Monday, January 13, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

Ascertained Return (Dhua of a student – III) - உன்னையே மீண்டடைவேன் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2013 | , , , , ,

The only One
I would try so hard
to be close with,
is my Allah alone ...

I have learned ...
I think I have experienced loneliness..
But, this is not loneliness...  

For some reasons
I have stopped caring
about the people around me....
I loved this isolation
from people around me....

I understood
the sweet isolation
that
the prophet PBUH experienced
in his state of deep thinking
staying in cave of mount Hira....

Ya Allah
You just made me realise
"look Shahnaz ...l
look around you
the  people you thought of depending on.
its just you and your Creator in the end "  .....
Ya Allah
You just made me laugh of the realisation ..
.
the day I return to You
will be my utmost aim in my life...
For now
For You  ...
I'll just continue on
with my responsibilities
You have given me in this world .

Love you Allah.

-Shahnaz Sabeer Ahmed


உன்னையே மீண்டடைவேன்! (ஒரு மாணவியின் துஆ – III)

ஒரே ஒருத்தனும் தனித்தவனுமாம்
என்னிறைவா
உன்னிறைவான
நெருக்கம் மட்டும் நாடியே
என்
தீவிர முயற்சிகள் நீளும்!

நான் கற்றுக்கொண்டேன்…
தனிமையென்கிற தன்னிறைவில்
நான் அனுபவித்ததொன்றும்
தனிமையல்ல

சில காரணங்களுக்காக
என்னைச் சூழ்ந்திருப்போரின்
அபிப்ராயங்கள்
என் கவனத்தை ஈர்ப்பதை
தடுத்துக் கொண்டேன் – அவ்வளவே!
இந்த
உலகத்திருப்போரின் ஊடுருவலற்ற
ஒற்றையிருப்பு
எனக்குப் பிடித்திருந்திருக்கிறதுபோலும்!

ஆனால், அதிலிருந்து
அந்த
இனிய தனித்திருப்பின் நிலையை
எனதருமை நாயகம் (ஸல்)
ஹீரா குகையில்
உலகை மாற்றிய
உயரிய சிந்தனைகளை
எப்படி அனுபவித்திருப்பார்கள்
என உணர முடிகிறது

யா அல்லாஹ்!
என்னைச் சூழ்ந்துள்ள
எவரும்
என்னுடன்
நிலைபெறமாட்டார்; துணைவரமாட்டார்
என்னைப் படைத்த உன்னைத் தவிர
என்னும்
உயரிய தத்துவத்தை
எனக்கு உணர்த்தியவனே…

உன்
உடனிருப்பே நிரந்தரம்
என்ற எண்ணம்
என்னுள் சிலிர்க்கிறது; சிரிக்கிறேன்.

உன்னை மீண்டடையும்
அந்நாளே
என்
வாழ்க்கையின் உச்சகட்டக் குறிக்கோள்

அதுவரை
உனக்காகவே
நீ
இவ்வுலகில்
எனக்கிட்டப் பொறுப்புகளைச்
செயல்படுத்தியே தொடரும் என் வாழ்க்கை

அல்லாஹ் உன்மேலான
அபரித அன்போடு…

ஷஹ்னாஸ் சபீர் அஹ்மது
மருத்துவ மாணவி (இரண்டாம் ஆண்டு)
தமிழில்   : சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

18 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum
Dear sister Shahnaz Sabeer Ahmed,

Beautiful invocation for the love and closeness towards Almighty Allah for gaining mercy from Him and beating out loneliness.

May Allah accept your dua.

How about using first letter capital for the pronouns of Allah, similar to the He, the Him, the You.?

Note: If not yet read then please go through my poem titled "The Edges" in Adirai Nirubar,

http://adirainirubar.blogspot.ae/2012/12/the-edges.html

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

அதிரை.மெய்சா said...

அன்பு நண்பன் சபீருடைய அருமை மகள் ''ஷஹ்னாஸ்'' கேட்டிருக்கும் துஆ மெய்யாலுமே என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.

துஆக்களை அதன் அர்த்தங்கள் மாறாது கவி வரிகளில் சொல்வதற்கு தனித்திறமை வேண்டும். அத்தகைய திறமையை பெற்றுள்ள அன்பு நண்பன் சபீர் பெற்ற புதல்வியல்லவா..? சொல்லவா வேண்டும்.!

