Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு புத்தகம் பிறக்கிறது - அத்தியாயம் - 3 10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 25, 2013 | , , , ,


கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மேசொபோடோமியர்கள் களிமண் ஓடுகளில் உருவங்களையும் குறிகளையும் எழுதி சூளையில் சுட்டு உறுதியான மண்வட்டுகளை செய்தார்கள். எழுத்துகளும் உருவங்களும் பதித்து சுட்ட அந்த மண்வட்டுகளே உலகின் முதல் புத்தகம். அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்தார்கள். அது மேசொபோடோமீயர்களின் நூலகம் மட்டும் அல்ல உலகின் முதல் நூலகமும் ஆகும்.

அடுத்து தென் பாபிலோனியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் மேசொபோடோமியர்களை விட ஒருபடி மேலே போய் ஒரு மாற்றம் செய்தார்கள். குறிகளுக்கு  பதிலாக எழுத்து வடிவத்தையும் வாசகங்களையும் அமைத்து அவைகளில் நல்ல மாற்றம் செய்தார்கள். தென் பாபிலோனியர்களுக்கு அடுத்து புத்தகத்தின் மூன்றாவது அன்னையும் தந்தையுமாக அசிரீரியர்கள் வந்தார்கள்.  இவர்களின் கடைசி மன்னனான அசுருர்பநிபால் என்பவன் ஆங்காங்கே சிதறி கிடந்த மண்வட்டு புத்தகங்களை ஒன்று திரட்டி ஒரு நூலகம் உருவாக்கினார். இந்த நூலகத்தில் 2500 மண்வட்டு புத்தகங்களுக்கும் மேல் இருந்ததாம். லண்டனில் இருக்கும் தொல்பொருள் கண்காட்சி கூடத்தில் இன்றும் கூட இந்த நூலகத்தைக் காணலாம். நேரம் கிடைத்தால் நீங்களும் ஒரு ’தபா’ அங்கிட்டு போய் பாத்துட்டு வந்து விவரமா சொல்லுங்களேன். அசுரூர்நிபால் ஒரு மன்னன் மட்டும்மல்ல நம் சங்க கால தமிழ்மன்னர்கள் போல கலா ரசனையும் இலக்கிய மோகமும் கொண்ட ஜாலிபேர் வழி. ஆக, மேசொபோடோமியர் பாபிலோனியர் அசிரியர்கள் ஆகிய இம் மூவரும் அகர முதல எழுத்துக்கு தாயுமாகி தந்தையுமாகி உண்டாக்கி விட்ட மூனு பேரு. மனித இனத்துக்கு எழுத்துருக்களை அறிவித்த இந்த மூவருக்கும் நாம் நன்றி சொல்வோம். 

இந்த மண்வட்டு புத்தகங்கள் சிம்மாசனம் வீற்று சிலகாலம் செங்கோலோச்சி தெருவெல்லாம் தேரில் பவனி வந்தது. இதன் கொடி ஓங்கி வளர்ந்ததோர் கம்பத்தின் உச்சியில் பட்டொளி வீசிப் பறந்தது. மண்தட்டு எழுத்துகள் பொன்தட்டில் வாழ்ந்த போது யார் கண் பட்டதோ! வந்தது அதன் வாழ்க்கைக்கு ஒருசரிவு காலம். எங்கிருந்து வந்தது அந்த சரிவு காலம்? கொஞ்சம் மேலே போய் ஒரு அலசு அலசிப்  பார்ப்போமா!? 

களிமண் ஓடுகளுக்கு பதிலாக எகிப்தியர்கள் ஒரு புது வழி கண்டார்கள். நைல் நதி கரையில் வளரும் pyprus-தண்டு, களிமண் ஓடுகளுக்குப் போட்டியாக வந்தது. களிமண் ஓடுகளில்  எழுதுவதை விட பேப்ரஸ்-தண்டுகளில் எழுதுவது இலகுவாக இருந்தது. மேலும் இதை எங்கு வேண்டுமனாலும் சிரமம் இல்லாமல் எடுத்து செல்லலாம். எனவே களிமண் ஓடுகளை தீண்டுவார் யாரும் இல்லை. தன்னை ‘ஜாதி-பிரஷ்டம்’ செய்ததை உணர்ந்த களிமண் ஓடுகள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு இரவோடு இரவாக ஊரைவிட்டே ஓடியது.

