தனையும் ஒன்றாய்த் தந்து முதுமையைத் தள்ளிப்போட்டீர்கள்!
அப்பப்பா இளமை திரும்புது காக்கா~!
அத்தனைக்கும் ஆசைப்படு; அதுவே தன்னம்பிக்கையின் வித்து என்ற உளவியலார் கருத்தும்; அத்தனையும் அல்லாஹ் விதித்தக் கட்டுப்பாட்டுக்குள் ஆசைப்படு என்ற மார்க்க போதனையும் கலந்து ஒருசேர எப்படி தங்களால் சிந்திக்க முடிகின்றது, காக்கா? ஆசைக்கும் பேராசைக்கும் இடையில் நூலிழை (தன்னம்பிக்கைக்கும் தற்பெருமைக்கும் இடையில் இருக்கும் அந்த நூலிழை) வேறுபாட்டையே தாங்களும் இங்கு விதைக்கின்றீர்கள்; கதைக்கின்றீர்கள். கரணம் தப்பினால் மரணம்; கத்தியின் மேல் நடக்கும் பத்திரமான கவனமுடன் கூடிய புத்தியே வேண்டும் என்கின்றீர்கள். தங்கள் ஓர் அறிவுச் சுரங்கம்; அதனாற்றான் அள்ள அள்ள கருத்துக் கருவூவலங்களாக வெளிவருகின்றன. முதுமையில் எப்படி இருக்க வேண்டும் என்று தமியேன் கனவு காண்கின்றேனோ, அதனையே தாங்களும் செயல்படுத்தியும் துணிவுடன் மறைக்காமல் வெளிப்படுத்தியும் காட்டி விட்டீர்கள்; ஜஸாக்கல்லாஹ் கைரன். தங்கட்கும், என் மதிப்பிற்குரிய ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கட்கும் உண்டாகியிருப்பது போல் எனக்கும் “வயது ஏற- ஏற இளமை நினைவுகளும்; புத்தகங்களை இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும்” உண்டாகியிருப்பது உண்மையாகும்.
நம் ஆயுளை அல்லாஹ் நீட்டித்துத் தருவானாக(ஆமீன்)
//மச்சான் சொல்லுங்கஉங்கபிறந்த நாளை அமர்க்காலமாய் கொண்டாடலாம்//
மச்சினம்புல்லெ!
புரியிது!. ஓஸியிலே கேக்குதிங்க ஆசையா? இது கருங்காலி கட்டை!
அந்த கோடாலிக்கு மசியாது
Sமுஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
//கட்டுரையின் இந்த அத்தியாயம் கருவை விட்டு விலகி செல்வது போல்.... பாரூக் மாமா விளக்க வேண்டும்......//
மருமகன் சபீர் அபுசாருக் மறைமுகமாக கேட்பது ''இப்போதெல்லாம் நல்ல நண்பர்களைத் தேடுவது'' என்ற வரிகளும் மற்றும் சில நண்பர்களோ துரோகம் செய்ய தயங்குவதில்லை'' என்ற இந்த வரிகளும் 'மருமகனை
உசுப்பி இருக்கலாம்' என்று நான் யூகிக்கிறேன்.
என் யூகம் சரியானால் அதற்கு ஒரு பண்பாட்டு சொல் தொடர் தந்து சூசகமாக விளக்குகிறேன்.
அது; பாம்பென்று எண்ணி அடிப்பதா?; பழுதை என்று எண்ணி மிதிப்பதா?''
என்பதாகும். இதில் நான் பம்பை பழுதை என்று எண்ணி மிதித்து விட்ட தவறு என் பொருளாதார வாழ்க்கையே
அதள பாதாளதுக்கு கொண்டு போனது. அதன் வலியின் வெளிப்பாடே அந்த வரிகள்.' கொஞ்சம் விபரம் ஜாகிரிடம் தெரிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் நேரில் சந்தித்தால் பேசிக் கொள்ளலாம்..
குறிப்பு: பழுதை' என்ற தமிழ் சொல்; வைக்கோல் பிரி அல்லது கையறு [Rope] குறிக்கும். ''பாதையில் வளைந்து நெளிந்து கிடப்பது பாம்பா அல்லது வைக்கோல் பிரியா'' என்று தெரியாமல் அதை பாம்பு என்று அடிக்கவும் வைக்கோல் பிரி என்று மிதிக்கவும் முடியாத ரெண்டும் கெட்டான் நிலையே குறிப்பதாகும். நான் நினைத்தது வைக்கோல் பிரி: மிதித்தது பாம்பு! கேட்டது இதுதானே?