ZAKIR HUSSAIN said...

முதலில் கவிதையிலோ அதில் இருக்கும் கவித்துவத்திலோ என் கவனம் இல்லை.....அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் இருக்கும் 'ஆத்மாவின் பயணம்'.

இது பெரும்பாலும் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளில் அசைந்து கொடுக்காமல் , கஷ்டமும் மகிழ்ச்சியும் ஒன்றுதான். லேபில் தான் வேறு என்ற நிலையை அடைந்தவர்கள் அனுபவிக்கும் ஒரு விதமான உள்நோக்கிய பயணம்.

நமது பிள்ளைகள் வயதானவர்கள் மாதிரி பேசும்போது சந்தோசிப்பது தற்காலிகம். ஆனால் வயதை மீறீய அறிவுடன் சிந்திப்பது கண்டு சந்தோசிப்பது....

வார்த்தைகளில் வடிக்கமுடியாத ஆனந்தம். Well done Dr Shahnaz.

sabeer.abushahruk said...

brother Ahamed Ameen,

It was just a casual and usual SMS to me from my daughter. I tried in this form of writing. It was my mistake failed to pay attention to the points you made. The corrections have been thankfully put in effect, as you pointed.

Thanks for your concern.

Shahnaz is here in Dubai with me, spending her holidays and I shall ask her to read your poem.

Unknown said...

தனித்தவனான அல்லாஹ்மேல் இருக்கும் நாட்டத்தின் ஆழ்ந்த சிந்தனையில் உதித்திருக்கிறது இந்த இறை அழைப்பு ( துஆ ) என் அருமை சகோதரியே!

நீ என் நண்பனின் மகள் என்பதைவிட அல்லாஹ்வின் நெருக்கத்தில் ஆழ்ந்த பற்றுள்ள ஒரு பெண் மகள் என்பதை நினைக்கும்போது நீ எனக்கு மகளாக பிறந்திருக்கக்கூடாதா ? என்றே நினைக்கதோன்றுகின்றது.

என்னை உனக்குத்தெரியாது சகோதரியே . ஆனால் உன் தந்தையை எனக்கு தெரியும். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தந்தை , மகள் என்ற ரீதியில்
கொடுத்து வைத்தவர்களே.

//உன்
உடனிருப்பே நிரந்தரம்
என்ற எண்ணம்
என்னுள் சிலிர்க்கிறது; சிரிக்கிறேன்//

இறைவனின் நெருக்கமே நிரந்தரம் என்ற வார்த்தையின் ஓசை என் காதில்
உன் ஈமானின் தரத்தை பறை சாற்றுகின்றது. உனக்கும் உன்னை பெற்ற பெற்றோருக்கும் இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றேன் இருகரம் ஏந்தி.

அபு ஆசிப்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.முதலில் கீழ்கண்டதையே என் எண்ணமாகவும் பதிகிறேன். நன்றி ஜஹீர்காக்கா!
முதலில் கவிதையிலோ அதில் இருக்கும் கவித்துவத்திலோ என் கவனம் இல்லை.....அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் இருக்கும் 'ஆத்மாவின் பயணம்'.

இது பெரும்பாலும் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளில் அசைந்து கொடுக்காமல் , கஷ்டமும் மகிழ்ச்சியும் ஒன்றுதான். லேபில் தான் வேறு என்ற நிலையை அடைந்தவர்கள் அனுபவிக்கும் ஒரு விதமான உள்நோக்கிய பயணம்.

நமது பிள்ளைகள் வயதானவர்கள் மாதிரி பேசும்போது சந்தோசிப்பது தற்காலிகம். ஆனால் வயதை மீறீய அறிவுடன் சிந்திப்பது கண்டு சந்தோசிப்பது....

வார்த்தைகளில் வடிக்கமுடியாத ஆனந்தம். Well done Dr Shahnaz.

Unknown said...

சபீர்,

உன் மகள் எழுதியது வரிகளல்ல வைரங்கள்.
இறைவனை நோக்கி ஜொலிக்கின்றது அவன் நெருக்கத்தை வேண்டி.