களிமண் ஓடுகளுக்கு வேட்டுவச்ச ‘பைப்ரஸ்’க்கு அடிச்சது ராஜயோகம். களிமண் ஓடு வீற்றிருந்த சிம்மாசனத்தில் இப்போ பைப்ரஸ் கால் மேல் கால் போட்டு ஆட்சி  செய்தது. பைப்ரஸ் ஆட்சி பல ஆண்டுகள் நீடித்த போதிலும் அதற்கும் ஒரு சோதனை காலம் வந்ததது. விதி யாரைத்தான் சும்மா விட்டது! ஒரு ஆட்டு ஆட்டிட்டுத்தானே போகும். பைப்ரஸ் தண்டுகளில் செய்த புத்தகங்கள் தட்ப-வெப்ப கால மாற்றங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேலும் செல் கறையான் போன்ற பூச்சிகள் [இலக்கிய ரசிகர்கள்] தின்று நாசப்படுத்தி விடுவதால் ‘பைப்ரஸ்’சுக்கு பதில் வேறு ஒன்றை தேடும் கட்டாயத்துக்கு மனிதன் தள்ளப்பட்டான். பைப்ரசின் சிம்மாசனம் ஆட்டம் காணத் தொடங்கியது.

கால ஓட்டத்தின் மாற்றத்துக்கு ஈடுகொடுக்க மனிதன் மாற்று வழிகளை தேடிப் புறப்பட்டான். நல்வழியில் நல்லதைத் தேடுபவனை வானமும் பூமியும் “வா! வா!” என்று வாசலில் “நிறை குடம்” வைத்து வாழ்த்து கூறி வரவேற்கும். ஆம்! தேடியதை பெறுவான் தேடியவன். தேடாதவன் என்ன பெறுவான்? ஆதலினால் தேடுங்கள் கிடைக்கும்.

‘பைப்ராஸ்’ இலை மனிதனை கை விட்டதும் அவன் ‘’கை’’யைப் பிசைந்து கொண்டு சும்மா நிற்காமல் மாற்று வழி ஒன்றை தேடினான். மிருகத்தோல் அவன் கண்ணில் பட்டது. கண்ணில் பட்டதைக் கையில் பற்றிப் பிடித்துக் கொண்டான். மிருகத்தோலில் புத்தகம் தயாரிக்க மனிதன் கற்றான். ‘வல்லவன் கையில் புல்லும் ஓர் ஆயுதம்’ என்று முன்னோர் சொன்ன தெல்லாம் பொய்யாகிப் போனதில்லை. மிருகத்தோல் புத்தகத்தின் முன் ‘பய்ப்ரஸ்’ புத்தகம் நிற்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்கி கடைசியில் காணாமல் போனது. காலத்தின் தேவைக்கு தன்னை தயார் செய்து கொள்ள முடியாத எதுவும் காணாமல் போவது காலத்தின் கட்டாயம்.

மிருகத்தோல் புத்தகங்கள் கொடி கட்டி முரசு தட்டி கோலோச்சியது. நீர், பனி, கறையான், போன்ற இலக்கிய எதிரிகள் இதன் அருகில் நெருங்க முடியவில்லை. இதன் ‘ஆயுள்’ ரெம்பக் கெட்டியாக இருந்தது. மிருகத்தோல் புத்தகக் காட்டில் மழையோ மழை என்று பேய்-மழை கொட்டியது. அதிர்ஷ்டப் பார்வையில் இருந்த மிருகத்தோல் புத்தகம் தனக்கு முந்தியவர்களை நீண்ட ஆயுளுடன் மஞ்சள் குளிச்சு வாழ்ந்தது. யார் கண்பட்டதோ? இதற்கும் திடீரென வந்தது ஒருவீழ்ச்சி. அது என்ன என்று பார்ப்போமா?

கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் சீனர்கள் காகிதம் செய்ய கற்றுக் கொண்டார்கள். ‘காகித வருகை’ உலகின் முகத்தை ஒரு மாற்று மாற்றிப் போடும் என்று யாரும் நினைக்கவோ கனவு காணவோ இல்லை. அதன் வருகை உலக உருண்டை மீது புதுப்புது தடத்தையும் அடையாளங்களையும் பதிக்கும் அறிகுறியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சூரியனின் நீண்ட கரங்கள் பூமிப்பந்தை ஆரத்தழுவிச் சொன்னது ’’மகளே! உன்னை அலங்காரம் செய்து அரியாசனத்தில் அமர்த்தும் நேரம் நெருங்கிவிட்டது. மாற்றத்துக்கு தயாராகு’’. ஒரே ஒரு உதையில் உலக உருண்டையின் முகத்தை மாற்றிய சாதனைகளில் சீனர்களின் காகித கண்டுபிடிப்பு சிறப்பிடம் பெற்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனர்கள் கண்டு பிடித்த காகிதம் கி.பி. பணிரெண்டாம் நுற்றாண்டில்தான் ஐரோப்பா கண்டத்தில் காலெடுத்து வைத்தது. சீனாவில்சும்மா அப்புடி இப்புடின்னு காலத்தைக் ஓட்டிய காகிதத்துக்கு அடிச்சிது ஐயா ஒரு ராஜயோகம்.
தொடரும்...
S.முஹம்மது ஃபரூக்

10 Responses So Far:

Unknown said...

பாரூக் காக்கா,

மிக அருமையான ஒரு சங்கிலித்தொடர் தொகுப்பு. பழங்கால யுகத்திலிருந்து
படிப்படியாக காகிதம் வளர்ந்த விதத்தினை வரிசைக்கிரமமாக நாங்கள் அறியாதவைகள், பள்ளிகளில் கூட படிக்காதவைகள் என்று எத்தனையோ விஷயங்களை திரட்டி இந்த A.N. வலைதளத்தில் உலவவிட்டு எங்களுக்கு காகிதம் வளர்ந்த, அது படிப்படியாக முன்னேறிய வந்ததை
தனக்கு தெரிந்ததை பிறர் அறிய கற்றுக்கொடு என்பதற்கிணங்க சொல்லி வருவது. பாராட்டத்தக்கது

சீனர்கள் காகிதம் மட்டுமல்ல எத்தனயோ விஷயங்களில் உலகின் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருந்து இருக்கின்றார்கள்.

சீனக்கண்டுபிடிப்புக்கு கிடைத்த ஐரோப்பிய ராஜ யோகத்தை எதிர்பார்த்து......


அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எனக்குப் பிடித்த பாடம் ! இங்கே நடத்தப்படுக்கிறது !

//மேலும் செல் கறையான் போன்ற பூச்சிகள் [இலக்கிய ரசிகர்கள்] தின்று நாசப்படுத்தி விடுவதால் //

அதீத ஆர்வக் கோளாறில் படிப்பதற்கு பதில்லாக கடித்து கரைத்து விடுகின்றன போலும் ! இந்த இலக்கிய ரசிகர்கள் !

sabeer.abushahruk said...

அறிய வேண்டிய அரிய தகவல்கள்
புத்தகம் பற்றிய புத்தம்புது செய்திகள்
காகிதம் உருவான வரலாறு

அருமை அருமை.

நன்றி

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறிய வேண்டிய அரிய தகவல்கள்
புத்தகம் பற்றிய புத்தம்புது செய்திகள்
காகிதம் உருவான வரலாறு

அருமை அருமை.

நன்றி

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

// நேரம் கிடைத்தால் ஒரு ’தபா’ அங்கிட்டு போய் பாத்துட்டு வந்து விவரமா சொல்லுங்களேன்.// இன்சா அல்லாஹ்.


ZAKIR HUSSAIN said...

அன்புமிக்க எஸ்.முஹம்மது ஃபாரூக் மாமா அவர்களுக்கு....

உங்களுடைய புத்தகம் பற்றிய விசயத்தை படிக்கும் போது ஏதோ அந்த காலத்திற்குள் போய் விட்ட மாதிரி உணர்வு. ஒரு டாக்குமென்டரி படத்தை எழுத்தில் பார்த்ததுபோல் இவ்வளவு விசயத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

Ebrahim Ansari said...