S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்
//கேட்டது இதுதானே?//
ஆமாம் மாமா.
அந்தப் பொழுதுகளை நீங்கள் குறிப்பிடும்போதெல்லாம் ஒரு வலி இழையோடுவதை என்னால் உணர முடிகிறது. எனக்கும் ஓரளவு தெரியும். நானும் ஹமீதுக்கு நண்பன்தான். ஆனால், அவற்றை மறப்பது ஒன்றே மன ஆறுதல் தரும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
மன அழுத்தம் தரக்கூடியவற்றை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்வதால் ஏதேனும் பிரயோஜனம் உண்டு எனில் பரவாயில்லை; ஆகாப்போவது ஒன்றுமில்லை என்னும் பட்சத்தில் தங்களின் நிம்மதியான அமைதியான வாழ்க்கை ஒன்றே எங்களுக்கு ஆறுதல் தரும்.
இருப்பினும், படிப்பினை வேண்டி தங்களின் அந்தக் கசப்பான அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டால் நாங்கள் பட்டுத் தெளியாமல் தப்பித்துக் கொள்ள ஏதுவாகும். எழுதுங்கள்; ஆனால் அந்த பொழுதுகளில் மூழ்க வேண்டாம்.
தங்களின் மன மற்றும் உடல் நலத்தில் அக்கறையுடன் சபீர்.
//நானும் ஹமீதுக்கு நண்பன்தான்.//
தாங்கள் குறிப்பிடும் தொழில்ரீதியாக தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் குறித்து ஹமீது என்னிடம் மேலோட்டமாக சொன்ன ஞாபகம்.
மிகவும் இனிமை!
அன்பான மச்சான் மற்றும் தம்பி சபீர் !
நான் சொல்ல விரும்புவது : எந்த பாம்பு பழுதாகிக் கொத்தியதோ அந்தப் பாம்பு மரணிக்கும் முன்பே இவ்வுலகிலேயே பத்து தடவை மரணித்துவிட்டே மறைந்தது. நீங்கள் பாம்பால் கொத்தப் பட்டாலும் இன்றுவரை அன்புப் பிள்ளைகளின் அரவணைப்பிலும் தம்பி ஜாகிர் சபீர் போன்ற அறிவுசார் மருமகன்கள், அதிரை நிருபரின் அன்புச்சகோதரர்களின் அன்பிலும் திளைத்து வருகிற பாக்கியத்தை முதுமையில் இறைவன் கொடுத்து இருக்கிறான்.
உங்களின் மனதில் உள்ள கருவூலங்களை திறந்து கொட்டும் தளம் கிடைத்திருக்கிறது. எத்தனை பேருக்கு இது கிடைக்கும் ? எல்லோராலும் முடியுமா?
அடுத்த பிறந்தநாளை ஓசியில் அல்ல O C = OWN CASH ள் நானே கொண்டாடுகிறேன். மார்க்கம் அனுமதித்த முறைகளுடன் . இன்ஷா அல்லாஹ் . ஒரு எழுபத்தி ஐந்து வயது நிரம்பிய கொண்டாட்டம் அப்துல் ஹையர் வாப்பா அவர்கள் கூறியது போல் ஏழைகளுக்கு உணவிட்டு நடத்துவதில் தவறு வராது. தர்மமே ஓங்கும்.
" உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் " என்று பாடிக் கொண்டிருங்கள்.
நான் பிறப்பதற்கு முன்பு நடந்த சமாச்சாரங்கள் இதை படிக்க கேட்க வாய்பளித்த இறைவனுக்கு எல்லா புகழும்
அன்புள்ளம் கொண்ட அதிரைநிருபர் வாசக நெஞ்சங்களே!
அஸ்ஸலாமுஅலைக்கும்[வரஹ்]
ஒரு புத்தகம் பிறக்கிறது [-தொடர்-2] அன்புடனும், ஆர்வத்துடனும் பாராட்டுகள் எழுதி என்னை ஊக்குவித்த அன்பு நெஞ்சங்களுக்கும், எண்ணம் இருந்தும் பணி நிமித்தம் கருத்து தெரிவிக்க வாய்ப்பு இல்லாத அன்பு நெஞ்சங்களுக்கும். மற்றும், சிறப்பான முறையில் உங்கள் பார்வைக்கு தந்த
அ.நி.நெறியாளர் தம்பி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை கூற கடமைபட்டுள்ளேன்.
இன்சா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுகிழைமை மீண்டும் சந்திப்போம்.
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
Post a Comment