நிச்சயம் இறைவன் அளிப்பான் சுவனம்

ஏனனில் உன் மகளின் வார்த்தையில்
மிளிர்கின்றது ஈமானின் கவனம்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

Beautiful invocation for the love and closeness towards Almighty Allah for gaining mercy from Him and beating out loneliness.

உருக்கமான உணர்வுகட்கு
நெருக்கமானவரின் புதல்வியும்
இறையன்பின் நெருக்கத்தை
நிறைவானதோர் உருக்கத்துடன்
பிழிந்தது கவிதைத் தேன்
வழிந்து வழிந்து கண்ணீர் வடித்தேன்!

விஞ்ஞானம் படிக்கும் மாணவி
மெஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியையாய்
எஞ்ஞான்றும் காணாத அற்புதம்
எங்கெனும் குறையில்லாச் சொற்பதம்!

You have got freedom
of thinking alone
which reflects wisdom
that is perfectly shown!

May Allah Bless you!

Ebrahim Ansari said...

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது என்று சொல்வார்கள்.

தகப்பனார் எட்டடி பாய்ந்தால் மகளார் பதினாறு அடி பாய்கிறார். மிகவும் மகிழ்வாக இருக்கிறது. இந்த வயதில் இந்த ஆத்மாவின் பயணம் பாராட்டுதல்களுக்குரியது.

மருத்துவ்ராகப் போகும் மகளே நீ வாழ்க!

KALAM SHAICK ABDUL KADER said...

மனத்தினை மேன்மைப் படுத்தும் மருத்துவமும் எங்குக் கற்றாய் மருமகளே!

Anonymous said...

தத்துவ முத்துக்கள் சிந்தும் வரிகள்//. திகைக்கிறேன்!
இந்த இந்த வரிகளுக்காக உன்னை வாழ்த்தும் தகுதி எனக்கு இல்லை மலைக்கிறேன்.!

தத்துவ பேத்திக்கு மட்டுமே தாத்தாவின் வாழ்த்துகள்.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கற்றவர்களும், கற்பிப்பவர்களும், கற்பவர்களும், அனுபவசாலிகளும் நிறைந்த இந்த சபையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறேன் !

adiraimansoor said...

//விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்காது என்று சொல்வார்கள்.

தகப்பனார் எட்டடி பாய்ந்தால் மகளார் பதினாறு அடி பாய்கிறார். மிகவும் மகிழ்வாக இருக்கிறது. இந்த வயதில் இந்த ஆத்மாவின் பயணம் பாராட்டுதல்களுக்குரியது.

மருத்துவராகப் போகும் என் நன்பனின் மகளே நீ வாழ்க!//

இ.அ.காக்காவின் வார்த்தைகளையே வழி மொழிகின்றேன். பாராட்டுகளும் வாழ்த்துக்களு

adiraimansoor said...

//விஞ்ஞானம் படிக்கும் மாணவி
மெஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியையாய்
எஞ்ஞான்றும் காணாத அற்புதம்
எங்கெனும் குறையில்லாச் சொற்பதம்!//

கவியன்பனின் தனித்தன்மை

adiraimansoor said...

ஜாஹிரிடமிருந்து சிதறிய முத்துக்களின் எதார்த்தம்

//நமது பிள்ளைகள் வயதானவர்கள் மாதிரி பேசும்போது சந்தோசிப்பது தற்காலிகம். ஆனால் வயதை மீறீய அறிவுடன் சிந்திப்பது கண்டு சந்தோசிப்பது....

வார்த்தைகளில் வடிக்கமுடியாத ஆனந்தம்.

Well done Dr Shahnaz.//

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//கற்றவர்களும், கற்பிப்பவர்களும், கற்பவர்களும், அனுபவசாலிகளும் நிறைந்த இந்த சபையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்//
அவ்வண்ணமே நானும் உன்னிப்புடன் ரசித்துக்கொண்டு கவிஞனாரின் மருத்துவ மகளை வாழ்த்தி துஆ செய்கிறேன்.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

வாசித்து வாழ்த்திய அனைத்துச் சகோதரர்களுக்காகவும் நன்றியும் துஆவும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.