அனுபவம் பேசுகிறது அழகு தமிழில். ஆர்வலர்கள் திரளுகிறார்கள் அதிரை நிருபரில் .

இன்று காலை சந்தித்த போது ஒன்றும் தெரியாத பிள்ளையைப் போல இருந்த உங்களுக்குள் இத்தனை கருவூலங்களா?

வியக்கிறேன். பெருமைப் படுகிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

புத்தகங்கள் உயிரற்றவைகள்; ஆனால்
புத்தகங்கள் உயிரூட்டுகின்றன
நித்தம் நித்தம் நினவுகளாய்;
சத்தம் இல்லா உணர்வுகளாய்..!

புத்தகம் பிறப்பதற்கு முன்னர், புத்தகத்தின் ஏடுகள், ஓலைகள் தொடங்கி காகிதம் வரைக்கும் பரிணாம வளர்ச்சியைப் பக்குவமாக எடுத்து வைக்கும் திறமையும் , இடையில் நகைச்சுவையும் கலக்கும் விதமும் தங்களின் ஆற்றல் மிளிர்கின்றது!

தங்களின் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன், காக்கா!


adiraimansoor said...

35 வருடங்களுக்கு முன்பாக டிவி இல்லாத காலம், கம்பியூட்டர் இல்லாத உலகம், எல்லோருக்கும் சிலோன் ரேடியோ ஒரு வரப்பிரசாதமாக இருந்தது
அப்பொழுது
சிலோன் ரேடியோவில் ஒவ்வொரு இரவும் இஷா தொழுகைக்குப்பிறகு வரலாற்றில் ஒரு ஏடு என்று ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்வார்கள் மிகவும் அருமையான நிகழ்ச்சி அதில் பழைய விஷயங்கள் அணைத்தும் ஒலிபரப்புவார்கள்

இந்தக் காலத்தில் பெண்கள் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு சீரியலில் உட்காருவதுபோல் ரேடியோ பெட்டி முன்னாடி உட்கார்ந்து வரலாற்றில் ஒரு ஏடு கேட்டு மகிழ்வோம்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
காக்கா காக்கா பார்ரூக் காக்கா
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் பார்ரூக் காக்கா

ஒன்றுமில்லை பிலாஸ் பேக்

உங்களுடைய அற்புதமான பேப்பர் பிறந்த வரலாற்றை படித்ததும் என்னை 35 வருடாம் பின்னாடி இழுத்துச் சென்று கம்பியூட்டர் இல்லாத உலகத்தைப்பற்றி அசை போட்டேன்.
உங்களுடைய இந்த பதிவு எனக்கு சிலோன் ரேடியோ கேட்ட திருப்தி

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பள்ளிப்படிப்பில் வரலாறு, புவியியல் பாடப்பிரிவில் மதிப்பிற்குரிய ஹாஜி முஹம்மது, அகமது தம்பி சார்கள் சொல்ல விடுபட்ட காகிதம் பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களை திரட்டி மூத்த சகோதரர் ஃபாரூக் காக்கா அவர்கள் பாணியில் இங்கு தருவது சாய்ங்காலக்காற்றை சரியாக அனுபவித்துக்கொண்டு ராஜாமட பாலத்தில் அமர்ந்து கொண்டு நண்பர்கள் சூழ‌ நொங்கு ஜூஸ் குடிப்பது போல் இருக்கிறது. அருமை...அற்புதமான தகவல்கள்.

முகநூலில் கண்ட வாசகம் "சீன உற்பத்திகளிலேயே அதிக நாட்கள் உழைத்துக்கொண்டிருப்பது சீனப்பெருஞ்சுவர் என்பதனாலேயே அது உலக அதிசயமாக்கப்படுள்ளது".

Anonymous said...

அன்பு அ.நி. வாசக நெஞ்சங்களே!

அஸ்ஸலாமுஅலைக்கும் [வரஹ்]

'ஒரு புத்தகம் பிறக்கிறது! 'அத்தியாயம்-3க்கு பாராட்டுரைகள் வழங்கிய அணைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் உளமார்ந்த நன்றியே கூறிகொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்!.

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு